"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» டூ லெட் தமிழ் திரைபடம் சிறந்த படமாக தேர்வு
by அ.இராமநாதன் Today at 5:17 am

» முதல் பார்வை: 'தீரன் அதிகாரம் ஒன்று' - நேர்த்தியான போலீஸ் சினிமா!
by அ.இராமநாதன் Today at 5:15 am

» வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
by அ.இராமநாதன் Today at 5:11 am

» எந்த கட்சி ஆட்சிக்கு வருதோ, அதுதான் நம்ம கட்சி…!!
by அ.இராமநாதன் Yesterday at 9:56 pm

» ஆபரேசன் பண்ணிக்க பயப்படாதீங்க…!!
by அ.இராமநாதன் Yesterday at 9:56 pm

» கிட்னி திருடுபோனா நிர்வாகம் பொறுப்பல்ல…!!
by அ.இராமநாதன் Yesterday at 9:55 pm

» மாமியாரை சமாளிக்க சக்களத்தி துணை வேணும்...!!
by அ.இராமநாதன் Yesterday at 7:42 pm

» வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
by அ.இராமநாதன் Yesterday at 7:36 pm

» வீடு வரும்போதே ஏன் இறங்கலை...!!
by அ.இராமநாதன் Yesterday at 7:34 pm

» சொரணை இருக்கிறவளான்னு கிள்ளி பார்த்தேன்...!!
by அ.இராமநாதன் Yesterday at 7:26 pm

» - மேய்ச்சல் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 5:44 pm

» பயம் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 5:44 pm

» கும்ப ராசிக்காரர்களுக்கு காரத்திகை மாத பலன்
by அ.இராமநாதன் Yesterday at 5:23 pm

» சென்னையில் 5ஜி சேவை: நோக்கியா தகவல்!!
by அ.இராமநாதன் Yesterday at 5:18 pm

» போர்ப்ஸ் பத்திரிக்கையின் இளம் கண்டுபிடிப்பாளர்கள் பட்டியலில் இடம்பிடித்த சென்னை பெண்
by அ.இராமநாதன் Yesterday at 5:12 pm

» உரிய அனுமதி கிடைத்தவுடன் தமிழகத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கப்படும்: இந்திய அணுசக்தி கழகம்
by அ.இராமநாதன் Yesterday at 5:09 pm

» குரலை இனிமையாக்கும் மாங்கனி
by அ.இராமநாதன் Yesterday at 5:07 pm

» இது வாட்ஸ் அப் கலக்கல்...!!
by அ.இராமநாதன் Yesterday at 3:18 pm

» காலை வணக்கம்....
by அ.இராமநாதன் Yesterday at 3:17 pm

» கழுதை போச்சே! - சிறுவர் கதை
by அ.இராமநாதன் Yesterday at 3:12 pm

» போஸ்ட் ஆபீசில், 'ஆதார்' சேவை
by அ.இராமநாதன் Yesterday at 3:03 pm

» ‘இம்சை அரசன்’ படத்தில் நடிக்க மறுப்பு நடிகர் வடிவேலுவுக்கு நோட்டீஸ்
by அ.இராமநாதன் Yesterday at 2:56 pm

» சூர்யா வெளியிட்ட நாச்சியார் டீசர்!
by அ.இராமநாதன் Yesterday at 2:56 pm

» கட்டுகட்டாக ரூ. 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுடன் நடிகர் விஷால் டுமீல் வீடியோ...
by அ.இராமநாதன் Yesterday at 2:55 pm

» தீபிகாவின் மூக்கை வெட்டுவோம்! ராஜபுத்திர அமைப்பு கடும் மிரட்டல்
by அ.இராமநாதன் Yesterday at 2:51 pm

» ஆசிய பணக்கார குடும்பங்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்
by அ.இராமநாதன் Yesterday at 2:50 pm

» புதிய உச்சத்தை தொட்டது முட்டை விலை
by அ.இராமநாதன் Yesterday at 2:49 pm

» நகைக்கடையின் கூரையில் துளைபோட்டு பட்டப்பகலில் உள்ளே இறங்கி துணிகர கொள்ளை
by அ.இராமநாதன் Yesterday at 2:48 pm

» நாங்க சுற்றுலா பயணிகள் அல்ல... இரயில்வே பணியாளர்கள்!
by அ.இராமநாதன் Yesterday at 2:47 pm

» பத்மாவதி படத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
by அ.இராமநாதன் Yesterday at 2:45 pm

» வங்கியில் சேமிப்பு கணக்கு ஆரம்பித்தல் (தொடர் பதிவு)
by அ.இராமநாதன் Yesterday at 11:51 am

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Thu Nov 16, 2017 8:45 pm

» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by அ.இராமநாதன் Thu Nov 16, 2017 6:59 pm

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by அ.இராமநாதன் Thu Nov 16, 2017 6:57 pm

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by அ.இராமநாதன் Thu Nov 16, 2017 6:56 pm

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by அ.இராமநாதன் Thu Nov 16, 2017 6:56 pm

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by அ.இராமநாதன் Thu Nov 16, 2017 6:54 pm

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by அ.இராமநாதன் Thu Nov 16, 2017 1:57 pm

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by அ.இராமநாதன் Thu Nov 16, 2017 1:48 pm

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by அ.இராமநாதன் Thu Nov 16, 2017 1:47 pm

» சீட் பெல்ட் அணியாததால் நாளொன்றிற்கு 15 பேர் மரணம்
by அ.இராமநாதன் Thu Nov 16, 2017 1:46 pm

» உறக்கம் எப்போது இனிமையாகிறது?
by அ.இராமநாதன் Thu Nov 16, 2017 11:57 am

» குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்குமா?
by அ.இராமநாதன் Thu Nov 16, 2017 11:57 am

» பெண்கள் அதிகம் பயன்படுத்தும் ஆயுதம் எது?
by அ.இராமநாதன் Thu Nov 16, 2017 11:56 am

» காதலியைப் புகழ்வது போல…!! –
by அ.இராமநாதன் Thu Nov 16, 2017 11:55 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



வெயில் கொடுமையில் இருந்து பாதுகாக்க

View previous topic View next topic Go down

வெயில் கொடுமையில் இருந்து பாதுகாக்க

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Wed Mar 23, 2011 4:43 pm

வந்துவிட்டது வெயில் காலம்..! இனி, வியர்வையில் நனைத்து, தாகத்தில் தவிக்க
வைத்து, உடம்பையெல்லாம் பிசுபிசுப்பாக்கி... படுத்தி எடுத்துவிடும் இந்த
வெயில்.
ஆண்களின் பாடு ஓரளவுக்குப் பரவாயில்லை. ஆனால், எப்போதுமே உடல்
முழுக்க மூடிக் கொண்டிருக்கும் ஆடைகளை அணிவதால்... தோல் பிரச்னைகள்
தொடங்கி, சிறுநீர் கோளாறுகள் வரை இந்த வெயில்
பெண்களைத்தான் கூடுதலாக வாட்டி எடுக்கும்.

அப்படி க்யூ கட்டி வரும் வெயில்கால நோய்களில் இருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ள ஐடியாக்களை பார்த்துக்கொள்ளலாம்.

''சின்னச்
சின்ன மெனக்கெடுதல் மூலமாக வெயிலின் பாதிப்பை முற்றிலுமாகத் தடுக்க
முடியும். வெயில் காலத்தில் வியர்வை அதிகமாக சுரப்பதால், நீரோடு சேர்ந்து
சோடியம் குளோரைடு போன்ற உப்புச் சத்துக்களும் உடலிலிருந்து வெளியேறுகின்றன.
இவை உடலின் மேற்பரப்பில் படிவதால்தான் அரிப்பு ஏற்படுகிறது. எனவே,
வெளியில் போய் உள்ளே வந்ததும், சற்றே வியர்வை அடங்கிய பிறகு, வியர்வையில்
நனைந்த பாகங்களை நன்றாகக் கழுவிவிட்டால், அரிப்பு ஏற்படாது. அப்படியே
விட்டுவிடும் பட்சத்தில் அரிப்பு உருவாகி, அதனை சொறியும்போது
கிருமித்தொற்று ஏற்படுகிறது. இதன் தொடர் விளைவாக... ஃபங்கஸ், வியர்க்குரு,
தடிப்பு என ஏதாவது ஒரு பிரச்னையால் தோல் பாதிக்கப்படுகிறது.

வெயில்
காலங்களில் இறுக்கம் அதிகம் இல்லாத உடைகளை அணியலாம். வெயிலால் உண்டாகும்
பெரிய அளவிலான பாதிப்பு... தோலுக்கும், சிறுநீரகத்துக்கும்தான். தோலில்
ஏற்படும் கிருமித்தொற்று கிட்னி அலர்ஜியை உண்டாக்கும். உடலின் மேற்பரப்பில்
படியும் சோடியம், தோலில் வறட்சியை ஏற்படுத்தும். முகத்திலும் லேசான கறுமை
ஏற்படும். அதனால், சூரிய ஒளியின் தாக்கத்தைக் குறைக்கக்கூடிய க்ரீம்களைப்
பயன்படுத்தலாம். ரசாயனக் கலப்பற்ற இயற்கையான க்ரீம்கள் இப்போது
மார்க்கெட்டில் நிறைய வருகின்றன. கை, கால்களில் எண்ணெய் தேய்த்துக்
கொள்ளலாம். குளிக்கும்போது கடலை மாவு, பாசிப்பயறு மாவு என வறட்சியைத்
தாங்கக்கூடிய பொருட்களைப் பயன்படுத்தலாம்.

முகத்தில் கிருமித்தொற்று
ஏற்படாதபடி தடுக்க மஞ்சள் பூசுவது நல்லது. மஞ்சள் மகத்தான கிருமிநாசினி.
அதனால்தான் மஞ்சள் பூசும் வழக்கத்தை நம் முன்னோர்கள் வலியுறுத்தி
வந்தார்கள். சாதாரண காலங்களில் பூசும் மஞ்சளைக் காட்டிலும், வெயில்
காலங்களில் அதிகம் பூசலாம். முகம் மட்டும் அல்லாது வியர்வை அதிகம்
சுரக்கும் அக்குள் போன்ற பகுதிகளிலும் மஞ்சளைப் பயன்படுத்தலாம்.

வியர்வையால்
ஏற்படும் இன்னொரு பாதிப்பு... தலைமுடியின் வேர்ப் பகுதிகளில் சிறு சிறு
கட்டிகள் வருவது. இதனால் பொடுகு, முடி உதிர்தல் போன்றவை ஏற்படும். சாதாரண
காலத்தைக் காட்டிலும் வெயில் காலத்தில் தலையைச் சுத்தமாக வைத்துக் கொள்ள
வேண்டும். விளக்கெண்ணெய் குளியல் மிகவும் நல்லது. செம்பருத்தி, மருதாணி
ஆகியவற்றைத் தேய்த்துக் குளிப்பதன் மூலம் தலையைக் குளிர்ச்சியாக வைத்துக்
கொள்ளலாம். தலைக்கு சாம்பிராணி புகைபோடுவது கிருமித்தொற்றைத் தடுக்கும்!'' -

''ஆண்களைக்
காட்டிலும் பெண்களின் சிறுநீர்ப் பையின் கொள்ளளவு அதிகம். சாதாரணமாகவே
சிறுநீரை அடக்கி வைக்கும் சிக்கலான சந்தர்ப்பம் பெண்களுக்கு அடிக்கடி
ஏற்படுகிறது. ஆண்களைப் போல் எந்த இடத்திலும் சிறுநீர் கழிக்கலாம் என்கிற
நிலை பெண்களுக்கு இல்லை. உறவினர் வீடுகளுக்கோ, வெளி இடங்களுக்கோ செல்கையில்
'பாத்ரூம் எங்கே?’ எனக் கேட்பதற்குக்கூட சங்கோஜப்பட்டு, கட்டுப்படுத்திக்
கொள்ளும் பெண்களும் உண்டு. ஆனால், வெயில் காலத்தில் அப்படி கட்டுப்படுத்தவே
கூடாது.

வியர்வை அதிகம் சுரப்பதால், சிறுநீர் குறைவாகவே இருக்கும்.
என்றாலும், அதன் அடர்த்தி அதிகம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அதை
வெளியேற்றாமல் அடக்கி வைக்கும்போது, ஆசிட்டாக மாறவும் வாய்ப்பு இருக்கிறது.
சிறுநீரின் அடர்த்தி அதிகரிக்கும்போது, சிறுநீர்ப் பையில் நோய் எதிர்ப்பு
சக்திக்காக இருக்கும் புரதச்சத்துக்கள் குறையும். அதன் முதல்
அறிகுறிதான்... நீர்க்குத்தல். 40 வயது தாண்டிய பெண்களுக்கு உப்புச்
சத்துக் குறைவால் கை, கால்களில் மரமரப்பு மற்றும் இழுப்பு ஆகியவை ஏற்படும்.

இதை எல்லாம் ஆரம்பத்திலேயே தடுக்க நாம் செய்யவேண்டிய சாதாரண வேலை... நிறைய
தண்ணீர் குடிப்பதும், சிறுநீரை அடக்கிவைக்காமல் உரிய நேரத்தில்
கழிப்பதும்தான். உடலின் நீர் இழப்பை ஈடுகட்டும்விதமாக இளநீர், தர்பூசணி,
மோர், பழச்சாறுகளையும் நிறைய பருகலாம். வியர்வையோடு வெளியேறும் உப்புச்
சத்துக்களை ஈடுகட்ட, தண்ணீரில் சிறிதளவு உப்பு சேர்த்துப் பருகலாம். வெயில்
காலத்தில் வறட்சியைத் தாங்க முடியாமல் குழந்தைகள் அழும்போது, சிறிதளவு
உப்புச் சேர்த்த தண்ணீரைக் கொடுத்தாலே சரியாகிவிடும்'' என்று எளிய
தீர்வுகளைச் சொல்லும் டாக்டர் மோகன்தாஸ், நிறைவாகச் சொன்னது அட்சர லட்சம்
பெறும். அது -

''அரேபிய நாடுகளைப் போல் எங்கும் வெயில் அதிக
உக்கிரமாக இருப்பதில்லை. எனவே, குளிர்ச்சிக்காக இஷ்டம் போல கண்டவற்றையும்
வாங்கிப் பருகாமல்... தண்ணீர் மற்றும் இயற்கையே கொடையாக தந்திருக்கும்
குளிர்ச்சி தரும் பொருட்களைப் பயன்படுத்தினாலே போதும்... வெயிலின்
அபாயத்தில் இருந்து முழுவதுமாக நம்மை தற்காத்துக் கொள்ள முடியும்!''

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56806
Points : 69546
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum