"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» இந்தியாவில் மின்சார கார்களை களமிறக்கும் மாருதி சுஸுகி
by அ.இராமநாதன் Today at 8:51 am

» ஸ்ரீதேவி வாழ்க்கை சினிமா படமாகிறது வித்யாபாலன் நடிக்க பேச்சுவார்த்தை
by அ.இராமநாதன் Today at 8:38 am

» பிளாக் பேந்தர் படம் ரூ.7 ஆயிரம் கோடி வசூல் சாதனை
by அ.இராமநாதன் Today at 8:35 am

» சசிகலா கணவர் நடராஜன் காலமானார்
by அ.இராமநாதன் Today at 8:33 am

» சசிகலா புஷ்பாவுக்கு மீண்டும் திருமணம்!
by அ.இராமநாதன் Today at 8:32 am

» இன்று பத்ம விருதுகளை வழங்குகிறார் ஜனாதிபதி
by அ.இராமநாதன் Today at 8:31 am

» 2ஜி வழக்கில் அமலாக்கத்துறை அப்பீல்: ராசா, கனிமொழிக்கு சிக்கல் வருகுது
by அ.இராமநாதன் Today at 8:30 am

» ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை
by அ.இராமநாதன் Today at 8:29 am

» அரசு கஜானாவுக்கு வரவேண்டிய ரூ.1,000 கோடி எங்கே போகிறது? சட்டசபையில் தி.மு.க. காட்டமான கேள்வி
by அ.இராமநாதன் Today at 8:28 am

» பூ பூப்பதும் உலகச் செய்திதான்
by அ.இராமநாதன் Yesterday at 11:20 pm

» சின்னச் சின்ன சிந்தனைகள்
by அ.இராமநாதன் Yesterday at 10:46 pm

» குடம் குடமாய் பாலாபிஷேகம் - எக்ஸ்பிரஸ் கதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 6:13 pm

» குழந்தையை தவறவிட்டவர் கையில் பத்திரமாக இருந்தது கைப்பேசி...!!
by அ.இராமநாதன் Yesterday at 6:08 pm

» உன்னோட புடவை பளிச்சுன்னு இருக்கே...?!
by அ.இராமநாதன் Yesterday at 5:35 pm

» உங்க பொண்ணுக்கு யோகா வராது, சமையல் கத்துக்கொடுங்க...!!
by அ.இராமநாதன் Yesterday at 5:32 pm

» மூலிகை உணவு
by அ.இராமநாதன் Yesterday at 5:15 pm

» அவசரம் - X பிரஸ் கதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 5:06 pm

» X பிரஸ் கதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 4:53 pm

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 3:30 pm

» ஆக்சிஸ் வங்கியில் ரூ.4,000 கோடி மோசடி - தனியார் நிறுவன இயக்குனர்கள் கைது
by அ.இராமநாதன் Yesterday at 3:09 pm

» நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,விற்கு எதிராக 3 நோட்டீஸ்
by அ.இராமநாதன் Yesterday at 2:59 pm

» படமும் செய்தியும்
by அ.இராமநாதன் Yesterday at 2:53 pm

» சுதந்திர போராட்ட கதையில் சிரஞ்சீவியுடன் நடிக்கும் நயன்தாரா
by அ.இராமநாதன் Yesterday at 10:04 am

» தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்
by அ.இராமநாதன் Yesterday at 10:00 am

» முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணி சாம்பியன்
by அ.இராமநாதன் Yesterday at 10:00 am

» தனுஷ்கோடி கடலில் ரூ.300 கோடியில் காற்றாலை
by அ.இராமநாதன் Yesterday at 9:43 am

» 20,21ல் திருமலையில் இலவச தரிசனம்
by அ.இராமநாதன் Yesterday at 9:41 am

» ரிசர்வ் வங்கி அதிகாரிகள் திருப்பதிக்கு போகலாம்: சிதம்பரம்
by அ.இராமநாதன் Yesterday at 9:39 am

» தனிமையில் வாடும் பொம்மை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இராமசெயம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Sun Mar 18, 2018 11:02 pm

» அமரர் கல்கி பற்றி அவரது மகள் ஆனந்தி,
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 9:34 pm

» இருமலை விரட்டலாம்
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 9:01 pm

» காதலரை மணந்த ஸ்ரேயா; மும்பையில் ரகசிய திருமணம்
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 8:58 pm

» அழகுக்காக ஆபரேஷன் செய்யக்கூடாது -ராணி முகர்ஜி
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 8:50 pm

» மராட்டியத்தில் நிரவ் மோடிக்கு சொந்தமான சூரிய மின்உற்பத்தி ஆலையை முடக்கியது அமலாக்கத்துறை
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 8:41 pm

» களவும் கற்று மற...!
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 3:33 pm

» மின் ஒளியாக அவள்...!
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 3:26 pm

» ஒரு படம், நுாறு படத்திற்கு சமம்!
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 12:30 pm

» கிராபிக்ஸ் பாம்பாக மாறும் ராய்லட்சுமி! -
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 12:30 pm

» அப்பாவுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி!
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 12:29 pm

» போதை விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பிரியா வாரியர்!
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 12:29 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 12:28 pm

» பிருதிவிராஜின் புதிய தோற்றம்
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 7:59 am

» மகள் சுருதிக்கு கமல்ஹாசன் அறிவுரை
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 7:56 am

» “பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 7:52 am

» நடிகர் விஷால், கமல்ஹாசனுடன் திடீர் சந்திப்பு
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 7:49 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines கோப்பிச் செய்கையின் வீழ்ச்சி தேயிலை செய்கைக்கு வித்திட்டது

Go down

கோப்பிச் செய்கையின் வீழ்ச்சி தேயிலை செய்கைக்கு வித்திட்டது

Post by சங்கவி on Mon Oct 18, 2010 11:22 am

எமது நாட்டில் 1872 ஆம் ஆண்டுகளில் உன்னத நிலையை கோப்பிப்பயிர்ச் செய்கை அடைந்திருந்தது- ஆனால் திடீரென ஒருவித வியாதி கோப்பித் தோட்டங்களில் பரவ கோப்பிப்பயிர்ச் செய்கை மெது மெதுவாக குறைய ஆரம்பித்தது.

கோப்பிப் பயிர்ச் செய்கையை கைவிட்ட ஆங்கிலேயர்கள் தேயிலையைப் பயிரிடத் தொடங்கினர். இலங்கையில் தேயிலை பயிர்ச் செய்கையின் ஆரம்பம் மிகவும் விசித்திரமானது. இதன் முன் புல வரலாறு புதுவிதமானது எனவும் தெரிவிக் கலாம்.

ஆனால் இன்று இலங் கையில் தேயிலை பயிர்ச் செய்கையின் வளர்ச்சி பெரும் விசால தன்மையைக் கொண்டதாக உள்ளது. இன்று உலகில் பெரும் பாலானோர் விரும்பிக் குடிக்கும் பானம் தேநீராகும். இத் தேநீரை தயாரிக்க பயன்படுத்துவது தேயிலையாகும்.

தேயிலைச் செடியை தானாக வளரவிட்டால் எட்டு முதல் பத்து மீற்றர் உயரம் வரை குற்றுயரமாக வளரும். ஆனால் தோட்டங்களில் பயிர் செய்வோர் இதன் இலைகளைப் பறிப்பதற்காக எட்டும் வகையில் தேயிலை மரத்தை மரமாக வளரவிடாது சாதாரணமாக 90 செ. மீற்றர் உயரத்திற்கு வளரக் கூடியதாக வெட்டி வளர விடுகின்றனர். இதன் காரணமாகவே தேயிலை மரம் செடி எனப்படுகிறது.

இந்தத் தேயிலைச் செடியை காலத்துக்குக் காலம் வெட்டி வளர்ந்து வருவதை தடுத்து விடுவர். அந்த வெட்டுதல் ‘கவ்வாத்து’ எனப்படும். தேயிலைச் செடியை வெட்டுவதற்கு பயன்படுத்தும் கத்தி கவ்வாத்துக்கத்தி எனப்படும்.

தேயிலைச் செடிக்கு ஆண்டு முழுவதும் சூரிய வெப்பமும், நல்ல மழையும் தேவை. மலைச் சரிவுகள், முகடுகள், பள்ளத்தாக்குகள் மற்றும் குன்றுகளில் தேயிலைச் செடி நாட்டப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 2500 அடி உயரத்தைக் கொண்ட இடங்களிலேயே தேயிலை செழித்து வளரும். தேயிலைச் செடியின் பூ வெண்மையாக நல்ல மணத்துடன் இருக்கும்.

இதன் கனி மூன்று சுளைகளை உடையது. அதில் மூன்று விதைகள் இருக்கும். தேயிலைச் செடி தழைத்து வளரும் போது கிளைகளின் நுனியில் உள்ள இரண்டு தளிர்களையும் மொக்கையும் (காம்பு) அவை துளிர்க்கத் துளிர்க்கப் பறித்தது விட வேண்டும். இதுவே இறுதியில் நாம் பருகுவதற்குப் பயன்படுத்தப்படும் தேயிலை ஆகும்.

ளந் தளிர்களைப் பறித்து வெயிலில் பரப்புவார்கள். இலையில் உள்ள நீர் ஆவியாகி இலை வாடிவதங்கும். உரியவகையில் வதக்குவதற்கு இயந்திரங்கள் மூலமாக வதக்கப்படும். இன்று மலையகத்தில் இவ்வாறான ஒரு முறையையே நிர்வாகங்கள் கையாளுகின்றன.

வதங்கிய இலைகளை உருளைகளுக்குள் செலுத்தி மின்சார இயந்திரம் மூலமாக நசுக்கி அதிலுள்ள சாற்றை வெளியேற்றுவார்கள். ஆனால் இவ்வாறான முறை இந்தியாவிலேயே அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இயந்திரம் மூலமாக வதங்கிய தேயிலை இலைகளை சிலமணி நேரம் நொதிக்க தூளாகி அதை ஒரு தனிவகை அடுப்பினுள் செலுத்தி சூடான காற்றின் மூலமாக உலர்த்துவார்கள்.

இவ்வாறு உலர்ந்த தேயிலை தரம் பிரிக்கப்பட்டு காற்று புகமுடியாத வகையில் பெட்டிகளில் அடைக்கப்பட்டு வர்த்தக சந்தைக்கு அனுப்பப்பட்டு வருகின்றது. இவ்விதம் பக்குவப்படுத்தப்படும். தேயிலை கறுப்புத் தேயிலை எனப்படுகின்றது.

வதங்கிய தேயிலையை நொதிக்க வைக்காமல் உலர வைத்து காணப்படும் தேயிலை பச்சை நிறத்தில் இருக்கும். இதை பச்சைத் தேயிலை Green Tea எனப்படும். ஜப்பானில் இம்முறையே இன்றும் கையாளப்படுகிறது.

தேயிலைச் செடி முதன் முதலாக சீனாவிலேயே பயிரிடப்பட்டது. பின்னரே இந்தியா, ஜப்பான், இந்தோனேஷியா நாடுகளிலும் பயிரிடப்பட்டன. இந்தியாவிலிருந்தே 17ஆம் நூற்றாண்டுகளில் டச்சுக்காரர்கள் தேயிலையை ஐரோப்பாவுக்கு கொண்டு சென்றனர்.

இன்று உலகில் தேயிலை உற்பத்தி அதிகமாகக் காணப்படும் நாடாக இந்தியா திகழ்கின்றது. இந்திய நாட்டின் பெரும்பகுதி தேயிலை வெளிநாடுகளுக்கே ஏற்றுமதியாகிறது. உலகிலேயே அதிகமாக தேநீர் அருந்துபவர்கள் ஆங்கிலேயர்களே.

தேநீரில் காபீன் (Caffeine) டானின் (Tannin) என்ற பொருட்கள் அடங்கியுள்ளன. அளவோடு தேநீர் குடித்து வந்தால் காபீன் புது உத்வேகத்தைத் தரும். அதேவேளை அதிகமாக பாவித்தால் இரத்த அழுத்தத்தை உண்டாக்கி நரம்பு மண்டலத்தை கெடுத்துவிடும். டானின் ஓரளவு நச்சுத் தன்மை வாய்ந்தது. அது உடலுக்குக் கேடு விளைவிக்கும்.

இலங்கையில் தேயிலை வரலாறு:-


மட்டக்குச்சியின் உதவியோடு கொழுந்து பறித்தல்

பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்தியாவின் அஸ்ஸாமிலுள்ள காடுகளில் தேயிலைச் செடிகள் தானாகவே வளர்ந்து வந்தன. இவ்வாறான சூழ்நிலையில் 1824ஆம் ஆண்டு ஜோர்ஸ் போர்ட் என்பவர் கம்பளை, சிங்காபிட்டியில் கோப்பியை முதன் முதலாக நாட்டி பெரும் வெற்றியைக் கண்டார். இவரைப் பின் தொடர்ந்து மலையகத்து மண்ணில் கோப்பி பயிர்ச் செய்கையை ஐரோப்பியர் மேற்கொண்டனர்.

இதே நேரம் 1866 ஆம் ஆண்டு ஹேவாஹெட்டயைச் சேர்ந்த லூல்கந்தர என்ற தோட்டத்தில் பத்து ஏக்கர் காணியில் பரீட்சார்த்தமாக அஸ்ஸாமிலிருந்து தேயிலைக் கொட்டை (விதை) களைக் கொண்டு வந்து பயிரிட்டுப் பார்த்தார். அதில் மாபெரும் வெற்றியைக் கண்டார் ஜேம்ஸ் டெய்லர். இவர் அன்று பாவித்த அனைத்து உபகரணங்களும் இன்றும் அத்தோட்டத்தில் உள்ளன. இவரது கல்லறை கண்டி மையாவ பொது மயானத்தில் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

1872 ஆம் ஆண்டு கோப்பி மரங்களை ஒருவித நோய் தாக்கியது. உடனே ஐரோப்பியர்கள் கோப்பி பயிர்ச் செய்கையை கைவிட்டு விட்டு தேயிலையை நாட்டுவதில் ஆர்வம் காட்டினர். இதையே இன்றும் கோப்பிக் காலம் என மக்கள் தெரிவிப்பர்.

கோப்பி மரங்களை நோய் தாக்கி இருக்காது போயிருக்மேயானால் இன்று எமது நாட்டில் தேயிலைப் பயிர்ச் செய்கை பெரும் அளவில் மேற்கொள்ள வாய்ப்பே இல்லை. தேயிலைத் தோட்டங்களில் சிங்களவர்கள் வேலை செய்ய மறுத்தமையின் காரணமாகவே தென்னிந்தியாவிவிருந்து வெள்ளைக்காரர்களால் தமிழர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்.

இம்மக்களின் தேயிலையும் வளர்ச்சி பெற்றதோடு, தேயிலையின் வெளிநாட்டு வர்த்தக சந்தை ஏற்றுமதியால் நாட்டின் வருமானமும் அதிகரித்தது.

இலங்கையில் 1883 இல் 35ஆயிரம் ஏக்கரில் தேயிலை பயிரிடப்பட்டது. 1884 ஆம் ஆண்டு இது இரு மடங்காகியது. 1889 இல் முன்னூற்று ஐம்பது இலட்சம் இறாத்தல் தேயிலை ஏற்றுமதியாகியது. 1911ஆம் ஆண்டு ஆயிரத்து எண்ணூற்று அறுபது இலட்சம் இறாத்தல் ஏற்றுமதியானது.

1929ஆம் ஆண்டு இத் தொகை இரண்டாயிரத்து ஐந்நூறு இலட்சமக உயர்ந்தது. தேயிலையை ஏற்றுமதி செய்வதற்காக ஆங்கிலேயர் ரயில் பாதையை விஸ்தரித்தனர். தந்தி டெலிபோன் சேவைகளை ஏற்படுத்தினர். 1873ஆம் ஆண்டு தேயிலை ஏற்றுமதி செய்ய கொழும்பு துறைமுகத்தை பயன்படுத்த திருத்த வேலைகளை ஆரம்பித்தனர். தோட்ட ஐரோப்பிய முதலாளிமார்களின் முறைப்பாட்டைத் தொடர்ந்தே இவ்வேலைகள் ஆரம்பமாகின.

1875 ஆம் ஆண்டு இளவரசர் ஏழாம் எட்வேர்ட்டினால் அத்திவாரக்கல் நாட்டப்பட்டது., ஏழு இலட்சம் பவுண்கள் செலவில் 4000 அடி நீளமான சுவர் எழுப்பப்பட்டது. கொழும்பு துறைமுகத்தின் காலிமுகத்திடலுக்கு அப்பாலிருந்து மோதர டிலாசால் வரையிலான இச்சுவர் இன்றும் எமது கண்களுக்குத் தெரிகிறது.

415 ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட கொழும்புத்துறைமுகம் கப்பல்கள் தரித்து நிற்பதற்கு இலகுவான வகையில் 600 ஏக்கராக வியாபிக்கப்பட்டது. இவ்வேலைத்திட்டத்துக்கு பத்து ஆண்டுகள் கழிந்தன. 1885ஆம் ஆணடு முதல் துறைமுக வசதிகள் காரணமாக கொழும்பு 30 இலட்சம் ரூபாவை வருமானமாகப் பெறலாயிற்று.

தேயிலை வருகையின் காரணமாக 19ஆம் நூற்றாண்டின் இறுதி காலத்தில் இலங்கை விரைவாக பல துறைகளிலும் முன்னேற்றமடைந்தது. அதற்கு முக்கிய காரணமாக தேயிலையை கூறினாலும் ஊக்கம் படைத்த தேசாதிபதிகளுமே காரணம் எனலாம் இலங்கையின் நிருவாக அபிவிருத்திக்கு கெர்குலிசு றொபின்சன் (1865- 1872) வில்லியன் கிறிகரி (1873- 1877) ஆர்தர் கோர்டன் (1883- 1890) ஜோசப் றிட்ச்வே (1896- 1908), கென்ரி பிளேக் (1908- 1907) கென்ரி மெக்கலம் (1907- 1912) ஆகிய தேசாதிபதிகள் பெரும் பங்களிப்பை வகித்தனர்.

தேயிலைக் கொழுந்து பராமரிப்பு

ஒவ்வொரு முறையும் கொழுந்தெடுக்கும் முறைகளால் தேயிலைச் செடியின் வளர்ச்சியும் ஆரோக்கியமும் பாதிப்பை அடையக் கூடாது. முழு வருடமும் அதிகப்படியாக கிலோ கொழுந்து பெறக்கூடிய வகையில் கொழுந்து எடுக்கப்பட வேண்டும்.

தேயி¨லைச் செடியின் மட்டத்திற்கு மேல் ஒரு திரியுடன் சேர்ந்த இரண்டு அல்லது மூன்று விரிந்த இலைகள் மற்றும் ஓரிரு இலைகளுடன் சேர்ந்த வங்கிக் கொழுந்தை ஒரு குறிப்பிட்ட கால எல்லையில் வெளியில் எடுப்பதையே கொழுந்து எடுத்தல் என்கின்றோம்.

தேயிலைச் செடியின் மட்டத்திற்கு மேல் எடுக்கத் தகுதியான கொழுந்துகளை கிள்ளி எடுக்க வேண்டும். கிள்ளி எடுக்கப்பட்ட கொழுந்தின் 65 வீதமான கொழுந்து திரியுடன் மூன்று இலைகளைக் கொண்டிருக்க வேண்டும்.

தேயிலைச் செடியின் மட்டத்திற்கு மேலுள்ள வங்கிகள் முழுவதையும் கிள்ளி எடுக்க வேண்டும். மீண்டும் அடுத்த தவணைக்கு தேவையான அரும்புகளை (இரண்டு இலைதிரி மற்றும் ஒரு இலை திரி தேயிலைச் செடியில் விட வேண்டும். தேயிலைச் செடியின் மட்டத்திலுள்ள முடிச்சுகள் ஒவ்வொரு தவணையிலும் சரியான முறையில் ஒடிக்கப்பட வேண்டும். மட்டத்திற்கு கீழ் உள்ள முற்றிய இலைகளைப் பறிக்கக் கூடாது.

வங்கிகளை (வங்கி என்பது காம்பு) எடுக்காவிட்டால் புதிய அரும்புகள் உண்டாக காலதாமதமாகும். தேயிலை கொழுந்தை உருவி எடுக்கக் கூடாது. மென்மையான கொழுந்துகள் சேதமாகிவிடும்.

கொழுந்து எடுக்கும் முறைகள்

1. தாய் தலையை விட்டுக் கொழுந்து எடுத்தல். ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை (வரட்சிக்காலம்) தாய் இலையை விட்டு கொழுந்து எடுக்க வேண்டும்.

இம்முறையில் கொழுந்து எடுப்பதால் செடியின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்துக்கும் தேவையான உணவு விடப்பட்ட (உரம்) தாயிலைகளில் தயாரிக்கப்பட்டு, செடிகளின் வேர்களில் சேர்த்து வைக்கப்படுகின்றது. இவ்வாறு வேர்களில் சேர்த்து வைக்கப்பட்ட உணவை பின்வரும் காலங்களில் நல்ல விளைச்லைத் தருகின்றது.

2. மட்டத்திற்கு கொழுந்து எடுத்தல்.

ஏப்ரல் மாதம் தொடக்கம் செப்டெம்பர் மாதம் வரை தேயிலைச் செடியின் மட்டத்திற்கு கொழுந்து எடுக்க வேண்டும். செடியின் மட்டத்தில் உள்ள தாயிலை மற்றும் கட்டிலைக்கு கொழுந்து வரை எடுக்க வேண்டும். மட்டத்திற்கு கீழ் கொழுந்து எடுக்கக் கூடாது.

கொழுந்து எடுக்கும் போது மட்டக்குச்சியை (வரிச்சி) பாவிக்க வேண்டும். எடுக்கப்பட்ட கொழுந்தை அதிக அளவில் கையில் வைத்திருக்கக் கூடாது. கொழுந்தை கூடையில் வைத்து அமுக்கவும் கூடாது. இதனால் பொழுந்து அவிந்து போய்விடும்.

பச்சைத் தேயிலை

மிஞிரிரினி ஹிரிதி எனப்படும் பச்சைத் தேயிலை விலை அதிகமாகும். நீரிழிவு §ந்ய் கொண்டவர்கள் கிரீன் டீயை தினமும் வெறும் வயிற்றில் காலையில் குடித்து வந்தால் அவர்களுக்கு புது உற்சாகம் பிறக்கும் கால் அடிப்பாத வலி, நரம்புகளில் இரத்தம் செல்லாது வலி எடுத்தல் குறைந்து குணமாகும். பச்சைத் தேயிலை கொழுப்பைக் குறைக்கும். உணவை ஜீரணிக்க செய்யும். உணவிலிருந்து கொழுப்பு உறிஞ்சப்படுவதை தடுக்கிறது. பச்சைத் தேயிலை நீரிழிவு நோயாளர்களுக்கு சிறந்த பாணமாகும்.

இலங்கையின் தேயிலை பயிர்ச் செய்கைக்கு ஜேம்ஸ் டெய்லர் முன்னோடியாக இருப்பது போல் உலகத் தேயிலை நிபுணத்துவதிற்கு டச்சுக்காரரான விஞ்ஞானி பேனாட் மிகவும் உதவினார். இவர் 1880க்கும் 1930க்கும் உட்பட்ட காலகட்டத்தில் தேயிலை பற்றி ஐம்பதுக்கும் அதிகமான நூல்களை எழுதியுள்ளார். இவரது பல நூல்கள் 1928 இல் இலங்கையின் தேயிலை ஆய்வு நூலகத்துக்குக் கொண்டு வரப்பட்டன.

தேயிலைக் கொழுந்துகளைப் பறித்து தொழிற்சாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, காய வைத்து, அரைத்து, உலர்த்தி, சலித்து முறுக வைத்து, காற்று புகாத வகையில் அடைத்து வர்த்தக சந்தையை எட்டுமட்டும் அனைத்து செயல்களும் ஒரு அறியாத, தெரியாத விஞ்ஞான முறையிலான செயல்பாடுகளே. தேயிலை செடிக்குள் எவ்வளவு விடயங்கள் மறைந்துள்ளன.

இவையெல்லாம் தீவிரமாக விஞ்ஞானம் வளர்வதற்கு முன் சாதாரண மனிதர்கள் கண்டுபிடித்த 8qனிபிடிப்புகளே.
avatar
சங்கவி
Admin
Admin

Posts : 1129
Points : 1427
Join date : 30/06/2010
Age : 35
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

Re: கோப்பிச் செய்கையின் வீழ்ச்சி தேயிலை செய்கைக்கு வித்திட்டது

Post by சூரியன் on Mon Oct 18, 2010 3:01 pm

தகவலுக்கு நன்றி அக்கா
avatar
சூரியன்
மல்லிகை
மல்லிகை

Posts : 143
Points : 277
Join date : 04/10/2010

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum