"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வெற்றிப் பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Yesterday at 11:46 pm

» ரசித்ததில் பிடித்தது - (பல்சுவை) தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 11:27 pm

» சிரிப்போ சிரிப்பு...!!
by அ.இராமநாதன் Yesterday at 11:23 pm

» ஒன் மேன் ஷோ
by அ.இராமநாதன் Yesterday at 11:22 pm

» உழைப்பவர்களின் கையில்தான் உலகம் ...
by அ.இராமநாதன் Yesterday at 11:06 pm

» மிலிட்டரி சரக்க ஓசியில வாங்கஃத்தான்...!!
by அ.இராமநாதன் Yesterday at 3:05 pm

» இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைக்கு பாரம்பரிய அந்தஸ்து
by அ.இராமநாதன் Yesterday at 2:55 pm

» பென்குவின் பறவைகள்
by அ.இராமநாதன் Yesterday at 2:50 pm

» உளுந்து வடையைத் தின்னுட்டு ’அதிரசம்’ நல்லா இருக்கு’ன்னு சொல்றாரே...!!
by அ.இராமநாதன் Yesterday at 2:23 pm

» ஒண்ணா சரக்கடிக்க வச்சுட்டார்....!!
by அ.இராமநாதன் Yesterday at 11:51 am

» மாற்றம் என்பது...
by அ.இராமநாதன் Yesterday at 11:35 am

» வீட்டில் கழிவறை இல்லாவிட்டால் சம்பளம் 'கட்'
by அ.இராமநாதன் Yesterday at 8:33 am

» நாங்க இப்படிதானுங்க!: ஜாலியான அலியா!
by அ.இராமநாதன் Yesterday at 8:28 am

» எனது அரசியல் வாரிசு யார்?: மாயாவதி பரபரப்பு பேட்டி
by அ.இராமநாதன் Yesterday at 8:23 am

» 'வவ்வால் மூலம் 'நிபா' பரவவில்லை'
by அ.இராமநாதன் Yesterday at 8:21 am

» பெங்களூரு தவிர மாநிலம் முழுவதும் நாளை 'பந்த்' : பா.ஜ., தலைவர் எடியூரப்பா திட்டவட்டம்
by அ.இராமநாதன் Yesterday at 8:20 am

» காலக்கூத்து - சினிமா விமரிசனம்
by அ.இராமநாதன் Sat May 26, 2018 11:37 pm

» ஆண்மகனே புரிந்துகொள் - கவிதை
by அ.இராமநாதன் Sat May 26, 2018 11:17 pm

» ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியானது ஏன்? எப்படி? சசிகலாவின் வழக்குரைஞர் விளக்கம்
by அ.இராமநாதன் Sat May 26, 2018 11:04 pm

» அடடே அப்படியா...
by அ.இராமநாதன் Sat May 26, 2018 4:51 pm

» மாறுவேடப் போட்டி
by அ.இராமநாதன் Sat May 26, 2018 4:48 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sat May 26, 2018 4:46 pm

» வாத்துக் குஞ்சுகளுக்கு தாயாகிய நாய்
by அ.இராமநாதன் Sat May 26, 2018 4:38 pm

» பாம்பன் பாலத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
by அ.இராமநாதன் Sat May 26, 2018 4:34 pm

» போலீசாருக்கு ஐகோர்ட் உத்தரவு Added : மே 26, 2018 14:41
by அ.இராமநாதன் Sat May 26, 2018 4:33 pm

» கம்ப்யூட்டரையும் தொலைபேசியையும் இணைக்கும் கருவி....(பொது அறிவு தகவல்)
by அ.இராமநாதன் Sat May 26, 2018 1:38 pm

» தூரப்பார்வை உடைய சிறப்பான பூச்சி ....(பொது அறிவு தகவல்)
by அ.இராமநாதன் Sat May 26, 2018 1:30 pm

» ஜூன் 30 முதல் ஒரே இணையதளத்தில் மொபைல் கட்டண விவரம் வெளியிட டிராய் உத்தரவு
by அ.இராமநாதன் Sat May 26, 2018 12:10 pm

» ‘விசுவாசம்’ அப்டேட்: அஜித்தின் தாய்மாமனாக நடிக்கிறார் தம்பி ராமையா
by அ.இராமநாதன் Sat May 26, 2018 12:01 pm

» சினிமா -முதல் பார்வை: செம
by அ.இராமநாதன் Sat May 26, 2018 11:58 am

» மீண்டும் பா.ஜ., ஆட்சி: கருத்துகணிப்பில் தகவல்
by அ.இராமநாதன் Sat May 26, 2018 8:01 am

» புறாக்களின் பாலின சமத்துவம்
by அ.இராமநாதன் Sat May 26, 2018 7:57 am

» குதிரை பேர வரலாறு
by அ.இராமநாதன் Sat May 26, 2018 7:56 am

» தமிழகத்தில் 'நிபா' பாதிப்பில்லை!
by அ.இராமநாதன் Sat May 26, 2018 7:53 am

» சாதாரண வார்டுக்கு அருண் ஜெட்லி மாற்றம்
by அ.இராமநாதன் Sat May 26, 2018 7:51 am

» இந்திரா கவிதைகள்
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:59 pm

» ஒரு பெண் எப்போது அழகாக இருக்கிறாள் - பா.விஜய்
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:56 pm

» பட்ட காலிலேயே படும்....
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:49 pm

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:46 pm

» பழத்துக்குள் மாட்டிக்கொண்ட புழு....
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:41 pm

» டயாபடீஸ் பேஷண்டுகளுக்கென பிரத்யேக டிஸைனர் செருப்புகள் அறிமுகம்!
by அ.இராமநாதன் Fri May 25, 2018 7:22 pm

» மருந்து, மாத்திரைகள் இன்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க இயற்கை வழிமுறை!
by அ.இராமநாதன் Fri May 25, 2018 7:21 pm

» எளிய மருத்துவக் குறிப்புகள்
by அ.இராமநாதன் Fri May 25, 2018 7:19 pm

» ஜி.வி. பிரகாஷ் ஜோடியாக நடிக்கும் அபர்னதி!
by அ.இராமநாதன் Fri May 25, 2018 7:10 pm

» திருச்செந்தூர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 28-ந்தேதி நடக்கிறது
by அ.இராமநாதன் Fri May 25, 2018 2:27 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines இப்போதாவது ஒளிர்ந்ததே...

Go down

இப்போதாவது ஒளிர்ந்ததே...

Post by kingmaker on Fri Apr 08, 2011 2:59 pm


போட்டி போட்டுக்கொண்டு தி.மு.க. அணியும் அ.தி.மு.க. அணியும் தங்களது தேர்தல் அறிக்கைகளில் இலவசங்களை வாரி வழங்குவோம் என வாக்குறுதிகளால் மக்களை மயக்கும் போக்கு கண்டனத்துக்குரியது என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.அதே நேரத்தில், அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் காணப்பட்டிருக்கும் ஒரு சிறப்பம்சத்தையும் குறிப்பிட்டிருந்தோம்.

சூரியசக்தியிலிருந்து மின்சாரம் என்கிற முயற்சிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம். ஜப்பானை சமீபத்தில் தாக்கிய ஆழிப்பேரலையும், அதன் விளைவால் கடலோரமாக அமைந்திருந்த அணுமின் நிலையங்களின் அணு உலைகள் வெடித்துச் சிதறி பேராபத்து காற்றில் கலந்திருப்பதும் உலகுக்கே விடுக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கை.

ஜப்பான் மட்டுமல்ல, ஜப்பானைச் சுற்றியுள்ள உலக நாடுகளும் பயத்தில் உறைந்து போயிருக்கின்றன. கடல்நீரில் அணுக் கதிர்வீச்சு கலந்திருக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் பயப்படுகிறார்கள். வெடித்துச்சிதறிய புகுஷிமா அணு உலையை ஒட்டிய கடற்கரைப் பகுதிகளில், பசிபிக் கடல்நீரில் அயோடின் 131 என்கிற அணுக்கதிர்வீச்சின் அளவு, அனுமதிக்கப்பட்ட அளவைவிட 1,250 மடங்கு அதிகம் என்று கூறப்படுகிறது.

குடிநீரில் கதிரியக்கப் பாதிப்பு இருக்குமோ என்கிற அச்சம். காற்றில் கலந்திருக்கும் கதிர்வீச்சு அபாயத்திலிருந்து காப்பாற்றிக்கொள்ள முகத்தில் துணியைக் கட்டிப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நிர்பந்தம். இதுதான் ஜப்பானின் இன்றைய நிலைமை. இதற்குப் பிறகும் நாம் அணுமின் சக்தியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரித்து சொகுசு வாழ்க்கை வாழத்தான் வேண்டும் என்றால் அதைவிடப் பைத்தியக்காரத்தனம் நிச்சயமாக இருக்க முடியாது.

நமது தேவைகளைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு இந்தியாவில் எண்ணெய்வளம் கிடையாது. நமது தேவைக்கெல்லாம் பெட்ரோலிய எண்ணெயை இறக்குமதி செய்வதற்கு நாமொன்றும் அளவுக்கு அதிகமான அந்நியச் செலாவணி உள்ள நாடாக இல்லை. இந்த நிலையில், நமக்கு இருக்கும் வழிகள் இரண்டுதான். ஒன்று, முடிந்தவரை அநாவசியமாக எரிபொருளை வீணாக்கக்கூடாது என்கிற சிக்கன உணர்வை மக்களுக்கு ஊட்டுவது. இரண்டாவது, மரபுசாரா எரிசக்தியின் மூலம் தனிப்பட்ட குடும்பங்களின் மின்சாரத் தேவைகளை எதிர்கொள்வது.

தேவைக்கு அதிகமாக மோட்டார் வாகன உற்பத்தியை அரசே ஊக்குவிக்கிறது. வசதிகள் நிறைந்த பொதுப் போக்குவரத்தைக் குறைந்த செலவில் இயக்கி, தனியார் வாகனங்களின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவது என்கிற அடிப்படைக் கடமையைச் செய்யக்கூட அரசு தயங்குகிறது. ஆட்சியில் இருப்பவர்களும், அரசியல் கட்சிகளும் மின்சார விரயத்தில் ஈடுபடுவதைத் தவிர்த்து மக்களுக்கு வழிகாட்டுவதற்குப் பதிலாக, தேவைக்கதிகமான கார்களில் பவனி வருவதும், அளவுக்கதிகமான மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்டப் பேரணி நடத்துவதுமாகப் பொறுப்பற்ற செயல்களில் ஈடுபடாமல் பொதுமக்களுக்கு மின்சாரச் சிக்கனத்தின் இன்றியமையாமையைப் புரிய வைக்க வேண்டும்.

கிராமங்களில் மாடு வைத்திருக்கும் விவசாயிகளின் வீட்டிலெல்லாம் சாணஎரிவாயு தயாரிப்பது உறுதிப்படுத்தப்பட்டாலே, பல லட்சம் குடும்பங்களின் எரிவாயுத் தேவை தீர்க்கப்படும். அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதுபோல, மானிய விலையில் சூரியசக்தி மின்சாரம் ஒவ்வொரு வீட்டின் தேவையையும் பூர்த்தி செய்யுமானால், மிகப்பெரிய அளவில் நமது மின்தேவை பூர்த்தி செய்யப்பட்டு விடும்.

இந்தியாவின் நிலப்பரப்பில் 70% பகுதிகள், குறிப்பாகத் தென்னிந்தியா, ஆண்டின் பெரும்பான்மையான நாள்களில் சூரியசக்தி மின்சாரம் அதிக அளவில் தயாரிக்க ஏதுவான பகுதி என்று கூறப்படுகிறது. முனைப்பான அரசுத் திட்டங்களும், தகுந்த மானியமும், விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டால் 2020-க்குள் இந்தியாவின் மின்தேவையில் 20% சூரியசக்தி மின்சாரத்தின் மூலம் பெற முடியும் என்கிறது உலக வங்கி. இதற்காகப் பல்லாயிரம் கோடி ரூபாய் கடனாக வழங்கவும் உலக வங்கி தயாராக இருக்கிறது.

உத்தரப் பிரதேசம், பிகார் மாநிலங்களில் மின்வெட்டு அவதியால் மக்கள் சலித்துக் கொண்ட காலம் இப்போது மலையேறி வருகிறது. நகர்ப்புற மக்கள்தான் மின்வெட்டு என்று கவலைப்படுகிறார்களே தவிர, கிராமப்புறங்களில் அந்தப் பிரச்னை அதிகமாக இல்லை. நமது ஊரில் கேட்பதுபோல, ரொக்கமும், நகையும் எல்லாம் அங்கே வரதட்சிணையாகக் கேட்கப்படுவது கிடையாது. தண்ணீர் பாய்ச்ச மோட்டார்கள், தொலைக்காட்சிப் பெட்டி, மின்விசிறி, மிக்சி, கிரைண்டர் இவற்றுடன் சூரியசக்தி மின்சாரத்துக்கான கருவியும் எல்லா சீர்வரிசைப் பட்டியலிலும் இடம்பெற்று விடுகிறது.

மின்சார வசதியே இல்லாத 45% கிராமப்புறப் பகுதிகளில், நம் அளவுக்குப் பொருளாதார வளர்ச்சியோ, கல்வியறிவோ இல்லாத உத்தரப் பிரதேசமும், பிகாரும் சூரியசக்தி மின்சாரத்தின் மூலம் தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்கின்றன. குஜராத்தில் 1,500 ஹெக்டேர் பரப்பில் சூரியசக்தியில் 2,000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் முயற்சி தொடங்கப்பட்டிருக்கிறது. வட மாநிலங்களில் பல பகுதிகளில், நீர்பாய்ச்சுவதற்கான மோட்டார்களை இயக்க விவசாயிகள் சூரியசக்தி மூலம் மின்சாரம் தயாரித்துக் கொள்கிறார்கள். நாம்தான் மிகவும் பின்தங்கி விட்டிருக்கிறோம்.

தங்குதடையில்லாமல் மின்சாரம் வழங்குவதன் மூலம் குழந்தைகள் படிப்பதற்கு ஊக்கம் கிடைப்பதாகவும், குறைந்தபட்சம் பள்ளி இறுதித்தேர்வுவரை படிக்கத் தடையில்லாத மின்சாரம் ஒரு தூண்டுகோல் என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் வளர்ச்சி நிதி நடத்திய ஆய்வு அறிக்கை கூறுகிறது.

இப்போதாவது சூரியசக்தி மின்சாரம் தேர்தல் வாக்குறுதியாக வெளிச்சம் போடப்பட்டிருக்கிறதே, அதுவரை மகிழ்ச்சி!
avatar
kingmaker
மல்லிகை
மல்லிகை

Posts : 81
Points : 167
Join date : 06/04/2011

Back to top Go down

Re: இப்போதாவது ஒளிர்ந்ததே...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Fri Apr 08, 2011 3:01 pm

உங்கள் சமூக சிந்தனை புரிகிறது.. இனிவரும் தலைமுறையினராவது நமது நாட்டை காப்பாற்றுவார்களா?

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56826
Points : 69582
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: இப்போதாவது ஒளிர்ந்ததே...

Post by சிசு on Fri Apr 08, 2011 3:02 pm

தேர்தல் வாக்குறுதி - காற்றாலை....
avatar
சிசு
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City

Back to top Go down

Re: இப்போதாவது ஒளிர்ந்ததே...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum