"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
by அ.இராமநாதன் Yesterday at 8:52 am

» ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
by அ.இராமநாதன் Yesterday at 8:51 am

» சமந்தா வரவேற்பு!
by அ.இராமநாதன் Yesterday at 8:50 am

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Yesterday at 8:49 am

» சிலம்பம் பயிலும் விஜய் ஆண்டனி!
by அ.இராமநாதன் Yesterday at 8:48 am

» மாப்பிள்ளைக்கு ஏன் இரண்டு டூ வீலர் வாங்கி கொடுத்திருக்கீங்க?
by அ.இராமநாதன் Yesterday at 8:37 am

» இந்த ஆஸ்பத்திரிக்கா உயிரையே கொடுத்தவங்க...!!
by அ.இராமநாதன் Yesterday at 2:12 am

» நாச்சியார் விமர்சனம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:50 pm

» பிரியா வாரியர் கண்ணடிக்கும் பாடல் வாபஸ் இல்லை ; நடிகை பேட்டி கொடுக்க இயக்குனர் தடை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:24 pm

» ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:20 pm

» தெலுங்கில் நடித்த ஸ்ரேயா படம் இணையதளத்தில் வெளியானது
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:17 pm

» நாட்டை சூறையாடும் வங்கியின் விஐபி வாடிக்கையாளர்கள்: மம்தா தாக்கு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:38 pm

» மெக்சிகோவில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் கட்டிடங்கள் குலுங்கின
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:37 pm

» பிஎன்பி மோசடி: மேலும் ரூ. 549 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்; நிரவ் மோடி இருப்பிடம் தெரியாது - வெளியுறவுத்துறை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:36 pm

» தொழில்நுட்ப ஆஸ்கர் விருது வென்ற இந்தியர்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:35 pm

» கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது அமலாக்கத்துறை விசாரிக்க கோர்ட்டு அனுமதி
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:33 pm

» மணிசங்கர் அய்யர் மீது தேசதுரோக வழக்கு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:32 pm

» நாணயம் பெற மறுத்தால் நடவடிக்கை: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:31 pm

» ரூ.9க்கு ஏர்டெல் புதிய திட்டம் அறிவிப்பு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:25 pm

» ரூ.99க்கு பி.எஸ்.என்.எல். அதிரடி சலுகை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:24 pm

» மருத்துவ குறிப்புகள் - தொடர்பதிவு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:26 pm

» நீரிழிவு நிலை உள்ளவர்களா உங்கள் உணர்திறன் குறைவடையும்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:24 pm

» திறந்தநிலை கல்வி நிறுவனங்களில் பிளஸ் 2 படிப்பவர்களுக்கு நீட் தேர்வு எழுத அனுமதி கிடையாது
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:07 pm

» ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்படவில்லை: படத்திறப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் வாதம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:06 pm

» புதுச்சேரி - பெங்களூர் இடையே புதிய விமான சேவை மீண்டும் தொடக்கம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:05 pm

» சனீஸ்வரா காப்பாத்து!
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:02 pm

» நாம் அழுதால் தாங்கமாட்டார் ஆஞ்சநேயர்!
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:01 pm

» பெண்ணிடம் திருடப்பட்ட செயின் அவரிடமே அடகுக்கு வந்த அதிர்ச்சி சம்பவம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 1:59 pm

» 10 செகண்ட் கதைகள்
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 11:03 pm

» பொது அறிவு - வினா, விடைகள்
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 10:50 pm

» படித்ததில் பிடித்தது - பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 10:40 pm

» உயிர்த்தெழும் கதாபாத்திரங்கள் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 10:25 pm

» முத்தங்களை கக்கிய பொழுதுகள் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 10:21 pm

» கண்கள் பாதிப்பை குறைக்கும் உடற்பயிற்சிகள்
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 3:05 pm

» வைரலாகும் நயன்தாராவின் பர்சனல் புகைப்படம்....
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:58 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டுன் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:53 pm

» பா.இரஞ்சித்தின் படத்தை வெளியிடுகிறது லைகா நிறுவனம்
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:44 pm

» தமிழகத்திற்கு 177.25 டி.எம்.சி நீரை தர வேண்டும் - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:38 pm

» தாய்ப்பால் கொடுத்த முதல் திருநங்கை அமெரிக்காவில் சாதனை படைத்த மருத்துவர்கள்!
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:34 pm

» மகன் வாங்கிய காரில் மருமகள் செல்வதா? காரை தீயிட்டு கொளுத்திய தாய்!
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:29 pm

» சென்னையில் கஞ்சா வைத்திருந்த கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:27 pm

» சிந்தனை சிகிச்சை-5
by ராஜேந்திரன் Fri Feb 16, 2018 2:19 pm

» தமிழ் சிதைந்தால் தமிழினமே சிதைந்து போகும்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Feb 16, 2018 8:42 am

» ஓலமிடும் ஆற்று மணல் ! நூல் ஆசிரியர்கள் : மூத்த எழுத்தாளர் ப. திருமலை, கே.கே.என். ராஜன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Fri Feb 16, 2018 8:35 am

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Feb 15, 2018 11:00 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கருங்காலி - Karungali

Go down

கருங்காலி - Karungali

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Thu Aug 18, 2011 5:00 pm

[You must be registered and logged in to see this image.]

இளம் தம்பதிகள் மத்தியில் இன்றைக்கு இருக்கும் உளவியல் சம்பந்தப்பட்ட பிரச்சினைதான் கதை.

பொறுக்கி, பெண் பித்தன் இப்படியொரு கதாபாத்திரத்தில் நாயகனாக நடித்திருக்கிறார் இயக்குநர் மு.களஞ்சியம். சேரிப்பகுதியில் அனாதைகளோடு
அனாதையாக
வளர்ந்து வரும் நேரத்தில் ஒரு கஞ்சாபேர்வழியின் கையில் அந்த சிறுவர்
கூட்டமே சிக்குகிறது. அவனிடம் கஞ்சா பொட்டலம் விற்க ஆரம்பித்து ஒரு
கட்டத்தில் கொலைகாரனாகவும் மாறுகிறார். அதோடு பெண்களை அனுபவிக்க வேண்டும்;
ஆனால் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்று நினைக்கும் பெரிய பெண்
பித்தனாகவும் இருக்கிறார். தனது கூட்டத்தில் வளரும் அஸ்மிதாவுடன்
கணவன்-மனைவி போன்று வாழ்பவர் அவள் வயிற்றில் தனது குழந்தை வளர்கிறது என்பது
தெரிந்ததும் அவளை சுட்டுக் கொல்கிறார் களஞ்சியம். அப்படிப்பட்டதொரு மிருக
குணம் கொண்ட கேரக்டர்.

அதன்பிறகு சாலையில் விபத்துக்குள்ளாகி கிடக்கும் ஒரு டாக்டர்
பெண்ணின்(சுனிதா வர்மா) அழகில் மயங்கி அவளை இவர் காப்பாத்துகிறார். ஆனால்
அந்த பெண்ணே இவரை திருமணம் செய்து கொள்ள முன்வருகிறாள். இதனால் அவளுக்கு
கணவனாகி சுகபோகமான வாழ்க்கையை அனுபவிக்கும் களஞ்சியம், குழந்தையின்மை
காரணமாக மனைவியிடம் சிகிச்சைக்கு வரும் அஞ்சலியை அனுபவிப்பதற்காக
தொடர்கிறார். இதற்காக சில நாடகங்களை நடத்துகிறார். களஞ்சியத்தின் காமப்
பிடிக்குள் அஞ்சலி சிக்கினாரா? இல்லை தப்பித்தாரா? என்பதே மீதிக்கதை.

ரவியாக நடித்த இயக்குநர் களஞ்சியத்திற்கு நடிப்பும், பாடி லேங்குவேஜும்
வருவேனா என்கிறது. அதிலும் ரவுடியாய் இருக்கும் காலத்திலாவது தலை முடியும்,
தாடியும் கொஞ்சமாச்சும் காப்பாற்றுகிறது. இரண்டாவது பாதியில்
திருந்தியவனாய் வரும் போது அவரது பார்வைகளும், பாடி லேங்குவேஜும் சுத்தமாக
எடுபடவில்லை.

அஞ்சலியின் கணவனாக வரும் சீனிவாசன் இரண்டாவது கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். இவர் நடிப்பு நன்றாக உள்ளது.

அஞ்சலி எந்தவித மேக்கப்பும் இல்லாமல் நடிப்பில் எந்தவித செயற்கைத்தனமும்
இல்லாமல் பக்கா கிராமத்து பெண்ணாக தனது சொந்த குரலிலேயே பேசி
நடித்திருக்கிறார். நடிப்பில் பலபடி உயர்ந்து நிற்கிறார். சுனிதா வர்மாவை
அழகாக காண்பித்திருக்கிறார்கள். அதேபோல் தனது கேரக்டரை கச்சிதமாக
செய்திருக்கிறார். ஆனால் இவர்கள் அனைவரையும் விட சேரிப்பெண்ணாக வந்து
களஞ்சியத்தையே சுற்றி சுற்றி வரும் அஸ்மிதாவின் கேரக்டர் கொஞ்ச நேரமே
வந்தாலும் மனதில் நிழலாடுகிறது.

பூமணி, கிழக்கும் மேற்கும், பூந்தோட்டம், நிலவே முகம் காட்டு, மிட்டா
மிராசு போன்ற வெற்றி படங்களை தந்த மு.களஞ்சியம் முதல் முறையாக கதை நாயகனாக
நடித்து இயக்கி இருக்கும் படம். பூமணி படத்தின் திரைக்கதை இன்னும் அப்படியே
கண் முன்னே இருக்கிறது பதினைந்து வருடங்களுக்கு பிறகும் அந்த கதையை மறக்க
முடியாது அப்படி ஒரு படம். ஆனால் பூமணி உடன் ஒப்பிடும் போது கருங்காலியின்
திரைக்கதைக்கு களஞ்சியம் மெனக்கெடவில்லை என தெரிகிறது.

ஒளிப்பதிவு, எடிட்டிங், ஸ்ரீகாந்த் தேவாவின் இசை எல்லாமே சுமார் ரகம்.
அதிலும் அஞ்சலி, களஞ்சியம் சம்மந்தப்பட்ட காட்சிகளின் பின்னணியிசை பிட்டு
படம் தோற்றது போங்கள். 'கன்னிப்பருவத்திலே' படத்தில் வடிவுக்கரசி ஒரு கணம்
பாக்யராஜுடன் சபலப்பட்டதினால் நடக்கும் பல விஷயங்கள் நிதர்சனமான கதை. ஆனால்
இவ்வளவு ட்ராமாட்டிக்காக அடல்டரி நடைபெறும் என்று கதை செய்வது படு
அபத்தம்.

அதுவும் டாக்டர் சொல்லி தான் உங்களுடன் உறவு கொள்ள
அனுப்பப்பட்டிருகிறேன். என் பெயர் கூட வேண்டாம். என்னை டாப்லெட்டாக
நினைத்து ஒரு ஐந்து நிமிஷம் செக்ஸ் வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்பவனை
எந்த ஒரு அப்பாவி பெண்ணும், கிராமத்துப் பெண்ணும், 'தெய்வத்திருமகள்'
கிருஷ்ணாவின் மனநிலையில் உள்ள பெண்ணாயிருந்தாலே ஒழிய நம்ப மாட்டாள்.

ஏராளமான லாஜிக் மீறல்கள், எதையோ சொல்ல நினைத்து எங்கோ கதை சுற்றுகிறது,
கடைசி இருபது நிமிடத்தில் மட்டும் விறுவிறுப்பாக உள்ளது, அந்த விறுவிறுப்பை
ஆரம்பத்தில் இருந்தே தொடர்ந்திருந்தால் இன்னும் நன்றாக வந்திருக்கும்.

கருங்காலி - கண்றாவி





நடிகர்கள்
மு.களஞ்சியம், சீனிவாசன், அஞ்சலி, அஸ்மிதா, சுனிதா வர்மா, அலெக்ஸ், பொன்முடி
இசை
ஸ்ரீகாந்த் தேவா
இயக்கம்
மு.களஞ்சியம்
தயாரிப்பு
ஜி.விவேகானந்தன்

நன்றி கூடல்

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: கருங்காலி - Karungali

Post by அ.இராமநாதன் on Thu Aug 18, 2011 6:52 pm

[You must be registered and logged in to see this image.]
--

மிக நீண்ட விமரிசனம் செய்துவிட்டு,
கருங்காலி - கண்றாவி என முடித்திருப்பது
நல்லா இல்லை..!
-
கருங்காலி - சுமார் ரகம் என மென்மையாக
கூறி இருக்கலாம்..


_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 25590
Points : 55720
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: கருங்காலி - Karungali

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Thu Aug 18, 2011 7:27 pm

[You must be registered and logged in to see this image.]

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: கருங்காலி - Karungali

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum