"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வித்தியாசமான வேடத்தில் அனுஷ்கா
by அ.இராமநாதன் Today at 9:29 am

» வித்தியாசமான வேடத்தில் சமந்தா
by அ.இராமநாதன் Today at 9:23 am

» பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
by அ.இராமநாதன் Yesterday at 8:52 am

» ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
by அ.இராமநாதன் Yesterday at 8:51 am

» சமந்தா வரவேற்பு!
by அ.இராமநாதன் Yesterday at 8:50 am

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Yesterday at 8:49 am

» சிலம்பம் பயிலும் விஜய் ஆண்டனி!
by அ.இராமநாதன் Yesterday at 8:48 am

» மாப்பிள்ளைக்கு ஏன் இரண்டு டூ வீலர் வாங்கி கொடுத்திருக்கீங்க?
by அ.இராமநாதன் Yesterday at 8:37 am

» இந்த ஆஸ்பத்திரிக்கா உயிரையே கொடுத்தவங்க...!!
by அ.இராமநாதன் Yesterday at 2:12 am

» நாச்சியார் விமர்சனம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:50 pm

» பிரியா வாரியர் கண்ணடிக்கும் பாடல் வாபஸ் இல்லை ; நடிகை பேட்டி கொடுக்க இயக்குனர் தடை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:24 pm

» ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:20 pm

» தெலுங்கில் நடித்த ஸ்ரேயா படம் இணையதளத்தில் வெளியானது
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:17 pm

» நாட்டை சூறையாடும் வங்கியின் விஐபி வாடிக்கையாளர்கள்: மம்தா தாக்கு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:38 pm

» மெக்சிகோவில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் கட்டிடங்கள் குலுங்கின
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:37 pm

» பிஎன்பி மோசடி: மேலும் ரூ. 549 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்; நிரவ் மோடி இருப்பிடம் தெரியாது - வெளியுறவுத்துறை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:36 pm

» தொழில்நுட்ப ஆஸ்கர் விருது வென்ற இந்தியர்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:35 pm

» கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது அமலாக்கத்துறை விசாரிக்க கோர்ட்டு அனுமதி
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:33 pm

» மணிசங்கர் அய்யர் மீது தேசதுரோக வழக்கு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:32 pm

» நாணயம் பெற மறுத்தால் நடவடிக்கை: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:31 pm

» ரூ.9க்கு ஏர்டெல் புதிய திட்டம் அறிவிப்பு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:25 pm

» ரூ.99க்கு பி.எஸ்.என்.எல். அதிரடி சலுகை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:24 pm

» மருத்துவ குறிப்புகள் - தொடர்பதிவு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:26 pm

» நீரிழிவு நிலை உள்ளவர்களா உங்கள் உணர்திறன் குறைவடையும்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:24 pm

» திறந்தநிலை கல்வி நிறுவனங்களில் பிளஸ் 2 படிப்பவர்களுக்கு நீட் தேர்வு எழுத அனுமதி கிடையாது
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:07 pm

» ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்படவில்லை: படத்திறப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் வாதம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:06 pm

» புதுச்சேரி - பெங்களூர் இடையே புதிய விமான சேவை மீண்டும் தொடக்கம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:05 pm

» சனீஸ்வரா காப்பாத்து!
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:02 pm

» நாம் அழுதால் தாங்கமாட்டார் ஆஞ்சநேயர்!
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:01 pm

» பெண்ணிடம் திருடப்பட்ட செயின் அவரிடமே அடகுக்கு வந்த அதிர்ச்சி சம்பவம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 1:59 pm

» 10 செகண்ட் கதைகள்
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 11:03 pm

» பொது அறிவு - வினா, விடைகள்
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 10:50 pm

» படித்ததில் பிடித்தது - பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 10:40 pm

» உயிர்த்தெழும் கதாபாத்திரங்கள் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 10:25 pm

» முத்தங்களை கக்கிய பொழுதுகள் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 10:21 pm

» கண்கள் பாதிப்பை குறைக்கும் உடற்பயிற்சிகள்
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 3:05 pm

» வைரலாகும் நயன்தாராவின் பர்சனல் புகைப்படம்....
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:58 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டுன் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:53 pm

» பா.இரஞ்சித்தின் படத்தை வெளியிடுகிறது லைகா நிறுவனம்
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:44 pm

» தமிழகத்திற்கு 177.25 டி.எம்.சி நீரை தர வேண்டும் - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:38 pm

» தாய்ப்பால் கொடுத்த முதல் திருநங்கை அமெரிக்காவில் சாதனை படைத்த மருத்துவர்கள்!
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:34 pm

» மகன் வாங்கிய காரில் மருமகள் செல்வதா? காரை தீயிட்டு கொளுத்திய தாய்!
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:29 pm

» சென்னையில் கஞ்சா வைத்திருந்த கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:27 pm

» சிந்தனை சிகிச்சை-5
by ராஜேந்திரன் Fri Feb 16, 2018 2:19 pm

» தமிழ் சிதைந்தால் தமிழினமே சிதைந்து போகும்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Feb 16, 2018 8:42 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கல்வித்துறை வெப்சைட்டில் தனியாருக்கு, "லிங்க்': புத்தகங்களை, "டவுண்லோட்' செய்ய கட்டணம் வசூல்

Go down

கல்வித்துறை வெப்சைட்டில் தனியாருக்கு, "லிங்க்': புத்தகங்களை, "டவுண்லோட்' செய்ய கட்டணம் வசூல்

Post by kingmaker on Thu Apr 28, 2011 2:45 pm

பள்ளிக் கல்வித்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்ட சமச்சீர் கல்வி, 10ம் வகுப்பு புத்தகங்கள், சர்வர் பிரச்னை காரணமாக, "ஓப்பன்' ஆகாததால், இந்த இணையதளத்தில் இருந்து, மூன்று தனியார் வெப்சைட் நிறுவனங்களுக்கு, "லிங்க்' கொடுத்துள்ளனர். அந்நிறுவனங்கள், விரைவாக, "டவுண்லோட்' செய்ய வசதியை ஏற்படுத்திக் கொடுத்து, கட்டணங்களை வசூலித்து வருகின்றன.

வரும் கல்வியாண்டில், அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வி பாடத்திட்டங்கள் அமலுக்கு வருகின்றன. இதற்கான புத்தகங்கள் அச்சடிக்கும் பணி, விரைவில் முடிந்து, மே இறுதிக்குள் பள்ளிகளுக்கு அனுப்பப்பட உள்ளன. ஜூன் மாதம் பள்ளிகள் திறந்ததும், மாணவர்களுக்கு புத்தகங்கள் கிடைக்கும் என்றாலும், 10ம் வகுப்பிற்கான பாடப் புத்தகங்களை மட்டும் முன்கூட்டியே பார்க்க வேண்டும், பாட விவரங்களை தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம், மாணவர்களிடையே ஏற்பட்டுள்ளது. பிரபலமான தனியார் பள்ளிகள், முன்கூட்டியே, 10ம் வகுப்பு பாடத்திட்டங்களை நடத்தவும் முயற்சித்து வருகின்றன. இதில், பல பள்ளிகள், பாடத்திட்ட தயாரிப்பு குழுவைச் சேர்ந்தவர்களிடம் இருந்து,"சிடி'யை வாங்கி, அதன் மூலம் பாடப் புத்தகங்களை, "பிரின்ட்' போட்டு பயன்படுத்தி வருகின்றனர். பத்தாம் வகுப்பு பாடப் புத்தகங்களுக்கு முன்கூட்டியே தேவை அதிகரித்ததை மனதில் கொண்டு, தமிழ் மற்றும் ஆங்கில வழிகளில் அனைத்து பாடப் புத்தகங்களும், கடந்த 21ம் தேதி காலை, பள்ளிக் கல்வித்துறை இணையதளத்தில் (தீதீதீ.ணீச்டூடூடிடுச்டூதிடி.டிண) வெளியிடப்பட்டன. வெளியிட்ட சில மணி நேரங்களில், மாநிலம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மாணவர்கள், பள்ளிக் கல்வித்துறை இணையதளத்தை பார்வையிட்டதால், இணையதளம் செயலிழந்து முடங்கியது. "சர்வர்' பிரச்னை காரணமாக, பாடப் புத்தகங்களை, "டவுண்லோட்' செய்ய முடியாமல், மாணவர்கள் பரிதவித்தனர். இப்பிரச்னையை சரி செய்ய, பள்ளிக் கல்வித்துறை எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அதற்கு மாறாக, இந்த சேவையை, தனியார் வெப்சைட் நிறுவனங்கள் வழங்குவதற்கு அனுமதி கொடுத்துள்ளனர். பள்ளிக் கல்வித்துறை வெப்சைட்டில் இருந்து, மூன்று தனியார் வெப்சைட் நிறுவனங்களுக்கு, "லிங்க்' தரப்பட்டுள்ளன. பாடங்களை, "கிளிக்' செய்தால், தனியார் வெப்சைட்கள், "லிங்க்' கிடைக்கின்றன. அவற்றில், இரண்டு வகையான சேவைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒன்று, இலவசமாக, "டவுண்லோட்' செய்யும் வசதி. மற்றொன்று, கட்டணம் செலுத்தி, "டவுண்லோட்' செய்து கொள்வது. இலவசமாக பாடப் புத்தகங்களை காப்பி செய்ய வேண்டுமெனில், அதற்கு அரை மணி நேரம் முதல், ஒரு மணி நேரம் வரை ஆகும் என தெரிவித்துள்ளனர். ஆனால், கட்டணப் பிரிவில், மிக விரைவாக, 30 வினாடிகள் முதல், 8 நிமிடங்கள் வரை, "டவுண்லோட்' செய்யலாம் என்றும் அறிவித்துள்ளனர். இலவசமாக, "டவுண்லோட்' செய்ய, ஒவ்வொரு பாடத்திற்கும் ஒரு மணி நேரம் வரை காத்திருக்க வேண்டும் என்பதால், ஏராளமான மாணவர்கள், கட்டண பிரிவை பயன்படுத்துகின்றனர். மாணவர்களுக்கு இலவசமாக வழங்க வேண்டிய சேவையை, தனியார் வெப்சைட்கள் பணம் சம்பாதிக்க, பள்ளிக் கல்வித்துறை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்திருப்பது, மாணவர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

அதிகாரிகள் மழுப்பல்: இலவசமாக வழங்க வேண்டிய சேவையை, தனியார் வெப்சைட் நிறுவனங்கள் காசு பார்க்க வழி செய்திருப்பது குறித்து, பள்ளிக் கல்வித்துறை வட்டாரத்தில் நேற்று விசாரித்ததில், "உதவி இயக்குனர் இருதயசாமி தான், இணையதளத்திற்கு பொறுப்பு; அவரிடம் கேளுங்கள்' என்றனர். அவரோ, "நான், பெற்றோர்- ஆசிரியர் கழக செயலர் பணியிடத்திற்கு தான் பொறுப்பு. இணையதளத்திற்கும் எனக்கும் சம்பந்தம் கிடையாது. துணை இயக்குனர் சந்திரசேகரன் தான், அதற்கு பொறுப்பு; அவரைக் கேளுங்கள்' என்றார். அவர், "நான் இ-கவர்னன்ஸ் துணை இயக்குனர். பள்ளிக்கல்வி இணையதளத்தில் பாடப் புத்தகம் வெளியிட்டதே எனக்குத் தெரியாது. உயர் அதிகாரிகளைக் கேளுங்கள்' என்றார். பள்ளிக் கல்வி இயக்குனர் வசுந்தரா தேவி (பொறுப்பு), செயலர் கூட்டத்திற்கு சென்று விட்டதாக தெரிவித்தனர்.
avatar
kingmaker
மல்லிகை
மல்லிகை

Posts : 81
Points : 167
Join date : 06/04/2011

Back to top Go down

Re: கல்வித்துறை வெப்சைட்டில் தனியாருக்கு, "லிங்க்': புத்தகங்களை, "டவுண்லோட்' செய்ய கட்டணம் வசூல்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Thu Apr 28, 2011 2:53 pm

என்ன கொடுமை இது

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: கல்வித்துறை வெப்சைட்டில் தனியாருக்கு, "லிங்க்': புத்தகங்களை, "டவுண்லோட்' செய்ய கட்டணம் வசூல்

Post by சிசு on Thu Apr 28, 2011 8:59 pm

என்னாங்கடா நடக்குது இங்க...????
திருடங்க கொள்ளையடிச்சா அரசாங்கத்துகிட்ட மொறையிடலாம்... ஒரு அரசாங்கமே கொள்ளையடிச்சா நாம எங்க போயி முட்டிக்குறது...

(வேற எங்க...? இங்கன தான்... <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> )
avatar
சிசு
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City

Back to top Go down

Re: கல்வித்துறை வெப்சைட்டில் தனியாருக்கு, "லிங்க்': புத்தகங்களை, "டவுண்லோட்' செய்ய கட்டணம் வசூல்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Thu Apr 28, 2011 9:18 pm

C-Su wrote:என்னாங்கடா நடக்குது இங்க...????
திருடங்க கொள்ளையடிச்சா அரசாங்கத்துகிட்ட மொறையிடலாம்... ஒரு அரசாங்கமே கொள்ளையடிச்சா நாம எங்க போயி முட்டிக்குறது...

(வேற எங்க...? இங்கன தான்... [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] )

சரியா சொன்னீங்க நண்பரே

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: கல்வித்துறை வெப்சைட்டில் தனியாருக்கு, "லிங்க்': புத்தகங்களை, "டவுண்லோட்' செய்ய கட்டணம் வசூல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum