"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பூ பூப்பதும் உலகச் செய்திதான்
by அ.இராமநாதன் Yesterday at 11:20 pm

» சின்னச் சின்ன சிந்தனைகள்
by அ.இராமநாதன் Yesterday at 10:46 pm

» குடம் குடமாய் பாலாபிஷேகம் - எக்ஸ்பிரஸ் கதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 6:13 pm

» குழந்தையை தவறவிட்டவர் கையில் பத்திரமாக இருந்தது கைப்பேசி...!!
by அ.இராமநாதன் Yesterday at 6:08 pm

» உன்னோட புடவை பளிச்சுன்னு இருக்கே...?!
by அ.இராமநாதன் Yesterday at 5:35 pm

» உங்க பொண்ணுக்கு யோகா வராது, சமையல் கத்துக்கொடுங்க...!!
by அ.இராமநாதன் Yesterday at 5:32 pm

» மூலிகை உணவு
by அ.இராமநாதன் Yesterday at 5:15 pm

» அவசரம் - X பிரஸ் கதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 5:06 pm

» X பிரஸ் கதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 4:53 pm

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 3:30 pm

» ஆக்சிஸ் வங்கியில் ரூ.4,000 கோடி மோசடி - தனியார் நிறுவன இயக்குனர்கள் கைது
by அ.இராமநாதன் Yesterday at 3:09 pm

» நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,விற்கு எதிராக 3 நோட்டீஸ்
by அ.இராமநாதன் Yesterday at 2:59 pm

» படமும் செய்தியும்
by அ.இராமநாதன் Yesterday at 2:53 pm

» சுதந்திர போராட்ட கதையில் சிரஞ்சீவியுடன் நடிக்கும் நயன்தாரா
by அ.இராமநாதன் Yesterday at 10:04 am

» தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்
by அ.இராமநாதன் Yesterday at 10:00 am

» முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணி சாம்பியன்
by அ.இராமநாதன் Yesterday at 10:00 am

» தனுஷ்கோடி கடலில் ரூ.300 கோடியில் காற்றாலை
by அ.இராமநாதன் Yesterday at 9:43 am

» 20,21ல் திருமலையில் இலவச தரிசனம்
by அ.இராமநாதன் Yesterday at 9:41 am

» ரிசர்வ் வங்கி அதிகாரிகள் திருப்பதிக்கு போகலாம்: சிதம்பரம்
by அ.இராமநாதன் Yesterday at 9:39 am

» தனிமையில் வாடும் பொம்மை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இராமசெயம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Sun Mar 18, 2018 11:02 pm

» அமரர் கல்கி பற்றி அவரது மகள் ஆனந்தி,
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 9:34 pm

» இருமலை விரட்டலாம்
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 9:01 pm

» காதலரை மணந்த ஸ்ரேயா; மும்பையில் ரகசிய திருமணம்
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 8:58 pm

» அழகுக்காக ஆபரேஷன் செய்யக்கூடாது -ராணி முகர்ஜி
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 8:50 pm

» மராட்டியத்தில் நிரவ் மோடிக்கு சொந்தமான சூரிய மின்உற்பத்தி ஆலையை முடக்கியது அமலாக்கத்துறை
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 8:41 pm

» களவும் கற்று மற...!
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 3:33 pm

» மின் ஒளியாக அவள்...!
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 3:26 pm

» ஒரு படம், நுாறு படத்திற்கு சமம்!
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 12:30 pm

» கிராபிக்ஸ் பாம்பாக மாறும் ராய்லட்சுமி! -
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 12:30 pm

» அப்பாவுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி!
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 12:29 pm

» போதை விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பிரியா வாரியர்!
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 12:29 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 12:28 pm

» பிருதிவிராஜின் புதிய தோற்றம்
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 7:59 am

» மகள் சுருதிக்கு கமல்ஹாசன் அறிவுரை
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 7:56 am

» “பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 7:52 am

» நடிகர் விஷால், கமல்ஹாசனுடன் திடீர் சந்திப்பு
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 7:49 am

» 'மொபைல் மணி டிரான்ஸ்பர்' நிறுத்தம்
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 7:43 am

» ‛அதிநாயகே' என்ற வார்த்தையை திருத்த வேண்டும் : அரியானா அமைச்சர்
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 7:42 am

» சுத்தமாகிறது தாஜ் மஹால்!
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 7:40 am

» நீ இளவரசி மாதிரி இருக்கேன்னு சொல்லல? -
by அ.இராமநாதன் Sat Mar 17, 2018 11:16 pm

» வினாத்தாள் அவுட் ஆகியும் ஏன் உன்னால பாஸ் ஆக முடியலே?
by அ.இராமநாதன் Sat Mar 17, 2018 10:56 pm

» நிதானத்தைக் கடைப்பிடி,...
by அ.இராமநாதன் Sat Mar 17, 2018 10:37 pm

» விண்மீன்கள் - கவிதை
by அ.இராமநாதன் Sat Mar 17, 2018 5:03 pm

» நொடிக் கதைகள்
by அ.இராமநாதன் Sat Mar 17, 2018 4:59 pm

» மல்லையா, நிரவ் மோடி போல 31 பேர் இந்தியாவை விட்டு தப்பி ஓடியுள்ளனர் - மத்திய மந்திரி தகவல்
by அ.இராமநாதன் Sat Mar 17, 2018 8:47 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



உலகெங்கும் முட்டாள்கள் தினம்....!

Go down

உலகெங்கும் முட்டாள்கள் தினம்....!

Post by RAJABTHEEN on Mon Apr 04, 2011 8:09 pm

The first of April is the day we remember
what we are the other 364 days of the year. " - Mark Twain.


-என்று நம்மைப்பற்றி முன்பே உரத்துச்
சொல்லிவிட்டார்.

"முட்டாள்கள் தினம்" ஏப்ரல் 1ம் தேதி உலகமெல்லாம் முட்டாள்களாக்கும் முயற்சி
நடைபெறுகிற ஒரு முட்டாள் நாள் என்பது நாம் எல்லோரும் அறிந்த விஷயம்தான். இதை
யார் துவக்கி வைத்தது? இதற்கு ஒரு ஆரம்பம் இருந்தாக வேண்டுமே. இருந்தது
உண்மைதான்!

முட்டாள்கள் தோன்றிய வரிசை என்று பார்த்தால், பிரான்சு முதலாவதாக , இரண்டாவதாக
இங்கிலாந்து, மூன்றாவது மெக்ஸிக்கோ அடுத்து சுவீடன், இந்தியா என்று பட்டியல் ஒரு
ரவுண்ட் உலகம் சுற்றி வரும். காலம் தன் தேய்பிறை நாட்களில் உண்மையை முழுவதுமாக
மறைத்து விடவில்லை.

அன்றைய ரோமானிய நாட்காட்டியின்படி ஏப்ரல் 1ம்தேதி பொழுது புலர்ந்து பூபாளம்
பாடுகிற வேளை தான் வசந்தம் துவங்குகிற பொன்னாள்.இது கி.பி.154க்கு முன்பிருந்து
பொதுமக்களால் பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை.

புத்தாண்டுக் கொண்டாட்டங்களை மிகுந்த உற்சாகத்தோடு கொண்டாடியதற்கான வரலாற்றுக்
குறிப்புகள் காணப்படுகின்றன.



இந் நாளில் கடவுளுக்கு பலி செலுத்தும் பழக்கமும்
காணிக்கைகளைச் செலுத்தும் வழக்கத்தையும் கொண்டிருந்தனர். ஆடல், பாடல், நடனம்
என்று கலை நிகழ்ச்சிகளில் மூழ்கி தங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திக் கொண்டனர். இது
எதிர் வரும் புத்தாண்டைச் சிறப்பாக வரவேற்கும் வகையான நிகழ்வின் வெளிப்பாடாகக்
கருதப்பட்டது. மகிழ்ச்சி பொங்கும் வாழ்க்கை நிலவிட வழிபாடுகளை மேற்கொண்டனர்.

ஹார்வி என்னும் வரலாற்றாய்வாளர் தனது குறிப்பில், "பிரான்சு தேசத்தின் அரசன்
ஒன்பதாம் சார்லஸ் காலத்தில் மார்ச் மாதம் 25ம்தேதியிலிருந்து ஒருவார கால
புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டதாக குறிப்பிடுகிறார்.

திருவிழாவைப்போல் நடைபெறும் இந்தக் கொண்டாட்டங்களின் போது ஒருவருக்கொருவர்
பரிசுப் பொருள்களையும், அன்பளிப்புகளையும் வழங்கி தங்கள் அன்பை வெளிப்படுத்திக்
கொண்டதாக குறிப்பிடுகிறார். இந்த ஒரு வாரக் கொண்டாட்டத்தின் இறுதி நாளான ஏப்ரல்
ஒன்றாம் தேதி பெரு விருந்துடன் புத்தாண்டு விழா நிறைவெய்தியதாகக்
குறிப்பிட்டுள்ளார்.

16ம் நூற்றாண்டில் பிரான்சு தேசத்தில் துவங்கியது இந்தப் பழக்கம். 1500களில்
ஆண்டுத் துவக்க நாளாக ஏப்ரல் 1ம் தேதியையே கொண்டிருந்தனர். 1562ம் ஆண்டில் போப்
கிரகோரி புதிய ஆண்டுத் துவக்கத்தை நடைமுறைப் படுத்தும்படி அறிவித்தார்.

_________________


                 
avatar
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 95
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

Re: உலகெங்கும் முட்டாள்கள் தினம்....!

Post by RAJABTHEEN on Mon Apr 04, 2011 8:10 pm

ஆண்டுத் துவக்க நாளாக சனவரி 1ம்தேதியை அறிமுகம் செய்து வைத்தார். இனி மேல்
பிரான்சு தேசம் முழுமையும் இந்த நாட்காட்டிதான் என்று ஊர்தோறும் அறிவிக்கப்படது.
இந்த மாற்றத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் அல்லது போப்பின் அறிவிப்பை நம்பாதவர்கள்
ஏப்ரல் 1ம்தேதியையே புத்தாண்டுப் பிறப்பாகக் கொண்டாடினர்.

ஏப்ரல் 1ம்தேதியைக் கொண்டாடியவர்களை கேலியும் கிண்டலும் செய்ததோடு அவர்களை
நூதனமாக ஏமாற்றி "ஏப்ரல் முட்டாள்கள்" (April Fool) என்றழைக்கவும் செய்தனர்.
நள்ளிரவு தாண்டியும் நாட்டிய நடனங்களில் ஈடுபட்டு மிகுந்த மகிழ்ச்சிகரமாக
இருந்திருக்கின்றனர்.

ரோமாபுரி... ரோமாபுரியில் கிறிஸ்தவர்கள் அதிகாரத்திற்கு வந்தபோது, நடைமுறைகளை
மாற்றினார்கள். தற்போதுள்ள ஈஸ்ட்டர் பண்டிகையினையும் மாற்றி அறிவித்தார்கள்.
பழமையான கொண்டாட்டங்களை மாற்றியதோடு அவற்றில் ஒரு சிலவற்றை வேடிக்கை வினோத
கொண்டாட்டங்களுக்குரிய நாளாக மாற்றினர். இந்த மாற்றங்களில் நம்பிக்கை
இல்லாமலிருந்த இவர்களை கேலியும் கிண்டலும் செய்து விளையாட்டாக முட்டாளாக்கி
ஏமாற்றும் போக்கில் ஈடுபட்டனர். இதுவே நாம் இன்றைக்கு வேடிக்கையாய்
முட்டாள்களாக்கி மகிழ்கிற நாளாக தொடர்ந்திடுகிறது எனலாம்.

_________________


                 
avatar
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 95
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

Re: உலகெங்கும் முட்டாள்கள் தினம்....!

Post by RAJABTHEEN on Mon Apr 04, 2011 8:10 pm

சனவரி மாதம் 1ம் தேதியை புத்தாண்டாக ஏற்றுக் கொள்ள மறுத்தவர்கள் அல்லது
மறந்தவர்களுக்கு முட்டாள்தனமான பரிசுகளை அனுப்பினர். பெரிய பரிசுக் கூடைகள்
போன்று வடிவமைத்து உள்ளே குதிரை முடி, பழைய குப்பை என்று நிரப்பிக் கொடுத்து
ஏமாற்றுதல் போன்ற ஏமாற்று வேலைகளைச் செய்து ஏமாற வைத்தனர். இதை நம்பும்படியான
ஆனால் நகைக்கும்படியான செயலாக செய்து மகிழ்ந்தனர்.

ஏப்ரல் முதல் நாளை, "Poission d'avril " என்று அழைத்துள்ளனர். இத்தகைய
கேலிக் கூத்துக்கள் சுற்றிச் சுழன்று பிரான்சிலிருந்து இங்கிலாந்துக்கும்
அங்கிருந்து அமெரிக்காவுக்கும் ஏப்ரல் ·பூல் விரிந்து பரவி இருக்கிறது. இது
குறித்து சிகாகோவில் உள்ள இல்லிநாய்ஸ் பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியர்
ஸ்டீவன் ·பேன்னிங் ஐரோப்பாவில் எப்படி எல்லாம் நடந்தது என்று விலாவாரியாகக்
குறிப்பிட்டுள்ளார். கிரகோரியன் காலண்டரை ஏற்றுக் கொண்ட முதல் நாடாக பிரான்சு
இருந்தாலும் இத்தகைய கேளிக்கைகளின் ஆணிவேரைக் கண்டுபிடிக்கப் போதுமான ஆதாரக்
குறிப்புகள் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்."

நெப்போலியன் I , ஆஸ்திரியாவைச் சேர்ந்த மேரி லூயிஸை 1810-ல் திருமணம்
செய்துகொண்டார். அந்த மாதம், நாள் ஏப்ரல் 1 என்பதால் மணமகளை கேலி செய்து
இருக்கின்றனர். நெப்போலியன் உண்மையாகத் திருமணம் செய்யவில்லை. உன்னை
முட்டாளாக்கவே திருமணம் செய்திருக்கிறார் என்று எள்ளி நகையாடியதாகக்
கூறப்படுகிறது.


Last edited by RAJABDEEN on Mon Apr 04, 2011 8:11 pm; edited 1 time in total

_________________


                 
avatar
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 95
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

Re: உலகெங்கும் முட்டாள்கள் தினம்....!

Post by RAJABTHEEN on Mon Apr 04, 2011 8:10 pm

ஸ்காட்லாந்தில்

"April Fool's Day"யை, "April Gawk" என்று கடைப்பிடித்ததாக பேராசிரியர் ஸ்டீவன் தெரிவித்துள்ளார்.

அதாவது ஏப்ரல் 1ம் தேதி வினோதமாக உடையுடுத்தி ரெண்டுங்கெட்டானாக நடந்து கொண்டு ஸ்காட்டிஷ் மக்கள் அந்த நாளை நகர்த்தியதாக மேலும் தெரிவிக்கிறார். ஒரு பொய்யை உண்மை என்று நம்ப வைப்பது, ஒரு கடிதத்தில் அவசரம் என்று மேலே எழுதி உள்ளே முட்டாள், "இன்று ஏப்ரல் ·பூல் தினம் தெரியுமா? அது வேறு யாருமில்லை நீதான்," இப்படி எழுதி அனுப்புவதை வழக்கமாகச் செய்திருக்கின்றனர்.

"ஏப்ரல் மீன்" பிரெஞ்சுக் குழந்தைகள் கூட காகிதத்தில் மீன் போன்று செய்து தனது சினேகிதர்களின் முதுகில் ஒட்டி அனுப்பிக் கேலி செய்திருக்கின்றனர். இப்படி முதுகில் மீனோடு திரிகிற குழந்தைகளைப் பார்க்கும் குழந்தைகள் "ஏப்ரல் மீன்" என்று அழைத்துக் கேலி செய்திருந்திருக்கின்றனர்.

அமெரிக்காவில்...

அமெரிக்காவில் "April Fool's Day" அல்லது "All Fool's Day" என்று அழைக்கிறார்கள். சாதாரணமாக ஒரு நண்பர் இன்னொரு நண்பரை திடீர் என்று, "ஒன்னோட ஷ்லேஸ் அவிழ்ந்து தொங்குது பார்" என்றோ முதுகுப் பக்கம் கோட்டுல ஏதோ ஒரு கறை அசிங்கமா இருக்கு, மொதல்ல அதைக் கழட்டு என்று சொல்லி ஏமாற்றுவார்கள். 19ம் நூற்றாண்டில் ஆசிரியர்களே மாணவர்களிடம் அங்க மேல பாருங்க பொம்மை கூஸ் பறக்குதுன்னு சொல்வாங்களாம். (நம்ம ஊர்ல வெள்ளைக் காக்கா பறக்குதுன்னு சொல்வோமே..!) மாணவர்கள் சக மாணவர்களைப் பார்த்து இன்னைக்கு ஸ்கூல் லீவு தெரியுமா? அப்படின்னு சொல்லுவார்கள். எது எப்படியோ அவர்கள் ஏமாந்தவுடன் ஹை..... எப்ரல் ·பூல் என்று சொல்லி குதூகலித்துக் கொள்வது என்ற அளவில் தான்.

ஏமாற்றலுக்கு ஏமாற்றல் என்றும் நடப்பதுண்டு. சர்க்கரைச்(சீனி) சாடியில் உப்பைப் போட்டு ஏமாற்றுதல், மணிப் பர்ஸில் ஒரே ஒரு பென்னியை வைத்து ஏமாந்தாயா முட்டாள் என்று எழுதி நண்பர்களை ஏமாற்றுதல் சகஜமான ஒன்று. கல்லூரி மாணவர்கள் தங்கள் விடுதிகளில் ஒரு மணி நேரத்தை பின்னோக்கி வைத்து குறிப்பிட்ட வகுப்புகளுக்குப் போக விடாமல் செய்வது; அல்லது வரலாறுக்குப் பதிலாக உயிரியல் வகுப்புக்குச் செல்ல வைப்பது; ஆனால் யாருக்கும் தீங்கிழைப்பது இல்லை; ஏமாற்றலுக்குப் பழி வாங்குதல் என்று இன்று வரை நடந்தது கிடையாது என்றே சொல்ல வேண்டும். ஆங்காங்கே முட்டாள்தனமான ஜோக்குகளைச் சொல்லி விலா எலும்பு நோகச் சிரிக்க வைத்தல் போன்றெல்லாம் நடக்கும்."

மெக்சிக்கோ...

மெக்சிக்கோவில் பாரம்பரியமான முட்டாள்கள் தினத்தைக் கொண்டாடினாலும் இங்கு அது வேறு நாளில் வேறு காரணங்களுக்காகக் கொண்டாடப்படுகிறது. "El Dia los Inocents " என்று டிசம்பர் 28ம் தேதி பச்சிளம் பாலகர்களுக்காகக் கொண்டாடப்படுகிறது. அதிர்ஷ்டமற்ற நாட்கள் என்று முட்டாள்களாக்கப் பட்டவர்கள் கருதுகிற சூழலை பத்திரிக்கைகள், வானொலி, தொலைக் காட்சிகள் வரிந்து கட்டிக் கொண்டு செய்திகளை வழங்குகிறது.

_________________


                 
avatar
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 95
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

Re: உலகெங்கும் முட்டாள்கள் தினம்....!

Post by RAJABTHEEN on Mon Apr 04, 2011 8:10 pm

திரைப்படம்...

1986-ல் ·ப்ரெட் வால்டன் இயக்கிய, "ஏப்ரல் பூல்ஸ் டே" திரைப்படம் மிகப் பிரபல்யம் ஆனது. டெபோரா ·போர்மேன், ஜேய் பேக்கர், டெபோரா குட்ரிச் நடித்திருந்தனர். பாரமவுண்ட் பிக்சர்ஸ் நிறுவனத்தார் பிரம்மாண்டமாக தயாரித்திருந்த இப்படம் ஒளி நாடாக்களிலும் வீர நடை போட்டு வந்ததை குறிப்பாகச் சொல்லலாம்.

_________________


                 
avatar
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 95
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

Re: உலகெங்கும் முட்டாள்கள் தினம்....!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Mon Apr 04, 2011 8:13 pm

தகவலுக்கு நன்றி தல

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: உலகெங்கும் முட்டாள்கள் தினம்....!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum