"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» மல்லையா, நிரவ் மோடி போல 31 பேர் இந்தியாவை விட்டு தப்பி ஓடியுள்ளனர் - மத்திய மந்திரி தகவல்
by அ.இராமநாதன் Today at 8:47 am

» இந்திய வீரர் வீராங்கணைகளுக்கு ஜப்பான் முட்டை...
by அ.இராமநாதன் Today at 8:40 am

» தனுஷ் இயக்கும் அடுத்த படத்தின் பெயர் ‘நான் ருத்ரன்’?
by அ.இராமநாதன் Today at 8:38 am

» சுசீந்தரனின் ’ஏஞ்சலினா’ படப்பிடிப்பு நிறைவடைந்தது
by அ.இராமநாதன் Today at 8:37 am

» ஒரு சாவி கூட பீரோவுக்கு பொருந்த மாட்டேங்குதே?
by அ.இராமநாதன் Yesterday at 11:59 pm

» 2 கி.மீ தூரத்தை 2 மணி 44 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்த சைலேந்திரபாபுவின் நீச்சல் குழு!
by அ.இராமநாதன் Yesterday at 11:42 pm

» பள்ளிக்கு ஒரு லட்சம் சீர்வரிசை... ஆசிரியர்களைப் பிரமிக்க வைத்த ஊர்மக்கள்
by அ.இராமநாதன் Yesterday at 11:33 pm

» - கொஞ்ச நேரம் நடிக்கலாம்
by அ.இராமநாதன் Yesterday at 10:43 pm

» - இரும்பு இதயங்களுக்கான திறவுகோல்
by அ.இராமநாதன் Yesterday at 10:31 pm

» அதிர்ஷ்டம் உழைப்பின் முதுகில் ஒட்டிககிடக்கும்
by அ.இராமநாதன் Yesterday at 10:30 pm

» போலி நபரை பரீட்சை எழுத அனுப்பி விட்டு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பள்ளி முதல்வர்
by அ.இராமநாதன் Yesterday at 8:20 pm

» நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
by அ.இராமநாதன் Yesterday at 8:18 pm

» பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி
by அ.இராமநாதன் Yesterday at 8:12 pm

» பெண் நிருபரை சீண்டிய அமைச்சர் விஜயபாஸ்கர்
by அ.இராமநாதன் Yesterday at 8:09 pm

» தமிழக பாஜ அடுத்த தலைவர் யார்?
by அ.இராமநாதன் Yesterday at 8:07 pm

» தேசிய கீதத்தில் திருத்தம்: காங்., எம்பி., தீர்மானம்
by அ.இராமநாதன் Yesterday at 8:06 pm

» ஓட்டுக்குப் பணம் தர நாங்கள் தயார்....
by அ.இராமநாதன் Yesterday at 4:54 pm

» வேண்டாம் தாயீ....மூணாவது நாளா பட்டினி கிடந்துட்டுப் போறேன்...
by அ.இராமநாதன் Yesterday at 4:51 pm

» இங்கேயும் இடது - அங்கேயும் அதே!
by அ.இராமநாதன் Yesterday at 2:51 pm

» முல்லா நஸ்ருதீன்!
by அ.இராமநாதன் Yesterday at 2:47 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by அ.இராமநாதன் Yesterday at 2:20 pm

» கீர்த்தி சுரேஷ் மகிழ்ச்சி
by அ.இராமநாதன் Yesterday at 2:16 pm

» குடியிருப்பு பகுதியில் புகுந்த மலைப் பாம்பு: லாவகமாக பிடித்த பெண்
by அ.இராமநாதன் Yesterday at 2:12 pm

» மலச்சிக்கலை தீர்க்கும் சூசி முத்திரை
by அ.இராமநாதன் Yesterday at 2:01 pm

» துல்கர் சல்மான் ஜோடியாக நடிக்கும் சோனம் கபூர்
by அ.இராமநாதன் Yesterday at 1:55 pm

» வீராணம் ஏரி நீர் திடீர் நிறுத்தம்: சென்னையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுமா?
by அ.இராமநாதன் Yesterday at 1:52 pm

» வெல்வெட் நகரத்தில் வரலட்சுமி சரத்குமார்
by அ.இராமநாதன் Yesterday at 12:53 pm

» சாவித்திரி வேடத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ் தோற்றம் வெளியானது
by அ.இராமநாதன் Yesterday at 12:49 pm

» இந்தியன் ஆயில் கார்ப்பரே‌ஷன் பெட்ரோல் பங்கில் 5 கிலோ சமையல் கியாஸ் விற்பனை
by அ.இராமநாதன் Yesterday at 12:42 pm

» லட்சுமி கடாட்சம் பெற விரும்புபவர்கள் சண்டை போடுவதைத் தவிருங்கள்.
by அ.இராமநாதன் Yesterday at 9:37 am

» ஆவடியில் ராணுவ உடை தொழிற்சாலை மூடப்படாது: மத்திய அரசு அறிவிப்பால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி
by அ.இராமநாதன் Yesterday at 9:12 am

» வந்துவிட்டது, ‘வைசார்ஜர்’
by அ.இராமநாதன் Yesterday at 9:04 am

» முத்தரப்பு கிரிக்கெட்டில் வங்காளதேசத்தை வீழ்த்தியது இந்தியா: வாஷிங்டன் சுந்தரின் மாயாஜால பந்துவீச்சால் வெற்றி பெற்றோம்
by அ.இராமநாதன் Yesterday at 8:59 am

» காங். மாநாடு இன்று துவக்கம்
by அ.இராமநாதன் Yesterday at 8:20 am

» 12 பேர் ராஜ்யசபா எம்.பி.க்களாக போட்டியின்றி தேர்வு
by அ.இராமநாதன் Yesterday at 8:04 am

» ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ டுவிட்டரில் முதன்முறையாக தமிழ்
by அ.இராமநாதன் Yesterday at 8:02 am

» அரசு வேலையில் சேர 5 ஆண்டு ராணுவ பணி கட்டாயம்
by அ.இராமநாதன் Yesterday at 8:00 am

» அமெரிக்காவில் நடைமேடை பாலம் இடிந்து விபத்து: பலர் சிக்கியுள்ளதாக தகவல்
by அ.இராமநாதன் Yesterday at 7:58 am

» மோடிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்:ஜெகன் மோகன்,நாயுடு கைகோர்ப்பு
by அ.இராமநாதன் Yesterday at 7:56 am

» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Thu Mar 15, 2018 9:56 pm

» ஸ்டீபன் ஹாக்கிங் உன்புகழ் நிலைக்கும் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Thu Mar 15, 2018 8:15 pm

» 3 நாடுகள் மகளிர் கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு - ஜுலன்கோசுவாமிக்கு இடம்
by அ.இராமநாதன் Thu Mar 15, 2018 2:46 pm

» ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள்
by அ.இராமநாதன் Thu Mar 15, 2018 12:51 pm

» பற்றை மறக்கச் செய்யும் ஞான தீர்த்தம் ...
by அ.இராமநாதன் Thu Mar 15, 2018 12:49 pm

» ஒரு பக்கக் கதை - தலைவர்
by அ.இராமநாதன் Thu Mar 15, 2018 12:43 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines கொளுத்தும் கோடை வெய்யிலுக்கு ‘கூல்’டிப்ஸ்

Go down

கொளுத்தும் கோடை வெய்யிலுக்கு ‘கூல்’டிப்ஸ்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Fri Apr 15, 2011 11:58 pm

கொளுத்தும் வெயிலுடன் கோடை நெருங்கி கொண்டிருக்கிறது. இப்போதே வெயிலின் உக்கிரம் தொடங்கி விட்டது. ஏப்ரல், மே மாதங்களில் இன்னும் அதிகமாகும். வியர்வை அதிகம் வெளியேறுவதால் உடலின் சக்திகள் உறிஞ்சப்பட்டு விடுவதால், உடல் எளிதில் சோர்வடையும். வெப்பத்தால் தோல் பாதிப்பு, சூட்டால் வருகிற தொல்லைகள் தலை தூக்கி பாடாய் படுத்தும். காட்டன் உடை, சீரகத் தண்ணீர், நோ டென்ஷன், அப்பப்போ ஜூஸ் போன்றவற்றை கடைபிடித்தால் போதும். கோடையிலும் எந்த தொல்லையுமின்றி ஜொலிக்கலாம் என்கிறார் டாக்டர் சசிகுமார். அவர் கூறுவது: நம் உடலின் உச்சி முதல் உள்ளங்கால் வரை 3 மில்லியன் வியர்வை சுரப்பிகள் எல்லா காலத்திலும் வேலை செய்கின்றன. வெளியே இருக்கும் தட்ப வெப்பத்துக்கு ஏற்ப நம் உடலின் வெப்பத்தை தகவமைத்துக் கொள்ளவே இந்த சிஸ்டம். சாதாரணமாக 600 மில்லி முதல் 800 மில்லி வரை வியர்வை வெளியேறுகிறது. உள்ளங்கால், உள்ளங்கை பகுதியில் சிறிய அளவில் வியர்வை சுரப்பிகள் உள்ளன. தலை முடிப்பகுதி, முகம், நெற்றி, கழுத்து, முதுகு, அக்குள் மற்றும் உறுப்பு பகுதிகளில் பெரிய அளவிலான வியர்வை சுரப்பிகள் செயல்படுகின்றன. வியர்வையில் உப்பு சத்து, சர்க்கரை, அமினோ அமிலம், சோடியம், பொட்டாசியம் போன்ற தாதுக்கள் வெளியேறுகின்றன. ஆண்களுக்கு 28 டிகிரி சென்டிகிரேடு வெப்பம் இருக்கும் பொது வியர்வை வெளிப்படும். பெண்களுக்கு 31 டிகிரி சென்டிகிரேடு வெப்பத்தில் வியர்வை வரும். உழைக்கும் போதும், உடற்பயிற்சி, பய உணர்வு, மனரீதியான பதற்றம் இருக்கும் போதும் வெளிப்படும். வழக்கமான வியர்வை நாற்றம் மெல்லியதாக இருக்கும். அப்படி இல்லாமல் முட்டை, வெங்காயம், கற்றாழை, மீன் போன்ற நாற்றம் உடல் வியர்வையில் இருந்து வெளிப்பட்டால் உடலில் ஏதோ பிரச்னை இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம். இதுபோன்ற பிரச்னை உள்ளவர்கள் உடனடியாக டாக்டரை அணுக வேண்டியது அவசியம். வெயில் காலத்தில் காட்டன் தவிர மற்ற உடைகளை அணியும் போது வியர்வை உடலில் தேங்கி வியர்க்குருவை ஏற்படுத்துகிறது. வெயில் காலத்தில் பருத்தி உடைகளை அணிவதன் மூலம் இதை தடுக்கலாம். வியர்வை வெளியேறும் இடங்களில் பவுடரை பயன்படுத்துவதன் மூலம் அரிப்பை தடுக்க முடியும். சுத்தமான குளிர்ந்த நீரில் குளிப்பதன் மூலம் இதற்கு தீர்வு காணலாம். வெயில் காலத்தில் அதிகளவு வியர்வை வெளியேறுவதால், உடலுக்கு அதிக தண்ணீர் தேவைப்படும். அப்போது தண்ணீர் குடிக்காமல் விட்டால் கிட்னியில் கல், சிறுநீர் வெளியேறுவதில் பிரச்னை, தோல் உலர்ந்து போதல் போன்ற பிரச்னைகள் தோன்றும். அதிகம் தண்ணீர் குடிப்பது, பழங்கள் மற்றும் பழச்சாறுகள் எடுத்து கொள்வது ஆகியவற்றின் மூலம் தோல் பளபளப்பாக இருப்பதுடன் கோடையால் உடலில் உருவாகும் பிரச்னைகளில் இருந்தும் தப்பிக்கலாம். குறைவாக தண்ணீர் குடிக்கும் குழந்தைகளுக்கு Ôசம்மர் டயரியாÕ வரவும் வாய்ப்புள்ளது. எனவே கோடை செய்யும் அவஸ்தைகளில் இருந்து தப்பிக்க ஒரே மருந்து தண்ணீர் தான். இவ்வாறு கூறுகிறார் டாக்டர் சசிக்குமார். *** பாதுகாப்பு முறைகள் வெயில் காலத்தில் தலையில் அதிக வியர்வை மற்றும் அழுக்கு படிவதன் காரணமாக பொடுகு தொல்லைகள் ஏற்படும். இதை தவிர்க்க அடிக்கடி தலைக்கு குளித்து சுத்தமாக வைத்து கொள்ளவும். முகம் மற்றும் தோல்பகுதியில் படியும் புழுதி, அழுக்கால் முகப்பரு, கரும்புள்ளி ஆகியவை ஏற்படலாம். சூரியனின் புற ஊதா கதிர்கள் நேரடியாக படுவதால் தோல் பிரச்னைகள் உருவாகும். இவற்றைத் தவிர்க்க சன்ஸ்கிரீன் லோஷன் உதவும். உதடுகளில் ஏற்படும் தோல் வறட்சியை தடுக்க பழத்தால் உருவாக்கப்பட்ட லிப் கிரீம்கள் பயன்படுத்தலாம். மேலும் நேரம் கிடைக்கும் போது முகத்தை குளிர்ந்த தண்ணீரால் கழுவலாம். அஜீரணம் மற்றும் வயிற்று வலி, சிறுநீர் கழிப்பதில் பிரச்னை இருந்தால் தண்ணீரில் சீரகம் போட்டு குடிக்கலாம். சீரகம் மற்றும் வெந்தயம் சிறிது தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி மிதமான சூட்டில் குடிப்பதன் மூலம் இந்த மூன்று பிரச்னைகளுக்கும் உடனடி தீர்வு கிடைக்கும். *** ரெசிபி எல்லோ ஸ்குவாஷ் மாம்பழத்தின் சதைப் பகுதியை பிரித்து எடுத்து ஆவியில் வேக வைத்து எடுக்கவும். சர்க்கரையில் தண் ணீர் சேர்த்து சுகர் சிரப் செய்து கொள்ளவும். வேக வைத்த மாம்பழத்தை மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். இந்தக் கலவையை சுகர் சிரப்புடன் சேர்த்து கலந்து பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளலாம். ஒரு டம்ளர் தண்ணீருக்கு கால் டம்ளர் மாம்பழ கலவை சேர்த்து ஜூசாக அருந்தலாம். * ரெட் டேஸ்ட்டி தக்காளியில் இருந்து நமக்கு அதிகளவு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. தக்காளியை வேக வைத்து தோல் உரித்து பின் விதைகளை நீக்கவும். அதனுடன் சர்க்கரை சேர்த்து மிக்சியில் அடித்துக் கொள்ளவும். இதை அப்படியே பிரஷ் ஜூசாக குடிக்கலாம். கலர் புல்லாக இருப்பதால் குழந்தைகளுக்கு பிடிக்கும். வைட்டமின் சி சத்து இதில் இருந்து நமக்குக் கிடைக்கிறது. இதில் பால் சேர்ப்பதை தவிர்க்கவும். * கிரீன் சிரப்: பெரிய நெல்லிக் காயை வேக வைத் துக் கொள்ளவும். கொட்டையை நீக்கிவிட்டு, துண்டுகளாக்கவும். இத்துடன் சர்க்கரை சேர்த்து மிக்சியில் அரைத்து கொள்ளவும். இக்கலவையை பாட்டிலில் சேகரித்து ஒரு டம்ளர் தண்ணீருக்கு கால் டம்ளர் கிரீன் சிரப் கலந்து குடிக்கலாம். நெல்லிக்காயை வேக வைப்பதால் அதில் உள்ள கசப்பு நீங்கி விடும். வெயில் காலத்தில் ஏற்படும் வயிற்று வலி போன்ற பிரச்னைகளுக்கு தீர்வாக அமையும் இந்த கிரீன் சிரப். **** டயட் காலையும் மாலையும் கஷ்டம் பார்க்காமல் குளித்து விட வேண்டும். காட்டன் டிரஸ் கொஞ்சம் லூசாக இருக்கும்படி அணியவும். மைல்டான பெர்ப்யூம் துணையுடன் சத்தான உணவுகளிலும் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார் உணவு ஆலோசகர் அகிலா. கோடையில் உடல் இழக்கும் எனர்ஜியை மீட்க அவர் தரும் டிப்ஸ்.. உணவு தயாரிக்கும் போது உப்பு காரம் குறைக்கவும். உடலில் நோய் எதிர்ப்பு சக்திக்கு சிட்ரஸ் உள்ள சாத்துக்குடி, ஆரஞ்சு, எலுமிச்சை உள்ளிட்ட பழ வகைகள் அவசியம் சாப்பிடவும். வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் தண்ணீர் குடிக்க வேண்டும். எண்ணெயில் பொறித்த ஸ்னாக்ஸ் வகைகளுக்கு பதிலாக ஏதாவது ஒரு பழ வகை எடுத்துக் கொள்வது நல்லது. கோடை வெயிலின் காரணமாக அதிகளவு தண்ணீர் உடலில் இருந்து வெளியேறும். இதனால் வெள்ளரி, தர்பூசணி உள்ளிட்டவைகளையும் தினமும் சேர்த்துக் கொள்ளவும். முள்ளங்கி, புடலங்காய், பூசணி உள்ளிட்ட நீர்க்காய்களை சமையலில் சேர்ப்பதன் மூலம் சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்கள் வருவதைத் தடுக்க முடியும். குழந்தைகளைப் பொருத்தவரை போதுமான எனர்ஜிக்கு ஜூஸ் வகைகளுடன் காய்கறி சூப் தரவேண்டியதும் அவசியம்.

*** பாட்டி வைத்தியம்

1. வெயில் கால வியர்வையின் காரணமாக தலையில் சேரும் அழுக்கு, பேன் பொடுகு ஆகியவை போக வெந்தயத்தை இரவு முழுவதும் ஊற வைத்துக் கொள்ளவும். அத்துடன் வேப்ப இலைகளை சேர்த்து அரைத்து தலைக்கு தேய்த்துக் குளித்தால் இந்த மூன்று பிரச்னையும் தீரும்.

* 2. வெயிலால் ஏற்படும் உடல் சூடு குறைய வெந்தயக் கீரையுடன் பூண்டு, உப்பு சேர்த்து அரைத்து சாப்பிட்டால் போதும்.

* 3. விளா மரத்தின் இலையை குளியல் மஞ்சளுடன் சேர்த்து அரைத்து உடல் முழுவதும் தேய்த்துக் குளிப்பதன் மூலம் சொரி, சிரங்கு மற்றும் வியர்க்குரு போன்றவை நீங்கும்.

* 4. முருங்கை கீரையை அரைத்துத் தலையில் தேய்த்துக் குளித்தால் உடல் சூடு தணியும், பொடுகுத் தொல்லையும் இருக்காது.

* 5. மஞ்சள், ஆவாரம்பூ இரண்டையும் சம அளவில் எடுத்து அரைத்து தினமும் உடலில் பூசிக் குளித்தால் கற்றாழை நாற்றம் ஏற்படாது. உடலும் அழகாகும்.

* 6. மகிழ மர இலையை பன்னீர் சேர்த்து அரைத்து உடல் முழுவதும் தேய்த்து குளித்தால் உடலில் ஏற்படும் கற்றாழை நாற்றம் விலகும்.

* 7. புளியங் கொழுந்தையும், மஞ்சளையும் சேர்த்து அரைத்து குளிர்ந்த நீரில் கலந்து குளித்து வந்தால் அம்மை நோயைத் தடுக்கலாம்.

* 8. நன்னாரி வேர், வெட்டி வேர் இரண்டையும் சம அளவில் எடுத்து கஷாயம் வைத்துக் குடித்தால் உடல் சூடு தணியும்.

* 9. கருந்துளசியுடன் கஸ்தூரி மஞ்சள் சேர்த்து அரைத்து உடல் முழுவதும் பூசிக் குளித்தால் உடல் நாற்றம் போவதுடன் தோல் நோய்களும் குறையும்.

* 10. திருநீற்றுப் பச்சிலையின் விதையை தண்ணீரில் ஊற வைத்துக் குடித்து வந்தால் உஷ்ண நோய்கள் விலகும்.

நன்றி தமிழ் முரசு

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum