"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» அழகிய காலை வணக்கம்...!
by அ.இராமநாதன் Today at 9:10 am

» மனைவியுடன் இருக்கும்போது ஆயுதம் அவசியம்...!!
by அ.இராமநாதன் Today at 9:08 am

» தகவல் களஞ்சியம்
by அ.இராமநாதன் Yesterday at 11:42 pm

» நீல பெங்குவின்
by அ.இராமநாதன் Yesterday at 11:37 pm

» கருமை தேவாலயம்
by அ.இராமநாதன் Yesterday at 11:35 pm

» நம்புங்கண்ணே....நம்புங்க..!
by அ.இராமநாதன் Yesterday at 11:32 pm

» தலைவர் ஏன் போலீஸ் பாதுகாப்பு வேண்டாம்னு சொல்லிட்டார்?
by அ.இராமநாதன் Yesterday at 11:24 pm

» ஆர்கானிக் கிளாஸ் ரூம்ல பாடம் நடத்துவாங்க....!!
by அ.இராமநாதன் Yesterday at 11:20 pm

» சாத்தானின் குரல் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 11:17 pm

» வேப்பமர சாமி - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 10:42 pm

» அப்பா - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 7:06 pm

» மளிகை கடையில் இருப்பாள் இந்த ராணி...? -விடுகதை -
by அ.இராமநாதன் Yesterday at 6:56 pm

» ஆசைகளை அடக்குபவனே மாவீரன்
by அ.இராமநாதன் Yesterday at 6:49 pm

» ‘முதலையும் மூர்க்கனும் பிடித்தால் விடா’
by அ.இராமநாதன் Fri Mar 23, 2018 10:35 pm

» தாடியால் தடைபட்ட கல்யாணம்!
by அ.இராமநாதன் Fri Mar 23, 2018 10:31 pm

» பாரபட்ச சம்பளம்!
by அ.இராமநாதன் Fri Mar 23, 2018 10:12 pm

» சாய்த்துவிட்ட போதை!
by அ.இராமநாதன் Fri Mar 23, 2018 10:11 pm

» ஹீல்ஸ் மனிதன்!
by அ.இராமநாதன் Fri Mar 23, 2018 10:11 pm

» உதவிக்கு பரிசு கல்வி!
by அ.இராமநாதன் Fri Mar 23, 2018 10:10 pm

» நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..!
by அ.இராமநாதன் Fri Mar 23, 2018 4:19 pm

» காலவரையற்ற உண்ணாவிரதம் துவக்கினார் ஹசாரே
by அ.இராமநாதன் Fri Mar 23, 2018 4:13 pm

» வித்தியாசமான அழகுப்போட்டி.....!!
by அ.இராமநாதன் Fri Mar 23, 2018 2:51 pm

» படப்பிடிப்பில் இந்தி நடிகை அலியாபட் காயம்
by அ.இராமநாதன் Fri Mar 23, 2018 2:34 pm

» கத்ரீனா கைப் அம்மா திண்டுக்கல் ஆசிரியை
by அ.இராமநாதன் Fri Mar 23, 2018 2:32 pm

» இதற்குத்தான் நடிக்க வந்தேன்- ரகுல் பிரீத் சிங்
by அ.இராமநாதன் Fri Mar 23, 2018 2:28 pm

» தாய்லாந்தில் படப்பிடிப்பை நிறைவு செய்த மிஸ்டர்.சந்திரமௌலி படக்குழு
by அ.இராமநாதன் Fri Mar 23, 2018 2:22 pm

» புதுக்கவிதைகள்
by அ.இராமநாதன் Fri Mar 23, 2018 10:06 am

» கொசுக்களின் தாலாட்டில் ...
by அ.இராமநாதன் Fri Mar 23, 2018 9:55 am

» படமும் செய்தியும் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Mar 23, 2018 8:12 am

» பெருமழையும் சிறுதூறலும் - கவிதை
by அ.இராமநாதன் Thu Mar 22, 2018 11:28 pm

» டெஸ்ட் எடுக்காமலேயே எனக்கு கொழுப்பு அதிகம்னு சொல்றீங்களே, எப்படி?
by அ.இராமநாதன் Thu Mar 22, 2018 11:22 pm

» எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்கிறார்களே, என்ன கூட்டம் நடக்குது?
by அ.இராமநாதன் Thu Mar 22, 2018 10:29 pm

» கருகிய ரோஜாவும் கடைசிக் கேள்விகளும் - கவிதை
by அ.இராமநாதன் Thu Mar 22, 2018 10:14 pm

» எளிய பயிற்சி முறை என்பது முத்ரா பயிற்சிதாங்க....
by அ.இராமநாதன் Thu Mar 22, 2018 9:53 pm

» உடல் நலம் தரும் விரல் முத்திரைகள்
by அ.இராமநாதன் Thu Mar 22, 2018 9:50 pm

» உளியின் யுத்தம்! நூல் ஆசிரியர் : கவிஞர் பல்லவி குமார் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Thu Mar 22, 2018 8:50 pm

» உலக தண்ணீர் தினம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Thu Mar 22, 2018 8:48 pm

» விஸ்க்கியா, பிராந்தியா...எது வேணும்னு தெளிவா சொல்லித் தொலைங்க....!!
by அ.இராமநாதன் Thu Mar 22, 2018 5:39 pm

» டெம்பர் தமிழ் ரீமேக் படத்தில் விஷாலுக்கு ஜோடியாகும் நயன்தாரா பட நடிகை
by அ.இராமநாதன் Thu Mar 22, 2018 12:49 pm

» மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகிறார் அஞ்சலி?
by அ.இராமநாதன் Thu Mar 22, 2018 11:14 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Mar 22, 2018 7:59 am

» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Wed Mar 21, 2018 10:59 pm

» நெருப்பின் தாகம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Mar 20, 2018 9:06 pm

» நம் சமையல் அறையில்...
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 5:42 pm

» இந்தியாவில் மின்சார கார்களை களமிறக்கும் மாருதி சுஸுகி
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:51 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines ரௌத்திரம் - Rowthiram

Go down

ரௌத்திரம் - Rowthiram

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Thu Aug 18, 2011 4:52 pm

[You must be registered and logged in to see this image.]


பிறருக்கு துன்பமெனில் 'ரௌத்திரம்' பழகுவதில் தவறில்லை என்ற மையக்கருத்தை கருவாக வைத்து உருவான கதை.

சென்னை சட்டக்கல்லூரி மாணவி ஸ்ரேயா. ஸ்ரேயாவின் தோழியிடம் சில்மிஷம்
செய்துவிடுகிறான் சட்டக்கல்லூரியில் படிக்கும் ரௌடி ஒருவன். கல்லூரி
முதல்வரிடமும், போலீஸ் அஸிஸ்டண்ட் கமிஷ்னரான தன் தந்தையிடமும் புகார்
தெரிவிக்கிறார் ஸ்ரேயா. அவன் பிரபல ரௌடி 'கௌரி'க்கு வேண்டப்பட்டவன்
என்பதால் நடவடிக்கையெடுக்கத் தயங்குகிறார்கள். கலங்கிப் போகும் இருவரும்
சாலைக்கு வருகிறார்கள். சில்மிஷம் செய்தவன் சாலையில் அடிபட்டு
வந்துவிழுகிறான்.... ஜீவா நடுரோட்டில் அவன் கூட்டத்தைச் சேர்ந்தவர்களைப்
புரட்டியெடுக்கிறார். காரணம்.. ஜீவா பயணித்த ஷேர் ஆட்டோ விபத்திற்குள்ளாவது
சட்டக்கல்லூரி ரௌடி மற்றும் அவனது கூட்டத்தினரால். ஜீவாவின் கோபத்தைப்
பார்த்து காதல் கொள்கிறார் ஸ்ரேயா.ஜீவாவைப் பழிவாங்க நேரம் பார்த்திருக்கும் ரௌடிகள், ஜெயிலில் இருக்கும்
கௌரி வெளியே வரட்டும் என்று காத்திருக்கிறார்கள். பால்ய காலத்தில் தாத்தா
பிரகாஷ்ராஜிடம் பெற்ற பயிற்சியால் சாலையில் நடக்கும் குற்றங்களைத்
'தட்டி'க்கேட்கும் ஜீவா, ஒரு கட்டத்தில் ஜெயிலில் இருந்து வெளியேறி வரும்
பிரபல ரௌடி கௌரியைக் காயப்படுத்தி விடுகிறார். கௌரி குழுவினரின்
கொலைமுயற்சி, ஜீவாவின் குடும்பம், காதல் அனைத்தும் ஜீவாவின் கோபத்திற்கு
முன்பு என்ன ஆனது என்பதை விறுவிறுப்பாகப் படமாக்கியிருக்கிறார்கள்!!படத்தில் உண்மையான ஹீரோ யாரென்றால் அது அனல் அரசுதான். அருமையாய்
கோரியோகிராப் செய்யப்பட்ட சண்டைக்காட்சிகள். நிஜமாகவே இன்னவோட்டிவ் அண்ட்
இண்ட்ரஸ்டிங். சண்டைக் காட்சிகளை எக்ஸிக்யூட் செய்த விதத்தில் அசத்தல்.
அதற்கு பிறகுதான் எல்லோரும். குறையாய் சொல்லப் போனால் சில இடங்களில் அந்த
ஸ்லோமோஷன் ஆக்ஷன் சீன்கள் சுவாரஸ்யத்தை குறைக்கிறது. ஆரம்பக் காட்சியில்
ஐந்து நிமிடமே வரும் பிரகாஷ்ராஜ் எபிசோட் அட்டகாசம். அதற்கு காரணம்
பிரகாஷ்ராஜின் பாடி லேங்குவேஜும், அதை படமாக்கிய விதமும் நம்ப வைக்கிறது.
ஜீவாவிற்கு 'சத்யா' போல ஒரு படம் பண்ண வேண்டும் என்ற ஆசை வேண்டுமானால்
நிறைவேறியிருக்கலாம். ஆரம்ப காட்சிகளுக்கு அப்புறம் ஒரு கீறல்கூட படாமல்
தொடர்ந்து எல்லாரையும் பந்தாடிக் கொண்டேயிருப்பதை நம்ப முடியவில்லை.
அதற்கான பாடி லேங்குவேஜும், நடிப்பும் குறையே. ஆக்ஷன் ஹீரோ வரிசையில்
சேர்க்க வேண்டிய தகுதிகளை இப்படத்தில் காட்டியிருக்கிறார். வழக்கமாய்
கலகலவென பேசியே பார்த்த ஜீவா இதில் கொஞ்சம் பேசாத ஜீவாவாக போரடிக்கவே
செய்கிறார். தொடர்ந்து இவரை கொல்ல முயல்வதே ஒரு கதையாய் போனவுடன் ஆரம்பித்த
சுறுசுறுப்பு சுர்ரென இறங்கிவிடுகிறது.
ஸ்ரேயாவுக்கு கொடுத்த காசுக்கு உருப்படியான கேரக்டர். வழக்கமாய் வரும்
லூசுப் பெண் ஹீரோயின் கேரக்டர் போலில்லாம கொஞ்சம் யோசிக்கும்படியான
கேரக்டரை கொடுத்த இயக்குநருக்கு ஒரு பெரிய கும்பிடே போடலாம். ஸ்ரேயா,
ஜீவாவின் காதலியாக வருகிறார். "நாங்க தனியா இருக்கும் போதுகூட அவன் என்னை
கிஸ் பண்ணினது இல்ல, காதலர் தினத்தன்னிக்கு பார்வர்ட் மெஸேஜ்கூட
அனுப்பினதில்ல. இதே மாதிரிதான் என்னை தவிர அவன் வேற எந்த பெண்ணையும்
ஏறெடுத்து பார்க்க மாட்டான். அதான் என் சிவா" என ஜீவாவிற்கு தன் தோழியிடம்
நற்சான்றிதழ் தரும் காட்சியில் ஸ்ரேயா அழகோ அழகு. தோழிக்காக தன் தந்தையிடம்
கெஞ்சுவதும், கோபத்தால் சீறுவதும், நன்றாகவே நடித்திருக்கிறார்.
ஜீவா-ஸ்ரேயா காதல் காட்சிகள் சுவாரஸ்யம்.கிட்டுவாக வரும் அந்த மகாகுண்டு கணேஷ் ஆச்சார்யா, கவுன்சிலர், கௌரியின்
அல்லக்கை, இன்னொரு லோக்கல் அல்லக்கை ரவுடியாக வரும் இயக்குநர் கோகுல்,
பக்கா லோக்கல் பாஷை பேசும் எம்.எல்.ஏ என்று ஏகப்பட்ட கேரக்டர்கள். எல்லா
கேரக்டர்களும் வரும் போது பெரிய பில்டப்போடு தான் வருகிறார்கள் முடியும்
போது பொசுக், பொசுக்கென வீழ்ந்துவிடுகிறார்கள்.பக்கத்துக் குப்பத்தின் தாதாவாக பாலிவுட் நடன இயக்குநர் கணேஷ்
ஆச்சார்யா. ஒரு பாடலில் மாறுபட்ட நடனம் மூலம் அசத்தியிருக்கிறார். 'இன்னா
பெரியா பயிப்பாநீ...' என்று பொல்லாதவனில் மிரட்டும் சுருட்டைமுடி
நடிகர்தான் பிரதான ரௌடி 'கௌரி'.ஜீவாவின் பெற்றோர்களாக வரும் ஜெயப்பிரகாஷ், லட்சுமி ராமகிருஷ்ணன்
ஆகியோர் தங்களது பங்கை சிறப்பாகச் செய்திருக்கின்றனர். ஜீவாவிற்கும் அவரது
தந்தையாக வரும் ஜெயப்பிரகாஷிற்கும் இடையே நடக்கும் உரையாடல்கள் நம்
வீட்டில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை காட்டுகின்றன. ஸ்ரீநாத், சத்யன் ஆகிய
இருவரும் சில இடங்களில் சிரிக்க வைக்க முயற்சிக்கிறார்கள்.எழுதி இயக்கியிருக்கும் கோகுல், முதல் படத்திற்கு நல்ல அவுட்புட்தான்
என்றாலும் திரைக்கதையில் கோட்டைவிட்டுவிட்டார் என்றே சொல்ல வேண்டும். முதல்
பாதியில் இருந்த சுவாரஸ்யம் இரண்டாவது பாதியில் அப்படியே தொங்கிப் போய்
சரிடா இப்ப அவனை கொல்லப் போறீங்களா? இல்லியான்னு புலம்ப வைத்துவிடுகிற
அளவுக்கு டிராகிங்காக போனதுதான் பெரிய மைனஸ். குடும்ப சம்மந்தப்பட்ட
காட்சிகளில் கிடைக்கும் சுவாரஸ்யம் பின் பாதியில் வரும் ஆக்ஷன் காட்சிகளில்
இல்லாம போய்விடுகிறது. கௌரி.. கௌரி என்று ஆளாளுக்கு சொல்லும் போது நடு
முதுகில் சில்லென ஏற வேண்டும் என்கிற அளவுக்கு முதல் பாதியில் பில்டப்
செய்தவர்கள். அதற்கான கரெக்டான காஸ்டிங்கை செய்திருந்தால் இன்னும்
ஏறியிருக்கும் சூடு.
இயக்குநரைப் போன்றே ஒளிப்பதிவாளர் என்.ஷண்முக சுந்திரத்திற்கும்
அறிமுகப் படம் இது. பிரகாஷ்ராஜின் சண்டை, வில்லன் கௌரியை அறிமுகப்படுத்தும்
காட்சி, இரவில் நடக்கும் சண்டைக் காட்சிகள், ஸ்ரேயாவும், ஜீவாவும்
பாலத்தில் நடந்து வரும் காட்சி என்று பல காட்சிகளில் இவரது ஒளிப்பதிவு
நம்மை மிரள வைக்கிறது. ஜீவா, ஸ்ரேயா காதல் காட்சிகளை கவிதை போல
படம்பிடித்திருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் இவரது கேமராவும் பம்பரமாய்
சுழன்றிருக்கிறது. கண்டிப்பாக இவர் முன்னணி ஒளிப்பதிவாளர்கள் வரிசையில்
இடம்பிடிப்பார் எனலாம்.
இசையமைப்பாளர் பிரகாஷ் நிக்கிக்கும் இது முதல் படம். படத்திற்கு
பாடல்கள் பலம் சேர்க்கவில்லை. இன்னும் அதில் கவனம் செலுத்தியிருக்கலாம்.
'மாலை மங்கும் நேரம்' பாடல் மட்டும் காதுகளில் ரீங்காரமிடுகிறது. மதன்
குணதேவாவின் படத்தொகுப்பு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
குட்டி குட்டியாய் நிறைய வேலைகளை இயக்குநர் செய்திருக்கிறார். கௌரியின்
ஆட்கள், அந்த கவுன்சிலர், எம்.எல்.ஏ, எதிர் கோஷ்டி கிட்டு, அவனது ஆட்கள்,
இவர்கள் பேசிக் கொள்ளும் வசனங்கள் எல்லாம் படு நேச்சுரல். படம்
ஆரம்பித்ததிலிருந்து ஏகப்பட்ட வில்லன்களை காட்டியதில் எவனோடு தான்
ஜீவாவுக்கு பிரச்சினை என்று மழுங்கி போகும் அளவிற்கு ஒரே வில்லன்
கோஷ்டியாய் இருப்பது ஒரு மைனஸே.
ரௌத்திரம் - பழகிட்டான்!நடிகர்கள்
ஜீவா, ஸ்ரேயா, கௌரி, சத்யன், ஜெயப்பிரகாஷ், பிரகாஷ்ராஜ், கணேஷ் ஆச்சார்யா, லட்சுமி ராமகிருஷ்ணன், ஸ்ரீநாத்
இசை
பிரகாஷ் நிக்கி
இயக்கம்
கோகுல்
தயாரிப்பு
ஆர்.பி. சௌத்ரி

நன்றி கூடல்

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum