"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பெருமழையும் சிறுதூறலும் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 11:28 pm

» டெஸ்ட் எடுக்காமலேயே எனக்கு கொழுப்பு அதிகம்னு சொல்றீங்களே, எப்படி?
by அ.இராமநாதன் Yesterday at 11:22 pm

» எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்கிறார்களே, என்ன கூட்டம் நடக்குது?
by அ.இராமநாதன் Yesterday at 10:29 pm

» கருகிய ரோஜாவும் கடைசிக் கேள்விகளும் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 10:14 pm

» எளிய பயிற்சி முறை என்பது முத்ரா பயிற்சிதாங்க....
by அ.இராமநாதன் Yesterday at 9:53 pm

» உடல் நலம் தரும் விரல் முத்திரைகள்
by அ.இராமநாதன் Yesterday at 9:50 pm

» உளியின் யுத்தம்! நூல் ஆசிரியர் : கவிஞர் பல்லவி குமார் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 8:50 pm

» உலக தண்ணீர் தினம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 8:48 pm

» விஸ்க்கியா, பிராந்தியா...எது வேணும்னு தெளிவா சொல்லித் தொலைங்க....!!
by அ.இராமநாதன் Yesterday at 5:39 pm

» டெம்பர் தமிழ் ரீமேக் படத்தில் விஷாலுக்கு ஜோடியாகும் நயன்தாரா பட நடிகை
by அ.இராமநாதன் Yesterday at 12:49 pm

» மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகிறார் அஞ்சலி?
by அ.இராமநாதன் Yesterday at 11:14 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 7:59 am

» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Wed Mar 21, 2018 10:59 pm

» நெருப்பின் தாகம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Mar 20, 2018 9:06 pm

» நம் சமையல் அறையில்...
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 5:42 pm

» இந்தியாவில் மின்சார கார்களை களமிறக்கும் மாருதி சுஸுகி
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:51 am

» ஸ்ரீதேவி வாழ்க்கை சினிமா படமாகிறது வித்யாபாலன் நடிக்க பேச்சுவார்த்தை
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:38 am

» பிளாக் பேந்தர் படம் ரூ.7 ஆயிரம் கோடி வசூல் சாதனை
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:35 am

» சசிகலா கணவர் நடராஜன் காலமானார்
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:33 am

» சசிகலா புஷ்பாவுக்கு மீண்டும் திருமணம்!
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:32 am

» இன்று பத்ம விருதுகளை வழங்குகிறார் ஜனாதிபதி
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:31 am

» 2ஜி வழக்கில் அமலாக்கத்துறை அப்பீல்: ராசா, கனிமொழிக்கு சிக்கல் வருகுது
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:30 am

» ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:29 am

» அரசு கஜானாவுக்கு வரவேண்டிய ரூ.1,000 கோடி எங்கே போகிறது? சட்டசபையில் தி.மு.க. காட்டமான கேள்வி
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:28 am

» பூ பூப்பதும் உலகச் செய்திதான்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 11:20 pm

» சின்னச் சின்ன சிந்தனைகள்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 10:46 pm

» குடம் குடமாய் பாலாபிஷேகம் - எக்ஸ்பிரஸ் கதைகள்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 6:13 pm

» குழந்தையை தவறவிட்டவர் கையில் பத்திரமாக இருந்தது கைப்பேசி...!!
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 6:08 pm

» உன்னோட புடவை பளிச்சுன்னு இருக்கே...?!
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 5:35 pm

» உங்க பொண்ணுக்கு யோகா வராது, சமையல் கத்துக்கொடுங்க...!!
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 5:32 pm

» மூலிகை உணவு
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 5:15 pm

» அவசரம் - X பிரஸ் கதைகள்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 5:06 pm

» X பிரஸ் கதைகள்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 4:53 pm

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 3:30 pm

» ஆக்சிஸ் வங்கியில் ரூ.4,000 கோடி மோசடி - தனியார் நிறுவன இயக்குனர்கள் கைது
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 3:09 pm

» நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,விற்கு எதிராக 3 நோட்டீஸ்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 2:59 pm

» படமும் செய்தியும்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 2:53 pm

» சுதந்திர போராட்ட கதையில் சிரஞ்சீவியுடன் நடிக்கும் நயன்தாரா
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 10:04 am

» தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 10:00 am

» முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணி சாம்பியன்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 10:00 am

» தனுஷ்கோடி கடலில் ரூ.300 கோடியில் காற்றாலை
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 9:43 am

» 20,21ல் திருமலையில் இலவச தரிசனம்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 9:41 am

» ரிசர்வ் வங்கி அதிகாரிகள் திருப்பதிக்கு போகலாம்: சிதம்பரம்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 9:39 am

» தனிமையில் வாடும் பொம்மை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இராமசெயம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Sun Mar 18, 2018 11:02 pm

» அமரர் கல்கி பற்றி அவரது மகள் ஆனந்தி,
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 9:34 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines என் இனிய பொன் நிலாவே!பகுதி 6

Go down

என் இனிய பொன் நிலாவே!பகுதி 6

Post by thaliranna on Mon Oct 03, 2011 9:37 pm

என் இனிய பொன் நிலாவே!
‘ப்ரியம்வதா’
[You must be registered and logged in to see this link.]
பகுதி 6


முன்கதை
சுருக்கம்} மதுமிதா இக்கால இளைஞி, அவளை காதலிப்பதாக சொல்லும் அவளது
முதலாளி அபிஷேக் அவளை தன்னுடன் காரில் ஏற்றிவந்து விடும் சமயம் ஒரு பெண்
குறுக்கிடுகிறாள்.

இனி}
ஏ..ஏய் ஸ்வேதா! உனக்கு எத்தனை முறை சொல்வது பொது இடங்களில் இந்த மாதிரி
நடந்து கொள்ளாதே என்று! இவள் என் பர்செனல் செகரட்டரி, நீ வாய்க்கு வந்தபடி
பேசிக் கொண்டு போகிறாயே! என்று அவளை கண்டித்தான் அபிஷேக்.

ஆனால்
அந்த ஸ்வேதாவோ கொஞ்சமும் அதை லட்சியம் செய்யாமல் இப்போ என்ன குறைந்து
விட்டது! கேவலம் உன்னிடம் சம்பளம் வாங்குபவள் தானே! உன்னிடம் வாங்கினால்
என்ன? என்னிடம் வாங்கினால் என்ன? என்ன இருந்தாலும் நான் உன் வருங்கால
மனைவியாகப் போகிறவள் இல்லையா என்னிடம் திட்டு வாங்கினால் ஒன்றும் குறைந்து
போய்விடமாட்டாள் என்று சொல்லிக் கொண்டே போக அபிஷேக் தலையில் அடித்துக்
கொண்டான்.

சாரி
சாரி ஐயம் சாரி மது! என்று அவன் சொல்ல இருக்கட்டும் மிஸ்டர் அபிஷேக்
இருந்தாலும் உங்கள் மனைவிக்கு ஐ மீன் உங்கள் வருங்கால மனைவிக்கு கொஞ்சம்
நாகரீகத்தையும் கற்றுத் தாருங்கள் என்று வருங்கால மனைவி என்பதை கொஞ்சம்
அழுத்தி சொல்லியவள் பதிலை எதிர் பாராமல் நடந்தாள்.

அவளது
இந்த எதிர் பாரா தாக்குதலை சமாளிக்க முடியாமல் என்ன செய்வது என்று
யோசிப்பதற்குள் காரினுள் ஏறியிருந்தாள் ஸ்வேதா. அபி ஏன் அப்படி திகைத்து
நிற்கிறாய்? கமான் வா வண்டியை எடு என்று அவனை கூப்பிடவும் செய்தாள்.

ஏய்
உனக்கு அறிவிருக்கிறதா? எல்லோரிடமும் என்னை உன் வருங்கால கணவன் என்று
சொல்வதை முதலில் நிறுத்து! என்று எரிந்து விழுந்தான் அபிஷேக்.

நான்
என்ன அப்படி தப்பாக சொல்லிவிட்டேன். நம் இருவீட்டாரும் கூடி முடிவெடுத்ததை
தானே சொன்னேன். ஆமாம் கிழித்தார்கள்! அதில் எனக்கு துளியும் விருப்பம்
இல்லை என்று அன்றே சொல்லிவிட்டேன் அல்லவா?

ஆனால் நான் உங்களை விரும்புகிறேன் அத்தான்!
சே!
முதலில் இப்படி அழைப்பதை முதலில் நிறுத்து! சொந்தங்களில் திருமணம் என்றாலே
எனக்கு பிடிக்காது! உன்னை மணந்துகொள்ள உன் வீட்டார் நச்சரித்த போதும்
தெளிவாக சொல்லி அனுப்பினேனே! உன்னிடம் அவர்கள் சொல்லித் தொலைக்கவில்லையா?
இன்று நந்தி மாதிரி வந்து குறுக்கெ நின்று.. இனியும் இப்படி சொல்லித்
திரியாதே! அது உனக்கு மட்டுமல்ல எனக்கும் நல்லதல்ல! போகட்டும் இப்பொழுது நீ
எங்கே போகவேண்டுமென்று சொல்லி தொலைக்கிறாயா என்றான் அபிஷேக்.

அபி
என்னை கைவிட்டு விடுவதாக மட்டும் சொல்லி விடாதீர்கள்! நான் உங்களையே
நினைத்துக் கொண்டு இருக்கிறேன்.கற்பனையில் என்னென்னமோ நினைத்துக்
கொண்டுள்ளேன். நீங்களானால் அந்த பிச்சைக் காரியை மனதில் கொண்டு என்னை
கழற்றி விடுகிறீர்கள்!

என்ன
சொன்னாய்? பிச்சைக்காரியா! நீ மட்டும் என்ன கோடிஸ்வரி குடும்பத்தில்
உதித்தாய் என்று நினைப்போ? உன்னை காரில் ஏற்றியதே மகா தப்பாகிவிட்டது!
மரியாதையாக இறங்கிக் கொள்கிறாயா? என்று கதவை திறந்தான் அபிஷேக்.

அபி
உங்களை அந்த மாய்மாலக் காரி வசியப் பொடி தூவி ஏமாற்றிவிட்டாள். அவளை
சும்மா விடப் போவதில்லை! அத்துடன் மணந்தால் உங்களைத்தான் மணப்பேன். இப்போது
அனாவசியமாக சண்டை போட விரும்பவில்லை அதனால் இத்துடன் வருகிறேன் என்று காரை
விட்டு வேகமாக இறங்கி போனாள் ஸ்வேதா.

அவள்
இறங்கியதும்தான் தாமதம். அந்த கார் வேகமெடுத்து பறந்தது.வேகமாகச் செல்லும்
காரையே முறைத்துப் பார்த்தாள் ஸ்வேதா! வளமானவன் அழகானவன் இவனை மணந்து
கொண்டால் காலம் முழுவதும் கவலையின்றி இருக்கலாம் என்று
போட்ட திட்டமெல்லாம் திடீரென்று புதிதாக முளைத்த ஒருவளால் அழிந்து போவதா?
விடமாட்டேன்.என்று சபதமிட்டவள் ஒரு ஆட்டோவை நிறுத்தி அதில் ஏறிப்போனாள்.

இவர்கள்
இருவரும் போவதற்கு முன்பே முதலில் சென்ற மதுமிதா இப்போழுது வீட்டு வாசலை
நெருங்கிக் கொண்டிருந்தாள். அவள் மனம் கொந்தளித்துக் கொண்டிருந்தது. சே
என்ன ஒரு கேவலமான பார்வை அவளுக்கு பிச்சைக்காரி என்று சொல்லிவிட்டாள். அதை
பார்த்துக் கொண்டு இவன் சும்மா நிற்கிறானே! சாரி கேட்டுவிட்டால் போதுமா
அவளை நாலு விளாசு விளாசி இருக்க வேண்டாமா? அதை விடுத்து குழைகிறானே!

[You must be registered and logged in to see this link.]
அவள்
வருங்கால மனைவி என்றல்லவா சொன்னாள்? அவளை மணந்து கொண்டால் அவன் வாழ்க்கை
அதோகதிதான்! தாயே சரணம் என்று சரணாகதி அடைய வேண்டியதுதான் என்று நினைத்தவள்
தன்னையே நொந்து கொண்டாள் அவன் யாரை மணந்தால் என்ன? நான் ஏன் இதையெல்லாம்
ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறேன்? அவனுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்
என்று மனதை வேறு வழியில் செலுத்த முயற்சித்தாள்.அதற்குள் வீடும் வந்து விட
உள்ளே நுழைந்தாள்.

நுழைந்ததும்
நுழையாததுமாக பிலு பிலு வென பிடித்துக் கொண்டாள் அவள் தாய். என்ன
பொண்ணுடியம்மா நீ காலையில இண்டர்வியூவிற்கு போனவ இப்ப வந்து நிக்கிற ஒரு
போன் பண்ணக் கூடாதா? காலம் கெட்டுக் கிடக்கு பெத்த வயிறு இங்க தவியா
தவிச்சிகிட்டு இருக்க சாவதானமா எட்டு மணிக்கு வந்து நிற்கிறயே என்றாள்.

அம்மா
உன் புராணத்தை ஆரம்பிச்சிட்டியா? இன்னும் அந்த காலத்திலேயே இருக்கியே? மணி
எட்டுதானே ஆகுது. இதுக்கே பயந்தா எப்படி நான் வேலையில சேர்ந்த்துக்கு
அப்புறம் தினம் எவ்வளவு மணி நேரம் ஆகுமோ? அப்ப என்ன பண்ணுவே? என்றாள் மது.

அப்படின்னா உனக்கு வேலை கிடைச்சுடுச்சுன்னு சொல்லு!
ஆமாம்மா! ஆனா அந்த வேலைக்கு நான் போக வேணாமுன்னு பார்க்கறேன்!
என்னடி
இது அபசகுனமான பேச்சு! வேலை கிடைக்கிறது குதிரை கொம்பாக இறுக்கிற காலத்தில
கிடைச்ச வேலையை வேணாம்னு சொல்றே? ஏன் வேலை உனக்குப் பிடிக்கலையா? கஷ்டமான
வேலையா?

அதெல்லாம் ஒண்ணுமில்லேம்மா!
அப்ப எதுக்கு வேலை வேணாங்கிற?
இல்ல
காரணமெல்லாம் தெரியலை! இந்த வேலை வேண்டாமின்னு தோணுது ப்ளிஸ் விடேன்
காலையில வேலைக்கு போகணுமான்னு கேட்ட இப்ப என்னடான்னா இப்படி பேசற?

நீ கூடத்தான் வேலைக்கு போயே தீருவேன்னு சொன்னே!ஆனா இப்ப கிடைச்ச வேலைய விடப்போறேன்னு சொல்றியே?
நான் ஒண்ணும் வேற வேலை தேடாம இருக்க போறது இல்லியே?
ஆனா புதுசா வேலை கிடைக்க இன்னும் எத்தனை நாளாகுமோ? கிடைச்ச வேலையை விடறது புத்திசாலித்தனம் இல்லை அவ்வளவுதான் நான் சொல்லுவேன்.
சரிம்மா யோசிக்கிறேன்!
எதை
யோசிக்க போறேம்மா! என்று உள்ளே நுழைந்தார் அவளது தந்தை. இன்னிக்குப் போன
இண்டர்வியுவில செலக்ட் ஆகி வேலையும் கிடைச்சிடுச்சு ஆனா வேலைக்கு
போகலைங்கிறா? என்றாள் அன்ன பூரணி.

ஏம்மா எதாவது பிராப்ளமா? நீ வேலைக்கு போகணும்கறது கட்டாயமில்லே! என்ற விநாயகம் நீ அவளை தொந்தரவு செய்யாதே முதல்ல சாப்பாட்டை போடு என்று மனைவியை பணித்தவர் உள்ளே சென்று விட்டார்.
அன்று
இரவு படுக்கையில் விழுந்தவளுக்கு காலையில் நடந்த நிகழ்வுகள் நினைவுக்கு வர
புன்னகைத்துக் கொண்டாள். அந்த அபிஷேக்கை மணந்து கொள்ள போகிறவள் அதிருஷ்ட
சாலி தான் என்று நினைத்தவள் தான் ஏன் அவனையே நினைத்துக் கொண்டிருக்கிறோம்
என்று குட்டிக் கொண்டாள் செல்போன் சிணுங்க எடுத்தாள் .ஒன் மெசேஜ் ரீசிவிங்
என்றிருக்க ரீட் என்பதை அழுத்த குட்நைட் அபிஷேக் என்றிருக்க யார் இவன் எனக்கு குட்நைட் சொல்ல என்று செல்போனை தூக்கி எறிந்தாள்.

நிலவு வளரும்(6)
avatar
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 42
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

Re: என் இனிய பொன் நிலாவே!பகுதி 6

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Mon Oct 03, 2011 11:52 pm

கதை அருமை பாராட்டுக்கள் நண்பரே

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum