"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» காலக்கூத்து - சினிமா விமரிசனம்
by அ.இராமநாதன் Yesterday at 11:37 pm

» ஆண்மகனே புரிந்துகொள் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 11:17 pm

» ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியானது ஏன்? எப்படி? சசிகலாவின் வழக்குரைஞர் விளக்கம்
by அ.இராமநாதன் Yesterday at 11:04 pm

» அடடே அப்படியா...
by அ.இராமநாதன் Yesterday at 4:51 pm

» மாறுவேடப் போட்டி
by அ.இராமநாதன் Yesterday at 4:48 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Yesterday at 4:46 pm

» வாத்துக் குஞ்சுகளுக்கு தாயாகிய நாய்
by அ.இராமநாதன் Yesterday at 4:38 pm

» பாம்பன் பாலத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
by அ.இராமநாதன் Yesterday at 4:34 pm

» போலீசாருக்கு ஐகோர்ட் உத்தரவு Added : மே 26, 2018 14:41
by அ.இராமநாதன் Yesterday at 4:33 pm

» கம்ப்யூட்டரையும் தொலைபேசியையும் இணைக்கும் கருவி....(பொது அறிவு தகவல்)
by அ.இராமநாதன் Yesterday at 1:38 pm

» தூரப்பார்வை உடைய சிறப்பான பூச்சி ....(பொது அறிவு தகவல்)
by அ.இராமநாதன் Yesterday at 1:30 pm

» ஜூன் 30 முதல் ஒரே இணையதளத்தில் மொபைல் கட்டண விவரம் வெளியிட டிராய் உத்தரவு
by அ.இராமநாதன் Yesterday at 12:10 pm

» ‘விசுவாசம்’ அப்டேட்: அஜித்தின் தாய்மாமனாக நடிக்கிறார் தம்பி ராமையா
by அ.இராமநாதன் Yesterday at 12:01 pm

» சினிமா -முதல் பார்வை: செம
by அ.இராமநாதன் Yesterday at 11:58 am

» மீண்டும் பா.ஜ., ஆட்சி: கருத்துகணிப்பில் தகவல்
by அ.இராமநாதன் Yesterday at 8:01 am

» புறாக்களின் பாலின சமத்துவம்
by அ.இராமநாதன் Yesterday at 7:57 am

» குதிரை பேர வரலாறு
by அ.இராமநாதன் Yesterday at 7:56 am

» தமிழகத்தில் 'நிபா' பாதிப்பில்லை!
by அ.இராமநாதன் Yesterday at 7:53 am

» சாதாரண வார்டுக்கு அருண் ஜெட்லி மாற்றம்
by அ.இராமநாதன் Yesterday at 7:51 am

» இந்திரா கவிதைகள்
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:59 pm

» ஒரு பெண் எப்போது அழகாக இருக்கிறாள் - பா.விஜய்
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:56 pm

» பட்ட காலிலேயே படும்....
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:49 pm

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:46 pm

» பழத்துக்குள் மாட்டிக்கொண்ட புழு....
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:41 pm

» டயாபடீஸ் பேஷண்டுகளுக்கென பிரத்யேக டிஸைனர் செருப்புகள் அறிமுகம்!
by அ.இராமநாதன் Fri May 25, 2018 7:22 pm

» மருந்து, மாத்திரைகள் இன்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க இயற்கை வழிமுறை!
by அ.இராமநாதன் Fri May 25, 2018 7:21 pm

» எளிய மருத்துவக் குறிப்புகள்
by அ.இராமநாதன் Fri May 25, 2018 7:19 pm

» ஜி.வி. பிரகாஷ் ஜோடியாக நடிக்கும் அபர்னதி!
by அ.இராமநாதன் Fri May 25, 2018 7:10 pm

» திருச்செந்தூர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 28-ந்தேதி நடக்கிறது
by அ.இராமநாதன் Fri May 25, 2018 2:27 pm

» பலவித முருகன் உருவங்கள்
by அ.இராமநாதன் Fri May 25, 2018 2:23 pm

» இந்தியாவின் முதல் பெண்கள் கால்பந்து பயிற்சியாளர்!
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:45 am

» பி.வி. சிந்துவும் இறக்கையும்!
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:36 am

» தமிழுக்கு வரும் ஸ்பானிஷ் படம்
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:34 am

» தூதரக அதிகாரிகள் மீது சீனா ஒலியலைத் தாக்குதல்?: அமெரிக்கா சந்தேகம்
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:31 am

» சட்டப் பேரவை: மே 29-இல் தொடங்கி 23 நாள்கள் நடைபெறும்: பி.தனபால்
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:22 am

» அரேபியாவின் பங்களிப்பு
by அ.இராமநாதன் Fri May 25, 2018 8:33 am

» உலகின் முதல் உறவு
by அ.இராமநாதன் Fri May 25, 2018 8:31 am

» உலக தைராய்டு தினம்
by அ.இராமநாதன் Fri May 25, 2018 8:28 am

» சென்னையில் புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை
by அ.இராமநாதன் Fri May 25, 2018 8:24 am

» ஸ்ரீநகரில் பிச்சை எடுக்க தடை
by அ.இராமநாதன் Fri May 25, 2018 8:21 am

» வங்கி ஊழியர்கள் 30, 31ல், 'ஸ்டிரைக்'
by அ.இராமநாதன் Fri May 25, 2018 8:20 am

» அலகாபாத் பெயரை மாற்ற முடிவு
by அ.இராமநாதன் Fri May 25, 2018 8:16 am

» இராயேந்திரனின் எண்ணங்கள்
by ராஜேந்திரன் Thu May 24, 2018 8:23 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu May 24, 2018 3:49 pm

» முக்கியமான மூன்று விஷயங்கள்
by அ.இராமநாதன் Wed May 23, 2018 10:49 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில் கனமழை நீடிக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை

Go down

தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில் கனமழை நீடிக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Fri Oct 28, 2011 1:03 pm

சென்னை: "தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை நீடிக்கும்' என்று, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதிகபட்சமாக, புதுச்சேரியில் 19 செ.மீ., மழை கொட்டியது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை, கடந்த 24ம் தேதி துவங்கியது. சில நாட்களாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் மழை விடாமல் கொட்டி வருகிறது. அதிகபட்சமாக, புதுச்சேரி விமான நிலையத்தில் 19 செ.மீ., மழை பதிவானது.

2 நாட்களுக்கு கனமழை: பருவமழை தீவிரமடைந்து வருவதால், தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கனமழை நீடிக்கும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் மேலும் கூறும்போது, "மன்னார் வளைகுடாவுக்கும், ஆந்திரா கடற்கரைக்கும் இடையே வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்தது. அடுத்த இரண்டு நாட்களுக்கும் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கனமழையும், உள்மாவட்டங்களில் பல இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை நகரில் மழை விட்டுவிட்டு பெய்யலாம்' என்றார்.

சம்பா நடவு பணி தீவிரம்: திருச்சி மாவட்டம் முழுவதும், கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால், சம்பா நடவுப் பணி தீவிரமடைந்துள்ளது. திருச்சி மற்றும் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி முடிந்து, சம்பா பயிர் நடவுப் பணி துவங்கியுள்ளது. இந்த மழை, சம்பா நடவுக்கு உகந்ததாக உள்ளது என, விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

திருச்சியில் நேற்று முன்தினம் பெய்த மழை அளவு வருமாறு: திருச்சி மாவட்டம் முழுவதும், 1.65 எக்டேர் விவசாய நிலம் உள்ளது. இதில், 70 ஆயிரம் எக்டேர் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. குறுவை பருவம் முடிந்து தற்போது சம்பா பருவம் துவங்கியுள்ளது. சம்பா பயிர், 60 ஆயிரம் எக்டேர், குறுவை, 6,000 எக்டேர், நவரை, 4,000 எக்டேர் பயிரிடப்பட்டுள்ளது. மழை காரணமாக சம்பா நடவுப் பணி தீவிரமடைந்துள்ளது. இதனால், விவசாயிகள் உற்சாகமடைந்துள்ளனர்.

உப்பு உற்பத்தி நிறுத்தம்: வேதாரண்யத்தில் தொடர் மழை காரணமாக உப்பு உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், உப்பு விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வேதாரண்யம் தாலுகாவில் உள்ள கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், வானவன் மகாதேவி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த, 10 ஆயிரம் மீனவர்கள், மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. மழை காரணமாக, உப்பளங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் உப்பு உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், உப்பு விலை உயரும் என, உப்பு வியாபாரிகள் தெரிவித்தனர்.

நெல் அறுவடை பணி பாதிப்பு: தஞ்சாவூர் அருகே ரெட்டிப்பாளையம் கிராமத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால், நெல் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள வயல்களில் தண்ணீர் நிரம்பி உள்ளதால், அறுவடை செய்ய முடியாதநிலை ஏற்பட்டுள்ளது. அறுவடை இயந்திரங்கள், பாதி அறுவடை செய்யப்பட்ட வயல்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அறுவடை செய்யப்பட்ட 25 குவிண்டால் அளவுள்ள நெற்கதிர்கள், ரெட்டிப்பாளையம் நேரடி நெல் கொள்முதல் நிலையம் முன், கடந்த 15 நாட்களாக விற்பனை செய்ய முடியாமல் வைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு 17 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய உத்தரவிட்டுள்ளது. ஆனால், தற்போது பெய்து வரும் மழையால் நெல் அதிக ஈரப்பதத்துடன் உள்ளது. அதனால், கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்ய தயக்கம் காட்டி வருகின்றனர். எனவே, 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய அரசு உத்தரவிட வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

வைகை ஆற்றில் வெள்ளப் பெருக்கு: தேனி மாவட்டம் கட மலை - மயிலை ஒன்றிய பகுதி களிலும், வருஷநாடு மலைப்பகுதி யிலும் பெய்து வரும் தொடர் கன மழையால், வைகை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு வருகிறது.

சுற்றுலா தலங்களில் "வெறிச்': நீலகிரி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் கடந்த மூன்று நாட் களாக கன மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் உள்ள நீர்பிடிப்பு பகுதிகளான அவலாஞ்சி, அப்பர் பவானி, முக்கூர்த்தி, பார்சன்ஸ் வேலி உட்பட அனைத்து இடங் களிலும் உள்ள நீர்தேக்கங்கள் நிரம்பி வருகின்றன. காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு கடுங்குளிர் நிலவுகிறது. குறைந்த பட்ச வெப்பநிலை 7.5 செல்சியசாகவும், அதிகபட்ச வெப்பநிலை 17 செல்சியசாகவும் பதிவாகி உள்ளது. ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா, படகு இல்லம், ரோஜா பூங்கா ஆகிய பகுதிகளில் நேற்று சுற்றுலா பயணிகளின் கூட்டம் வெகுவாக குறைந்து காணப் பட்டது. படகு சவாரிக்கு ஆளின்றி, ஊட்டி ஏரியில் படகுகள் எல்லாம் "போட் ஜெட்டிகளில்' நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்த காலநிலை தொடரும் பட் சத்தில் உள்ளுர் மக்கள், குறிப்பாக, பள்ளி மாணவ, மாணவியர் கடும் அவதிப்பட வேண்டிய சூழல் உள்ளது.

மேற்குதொடர்ச்சி மலைப்பகுதி யில் பெய்து வரும் பலத்த மழை யால், குற்றாலம் மெயின் அருவியில் செம்மண் நிறத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பயணிகள் குளிக்க அனுமதிக்கப் படவில்லை.போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. காலையில், வெள்ளநீர் குற்றாலநாதர் கோவில் வாசல் வழியாக கடைவீதியில் ஓடியது.

ஸ்ரீவி., பேயனாற்றில் திடீர் வெள்ளம்: ஸ்ரீவில்லிபுத்தூர் மலை பகுதியில் கடும் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, பேயனாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், குளிக்கச் சென்றவர்கள் கரைக்கு வர முடியாமல் தவித்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகதோப்பு பகுதியில், மேற்கு தொடர்ச்சி மலை உள்ளது. மலையடிவாரத்தில் பேயனாறு, மீன்வெட்டி பாறை போன்ற நீர்வீழ்ச்சிகள் உள்ளன. விடுமுறை காலங்களிலும், பேச்சியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களும், ஆற்றிலும், நீர்வீழ்ச்சிகளிலும் குளிப்பது வழக்கம். இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த இரு நாட்களாக மழை பெய்து வருகிறது. செண்பகதோப்பு பேயனாற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடி வருகிறது. இந்நிலையில், நேற்று செண்பகதோப்புக்கு சுற்றுலா வந்தவர்கள், பேயனாற்றில் குளிக்க சென்றுள்ளனர். ஆனால், குளிக்கும் போது திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அடித்து செல்லப்பட்டு, மறுகரையில் தள்ளப்பட்டனர். இதனால் அவர்கள் கரை திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. பின், அருகிலிருந்தவர்கள் கயிறு கட்டி இழுத்து வந்து கரை சேர்த்தனர். இதனால் பெரும் உயிரிழப்பு தடுக்கப்பட்டது.

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56826
Points : 69582
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum