"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பெருமழையும் சிறுதூறலும் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 11:28 pm

» டெஸ்ட் எடுக்காமலேயே எனக்கு கொழுப்பு அதிகம்னு சொல்றீங்களே, எப்படி?
by அ.இராமநாதன் Yesterday at 11:22 pm

» எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்கிறார்களே, என்ன கூட்டம் நடக்குது?
by அ.இராமநாதன் Yesterday at 10:29 pm

» கருகிய ரோஜாவும் கடைசிக் கேள்விகளும் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 10:14 pm

» எளிய பயிற்சி முறை என்பது முத்ரா பயிற்சிதாங்க....
by அ.இராமநாதன் Yesterday at 9:53 pm

» உடல் நலம் தரும் விரல் முத்திரைகள்
by அ.இராமநாதன் Yesterday at 9:50 pm

» உளியின் யுத்தம்! நூல் ஆசிரியர் : கவிஞர் பல்லவி குமார் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 8:50 pm

» உலக தண்ணீர் தினம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 8:48 pm

» விஸ்க்கியா, பிராந்தியா...எது வேணும்னு தெளிவா சொல்லித் தொலைங்க....!!
by அ.இராமநாதன் Yesterday at 5:39 pm

» டெம்பர் தமிழ் ரீமேக் படத்தில் விஷாலுக்கு ஜோடியாகும் நயன்தாரா பட நடிகை
by அ.இராமநாதன் Yesterday at 12:49 pm

» மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகிறார் அஞ்சலி?
by அ.இராமநாதன் Yesterday at 11:14 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 7:59 am

» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Wed Mar 21, 2018 10:59 pm

» நெருப்பின் தாகம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Mar 20, 2018 9:06 pm

» நம் சமையல் அறையில்...
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 5:42 pm

» இந்தியாவில் மின்சார கார்களை களமிறக்கும் மாருதி சுஸுகி
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:51 am

» ஸ்ரீதேவி வாழ்க்கை சினிமா படமாகிறது வித்யாபாலன் நடிக்க பேச்சுவார்த்தை
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:38 am

» பிளாக் பேந்தர் படம் ரூ.7 ஆயிரம் கோடி வசூல் சாதனை
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:35 am

» சசிகலா கணவர் நடராஜன் காலமானார்
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:33 am

» சசிகலா புஷ்பாவுக்கு மீண்டும் திருமணம்!
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:32 am

» இன்று பத்ம விருதுகளை வழங்குகிறார் ஜனாதிபதி
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:31 am

» 2ஜி வழக்கில் அமலாக்கத்துறை அப்பீல்: ராசா, கனிமொழிக்கு சிக்கல் வருகுது
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:30 am

» ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:29 am

» அரசு கஜானாவுக்கு வரவேண்டிய ரூ.1,000 கோடி எங்கே போகிறது? சட்டசபையில் தி.மு.க. காட்டமான கேள்வி
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:28 am

» பூ பூப்பதும் உலகச் செய்திதான்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 11:20 pm

» சின்னச் சின்ன சிந்தனைகள்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 10:46 pm

» குடம் குடமாய் பாலாபிஷேகம் - எக்ஸ்பிரஸ் கதைகள்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 6:13 pm

» குழந்தையை தவறவிட்டவர் கையில் பத்திரமாக இருந்தது கைப்பேசி...!!
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 6:08 pm

» உன்னோட புடவை பளிச்சுன்னு இருக்கே...?!
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 5:35 pm

» உங்க பொண்ணுக்கு யோகா வராது, சமையல் கத்துக்கொடுங்க...!!
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 5:32 pm

» மூலிகை உணவு
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 5:15 pm

» அவசரம் - X பிரஸ் கதைகள்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 5:06 pm

» X பிரஸ் கதைகள்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 4:53 pm

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 3:30 pm

» ஆக்சிஸ் வங்கியில் ரூ.4,000 கோடி மோசடி - தனியார் நிறுவன இயக்குனர்கள் கைது
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 3:09 pm

» நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,விற்கு எதிராக 3 நோட்டீஸ்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 2:59 pm

» படமும் செய்தியும்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 2:53 pm

» சுதந்திர போராட்ட கதையில் சிரஞ்சீவியுடன் நடிக்கும் நயன்தாரா
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 10:04 am

» தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 10:00 am

» முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணி சாம்பியன்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 10:00 am

» தனுஷ்கோடி கடலில் ரூ.300 கோடியில் காற்றாலை
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 9:43 am

» 20,21ல் திருமலையில் இலவச தரிசனம்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 9:41 am

» ரிசர்வ் வங்கி அதிகாரிகள் திருப்பதிக்கு போகலாம்: சிதம்பரம்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 9:39 am

» தனிமையில் வாடும் பொம்மை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இராமசெயம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Sun Mar 18, 2018 11:02 pm

» அமரர் கல்கி பற்றி அவரது மகள் ஆனந்தி,
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 9:34 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines மலரினும் மெல்லிய மனம்

Go down

மலரினும் மெல்லிய மனம்

Post by sagampari on Sat Apr 09, 2011 4:02 pm


ஒரே விசயம் மூளைக்குள் உட்கார்ந்து கொண்டு ஆட்டி வைக்கிறது. அந்த சமயத்தில் வேறு எதை பற்றியும் சிந்திக்க முடியாது. வெறுமையின் உச்சியில் நிற்போம். எந்த வேலை செய்தாலும் முழு ஈடுபாடு இருக்காது. எதையாவது செய்து மனதிலிருந்து அந்த நினைவை வெளியேற்ற நினைப்போம். சந்தோசம், துக்கம், கோபம் போன்றவை கண்ணீர் விடுதலின் மூலமும், மற்றவரிடம் பகிர்ந்து கொள்ளுதலிலும் குறைந்துவிடும். நான் சொல்வது வேறுவகை உணர்வுகள். இவற்றை பகிர்ந்து கொண்டாலும் இதெல்லாம் ஒரு பிரச்சினையா என்று ஒரு பார்வைதான் கிட்டும். உணர்வுகளை வெளிக்காட்ட முடியாத சூழ்நிலையில் கைகளால் முகத்தை மூடிக்கொண்டு இருப்பது ஒரு வடிகாலாக இருக்கும் - (ஒரு வேளை இது பெண்மை உணர்வாகக்கூட இருக்கலாம்). . நம்மேல் நமக்கு நம்பிக்கை குறையும் நிலை இது.

உதாரணமாக, யாருக்காவது நல்லது செய்வதாக நினைத்துக் கொண்டு மொக்கையாகி நிற்பது, சில செயல்களை செய்துவிட்டு embarrassing ஆக உணர்வது, அசடு வழிவது, எதிர்த்துப் பேச முடியாத சிறிய நிலையில் உள்ளவர்களுக்கு நியாயம் செய்ய முடியாமல் இருப்பது, சொல்லால் செயலால் அன்றி நினைவுகளால் தவறிழைப்பது - இது மிக முக்கியம் சம்பந்தப் பட்டவர்கள் நம்மை உயர்வாக எண்ணுகையில் நம் மனது நம்மை குறுக வைக்கும். இந்த எண்ணம் நம்மை குழப்பத்தில் ஆழ்த்தும். குறுகிய நாட்களில் மறைந்துவிடும். அதற்குள், நம்மை மேற்சொன்ன விதத்தில் ஆட்டி வைக்கும். ஆரம்பத்தில் அடிக்கடி மனம் பேசினாலும், நாளைடைவில் பழகிபோய் ஊமையாகிவிடும். அது மிக ஆபத்தானது. ஏனெனில் ஆழ்மனதில் படிந்துவிடும். சமயம் பார்த்து நம்மை ஆட்டி வைகும்.

மின்னழுத்த நிலையில் சர்ஜ் , ஸ்பைக் என்று இரு நிலை உள்ளது. சர்ஜ் 230v லிருந்து 400v வரை செல்லும் , அதிக நேரம் நீடித்து நிற்கும். இதனால் எலெக்ட்ரானிக் உபகரணங்கள் பாழாகும். ஒரு துயர சம்பவம் நம் மனதை அதன் ஆளுமையில் வைத்திருப்பது போல். ஸ்பைக் என்பது 230v லிருந்து 2000vவரைக்கூட செல்லும்.ஆனால் நொடிக்கும் குறைவான நேரம்தான் இருக்கும். இதனால் எலெக்ட்ரானிக் உபகரணங்கள் தீப்பிடிக்கும் அபாயம் கூட உண்டு. நான் சொன்ன உணர்வுகள் இப்படித்தான், சட்டென அதிகபட்ச அதிர்வுகளை உண்டாக்கும்.

ஆழ்கடலில் மிதக்கும் பனிப்பாறைகள் வெளியே சிறிய ஐஸ்கட்டிகளாகத் தெரியும். ஆனால் ஒரு கப்பலையே உடைக்கும் பலம் கொண்டதாக இருக்கும். இந்த உணர்வுகளும் அப்படித்தான், நிறைய சமயத்தில் பழைய நினைவுகளை நினைவூட்டி தயங்க வைக்கும். அந்த தயக்கம் தோல்விக்கு வழி வகுக்கும். இதை எப்படி கடப்பது?


எதனால் இது போன்ற சூழ்நிலையில் சிக்கிக்கொள்கிறோம்? இது போன்ற உணர்வுகள் உங்களுக்கு ஏற்பட்டிருந்ததாக உணர்ந்தால், நீங்கள் உதவும் குணமும், தலைமைப்பண்புகளும் உடைய நல்ல மனிதர். அனைவரையும் நம்மைப்போலவே நினைத்து விடுவோம். முன்பின் தெரியாதவருக்குக்கூட வெகு இயல்பாக உதவி செய்ய முற்படுவோம். அப்படி எல்லோரிடமும் நட்புணர்வுடன் பழகும் சூழலில் , ஒன்றிரண்டு பேர், நம்மை புரிந்து கொள்ளாமல் பேசுவது, நடந்து கொள்வது அந்த இடத்தில் நம்மை அன்னியப்படுத்திவிடும். அதுதான் கூசவும் வைக்கும். தெரிந்தவர்கள் முகத்தை பார்க்கக்கூட தடுத்துவிடும். ஒரு வேகமான இரத்த ஓட்டம் காலிலிருந்து தலை வரை பாயும்.

அது போன்ற ஒரு தருணத்தில் சிவந்து போன முகத்துடன், உணர்ச்சியை துடைத்த பார்வை பார்த்த என் சக ஆசிரியையை நான் பார்த்ததுண்டு. யாருக்கும் தெரியாமல் , சிறிதாக புன்னகைத்து தோளில் நான் கை வைத்தபோது அவர் கொஞ்சம் சரியாகிவிட்டதாக உணர்ந்தாராம். அதை என்னால் எப்படி சரிவர செய்ய முடிந்தது என்று பிறகு யோசித்தேன். அது போன்ற சூழ்நிலையில் நான் சிக்கியிருந்த போது என் உள் மனது ஆறுதல் தேடியிருக்கிறது என்று புரிந்து போனது. இதுதான் நான் சொல்ல வந்தது , இது போன்ற சம்பவங்களில் பார்வையாளரான நம் பங்கும் மிக முக்கியம். ஒரே ஒருவரின் ஆறுதலான , அந்த நிமிடத்து செய்கைகூட நிலைமையை சீர் செய்யும்.

அவ்வாறு இல்லாமல் போனால், இரவு உறக்கத்தை அபகரித்துவிடும். தனியாக இருப்பதை தவிர்த்து, அம்மா/அப்பாவின் மடியில் தலைவைத்துப் படுத்து ஆறுதல் தேடலாம். இல்லையெனில் துணைவர்/ துணைவியிடம் கையை பற்றிக்கொண்டு அமைதியாக அமர்ந்துவிடலாம். விசயம் என்னவென்றால் நம்மை நன்றாக புரிந்து கொண்டவர்கள், அந்த நேரத்தில் கேள்வி கேட்காமல் நம்முடைய தனிமையை அனுமதிப்பார்கள். அது எப்படி தனிமையென்று சொல்லமுடியும் என்று கேட்பீர்கள், நான்தான் சொன்னேனே வெறுமையின் உச்சி என்று, உடலிற்கும் மனதிற்கும் சம்பந்தமில்லாத நிலை, மனம் தனித்துதான் இருக்கும். எதுவுமே இல்லையெனில் மொட்டை மாடியில் நின்று கொண்டு குளிர்ந்த காற்றை நன்றாக உள்ளிழுத்து மன அழுத்ததை வெளியேற்றலாம். வானத்தில் இருக்கும் நட்சத்திரங்களை தேடலாம். தொடு வானத்தின் பால் வீதியை ரசிக்கலாம். உலகத்தின் சற்று உயரத்திலிருக்கும் சௌகாரியமான கற்பனை நம் இறுக்கத்தை குறைத்துவிடும்.

இனி அடுத்த விசயங்களை பார்க்கலாம். எதிர்த்துப் பேச முடியாத சிறிய நிலையில் உள்ளவர்களுக்கு நியாயம் செய்ய முடியாமல் இருப்பது என்ற நிலை, நமக்குள் இருக்கும் தலைமைப் பண்பின் தூண்டுதல். ஏதேதோ காரணத்திற்காக நம்முடைய நியாயங்கள் அடிமையாக்கப்பட்டிருக்கும். இருந்தாலும் நமக்கு கீழ் உள்ளவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று உள் மனது உறுத்தும். அந்த சூழ்நிலையில் நாம் ஒன்றும் செய்ய முடியாது போகும். இந்த குற்ற உணர்வுகளை நாம் ஜெயித்தாக வேண்டும். உண்மையை சொல்லவேண்டுமெனில் , ஆரம்பத்தில் நம்முடைய நிலைமையே
உறுதியற்றதாக இருக்கும். அந்த நிலையில் போராடினால் நம் மேல் உள்ள நம்பிக்கையையும் சேர்த்து பலி கொடுப்பது போலாகிவிடும். நாம் அப்படியே இருந்தால் இது போன்ற நிகழ்ச்சிகளை வாழ்நாள் முழுவதும் காண வேண்டியிருக்கும். எனவே, வேறு வழியில் இதனை ஈடு செய்ய முயற்சியுங்கள். ஏதாவது ஒரு வழியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள். ஒரேயடியாக போராடக்கூடாது. நீங்கள் நல்லது செய்ய நினைப்பதுகூட சம்பந்தப்பட்டவர்களுக்கு பாதிப்பாகிவிடும். இந்த விசயத்தை பொறுத்தவரை குற்ற உணர்விலிருந்து வெளி வருவது மட்டுமே முக்கியம். கூடிய விரைவிலேயே உங்கள் மனம் நெளிவு சுளிவுகளைக் கற்றுக் கொண்டு, இது போன்ற சிக்கல்களை சரியாக கையாளும். கொஞ்சம் நம்பிக்கை கொஞ்சம் பொறுமை வேண்டும்.


அடுத்தது, சொல்லால் செயலால் அன்றி நினைவுகளால் தவறிழைப்பது - இது மிக முக்கியம் சம்பந்தப் பட்டவர்கள் நம்மை உயர்வாக எண்ணுகையில் நம் மனது நம்மை குறுக வைக்கும். இந்த எண்ணம் நம்மை குழப்பத்தில் ஆழ்த்தும். இந்த குற்ற உணர்விலிருந்து எப்படி வெளி வருவது. இது போன்ற சூழ்நிலையில் இரண்டுவித மனநிலைக்கு ஆட்பட்டிருப்போம். ஒன்று நாம் உணர்ந்து கொண்ட உண்மையின் உணர்ச்சிபூர்வ பாதிப்பு, மற்றொன்று இதுவரை நாம் நமக்கு பழக்கி வைத்திருக்கும் தர்ம நெறிகளின் ஆளுமை. முன்னதை விடுப்பதுதான் நியாயம். தவறை உணர்ந்து உடனேயே நம் மனதின் ஓட்டத்தை மாற்றியிருப்போம். ஒரு உதாரணம் பார்க்கலாம். ஒரு வேளை இதுமட்டும்தான் வெளிப்படையாக உரையாடக்கூடியது என்பதால், இதனை உதாரணமாக கொள்கிறேன். ஒருவருக்கு தீங்கிழைக்கப்பட்ட கடும்கோபத்தில், " இவர்களெல்லாம் உயிருடன் இருந்து என்ன செய்யப்போகிறார்களாம்?" என்று தோன்றியிருக்கும். ஒருவருடைய மரணத்தில் நமக்கு மகிழ்ச்சி என்று எண்ணும்போது மனித்தத்துவத்தை இழந்து விடுகிறோம் அல்லவா? நம்முடைய தரம் தாழ்ந்து போனதைப்போல உணர்வோம்.


இதைவிட மோசமானவைகூட இருக்கலாம். நம்மை அறிந்து கொண்ட குற்ற உணர்ச்சியிலிருந்து விடுபட என்ன செய்லாம். இரண்டுவித மன நிலையிலிருந்து நம்மை பிரிக்க வேண்டும். குற்றம் செய்தவர், நீதிபதி என பிரிய வேண்டும். எப்படி? தனிமையில் ஒரு வெள்ளத்தாளில், உங்களுடைய பெயருக்கு நீங்களே ஒரு கடிதம் எழுத வேண்டும். இது பழைய முறை. இதற்கு பதிலாக ஒரு ஈ-மெயில் தயாரித்து உங்களுடைய மெயில் ஐடிக்கு அதனை அனுப்பிவிடுங்கள். உங்களுடைய தரப்பு நியாயம் அத்தனையும் அதில் இருக்கட்டும். உடனேயே மெயிலை திறந்து பார்க்க வேண்டாம். இந்த வேலையை செய்தபின் உங்களுக்குள் ஒரு தெளிவு பிறக்கும். மறு நாள் மெயில் பார்க்கவும். புதிதாக ஒரு விசயத்தை வாசிப்பதுபோல உணர்வீர்கள். ஆனால், வாசிப்பது நம்முடைய ஆழ்மனம் . இங்குதான் பழைய நினைவுகள் பதுக்கிவைக்கப்பட்டு, அரக்ககுணத்துடன் காத்திருக்கும். பெரிய மீசைமேல் ஏதோ ஒரு பழைய வெறுப்பு நிற்க மீசை வைதிருந்தவரை திருடன் என்று திட்டியவரை கண்டிருக்கிறேன். நன்றாக உடையணியும் பெண்களின் மேல் தவறான எண்ண வீச்சல்கள்.... இதெல்லாம் பெரிய குற்றமில்லை மனதளவில் நினைப்பதுதான். அதை திருத்த வேண்டும்.நாம் மெயிலை படிக்கும்போது நம்முடைய மனதிற்கு தெரிந்துவிடும், இது தவறான செயல் என்று. இரண்டு மூன்று முறை வாசித்தபின் அதனை அழித்து விடுங்கள். தவறான எண்ணங்களும் அழிந்து விடும். இணைய வசதியில்லையெனில் கடிதம் எழுதி கவரில் போட்டு மூடிவிடுங்கள். யார் கையிலும் கிட்டக்கூடாது. படித்தவுடன் எரித்து விடவேண்டும். இந்த செயல்கள் முழுக்க தனிமையில் நடக்க வேண்டும்.

குற்ற உணர்விற்கு மட்டுமல்ல, மனதை அரித்துக் கொண்டிருக்கும் எந்த விசயத்தையும் இவ்வாறு செய்து மாற்றமுடியும். எண்ணங்களின் பிடியிலிருந்து விடுபட்டு நம்முடைய மனதின் மென்மையை காப்பாற்றிக் கொள்ள வேண்டும். அதுதான், மனித்தத்துவத்தை மகத்தானதாக்கும்.
avatar
sagampari
ரோஜா
ரோஜா

Posts : 184
Points : 253
Join date : 26/03/2011
Age : 53
Location : MADURAI

Back to top Go down

Re: மலரினும் மெல்லிய மனம்

Post by sagampari on Sat Apr 09, 2011 4:05 pm

கொஞ்சம் நீளமான கட்டுரை, மன்னிக்கவும்
avatar
sagampari
ரோஜா
ரோஜா

Posts : 184
Points : 253
Join date : 26/03/2011
Age : 53
Location : MADURAI

Back to top Go down

Re: மலரினும் மெல்லிய மனம்

Post by சிசு on Sat Apr 09, 2011 4:46 pm

கொஞ்சம் நீளமான கட்டுரையா இது??? மிகமிகத் தேவையான கட்டுரையல்லவா இது. !!!

எவ்வளவு நுணுக்கமான அலசல்கள் இந்த மெல்லிய உணர்வைப்பற்றி. நீங்கள் மனோதத்துவ நிபுணராக பரிமளிக்கிறீர்கள். எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது இந்த கட்டுரை.. அல்ல.. ஆலோசனை.


//எதிர்த்துப் பேச முடியாத சிறிய நிலையில் உள்ளவர்களுக்கு நியாயம் செய்ய முடியாமல் இருப்பது என்ற நிலை//

அலுவலகத்தில் எனது குழுவிலுள்ள நண்பர்களுக்கு, எதுவும் செய்ய இயலாமல் போகும் சூழ்நிலைகளில், நான் இந்த நிலையை அடிக்கடி உணர்ந்திருக்கிறேன்.

மிகவும் பயனுள்ள கட்டுரை, நம் தோட்டத்தின் அத்தனை நண்பர்களுக்கும் சென்று சேர இயன்றதைச் செய்ய "யூஜினிடம்" கேட்டுக்கொள்கிறேன்.

//மின்னழுத்த நிலையில் சர்ஜ் , ஸ்பைக் என்று இரு நிலை உள்ளது. சர்ஜ் 230v லிருந்து 400v வரை செல்லும் , அதிக நேரம் நீடித்து நிற்கும். இதனால் எலெக்ட்ரானிக் உபகரணங்கள் பாழாகும். ஒரு துயர சம்பவம் நம் மனதை அதன் ஆளுமையில் வைத்திருப்பது போல். ஸ்பைக் என்பது 230v லிருந்து 2000vவரைக்கூட செல்லும்.ஆனால் நொடிக்கும் குறைவான நேரம்தான் இருக்கும். இதனால் எலெக்ட்ரானிக் உபகரணங்கள் தீப்பிடிக்கும் அபாயம் கூட உண்டு. //

நீங்க ஆசிரியைதான்... ஒத்துக்கறேன். Laughing
சரியான உதாரணம்... அதையும் ஒத்துக்கறேன். Laughing
avatar
சிசு
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City

Back to top Go down

Re: மலரினும் மெல்லிய மனம்

Post by sagampari on Sat Apr 09, 2011 5:02 pm

கொஞ்சம் கூடிவிட்டது...?. ஒரு விசயத்தை கடைசிவரை ஆராய்ந்தால்தான் முடிவு கிட்டும் என்பது உண்மைதானே. உங்கள் கருத்துரையை முன்னுரையாகப் போட்டால், படிப்பதற்கு யோசிக்க மாட்டார்கள். முழுவது படித்ததற்கு நன்றி. C-SU

avatar
sagampari
ரோஜா
ரோஜா

Posts : 184
Points : 253
Join date : 26/03/2011
Age : 53
Location : MADURAI

Back to top Go down

Re: மலரினும் மெல்லிய மனம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Sat Apr 09, 2011 5:21 pm

C-Su wrote:கொஞ்சம் நீளமான கட்டுரையா இது??? மிகமிகத் தேவையான கட்டுரையல்லவா இது. !!!

எவ்வளவு நுணுக்கமான அலசல்கள் இந்த மெல்லிய உணர்வைப்பற்றி. நீங்கள் மனோதத்துவ நிபுணராக பரிமளிக்கிறீர்கள். எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது இந்த கட்டுரை.. அல்ல.. ஆலோசனை.


//எதிர்த்துப் பேச முடியாத சிறிய நிலையில் உள்ளவர்களுக்கு நியாயம் செய்ய முடியாமல் இருப்பது என்ற நிலை//

அலுவலகத்தில் எனது குழுவிலுள்ள நண்பர்களுக்கு, எதுவும் செய்ய இயலாமல் போகும் சூழ்நிலைகளில், நான் இந்த நிலையை அடிக்கடி உணர்ந்திருக்கிறேன்.

மிகவும் பயனுள்ள கட்டுரை, நம் தோட்டத்தின் அத்தனை நண்பர்களுக்கும் சென்று சேர இயன்றதைச் செய்ய "யூஜினிடம்" கேட்டுக்கொள்கிறேன்.

//மின்னழுத்த நிலையில் சர்ஜ் , ஸ்பைக் என்று இரு நிலை உள்ளது. சர்ஜ் 230v லிருந்து 400v வரை செல்லும் , அதிக நேரம் நீடித்து நிற்கும். இதனால் எலெக்ட்ரானிக் உபகரணங்கள் பாழாகும். ஒரு துயர சம்பவம் நம் மனதை அதன் ஆளுமையில் வைத்திருப்பது போல். ஸ்பைக் என்பது 230v லிருந்து 2000vவரைக்கூட செல்லும்.ஆனால் நொடிக்கும் குறைவான நேரம்தான் இருக்கும். இதனால் எலெக்ட்ரானிக் உபகரணங்கள் தீப்பிடிக்கும் அபாயம் கூட உண்டு. //

நீங்க ஆசிரியைதான்... ஒத்துக்கறேன். Laughing
சரியான உதாரணம்... அதையும் ஒத்துக்கறேன். Laughing

நிச்சயமாக சென்று சேர வைப்போம்

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: மலரினும் மெல்லிய மனம்

Post by sagampari on Sat Apr 09, 2011 6:12 pm

இது போன்ற ஆதரவிற்கு நன்றி யூஜின்
avatar
sagampari
ரோஜா
ரோஜா

Posts : 184
Points : 253
Join date : 26/03/2011
Age : 53
Location : MADURAI

Back to top Go down

Re: மலரினும் மெல்லிய மனம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Sat Apr 09, 2011 6:14 pm

sagampari wrote:இது போன்ற ஆதரவிற்கு நன்றி யூஜின்
தொடருங்கள் உங்கள் படைப்புகளை எப்போதும் நமது தோட்டத்தின் ஆரவு உண்டு சரிங்க பாஸ்

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: மலரினும் மெல்லிய மனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum