"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» அரசு விழாவில் ஆபாச நடனம்! முகம் சுழித்த பள்ளி மாணவர்கள்
by KavithaMohan Yesterday at 7:54 pm

» காது கேளாதோர் இசையை ரசிக்கலாம்!
by அ.இராமநாதன் Yesterday at 6:55 pm

» கிரிக்கெட் வீரர்களுக்கு 100 சதவீத சம்பள உயர்வு
by அ.இராமநாதன் Yesterday at 6:41 pm

» அரசியலுக்கு சோனியா முழுக்கு
by அ.இராமநாதன் Yesterday at 6:39 pm

» முத்தலாக் சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
by அ.இராமநாதன் Yesterday at 6:37 pm

» கணவன் என்னதான் நல்லது செய்தாலும்....
by அ.இராமநாதன் Yesterday at 10:36 am

» 'ஹலோ' மூலம் திரையுலகில் அறிமுகமாகும் 'ப்ரியதர்ஷன் - லிசி' மகள்
by அ.இராமநாதன் Yesterday at 9:24 am

» திரைப்படமாகிறது பால் தாக்கரே வாழ்க்கை வரலாறு
by அ.இராமநாதன் Yesterday at 6:57 am

» யாழ்ப்பாணத்தில் ஒரே ஆண்டில் 2-வது முறையாக மீன் மழை!
by அ.இராமநாதன் Yesterday at 6:55 am

» ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம்
by அ.இராமநாதன் Yesterday at 6:55 am

» அசாமில் 100 நாட்களில் 40 யானைகள் பலி
by அ.இராமநாதன் Yesterday at 6:53 am

» சென்னையில் இருந்து பயணிகளோடு ரெயிலில் சென்ற தமிழக கவர்னர்
by அ.இராமநாதன் Yesterday at 6:53 am

» கொடி வீரன் - விமர்சனம்
by அ.இராமநாதன் Yesterday at 6:45 am

» ஷார்ஜாவில் 10 ஓவர் போட்டியான டி10 கிரிக்கெட் லீக் தொடர் இன்று தொடக்கம்
by அ.இராமநாதன் Thu Dec 14, 2017 8:46 pm

» திரையுலகில் 15 ஆண்டுகளை நிறைவு செய்த த்ரிஷா
by அ.இராமநாதன் Thu Dec 14, 2017 8:42 pm

» விஜய் மல்லையாவின் சொத்துகளை முடக்குமாறு உத்தரவு
by KavithaMohan Thu Dec 14, 2017 1:47 pm

» மும்பையில் கல்வாரி என்று பெயரிடப்பட்டுள்ள நீர்மூழ்கிக் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி
by KavithaMohan Thu Dec 14, 2017 1:42 pm

» இருமல்,சளி ஜலதோஷம் - மருத்துவம்
by அ.இராமநாதன் Wed Dec 13, 2017 10:44 pm

» இயற்கை மருத்துவம் (தொடர் பதிவு)
by அ.இராமநாதன் Wed Dec 13, 2017 10:33 pm

» பகைவனும் நம்மை மதிக்க தொடங்குவான்...!!
by அ.இராமநாதன் Wed Dec 13, 2017 10:24 pm

» காலை வணக்கம்....
by அ.இராமநாதன் Wed Dec 13, 2017 10:22 pm

» வாழ்த்து மழையில் கோலி -அனுஷ்கா
by அ.இராமநாதன் Wed Dec 13, 2017 9:39 pm

» விஷாலின் 'இரும்புத்திரை' வெளியீட்டு தேதி மாற்றம்
by அ.இராமநாதன் Wed Dec 13, 2017 9:36 pm

» வீட்டு பூஜை குறிப்புகள் 1-10
by அ.இராமநாதன் Wed Dec 13, 2017 9:05 pm

» உலகைச்சுற்றி - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Wed Dec 13, 2017 8:27 pm

» வங்கி கணக்கு – ஆதார் இணைப்பு: காலக்கெடு நீட்டிப்பு
by அ.இராமநாதன் Wed Dec 13, 2017 8:20 pm

» ஆர்.கே.நகரில் போலி வாக்காளர்களை நீக்க தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட் உத்தரவு
by அ.இராமநாதன் Wed Dec 13, 2017 8:18 pm

» ஆர்.கே.நகரில் போலி வாக்காளர்களை நீக்க தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட் உத்தரவு
by அ.இராமநாதன் Wed Dec 13, 2017 8:18 pm

» இந்தியாவின் முதல் நீர்வழி விமானத்தில் பயணம் செய்தார் மோடி
by அ.இராமநாதன் Wed Dec 13, 2017 8:17 pm

» சைனஸ், ஆஸ்துமா அவஸ்தையிலிருந்து விடுவிக்கும் எளிய பயிற்சிகள்
by அ.இராமநாதன் Wed Dec 13, 2017 8:14 pm

» காவல் ஆய்வாளர் குடும்பத்திற்கு 1 கோடி நிவாரணம் - முதலமைச்சர் பழனிச்சாமி!
by KavithaMohan Wed Dec 13, 2017 7:04 pm

» அரசு மீது மக்கள் பெரிய நம்பிக்கை வைத்துள்ளனர் : மோடி
by KavithaMohan Wed Dec 13, 2017 6:59 pm

» அதிக நோய்களை பரப்பும் ஈக்கள்
by அ.இராமநாதன் Wed Dec 13, 2017 4:14 pm

» ரேக்ளா வழக்கு உச்சநீதிமன்றம் செல்கிறது... நீதிபதிகளின் தீர்ப்பில் முடிவு...
by KavithaMohan Tue Dec 12, 2017 6:34 pm

» புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் முதலமைச்சர் பழனிசாமி
by KavithaMohan Tue Dec 12, 2017 6:33 pm

» ரஜினியின் பிறந்த நாளில் வெளியாகிறது.. கஜினிகாந்த் பர்ஸ்ட்லுக்.!
by KavithaMohan Mon Dec 11, 2017 5:49 pm

» “ஜெயலலிதா வாக்கு காப்பாற்றப்படுமா!?” ஒகி அழித்த ரப்பர் மரங்களால் தவிக்கும் குமரி மீனவர்கள்
by KavithaMohan Mon Dec 11, 2017 5:34 pm

» குருவாயூர் கோவில் யானை தாக்கி பாகன் பலி
by KavithaMohan Mon Dec 11, 2017 5:29 pm

» இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
by அ.இராமநாதன் Mon Dec 11, 2017 12:07 pm

» சொறிந்து கொள்ள மிஷின்!
by அ.இராமநாதன் Mon Dec 11, 2017 10:04 am

» மகாகவி பாரதியார் பிறந்த நாள் இன்று...
by அ.இராமநாதன் Mon Dec 11, 2017 10:01 am

» மாமியார் முகத்தில முழிக்கறதும் நல்ல சகுனம்தான்..!!
by அ.இராமநாதன் Mon Dec 11, 2017 9:55 am

» பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குற திமிரு...!!
by அ.இராமநாதன் Mon Dec 11, 2017 9:52 am

» மொபைல் ஸ்கேனர்
by அ.இராமநாதன் Mon Dec 11, 2017 9:24 am

» குதிரையில் பர்ச்சேஸ்!
by அ.இராமநாதன் Mon Dec 11, 2017 9:20 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines ஆயூர்வேதமருத்துவம் : நாள்பட்ட தலைவலியும் தீரும்

View previous topic View next topic Go down

ஆயூர்வேதமருத்துவம் : நாள்பட்ட தலைவலியும் தீரும்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Tue Sep 27, 2011 9:11 pm

நோயாளிக்கு ஒரே சந்தேகம், இவ்வளவு வேகத்தில், ஆயுர்வேத மருந்தால்
தலைவலியைக் குறைக்க முடியுமா, இதனால், தனக்கு தலைவலியிலிருந்து முழுமையான
நிவாரணம் கிடைக்குமா என்று!. ஆயுர்வேதத்தில், நாள்பட்ட தலைவலிகளுக்கு,
சிறந்த சிகிச்சை முறைகள் உண்டு. நவீன மருத்துவத்தைச் சார்ந்த வலி
நிவாரணிகள், செயலிழந்த நிலைகளில் கூட, முழுமையான குணம் ஆயுர்வேதத்தை
நாடினால் கிடைக்கும். முப்பத்தேழு வயதான ஒரு பெண்மணிக்கு, மிகத் தீவிரமான
தலைவலி இருந்தது. அந்தத் தலைவலி, பகல் பொழுதில் எப்போது வேண்டுமானாலும்,
சில சமயங்களில் நடு இரவிலும் வரும். முதலில், அவர் வலி நிவாரணி ஊசி,
மருந்துகளையே நாடினார். பின், காது, மூக்கு, தொண் டை நிபுணர்களை
ஆலோசித்தார். அவர்களால், தீர்மானமாக எதுவும் கண்டறியப்படவில்லை.

பின், ஒரு பிரபல மருத்துவமனையில், நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவரை
நாடினார். ஸ்கேன் எடுத்துப் பார்த்ததில், ஒரு நீர்க்கட்டி தெரிந்தது.
பரிந்துரைத்த மருந்துகள் பலன் எதுவும் தராத நிலையில், மாதத்திற்கு இருமுறை,
தண்டுவடத்திலிருந்து நீரை எடுக்கும் சிகிச்சை பரிந்துரைக்கப்பட்டது.
இல்லையேல், நீரை வடியச் செய்வதற்கு, மூளையிலிருந்து சிறுநீர்ப்பைக்கு, ஒரு
குtஞுணt பொருத்தப்படவேண்டும் என்று கூறப்பட்டது. மேலும், அம்மருத்துவ
நிபுணர், இம்முறையால், பலருக்குத் தொற்று நோய் வருவதற்கு, சாத்தியக்
கூறுகள் இருப்பதாகவும், ஆயுட்காலம் முழுவதும் நோய் எதிர்ப்பு மருந்துகள்
எடுத்துக் கொள்ள நேரும் என்றும் எச்சரித்தார். அவருடைய தந்தையுடன் உடன்
பிறந்தார் ஒருவருக்கும், இம்மாதிரி தலைவலி இருந்தது. மூளையிலிருந்து கட்டி
அகற்றும் அறுவை சிகிச்சையும், அவருக்கு நடந்தது. இப்பெண்மணியின் நிலைமை
பரிதாபகரமாகவே இருந்தது. தன் தலைவலிக்கு, அறுவை சிகிச்சை மட்டும்
செய்வதில்லை என்று, தீர்மானமாக முடிவெடுத்தார்.

ஆயுர்வேத சிகிச்சை: முதல் ஆலோசனைக்கு வந்தபோது, முக்கியமாக அப்பெண்ணின்
உணவுப் பழக்க வழக்கங்களை மாற்றும் படி அறிவுறுத்தினோம். தினசரி, தயிர்
பருகும் பழக்கத்தை விட்டு விடுமாறு கோரினோம். இரண்டு வாரத்திற்குப் பின்,
வாந்தி சிகிச்சை (உடம்பில் தங்கியிருக்கும் கபத்தை வெளியேற்றுவது)
அளிக்கப்பட்டது. சில வாரங்களுக்கு மருந்துகளும், மூக்குத் துவாரத்தில்
இடும் சொட்டு மருந்தான அணு தைலமும், தலைக்குத் தைலமும் அளிக்கப்பட்டது.
பத்து நாட்களுக்குப் பிறகு, மருந்துகள் நிறுத்தப்பட்டு, அடிப்படை
மருந்துகளான அணு தைலம் மற்றும் தான்வந்தரம் தைலங்கள் பரிந்துரைக்கப்பட்டு,
இரண்டே மாதங்களில் நிவாரணம் பெற்றார்.

நாற்பத்தொரு வயது நிரம்பிய ஒரு பெண், சஞ்சீவனிக்கு வந்தார். வரும்போதே,
தலைவலி. "எனக்கு டாக்டர்கள், "மைகிரேன் தலைவலி, சைனஸ் தலைவலி' என்றெல்லாம்
கூறுகின்றனர். இதுவரை. அனேக டாக்டர்களை பார்த்தாகி விட்டது. சி.டி.ஸ்கேன்
மற்றும் பரிசோதனைகளைச் செய்தும், இதுவரை என் தலைவலிக்கு ஒரு முடிவு இல்லை'
என்று கூறினார்.வலி வரும்போது, குமட்டல் வாந்தி ஏற்படுவதாகச் சொன்னார். சில
நேரங்களில், தலை கனக்கும். தலை குளித்தால் தலைவலி, மாதவிடாய்க்கு முன்
தலைவலி, காரணமின்றித் தும்மல், கண்களைச் சுற்றிலும் வலி, கன்னங்களில் வலி
என, தன் பிரச்னைகளை அடுக்கிக் கொண்டே போனார்.

தலைவலியுடன் வந்த நோயாளிக்கு, வந்த உடனே நிவாரணம் அளிக்க, ஒரு சூரணத்தை
நுகர்வதற்குக் கொடுக்கப்பட்டது. சூரணத்தை நுகர்ந்த சில நிமிடங்களில்,
மூக்குத் துவாரத்திலிருந்து, தொண்டையில் சளி இறங்கியது. தலைவலியும்
இறங்கியது. நோயாளிக்கு ஒரே சந்தேகம், இவ்வளவு வேகத்தில், ஆயுர்வேத
மருந்தால் தலைவலியைக் குறைக்க முடியுமா, இதனால், தனக்கு தலைவலியிலிருந்து
முழுமையான நிவாரணம் கிடைக்குமா என்று! ஆயுர்வேத சிகிச்சையின் முதல் படியாக,
நோயிற்குக் காரணமான பழக்க வழக்கங்களை ஆராய்ந்து, நோயாளிக்கு அறிவுரைகள்
வழங்கப்பட்டன.

இந்தப் பெண், தினமும் பகலில் உறங்குவார். தயிர், பழரசங்கள்,
குளிர்பானங்கள் போன்றவை, அவருக்குப் பிடித்த உணவுகள்; இவை அனைத்தும்,
உடலில் கபத்தை வளர்க்கக் கூடியவை. உணவுப் பழக்கவழக்கங்களை மாற்றி, ஆயுர்வேத
மருந்துகளைத் துவங்கிய உடனே, அவரது பிரச்னைகள் பாதிக்கு மேல் குறைந்து
விட்டன. ஆயினும், சீற்றமடைந்த தோஷத்தை வெளியே தள்ளும் சிகிச்சை
மேற்கொண்டால் தான், வியாதிக்கு முழு நிவாரணம் கிடைக்கும். இந்த நோயாளிக்கு
உகந்த சிகிச்சை, வமனம் என்னும் வாந்தியை வரவழைக்கும் சிகிச்சையாகும்.
எனவே, முதலாவதாக வமன சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. வமனத்திற்குப் பிறகு,
நோய்க்கு உகந்த ஆயுர்வேத மருந்துகள் கொடுக்கப்பட்டன. தலைவலியைப் போக்க,
தலைக்குத் தைலம், மூக்கிற்குச் சொட்டு மருந்து, உட்கொள்வதற்கு மருந்துகளும்
கொடுக்கப்பட்டன.பல வருடங்களாகத் தீர்க்க முடியாத இந்த நோயாளியின் தலைவலி,
சில வாரங்களில் முழுமையாக நீங்கியது!

- டாக்டர் பி.எல்.டி.கிரிஜா, சஞ்சீவனி ஆயுர்வேத யோகா மையம்.
sanjeevanifoundation@gmail.com
நன்றி தினமலர்

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56806
Points : 69546
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: ஆயூர்வேதமருத்துவம் : நாள்பட்ட தலைவலியும் தீரும்

Post by தங்கை கலை on Tue Sep 27, 2011 9:13 pm

ஹோமெஓ அண்ட் ஆயூர் good
avatar
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 18
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum