பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
Latest topics
» உலகில் வாழ்ந்து பயனில்லை
by கவிப்புயல் இனியவன் Yesterday at 9:07 pm

» நட்பிலும் காதலிலும் ...!!!
by கவிப்புயல் இனியவன் Yesterday at 8:50 pm

» கே இனியவன் கஸல் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 8:28 pm

» கருத்துச் சுரங்கம் கொன்றை வேந்தன்! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Sun Oct 04, 2015 10:21 am

» தமிழ் வளர்ச்சியில் குறும்பாக்களின் பங்கு ! கவிஞர் இரா. இரவி!
by eraeravi Sun Oct 04, 2015 10:15 am

» கைபேசி என் உயிர் பேசி ...!!!
by கவிப்புயல் இனியவன் Thu Oct 01, 2015 9:40 pm

» அணு அணுவாய் காதல் கவிதை
by கவிப்புயல் இனியவன் Wed Sep 30, 2015 8:14 pm

» திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
by கவிப்புயல் இனியவன் Wed Sep 30, 2015 6:42 pm

» சிந்தனை சிகிச்சை-2
by ராஜேந்திரன் Tue Sep 29, 2015 9:53 pm

» கொஞ்சம் ஹைக்கூ, கொஞ்சும் சென்ரியூ ! நூல் ஆசிரியர் : கவிஞர் சென்னிமலை தண்டபாணி. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Sep 29, 2015 6:28 pm

» தொடர்பு எல்லைக்கு அப்பால் ! நூல் ஆசிரியர் : கவிஞர் மலர்மகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Tue Sep 29, 2015 6:28 pm

» கவியமுதம் ! ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சனம் :பா.வெங்கடேஷ் ! ( G.R.T).
by eraeravi Tue Sep 29, 2015 6:27 pm

» விழிப்புணர்வு ! நூல் ஆசிரியர் : எழுத்தாளர் புதுகை மு. தருமராசன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Tue Sep 29, 2015 6:27 pm

» தமிழ் இலக்கியத்தில் அழகு ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Tue Sep 29, 2015 6:26 pm

» மீண்டும் தலைப்புச் செய்திகள் ! தன்னம்பிக்கை வாசிப்புகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் திலீப் பீதாம்பரி !
by eraeravi Tue Sep 29, 2015 6:25 pm

» குற்றம் கடிதல் ! இயக்கம் பிரம்மா ! திரைப்பட விமர்சனம் . கவிஞர் இரா .இரவி !
by eraeravi Mon Sep 28, 2015 9:29 pm

» ஹைக்கூ ! சென்ரியு ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Mon Sep 28, 2015 9:26 pm

» கலங்கரை விளக்கம் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Mon Sep 28, 2015 9:20 pm

» ஹைக்கூ ! சென்ரியு ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Mon Sep 28, 2015 3:33 pm

» என்னை ஒருமுறை திட்டு.....
by கவிப்புயல் இனியவன் Fri Sep 25, 2015 10:49 am

» கேள்வி..? பதில்..!!! கவிதை
by கவிப்புயல் இனியவன் Fri Sep 25, 2015 10:07 am

» நீ இங்கே - நான் எங்கே ...?
by கவிப்புயல் இனியவன் Fri Sep 25, 2015 9:47 am

» ஒருவரியில் காதல்கவிதை வரி
by கவிப்புயல் இனியவன் Thu Sep 24, 2015 9:51 pm

» கவிதையால் அடிக்கிறேன் ......!!!
by கவிப்புயல் இனியவன் Thu Sep 24, 2015 9:37 pm

» கல்லறை இதயத்தின் கதறல்
by கவிப்புயல் இனியவன் Thu Sep 24, 2015 9:35 pm

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Wed Sep 23, 2015 12:33 pm

» முயற்சிசெய் - பயிற்சிசெய்
by கவிப்புயல் இனியவன் Wed Sep 23, 2015 12:10 pm

» காதல் கவிதையும் தத்துவமும்
by கவிப்புயல் இனியவன் Wed Sep 23, 2015 11:47 am

» மரணம் -கவிதை
by கவிப்புயல் இனியவன் Tue Sep 22, 2015 6:44 pm

» தகவல் தொழில்நுட்ப கவிதைகள் ....!!!
by கவிப்புயல் இனியவன் Tue Sep 22, 2015 11:02 am

» ஐந்து வரி கவிதைகள் ......!!!
by அ.இராமநாதன் Mon Sep 21, 2015 10:34 am

» இவனும் அவனும் ! (சிறுகதைகள்) நூல்ஆசிரியர் : திரு. ஹேமலதா பாலசுப்ரமணியம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Fri Sep 18, 2015 9:48 am

» கானா கவிதை
by கவிப்புயல் இனியவன் Thu Sep 17, 2015 10:53 pm

» கே இனியவன் மைக்ரோ கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu Sep 17, 2015 10:38 pm

» மாமனிதர் கலாம் அவர்களுக்கு கவிதாஞ்சலி ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Thu Sep 17, 2015 12:36 pm

» தந்தை பெரியார் அவர்க்கு நிகர் யார் ? கவிஞர் இரா .இரவி !
by eraeravi Thu Sep 17, 2015 12:11 pm

» இசைக்குயில் எம் .எஸ் .சுப்புலட்சுமி நூற்றாண்டு ! உலகம் உள்ளவரை உம் பாடல் ஒலிக்கும் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Thu Sep 17, 2015 12:09 pm

» வீட்டை சுமந்து கொண்டே திரிகின்றோம்...
by அ.இராமநாதன் Thu Sep 17, 2015 11:51 am

» அபசுர அவதாரம்
by அ.இராமநாதன் Thu Sep 17, 2015 11:49 am

» ஓஷோ-சிந்தனைகள்
by கவிப்புயல் இனியவன் Thu Sep 17, 2015 9:44 am

» காதலின் இன்பமும் துன்பமும் ...!!!
by கவிப்புயல் இனியவன் Wed Sep 16, 2015 11:21 pm

» திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
by கவிப்புயல் இனியவன் Wed Sep 16, 2015 6:24 pm

» மனுஷி - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Sep 16, 2015 3:49 pm

» புது மனைவி - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Sep 16, 2015 3:48 pm

» நடந்தது என்ன? - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Sep 16, 2015 3:45 pm

» பேருதவி - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Sep 16, 2015 3:44 pm

» மழைநேரத் தேநீர் தன்னம்பிக்கைக் கதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் முனைவர் ஞா. சந்திரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி!
by eraeravi Mon Sep 14, 2015 8:02 pm

» இதயத்தால் பார்
by அ.இராமநாதன் Mon Sep 14, 2015 3:52 pm

» யாராகினும் மனிதன்...
by அ.இராமநாதன் Mon Sep 14, 2015 3:49 pm

» நகைசுவை துளிகள்
by அ.இராமநாதன் Mon Sep 14, 2015 3:37 pm

» இன்றைய sms கவிதை
by கவிப்புயல் இனியவன் Mon Sep 14, 2015 1:39 pm

» இதயத்தின் அழகே காதலின் அழகு
by கவிப்புயல் இனியவன் Mon Sep 14, 2015 1:37 pm

» இன்றைய sms கவிதை
by கவிப்புயல் இனியவன் Mon Sep 14, 2015 1:03 pm

» தளிர் ஹைக்கூ கவிதைகள் 15-8-15 (2)
by அ.இராமநாதன் Sun Sep 13, 2015 4:29 pm

» புதிய புறநானூறே அறிஞர் அண்ணா
by அ.இராமநாதன் Sun Sep 13, 2015 4:27 pm

» கவிதையில் பலதும் பத்தும்
by அ.இராமநாதன் Sun Sep 13, 2015 4:25 pm

» படம் பார்த்தேன் கவிதை வந்தது
by அ.இராமநாதன் Sun Sep 13, 2015 4:19 pm

» வாத்தியார்கிட்ட குட்டு வாங்கணும்னு ஏன் வாழ்த்தறாங்க!
by அ.இராமநாதன் Sun Sep 13, 2015 4:17 pm

» பெரியாரை நாம் மறந்தால் தாழ்வோம் நாமே
by karumalaithamizhazhan Sun Sep 13, 2015 6:40 am

» கவிப்புயல் இனியவன் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Sat Sep 12, 2015 6:50 pm

Tamil 10 top sites [www.tamil10 .com ]

கண்ணதாசன் எனும் காவியம்

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Go down

கண்ணதாசன் எனும் காவியம்

Post by RAJABTHEEN on Fri Apr 01, 2011 9:23 pm

First topic message reminder :

சத்தி சக்திதாசன்கவிஞர் கண்ணதாசனைப் பற்றி இலக்கிய ரீதியில் ஆராயக்கூடிய அளவிற்கு பாண்டித்தியம் பெற்றவனல்ல நான். சாதரண பாடல்களின் கருத்தால் கவரப்பட்ட ஓர் சராசரி ரசிகன்தான் நான். கண்ணதாசனின் பாடல்கள்களில் சொந்த அனுபவங்களின் வாயிலாக எழுந்தவையே மிகவும் பிரபல்யம் வாய்ந்தவையாக அமைந்தன. சாதாரண மக்களின் அன்றாட அனுபங்களைத் தொட்டு இந்தப் பாடல்கள் அமைந்ததின் காரணமே இவைகளின் வெற்றிக்குக் காரணம். எட்டாவது வகுப்பு மட்டுமே படித்த முத்தையா என்ற இயற்பெயர் கொண்ட கண்ணதாசன் பிறந்தது வணிகத்திலே புகழ் பெற்ற செட்டி நாட்டைச் சேர்ந்த சிறுகூடல்பட்டி எனும் கிராமமேயாகும். தான் சிறுவயதினிலேயே சுவீகாரம் கொடுக்கப் பட்டதை மனதில் வைத்து எழுதப்பட்ட " ஒருத்தி மகனாய் பிறந்தவனாம் ஒருத்தி மகனாய் வளர்ந்தவனாம் " என்ற பாடல் இந்த கவிதைத் தலைவனின் அனுபவ கவிக்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டாகும் .

வாழ்வினிலே எடுப்பார் கைபிள்ளை போன்று எல்லோரையும் நம்பி தன் வாழ்க்கையில் தான் பட்ட கஷ்டங்களை தானே தனது சுயசரிதையில் மிகவும் அழகான எளிய தமிழில் எடுத்துரைத்து இருந்தார் கவிஞர். அவரது வாழ்க்கைப் பாதை பல முட்புதர்கள் நிறைந்த கடுமையான ஒன்றாக அமைந்தது. அவர் தானாகவே ஏற்படுத்திக் கொண்ட இடர்கள் ஏராளம் , அதை அவரே பல இடங்களில் குறிப்பிட்டிருக்கின்றார். ஆனால் தான் வாழ்க்கையில் செய்த தவறுகளை பகிரங்கமாக மக்களுடன் பகிர்ந்து , தன்னைத் தானே சுயவிமர்சனம் செய்யும் மனப்பக்குவததை தன்னுடைய வாழ்வின் இறுதிப் பாகத்தில் அடைந்திருந்தார். இக்கசந்த அனுபவங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுவதனால் ஒரு சிலருக்காவது நன்மை கிடைக்குமானால் அதுவே தமக்கு திருப்தி அளிக்கும் என்னும் கருத்தைக் கொண்டிருந்தார்.

கண்ணதாசனுக்கு இருந்த தமிழாற்றல் தமிழன்னையால் அவருக்கு அளிக்கப்பட்ட ஓர் உன்னத வரப்பிரசாதம். அதை அவர் பலவழிகளில் உபயோகித்தார்.அரசியல் எனும் அந்த அழமறியா சமுத்திரத்திலே அவர் மூழ்கும்போது தமிழையே அவர் கரைசேர்க்கும் தோணியாக பாவித்தார். தமிழ்நாட்டின் மூத்த தலைவர்கள் அனைவருமே இவரின் புகழ் மாலைக்கும் பின் ஒருபோது வசை மாலைக்கும் இலக்காகியிருக்கின்றார்கள். இதை அழகாக கலைஞர் கருணாநிதி அவர்கள் குறிப்பிடுகையில் " கண்ணதாசன் என்னை உயர தூக்கி வைத்து புகழ்பாடிய காலங்களும் உண்டு பின் மேலிருந்து என்னைத் தொப்பென்று கீழே போட்ட காலங்களும் உண்டு. ஆனால் கீழே விழுந்தபோது அவனது தமிழின் அழகு எனக்கு மெத்தையாக இருந்தது " என்ற பொருள் பட கூறியுள்ளார்.

_________________
RAJABTHEEN
Admin
Admin

Posts: 21758
Points: 29559
Join date: 09/10/2010
Age: 93
Location: அன்பு உள்ளங்களில்

Back to top Go down


Re: கண்ணதாசன் எனும் காவியம்

Post by RAJABTHEEN on Fri Apr 01, 2011 9:29 pm

நமது வாழ்க்கையிலே சில சமயங்களில் தாங்கவொண்ணாத் துயரங்களில் அழுந்துகிறோம். நம்மைச் சுற்றியுள்ள சொந்தங்கள் எனும் பந்தங்கள் நாம் எதிர்பார்த்தபடி ஆறுதலாக இல்லாமல், நமது மனத்தின் துயரத்திற்குக் காரணமாக அமைந்து விடுகிறார்கள். நடந்த நிகழ்வுகளை நடக்க விடாமல் பாதுகாப்பதற்கு நாம் பகீரத முயற்சி செய்திருந்தாலும், கைக்கு மீறிக் காரியங்கள் நடந்து விடுகின்றன. துயரச் சுமையினால் தோய்ந்துபோன உள்ளத்துடன் தவிக்கின்றோம்.

மேலே குறிப்பிட்ட சம்பவம் நம் எல்லோருடைய வாழ்க்கையிலும் ஒரு காலகட்டத்தில் நடந்திருக்கும். இல்லையானால் இனி நடக்கவும் கூடும். அப்படியான ஒரு சம்பவத்திலே ஒரு நண்பன் அருகே அமர்ந்து கொண்டு தன்னுடைய வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்களை எடுத்துக் கூறி, அது எதனால் நிகழ்ந்தது என்று தனது மனதில் படுகிற விதத்தில் எடுத்துரைதானாகில், எமது மனம் எவ்வாறு இலேசாகும் என்று சிறிது எண்ணிப்பாருங்கள்.

இத்தகைய மனஅமைதியைத்தான் கவியரசரின் பாடல்களும் கட்டுரைகளும் எனக்குத் தந்திருக்கின்றன. என் உள்ளத்தைத் திறந்து சொல்லப்போனால், அர்த்தமுள்ள இந்துமதம் என்னும் அவரது அரிய பொக்கிஷ நூல்களைப் படிக்கும் வரை, நான் இந்து என்று பெயரளவில்தான் சொல்லிக் கொண்டிருந்தேன். "அர்த்தமுள்ள இந்து மதம்" என்னை மதவெறியனாக ஆக்கியது என்று சொல்ல வரவில்லை, என்னை மனிதாபிமானமிக்க இந்துவாகப் பரிணமிக்க வைத்தது என்றே சொல்லுவேன். மனிதனுக்கு மதம் ஒரு அணிகலனே தவிர ஆடையில்லை என்பதை உணர்ந்து கொண்டேன்.

வாழ்க்கையின் ஒவ்வொரு நெளிவு, சுளிவுகளையும் புரிந்து வைத்துக் கொண்ட நம் கவியரசு அதை அழகாய்த் திரைப்படப்பாடல்களிலும் கட்டுரைகளிலும் வரைந்து நமது மனப் புண்களுக்கு மருந்திட்டார். அவரது அனுபவம் எனும் பட்டறையில் பழுக்கக் காய்ச்சிய இரும்பைக் கொண்டு உருவாக்கப்பட்டதால்தான் கருத்தெனும் ஆயுதம் கூர்மையாக வாசிக்கும் உள்ளங்களில் ஒரு பாதிப்பை ஏற்படுத்தியது.

இங்கே அவரது வாழ்வைத் தொட்ட துயரத்தின் சாயலைக் கொண்டு ஒரு திரைப்படத்தில் அவர் படைத்த பாடலோடு தொடர்புடைய சம்பவம் ஒன்றைப் பார்ப்போம்.

மீண்ட சொர்க்கத்தில் ஆரம்பித்துக் கவியரசுக்கும், டைரக்டர் ஸ்ரீதருக்கும் இடையிலான நட்பு இறுதிவரை தொடர்ந்ததென்றே கூற வேண்டும். "சுமைதாங்கி" எனும் படத்தைக் கவியரசர் தயாரிக்க, டைரக்டர் ஸ்ரீதர் இயக்கினார்.

இந்தப் படத்தின் கதாநாயகனாகக் காதல் மன்னன் ஜெமினி கணேசன் நடித்திருந்தார். அதிலே ஒரு காட்சியில், ஜெமினி கணேசன் கடற்கரையோரத்தில் ஒரு பாடல் பாடுவது போன்ற காட்சி, அதற்கான பாடல்
"மனிதன் என்பவன் தெய்வமாகலாம்".

_________________
RAJABTHEEN
Admin
Admin

Posts: 21758
Points: 29559
Join date: 09/10/2010
Age: 93
Location: அன்பு உள்ளங்களில்

Back to top Go down

Re: கண்ணதாசன் எனும் காவியம்

Post by RAJABTHEEN on Fri Apr 01, 2011 9:30 pm

இந்தக் காட்சி படமாக்கப்பட்ட இடம் தான் கவியரசர் முதன்முதலில் சென்னைக்கு கையில் ஒரு பைசா கூட இல்லாமல் வந்த போது நின்ற இடமாம். அப்போது அங்கே தூங்கக்கூடாது என்றுகூட அவரை ஒரு போலிஸ்காரர் விரட்டியிருக்கிறாராம்.. இந்தப் பாடல் அந்த இடத்திலேதான் படமாக்கப்பட வேண்டும் என்பதில் கவியரசர் மிகுந்த பிடிவாதமாக இருந்தாராம். அது மட்டுமல்ல அந்தக் காட்சி படமாக்கப்படும் நேரத்திலே, ஸ்டூடியோ விளக்குகளை உபயோகிப்பதற்குப் பதிலாக, தனது எட்டு அம்பாஸிடர் கார்களின் விளக்குகளை கதாநாயகன் மேல் விழப்பண்ணி அந்தக் காட்சியைப் படமாக்கினாராம்.

இதற்குத் தனது கார்களை உபயோகித்தது தனது பெருமையைப் பறை சாற்ற அல்ல, ஒருவன் தனது சொந்தத் திறமையை உபயோகித்து, எட்டுக் கார்கள் வைத்துக் கொள்ளக்கூடிய நிலைக்கு உயரமுடியும் என்ற உண்மையை எடுத்துக் காட்டுவதற்காகவே.

இங்கே நான் இதை குறிப்பிடுவதற்குக் காரணம் கவியரசரின் உள்ளத்தில் காலமகள் ஏற்படுத்திய வடுக்களை அவர் எப்படி அனுபவப் பாடங்களாகக் கொண்டார் எனபதை எடுத்துக்காட்டவேயாகும்.

கவியரசர் தொட்டது என்னைப் போன்ற சாதாரண ரசிகர்களின் மனத்தை மட்டுமல்ல, கலையுலகச் சிகரங்களின் உச்சியில் வீற்றிருந்தோரின் மனத்தில் அவர் வகித்த இடம் மகத்தானது. இதற்கு மிகச் சிறந்த உதாரணமாக, 1984ம் ஆண்டளவில் நடிப்புச் செம்மல் கமல், செவாலியே சிவாஜி கணேசனுடன் சேர்ந்தளித்த ஒரு பேட்டியின் போது, பாலும் பழமும் படத்தில் சிவாஜி கணேசன் நடித்த ‘போனால் போகட்டும் போடா’ எனும் பாடல் காட்சியில் அவர் நடிப்பைப் புகழ்ந்து பாராட்டினார். அதற்கு நடிகர் திலகமோ அந்தப் பாடலின் சிறப்பு தனது நடிப்பினால் அல்ல மறைந்த கவியரசரின் பாடல் வரிகளும், அதன் பொருளுமே என்று கூறி "எமக்கெல்லாம் தத்துவம் சொன்னவர் கவிஞர், இப்போ அவரே தத்துவமாகி விட்டார்" என்று கூறி தனது கண்களில் திரண்ட கண்ணீர்த் துளிகளைச் சுண்டி விட்டாராம்.

கவியரசரின் தத்துவம், அதை நன்றாய்ப் பயன்படுத்திய வகை, அவருடைய கருத்துக்களின் ஆழம் அளக்க முடியாதவை. அவருக்கும் எழுத்து "க" விற்கும் உள்ள தொடர்பும் நெருக்கமானதே! எப்படி என்கிறீர்களா?

"க"ண்ணதாசன், அவருடைய முதலாவது பாடல் 'கன்னியின் காதலி' எனும் படத்தில் இடம்பெற்ற "க"லங்காதிரு மனமே! கடைசியாகக் கவிஞர் எழுதிய பாடல் மூன்றாம் பிறை எனும் படத்தில் இடம்பெற்ற "க"ண்ணே கலைமானே ஆகும்.

இப்படிக் "க" வோடு தொடங்கி முடிந்த திரைப்படப் பாடல்களின் நாயகன், "க"விதை உலகிலும், "க"ட்டுரை உலகிலும் கோலோச்சியவன் "க"டைசிவரை என் போன்ற ரசிகர்களின் மனத்தை ஆட்சி செய்வான் என்பது அசைக்கமுடியாத உண்மை.

_________________
RAJABTHEEN
Admin
Admin

Posts: 21758
Points: 29559
Join date: 09/10/2010
Age: 93
Location: அன்பு உள்ளங்களில்

Back to top Go down

Re: கண்ணதாசன் எனும் காவியம்

Post by RAJABTHEEN on Fri Apr 01, 2011 9:30 pm

எங்கே தொடங்கப் போகிறேன்? எங்கே முடிக்கப் போகிறேன்? என் கண்முன்னே நான் கண்டு வாசித்து அறிந்த கவியரசரைப் பற்றி எழுதுவதற்கான முயற்சியே எனது கைகளில் இல்லை எனும் ஒரு நிலை இருக்கும் போது, எப்படி இந்த வாழ்க்கையை மட்டும் நான் எனது எண்ணப்படிதான் வாழுகிறேன் என்று எண்ண முடியும்? இதையேதான் கவியரசர் தனது பல படைப்புக்களில், பாடல்களில்,கட்டுரைகளில் தெளிவாக, அழகாக விளக்கியிருக்கிறார்.

ஒரு மனிதன் அறிவுரை கூறும்போது, "மது அருந்தாதே" என்று கூறுகிறான் என வைத்துக் கொள்ளுங்கள். அவனது சொந்த வாழ்க்கையில் அந்த மனிதன் ஒரு நாளுமே மதுவைத் தீண்டியது கூட இல்லையானால் "என்ன, இவன் தான் அறியாத இன்பத்தை, எம்மை அடைய விடாது தடுக்கிறானே" என்று சிலர் ஆதங்கப்படுவார்கள் ("மது அருந்துவது இன்பமானது" என்று நான் கூறுகிறேன் என்று வாசகர்கள் தவறாகப் பொருள் கொள்ளாதீர்கள்). அதே மனிதன் முன்பு நன்றாக மது அருந்திக் களித்தவன் இப்போ தனது பழக்கத்தை மாற்ற்¢க் கொண்டு அறிவுரை கூறுகின்றானானால் "தான் மட்டும் அனுபவிக்கும் வரை அனுபவித்து விட்டு இப்போ எங்களைத் தடுக்க வந்து விட்டான்" என்று ஒரு சாரார் விசனப்படலாம்.

ஆனால் எமது கவியரசரோ, "நான் இப்படி நடந்தேன், இவ்வாறு இருந்தேன்" என்று தனது தவறான பழக்க வழக்கங்களை ஒளிவு மறைவின்றி நம்மோடு பகிர்ந்து, தன்னையே அதற்கு உதாரணமாய் எடுத்துக் கொண்டு நம்மை நல்வழிப் படுத்த முயற்சி எடுத்துள்ளார். அதனால்தான் அவரது எழுத்து வெற்றியடைந்தது. அர்த்தமுள்ள இந்துமதம் கூட அன்றாட வாழ்க்கை முறைகளுடன், மதத்தின் வழிமுறைகளைப் பிணைத்துக் காட்டியதே தவிர, நம்மால் புரிந்து கொள்ளாதபடி மதத் தத்துவங்களை அள்ளி வீசவில்லை.

இத்தகைய கவியரசரின் வாழ்க்கையிலே அவர் மது, மங்கை என்று தனது வாழ்நாளைக் கழித்தபோது சில கவிதைகள் எழுதியிருந்தார். அப்படியான கவிதைகள் சிலவற்றை இங்கே எடுத்துப் பார்க்க விழைகிறேன்.

அதற்கு முன்னால் கவிஞர் கண்ணதாசன் அவர்களின் கூற்று ஒன்றை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

"எப்படியெல்லாம் வாழக்கூடாதோ அப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறேன். ஆகவே இப்படித்தான் வாழவேண்டும் என்று சொல்லும் யோக்கிதை எனக்குண்டு "

இனி மேலே குறிப்பிட்டவாறு அவரது கவிதைகள் சிலவற்றைப் பார்ப்போம்.

மதுவை ஓர் கையில் வைத்து
மங்கையோர் புறத்தே வைத்தால்
எதுவரை உலகம் போகும்
எங்கெங்கோ போகும், நானும்
அதுவரை போவேன்.

_________________
RAJABTHEEN
Admin
Admin

Posts: 21758
Points: 29559
Join date: 09/10/2010
Age: 93
Location: அன்பு உள்ளங்களில்

Back to top Go down

Re: கண்ணதாசன் எனும் காவியம்

Post by RAJABTHEEN on Fri Apr 01, 2011 9:30 pm

இந்தக் கவிதையின் கருத்தை உற்று நோக்கினால் கவிஞரின் அன்றைய வாழ்க்கை முறையை நன்றாக எடுத்துக் காட்டுகிறது. சாதாரண மனித மன ஆசை எனும் நதியினில் நீச்சலடித்து விட்டுத்தான் அந்தப் பயணத்தின் சிரமம் பற்றி நமக்கெல்லாம் எடுத்துரைத்திருக்கிறார், நம் கவிஞர்.

இது ஏதோ பெரிய சாதனை என்று நான் சொல்லுவதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. கவிஞனின் வாயிலிருந்து, அந்தந்தக் காட்சிகளுக்கேற்றவாறு வெற்றிப்பாடல்கள் வந்து விழுவதன் பின்னணி, இவைகளைப் பற்றி அறிந்திருப்பதால் மிகவும் எளிதாகப் புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கிறது.
இதே வரிசையில் இன்னுமொரு கவிதையைப் பார்ப்போம் !

காதலை, மதுவை, இன்பக்
காட்சியை வென்றேனென்று
ஓதுவோர் எவரும் இந்த
உலகிற்குத் தேவையில்லை

கவிஞர் தனது கருத்துக்களோடு பின்னொரு காலத்தில் தானே முரண்பட்டு நின்றார் அவரே தனது சுயசரிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இதுவும் கவிஞரிடம் நான் ரசித்த உயர்ந்த குணங்களில் ஒன்று. மேலே குறிப்பிட்ட கவிதையின் கருத்தைப் பார்த்தீர்களானால், கவிஞரே யார் உலகிற்குத் தேவையில்லை என்று கூறினாரோ அதே மனிதனாகத் தானே மாறியிருந்திருக்கிறார்.

மனத்தினில் ஒருகாலத்தில் ஒரு செயலைப்பற்றி ஒரு கருத்தைக் கொண்டிருந்தோமேயானால், பின்னால் நமது எண்ணம் பிழையானது என்றறிந்து அதை ஏற்றுக்கொள்ளும் மனோபாவம் நம்மில் எல்லோருக்கும் வந்து விடாது. அதை அடைந்து விட்டால் நாம் மனிதத்துவம் எனும் பரீட்சையில் தேறி விட்டோம் என்றே பொருள். அந்த வரிசையில் கவித்தலைவர் தன்னுடைய மனிதத்துவத்தை நிலைநாட்டி விட்டார் என்றே கூற வேண்டும்.

இங்கே நாம் எடுத்துப் பார்த்தது கவிஞரின் மற்றொரு பக்கம், அதுதான் அவரது ஆன்மீகக் கதவைத் திறந்த சாவியாகும். கண்ணதாசனின் பக்கங்களைப் புரட்டும்போது நாம் இந்தப் பக்கங்களையும் பார்க்கத்தான் வேண்டும், அதைத்தான் அவரும் விரும்பினார் ஏனென்றால் அவர் வாழ்க்கையில் மற்றவர்களிடம் அர்த்தத்தைத் தேடவில்லை, தன்னிடமே தேடினார்.

_________________
RAJABTHEEN
Admin
Admin

Posts: 21758
Points: 29559
Join date: 09/10/2010
Age: 93
Location: அன்பு உள்ளங்களில்

Back to top Go down

Re: கண்ணதாசன் எனும் காவியம்

Post by RAJABTHEEN on Fri Apr 01, 2011 9:30 pm

மனக்கேணியில் மேலும் மேலும் ஊறிக்கொண்டேயிருக்கிறது. இம்முறை அவரைப்பற்றிய ஆக்கத்தை வித்தியாசமான முறையில் பார்ப்போம். கற்பனைக் கதாபாத்திரத்தை உருவாக்கி அவரது சில பாடல்களையும் சந்தர்ப்பத்திற்கேற்றவாறு இணைத்துப் பார்ப்போம் என்றொரு ஆசை. எங்கே போவாமா கனவுலகம்?

இங்கே நமது காதாபாத்திரமாக ராம் என்றொரு 24 வயது இளைஞனை கற்பனை பண்ணிக் கொள்ளுங்கள். வசதியான குடும்பத்தில் பிறந்த அவன் பெற்றோருக்கு ஒரே பிள்ளை.

கேட்டதெல்லாம் கிடைத்துத் தனது வாழ்க்கையில் எந்தப் பொறுப்பையும் உணராத ராம் மதுவிலும் மங்கையிலும் தனது நேரத்தைக் கழிக்கிறான். என்ன ராம் பாடுகின்றானா?

ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
ஒரு கோலமயில் என் துணையிருப்பு

உல்லாசமாய் தனது வாழ்க்கையை கழித்த ராம் தற்செயலாக எளிமையே உருவான பாந்தமான அழகுடைய உமாவைப் பார்த்து விடுகிறான். கேட்க வேண்டுமா?

காலங்களில் அவள் வசந்தம்
கலைகளிலே அவள் ஓவியம்

கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுக்கும் அவன் தந்தை உமாவை மட்டும் வாங்கித் தரமாட்டாரா என்ன? பின்னென்ன பெண் பார்க்கும் படலம். பணத்திற்கு முன் உமாவின் ஏழைத் தந்தை மனத்தையா பார்க்கப் போகிறார்? பெண்களுக்கே உரிய அந்த மெளனம் (இங்கே ஏழ்மையால் பிறந்தது) என்ற சம்மத்துடன் உமா மிஸஸ். ராம் ஆகிறாள். என்ன ஊமை ராகமோ?

யாருக்கு யாரென எழுதியவன் - என்னை
அவனுக்குத் தானென எழுதி விட்டான்

குடிகாரக் கணவன் வாழ்க்கையில் கண்டிப்பில்லாமையால் தான் இப்படியோ உமா யாரைக் கேட்கிறாள்?

கலைமகள் கைப்பொருளோ? - அதை
மீட்டவும் விரலில்லையோ?

விஸ்கி போத்தலை நடுவீட்டில் உடைக்கிறாள் தானா? மதுவா? கெடுவைக்கிறாள். எங்கே ஓடுகிறான் ராம்? ஓ ! பாடுகிறானோ

நாளைமுதல் குடிக்க மாட்டேன்
சத்தியமடி தங்கம் சபதம் போட்டு விட்டான்.

இனிமையான தாம்பத்தியம் தொடங்குகிறது தந்தையின் வியாபாரத்தைப் பொறுப்பேற்கிறான் ராம்.

தேனிருக்கும் மலரினிலே
நீ இருக்கச் சம்மதமா?
பாலிருக்கும் கனிகளிலே
பழகிவரச் சம்மதமா?

_________________
RAJABTHEEN
Admin
Admin

Posts: 21758
Points: 29559
Join date: 09/10/2010
Age: 93
Location: அன்பு உள்ளங்களில்

Back to top Go down

Re: கண்ணதாசன் எனும் காவியம்

Post by சிசு on Fri Apr 01, 2011 9:31 pm

நல்லதோர் சுவையான பகிர்வுக்கு நன்றி...

சிசு
இளைய நிலா
இளைய நிலா

Posts: 1682
Points: 1944
Join date: 11/01/2011
Location: A beautiful Village Near by Halwa City

Back to top Go down

Re: கண்ணதாசன் எனும் காவியம்

Post by RAJABTHEEN on Fri Apr 01, 2011 9:31 pm

கண்ணதாசனைப் பற்றி நான் அள்ளி அள்ளி இறைத்துக் கொண்டு இருக்க என்
சந்தோஷமான இல்லறத்தின் பயனாக இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையாகிறான் ராம். கண்ணின் மணிபோல பிள்ளைக¨ளை வளர்த்து வருகிறார்கள் ராமும் உமாவும்.

நீரோடும் வைகையிலே
நின்றாடும் மீனே !

காலங்கள் உருண்டோடி பிள்ளகள் பெரியவர்களாகின்றனர். எதிர்பாராதவிதமாக அவனது வியாபாரம் கவிழ்ந்து விடுகிறது. தந்தையுடன் கருத்து வேறுபட்டு பிள்ளைகள் பிரிகின்றனர்.

யாரை நம்பி நான் பிறந்தேன்?
போங்கடா போங்க

கணவனும் மனைவியும் தனிமையில் தத்தளித்து கொடுமையான வறுமையில் வாடி நோய்களுக்குள்ளாகி ராம் இந்த உலகை விட்டு மறைகின்றான். என்ன அசரீரியா?

வீடுவரை உறவு
வீதிவரை மனைவி
காடுவரை பிள்ளை
கடைசி வரை யாரோ?

நண்பர்களே இது கவிஞரின் முத்துக்களை கோர்த்து ஒரு சிறிய மாலையாக்கும் உணர்ச்சி. ஒவ்வொரு சந்தர்ப்பத்துக்கும் ஒவ்வொரு பாடல் என ஒரு வாழ்க்கை தொடங்கியது முதல் முடியும் வரை அவர் தொடுத்த பாடல்கள் கூட வரும்.

இந்தப் பகுதியை அவருடைய ஒரு கவிதையின் சிறு பகுதியுடன் இந்த இதழில் நிறைவு செய்கிறேன்.

இமயமுடி மீதேறிக் காஷ்மீரில் இறங்குவேன்
இயற்கையை ரசித்திருப்பேன்
இளகியதோர் காலையில் புதுடில்லி ஓடுவேன்
இந்தியில் பேசி மகிழ்வேன்.

மிகவும் எளிமையாக நான்கே நான்கு வரிகளில் இந்தியாவின் பரப்பளவையும் அதன் பெருமையையும் உள்ளடக்கி விட்டார். இதில் சிறப்பான அம்சம் என்னவெனில் இது மிகவும் எளிய தமிழில் அனைவருக்கும் புரியக்கூடிய வகையில் அமைந்திருப்பதுதான்.

ரசித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

_________________
RAJABTHEEN
Admin
Admin

Posts: 21758
Points: 29559
Join date: 09/10/2010
Age: 93
Location: அன்பு உள்ளங்களில்

Back to top Go down

Re: கண்ணதாசன் எனும் காவியம்

Post by RAJABTHEEN on Fri Apr 01, 2011 9:31 pm

கவிதை ஒன்றைத் தாளில் வடிக்கும் போது அங்கே உண்ர்ச்சி வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. அந்த உணர்ச்சி மனதில் நிலை கொள்ளுவது ஒரேயொரு கணம் என்று கூடச் சொல்லலாம். ஆனால் அந்த ஒருகணத்தில் பிறக்கும் அந்தக் கவிக்குழந்தை அந்தக் கவிஞனின் மனநிலையை அவன் பயணித்த அந்தப் பயணத்தின் தூரத்தை அளந்து விடுகிறது.

முதலாவதாக நான் பார்க்க விளைவது "நான் மனிதரைப் பாடமாட்டேன்" என்ற அவரது கவிதையின்
சிலபகுதிகள்.
மானிடரைப் பாடிஅவர்
மாறியதும் ஏசுவதென்
வாடிக்கை யான பதிகம்
மலையளவு தூக்கிஉடன்
வலிக்கும் வரை தாக்குவதில்
மனிதரில் நான் தெய்வ மிருகம்

கவிஞர் கண்ணதாசன் தன்னைத்தானே கேள்விக்கணைகளால் துளைத்து அதன் மூலம் வாழ்க்கையின் ஒவ்வொரு திருப்பத்திற்கும் காரணம் தேடி அலைந்தவர். எதையும் உண்மை எனும் தராசில் வைத்து அளந்து பார்த்தார். தன் பக்கம் எடை குறைந்திருந்தாலும் அதை வார்த்தைகளில் வடிக்கத் தவறவில்லை கவியரசர்.

மேலெயுள்ள கவிதைப் பகுதியைப் பாருங்கள். தலையங்கமே ஒரு கதை சொல்லுகிறது. மாம் தான் மனிதரைப் பாடமாட்டேன் என்கிறார். அப்படியானால் என்ன அவர் மனிதரைப் பாடவேயில்லை என்று அர்த்தமா? இல்லை. பாடிய மனிதர்கள் பின்பு அவர் மனதில் மகிமையை இழக்கும் சந்தர்ப்பத்தில் விரக்தியின் உச்சிக்குத் தள்ளப்பட்டு அங்கே தன் உள்ளத்தின் ஓலத்தை வெளிப்படுத்துகிறார்.

என்ன அழகாக தனது மனதின் உணர்ச்சிகளை வார்த்தையின் மொழியின் துணை கொண்டு வடிக்கிறார்.

தான் மானிடைரை பாடுகிறாராம் ஆனால் பாடிய மானிடர் மாறிவிடும் போது ஏசுகிறாராம். ஆனால் இதிலிருந்து தான் மறுவதில்லையாம் ஏனெனில் இதுதான் தனது வழக்கமாம். புகழும் போது அவர்களை மலையளவு உயரத்தில் துக்கிக் கொண்டாடிப் பின்னர், வலிக்கும் படித் தொப்பெனத் தரையில் போடும் தனது பாங்கை இம்மியளவும் மறைக்காது, தனது வார்த்தை ஜாலங்களில் வடித்திருக்கிறார் கவியரசர். கவிஞரின் தமிழ் அங்கு வலிக்கும்படி விழுவோருக்குக் கூட ஒத்தடம் கொடுக்கிறது.

கவியரசர் கண்ணதாசன் தம் மனத்தினுள் தம்மைக் கண்டு கொள்ள விழைந்த போதெல்லாம் அவர் வடித்த கவிதைகள் உண்மையின் விளை நிலமாகத்தானிருந்தன. அந்த உண்மை எனும் வேப்பங்காயை தமிழ் எனும் தேன் தடவி மாங்கனியாக்கினார். இந்த இதழில் அவரது கவிதைகளின் சில பகுதிகளைப் பார்ப்பதன் மூலம் அவர் எவ்வாறு தன்னைப் பகுத்தார் எனப் பார்ப்போம்.

இந்தக் கவிதையின் மற்றொரு பகுதியைப் பார்ப்போம்.
நானிடறி வீழ்ந்த இடம்
நாலா யிரமதிலும்
நான்போட்ட முட்கள் பதியும்
நடைபாதை வணிகனென
நான்கூறி விற்ற பொருள்
நல்லபொருள் இல்லை அதிகம்

கவிஞரின் வாழ்க்கை வரலாற்றைப் படித்தவர்கள் அவர் வாழ்க்கையில் பட்ட பல துன்பங்களை அறிவர். எதையும் சரியாக சீர் தூக்கிப் பார்க்காமல் தனது மனம் சரியெனக் கூறியதை அப்படியே அப்பட்டமாக எடுத்துரைப்பவர் கவிஞர். இவரின் இந்தக் குணம் இவருக்குப் பல நண்பர்களையும் உருவாக்கியது, பல எதிரிகளையும் உருவாக்கியது.

அவரது கவிதை வரிகளைப் பாருங்கள்!

தான் நடந்த வாழ்க்கைப் பாதையில் இடறி விழுந்த இடம் நாலாயிரம் என்கிறார். அதாவது இடறி விழுவது என்றால் தன் காலே தட்டி விழுவதாகும், அதாவது தனது விழுகைக்குக் காரணம் தான்தான் என்கிறார்.

அது மட்டுமல்ல வடுக்கள் பதியும் அளவிற்கு விழுந்திருக்கிறார் என்று பொருள்.

தனது வாழ்க்கைப்பாதையில் தான் ஒரு நடைபாதை வா வியாபாரி போல் விற்றதில் அதிகம் நல்லவை இல்லை என்கிறார்.

கவிஞர் இங்கே என்ன சொல்ல முற்படுகிறார் என்றால், தான் நடந்து வந்த வாழ்க்கைப் பாதையில் தானடைந்த சோதனைகள் அதிகமானவை; தன்னாலே தனக்கு ஏற்படுத்தப்பட்டவை, அதனை அனுபவம் என்று தான் விற்கும்போது ஏனோ நல்ல சந்தர்ப்பங்கள் அதிகம் இல்லை என்று வருத்தப்படுகிறார்.

நண்பர்களே கவிஞருடைய நல்ல கவிதையின் உதாரணமாக இரு பகுதிகளை எடுத்து அவர் எவ்வாறு தன்னை நிறுத்துப் பார்த்தார் என்று பார்த்தோம். தன் தவறுகளைக்கூட தமிழ் எனும் தேன் தடவி சுட்டிக்காட்டி எமைச் சிந்திக்க வைக்கிறார் கவிஞர்.

_________________
RAJABTHEEN
Admin
Admin

Posts: 21758
Points: 29559
Join date: 09/10/2010
Age: 93
Location: அன்பு உள்ளங்களில்

Back to top Go down

Re: கண்ணதாசன் எனும் காவியம்

Post by RAJABTHEEN on Fri Apr 01, 2011 9:32 pm

கடந்த வாரம் கவியரசரின் கவித்திறனை அவரது கவிதையின் சில பகுதிகளைப் பகுத்துப் பார்த்தோம். சக்திதாசன் இம்முறை எமக்கு என்ன வழங்கப் போகிறான் என்று எண்ணுகிறீர்களா?

கண்ணதாசன் ஒரு கடல் அதிலே நான் ஒரு ஓரத்திலிருந்து கை வாளி கொண்டுதான் அள்ளுகிறேன். அவரது படைப்புக்கள் அள்ள அள்ள ஊறும் ஒரு தமிழ்க்கேணி.

கவிஞர் மிகவும் உணர்ச்சி வசப்படக்கூடியவர். அதனால்தான் மிகவும் வேதனையான சூழல்களில் கூட அவரிடமிருந்து அமுதம் போலத் தமிழ்ப் பாடல்கள் பொங்கி வந்திருக்கின்றன. அதைக் கேட்கும் ரசிகர்கள் அவர் நீந்திய அந்த சோக நதியில் தாமும் நீந்துவது போன்ற உணர்வையடைகிறார்கள் இங்கே இப்போது நான் பார்க்கப் போவது எமது கவியரசரின் வாழ்வில் நடந்ததாகக் கூறப்படும் சில சம்பவங்களும் அதனால் பிறந்தவையும்.

ஒரேயொரு சம்பவத்தை நினைவு கூறுங்கள் நண்பர்களே, கவியரசர் பிறந்தது சிறுகூடல்பட்டியில், ஆனால் இந்த உலகை விட்டு மறைந்ததுவோ எத்தனையோ ஆயிரம் மைல்களுக்கப்பால் உள்ள சிக்காகோ நகரில்.

"நெஞ்சில் ஓர் ஆலயம்" எனும் படத்திற்காகக் கவிஞர் எழுதிய "நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்" எனும் பாடலை நினைந்து கொள்ளுங்கள் ! அதில் ஓர் வாசகம்

"எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்?
இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது"

என்ன? தனது வாழ்வை மனதில் கொண்டுதான் இந்தப்பாடலை எழுதினாரோ?

கவிஞரின் பாடல்கள் எத்தனை வருடங்களானாலும் மனதை விட்டகலா மந்திரம், ஏனென்றால் வாழ்க்கையின் உண்மை நிலைகளைப் புர்¢யும் தமிழில் புனைவதுதான்.

தமிழ்த்திரையுலக இயக்குனர்களில் ஏ.பி.நாகராஜன் மிகவும் பிரசித்தி பெற்றவர். கவிஞருக்கும், இவருக்குமிடையில் அரசியல் கருத்து வேறுபாடுகள் காரணமாகப் பத்திரிகைகளில் அறிக்கைப் போர் நடந்தது. பின்பு இதை வெறுத்து இருவருமே ஒன்று சேர்ந்தார்கள். இவர்களின் சேர்க்கையின் விளைவு அரிய பல படங்களும் அவற்றில் இசைத்த பாடல்களும்.

அந்தத் திரைப்படங்களில் ஒன்றுதான் "திருவிளையாடல்" அதிலே "ஒருநாள் போதுமா" "இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை", "பாட்டும் நானே" என்ற மூன்று பாடல்களையும் தந்த கவியரசரின் ஆற்றலை விவரிக்க வார்த்தையேது? ஒரு திரைக்கதைச் சம்பவத்தைப்பின்னணியாக வைத்து மூன்று பாடல்களைத் தரும் திறன் நிகரற்றது.

அது மட்டுமா? "பாட்டும் நானே" எனும் பாடல் மனிதனை நோக்கி இறைவன் பாடுவதாக
அமைந்தது. இத்தகைய ஒரு பாடலைப் புனையும் ஆற்றல் கவியரசரிடமே மிளிர்ந்தது.

இந்தப் பாட்டின் உருவாக்கம் மிகவும் சுவராஸ்யமானது. இந்தப் படத்தின் இசையமைப்பாளர் கே.வ்¢. மகாதேவன். அனைவரும் ஒரு அறையில் உட்கார்ந்திருக்கும் போது, பாடல் வரிகளின் ஆரம்பம் கிடைக்காது கவியரசர் சிந்தித்துக் கொண்டிருக்கையில், கே.வி. மகாதேவன் நகைச்சுவை ததும்ப "என்ன இன்னைக்குள்ளே பாட்டு முடிஞ்சிடுமா?" என்று கவிஞரைப் பார்த்துக் கேட்க, கவிஞரின் வாயில் இருந்து உதித்தது,

"ஒரு நாள் போதுமா? இன்றொரு நாள் போதுமா?
நான் பாட இன்றொருநாள் போதுமா?
நாதமா? கீதமா? அதை நான் பாட
இன்றொருநாள் போதுமா?

எங்கே, மற்றொரு சம்பவம் பார்ப்போம். "நான்" என்றொரு திரைப்படம் அதற்குப் பாடலாசிரியர் நமது கவிஞர். பாடல் பதிவு செய்யப்படும் அறையில் அனைவரும் அமர்ந்திருக்கிறார்கள். மிகவும் சிறிய அறையில் முண்டியடித்துக் கொண்டு இருக்கிறார்கள். பாடலுக்கான காட்சி விவரிக்கப்படுகிறது. கவிஞரின் தமிழருவியிலிருந்து தெறிக்கிறது தமிழ்த்துளி,

"போதுமோ இந்த இடம்?"

ஒரு தமிழ்க்கவிக்கு, சந்தர்ப்பம் கொடுக்கும் சாவிகளைக் கொண்டு புதிய கதவுகளைத் திறக்கும்
ஆற்றலுண்டு என்பதற்கு இதைத்தவிர வேறென்ன ஆதாரம் வேண்டும்?

கண்ணதாசன் எனும் அந்தத் தேன்கூட்டிலிருந்து பலவந்தமாகத்தான் இந்தத் தேனீ வெளியேறுகிறது.

_________________
RAJABTHEEN
Admin
Admin

Posts: 21758
Points: 29559
Join date: 09/10/2010
Age: 93
Location: அன்பு உள்ளங்களில்

Back to top Go down

Re: கண்ணதாசன் எனும் காவியம்

Post by RAJABTHEEN on Fri Apr 01, 2011 9:32 pm

கண்ணதாசனுடைய படைப்புக்களில் முன்னணியில் இருப்பது அவரது "அர்த்தமுள்ள இந்துமதம்" எனும் தொகுப்பாகும். சமயத்தைப் பற்றி எத்தனையோ நூல்கள் எத்தனையோ பெரியவர்களினால் படைக்ககப்பட்டு இருக்கின்றன அர்த்தமுள்ள இந்து மதத்தின் தனித்தன்மை என்ன? அவை இந்த அளவிற்குப் பிரபல்யமானதற்குக் காரணம் என்ன என்றொரு கேள்வி நெஞ்சங்களில் எழுவது இயற்கையே. அர்த்தமுள்ள இந்துமதம் எனும் பெயர் சில சமயங்களில் தவறான அர்த்தத்தைக் கொடுத்து விடுகிறதோ என்று கூட நான் எண்ணுவதுண்டு. ஏனெனில், அது வாழ்க்கை முறை பற்றிய புத்தகம்.

மிகவும் எளிமையாக, சாதாரண மனிதனுக்கும் புரியக்கூடிய தமிழில் தெள்ளத் தெளிவாக, விளக்கமற்ற நிகழ்வுகளுக்கு தன் வாழ்க்கையோடு சம்மந்தப்பட்ட அனுபவ உதாரணங்களைக் கொண்டு விளக்கமளித்திருப்பதே இந்தப் படைப்புக்களின் தனிச் சிறப்பு.

கவிஞர் கண்ணதாசன் தன் வாழ்க்கையில் சகலவிதமான சூழல்களையும் அனுபவித்து வெளிவந்தவர். சாதாரண மனிதனுடைய சாபாசங்கள், அங்கலாய்ப்புக்கள், எதிர்பார்புக்கள், ஏமாற்றங்கள் என சகல விதமான உணர்ச்சிகளுக்குள்ளும் உட்படுத்திக் கொண்டவர். வாழ்க்கையில் எல்லோருமே இந்த உணர்ச்சிகளை ஏதாவது ஒரு கட்டத்தில் அனுபவித்திருபார்கள்தானே, அப்புறம் அவர்களைவிட கவிஞர் கண்ணதாசன் எந்த வகையில் வேறுபட்டவர் என நீங்கள் எண்ணக்கூடும். தான் சென்று வந்த உணர்ச்சிப் பயணத்தின் உண்மையை எல்லோருடனும் பகிர்ந்து கொள்ளும் வீரம் படைத்தவர் என்பதுவே அவரின் தனித்தன்மைக்குக் காரணம்.

நான் அடிக்கடி கூறுவதுண்டு, ஒரு உண்மையான கவிஞன் வாழுவது ஒரு கணம், அந்த ஒரு கண உணர்ச்சியின் வெளிப்பாடே பலசமயங்களில் உன்னதமான கவியாகிவிடுகிறது. தமிழ் என்பது ஒரு அழகிய மொழி. அதை உபயோகிப்பவர் அதற்கு என்ன வடிவம் கொடுக்கிறார்களோ அதைப் பொறுத்துத்தான் அதை ரசிப்பவர்களின் மகிழ்வு இருக்கப்போகிறது.

அதேபோல பலசமயங்களில் வாழ்வின் நிகழ்வுகள் எம்மை ஆனந்தம் எனும் மலையுச்சியிலிருந்து விரக்தி எனும் பள்ளத்தாக்கிற்குத் தள்ளிவிடுகிறது , அதிலிருந்து மீண்டு மேலேறி வருவதற்கு உபயோகப்படும் ஏணி போன்றதே கவிஞருடைய "அர்த்தமுள்ள இந்துமதம்".

அர்த்தமுள்ள இந்துமதம் தொகுப்பின் ஒவ்வொரு புத்தகத்தையும் படிக்கும் போது நான் இந்து என்று என் மனதில் கொண்டிருந்த அந்த நினைப்பு புது வடிவங்களை எடுக்கத் தொடங்கியது. கண்ணதாசன் அங்கே செய்ய முயற்சித்திருப்பது, மனதின் ஆன்மீக ராகங்களை மீட்ட , உன்னதமான மனித உணர்வுகளை மேலோங்கச் செய்ததுவேயாகும்.

"காலக்கணிதம்" எனும் கவிதையொன்றிலே கவியரசர் குறிப்பிடுகிறார், "இகழ்ந்தால் என்மனம் புல்லரிக்காது, புகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது" என்று. அது மட்டுமல்ல இந்த உலகில் பல செயல்கள் மாறிக்கொண்டேயிருக்கின்றன. அதனால் நாம் கொண்ட கருத்து பிழையென்று உணர்ந்த மாத்திரத்தில் அதைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்பதை பின்வருமாறு கூறுகிறார்.

"மாறாதிருக்க யான் வனவிலங்கல்ல!
மாற்றம் எனது மானிடத் தத்துவம்!
மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்."

அடுத்த பாகத்தில் கவியரசரின் அர்த்தமுள்ள இந்து மதத்தின் கூற்றுக்கள் சிலவற்றையும், அதற்கு வாழ்க்கை முறையோடு கைகோர்த்துச் செல்லும் சில உதாரணங்களையும் எடுத்துப்பார்க்கவுள்ளேன், நீங்களும் கூட வருவீர்களா?

_________________
RAJABTHEEN
Admin
Admin

Posts: 21758
Points: 29559
Join date: 09/10/2010
Age: 93
Location: அன்பு உள்ளங்களில்

Back to top Go down

Re: கண்ணதாசன் எனும் காவியம்

Post by RAJABTHEEN on Fri Apr 01, 2011 9:32 pm

கண்ணதாசனின் எழுத்துக்களில், அனுபவ ஆராதனைகளில் முன்னிற்பது “அர்த்தமுள்ள இந்துமதம்". இது முற்றுமுழுதாக அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதொன்று. சமயத்தை, மதத்தை மனிதனின் நாளந்த வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களோடு சம்பந்தப் படுத்தி விளக்குவதனால், சாதாரண மனிதனுக்கும் அதன் அர்த்தம் விளங்கக் கூடிய வகையில் சமயத்தை இலகுவாக்கி, மதத்தை மனத்தில் பதிய வைத்தார்.

இந்த வாரம் அர்த்தமுள்ள இந்து மதத்திலிருந்து சில பகுதிகளைப் பார்க்க விழைகிறேன். கண்ணதாசன் என்றொரு மனிதன் தன் இதயத்தின் ரணங்களிலிருந்து வடிந்த ரத்தத்திலிருந்து எடுத்த சோக பானம் கொடுக்கும் சுவையைக் கொஞ்சம் பார்ப்போம்.

வாழ்க்கை நிலையாமையைப் பட்டினத்தார் பாடல் கொண்டு நன்கு விளக்குகிறார் கண்ணதாசன். பட்டினத்தாரின்,

விட்டுவிடப் போகுதுயிர்; விட்ட வுடனே உடலைச்
சுட்டுவிடப் போகின்றார் சுற்றத்தார்
எனும் பாடலை மேற்கோள் காட்டி வாழ்க்கையின் தத்துவத்தை அழகுற விளக்குகிறார்.

கவிஞர் எமது உயிரை இறைவன் கடனாகக் கொடுத்தார் என்கிறார். அந்தக் கடனின் காலம் முடியும் போது அதை அறவிட வரும் அமீனாவாக எமனைக் குறிப்பிடுகிறார். இதிலிருந்து அவர் எமக்குக் கூற விளைவது என்னவென்றால். இந்த உயிரே உன்க்குச் சொந்தமானது இல்லை, பின் உனது எனது என ஏன் அடித்துக் கொள்கிறாய் என்பதுவே.

என்ன வாழ்க்கை? நிலையாமை என்று சொல்லிச் சொல்லி ஒரே போரடிக்கும் தத்துவத்தை அவர் சொல்லவில்லை, இந்து சமயத்தில் அடிக்கடி வாழ்க்கையின் நிலையாமை பற்றிக் குறிப்பிடப் படுவதின் காரணத்தை அழகாகப் பின்வருமாறு கூறுகிறார்:

"யாக்கை நிலையாமையை இந்து சமயத் தத்துவ ஞானிகள் அடிக்கடி கூறி வந்திருப்பது மனிதனை விரக்தி அடையச் செய்வதற்கு அல்ல. வாழ்க்கையில் ஒரு தைரியத்தை உண்டாக்குவதற்கே”

மிக அழகாக வாழ்க்கையின் நடைமுறையோடு ஒத்துப் போகும் கருத்தைக் கூறுவதன் மூலம், தொடர்ந்து வரும் விரக்தி எனும் அந்த வீணான உணர்ச்சியிலிருந்து எம்மை விடுவித்துக் கொள்ள ஒரு மார்க்கம் சொல்லுகிறார் கண்ணதாசன்.

மேலும் அவர் தத்துவப் பாடலுக்கு வாழ்க்கையோடு ஒத்துப் போகும் கருத்தைக் கூறுகின்றார்.

"காயமே இது பொய்யடா
காற்றடித்த வெறும் பையடா"
என்ற பட்டினத்தார் பாடலைக் கூறி அதைப் பின்வருமாறு நியாயப் படுத்துகிறார்:

"இது இறைவன் படைத்த உடலை அவமானப் படுத்தப் பாடப்படவில்லை. நிலைக்காத, பொய்யான இந்த உடலைக் காப்பாற்றப் பொய் சொல்லாதே, திருடாதே, பிறரை ஏமாற்றாதே என்று எச்சரிப்பதற்காகவே பாடப்பட்டது" என்று கூறி இந்தத் தத்துவங்கள் தெரிந்திருப்பதால் நாமடையும் பயனை அழகாய் விவரிக்கிறார் கவிஞர்.

கண்ணதாசனைப் பொறுத்த வரையில் மரணத்தின் மகிமையை மனிதன் அறிந்து கொள்வது மிகவும் முக்கியம் என்கிறார். அதை முன்னமே அறிந்து கொள்வதினால் பேராசை அடைவது தவிர்க்கப்பட்டு மனிதன் சீரிய நெறிக்குள்ளாகி மனதில் அமைதி காண விழைகிறான். இதுவே இந்துமத ஞானிகளின் நோக்கம் என்கிறார் எம் கவிஞர்.

_________________
RAJABTHEEN
Admin
Admin

Posts: 21758
Points: 29559
Join date: 09/10/2010
Age: 93
Location: அன்பு உள்ளங்களில்

Back to top Go down

Re: கண்ணதாசன் எனும் காவியம்

Post by RAJABTHEEN on Fri Apr 01, 2011 9:33 pm

இந்த அறிவு முதிர்ச்சியினால், சாவதற்கு முன் வாழ்ந்து பார்க்க வேண்டும் எனும் ஆவல் கொண்டு மனதில் இலட்சியம் வகுத்து முன்னேற மனிதன் துடிக்கிறான் என்பது கவிஞரது வாதம்.

"முதற் சங்கு அமுதூட்டும், மெய்குழலார்
நடுச் சங்கு நல் விலங்கு பூட்டும் - கடைச் சங்கம்
ஆம்போ ததூதும், அம்மட்டோ? இம்மட்டோ?
நாம்பூமி வாழ்ந்த நலம்"
எனும் பட்டினத்தார் பாடலை எடுத்து வாழ்வை எளிய நடையில் விளக்க முற்படுகிறார் கவிஞர். வாழ்க்கை மூன்று சங்குகளால் வரைவிலக்கணம் அமைக்கப்படுகிறது. சடங்குகளில் சங்கூதப் படுவதைப் பார்த்திருக்கிறீர்கள். எமது வாழ்வின் கதை மூன்று சங்குகளில் அடங்குமாம்.

முதற் சங்கு எதைக் குறிக்கிறது? முதற் சங்கு அமுதூட்டும்! ஆமாம் நாம் பிறந்த போது எமக்குப் பாலூட்டப் பயன்படும் முதற் சங்கு. இது எமது பிறப்பைக் குறிக்கிறது.

இரண்டாவது சங்கு. அது என்ன? “மொய்குழலார் ஆசை இடைச் சங்கம்". ஆமாம் நங்கையர் பால் ஈட்டம் கொண்டு திருமணம் எனும் பந்தத்தினுள் நுழையும் போது, திருமணச் சடங்கில் சங்கு ஊதப் படுகிறது. இது எமது இடை வாழ்க்கையைக் குறிக்கிறதாம்.

அப்போ அடுத்தது கடைச் சங்கம் தானே! ஆமாம் இவ்வுலகத்தை விட்டு நாம் பறக்கும், இறைவன் கொடுத்த கடனை அமீனா வசூலித்த பின்னே, நடக்கும் மரணச் சடங்கில் சங்கு ஊதப் படுகிறது.

என்ன அழகாகப் பட்டினத்தார் பாடலை எடுத்துக் கவியரசர் எளிமையான விளக்கத்தின் மூலம் வாழ்க்கையின் நிலையாமைய விளக்கி எமது வாழ்வின் கதை மூன்று சங்கூதல்களிலே அடங்கி விடுகிறது என்று மதச் சடங்கின் அர்த்தத்தை மனிதனின் அன்றாட வாழ்க்கையுடன் பிணைத்து விடுகிறார்.

_________________
RAJABTHEEN
Admin
Admin

Posts: 21758
Points: 29559
Join date: 09/10/2010
Age: 93
Location: அன்பு உள்ளங்களில்

Back to top Go down

Re: கண்ணதாசன் எனும் காவியம்

Post by RAJABTHEEN on Fri Apr 01, 2011 9:33 pm

கண்ணதாசன் காலத்தால் அழியாத ஒரு கவிஞர். கற்பனையை மட்டுமே வைத்துத் தனது கவிதைக் கப்பலை ஓட்டியவர் அல்ல கண்ணதாசன். வாழ்க்கையின் உண்மை நிலையை, மொழியை ரசிப்பவர் அனைவரும் உணர்ந்து கொள்ளும் வண்ணம், மக்களின் நெஞ்சங்களைத் தொட்டவர்.

தீயைத் தீண்டினேன். அது என்னைச் சுட்டது. அந்தப் புண் கொடுத்த வேதனையால் வெந்தேன் எனத் தான் வாழ்க்கையில் செய்த தவறுகளை உளச்சுத்தியோடு கூறினார். அது மட்டுமல்ல, அத்தகைய தவறுகளைச் செய்யும் போது தனது நெஞ்சத்திலிருந்த உணர்ச்சிகளை விளக்கி மற்றையோர் அதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுரைகளை வாரி வழங்கினார்.

கவிஞரின் அருமையான வாழ்வின் யதார்த்ததை விளக்கும் ஒரு கவிதையில் எனது மனதுக்குப் பிடித்த சில பகுதிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

இக்கவிதை கவிஞரின் "கண்ணதாசன் கவிதைகள்" எனும் நூலின் தொகுப்பு ஐந்திலிருந்து எடுக்கப்பட்டது. இதைப் படிக்கும் போது ஏனோ எனது மனம் தாலாட்டப்பட்டது. இந்தக் கவிதையின் தலைப்பு "அவனைத் தூங்க விடுங்கள்" என்பதாகும்.

எங்கே சில பகுதிகளைச் சுவைப்போம் வாருங்கள் !

அவனை எழுப்பாதீர்
அப்படியே தூங்கட்டும்
ஆழ்ந்த துயிலினிலே
அமைதியினைக் காணட்டும்
அன்புக் குழந்தையவன்
அரையாண்டுச் செல்வனவன்
இந்த வயதினிலே
இப்போது தூங்குவதே
சுகமான தூக்கம், அவன்
சுகமாகத் தூங்கட்டும் !

என்ன அருமையான, எளிமையான வரிகள். காதுகளில் தேனை வார்க்கும் இனிமையான தமிழருவி. 6 மாதக் குழந்தையை ஏன் எழுப்புகிறீர்கள் என வினவுகிறார். அவனது துயில் ஆழமானது, அதில் காணும் நிம்மதியே மகத்தானது எனும் நிதர்சனமான உண்மையை நீக்கமறத் தருகிறார் நித்தியக் கவிஞர். வயது முதிர்ந்ததும், அவன் வளர்ந்ததும் வாழ்க்கை எனும் கடலிலே பிரச்சனைகள் எனும் அலைகளுடன் அவன் போராடுவது தவிர்க்கப்பட முடியாததே எனும் தீர்க்கமான யதார்த்தத்தைத் துல்லியமாகக் கூறுகிறார் கவிஞர்.

இந்த வயதினிலே தூக்கத்தைத் தவற விட்டால் பின் எப்போது கிடைக்கும் இந்தப் பஞ்சணைச் சுகம்? எனக் கேள்விகளை வீசி, சிந்தனைச் சக்கரத்தைச் சுழற்றுகிறார், இந்தச் சிந்தனைச் சிற்பி.

_________________
RAJABTHEEN
Admin
Admin

Posts: 21758
Points: 29559
Join date: 09/10/2010
Age: 93
Location: அன்பு உள்ளங்களில்

Back to top Go down

Re: கண்ணதாசன் எனும் காவியம்

Post by RAJABTHEEN on Fri Apr 01, 2011 9:33 pm

எங்கே அடுத்தொரு பகுதிக்குள் நுழைவோம்!

கண்ணை விழித்திந்தக்
காசினியைப் பார்க்குங்கால்
என்ன துயர்வருமோ
எங்கெங்கே அடிவிழுமோ
காதல் வருமோ
காதலுக்குத் தடைவருமோ
மோதல் வருமோ
முறைகெடுவார் துணைவருமோ?
நன்றியிலா நண்பர்கள்தாம்
நாற்புறமும் சூழ்வாரோ
நலமிழந்த பெண்ணொருத்தி
நாயகியாய் வருவாளோ
செய்யத் தொழில்வருமோ
திண்டாட்டந்தான் வருமோ
வெய்யில் அழைத்துவரும்
வியர்வையிலே நீராடி
"ஐயா பசி" என்
றலைகின்ற நிலைவருமோ?
என்ன வருமென்று
இப்போது யாரறிவார்

அவனை எழுப்பாதீர்
அப்படியே தூங்கட்டும் !

அந்தக் குழந்தை வளர்ந்து தன் அகலக் கண்களால் புவியைப் பார்க்கும் போது அவனடையக் கூடிய துன்பத்தின் சாயல்களை மிகவும் எளிமையாக எமக்குப் புரியவைத்திருக்கிறார்..

தையலைப் பார்த்து மையல் கொள்வான். மையலோடு பின்னிப் பிணைந்து சிக்கலும் வரும், அப்போது இழந்து விடுவானே தூக்கத்தை!

காதலிக்கத்தானே உரிமையுண்டு, அத்தோடு கூட வரும் தடைகளைத் தகர்க்கச் சமுதாயம் இடம் கொடுக்குமா என்ன? அவை கொடுக்கப்போகும் அந்தச் சோகத்தினாலே அவன் இழக்கப்போவதும் தூக்கத்தைத் தானே!

நண்பர்கள் என்று சொல்லிக் கொண்டு ஒரு நயவஞ்சகக் கூட்டம் அவனைப் படுகுழியில் தள்ளுமே, காதலெனும் பாதையைத் தாண்டி இவன் திருமணத்தினுள் நுழையும் போது, நாயகியாய் ஒருவள் வருவாளே! நாம் எவ்வளவு தான் வாழ்க்கையின் நெளிவு சுளிவுகளை அவனுக்குக் கற்றுத் தந்திருந்தாலும், அந்த நாயகி நலமிலாதிருந்தவளாயிருந்தால் புரட்டி விடுவாளே அவனை!

அது மட்டுமா!

படிக்கிறான், படிப்பிக்க மட்டும்தானே எம்மால் முடிகிறது, அதைத் தொடர்ந்து அவனுக்கு ஒரு தொழில் தேவை, அது இல்லையென்றால் பட்டினிதானே, பாழும் வெய்யிலில் அலைந்து பிச்சை கேட்கும் நிலைக்கு வந்து விட்டால்!

அப்பப்பா! தூக்கத்தை இழக்க ஆயிரம் காரணங்கள் இருக்கும் இந்தப் புவியில், ஏன் நீங்கள் அவசரமாய் அவனை எழுப்புகிறீர்கள்? நயமாக வினவுகிறார் எமது நட்சத்திரக் கவி.

நண்பர்களே! பெற்றோர்களாக இருக்கும் போது, அதுவும் வாழ்க்கை எனும் கரடுமுரடான பாதையில் நடந்து களைத்தவர்க்கு, பிள்ளை எனும் அந்தக் குலக் கொழுந்து , வளரும் போது நுழைந்து, வெளிவரவேண்டிய சிக்கல்களை அழகுற எடுத்தியம்பி எம்மையெல்லாம் அந்த உணர்ச்சிக் குவியலுக்குள் முழுக்கி எடுத்து விட்டார் கண்ணதாசன்.

இது ஒரு நீண்ட கவிதை, இதன் அழகிய அடுத்த பகுதிகளை அடுத்த இதழில் பார்ப்போம், காத்திருங்கள் உங்களைத் தேடி நான் வருவேன், மீண்டும் கவிஞரின் கவியின்பம் சுவைப்போம்.

_________________
RAJABTHEEN
Admin
Admin

Posts: 21758
Points: 29559
Join date: 09/10/2010
Age: 93
Location: அன்பு உள்ளங்களில்

Back to top Go down

Re: கண்ணதாசன் எனும் காவியம்

Post by RAJABTHEEN on Fri Apr 01, 2011 9:33 pm

தேனைச் சுவைத்தபின் எஞ்சியிருக்கும் கொஞ்சத்தை நாவால், அதரங்களைத் தடவிச் சுவைப்பதுபோல, இதோ எஞ்சியிருக்கும் அந்த இனிப்பைப் பருகுவோமா?

கோடிக் கதிபனெனக்
குறையாது வந்தாலும்
நாட்டுத் தலைவனென
நல்வாழ்வு பெற்றாலும்
கேட்ட பொருளெல்லாம்
கிடைத்தாலும், அவன் வீட்டு
மாட்டுக்கும் கூட
மரியாதை கிடைத்தாலும்
பஞ்சணைகள் இருந்தாலும்
பால்பழங்கள் உண்டாலும்
சொத்துள்ள காரணத்தால்
தூக்கம் பிடிக்காது!

அவனை எழுப்பாதீர்
அப்படியே தூங்கட்டும்!


காதல் வழி வந்த சோதனைகளைத் தூக்கிக் காட்டி, வாழ்வின் பஞ்சத்தின் வழி வரும் பல தடங்களைத் தட்டிக்காட்டி எமக்கு ஞானப்பால் ஊட்டிய கவித்தலைவன் இங்கே எதை நமக்கு எடுத்தியம்ப முயல்கிறான்?

பணத்தில் அவனுக்குப் பலமில்லை என்னும் நிலையில்லாமல், வாரி வாரிக் கொட்டிக் குவிக்கும் நிலையில் இருக்கிறான் என்றே வைத்துக் கொள்ளுங்கள். அதில் கூட மிகவும் நயமாக "நாட்டுத் தலைவனென நல்வாழ்வு பெற்றாலும்" எனும் வரியின் மூலம் அரசியல் வாழ்வில் லாபம் தேடும் பலரைப் பற்றிப் பூடகமாகச் சொல்கின்றான் சொல்வேந்தன்.

அப்படி ஒரு நிலையை அந்தக் குழந்தை அடைகின்றதாக வைத்துக் கொள்ளுங்களேன். அவனைச் சுற்றிக் காக்கைக் கூட்டம் போல சுரண்டத் திரியும் கும்பல்கள் ஒருபுறம் அவனை வம்த்தும். சோம்பேறிகளுக்கு உதவி செய்வது பாபம் எனும் காரணத்தால், உதவ மறுத்து, மனம் நிம்மதி இழந்து தவிக்கக்கூடுமே, பிற்காலவாழ்வில் அந்தக் குழந்தை!

அப்போது அவன் இழக்கப் போவது அவன் தூக்கத்தைதானே! பின் ஏன் இப்போது அவசரமாய் அவனை எழுப்புகிறீர் என வாழ்க்கையின் உண்மை நிலையை எடுத்தியம்பி விளிக்கிறார் இந்த கவி விற்பன்னர்.

அதாவது பணம் இல்லாவிடாலும் கஷ்டம், அது அளவுக்கதிமாக இருந்தாலும் கஷ்டம். அதன் விளைவு தூக்கம் பற்¢போவதுதானே, பாவம் குழந்தையாயிருக்கும்போதாவது தூங்கட்டுமே என்கிறார்.

பூப்போலத் தூங்குகிறான்
பூமியிலே உள்ளதெல்லாம்
பார்க்காமல் தூங்குகிறான்
பாவிகளை இன்றுவரை
சேராமல் தூங்குகிறான்;
தெய்வத்தின் காதினிலே
ரகசியங்கள் பேசுகிறான்;
"லாலிலா" பாடுகிறான்!
வெள்ளை மலர்முகத்தை
வெள்ளிநிலாப் பெட்டகத்தைப்
பிள்ளைக் கனியமுதைப்
பேதையீர் எழுப்பாதீர்!


அவனை எழுப்பாதீர்
அப்படியே தூங்கட்டும்!


குழந்தை மனமுடைய பிள்ளை, பெரியவனாதும், பாவிகள் அவனை வளைத்துப் போட்டு விடுவார்கள். அது மட்டுமா! இந்தப் பூமியிலே நம் கண்முன்னாலே காணும் அநீதிகள்தான் எத்தனை! அவைகளைக் காணாமல் இருக்கிறானே இந்தக் குழந்தை அந்த மட்டிலாவது மகிழ்வுறுங்கள் என்கிறார் இந்தத் தமிழ்த்தென்றல்.

நீங்கள் என்னப்பா கோவில் குளங்கள் என்று போய்த் தெய்வத்தைத் தேடுகிறீர்கள், ஆனால் இந்தக் குழந்தை பேசும் மொழி தெய்வத்தின் மொழிதானே! அந்தக் குழந்தை நீங்கள் தேடும் தெய்வத்தின் காதுகளில் கண்களை மூடிக்கொண்டே எத்தனை ரகசியங்கள் பேசி விட்டது.

பேதை மனிதர்களே! அவன் பேசாமல் தூங்கட்டும், பிற்காலத்தில் தூக்கமின்றி அவன் தவிக்கும்போது உங்களால் அவனைத் தூங்க வைக்க முடியாதே!

கவியரசர் கண்ணதாசனின் அளவிலா அனுபவச் செல்வச்செழிப்புக்கு இது நல்ல எடுத்துக்காட்டு. தமிழைச் சுவைக்கும்போது கூடவே, வாழ்க்கையின் யதார்த்தம் எனும் உண்மையை நமக்குத் தெட்டத் தெளிவாக விளக்குகிறார்.

உண்மையான கவிஞன் அழகான கவிதைகள் எழுதுவதோடு மட்டுமல்லாமல் அதன் மூலம் ஒரு செய்தியைத் தருவான். அந்த வழக்கத்தைக் கவியரசர் அழகாகக் கையாண்டிருப்பதை ரசித்திருப்பீர்கள்!

_________________
RAJABTHEEN
Admin
Admin

Posts: 21758
Points: 29559
Join date: 09/10/2010
Age: 93
Location: அன்பு உள்ளங்களில்

Back to top Go down

Re: கண்ணதாசன் எனும் காவியம்

Post by RAJABTHEEN on Fri Apr 01, 2011 9:34 pm

ஒரு விசித்திரமான கற்பனை. கவியுலகின் மைந்தன், காதல் பெண்களின் பெருந் தலைவன், மரணத்தை வென்றவன் கவிச் சக்கரவர்த்தி கண்ணதாசனை நேரில் கண்டேனென்றால் உரையாடல் எப்படி இருக்கும் என்று எண்ணிப் பார்த்தேன்!

நீங்கள் அவன் பாடல்களை ரசித்தது போதும், இனி நான் ரசிக்க வேண்டாமா? என அந்த ஆண்டவனே கவியரசைத் தன்னுடன் அழைத்த பின்னால் எப்படிக் காண்பேன் என் கவித் தலைவனை, எவ்வாறு உரையாடுவேன் அந்தத் தமிழ் அருவியுடன்?கவியுள்ளம் கொண்டவர்கள் விளையாடும் திடலான கற்பனை உலகை எனது உதவிக்கு அழைத்தேன். ஆம்! கனவுலகில் கவியரசோடு உரையாடுவது சாத்தியமே!

வாருங்கள் கனவுலகிற்குள் நுழைவோம்!

கண்களை மூடினேன். கனவு வந்தது. கவிஞனும் வந்தான். சுனாமி எழுந்து உயிர் பறித்துக் களைத்து அமைதியாய் ஆடிக் கொண்டிருந்த அந்தக் கடற்கரைதனிலே ஒரு பாறை மீது தனியனாய் உட்கார்ந்திருந்தேன். அதோ பளீரென்று கண்ணைப் பறிக்கும் வெள்ளை வேட்டி சட்டையுடன் அருகே வருவது யார்?

கவியரசர் கண்ணதாசனல்லவா? திடுக்கிட்டு எழுந்தேன்.

"என்னப்பா அவசரம், உட்கார்" என்றார் கனிவாக. தயங்கியவாறே திரும்பவும் அந்தக் கற்பாறையின் மீது உட்கார்ந்தேன். "எதிர்த்தாற் போல இருந்த பாறையில் தானும் அமர்ந்தார்.

"என்ன சக்திதாசா? என்ன பலமான யோசனை?" கனிவான விசாரணை. "நீ சிந்திப்பது எனக்குப் புரிகிறது, நான் களிக்கும் கவிஞனை என் முன்னே கொண்டு வந்து நிறுத்திய காலத்தின் கனிவு எப்படி இந்த அமைதியான கடலலையைச் சுனாமியாக மாற்றியது என்பதுதானே?" என்றார் முகத்தில் என்றும் தவழும் அந்தக் கள்ளமில்லாச் சிரிப்புடன்.

திடுக்கிட்டு விட்டேன்! எப்படி என் மனதின் ஆதங்கத்தைப் படம் பிடித்துக் காட்டி விட்டார் கவிஞர்!

அகலத் திறந்த கண்களைச் சுருக்க முடியாமல் "ஆமாம் கவிஞரே ! அப்படியே என் மனிதிலுள்ளவற்றை உரைத்து விட்டீர்களே!" என்றேன் நான்.

சிரித்தார் கவிஞர்.

"கறையுடைய நெஞ்சினரும்
திறனுடைய கவிஞர்களைக்
காலால் உதைக்கும் நேரம்
கடல் பெருகி மழை பெருகிக்
காற்றுப்புய லாகவரும்
கலியுகம் முடியும் நேரம்!"

என்னப்பா! திகைத்து விட்டயா? இது எனது கலியுகம் முடியும் நேரம் எனும் கவிதையில் ஒரு பகுதி, கவிதை எழுதும் ஆற்றல் உள்ளவனாக இருந்தால் அர்த்தம் புரிந்திருக்குமேயப்பா?" என்றார்.

_________________
RAJABTHEEN
Admin
Admin

Posts: 21758
Points: 29559
Join date: 09/10/2010
Age: 93
Location: அன்பு உள்ளங்களில்

Back to top Go down

Re: கண்ணதாசன் எனும் காவியம்

Post by RAJABTHEEN on Fri Apr 01, 2011 9:34 pm

எனது உள்ளத்துக் கவி மழையின் மேகமே! தங்களுக்கு முன்னால் நானெல்லாம் கவியா?" என்றேன் நான்.

சிரித்தவாறே! "உலகம் முன்னேற்றம் எனும் பதையில் மூர்க்கத்தனமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இருக்கும் உள்ளங்களில் சிலவும் மனிதத் தன்மையை இழந்து விட்டால், மனிதனின் இருப்புக்கு அர்த்தமேயில்லாமல் போய் விடாதா?" என்றார் கவிஞர்.

"திரும்பும் இடமெல்லாம் துரோகம், பார்க்குமிடமெல்லாம் பரம வஞ்சம், எப்படி வாழ்ந்தீர்கள் உலகிலே?" அறிவு ஏழை விசிறினேன் கேள்வியை.

"என்னைப் பற்றி பல விடயங்களை அறிந்து வைத்திருக்கிறாயே, இதை அறியவில்லையா?" என்று கேட்டு விட்டு,

கடவுள் செய்த பாவம் - இங்கு
காணும் துன்பம் யாவும் என்ன
மனமோ - என்ன குணமோ - அந்த
மனிதன் கொண்ட கோலம்

இதைச் சிந்தித்துப் பார்த்தாயா? உன்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளுக்கு, எமக்கு அப்பாற்பட்ட சக்தியின் பெயரால் நியாயத்தைக் கற்பித்து விடு, மனம் இலேசாகி விடும்" என்றார்.

எனது மனமோ ஆச்சர்யத்தால் மலர்ந்தது. இந்தக் கவிஞனின் மீது நான் கொண்ட அபிமானம் வீணானது அன்று, எவ்வளவு துல்லியமாக பதிலளித்து விட்டார்!

_________________
RAJABTHEEN
Admin
Admin

Posts: 21758
Points: 29559
Join date: 09/10/2010
Age: 93
Location: அன்பு உள்ளங்களில்

Back to top Go down

Re: கண்ணதாசன் எனும் காவியம்

Post by RAJABTHEEN on Fri Apr 01, 2011 9:34 pm

மனிதர்கள் மதத்தின் மீது கொண்ட "மதத்தினால்" மற்றையோரின் மனம் நோகும் வண்ணம் நடப்பது ஆன்மீகத்திற்கு இழுக்காகுமே கவியரசே! அப்படியான பல சந்தர்ப்பங்களை நான் காணுகின்றேனே, தாங்கள் இதை எப்போதாவது எதிர் கொண்டீர்களா? அத்தகைய சந்தர்ப்பங்களை எப்படிக் கையாண்டீர்கள்?" ஆவல் ததும்பும் கேள்வி பிறந்தது என்னிடமிருந்து.

மீண்டும் புன்சிரிப்பு! புண்ணான நெஞ்சத்தின் பொன்னான ஆபரணமே புன்சிரிப்புத்தானோ?


"இந்து மதத்தின் மீது நான் கொண்ட அபிமானம் அளவு கடந்ததே! நான் என் மதத்தைச் சுவாசிக்கிறேன் அது காற்றாக எனது உயிருக்கு வடிவம் கொடுக்கிறது, எனது வாழ்க்கையின் அர்த்தத்தை எனக்குக் கற்பிக்கிறது. என்னைச் சுற்றிப் படரும் துன்ப வலையை எனக்கு விபரித்து அதிலிருந்து அறுத்துக் கொண்டு வெளியே வருவதற்கான கத்தரிக் கோலைக் கொடுக்கிறது. ஆனால் அதை அறுக்க வேண்டியவன் நானே, அது தானாகவே அறுபட முடியாதது. அந்த ஆயுதத்தால் எனது துன்ப வலையை அறுப்பதை விடுத்து அடுத்தவனைக் குத்தவும் முடியும், ஆனால் அப்படிச் செய்யும் போது அந்த உபகரணம் தனது மகிமையை இழப்பதோடு, துன்ப வலையில் சிக்குண்ட நான் வெளியே வர வழி கிடையாது தவிக்கிறேன்.

அன்பனே! சக்திதாசா, நீ கேட்ட கேள்விக்கு விடை கூறி விட்டேன். ஒரே வரியில் சொன்னால், மதம் வெறியாக மாறினால் அங்கே மனிதத் தன்மை சிதைந்து விடுகிறது, அதற்கப்புறம் நாம் மனிதர்களைப் பற்றிப் பேசவில்லை.

ஆக ! என்னே ஒரு அருமையான விளக்கம் இதைக் கவிஞசரைத் தவிர வேறு எந்த அனுபவச் சிற்பியால் கொடுக்க முடியும், திகைப்பில் ஆழ்கிறேன் நான்.

திடீரெனக் கவிஞரின் வாயசைகிறது, அவரிடமிருந்து ஒரு பாடல் பிறக்கிறது!

"பரமசிவன் கழுத்திலிருந்து
பாம்பு கேட்டது கருடா செளக்கியமா? - யாரும்
இருக்குமிடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் செளக்கியமே, கருடன் சொன்னது
அதில் அர்த்தம் உள்ளது."

கேட்டதும் மகுடி கேட்ட நாகம் போல எனை மறந்தேன். என்னே தத்துவம், என்னே உயரிய அனுபவத்தின் உள்ளர்த்தம்.

_________________
RAJABTHEEN
Admin
Admin

Posts: 21758
Points: 29559
Join date: 09/10/2010
Age: 93
Location: அன்பு உள்ளங்களில்

Back to top Go down

Re: கண்ணதாசன் எனும் காவியம்

Post by RAJABTHEEN on Fri Apr 01, 2011 9:34 pm

கவிஞரே! ஒரு சாதாரண மனிதன் எனும் கோட்பாட்டுக்குள் இருந்து கொண்டு உங்கள் பாடல்களில் பொதிந்திருக்கும் அர்த்தங்களையும் அது தரும் ஆத்மார்த்த உணர்வுகளையும் ஆசை தீரப் பருகிக் கொண்டும் ஏனோ, அன்றாட ஆசாபாசங்களுக்குள் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்றேனே இது சரியாகுமா?"

மீண்டும் அவருக்கேயுரித்தான ஒரு அர்த்தம் பொதிந்த சிரிப்பு!

"லெளகீக வாழ்க்கையின் தேவைகளைத் துறந்தவன்தான் என் பாடல்களை ரசிக்க முடியுமானால் எனக்கு ரசிகர்களே இருந்திருக்க வாய்ப்பில்லை. நான் பெற்ற அனுபவங்களைப் பாடலாக்கினேன். ஆனால் அவைகளைத் திரும்பக் கேட்கும் போது நான் அவைகளைக் கடந்து விட்டேன். ஆனால் உன்னைப் போன்ற ரசிகர்களோ அந்த வாழ்க்கையின் வேதனைகளை அனுபவித்துக் கொண்டிருக்கும் போதே உங்கள் மனதைச் சாந்தப் படுத்தும் வகையில் எனது பாடல்கள் மூலம் ஆறுதல் அடைவீர்களானால் என்னைவிட பாக்கியசாலிகள் நீங்களே."

மீண்டும் எத்தகைய அர்த்தம் பொதிந்த அனுபவ வாயிலான ஒரு விளக்கம்!

"நன் புறப்படும் நேரம் வந்து விட்டதப்பா! இன்னும் ஒரேயொரு கேள்வியை எடுத்து விடு. அத்துடன் நான் என்னுலகம் செல்லுகிறேன்" என்றார் கவிஞர்.

"கவியரசே! அரசியல்வாதி, ஆன்மீகவாதி, கவிஞர், சினிமாப் பாடலாசிரியார் இவைகளில் நீங்கள் மனம் நிறைவாக ஆற்றிய பாத்திரம் எதுவெனக் கூறுவீர்களா?" மீண்டும் ஆவலுடன் அடியேன்.

பலமாகச் சிரிக்கிறார் "இதற்கு விடையறிந்திருந்தால் என் நிலைமை வேறாக இருந்திராதா? மனிதாபிமானமிக்க அரசியல்வாதியாக, நடைமுறை ஞானத்தைப் போதிக்கும் ஆன்மீக வாதியாக, உண்மையைப் பாடும்
கவிஞனாக, மக்கள் மனதைத் தொடும் பாடலாசிரியனாக, இனியொரு பிறப்பெடுத்தால் வாழ வேண்டும் எனும் நம்பிக்கை பொதிந்த அனுபவத்தைப் பெற்ற ஒரு மனிதனாக வாழ்ந்தேன் என்பதே எனக்கு மனநிறைவைத் தருகிறது" கூறியவாறே எழுந்து நடந்த கவியரசரின் உருவம் சிறுத்துக் கொண்டே வந்தது.

திடுக்கிட்டு விழித்தேன். நிஜ உலகம், நிம்மதி மறைந்தது!

_________________
RAJABTHEEN
Admin
Admin

Posts: 21758
Points: 29559
Join date: 09/10/2010
Age: 93
Location: அன்பு உள்ளங்களில்

Back to top Go down

Re: கண்ணதாசன் எனும் காவியம்

Post by RAJABTHEEN on Fri Apr 01, 2011 9:35 pm

கண்ணதாசன் எனும் இந்தக் கலைஞரின் வாழ்வில் அடித்த புயல்கள் ஆயிரம். ஆயினும் தான் அனுபவித்த அந்தப் புயற் காற்றின் வேகத்தை இனிமையான தென்றல் காற்றாக மாற்றி எமது வரண்ட மனமெனும் பாலவனத்தைச் சோலையாக்கினார்.வாழ்வெனும் இந்தப் பயங்கர வனத்தைக் கடக்கும் போது எதிர்ப்படும் துன்பமெனும் விலங்குகளை எதிர்கொண்டு பயணத்தை இனிமையாக்குவதற்குத் தமிழ் எனும் இனிமை தடவிய அழகிய வார்த்தைக் கோப்புக்களைத் துணையாக்கினார்.

கவிஞர் கண்ணதாசன் கம்பனைத் தனக்குத் துணையாக்கிய சம்பவங்கள் பலவுண்டு. ஒரு சிறு உதாரணத்தைக் கீழே பார்ப்போம்.

"அற்றைத் திங்கள் அவ் வெண்ணிலவில்"

என்று தொடங்கும் கம்பனின் கவியை எவ்வாறு எமது கவிஞர் எமது வாய்களில் உருள விடுகிறார் என்று பாருங்கள்.

"அன்றொருநாள் இதே நிலவில்
அவள் இருந்தாள் என்னருகே!"


அருமையாக நாடோடி எனும் திரைப்பட வாயிலாக எமது நெஞ்சங்களைக் கம்பனின் கருத்துக்களோடு கலந்து விடுகிறார் இந்தக் கவித் தலைவர்.

பல நூல்களைப் படித்து அதன் உள்ளார்ந்த அர்த்தங்களைப் புரிந்து அதை எமக்கு இலகுவாகப் புரியக் கூடிய வகையில் தமிழ் மணம் பூசி அள்ளித் தெளிக்கும் இந்த வித்தகரின் விளையாட்டை இன்னுமொரு இலக்கியச் சுனையில் பறித்த தாமரையாகப் பார்ப்போம்.

புறநானுற்றில் புலர்ந்த கவிதையை எவ்வாறு எமக்குப் புலப்படுத்துகிறார் பாருங்கள்!
இதோ புறநானூற்றுப்பாடல்

யானும் நீயும் யாராகி யாரோ
யென்னிதயம் உம்மிடையும் எவன் கொல்லோ
செம்புலப் பெயர் நீர் போல
அன்புடை நெஞ்சங்கள் தாம் கலந்தாடுவவே!

இதைக் கவிஞர் எவ்வாறு எமக்கு ஊட்டுகிறார் பாருங்கள்!

நேற்றுவரை நீ யாரோ? நான் யாரோ?
இன்று முதல் நீ வேறோ? நான் வேறோ?

தமிழூறும் மனம் கொண்ட உன்னதக் கவிஞரின் படைப்புக்கு உவமை எங்குண்டு?

இதோ கவியரசரின் வாழ்வினிலே நடந்ததாகக் கூறப்படும் இன்னுமொரு சம்பவத்தைப் பார்ப்போம். "பாவ மன்னிப்பு" எனும் படத்திற்காகப் பாடல் எழுதும் போது டைரக்டர் பீம்சிங், இசையமைப்பாளர்கள் எம்.எஸ்.வி., ராமமூர்த்தி ஆகியோருடன் கண்ணதாசனும் பாடல் எழுவதற்காக அமர்ந்திருக்கும் போது கண்ணதாசன் வீட்டிலிருந்து அவருக்கு ஒரு தொலை பேசி அழைப்பு வந்திருந்ததாம்.

அந்தத் தொலை பேசி அழைப்பிலிருந்து திரும்பியவரின் முகத்திலிருந்த களை மறைந்திருந்ததைக் கண்ட எம்.எஸ்.வி, கேட்டபோது எதையும் கூற மறுத்த கவிஞர், பாடலை எழுதிக் கொடுத்து விட்டுத் தனது வீடு திரும்பினாராம். பின்பு அவரது இல்லத்திற்குச் சென்ற எம்.எஸ்.விக்கு அப்போதுதான் தெரிந்ததாம், கவிஞரின் வீட்டின் மீது ஜப்தி கொடுத்த செய்திதான் அந்தத் தொலை பேசி அழைப்பில் அறிவிக்கப் பட்டதாம்.

அப்போது அவருக்குக் கூறப்பட்ட கதையின் காட்சிக்கு எழுதப்பட்ட பாடல் என்னவென்று எண்ணுகிறீர்கள்?

சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்
நான் சிரித்துக் கொண்டே அழுகின்றேன்
சிலர் அழுவார் சிலர் சிரிப்பார்
நான் அழுது கொண்டே சிரிக்கின்றேன்.

அப்போது அவருக்குத் தொலை பேசியில் கிடைத்த அந்தச் செய்தியையும் அவரது மனதிலிருந்து அந்த வேளையில் உதித்த பாடலையும் ஒப்பிட்டுப் பாருங்கள். அந்த அனுபவக் கவிஞனின் ஆற்றலுக்கு வேறு என்ன ஆதாரம் வேண்டும்?

_________________
RAJABTHEEN
Admin
Admin

Posts: 21758
Points: 29559
Join date: 09/10/2010
Age: 93
Location: அன்பு உள்ளங்களில்

Back to top Go down

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum