Latest topics
» ருக்மணி ஹைக்கூ 6
by pakee Today at 4:08 am

» சிரிப்பவர்கள்...
by pakee Today at 4:07 am

» காலம் சொல்லும் பதில்...
by pakee Today at 4:07 am

» கைக்கு எட்டாத நிலா...
by pakee Today at 4:07 am

» வாழ்க்கை என்றும் உந்தன் கையில்ட...
by pakee Today at 4:06 am

» அமரர் கல்கி அவர்களின் அமரதாரா நாவல்
by tamizhmuhil Today at 1:50 am

» வாழ்க்கை சந்தோஷமாகத்தான் போயிட்டு இருக்கு!” – அமலாபால்
by vinitha Yesterday at 9:57 pm

» காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
by sadasivam Yesterday at 8:52 pm

» நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு
by ஆளுங்க Yesterday at 8:31 pm

» பாக்கெட் சைஸ் எவ்வளவு வைக்கட்டும் சார்..? -
by thaliranna Yesterday at 8:28 pm

» கவர்ச்சிக்கன்னிகள்லே யாரையேனும் செலக்ட் பண்ணுங்க...!
by thaliranna Yesterday at 8:27 pm

» வலது காதுக்கான டாக்டர்..!
by thaliranna Yesterday at 8:26 pm

» சிங்கப்பல் இருக்கிறதால, முன்னுரிமை ..!
by thaliranna Yesterday at 8:25 pm

» கீதாவோட மாமியார் மாதிரியே எனக்கும் வேணும்..!
by thaliranna Yesterday at 8:23 pm

» அரிச்சந்திரன் கதையிலிருந்து நீ அறிவது யாது?
by thaliranna Yesterday at 8:23 pm

» டாக்டர் பட்டம்
by thaliranna Yesterday at 8:22 pm

» தாய்க்குப் பின் தாரம் சரி....தாரத்திற்குப் பின்..?
by thaliranna Yesterday at 8:22 pm

» விவேகானந்தர்..
by thaliranna Yesterday at 8:21 pm

» கண்ணதாசனின் பொன்மொழிகள்
by thaliranna Yesterday at 8:20 pm

» கட்டுரைப் போட்டி முடிவு
by ஆளுங்க Yesterday at 8:19 pm

» அதுதான் ஹைகூ
by thaliranna Yesterday at 8:18 pm

» ருக்மணி ஹைக்கூ 4
by thaliranna Yesterday at 8:17 pm

» தளிர்ஹைக்கூ346
by thaliranna Yesterday at 8:13 pm

» ஹைக்கூ கவிஞர் இரா .இரவி
by thaliranna Yesterday at 8:11 pm

» விழிக்கொடை ! கவிஞர் இரா .இரவி
by thaliranna Yesterday at 8:10 pm

» கள்ளக்காதல்
by thaliranna Yesterday at 8:09 pm

» ஹிஷாலீ ஹைக்கூ 303 to 304
by thaliranna Yesterday at 8:08 pm

» ருக்மணி ஹைக்கூ 2
by thaliranna Yesterday at 8:08 pm

» ருக்மணி ஹைக்கூ 3
by thaliranna Yesterday at 8:07 pm

» ருக்மணி ஹைக்கூ 1
by thaliranna Yesterday at 8:06 pm

» ஹிஷாலீ ஹைக்கூ - 306 to 309
by thaliranna Yesterday at 8:03 pm

» ஹிஷாலீ ஹைக்கூ 305
by thaliranna Yesterday at 8:01 pm

» ருக்மணி ஹைக்கூ 5
by thaliranna Yesterday at 7:59 pm

» காதலிக்க படாத உள்ளம்.............
by thaliranna Yesterday at 7:58 pm

» நெஞ்சை பூப் போல் கொய்தவளே...!
by thaliranna Yesterday at 7:57 pm

» கவிதைகள்...!
by thaliranna Yesterday at 7:55 pm

» அழுதுகொண்டே திரும்புகிறோம்
by thaliranna Yesterday at 7:54 pm

» தாழ்ப்பாள் போடாத நினைவுகள்
by thaliranna Yesterday at 7:53 pm

» மரணம்..
by vinitha Yesterday at 6:00 pm

» கருணையும் பாசமும்..!
by vinitha Yesterday at 5:58 pm

» அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
by பார்த்திபன் Yesterday at 5:08 pm

» கவிதை போட்டி - பூ (பூக்கள்)
by ஹிஷாலீ Yesterday at 4:58 pm

» நெல்லை அன்பன் (27), சீர்காழி. சேதுசபா (31), meena (50), valarmathi (26) நால்வருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
by பார்த்திபன் Yesterday at 4:46 pm

» தூக்கத்தில் காதல்
by ஹிஷாலீ Yesterday at 4:39 pm

» பாப்பா பாடல்கள்..
by ஹிஷாலீ Yesterday at 4:36 pm

» காதல் அந்தாதி - அம்மா அந்தாதி புத்தக ஆக்கம் குறித்து உங்கள் கருத்துகள் தேவை
by தமிழ்1981 Yesterday at 4:11 pm

» ஊரெங்கும் கொட்டிக்கிடக்கும் வெயில்
by ருக்மணி Yesterday at 4:04 pm

» பூ (பூக்கள்) கதையும் கதை சார்ந்ததும் போட்டி
by ஹிஷாலீ Yesterday at 3:57 pm

» கண் தானம் விரும்பு… சி.விநாயக மூர்த்தி
by ருக்மணி Yesterday at 3:54 pm

» முற்றுப்பெறாத நாள்
by ருக்மணி Yesterday at 3:43 pm

» தேவையற்றதை நீக்கிட கிடைத்தது சிலை ! - கவிஞர் இரா .இரவி
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 3:05 pm

» அமீரக வேலை வாய்ப்புகள்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 3:04 pm

» மஞ்சுவின் சுவையான சமையல் கூடம்....
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 3:03 pm

» மிகப்பெரிய நூல் நிலையம் உள்ள இடம்? - (பொது அறிவு - கேள்வி- பதில்)
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 3:02 pm

» கனவு காணும் காதலி
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 3:01 pm

» பவர்கட் - ஒரு பக்க கதை
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 3:00 pm

» சென்ரியுவாய் திருக்குறள் 195
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 3:00 pm

» அண்ணல் நபிகளாரின் 60 பொன் மொழிகள்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 2:59 pm

» ஒற்றைத் தலைவலிக்குக் காரணம் என்ன?
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 2:59 pm

» ஜீரண சக்தி அதிகரிக்கும் தயிர் (Curd)! தயிர் உணவில் உள்ள மருத்துவ தன்மைகள்..
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 2:58 pm

Tamil 10 top sites [www.tamil10 .com ]

நீங்கள் ஏசியிலேயே இருப்பவரா?

View previous topic View next topic Go down

நீங்கள் ஏசியிலேயே இருப்பவரா?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Tue Aug 30, 2011 11:06 am


எப்போதும் 'ஏசி' அறையில் அமர்ந்திருப்பது வெயிலில் தலைகாட்டாமல் இருப்பது போன்றவை வைட்டமின் - 'டி' சத்துக்குறைவில் கொண்டுபோய் விட்டு விடும். வைட்டமின் - 'டி' குறைபாட்டால், எலும்பு பாதிப்பு அதிகமாக ஏற்படும் ஏன் வருது?

* எப்போதும் அறைக்குள் முடங்கியிருப்பது.

* அடிக்கடி சன் ஸ்கிரீன் பயன்படுத்துவது.

* கால்சியம் சத்து குறைவாக எடுத்துக்கொள்வது.

* வைட்டமின் சத்தில்லா காய்கறி உணவு அதிகம் சாப்பிடுவது.

* அதிக பனி உள்ள பகுதியில் வசிப்பது.

தடுப்பு வழி

* ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 30 நிமிடமாவது வெயிலில் உடல் பட வேண்டும்.

* ஒரு லிட்டர் பாலுக்கு இணையான கால்சியம் உணவு தேவை.

* மாமிச உணவுகளில் கால்சியம் சத்து அதிகம்.

எப்போதும் 'ஏசி' அறையில் இருப்பது இப்போது அதிகமாகி வருகிறது. சாப்ட்வேர் நிறுவனங்களில் பணியாற்றும் இளம் தலைமுறையினருக்கு வெயில் என்றாலே தெரியாத நிலை ஏற்படுகிறது. இதனால், அவர்களுக்கு வைட்டமின் - 'டி' சத்து குறைவாக வாய்ப்பு அதிகம் என்பதால் எலும்பு பாதிப்பு அதிகமாக வரும்.

இது போல், சமீபத்தில் வட மாநிலங்களில் எடுத்த சர்வேயில், 75 சதவீத மக்களுக்கு குறிப்பாக குழந்தைகளுக்கு வைட்டமின் - 'டி' சத்து குறைபாடு உள்ளதும் தெரியவந்தது. இதனால், வைட்டமின் - 'டி' சத்துக்குறைபாட்டை நீக்க மத்திய அரசின் சுகாதார அமைச்சகம் தனி திட்டத்தை தீட்டி வருகிறது. கிராமங்களில் சூரிய ஒளி படுவது அதிகம், ஆனால், உணவில் கால்சியம் சத்து குறைவு. ஆனால், நகர்புறங்களில் சூரிய வெளிச்சம்படுவது குறைவு. ஆனால், உணவில் கால்சியம் சத்து அதிகம் கிடைக்கிறது.

வைட்டமின் - 'டி' சத்துக் குறைபாட்டால், சுவாசகோளாறு முதல் புற்றுநோய் வரை கூட வர வாய்ப்பு அதிகம். காசநோய்க்கும் இது காரணமாக அமைகிறது. வயது, கல்வி, பொருளாதர நிலை போன்றவற்றை தாண்டி பல தரப்பினரிலும் வைட்டமின் - 'டி' சத்துக் குறைபாடு உள்ளது தெரியவந்துள்ளது. வைட்டமின் 'டி' இருந்தால் தான் கால்சியம் சத்தை கட்டுப்படுத்தும். அதை கட்டுப்படுத்தாமல் போனால் பல பாதிப்புகள் வர வாய்ப்புள்ளது.

தலைச்சுற்றல், கிறுகிறுப்பு ஒன்று தானா? அசட்டை கூடாது!

உட்கார்ந்து எழுந்திருக்கும் போது, அரை நொடி நேரத்துக்கு சர்ரென்று தலை சுற்றியடிக்கும்; அதன்பின் சரியாகி விடும். எந்த விளைவோ, தொடர் பாதிப்போ இருக்காது.

தலைச்சுற்றல் அடிக்கடி தொடரும்; அப்படி வந்தால், முதுகுத்தண்டுவடம், அதைச்சுற்றியுள்ள நரம்புகள், எலும்புப்பகுதி பாதிக்கப்படும். ஒரு வித எரிச்சல் இருக்கும். இந்த இரண்டுக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா? முதலில் சொல்லப்பட்டுள்ளது, சாதாரண தலை சுற்றல் தான்.

இரண்டாவது தான் 'வெர்டிகோ' எனப்படும் தொடர் கிறுகிறுப்பு இதுவும் தலைசுற்றல் மாதிரியே இருக்கிறது. ஆனால் மூளை நரம்பு மண்டலத்தில் இருந்து ஆரம்பித்து பாதிக்கும். அதிக பட்ச ஆபத்து இதய கோளாறு தான். அதனால், தலைசுற்றலாக இருந்தாலும், கிறுகிறுப்பாக இருந்தாலும் உஷாராக இருந்து, முன்னெச்சரிக்கையாக டாக்டரிடம் போய் பரிசோதித்துக் கொள்வதே நல்லது.

டெல்லியில் உள்ள மாக்ஸ் ஹெல்த்கேர் மருத்துவமனை தலைமை டாக்டர் மிஸ்ரா தரும் சில முக்கிய தகவல்கள்:

சாதாரண தலைச்சுற்றல் போலத்தான் 'வெர்டிகோ'வும் இருக்கும். இந்த பாதிப்பு இருப்போரை இந்த கோளாறு தூங்க விடாது. சரியாக படுக்கவும் முடியாமல் தவிக்க வைத்துவிடும். தலைசுற்றல் ஏற்பட்டவுடன், குமட்டல் இருக்கும். சாதாரண தலைச்சுற்றலில் இந்த நிலை இருக்காது.

'வெர்டிகோ'வுக்கு பல காரணங்கள் உள்ளன. தொடர்ந்து அது தொல்லைபடுத்தியபடி இருக்கும். டாக்டரிடம் மாத்திரை வாங்கி சாப்பிட்டாலும், அந்த பாதிப்பின் வீரியம் வேண்டுமானால் குறையலாம்; ஆனால் பாதிப்பு தொடரும்.

குறிப்பாக, இந்த பாதிப்பு உள்ளவர்கள், கோடை காலத்தில் உஷாராக இருக்க வேண்டும். ஸ்டெமடில் போன்ற மாத்திரைகளை எப்போதும் வைத்திருக்க வேண்டும்.

அடிக்கடி தலை சுற்றல் வருவதை வைத்தே அது சாதாரண கிறுகிறுப்பு அல்ல என்று முடிவுக்கு வந்துவிடலாம்.

'வெர்டிகோ' பிரச்சினை உள்ளவர்கள், காபி, சாக்லெட் உட்பட, அதிக இனிப்பு, உப்பு சுவை உள்ள பொருட்களை சாப்பிடக்கூடாது. மது குடிக்கவே கூடாது.

கோடைகாலத்தில் தான் அதிக முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மாத்திரையை சாப்பிட மறக்கவே கூடாது.

நரம்பு மண்டல பிரச்சினை என்பதால், இதில் அலட்சியம் கூடாது. அப்படி இருந்தால், மூளை நரம்பு மண்டல பாதிப்பு வரை கொண்டுவிட்டு விடும்.

அடிக்கடி தலைவலி, கண்கள் தெளிவின்மை, நாக்குழற பேசுவது, காது மந்தம் போன்றவை 'வெர்டிகோ'வின் அறிகுறிகள்.

கை, கால்களில் பலவீனம், நடந்து கொண்டிருக்கும் போது அடிக்கடி மயக்கம்; குமட்டல் ஆகியவையும் இதன் அறிகுறிகள் தான். இந்த அறிகுறிகளை கண்டுகொள்ளாமல் இருந்தால், இதயத்துடிப்பில் மாற்றம் ஏற்படும். வலியும் ஏற்படும்.

_________________

தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts: 44750
Points: 56810
Join date: 15/10/2009
Age: 28
Location: கன்னியாகுமரி

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum