"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வைகை ஆறு! கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 21, 2017 8:39 pm

» முனைவர் நிர்மலா மோகன் புலமை நலம்! பதிப்பாசிரியர் : பேராசிரியர் முனைவர் பா.வளன் அரசு ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Tue Nov 21, 2017 8:27 pm

» மாம்பழ சர்பத்
by அ.இராமநாதன் Mon Nov 20, 2017 8:56 pm

» 2018ல் வருகிறது புதிய ஆபத்து
by அ.இராமநாதன் Mon Nov 20, 2017 7:26 pm

» பல்சுவை - வாட்ஸ் அப்-ல் பெறப்பட்டவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Mon Nov 20, 2017 7:02 pm

» ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம்
by அ.இராமநாதன் Mon Nov 20, 2017 3:03 pm

» சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
by அ.இராமநாதன் Mon Nov 20, 2017 12:04 am

» பழைய இரும்புச்சத்து மாத்திரைகளுக்கு பேரீச்சம்பழம்…!!
by அ.இராமநாதன் Mon Nov 20, 2017 12:03 am

» உலக அழகி மனுஷியால் திணறிய கூகுள்
by அ.இராமநாதன் Sun Nov 19, 2017 11:05 pm

» நடிகரானார் கவுதம் மேனன்!-
by அ.இராமநாதன் Sun Nov 19, 2017 9:13 pm

» இயக்குனராகும் மதுபாலா!
by அ.இராமநாதன் Sun Nov 19, 2017 9:12 pm

» கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
by அ.இராமநாதன் Sun Nov 19, 2017 9:12 pm

» சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
by அ.இராமநாதன் Sun Nov 19, 2017 9:11 pm

» பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்
by அ.இராமநாதன் Sun Nov 19, 2017 9:10 pm

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Sat Nov 18, 2017 9:04 pm

» டூ லெட் தமிழ் திரைபடம் சிறந்த படமாக தேர்வு
by அ.இராமநாதன் Sat Nov 18, 2017 5:17 am

» முதல் பார்வை: 'தீரன் அதிகாரம் ஒன்று' - நேர்த்தியான போலீஸ் சினிமா!
by அ.இராமநாதன் Sat Nov 18, 2017 5:15 am

» வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
by அ.இராமநாதன் Sat Nov 18, 2017 5:11 am

» எந்த கட்சி ஆட்சிக்கு வருதோ, அதுதான் நம்ம கட்சி…!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 9:56 pm

» ஆபரேசன் பண்ணிக்க பயப்படாதீங்க…!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 9:56 pm

» கிட்னி திருடுபோனா நிர்வாகம் பொறுப்பல்ல…!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 9:55 pm

» மாமியாரை சமாளிக்க சக்களத்தி துணை வேணும்...!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 7:42 pm

» வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 7:36 pm

» வீடு வரும்போதே ஏன் இறங்கலை...!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 7:34 pm

» சொரணை இருக்கிறவளான்னு கிள்ளி பார்த்தேன்...!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 7:26 pm

» - மேய்ச்சல் - கவிதை
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 5:44 pm

» பயம் - கவிதை
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 5:44 pm

» கும்ப ராசிக்காரர்களுக்கு காரத்திகை மாத பலன்
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 5:23 pm

» சென்னையில் 5ஜி சேவை: நோக்கியா தகவல்!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 5:18 pm

» போர்ப்ஸ் பத்திரிக்கையின் இளம் கண்டுபிடிப்பாளர்கள் பட்டியலில் இடம்பிடித்த சென்னை பெண்
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 5:12 pm

» உரிய அனுமதி கிடைத்தவுடன் தமிழகத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கப்படும்: இந்திய அணுசக்தி கழகம்
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 5:09 pm

» குரலை இனிமையாக்கும் மாங்கனி
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 5:07 pm

» இது வாட்ஸ் அப் கலக்கல்...!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 3:18 pm

» காலை வணக்கம்....
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 3:17 pm

» கழுதை போச்சே! - சிறுவர் கதை
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 3:12 pm

» போஸ்ட் ஆபீசில், 'ஆதார்' சேவை
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 3:03 pm

» ‘இம்சை அரசன்’ படத்தில் நடிக்க மறுப்பு நடிகர் வடிவேலுவுக்கு நோட்டீஸ்
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:56 pm

» சூர்யா வெளியிட்ட நாச்சியார் டீசர்!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:56 pm

» கட்டுகட்டாக ரூ. 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுடன் நடிகர் விஷால் டுமீல் வீடியோ...
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:55 pm

» தீபிகாவின் மூக்கை வெட்டுவோம்! ராஜபுத்திர அமைப்பு கடும் மிரட்டல்
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:51 pm

» ஆசிய பணக்கார குடும்பங்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:50 pm

» புதிய உச்சத்தை தொட்டது முட்டை விலை
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:49 pm

» நகைக்கடையின் கூரையில் துளைபோட்டு பட்டப்பகலில் உள்ளே இறங்கி துணிகர கொள்ளை
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:48 pm

» நாங்க சுற்றுலா பயணிகள் அல்ல... இரயில்வே பணியாளர்கள்!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:47 pm

» பத்மாவதி படத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:45 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை - Konjam Veyil Konjam Mazhai

View previous topic View next topic Go down

கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை - Konjam Veyil Konjam Mazhai

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Thu Aug 18, 2011 4:54 pm

[You must be registered and logged in to see this image.]

வயது கோளாரால் ஏற்படும் காதல், அந்த
காதலினால் உண்டாகும் கலவரம், இந்த கலவரத்திற்கு இறையாகும் இரண்டு உயிர்கள்
என மனிதர்களால் பிரிக்கப்படும் காதலர்களை, காலம் எப்படி ஒன்று சேர்க்கிறது
என்பதுதான் கதை.

பள்ளிப்பருவக்காதலை 'வைகாசி பொறந்தாச்சு', 'அழகி, 'ஆட்டோகிராப்', மாதிரி
நேர்த்தியான திரைக்கதையில் சொன்னவர்களும் உண்டு. லாஜிக் கோளாறுகளால்
சொதப்பியவர்களும் உண்டு. முதல் பாதியில் எதார்த்தமாய் காதல் கதை சொல்லி
விட்டு பின் பாதியில் குழப்பமான மன நிலையில் எழுதப்பட்ட திரைக்கதையால்
வெற்றியை மயிரிழையில் தவற விட்டுட்டார் அறிமுக இயக்குநர் ஏகாதசி.

பள்ளி காலத்தில் காதல் கொள்ளும் தேஜ்-கீத்திகா ஜோடியின் காதல் ஊர்
பிரச்சினையால் உடைகிறது. வெவ்வேறு கிராமங்களைச் சார்ந்த இவர்களது காதல்,
இரண்டு கிராமத்திற்கும் இடையே ஏற்படும் பிரச்சினையால் பாதிக்கப்படுகிறது.
யாருக்கு வேண்டுமானாலும் கல்யாணம் பண்ணி கொடுப்பேன், அந்த ஊர்க்காரனுக்கு
மட்டும் கட்டிக்கொடுக்க மாட்டேன் என்று கீத்திகாவின் தாய் மாமன்
மல்லுக்கட்ட, அவருக்கு போட்டியாக கல்யாணம் என்று ஒன்று நடந்தால் அது
அவனோடுதான் என்று தனது மாமாவை எதிர்க்கிறார் கீத்திகா. இப்படி காதலுக்காக
போராடும் கீத்திகா, பஞ்சாயத்தில் தான் தேஜ்ஜை காதலிக்கவில்லை என்று திடீர்
பல்டியடிக்க, மனமுடைந்த ஹீரோ சென்னைக்கு புறப்பட, சென்னையில் வசிக்கும்
ஏகாதசியை திருமணம் செய்துகொண்டு சென்னையில் வாழ்கிறார் கீத்திகா.

காதலில் பிரிந்த இவர்கள் சென்னையில் பக்கத்து பக்கத்து குடியிருப்பில்
வசிக்க நேரிட்டாலும், தங்களை ஒருவருக்கொருவர் தெரியாதவர்கள் போல வாழ்ந்து
வருகிறார்கள். இதற்கிடையில் கீத்திகாவின் இளம் வயது காதலன் தேஜ் என்பது
ஏகாதசிக்கு தெரிய வர கொடுமைகளுக்கு ஆளாகும் கீத்திகா இறுதியில் என்ன ஆனார்
என்பதுதான் மீதிக்கதை.

எட்டு வருடங்களுக்கு முன்பு தங்கர்பச்சான் இயக்கிய 'அழகி' படத்தின்
சாயலை ஒத்திருக்கிறது படம். ஆனால் நகரமயமாதலில் முற்றிலும் சிக்கிவிடாத
இடைநிலைக் கிராமங்களின் மனோநிலையை, நகல் எடுத்துக்காட்டிய வகையில்
வேறுபட்டு நிற்கிறது படம். தொலைக்காட்சிப் பெட்டிகள் கொண்டுவரும் நாகரிக
வாழ்க்கையைப் பற்றி எந்தக் கவலை இல்லாத ஒரு பழைய தலைமுறை... படித்து விட்டு
மாநகரத்துக்கு புலம்பெயர்ந்து வாழும் இளையதலைமுறை... இந்த இரண்டு
துருவங்களுக்கு மத்தியில் பயணப்பட்டிருக்கிறது கதை.

நாயகன் தேஜுக்கு பெரிதாக நடிக்க வாய்ப்பு இல்லையென்றாலும், தனக்கு கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்.

கதாநாயகி கீத்திகாவுக்கு அழகு கம்மியென்றாலும் நடிப்பு ஜாஸ்தி. ஒரு
அரக்கனை கட்டிக்கொண்டு அவ்வளவு அமைதியாக இருக்கும் அவர், இறுதிக்காட்சியில்
சாமி வந்ததை போல சிலிர்த்துக் கொண்டு கிளம்புகையில் நமக்கே அச்சம்
வருகிறது.

முறை மாமனாக நடித்திருக்கும் அந்த சிங்கப்பூர் துரைராஜ், பார்க்கும்போதே
பதைபதைக்க வைக்கிறார். அவ்வளவு பெரிய பள்ளிக்கூடத்துக்கு ஒரே ஒரு
வாத்தியார். அதுவும் மனோபாலா. சொல்லவே வேண்டாம்... சுத்தமாக எடுபடவேயில்லை.
குத்தாட்டம் போட்டிருக்கிறார் சுஜிபாலா.

படத்தின் எதிர்மறையான அழகியலோடு வந்து நிற்கிறது ஏகாதசியின்
கதாபாத்திரம். (இயக்குநரே நடிச்சு சும்மா அதகளம்பண்றாருங்கோ) சென்னை
மாநகராட்சியின் கட்டணக் கழிவறை ஒன்றை குத்தகைக்கு எடுத்திருப்பவன். குறைவான
கட்டணம் செலுத்தி கழிவறைக்குள் போய்வந்தவன் பொய் சொல்கிறான் என்பதை, அவன்
கையை முகர்ந்து பார்த்துக் கண்டுபிடிக்கத் தயங்காதவன். யதாத்தத்திற்கு மிக
அருகில் நிற்கும் ஒரு சாதாரணனின் இந்தக் கதாபாத்திரம் தமிழ்சினிமாவுக்கு
புதுசு! தூக்கிக் கட்டிய வேட்டி, கழுத்தில் துண்டு என்று இவரின்
கதாபாத்திரத்திற்கு சரியாக பொருந்தியிருக்கிறார். மொத்தத்தில் ஒரு ஹீரோவாக
ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து விடுகிறார் ஏகாதசி!

படத்தில் மிகச்சிறந்த பகுதி என்றால், கிராமத்தில் இளம்பெண்களின் மனநிலை
பாதிக்கப்பட்டால் அதற்கான உண்மையான காரணத்தை உணர மறந்து, பேய்
பிடித்திருப்பதாக நினைத்து, பூசாரியைக் கொண்டு உடுக்கடிப்பதும்,
மந்தரிப்பதும் எத்தனை முட்டாள்தனமான மூட நம்பிக்கை என்பதை,
இறுதிக்காட்சியில் தோலுரித்துக் காட்டியிருக்கிறார்கள்.

படத்தின் அனைத்து பாடல்களையும் இயக்குநரே எழுதியிருக்கிறார். 'உசுர
திருடிப் போறா...' பாடல் அழகான தாலாட்டு. பின்னணி இசையிலும், பாடல்கள்
இசையிலும் கிராமத்தையும், கிராமியத்தையும் நம் கண்முன் நிறுத்தும்
பரணியும், 'மைனா' புகழ் ஒளிப்பதிவாளர் சுகுமாரும் படத்தின் பலம்!

சின்ன விஷயங்களை ஊதி பெரிதாக்கி, அரிவாளால் வெட்டிக் கொள்ளும்
கதைக்களத்தை பாரதிராஜா காலத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறது
தமிழ்சினிமா. ஆனால், வட்டி கொடுக்கல் வாங்கல் செய்யும் ஒருவனின்
சின்னவிஷயம் எப்படி ஊர்ப்பகையாக உருவெடுக்கிறது என்பதை, நுணுக்கமாகச்
சித்தரித்திருக்கும் அறிமுக இயக்குநர் ஏகாதசி, கொஞ்சம் முயன்றால் இன்னும்
நல்ல படங்களை தரமுடியும்.

கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை - கொஞ்சம் சுவாரஸ்யம் கொஞ்சம் சொதப்பல்!

நடிகர்கள்
தேஜ், கீத்திகா, ஏகாதசி, 'பசங்க' செந்தில்குமாரி, மனோபாலா, சுஜிபாலா
இசை
பரணி
இயக்கம்
ஏகாதசி
தயாரிப்பு
துவார் ஜி.சந்திரசேகரன்

நன்றி கூடல்

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56806
Points : 69546
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum