"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பண்பே வெல்லும் - கதைப்பாடல்
by அ.இராமநாதன் Today at 11:29 am

» மாதிரிப்பள்ளி - சிறுவர் பாடல்
by அ.இராமநாதன் Today at 11:25 am

» ஆதிசங்கரர் பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Today at 11:20 am

» தண்ணீரே பனிக்கட்டி - சிறுவர்களுக்கான பாடல்
by அ.இராமநாதன் Today at 11:15 am

» விலகினால் அடையாளம் - குழந்தைகளுக்கான பாடல்
by அ.இராமநாதன் Today at 11:08 am

» பாம்பு இருக்கற இடத்துல பல்லி எப்படி இருக்கும்...?
by அ.இராமநாதன் Yesterday at 9:06 pm

» ‘டியர்... நான் உங்க இதயத்துல இருக்கேனா?’’
by அ.இராமநாதன் Yesterday at 8:57 pm

» இந்த போட்டோ கி.மு.விலே எடுத்தது...!!
by அ.இராமநாதன் Yesterday at 8:46 pm

» படி! படி! - சிறுவர் கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 8:38 pm

» செயல் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 8:30 pm

» கனவு - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 8:29 pm

» வெட்கம் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 8:27 pm

» அழகிய தமிழ் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 8:26 pm

» யாப்பு
by lakshmi.P.R Yesterday at 8:26 pm

» நடவு & ஆசை - கவிதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 8:23 pm

» சிந்தனை சிகிச்சை-5
by ராஜேந்திரன் Mon Feb 19, 2018 8:39 pm

» வித்தியாசமான வேடத்தில் அனுஷ்கா
by அ.இராமநாதன் Mon Feb 19, 2018 9:29 am

» வித்தியாசமான வேடத்தில் சமந்தா
by அ.இராமநாதன் Mon Feb 19, 2018 9:23 am

» பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:52 am

» ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:51 am

» சமந்தா வரவேற்பு!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:50 am

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:49 am

» சிலம்பம் பயிலும் விஜய் ஆண்டனி!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:48 am

» மாப்பிள்ளைக்கு ஏன் இரண்டு டூ வீலர் வாங்கி கொடுத்திருக்கீங்க?
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:37 am

» இந்த ஆஸ்பத்திரிக்கா உயிரையே கொடுத்தவங்க...!!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 2:12 am

» நாச்சியார் விமர்சனம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:50 pm

» பிரியா வாரியர் கண்ணடிக்கும் பாடல் வாபஸ் இல்லை ; நடிகை பேட்டி கொடுக்க இயக்குனர் தடை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:24 pm

» ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:20 pm

» தெலுங்கில் நடித்த ஸ்ரேயா படம் இணையதளத்தில் வெளியானது
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:17 pm

» நாட்டை சூறையாடும் வங்கியின் விஐபி வாடிக்கையாளர்கள்: மம்தா தாக்கு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:38 pm

» மெக்சிகோவில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் கட்டிடங்கள் குலுங்கின
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:37 pm

» பிஎன்பி மோசடி: மேலும் ரூ. 549 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்; நிரவ் மோடி இருப்பிடம் தெரியாது - வெளியுறவுத்துறை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:36 pm

» தொழில்நுட்ப ஆஸ்கர் விருது வென்ற இந்தியர்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:35 pm

» கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது அமலாக்கத்துறை விசாரிக்க கோர்ட்டு அனுமதி
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:33 pm

» மணிசங்கர் அய்யர் மீது தேசதுரோக வழக்கு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:32 pm

» நாணயம் பெற மறுத்தால் நடவடிக்கை: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:31 pm

» ரூ.9க்கு ஏர்டெல் புதிய திட்டம் அறிவிப்பு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:25 pm

» ரூ.99க்கு பி.எஸ்.என்.எல். அதிரடி சலுகை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:24 pm

» மருத்துவ குறிப்புகள் - தொடர்பதிவு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:26 pm

» நீரிழிவு நிலை உள்ளவர்களா உங்கள் உணர்திறன் குறைவடையும்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:24 pm

» திறந்தநிலை கல்வி நிறுவனங்களில் பிளஸ் 2 படிப்பவர்களுக்கு நீட் தேர்வு எழுத அனுமதி கிடையாது
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:07 pm

» ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்படவில்லை: படத்திறப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் வாதம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:06 pm

» புதுச்சேரி - பெங்களூர் இடையே புதிய விமான சேவை மீண்டும் தொடக்கம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:05 pm

» சனீஸ்வரா காப்பாத்து!
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:02 pm

» நாம் அழுதால் தாங்கமாட்டார் ஆஞ்சநேயர்!
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:01 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



2ஜி ஊழலில் ப.சிதம்பரத்துக்கும் தொடர்பு?: பிரதமருக்கு பிரணாப் அனுப்பிய `பகீர்' கடிதம்

Go down

2ஜி ஊழலில் ப.சிதம்பரத்துக்கும் தொடர்பு?: பிரதமருக்கு பிரணாப் அனுப்பிய `பகீர்' கடிதம்

Post by thaliranna on Thu Sep 22, 2011 10:38 pm


2ஜி ஊழலில் ப.சிதம்பரத்துக்கும் தொடர்பு?: பிரதமருக்கு பிரணாப் அனுப்பிய `பகீர்' கடிதம்



[You must be registered and logged in to see this link.]





[You must be registered and logged in to see this link.]
டெல்லி:
2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனை விவகாரத்தில் நாட்டுக்கு நஷ்டம் ஏற்படுவதைத்
தடுக்க அப்போது நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் உரிய நடவடிக்கைகளை
எடுக்கவில்லை என்று நிதியமைச்சகம் நேரடியாகக் குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பாக நிதியமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் இப்போதைய
நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலுடன் பிரதமர் அலுவலகத்துக்கு
அனுப்பியுள்ள கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதன்மூலம் பிரணாப் முகர்ஜி- ப.சிதம்பரம் இடையே நடந்து வரும் மோதல் வெளியே தெரியவந்துள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் 2007ம் ஆண்டு நிதியமைச்சராக இருந்த இப்போதைய
உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்தக் கோரி ஜனதா கட்சி
தலைவர் சுப்பிரமணிய சாமி வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனு மீது நீதிபதிகள்
சிங்வி, கங்குலி ஆகியோர் முன்னிலையில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று
விசாரணைக்கு வந்தபோது, சிதம்பரத்துக்கு எதிரான ஒரு கடிதத்தை சுப்பிரமணிய
சாமி தாக்கல் செய்தார்.

இந்தக் கடிதம் கடந்த மார்ச் 25ம் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின்
அலுவலகத்தில் இருந்து பிரதமர் அலுவலகத்துக்கு அந்த கடிதம்
அனுப்பப்பட்டதாகும். நிதியமைச்சகத்தின் Economic Affairs பிரிவின் துணை
இயக்குனர் பதவியில் இருக்கும் ஒரு மூத்த அதிகாரி எழுதிய அந்தக் கடிதம்
பிரணாப் முகரிஜியின் முழு ஒப்புதலுடன் பிரதமருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அந்த 14 பக்க கடிதத்தில், 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை ஏலம் மூலம் விற்பனை
செய்ய நிதியமைச்சக அதிகாரிகள் பரிந்துரைத்தனர். ஆனால், அதை நிராகரித்து
விட்டு 2001ம் ஆண்டு விலையிலேயே, முதலில் வந்தவர்களுக்கு முதலில் என்ற
முறையில், 2007ம் ஆண்டில் ஸ்பெக்ட்ரத்தை விற்க அப்போதைய தொலைத்
தொடர்புத்துறை அமைச்சர் ராசா எடுத்த முடிவுக்கு அப்போது நிதியமைச்சராக
இருந்த ப.சிதம்பரம் அனுமதி அளித்துள்ளார்.

ராசாவைத் தடுத்து, ஸ்பெக்ட்ரத்தை ஏலம் மூலம் மட்டுமே விற்க வேண்டும் என்று
சிதம்பரம் வலியுறுத்தி இருந்தால் ஸ்பெக்ட்ரம் ஊழலே நடந்திருக்காது.

ஆனால், அவரைத் தடுக்காததால் செல்போன் நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் ரூ.
1,600 கோடிக்கு மட்டுமே விற்கப்பட்டது. 2007ம் ஆண்டில் விற்பனைக்கான
அனுமதி தரப்பட்டாலும், ஸ்பெக்ட்ரத்தை விற்றது 2008ம் ஆண்டு ஜனவரி
மாதத்தில் தான்.

இந்த இடைப்பட்ட காலத்தில், சிதம்பரம் நினைத்திருந்தால், இந்த விற்பனையை ரத்து செய்திருக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்தக் கடிதத்தை பிரதமருக்கு அனுப்பி வைத்ததன் மூலம், அதில் இடம்
பெற்றுள்ள கருத்துக்களை பிரணாப் முகர்ஜி முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளார்
என்பதும் தெளிவாகிறது.

இதன்மூலம் மத்திய அரசுக்குள் மூத்த அமைச்சர்களான பிரணாப்
முகர்ஜி-ப.சிதம்பரம் இடையே நடந்து வரும் மோதலும் வெளிச்சத்துக்கு
வந்துள்ளது.

நிதியமைச்சகம் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பிய இந்தக் கடிதத்தை தகவல்
அறியும் மூலம் விவேக் கார்க் என்பவர் பெற்றுள்ளார். அதை உச்ச
நீதிமன்றத்தில் சுப்பிரமணிய சாமி தாக்கல் செய்துள்ளார். இந்த முக்கியமான
கடிதத்தை உச்ச நீதிமன்றமும் ஏற்று பதிவு செய்து கொண்டுள்ளது.

இந்த கடிதம் குறித்து விவேக் கார்க் கூறுகையில், நிதியமைச்சகம் மற்றும்
இதர அமைச்சகங்களின் தொடர்பு இல்லாமல் இவ்வளவு பெரிய ஊழல் நடந்திருக்க
சாத்தியமில்லை. சிதம்பரத்துக்கும் வேறு சிலருக்கும் இந்த ஊழலில்
தொடர்புள்ளதை இந்த கடிதம் தெளிவாகக் குறிப்பிடுகிறது என்றார்.

கருத்து கூற பிரணாப் மறுப்பு:

இந் நிலையில் இந்தக் கடிதம் குறித்து கருத்துக் கூற நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி மறுத்துவிட்டார்.

இந்திய- அமெரிக்க முதலீட்டாளர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நியூயார்க்
சென்றுள்ள அவரிடம் இது குறித்துக் கேட்டதற்கு, இந்த விவகாரம் நீதிமன்ற
விசாரணையில் இருப்பதால் அதுகுறித்து கருத்து கூற முடியாது என்றார்.

அதே நேரத்தில் ஊழலை ஒழிக்க தகவல் அறியும் சட்டத்தை கொண்டு வந்ததே நான் தான் என்றும் அவர் கூறினார்.

சிதம்பரம் பதவி விலக பாஜக கோரிக்கை:

இது குறித்து பாஜக செய்தித்தொடர்பாளர் பிரகாஷ் ஜவேத்கர் கூறுகையில்,
பிரதமருக்கு பிரணாப் முகர்ஜி எழுதிய கடிதம் மூலமாக, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில்
ப.சிதம்பரத்தின் தொடர்பு அம்பலமாகி விட்டது. நிதியமைச்சகமும்,
தொலைத்தொடர்பு அமைச்சகமும் ஸ்பெக்ட்ரம் விலை விவகாரத்தில்
உடன்பட்டதால்தான், அதை செயல்படுத்த ஒப்புக்கொண்டதாக ஏற்கனவே பிரதமரும்
கூறியுள்ளார்.

ஸ்பெக்ட்ரமுக்கு விலையை நிர்ணயிப்பதில் ராசா பின்பற்றிய வழிமுறையை முதல்
நாளில் இருந்தே ப.சிதம்பரம் ஆதரித்தார். ஆனால், மத்திய நிதியமைச்சக
அதிகாரிகளோ, 2001ம் ஆண்டு விலைக்கு ஸ்பெக்ட்ரமை ஒதுக்கக்கூடாது என்று
எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களின் நிலைப்பாட்டை ப.சிதம்பரம்
ஏற்றிருந்தால், ஸ்பெக்ட்ரம் ஊழலே நடந்திருக்காது.

ஸ்பெக்ட்ரம் ஊழல் என்பது கூட்டணி கட்சியின் ஊழல் என்றும், ராசாவே தனியாக
எடுத்த முடிவு என்றும் நாடு நம்ப வேண்டும் என்று ப.சிதம்பரம்
விரும்புகிறார். ஆனால், பிரணாப் முகர்ஜியின் கடிதம் மூலம், இந்த ஊழலில்
காங்கிரசுக்கும் பங்கு இருப்பது தெரியவந்துள்ளது. எனவே ப.சிதம்பரம் பதவி
விலக வேண்டும் என்றார்.

சிதம்பரத்தின் நிலைப்பாடு ஏற்கத்தக்கதல்ல-இந்திய கம்யூனிஸ்ட்:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா கூறுகையில்,
ஸ்பெக்ட்ரம் ஊழலில் ப.சிதம்பரத்தின் நிலைப்பாடு ஏற்கத்தக்கதல்ல. அவரது
தொடர்பு பற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும். மேலும், பிரதமரிடம் ஆலோசனை
நடத்தியே அனைத்து முடிவுகளும் எடுத்ததாக ராசா கூறி வருவதால், இதில்
பிரதமரும் பதிலளிக்க வேண்டும் என்றார்.

சிதம்பரத்துக்கு எதிரான குற்றச்சாட்டு-காங்கிரஸ் நிராகரிப்பு:

இந் நிலையில் இந்த விவகாரத்தில் ப.சிதம்பரம் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற
எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை காங்கிரஸ் கட்சி நிராகரித்துவிட்டது.

இது குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறுகையில்,
எந்த வகையிலும் சுப்ரமணிய சாமியின் குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்ள
முடியாது. சிதம்பரத்தின் நேர்மையை யாராலும் சந்தேகிக்க முடியாது. உச்ச
நீதிமன்றத்தில் சாமியால் எழுப்பப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நீதிமன்ற
விசாரணையில் உள்ளன. விசாரணை முடிவடைவதற்குக் காத்திருக்காமல் சாமியோ
அல்லது வேறு எவருமோ சிதம்பரம் தவறு செய்திருப்பதாக முடிவுக்கு வருவது
ஆட்சேபத்துக்குரியது என்றார்.

நன்றி தட்ஸ் தமிழ்
avatar
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 42
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

Re: 2ஜி ஊழலில் ப.சிதம்பரத்துக்கும் தொடர்பு?: பிரதமருக்கு பிரணாப் அனுப்பிய `பகீர்' கடிதம்

Post by ARR on Fri Sep 23, 2011 12:21 am

பெருந்தலைகள் எல்லாம் சிக்குறதைப்பார்த்தா, கேஸ் ஒண்ணும் இல்லாமப் போயிரும் போலிருக்கே..
avatar
ARR
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 37
Points : 41
Join date : 22/09/2011
Age : 38
Location : மன்னார்குடி

Back to top Go down

Re: 2ஜி ஊழலில் ப.சிதம்பரத்துக்கும் தொடர்பு?: பிரதமருக்கு பிரணாப் அனுப்பிய `பகீர்' கடிதம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Fri Sep 23, 2011 11:10 am

ARR wrote:பெருந்தலைகள் எல்லாம் சிக்குறதைப்பார்த்தா, கேஸ் ஒண்ணும் இல்லாமப் போயிரும் போலிருக்கே..
[You must be registered and logged in to see this image.]

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: 2ஜி ஊழலில் ப.சிதம்பரத்துக்கும் தொடர்பு?: பிரதமருக்கு பிரணாப் அனுப்பிய `பகீர்' கடிதம்

Post by அரசன் on Fri Sep 23, 2011 12:50 pm

ஒரு மாமனிதர் மேல் இப்படி அபாண்ட குற்ற சாட்டு கூடாது ...
உடனே கைது பண்ணி களி திங்க வையுங்கையா .. அத உட்டுபுட்டு சும்மா
பசப்பு காட்டுரிங்க

_________________
***************************************************************************
நான் என்னை அறிய முயலுகின்ற பயணத்தில் உங்களோடும் கைக்குலுக்குவதில்
பெரு மகிழ்வு அடைகிறேன்....


கரைசேரா அலை...


***************************************************************************
avatar
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 27
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

Re: 2ஜி ஊழலில் ப.சிதம்பரத்துக்கும் தொடர்பு?: பிரதமருக்கு பிரணாப் அனுப்பிய `பகீர்' கடிதம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum