"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் குஜராத் மின் உற்பத்தி ஆலைக்கு எதிராக வழக்கு: விசாரணைக்கு ஏற்பு
by அ.இராமநாதன் Today at 8:35 am

» வாவ் பாப்... பைனலுக்கு முன்னேறியது சென்னை
by அ.இராமநாதன் Today at 8:29 am

» ஒரே நாளில் 11 படங்களா?: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்பு!
by அ.இராமநாதன் Yesterday at 7:52 pm

» ‘மெளக்லி’யின் அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு!
by அ.இராமநாதன் Yesterday at 7:50 pm

» நெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவுள்ள ஒபாமா!
by அ.இராமநாதன் Yesterday at 7:49 pm

» கொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்
by அ.இராமநாதன் Yesterday at 7:47 pm

» அசத்தல் சாதனைப் படைக்க சுரேஷ் ரெய்னாவுக்கு அரிய வாய்ப்பு!
by அ.இராமநாதன் Yesterday at 6:52 pm

» என்னுடைய கேப்டன் தான் சரியான முடிவை எடுப்பார் - மனம் திறந்த விராட் கோலி
by அ.இராமநாதன் Yesterday at 3:48 pm

» 3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்
by அ.இராமநாதன் Yesterday at 9:45 am

» தியானம் செய்தால் நல்ல சிந்தனை
by அ.இராமநாதன் Yesterday at 9:05 am

» 24 மணி நேரத்தில் மழை வரும்
by அ.இராமநாதன் Yesterday at 9:01 am

» பெண் மாலுமிகளுக்கு அமைச்சர் வரவேற்பு
by அ.இராமநாதன் Yesterday at 8:59 am

» அரசு வீட்டை காலி செய்ய மறுப்பு: 2 வருடம் அவகாசம் கேட்கிறார் அகிலேஷ்
by அ.இராமநாதன் Yesterday at 8:58 am

» குமாரசாமி பதவியேற்பு; சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
by அ.இராமநாதன் Yesterday at 8:56 am

» யார் இட்ட சாபம்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:58 pm

» யார் இட்ட சாபம்: உஷா முத்துராமன்
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:55 pm

» யார் இட்ட சாபம்: சா. கா. பாரதி ராஜா
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:52 pm

» பிறந்த நாளை ஜென்ம நக்ஷத்திர நாளில் கொண்டாடுவதில் இவ்வளவு நன்மைகளா?
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:47 pm

» இனி வழக்கம் போல் திருச்செந்தூரில் தங்கத்தேர் ஓடும்!
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:44 pm

» வருகிறது லேட்டஸ்ட் ஸ்மார்ட் போன்!
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:36 pm

» கடனில் முன்னிலை!
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:35 pm

» பளபள பார்பி!
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:35 pm

» கடல்கன்னி
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:34 pm

» மீண்டும் சிந்தஸைசர் இசைப்புரட்சி!
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:26 pm

» அழையா விருந்தினர்களை சமாளிப்பது எப்படி?
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:18 pm

» குதிரைகள். - கவிதை
by அ.இராமநாதன் Mon May 21, 2018 6:00 pm

» - கோடும் கோலமும் - கவிதை -
by அ.இராமநாதன் Mon May 21, 2018 2:42 pm

» சுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு!
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:03 am

» அணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை
by அ.இராமநாதன் Mon May 21, 2018 10:51 am

» செல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம்
by அ.இராமநாதன் Mon May 21, 2018 10:36 am

» ரயில்களில் அக்., 2ம் தேதி அசைவ உணவுக்கு தடை
by அ.இராமநாதன் Mon May 21, 2018 10:34 am

» கடவுளைப் பூரணமாக நம்பு
by அ.இராமநாதன் Mon May 21, 2018 10:32 am

» 98,000 பேர் வரி கணக்கு தாக்கல்
by அ.இராமநாதன் Mon May 21, 2018 10:30 am

» 98,000 பேர் வரி கணக்கு தாக்கல்
by அ.இராமநாதன் Mon May 21, 2018 10:29 am

» பாகிஸ்தானியரிடம் லஞ்சம்: மத்திய உள்துறை அதிகாரி கைது
by அ.இராமநாதன் Sun May 20, 2018 10:25 pm

» டெல்லியிடம் தோல்வி அடைந்து வெளியேறியது மும்பை
by அ.இராமநாதன் Sun May 20, 2018 10:18 pm

» கணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை....!!
by அ.இராமநாதன் Sun May 20, 2018 9:42 pm

» ஒரு வெளிப்படையான தேர்தல் அறிவிக்கை...!
by அ.இராமநாதன் Sun May 20, 2018 8:09 pm

» வர்த்தக போரை கைவிட அமெரிக்கா-சீனா ஒப்புதல்
by அ.இராமநாதன் Sun May 20, 2018 8:08 pm

» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! யார் இட்ட சாபம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun May 20, 2018 1:56 pm

» வரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்
by அ.இராமநாதன் Sun May 20, 2018 12:52 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Sun May 20, 2018 12:48 pm

» பயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள்?
by அ.இராமநாதன் Sun May 20, 2018 12:01 pm

» நீரில் மிதக்கும் பெருமாள்!
by அ.இராமநாதன் Sun May 20, 2018 9:03 am

» கற்றுக்கொள்! - கவிதை
by அ.இராமநாதன் Sun May 20, 2018 9:00 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines மேஜிக் செய்யும் குழந்தையின் கண்கள்!

Go down

மேஜிக் செய்யும் குழந்தையின் கண்கள்!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Sat Mar 05, 2011 2:54 pm
பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை கண்களைப் பாதுகாப்பாக
வைத்திருப்பது எப்படி என்ற விழிப்புணர்வு தேவைப்படும் காலம் இது. இந்த
நிலையில், பிறந்த குழந்தையின் கண்களின் அமைப்புப் பற்றியும் அதன் கண்களில்
ஏற்படும் கோளாறுகள் பற்றியும் திருச்சியிலுள்ள மகாத்மா கண் மருத்துவமனையைச்
சேர்ந்த கண் நல சிறப்பு மருத்துவர்களான டாக்டர் ரமேஷ், டாக்டர் மீனா ஆகிய
இருவரும் கூறுவதைக் கேட்போம்.

பிறந்த குழந்தையின் கண்கள், சிறிதாகக் கோடு கிழித்தாற்போல் இருக்கும்.
ஆனால், குழந்தையின் கண்களின் வளர்ச்சி உடம்பில் உள்ள மற்ற பாகங்களை விட,
வேகமாக இருக்கும். நான்கு வயதிற்குள் கிட்டத்தட்ட 80% வளர்ச்சி
முடிவடைந்துவிடும்.
பிறந்த நிலையில் குழந்தைகளின் கண்கள் தூரப் பார்வை என்ற நிலையில்
இருக்கும். கண்ணின் உருவ வளர்ச்சி ஏற்படும் போதுதான் அது இயல்பான நிலையை
எட்டும்.
குழந்தைகளின் குறும்பான கருவண்டு போன்ற கண்கள், நிறைய மேஜிக்
வேலைகளையும் செய்யும். திடீரென்று மாறுகண் போல கண்களை உள்நோக்கிவைத்துக்
காண்பிக்கும். "ஐயோ நம் குழந்தைக்கு மாறுகண் உள்ளதோ?" என்று பதறி தாய்
பார்ப்பாள். ஆனால், அதற்குள் கண்களை நேராக்கி தாயைப் பார்த்து குறும்புச்
சிரிப்பு ஒன்று சிரிக்கும். நாம் கண்டது கனவா? அல்லது நனவா? என்று தாய் தன்
கண்களைக் கசக்கிவிட்டுக் கொண்டு பார்ப்பது போல, அடிக்கடி இது போல்
நடக்கும்.
பெற்றோர் இதைப் பார்த்து பயப்படத் தேவையில்லை. குழந்தைகள் பிறந்து 6
மாதத்திலிருந்து 9 மாதம் வரை தங்களது கண்களை, மூக்கை நோக்கிக் கொண்டு
செல்வது மிகவும் இயல்புதான். அது வளர வளர இது குறைந்துக் கொண்டே வந்து
பின்னர் இயல்பாகி விடும்.

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56826
Points : 69582
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: மேஜிக் செய்யும் குழந்தையின் கண்கள்!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Sat Mar 05, 2011 2:54 pm

அதென்ன துணிப்பை போல கண்­ணீர்ப்பை?
புதிதாகப் பிறந்துள்ள பட்டுக் குழந்தை அழுதால், 3 மாதங்கள் வரை சத்தம்தான் வரும் கண்­ணீர் வராது.
இந்த ரோஜாக்குட்டியின் கண்களில் கண்ணீ­ர் வந்தால் அநேகமாக இது
கண்ணீ­ர்ப்பை அடைப்பு இருந்தால் வரும். கண்­ணீர்ப்பை என்பது மூக்கும்
கண்ணும் சந்திக்கும் இடத்தில் இருக்கும்.
கண்ணீ­ர்ப்பை அடைப்பு ஏற்படும் போது, குழந்தையின் கண்ணில் கண்ணீ­ர்
தேங்கி நிற்கும். சில நேரம் வடியும். கண்களில் பூளை தள்ளும். இமையெல்லாம்
ஒட்டிக் கொள்ளும். "ஐயோ, என் பட்டுக்குட்டியின் கண்ணுக்கு என்னாச்சு?"
என்று தாய் பதற்றம் அடைவாள். ஆனால், இதுகுறித்து பயப்படத் தேவையில்லை.
உடனடியாக கண் மருத்துவரை அணுகினால், அவர் சில சொட்டு மருந்துகளைக்
கொடுத்து, கண்ணீர்ப்பையை மசாஜ் செய்வது எப்படி என்று சொல்லித் தருவார்.
இதைச் செய்துகொண்டே இருந்தால், பாப்பா வளர வளர, 9 மாதத்திற்குள்ளாக
சரியாகப் போய்விடும்.
ஒன்பது மாதத்திற்குப் பின்னரும் கண்களில் நீர் வடிந்தால் கண்
மருத்துவரிடம் தூக்கிச் செல்ல வேண்டும். அவர் Probing என்ற சிறு முறையினால்
அதைச் சரிசெய்து விடுவார். அதன்பிறகு பட்டு பாப்பா பளீரென்ற கண்களுடன்
நம்மைப் பார்த்துச் சிரிக்கும்.
பெற்றோர் இருவர் சொன்னார்கள். "குழந்தை வேணும் குழந்தை வேணும்னு
கோயிலுக்குப் போனால் கோட்டானாய்ப் பிறக்கும்னு குழந்தைசாமி சொல்லுச்சாம்"
என்று. அவர்கள் மேலும், "டாக்டர், குழந்தையைத் தூக்கிக் கொண்டு
கோயிலுக்குப் போனோமோ இல்லியோ, உங்கள் கண் மருத்துவமனைக்குத் தவறாது
வந்துகொண்டு இருக்கிறோம். முதலில் கண்­ணீர்ப்பை அடைப்பை சரி செய்தீர்கள்.
இப்போது திடீரென்று கண்ணில் ஒரே சிவப்பு. என்ன செய்வதென்றே தெரியவில்லை"
என்று அங்கலாய்த்தார்கள்.
தெளிந்த நீரோடைப் போல உள்ள பளிங்குக் கண்களில், சிவப்பு நிறத்தைப்
பார்க்கும்போது, சிலீர் என்ற பயம் மனதிற்குள் தோன்ற... அக்கம் பக்கம்
உள்ளவர்கள் ஆயிரம் கதை சொல்வார்கள்.
"அங்கு ஒரு வீட்டில் ஒரு குழந்தைக்கு கண் இப்படித்தான் இருந்தது. பார்வை
போயே போச்சு" என்று பயமுறுத்துபவர்கள் ஏராளம். ஆனால், இது பயப்படும்படியாக
இருக்காது. பிறந்து 4 மாதங்கள் ஆகும்போது, குட்டிப் பாப்பா, கை கால்களை
அடித்துக் கொண்டு, நீந்தத் தொடங்கும். அப்படிச் செய்யும்போது, அதன் ரோஜாக்
கைகளில் உள்ள மென்மையான நகம், கூர்மையான ஆயுதமாக மாறி, அதன் கண்களில் தானே
குத்திக் கொள்ளும். பார்ப்பதற்குப் பயப்படும் அளவுக்கு கண் சிவந்து விடும்.
இதனால் ஒன்றும் ஆகாது. சொட்டு மருந்து போடப் போட, இந்த சிவப்பு கொஞ்சம்,
கொஞ்சமாக 1-20 நாட்களுக்குள்ளாக மாறி விடும். திரும்ப பளிங்கு வெள்ளைக்
கண்களுடன் பொக்கை வாய் திறந்து பளீர்ச் சிரிப்புடன் "நல்லா
பயமுறுத்திட்டேனா," என்று வீட்டிலுள்ள எல்லாரையும் பார்த்துச் சிரிக்கும்.

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56826
Points : 69582
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: மேஜிக் செய்யும் குழந்தையின் கண்கள்!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Sat Mar 05, 2011 2:55 pm

நோய்த் தடுப்பூசி, கண் பரிசோதனை இரண்டுக்கும் என்ன சம்பந்தம்?
ஒவ்வொரு குழந்தைக்கும் நோய்த் தடுப்பூசி (Immuniratuen) எதற்காகப்
போடுகிறோம். நோய்த் தடுப்பிற்காகத் தானே. நன்றாக நோய் நொடியில்லாமல் ஒரு
குழந்தை விளையாடிக் கொண்டிருக்கிறது. அதைத் தூக்கிக் கொஞ்சி "டாக்டர்
மாமாகிட்டே போய் சாக்லெட்டும், ஐஸ்கிரீமும் வாங்கிட்டு வரலாம்" என்று
ஏமாற்றி கூட்டிக் கொண்டுப் போகிறோம். "நறுக்" என்று ஒரு ஊசியைப் போட்டுக்
கொண்டு வருகிறோம். தடுப்பூசி போட்ட பின்னர் இரண்டு நாட்களுக்கு, காய்ச்சல்
அடிக்கிறது. "ஐயோ என் குழந்தைக்கு வலிக்கும். என் குழந்தைக்குத் தடுப்பூசி
போட்டால் காய்ச்சல் வரும். அழும். வேண்டவே வேண்டாம் தடுப்பூசி" என்று நாம்
நினைத்தால், நம் குழந்தைகள் பலவிதமான விபரீதமான உயிர்ச்சேதம் விளைவிக்கும்
நோய்களைச் சந்திக்க நேரிடும் அல்லவா.
இதை எதற்காகச் சொல்கிறேன் என்றால், குழந்தைகளுக்கு மூன்றிலிருந்து ஐந்து
வயதிற்குள் கண் பரிசோதனை செய்து கொள்வது மிகவும் அவசியமானதாகும். அதாவது
தடுப்பூசி போடும் அளவு அவசியமானதாகும். தடுப்பூசி போடாமல் நாம்
இருப்பதில்லை. இருக்கவும் கூடாது. அதே போல்தான் குழந்தைகள் கண்
பரிசோதனையும், இன்றியமையாதது. ஒரு குழந்தையின் கண்கள் பார்ப்பதற்கு ரொம்ப
அழகாகவும், நோய் நொடி இல்லாததுபோல் தெரிந்தாலும் கூட 5 வயதிற்குள்
கண்டிப்பாக கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இதனால் எவ்வளவோ பார்வை
இழப்பை நாம் தடுக்க முடியும். இதை மனதில் கொண்டுதான் "மூன்றிலிருந்து 5
வயதிற்குள் குழந்தைகளுக்கு கண் பரிசோதனை செய்வது தடுப்பூசி போடும் அளவு
முக்கியமானதாகும்" என்று சொல்லி வருகிறோம். அதைத் தாரக மந்திரமாகச் சொல்லத்
தொடங்கினோம். அதுவே இப்போது பெற்றோர் மனதிலும் ஆசிரியர்கள் மனதிலும்
பதியுமளவிற்கு நாங்கள் விழிப்புணர்வு நடவடிக்கைகள் நிறைய எடுத்துள்ளோம்.
நம் செல்லக் குந்தைகளின் கண்களில் உள்ள குறைபாட்டை 5 வயதிற்குள்
கண்டுபிடித்து நிவர்த்தி செய்ய வேண்டும். தெளிவற்ற பார்வையிருந்தால்
கண்ணாடி போட்டு, தெளிவான பார்வை கண் நரம்பில் விழுமாறு செய்ய வேண்டும்.
"இது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும். சரியான பருவத்தில் கண் நோய்களைச்
சரி செய்யாமல் குழந்தையிலேயே கண் பரிசோதனை செய்யாமல் விட்டுவிட்டீர்கள்
என்று குழந்தைகளும் கேட்கக் கூடாது. பெற்றோராகிய நீங்களும் "என்
குழந்தைகளுக்கு விலையுயர்ந்த பொம்மை வாங்கிக் கொடுத்தேன் வெளி நாடெல்லாம்
கூட்டிச் சென்றேன். வீடு கட்டிக் கொடுத்தேன் ஆனால் கண் பரிசோதனை செய்யத்
தவறி விட்டேனே, நானே என் குழந்தையின் எதிர்காலத்தைக் கெடுத்துவிட்டேன்"
என்று காலம் கடந்து வருத்தப்படக் கூடாது.
கண் மருத்துவமனைக்கு வரும் பெரியவர்களுடன், சில நேரம் குழந்தைகளும்
வருவார்கள். "அம்மா, உங்கள் குழந்தைகளின் கண்களை பரிசோதனை
செய்தாகிவிட்டதா?" என்று கூறியவுடன் "ஐயோ, டாக்டர் என் கண்மணியின்
கண்களுக்கெல்லாம் ஒன்றுமில்லை எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது"
என்பார்கள். நாம் அனைவரும் ஒன்று மட்டும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு குழந்தையின் கண்களில் குறைபாடு ஒன்றுமில்லை என்பதை, முற்றிலும்
முழுமையான கண் பரிசோதனைக்குப் பின்னர் ஒரு கண் மருத்துவரால் மட்டுமே சொல்ல
முடியும்.

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56826
Points : 69582
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: மேஜிக் செய்யும் குழந்தையின் கண்கள்!

Post by கவிக்காதலன் on Sun Mar 06, 2011 2:53 am

நன்றி

_________________
www.anishj.in | www.anishj.com | Am I Online?


இமை மூடினால் இருள் தெரியவில்லை...! அவள்தான் தெரிகிறாள்...!!
avatar
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 18
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

Re: மேஜிக் செய்யும் குழந்தையின் கண்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum