"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பெருமழையும் சிறுதூறலும் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 11:28 pm

» டெஸ்ட் எடுக்காமலேயே எனக்கு கொழுப்பு அதிகம்னு சொல்றீங்களே, எப்படி?
by அ.இராமநாதன் Yesterday at 11:22 pm

» எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்கிறார்களே, என்ன கூட்டம் நடக்குது?
by அ.இராமநாதன் Yesterday at 10:29 pm

» கருகிய ரோஜாவும் கடைசிக் கேள்விகளும் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 10:14 pm

» எளிய பயிற்சி முறை என்பது முத்ரா பயிற்சிதாங்க....
by அ.இராமநாதன் Yesterday at 9:53 pm

» உடல் நலம் தரும் விரல் முத்திரைகள்
by அ.இராமநாதன் Yesterday at 9:50 pm

» உளியின் யுத்தம்! நூல் ஆசிரியர் : கவிஞர் பல்லவி குமார் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 8:50 pm

» உலக தண்ணீர் தினம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 8:48 pm

» விஸ்க்கியா, பிராந்தியா...எது வேணும்னு தெளிவா சொல்லித் தொலைங்க....!!
by அ.இராமநாதன் Yesterday at 5:39 pm

» டெம்பர் தமிழ் ரீமேக் படத்தில் விஷாலுக்கு ஜோடியாகும் நயன்தாரா பட நடிகை
by அ.இராமநாதன் Yesterday at 12:49 pm

» மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகிறார் அஞ்சலி?
by அ.இராமநாதன் Yesterday at 11:14 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 7:59 am

» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Wed Mar 21, 2018 10:59 pm

» நெருப்பின் தாகம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Mar 20, 2018 9:06 pm

» நம் சமையல் அறையில்...
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 5:42 pm

» இந்தியாவில் மின்சார கார்களை களமிறக்கும் மாருதி சுஸுகி
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:51 am

» ஸ்ரீதேவி வாழ்க்கை சினிமா படமாகிறது வித்யாபாலன் நடிக்க பேச்சுவார்த்தை
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:38 am

» பிளாக் பேந்தர் படம் ரூ.7 ஆயிரம் கோடி வசூல் சாதனை
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:35 am

» சசிகலா கணவர் நடராஜன் காலமானார்
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:33 am

» சசிகலா புஷ்பாவுக்கு மீண்டும் திருமணம்!
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:32 am

» இன்று பத்ம விருதுகளை வழங்குகிறார் ஜனாதிபதி
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:31 am

» 2ஜி வழக்கில் அமலாக்கத்துறை அப்பீல்: ராசா, கனிமொழிக்கு சிக்கல் வருகுது
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:30 am

» ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:29 am

» அரசு கஜானாவுக்கு வரவேண்டிய ரூ.1,000 கோடி எங்கே போகிறது? சட்டசபையில் தி.மு.க. காட்டமான கேள்வி
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:28 am

» பூ பூப்பதும் உலகச் செய்திதான்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 11:20 pm

» சின்னச் சின்ன சிந்தனைகள்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 10:46 pm

» குடம் குடமாய் பாலாபிஷேகம் - எக்ஸ்பிரஸ் கதைகள்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 6:13 pm

» குழந்தையை தவறவிட்டவர் கையில் பத்திரமாக இருந்தது கைப்பேசி...!!
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 6:08 pm

» உன்னோட புடவை பளிச்சுன்னு இருக்கே...?!
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 5:35 pm

» உங்க பொண்ணுக்கு யோகா வராது, சமையல் கத்துக்கொடுங்க...!!
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 5:32 pm

» மூலிகை உணவு
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 5:15 pm

» அவசரம் - X பிரஸ் கதைகள்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 5:06 pm

» X பிரஸ் கதைகள்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 4:53 pm

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 3:30 pm

» ஆக்சிஸ் வங்கியில் ரூ.4,000 கோடி மோசடி - தனியார் நிறுவன இயக்குனர்கள் கைது
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 3:09 pm

» நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,விற்கு எதிராக 3 நோட்டீஸ்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 2:59 pm

» படமும் செய்தியும்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 2:53 pm

» சுதந்திர போராட்ட கதையில் சிரஞ்சீவியுடன் நடிக்கும் நயன்தாரா
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 10:04 am

» தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 10:00 am

» முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணி சாம்பியன்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 10:00 am

» தனுஷ்கோடி கடலில் ரூ.300 கோடியில் காற்றாலை
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 9:43 am

» 20,21ல் திருமலையில் இலவச தரிசனம்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 9:41 am

» ரிசர்வ் வங்கி அதிகாரிகள் திருப்பதிக்கு போகலாம்: சிதம்பரம்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 9:39 am

» தனிமையில் வாடும் பொம்மை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இராமசெயம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Sun Mar 18, 2018 11:02 pm

» அமரர் கல்கி பற்றி அவரது மகள் ஆனந்தி,
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 9:34 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 'இது'...இப்படி இருந்தால், 'அது'...கூடுமா? குறையுமா?

Go down

'இது'...இப்படி இருந்தால், 'அது'...கூடுமா? குறையுமா?

Post by RAJABTHEEN on Fri Mar 25, 2011 5:17 pm'இது'...இப்படி இருந்தால்...இதில், "இது" என்பது 'எது' என்றால் அதுதான் நீங்கள் இங்கே பார்ப்பது..! சகல வசதிகளுடன் கூடிய பெரிய கட்டிடம். இது ஆஸ்ட்ரியாவில் கட்டப்பட்டு உள்ளது..!
இதில், யார் யார் எல்லாம் வசிக்கலாம்? அரசு யாரை அனுமதிக்கிறதோ அவர்கள் மட்டுமே இங்கே தங்கலாம். வெறும் 205 பேருக்கு மட்டுமே இங்கே தங்க அனுமதியாம். அதனால், இங்கே இடம் பெற கடும் போட்டி. வெயிட்டிங் லிஸ்டில் நின்று ஆவலுடன்..!
மிக அழகிய முறையில் நிறைய பொருட்ச்செலவுடன் கண்கவர் கண்ணாடி மாளிகையாக அனுபவித்து கட்டி இருக்கிறார்கள். மிக உன்னத வேலைப்பாடுகளுடன் நவீன முறையில் அதி நுட்ப கட்டடக்கலையுடன் நிறைய பொறியியல் வல்லுனர்களின் சிந்தனையின் ஒரு செயல் வடிவமாக இக்கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

_________________


                 
avatar
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 95
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

Re: 'இது'...இப்படி இருந்தால், 'அது'...கூடுமா? குறையுமா?

Post by RAJABTHEEN on Fri Mar 25, 2011 5:20 pmஇரு கண்ணாடிச்சுவர் கட்டிடங்களுக்கு இடையே ஒரு கண்ணாடி பாலம் கட்டி, அங்கு நின்ற வாறே நகரை சுற்றிப்பார்த்து ரசிக்கும் ஒரு நல்ல சுகமான வசதியை இங்கே தங்கி இருப்பவர்கள் அணுபவிப்பார்கள்.இதன் உள்ளே மிகரம்மியமான முறையில் சோபா செட்டுகள், நாற்காலிகள், மேசைகள் எல்லாம் போட்டு... குரோட்டன்ஸ் செடித்தொட்டிகள் வைத்து மிக நேர்த்தியுடன் வடிவமைத்துள்ளார்கள்.


இங்கே தங்கி இருப்பவர்கள் வெளியே அவ்வப்போது 'வாக்கிங்' போக-வர... மிக நல்ல பாதைகள், இதமான சூழல், என்று மனதை கொள்ளை கொள்ளும் இடமாக இது உள்ளது.

_________________


                 
avatar
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 95
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

Re: 'இது'...இப்படி இருந்தால், 'அது'...கூடுமா? குறையுமா?

Post by RAJABTHEEN on Fri Mar 25, 2011 5:21 pm


இக்கட்டிடத்தில் மிக உயர் ரக அரங்கம் ஒன்றும் உள்ளது. மிகச்சிறந்த பிரபல பேச்சாளர்கள் இவர்கள் இருக்கும் இடம் தேடி வந்து அவ்வப்போது இவர்கள் மத்தியில் உரையாற்றுகிறார்கள். இதே மேடையின் பின்புற திரையில் அவ்வப்போது திரைப்படங்களும் திரையிடப்படும். மிக அதிநவீன ஒலி, ஒளி அமைப்புகளுடன் கூடிய சிறந்த அரங்கம்.மிகவும் உயர்தரமான ஒளி விளக்குகளுடன் அமைந்த அதிநவீன கூடைப்பந்தாட்ட உள்ளரங்கு மைதானம் ஒன்றும் இங்கே தங்கி இருப்பவர்கள் தங்கள் விளையாட்டுத்திறனை வளர்த்துக்கொள்ள வசதியாக உள்ளது.


அந்த விளையாட்டு பிடிக்க வில்லை என்றால் தனக்குப்பிடித்த நண்பருடன் இங்கே தங்கி இருப்பவர்கள் மேசை டென்னிஸ் ஆடலாம். போரடித்தால் அங்கேயே அமர்ந்து தொலைகாட்சி நிகழ்ச்சிகளையும் பார்க்கலாம்.


நம் உடல்நலனில் அக்கறை கொண்டு உடலை கட்டுமஸ்தானாக வைத்திருக்க, தசைகளை நன்கு முறுக்கேற்ற மிகவும் உயர்தர அதிநவீன 'ஜிம்' ஒன்றும் இங்கே தங்கி இருப்பவர்களுக்காக உள்ளது.

_________________


                 
avatar
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 95
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

Re: 'இது'...இப்படி இருந்தால், 'அது'...கூடுமா? குறையுமா?

Post by RAJABTHEEN on Fri Mar 25, 2011 5:22 pmஇப்படியெல்லாம் விளையாடி, உடற்பயிற்சி செய்துவிட்டு ஓய்வாக பால்கனியில் அமர்ந்து சூடாய் காஃபி சாப்பிட்டிக்கொண்டே தன்முன்னே தெரியும் இயற்கையான சூழலில் மெய்மறந்து இதுபோல இங்கே தங்கி இருப்பவர்கள் அமர்ந்திருக்கலாம்.மிக நல்ல தரமான உயர்தர உணவுகள் தரப்படுகின்றன. அரட்டை அடித்துக்கொண்டே உண்டு மகிழலாம். பொதுவாய் இங்கு இல்லாமல் வெளியே இருப்போர், கடைகளில் வாங்கும் சரக்குகள், காய்கறிகள், பழங்கள் இவை பழசாக இருக்கக்கூடும். ஆனால், இங்கே அதற்கு வேலையே இல்லை. மிக மிக ஃப்ரஷ் அயிட்டங்களே இங்கே வாங்கப்படுகின்றன. சமைக்கப்படுகின்றன. அதனால் உடல் ஆரோக்கியம் மற்றும் ருசி எல்லாமே அமோகம்..!அப்படியே சாப்பிட்டுவிட்டு இந்த காரிடாரில் காலாற நடந்து வந்தால்... அப்படி நடந்து வரும்போது கால் வலித்தால் உடனே சற்றுநேரம் அமர்ந்து தம்மை ஆசுவாசப்படுத்திக்கொள்ள ஆங்காங்கே மிக அழகிய உள்ளம் கவரும் மெத்தை திண்ணைகள். அதுவும் போரடித்தால் அவரவர் தம் அறைக்கு சென்று நன்றாய் தூங்கலாம்.

சரி... இங்கே தங்கி இருப்பவர்களின் மனதைக்கவர்ந்தவர்களுக்கு இங்கே இடமில்லாத நிலையில் அவர்களுடன் எப்படி கொஞ்சி குலாவி படுத்துறங்கி மகிழ்ந்திருப்பது? அதற்கும் இந்த நிர்வாகம், விரும்பும்போது விரும்பியவர்களுடன் 'மகிழ்ச்சியாக' அவரவர் அறைகளிலேயே இவர்கள் இருக்க அனுமதி அளிக்கிறது..!பொதுவாக இங்கே தங்கி இருக்கும் ஒவ்வொருவருக்கும் தனித்தனி அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கே ஒரு தனி அறைக்கு வேண்டிய அனைத்து அத்தியாவசிய வசதிகளும் உள்ளன. அறையை நன்றாக நோட்டமிடுங்கள். ஒன்று உங்கள் கண்ணை உறுத்தலாம். அறைக்கதவு..! அது ஏன் வெளியில் உள்ளவர்கள் உள்ளே பார்க்ககூடியதாய் உள்ளது..? மேலும் அந்த கண்ணாடி கதவின் வெளிப்புறம் எதற்கு கம்பி ஜன்னல்..? ஏதோ ஒன்று உங்களுக்கு தோன்றுகிறதா..?

_________________


                 
avatar
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 95
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

Re: 'இது'...இப்படி இருந்தால், 'அது'...கூடுமா? குறையுமா?

Post by RAJABTHEEN on Fri Mar 25, 2011 5:23 pm


அது சரிங்க... இந்த இடத்தின் பெயர் என்னங்க.. என்கிறீர்களா...? நீங்களே படிங்களேன்...! ஆஸ்திரிய மொழியில்... " Justizzentrum Leoben "... என்றால் ...(திருட்டு, கற்பழிப்பு போன்ற) "சிறு குற்றங்களை(!?) செய்த குற்றவாளிகளுக்கான சிறை" என்று அர்த்தமாம்..! ஆக,இது ஒரு ஜெயில்..! நம்புங்க சகோ.! குற்றவாளிகளுக்கான கட்டிடம்தான் நீங்கள் இதுவரை பார்த்தது.!
...a 5 STAR grade 'JAIL'(?) of Austria...!!!

ஆஸ்திரியாவில் உள்ள இந்த சிறையில், பெருங்குற்றம் செய்தவர்களுக்கு இடம் இல்லை..! 'இது'...---அதாவது சிறை, இப்படி இருந்தால், 'அது '...அதாங்க...(திருட்டு, கற்பழிப்பு போன்ற)சிறுகுற்றங்கள்(!?) கூடுமா..? குறையுமா..? 'குற்றத்துக்கு தண்டனை குறைந்தாலே குற்றங்கள் கூடும்' எனும்போது, குற்றம் செய்தவருக்கு சொகுசு வாழ்க்கை எனும் வெகுமதியையும் அளித்தால் என்னாகும்..? இதை பார்ப்பவர்களுக்கு, 'அங்கே போய் நாமும் தங்கவேண்டும்' என்ற ஆசை வருமா? வராதா?


இன்றைய உலகில் பொதுவாக அனைத்து குற்றங்களும் மிக அதிகமாக நடக்கும் நாடு அமெரிக்கா என்றாலும் ஆஸ்திரியாவிற்கு இதில் 22-ம் இடம்தான்..! கொலை, மாந்திரிகம்(?), பிறர் மீது தாக்குதல், child abuse போன்ற 'பெருங்குற்றங்கள்' ஆஸ்திரியாவில் குறைவு. ஏனெனில், இவைக்கு அதிக ஆண்டுகள் சிறை..! அதிக ஆண்டுகள் சிறை தண்டனை பெருகிறவர்களுக்கு இந்த "சொகுசு மாளிகையில்" தங்க அனுமதி இல்லை என்பதால்..! அதேநேரம், திருட்டு மற்றும் பாலியல் வன்புணர்வு என இரண்டிலும் உலகில் ஆஸ்திரியா இரண்டாமிடம்..! காரணம், இவை இரண்டுக்கும் மிக குறைந்த தண்டனை..! அதனால், இந்த சொகுசு மாளிகையில் தங்கவும் அனுமதி..! (குற்றம் முதல் முறை என்றால்... தண்டனை ஏதும் இல்லை..!)


இந்த காரணத்தினால்தான், இன்றைய உலகில் திருட்டு, பாலியல் வல்லுறவு ஆகியன மிக அதிகமாக நடக்கும்(இரண்டாம்)நாடு ஆஸ்திரியா..! ஆனாலும், இதேபோன்ற சிறைச்சாலைதான் மற்ற பெரியகுற்றங்களை செய்த குற்றவாளிகளுக்கும் தரப்பட வேண்டும் என்று இந்நாட்டின் 'மனிதஉரிமை'(?!) அமைப்புகளும் பல அரசியல் கட்சிகளும் கூறி வருகின்றன. அதாவது, பாதிக்கப்பட்ட நல்லவனின் வரிப்பணத்திலேயே, அவனை அப்பாதிப்புக்கு உட்படுத்திய குற்றவாளிக்கு சொகுசு வாழ்க்கை..! பலே..! ஆஸ்திரிய அரசும், நீதிமன்றமும் இக்கருத்துக்களை அங்கீகரிக்கும் மனநிலைக்கு வந்துவிட்டதாகவே தெரிகிறது.


எனில், சிறைச்சாலை என்பது... இப்படி சொகுசாக இருந்தால் இனி சந்தேகமேயின்றி ஆஸ்திரியாதான் குற்றங்களுக்கு வருங்கால நம்பர் ஒன்..!


ஆஸ்திரிய நீதிமன்றத்தின் ஒரு சில வினோத தீர்ப்புகள் உங்கள் பார்வைக்கு..!


12 வயது சிறுமியை பாலியல் வல்லுறவு கொண்ட 26 வயது காமுகன் ஒருவனை கோர்ட் விடுதலை செய்தது..! காரணம், அவன் 'அச்சிறுமிக்கு வயது 16-க்கு மேல் இருக்கும் என்று நினைத்து வன்புணர்வு செய்துவிட்டேன்' என்று கூறியதால்..! (இல்லாவிட்டால் child abuse என்று பெருங்குற்றம் ஆகிவிடுமே..!)


சிறைவாசிகள் விரும்பியவாறு நீலப்படங்கள் பார்க்க அனுமதி அளித்து தீர்ப்பு கூறியது கோர்ட்.


தன்னை பாலியல் வன்புணர்வு செய்த, அதற்காக ஏற்கனவே தண்டனை பெற்ற கொடூர குற்றவாளியைப்பற்றி ஊடகத்துக்கு பேட்டி அளித்தது கண்டு கோபமடைந்தவன் சிறையிலிருந்தவாறே நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தான். அவனுடைய மானம்(!?) பாதிக்கப்பட்டதற்காக அப்பெண்ணுக்கு 200 யூரோ தண்டத்தொகை கட்டுமாறு கோர்ட் தீர்ப்பளித்தது. இந்த மண்ணாய்ப்போக வேண்டிய "மானம் மிக்கவனுக்கு"(?) இது, ஆஸ்திரிய கோர்ட் அளித்த, இவனுடைய, 21-வது கற்பழிப்பு குற்றத்திற்கான தண்டனையாம்...!!!!!!!!!!!!!!!!!!!!!


திருட்டுக்கு தண்டணையாக திருடியவரின் கையை வெட்டச்சொல்கிறது இஸ்லாம். "கையா, திருட்டா... எது முக்கியம்...?" என்று திருடர்கள் யோசிக்கும்போது, திருட்டு தானாக ஒழிந்துவிடும். இரண்டு லட்சம் கோடி ரூபாய் ஊழல் எல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை..! 'கை' -- 'விலைமதிக்க முடியாதது' என்று திருடர்கள் முடிவெடுத்தால்..!

பாலியல் வல்லுறவு செய்தவனுக்கு மரணதண்டனை அளிக்கச்சொல்கிறது இஸ்லாம். "உயிரா... மனஇச்சையா... எது முக்கியம்...?" என்று காமகொடூரன்கள் சிந்திக்க ஆரம்பித்துவிட்டால் அதுதான் பெண்களுக்கான உண்மையான மகளிர் தினம்..!


"கைவெட்டு, தலைவெட்டு இதெல்லாம் மனித உரிமைக்கு எதிரானது அல்லவா..?" , "குற்றவாளிகள்தான் மனிதர்கள். அவர்களுக்குத்தான் மனித உரிமையில் முன்னுரிமைகள்"---முற்றிலும் இவை நமது தவறான புரிதல்..!


மாறாக,


பாதிக்கப்பட்டவர்களுக்கே மனித உரிமையில் முன்னுரிமை அளிக்கப்படல் வேண்டும். குற்றம் செய்யாதவர்கள்தான் மனிதர்கள். அவர்களுக்குத்தான் மனித உரிமைகள். அவர்களுக்கே அனைய்ய்ய்ய்ய்ய்த்து உரிமைகளிலும் முன்னுரிமைகள்..!---இதுவே மிகச்சரியான சரியான புரிதல்..!

_________________


                 
avatar
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 95
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

Re: 'இது'...இப்படி இருந்தால், 'அது'...கூடுமா? குறையுமா?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Fri Mar 25, 2011 6:39 pm

தகவலுக்கு நன்றி பாஸ்

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: 'இது'...இப்படி இருந்தால், 'அது'...கூடுமா? குறையுமா?

Post by அரசன் on Fri Mar 25, 2011 7:53 pm

என்னங்க கொடுமையா இருக்கு ..

_________________
***************************************************************************
நான் என்னை அறிய முயலுகின்ற பயணத்தில் உங்களோடும் கைக்குலுக்குவதில்
பெரு மகிழ்வு அடைகிறேன்....


கரைசேரா அலை...


***************************************************************************
avatar
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 28
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

Re: 'இது'...இப்படி இருந்தால், 'அது'...கூடுமா? குறையுமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum