"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பிருதிவிராஜின் புதிய தோற்றம்
by அ.இராமநாதன் Today at 7:59 am

» மகள் சுருதிக்கு கமல்ஹாசன் அறிவுரை
by அ.இராமநாதன் Today at 7:56 am

» “பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
by அ.இராமநாதன் Today at 7:52 am

» நடிகர் விஷால், கமல்ஹாசனுடன் திடீர் சந்திப்பு
by அ.இராமநாதன் Today at 7:49 am

» 'மொபைல் மணி டிரான்ஸ்பர்' நிறுத்தம்
by அ.இராமநாதன் Today at 7:43 am

» ‛அதிநாயகே' என்ற வார்த்தையை திருத்த வேண்டும் : அரியானா அமைச்சர்
by அ.இராமநாதன் Today at 7:42 am

» சுத்தமாகிறது தாஜ் மஹால்!
by அ.இராமநாதன் Today at 7:40 am

» நீ இளவரசி மாதிரி இருக்கேன்னு சொல்லல? -
by அ.இராமநாதன் Yesterday at 11:16 pm

» வினாத்தாள் அவுட் ஆகியும் ஏன் உன்னால பாஸ் ஆக முடியலே?
by அ.இராமநாதன் Yesterday at 10:56 pm

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 10:47 pm

» நிதானத்தைக் கடைப்பிடி,...
by அ.இராமநாதன் Yesterday at 10:37 pm

» விண்மீன்கள் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 5:03 pm

» நொடிக் கதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 4:59 pm

» மல்லையா, நிரவ் மோடி போல 31 பேர் இந்தியாவை விட்டு தப்பி ஓடியுள்ளனர் - மத்திய மந்திரி தகவல்
by அ.இராமநாதன் Yesterday at 8:47 am

» இந்திய வீரர் வீராங்கணைகளுக்கு ஜப்பான் முட்டை...
by அ.இராமநாதன் Yesterday at 8:40 am

» தனுஷ் இயக்கும் அடுத்த படத்தின் பெயர் ‘நான் ருத்ரன்’?
by அ.இராமநாதன் Yesterday at 8:38 am

» சுசீந்தரனின் ’ஏஞ்சலினா’ படப்பிடிப்பு நிறைவடைந்தது
by அ.இராமநாதன் Yesterday at 8:37 am

» ஒரு சாவி கூட பீரோவுக்கு பொருந்த மாட்டேங்குதே?
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 11:59 pm

» 2 கி.மீ தூரத்தை 2 மணி 44 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்த சைலேந்திரபாபுவின் நீச்சல் குழு!
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 11:42 pm

» பள்ளிக்கு ஒரு லட்சம் சீர்வரிசை... ஆசிரியர்களைப் பிரமிக்க வைத்த ஊர்மக்கள்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 11:33 pm

» - கொஞ்ச நேரம் நடிக்கலாம்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 10:43 pm

» - இரும்பு இதயங்களுக்கான திறவுகோல்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 10:31 pm

» அதிர்ஷ்டம் உழைப்பின் முதுகில் ஒட்டிககிடக்கும்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 10:30 pm

» போலி நபரை பரீட்சை எழுத அனுப்பி விட்டு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பள்ளி முதல்வர்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 8:20 pm

» நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 8:18 pm

» பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 8:12 pm

» பெண் நிருபரை சீண்டிய அமைச்சர் விஜயபாஸ்கர்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 8:09 pm

» தமிழக பாஜ அடுத்த தலைவர் யார்?
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 8:07 pm

» தேசிய கீதத்தில் திருத்தம்: காங்., எம்பி., தீர்மானம்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 8:06 pm

» ஓட்டுக்குப் பணம் தர நாங்கள் தயார்....
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 4:54 pm

» வேண்டாம் தாயீ....மூணாவது நாளா பட்டினி கிடந்துட்டுப் போறேன்...
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 4:51 pm

» இங்கேயும் இடது - அங்கேயும் அதே!
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 2:51 pm

» முல்லா நஸ்ருதீன்!
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 2:47 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 2:20 pm

» கீர்த்தி சுரேஷ் மகிழ்ச்சி
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 2:16 pm

» குடியிருப்பு பகுதியில் புகுந்த மலைப் பாம்பு: லாவகமாக பிடித்த பெண்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 2:12 pm

» மலச்சிக்கலை தீர்க்கும் சூசி முத்திரை
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 2:01 pm

» துல்கர் சல்மான் ஜோடியாக நடிக்கும் சோனம் கபூர்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 1:55 pm

» வீராணம் ஏரி நீர் திடீர் நிறுத்தம்: சென்னையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுமா?
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 1:52 pm

» வெல்வெட் நகரத்தில் வரலட்சுமி சரத்குமார்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 12:53 pm

» சாவித்திரி வேடத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ் தோற்றம் வெளியானது
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 12:49 pm

» இந்தியன் ஆயில் கார்ப்பரே‌ஷன் பெட்ரோல் பங்கில் 5 கிலோ சமையல் கியாஸ் விற்பனை
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 12:42 pm

» லட்சுமி கடாட்சம் பெற விரும்புபவர்கள் சண்டை போடுவதைத் தவிருங்கள்.
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 9:37 am

» ஆவடியில் ராணுவ உடை தொழிற்சாலை மூடப்படாது: மத்திய அரசு அறிவிப்பால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 9:12 am

» வந்துவிட்டது, ‘வைசார்ஜர்’
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 9:04 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines நம்பிக்கை தரும் நாட்டுப்பற்று -வழக்கறிஞர் ஸ்டாலின் குணசேகரன்

Go down

நம்பிக்கை தரும் நாட்டுப்பற்று -வழக்கறிஞர் ஸ்டாலின் குணசேகரன்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Sat Mar 12, 2011 7:16 pm

வல்லமை தாரோயோ – திருச்சி
“அமெரிக்காவின் தலைவர் உலகத்தின் தலைவராக கருதப்படுகிறார். அந்தப்
பதவிக்கே இளம் வயதில் வரமுடிகிறது என்றால் அதற்குக் காரணம் அவர் நெஞ்சில்
ஆழமாயிருந்த நம்பிக்கைதான். விடாமுயற்சி, நம்பிக்கை, அர்ப்பணிப்பு உணர்வு,
தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டுமென்று இடையறாமல் சிந்திப்பது, வளர்த்துக்
கொண்டிருக்கிற தகுதியை முறையாகப் பயன்படுத்த வேண்டுமென்கிற எண்ணம் இவை
கலந்த கூட்டுத் தொகுப்பாகத்தான் ஒபாமா அமெரிக்கா அதிபராக வெற்றி
பெற்றிருக்கிறார். இது அமெரிக்காவில்.


இது அமெரிக்காவால் முடியும், ரஷ்யாவால் முடியும், சாப்பாட்டிற்கே
சிரமப்படுகிற ஏழை நாட்டில் சந்திரனைப் பற்றி நினைக்க முடியுமா என்று
எண்ணியவர்கள் ஏராளம். ஆனால் இன்று சந்திரனைப் பற்றி நினைக்க முடிந்தது
அல்ல, சந்திராயன் என்ற விண்கலத்தை சந்திரனுக்கு இந்தியா
அனுப்பியிருக்கிறது. இந்தியர் அனைவரும் பெருமைப்படத்தக்க விஷயம் இது.
1959ல் விண்வெளிக்கு முதல் விண்கலம் ரஷ்யாவிலிருந்து செலுத்தப்பட்டது.
இதுவரை 67 முறை விண்கலன்கள் விண்வெளிக்கு செலுத்தப் பட்டிருக்கிறன.
சந்திராயன் 68வது விண்கலம். ஆனால் ரஷ்யாவும், அமெரிக்காவும் தங்கள்
விண்கலங்களில் பொருத்தாத புதிய புதிய கருவிகள்
பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அதில் ஐந்து கருவிகள் இந்தியாவிலேயே
தயாரிக்கப்பட்டவை.
ஏறத்தாழ ஐம்பது வீடுகள் கொண்ட கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே
இருக்கிற ஒரு கிராமத்தில் மிகச் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர்
திரு.மயில்சாமி அண்ணாதுரை. தாத்தா ஒரு பெட்டிக்கடை நடத்தியவர். தந்தை
ஆசிரியர். தொடக்கப் பள்ளி இறுதிவரை தமிழ் போதனை முறையிலே படித்தவர்.
‘சந்திராயன்’ திட்ட இயக்குநராக இந்தத் திட்டத்தை எத்தனை நாள் அடைகாத்து
வைத்திருப்பார்?
இயற்கையான, இயல்பான, உணர்வுப்பூர்வமான நம்பிக்கைதான் நீடிக்கும்.
திருக்குறளையும், பாரதியார் கவிதைகளையும் படித்தால் நெஞ்சில் ஆழமான
நம்பிக்கை பதியும்.
‘வினைத்திட்பம்’ என்ற ஓர் அதிகாரம் மட்டும் போதும். பாரதியாரின் ஆத்திச்சூடி முழுவதும் படித்தால் போதும்.
நம் நாட்டுத் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்தாலே நம்பிக்கை வளரும். வ.உ.சி யின் வாழ்க்கையை மட்டுமே படித்தால் கூட போதும்.
1917ல் ரஷ்யப் புரட்சி நடைபெறுகிறது. அதன்பிறகு இந்தியாவில் 1920ம்
ஆண்டு தொழிற்சங்கம் தோன்றியது. ஆனால் 1908 ஆம் ஆண்டு, இந்தியாவில்
தொழிற்சங்கச் சட்டம் உருவாவதற்கு முன்பே, தொழிற்சாலையில், தொழிலாளர்களை
கொடுமைப்படுத்துவதைப் பார்த்தபிறகு, தொழிற்சங்கம் உருவாக்க வேண்டுமென்று
எந்த சங்கத்தையும் முன்னுதாரணமாக கொள்ள முடியாத அந்த காலகட்டத்திலேயே ஒரு
தொழிற்சங்கத்தை நம்பிக்கையோடு தொடங்கினார் வ.உ.சி. அதன் சார்பில் நடைபெற்ற
போராட்டங்கள் அனைத்திலும் வெற்றி பெற்றார்.
சுதேசிக் கப்பல் வாங்குவதற்காக பம்பாய் சென்றவர், அவருடைய மகன்
உலகநாதன் இறந்த போதும், தமிழகம் திரும்பி வராதவர். கப்பலோடு தான் தமிழகம்
திரும்பினார்.
மகன் இறந்த போதும், உறுதி குலையாது எடுத்த லட்சியம்.
நிறைவேறவேண்டுமென்று சிந்தித்தாரே, அப்போது அவருக்கு அந்த நம்பிக்கையை
உருவாக்கியது நாட்டுப்பற்றுதான்.
சமூக சிந்தனை ஒருவனுக்கு நம்பிக்கையை உருவாக்கும். தான் மட்டுமே
முன்னேற வேண்டுமென்று சிந்திப்பவன், ஒரு வேளை முன்னேற முடியாமல் போகிறபோது
அவன் சோர்வடைவான். நானும் முன்னேற வேண்டும் நாடும் முன்னேற வேண்டுமென்று
சிந்திப்பவன் சோர்வடைய மாட்டான்.
பரீதாபாத்தில் அரசின் விஞ்ஞான ஆய்வுக் கூடம் ஒன்றுள்ளது. அதன் தலைமை
விஞ்ஞானி ஒரு பெண்மணி. அவர் பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக், நைலானிலிருந்து
பெட்ரோல் தயாரிக்கும் முறையைக் கண்டுபிடித்துவிட்டார்.. அதைப் பற்றி மத்திய
அமைச்சர்களுக்கு கடிதமெழுதியிருக்கிறார். எப்படியோ ஒரு ஜப்பானிய நிறுவனம்
இதை அறிந்து அவரைச் சந்தித்து ஜப்பானுக்கு நீங்கள் வந்து இந்த முறையைச்
சொல்லித் தந்தால் உங்களுக்கு எவ்வளவு சம்பளமோ அதைத் தந்துவிடுகிறோம்
என்றார்கள். அதற்கு அந்தப் பெண்மணி, “இல்லை நான் ஜப்பானுக்கு வர இயலாது.
ஏனென்றால் இந்தியாவின் வரிப்பணத்தில் நான் கற்ற கல்வி ஜப்பானிய மக்களுக்கு
பயன்பட அல்ல” என்று மறுத்துவிட்டார்.
இதைக் கேள்விப்பட்ட இந்தியாவின் மிகப்பெரிய தனியார் நிறுவன அதிகாரிகள்
அவரிடம், “உங்கள் நாட்டுப் பற்றை பாராட்டுகிறோம். நீங்கள் எங்கள்
நிறுவனத்தில் பணியாற்றி நீங்கள் கண்டுபிடித்த முறையின் மூலம் பெட்ரோல்
தயாரிக்கலாம்” என்றார்கள் .
பூர்த்தி செய்யப்படாத காசோலை ஒன்றையும் அளித்தார்கள். அதை மறுதலித்து
அந்தப் பெண் விஞ்ஞானி, “நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. ஜப்பான் நிறுவன
அதிகாரிகளை திருப்பி அனுப்பினேன். இப்போதும் சொல்கிறேன். என் கல்வியை
இந்திய மக்களுக்காக பயன்படுத்துவேனே தவிர, தனிப்பட்ட முதலாளிகள்
லாபமடைவதற்காக அல்ல ” என்று சொன்னார்.
எவ்வளவு உறுதி, நம்பிக்கை அந்தப் பெண்மணிக்கு இருந்திருக்க வேண்டும் என்று சிந்தியுங்கள்.
‘விடுதலை வேள்வியில் தமிழகம்’ புத்தகத்தை எழுதத் தொடங்கியபோது, ஒரு
எழுத்தாளரிடம் இந்த முயற்சியை பற்றி சொன்னேன். கிட்டத்தட்ட ஆறுமணி நேரம்
நான் பேசினேனே தவிர அவர் பேசவில்லை. நான் வலுக்கட்டாயமாக அவரைப் பேச வைத்த
போது, “இந்த முயற்சி வெற்றி பெறாது” என்றார். நான், “வெற்றி பெற்றால்?”
என்றேன்.
அவர், “விடுதலைப் போராட்டத்தின் போது அந்தமான் சிறையில் ஏழு ஆண்டுகள்
தண்டனை பெற்றவருக்கு கிடைக்கக்கூடிய மரியாதை, பெருமை, இந்த புத்தகத்தை
உருவாக்கினால் கிடைக்கும்” என்றார். அந்த ஒரு வார்த்தைதான் எனக்குள்
நெருப்பை பற்ற வைத்தது. ஆறாண்டு காலம் இடைவிடாத முயற்சியில் விடுதலை
வேள்வியில் தமிழகம் உருவானது. ஆயிரம் அலுவல்களுக்கிடையில் முதல்வர்
கருணாநிதி அணிந்துரை வழங்கினார்.
வேறு பதிப்பகங்கள் வெளியிட முன்வராத சூழலில் நானே வெளியிட்டேன்.
நாட்டிற்காக அனைத்தையும் இழந்ததல்லவா சுதந்திரத்தை பெற்றுக்
கொடுத்திருக்கிறார்கள். நான் நான்கைந்து வருட காலம் இதற்காக ஒதுக்கினேன்.
சிறையில் நாம் வாடவில்லை. வரலாற்றை பதிவு செய்கிறோம். இது தியாகமல்ல.
அவர்களுக்கு நன்றி செலுத்துகிற கடமை.
நம்பிக்கை என்பது பணம் மட்டும் சம்பாதிக்க அல்ல. தொழிலதிபராக
பணக்காரராக மட்டுமல்ல. ஒரு பெரிய வீரனாக, நம் லட்சியத்தின் வாயிலாக
நாட்டின் புனிதமான வழிகாட்டியாகவும் நாம் உருவாக வேண்டுமென்றா ல்,
எதிர்பார்ப்பில்லாமல் இந்த சமுதாயம் பயனடைய வேண்டுமென்று லட்சிய வெறியோடு
செய்யக்கூடிய காரியம்தான் வெற்றி பெறும். பெறவேண்டும். அதுதான் தேசத்தின்
வெற்றி.
நன்றி வழக்கறிஞர் ஸ்டாலின் குணசேகரன்

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum