"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» சிந்தனை சிகிச்சை-5
by ராஜேந்திரன் Yesterday at 8:39 pm

» வித்தியாசமான வேடத்தில் அனுஷ்கா
by அ.இராமநாதன் Yesterday at 9:29 am

» வித்தியாசமான வேடத்தில் சமந்தா
by அ.இராமநாதன் Yesterday at 9:23 am

» பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:52 am

» ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:51 am

» சமந்தா வரவேற்பு!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:50 am

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:49 am

» சிலம்பம் பயிலும் விஜய் ஆண்டனி!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:48 am

» மாப்பிள்ளைக்கு ஏன் இரண்டு டூ வீலர் வாங்கி கொடுத்திருக்கீங்க?
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:37 am

» இந்த ஆஸ்பத்திரிக்கா உயிரையே கொடுத்தவங்க...!!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 2:12 am

» நாச்சியார் விமர்சனம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:50 pm

» பிரியா வாரியர் கண்ணடிக்கும் பாடல் வாபஸ் இல்லை ; நடிகை பேட்டி கொடுக்க இயக்குனர் தடை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:24 pm

» ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:20 pm

» தெலுங்கில் நடித்த ஸ்ரேயா படம் இணையதளத்தில் வெளியானது
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:17 pm

» நாட்டை சூறையாடும் வங்கியின் விஐபி வாடிக்கையாளர்கள்: மம்தா தாக்கு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:38 pm

» மெக்சிகோவில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் கட்டிடங்கள் குலுங்கின
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:37 pm

» பிஎன்பி மோசடி: மேலும் ரூ. 549 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்; நிரவ் மோடி இருப்பிடம் தெரியாது - வெளியுறவுத்துறை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:36 pm

» தொழில்நுட்ப ஆஸ்கர் விருது வென்ற இந்தியர்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:35 pm

» கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது அமலாக்கத்துறை விசாரிக்க கோர்ட்டு அனுமதி
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:33 pm

» மணிசங்கர் அய்யர் மீது தேசதுரோக வழக்கு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:32 pm

» நாணயம் பெற மறுத்தால் நடவடிக்கை: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:31 pm

» ரூ.9க்கு ஏர்டெல் புதிய திட்டம் அறிவிப்பு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:25 pm

» ரூ.99க்கு பி.எஸ்.என்.எல். அதிரடி சலுகை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:24 pm

» மருத்துவ குறிப்புகள் - தொடர்பதிவு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:26 pm

» நீரிழிவு நிலை உள்ளவர்களா உங்கள் உணர்திறன் குறைவடையும்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:24 pm

» திறந்தநிலை கல்வி நிறுவனங்களில் பிளஸ் 2 படிப்பவர்களுக்கு நீட் தேர்வு எழுத அனுமதி கிடையாது
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:07 pm

» ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்படவில்லை: படத்திறப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் வாதம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:06 pm

» புதுச்சேரி - பெங்களூர் இடையே புதிய விமான சேவை மீண்டும் தொடக்கம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:05 pm

» சனீஸ்வரா காப்பாத்து!
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:02 pm

» நாம் அழுதால் தாங்கமாட்டார் ஆஞ்சநேயர்!
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:01 pm

» பெண்ணிடம் திருடப்பட்ட செயின் அவரிடமே அடகுக்கு வந்த அதிர்ச்சி சம்பவம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 1:59 pm

» 10 செகண்ட் கதைகள்
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 11:03 pm

» பொது அறிவு - வினா, விடைகள்
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 10:50 pm

» படித்ததில் பிடித்தது - பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 10:40 pm

» உயிர்த்தெழும் கதாபாத்திரங்கள் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 10:25 pm

» முத்தங்களை கக்கிய பொழுதுகள் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 10:21 pm

» கண்கள் பாதிப்பை குறைக்கும் உடற்பயிற்சிகள்
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 3:05 pm

» வைரலாகும் நயன்தாராவின் பர்சனல் புகைப்படம்....
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:58 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டுன் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:53 pm

» பா.இரஞ்சித்தின் படத்தை வெளியிடுகிறது லைகா நிறுவனம்
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:44 pm

» தமிழகத்திற்கு 177.25 டி.எம்.சி நீரை தர வேண்டும் - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:38 pm

» தாய்ப்பால் கொடுத்த முதல் திருநங்கை அமெரிக்காவில் சாதனை படைத்த மருத்துவர்கள்!
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:34 pm

» மகன் வாங்கிய காரில் மருமகள் செல்வதா? காரை தீயிட்டு கொளுத்திய தாய்!
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:29 pm

» சென்னையில் கஞ்சா வைத்திருந்த கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:27 pm

» தமிழ் சிதைந்தால் தமிழினமே சிதைந்து போகும்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Feb 16, 2018 8:42 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க......

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க......

Post by ஆளுங்க on Sat Oct 15, 2011 8:32 pm

உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க......

இணையம் என்பது ஒரு கடலைப் போன்றது..
இதில் சிப்பி முத்துக்களும் உண்டு... உதவாத குப்பைகளும் உண்டு...

மின்னஞ்சல்கள் வந்த பிறகு தகவல் தொடர்பு மிக எளிதானது..
ஒருவர் சொல்லும் செய்தியை மிக விரைவாக அடுத்தவர் பெற முடியும்...

மின்னஞ்சல் நிறுவனங்கள் பல "முன்-அனுப்புதல்" (Forward) மூலம் தான் அதிக மின்னஞ்சல்கள் செல்வதாக தெரிவிக்கிறன...
இப்படி அனுப்பப்படும் மின்னஞ்சல்களால் சாதகமும் உண்டு, பாதகமும் உண்டு..

பலர் அறியாத தகவல்களை அறிய முடிவது சாதகம்...

பாதகம்: ஒரு தவறான செய்தி வழிவழியாக பரப்பப்படுவது!!

பலர் தங்களுக்கு வரும் செய்திகள் புதினவாக இருப்பதால், அவற்றை உண்மை என்று நம்பி அனுப்புவதாலேயே தவறான செய்திகள் பரப்பப்படுகிறன..

இந்த திரியின் மூலம், இணையத்தில் இப்படி பரவும் புரட்டுகளைப் (தவறான செய்திகள்) பற்றி அலசலாம்....

உறவுகள் தாங்கள் அறிந்த தவறான (தவறு என்று உணர்ந்த) செய்திகளையும் இங்கே பதியலாம்!!
avatar
ஆளுங்க
ரோஜா
ரோஜா

Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 31
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி

Back to top Go down

செல்போனின் தரம் #001

Post by ஆளுங்க on Sat Oct 15, 2011 8:33 pm

முதல் விடயத்தை அலைபேசியில் இருந்து துவங்குவோம்...

பலருக்கும் இந்த செய்தி மின்னஞ்சல் வடிவிலோ, குறுஞ்செய்தி வழியாகவோ பெற்று இருக்க வாய்ப்பு உண்டு (தமிழாக்கம்):

உங்களுடைய செல்போனில் *#06# என்று அழுத்திய உடன் நீங்கள் பயன்படுத்தக் கூடிய செல்போனில் அடையாள நம்பர் 15 இலக்கங்களில்
தெரியவரும்.
அப்படி கிடைக்ககூடிய எண்களில் 7 மற்றும் 8வதாக வரக்கூடிய எண்களை கீழ்கண்ட
பட்டியலோடு ஒப்பிட்டு பார்த்து உங்களின் செல்போனின் தரத்தை அறிந்து
கொள்ளுங்கள்.
00 ==> தரமான தொழிற்சாலையில் தயாரித்தது (செல்போன் தரம் மிக மிக நன்று)
01 அல்லது 10 ==> தயாரித்த நாட்டின் பெயர் பின்லாந்து (மிக நன்று)
08 அல்லது 80 ==> தயாரித்த நாட்டின் பெயர் ஜெர்மனி
(நன்று)
02 அல்லது 20 ==> ஒருங்கிணைப்பு செய்தது துபாயில். (சுமார்)
13 ==> ஒருங்கிணைப்பு செய்தது அஜேர்பயிஜான் (மோசம்)

உண்மை என்னவென்று பார்ப்போமா??

உங்களுடைய செல்போனில் *#06# என்று அழுத்திய உடன் நீங்கள் பயன்படுத்தக் கூடிய செல்போனில் அடையாள நம்பர் 15 - 17 இலக்கங்களில்
தெரியவரும்.. இதுவரை உண்மை தான்...

ஆனால் அதன் பிறகு உள்ளதை கவனிக்க:

அந்த எண்ணை கீழ்காண்பது போல் பிரித்துக் கொள்ளுங்கள்
AA-BBBBBB-CCCCCC-D**

AA - IMEI எண்ணை வழங்கும் அமைப்பின் எண்
BBBBBB - அலைபேசி மாதிரி எண் (Model No)
CCCCCC - அலைபேசி வரிசை எண் ( Serial No)
D** - checksum

இதில் AA-BBBBBB என்பது Type Allocation Code (TAC) எனப்படும்..
உங்கள் அலைபேசி தொலைந்து போனால், வரிசை எண்னைக் கொண்டே அலைபேசியைக் கண்டறியும் முயற்சி நடக்கிறது!!

இதில் உள்ள அலைபேசி மாதிரி எண் IMEI அமைப்பினால் வழங்கப்படுகிறது..
(ஒவ்வொரு அலைபேசி modelக்கும் ஒவ்வொரு எண்).. வரிசை எண் மட்டும் தயாரிப்பு நிறுவனம் தருவது..

எனவே, இந்த எண்ணைக் கொண்டு எங்கு தயாரிக்கப்பட்டது என்று கண்டுபிடிக்கலாம் என்பது வெறும் கற்பிதமே!!!

(உ.தா:
நீங்கள் நோக்கியா அலைபேசி பயன்படுத்தினால், AA என்பது 35 ஆக இருக்கும்..
ஒரே மாடல் பேசிகள் (ஒரே கால கட்டத்தில் வாங்கியவை) இரண்டை வாங்கி பாருங்கள்
- BBBBBB ஒன்றாக இருக்கும்)

உங்கள் அலைபேசி எங்கு தயாரிக்கப்பட்டது என்பதை அறிய விருப்பமா?

உங்கள்
அலைபேசியின் மின்கலத்தை (battery) வெளியே எடுங்கள்.. மின்கலம்
அமர்ந்திருக்கும் இடத்தில் ஒரு முத்திரைச் சீட்டு (label) ஒட்டப்பட்டு
இருக்கும். அதில் உங்கள் IMEI எண்ணும் (*#060# அடித்தால் வரும் அதே எண்) , எங்கு தயாரிக்கப்பட்டது என்கிற விவரமும் இருக்கும்!!

குறிப்பு:
நீங்கள் அரத பழசான அலைபேசியைப் பயன்படுத்துகிறீர்களா? அப்படியெனில், இது உண்மையாக இருக்க வாய்ப்பு உண்டு..

மேலே சொல்லப்பட்ட IMEI எண் இலக்கணம் 2004 ஆம் ஆண்டிற்கு பின் தயாரிக்கப்பட்ட அலைபேசிகளுக்கே பொருந்தும்!!
அதற்கு முந்தைய எண்களுக்குப் பொருந்தாது!

அப்போதைய IMEI எண் இலக்கணம் AA-BBBB-EE-CCCCCC-*

இதில் AA-BBBB என்பது மட்டுமே என்பது Type Allocation Code எனப்படும்..
(பின்னாளில் மாடல்கள் எண்ணிக்கை உயர்ந்ததும், மேம்பட்ட தொழில்நுட்பமுமே எண்ணிக்கையை மாற்ற காரணம் ஆனது)

EE என்பது எந்த நாட்டில் தயாரானது என்பது.. Factory Allocation Code (FAC)
அப்போதும் குறிப்பிடப்பட்டுள்ள நாடுகள் தவறு.. அவை அலைபேசிகளின் நிறுவனங்களைப் பொறுத்து மாறியது

தயாரிப்பு நாடுகள் வரிசையில் கொரியா, ஜப்பான் (முண்ணணி அலைபேசி தயாரிப்பாளர்களின் நாடுகள்) இல்லை என்பதை கவனிக்க!!

ஆதாரம்: நோக்கியா தளம், GSM, விக்கிபீடியா

பி.கு:
தங்கள் அலைபேசியின் IMEI எண்ணைப் பற்றி மேலும் அறிய வேண்டுவோர் கீழ் காணும் தளத்திலும் அறிந்து கொள்ளலாம்...
IMEI ANALYSIS


Last edited by ஆளுங்க on Fri Oct 21, 2011 10:21 pm; edited 1 time in total
avatar
ஆளுங்க
ரோஜா
ரோஜா

Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 31
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி

Back to top Go down

Re: உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க......

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Sat Oct 15, 2011 9:05 pm

அருமையான பயனுள்ள திரியை துவங்கியிருக்கீங்க பாராட்டுக்கள் அண்ணே

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க......

Post by ஆளுங்க on Sat Oct 15, 2011 9:15 pm

ஆதரவுக்கு நன்றி யூஜின் அவர்களே!!

இப்படிப்பட்ட தகவல்கள் இன்னும் பல தருகிறேன்!
avatar
ஆளுங்க
ரோஜா
ரோஜா

Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 31
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி

Back to top Go down

Re: உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க......

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Sat Oct 15, 2011 9:19 pm

மிக்க நன்றி நண்பரே என்றும் எப்போதும் ஆதரவும் அன்பும் நமது தோட்டத்து உறவுகள் ஒவ்வொருவருக்கும் உண்டு நண்பரே

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க......

Post by கவியருவி ம. ரமேஷ் on Sat Oct 15, 2011 9:25 pm

ஆளுங்க... பயனுள்ள தகவல். பகிர்ந்து கொண்டமைக்கு மகிழ்ச்சி ...

_________________
http://www.kaviaruviramesh.com
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
http://www.kaviaruviramesh.com/p/blog-page.html
http://www.ebay.in/sch/rameshmkm/m.html?_nkw=&_armrs=1&_ipg=&_from=
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க......

Post by vinitha on Sat Oct 15, 2011 9:32 pm

சியர்ஸ்
avatar
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 8
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

Re: உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க......

Post by jeba on Sat Oct 15, 2011 10:42 pm

avatar
jeba
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1784
Points : 2058
Join date : 15/10/2009
Age : 31

Back to top Go down

Re: உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க......

Post by vinitha on Sat Oct 15, 2011 10:44 pm

சியர்ஸ்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:மிக்க நன்றி நண்பரே என்றும் எப்போதும் ஆதரவும் அன்பும் நமது தோட்டத்து உறவுகள் ஒவ்வொருவருக்கும் உண்டு நண்பரே
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
avatar
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 8
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

Re: உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க......

Post by தமிழன் on Tue Oct 18, 2011 3:19 pm

பகிர்வுக்கு மிக்க நன்றி.

தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

Re: உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க......

Post by தங்கை கலை on Tue Oct 18, 2011 3:21 pm

சியர்ஸ்
avatar
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 18
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

Re: உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க......

Post by muthuselvi on Tue Oct 18, 2011 3:31 pm

சரிங்க பாஸ் குதுகலம்
avatar
muthuselvi
மல்லிகை
மல்லிகை

Posts : 139
Points : 163
Join date : 03/10/2011
Location : மும்பை

Back to top Go down

Re: உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க......

Post by ஆளுங்க on Thu Oct 20, 2011 11:41 pm

பார்த்து கருத்துரையிட்ட அனைவருக்கும் நன்றி
avatar
ஆளுங்க
ரோஜா
ரோஜா

Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 31
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி

Back to top Go down

என் பணம் பணம் #002

Post by ஆளுங்க on Thu Oct 20, 2011 11:43 pm

தானியியக்க வங்கி இயந்திரம்

இதைப் பற்றிய ஒரு மிக அருமையான புரட்டு உண்டு (தமிழாக்கம்):

நீங்கள் ஒரு ATM உள்ளே நுழைகிறீர்கள்..
அப்போது, இரு திருடர்கள் உள்ளே புகுந்து உங்களைத் தாக்குகிறார்கள்.. பணம் கேட்டு உங்களை மிரட்டுகிறார்கள்.
என்ன செய்வது?

அவர்களிடம் தர்க்கம் செய்ய வேண்டாம்..

வழக்கம் போல் உங்கள் அட்டையைப் பயன்படுத்துங்கள்..
ஆனால், சங்கேத குறியீட்டு எண்ணைத் தலைகீழாக இடுங்கள்
உ.தா: உங்கள் பின் எண் 1254 என்றால் 4521 என்று அழுத்துங்கள்..

நீங்கள் இப்படி திருப்பி எண்ணை இடும் போது, பணம் வழக்கம் போல் வெளிவரும்..
ஆனால், இயந்திரத்தில் சிக்கி கொண்டு வெளியே வராது.. என்ன முயற்சி செய்தாலும் பணம் வெளியே வராது!!
அதே சமயம், உங்கள் அருகில் இருக்கும் காவல் நிலையத்திற்கு திருட்டு முயற்சி பற்றிய எச்சரிக்கை சென்று விடும்..

இந்த வசதி எல்லா ATM களிலும் உண்டு.. ஆபத்தையும், ஆபத்து சமயத்தில் உதவி பெறவும் இந்த வசதி பயன்படுத்தப்படுகிறது!!உண்மை:

இதை யாராவது பரிசோதித்துப் பார்த்து இருக்கிறீர்களா?
இது ஒரு மிகப் பெரிய புரளி...

நீங்கள் திருப்பி அடித்தால், PIN NUMBER WRONG என்ற செய்தி வந்து மீண்டும் எண்ணைக் கேட்குமே தவிர, பணம் வராது!!
முயற்சி செய்யுங்கள்!!

இப்படி ஒரு முறையே நடைமுறையில் இல்லை..
உங்களுக்குக் காவல் துறையில் ஒரு நண்பர் இருந்தால் அவரிடம் கேட்டு பாருங்கள்!!

1994
ஆம் ஆண்டு ஜோசப் சிங்கர்ட் என்பவர் , மேற்கூறிய திட்டம் உடைய ATM
மென்பொருளை உருவாக்கினார். அவர் பல வங்கிகளுக்கு அதைக் கொடுக்க முயன்றார்..
ஆனால், பலன் இல்லை..
எனவே, திட்டம் உருவாக்கப்பட்டது. ஆனால், செயலாக வில்லை..

திட்டம் செயலாகாமல் போக முக்கிய காரணங்கள்:
*
இருவழியொக்கும் எண்களை (palindromic Numbers) சங்கேத எண்ணாக வைக்க
முடியாது (உ.தா: 1221, 3333). இது வாடிக்கையாளர்கள் தங்கள் சங்கேத எண்ணைத்
தேர்வு செய்வதில் ஒரு தடையை (constraint) உருவாக்குகிறது
* ஒருவர் தவறாக எண்ணைத் திருப்பி அடித்தால் பொய் எச்சரிக்கை வரும்.
*
காவல் நிலையம் ATM கு மிக அருகில் இருக்க வேண்டும். இல்லையேல், திருடர்கள்
தப்பிக்க வாய்ப்பு உண்டு. ஒவ்வொரு இயந்திரத்திற்கும் தனி காவலரை
நியமிப்பது நடைமுறைக்குச் சாத்தியம் அல்ல.
* திட்டம் அமலாக்கப்பட்டால்,
இது தொடர்பாக அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் விழிப்பு ஊட்ட வேண்டும்..
வாடிக்கையாளர்களுள் திருடர்கள் மறைந்திருக்க வாய்ப்பு உண்டு.
* திட்டம் அமலாக்கப்பட்டால், சில நாட்களில் திருடர்களுக்கும் இந்த விடயம் தெரிந்து விடும். அதன் பிறகு, இதில் உபயோகம் இல்லை.

ஆதாரம்: ஹோக்ஸ் லேயர்


Last edited by ஆளுங்க on Fri Oct 21, 2011 10:23 pm; edited 1 time in total
avatar
ஆளுங்க
ரோஜா
ரோஜா

Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 31
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி

Back to top Go down

Re: உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க......

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Fri Oct 21, 2011 8:37 am

நல்ல தகவல் ஐயா பகிர்வுக்கு நன்றி... விழிப்புணர்வுக்கு நன்றி ஐயா

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

823 வருடங்களுக்கு ஒரு முறை!! #003

Post by ஆளுங்க on Fri Oct 21, 2011 10:08 pm

823 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் ஒரு நிகழ்வு பற்றிய ஒரு சுவாரசியமான (தவறான) செய்தி உண்டு!

அதிசயம் ஆனால் உண்மை...
இந்த வருடம் சூலை மாதம் (2011 July) ஒரு தனி சிறப்பு மிக்கது..
இந்த மாதத்தில் மொத்தம் 5 வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகள் உள்ளன. (It has 5 Fridays, 5 Saturdays and 5
Sundays).
இது 823 வருடங்களுக்கு ஒரு முறை நிகழும் ஒரு அற்புத நிகழ்வாகும்..
சந்தேகம் இருந்தால் உங்கள் காலண்டருடன் ஒப்பிட்டு பாருங்கள்!!

(குறிப்பு: மாதம் எப்போதும் 2011 July என்று வராது.. மாறுபட்டு இருக்க வாய்ப்பு உண்டு.. முன்பு, October 2010 என்று வந்தது)

உண்மை என்ன?

இதைப் படிக்கும் பலருக்கு அடிப்படை கணிதம் தெரிந்து இருக்கும்..
ஆனால், கணக்கிட்டோ, அல்லது குறைந்தபட்சம் நாள்காட்டியில் பார்த்தோ கூட உண்மையா என்று உறுதி செய்யாமல் அனுப்புகிறனர்..

ஆனால், உண்மை இது தான்...

செய்தியில் உள்ல அடிப்படை தவறு:
இந்த நிகழ்விற்காக 823 வருடங்கள் காத்து இருக்க தேவையில்லை..

இதற்கு முன்
5 வெள்ளி, சனி, ஞாயிறு வந்த மாதங்கள்: ஜனவரி 2010, அக்டோபர் 2010, சூலை 2011
இனி வரப்போகும் மாதங்கள் : மார்ச் 2013, ஆகஸ்ட் 2014

சூலை மாதம் இந்நிகழ்வு 823 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் என்றாலும் தவறு தான்..
இதற்கு முன் சூலையில் 5 வெள்ளி, சனி, ஞாயிறு வந்த ஆண்டுகள்: 1994,2005, 2011
இனி வரப்போகும் ஆண்டுகள் :2016, 2022

28 ஆண்டுகளுக்கு ஒரு முறை காலண்டர் மீண்டும் திரும்பிவருவது குறிப்பிடத்தக்கது..

பி.கு:
ஒரு மாதத்தில் 5 வெள்ளி, சனி, ஞாயிறு வர வேண்டுமென்றால் 31 நாட்கள் கொண்ட மாதத்தில் மட்டுமே சாத்தியம்.
இந்த நிகழ்வு நடக்க மாதத்தின் முதல் நாள் வெள்ளியாக இருக்க வேண்டும் !

* முன்பு வேறொரு தளத்தில் பதிந்த தகவல்.. ஆகையால், சூலை 2011 வரப்போகும் மாதத்தில் உள்ளது.


Last edited by ஆளுங்க on Fri Oct 21, 2011 10:24 pm; edited 2 times in total
avatar
ஆளுங்க
ரோஜா
ரோஜா

Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 31
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி

Back to top Go down

Re: உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க......

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Fri Oct 21, 2011 10:15 pm

அறிந்துக் கொள்ள உதவியமைக்கு நன்றி

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க......

Post by kowsy2010 on Sat Oct 22, 2011 3:02 am

பயனுள்ள பதிவைத் தந்திருக்கின்றீர்கள் . நன்றி

kowsy2010
ரோஜா
ரோஜா

Posts : 233
Points : 405
Join date : 29/12/2010

Back to top Go down

Re: உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க......

Post by சம்பத்குமார் on Sat Oct 22, 2011 3:34 am

பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி சகோ

avatar
சம்பத்குமார்
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 30
Points : 59
Join date : 03/10/2011
Location : கோயம்புத்தூர்

Back to top Go down

Re: உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க......

Post by vinitha on Sat Oct 22, 2011 9:23 am

சியர்ஸ்
avatar
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 8
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

Re: உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க......

Post by ஆளுங்க on Sun Oct 23, 2011 9:30 pm

தொடரைப் படித்த அனைவருக்கும் நன்றி
avatar
ஆளுங்க
ரோஜா
ரோஜா

Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 31
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி

Back to top Go down

Re: உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க......

Post by தமிழன் on Sun Oct 23, 2011 9:32 pm

ஆளுங்க wrote:தொடரைப் படித்த அனைவருக்கும் நன்றி

மிக்க நன்றி ஐயா.

தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

Re: உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க......

Post by thaliranna on Sun Oct 23, 2011 9:36 pm

விழிப்புணர்வு பதிவுக்கு நன்றி!
avatar
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 42
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

சச்சின் கட்டிய வீடு!! #004.

Post by ஆளுங்க on Sun Oct 23, 2011 10:00 pm

மின்னஞ்சல் இது தான்:
ஓட்டு வடிவ வீடு.....
இது யாருடைய வீடு என்று தெரிகிறதா??இது நம்ம சச்சின் தெண்டுல்கர் கட்டிய வீடு..
மும்பையிலுள்ள பந்த்ராவில் உள்ளது..
கட்டியவர்: சேவியர் செனோசியான் (
Javier Senosiain .)
உண்மை இது தான்..
இப்படி ஒரு வீடு இருப்பதும் உண்மை.. அதைக் கட்டியவர் சேவியர் செனோசியான் என்பதும் உண்மை தான்..
ஆனால், இந்த வீட்டிற்கும் சச்சினுக்கும் எந்த தொடர்பும் இல்லை..

முதலில், இப்படி ஒரு வீடு இந்தியாவிலேயே இல்லை.
.
இது இருப்பது
மெக்ஸிகோவில்!!
avatar
ஆளுங்க
ரோஜா
ரோஜா

Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 31
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி

Back to top Go down

Re: உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க......

Post by தங்கை கலை on Sun Oct 23, 2011 10:04 pm

ஆளுங்க அண்ணா வீடு சூப்பர் அண்ணா சியர்ஸ்
avatar
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 18
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

Re: உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க......

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum