"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» ‘முதலையும் மூர்க்கனும் பிடித்தால் விடா’
by அ.இராமநாதன் Yesterday at 10:35 pm

» தாடியால் தடைபட்ட கல்யாணம்!
by அ.இராமநாதன் Yesterday at 10:31 pm

» பாரபட்ச சம்பளம்!
by அ.இராமநாதன் Yesterday at 10:12 pm

» சாய்த்துவிட்ட போதை!
by அ.இராமநாதன் Yesterday at 10:11 pm

» ஹீல்ஸ் மனிதன்!
by அ.இராமநாதன் Yesterday at 10:11 pm

» உதவிக்கு பரிசு கல்வி!
by அ.இராமநாதன் Yesterday at 10:10 pm

» நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..!
by அ.இராமநாதன் Yesterday at 4:19 pm

» காலவரையற்ற உண்ணாவிரதம் துவக்கினார் ஹசாரே
by அ.இராமநாதன் Yesterday at 4:13 pm

» வித்தியாசமான அழகுப்போட்டி.....!!
by அ.இராமநாதன் Yesterday at 2:51 pm

» படப்பிடிப்பில் இந்தி நடிகை அலியாபட் காயம்
by அ.இராமநாதன் Yesterday at 2:34 pm

» கத்ரீனா கைப் அம்மா திண்டுக்கல் ஆசிரியை
by அ.இராமநாதன் Yesterday at 2:32 pm

» இதற்குத்தான் நடிக்க வந்தேன்- ரகுல் பிரீத் சிங்
by அ.இராமநாதன் Yesterday at 2:28 pm

» தாய்லாந்தில் படப்பிடிப்பை நிறைவு செய்த மிஸ்டர்.சந்திரமௌலி படக்குழு
by அ.இராமநாதன் Yesterday at 2:22 pm

» புதுக்கவிதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 10:06 am

» கொசுக்களின் தாலாட்டில் ...
by அ.இராமநாதன் Yesterday at 9:55 am

» படமும் செய்தியும் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 8:12 am

» பெருமழையும் சிறுதூறலும் - கவிதை
by அ.இராமநாதன் Thu Mar 22, 2018 11:28 pm

» டெஸ்ட் எடுக்காமலேயே எனக்கு கொழுப்பு அதிகம்னு சொல்றீங்களே, எப்படி?
by அ.இராமநாதன் Thu Mar 22, 2018 11:22 pm

» எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்கிறார்களே, என்ன கூட்டம் நடக்குது?
by அ.இராமநாதன் Thu Mar 22, 2018 10:29 pm

» கருகிய ரோஜாவும் கடைசிக் கேள்விகளும் - கவிதை
by அ.இராமநாதன் Thu Mar 22, 2018 10:14 pm

» எளிய பயிற்சி முறை என்பது முத்ரா பயிற்சிதாங்க....
by அ.இராமநாதன் Thu Mar 22, 2018 9:53 pm

» உடல் நலம் தரும் விரல் முத்திரைகள்
by அ.இராமநாதன் Thu Mar 22, 2018 9:50 pm

» உளியின் யுத்தம்! நூல் ஆசிரியர் : கவிஞர் பல்லவி குமார் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Thu Mar 22, 2018 8:50 pm

» உலக தண்ணீர் தினம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Thu Mar 22, 2018 8:48 pm

» விஸ்க்கியா, பிராந்தியா...எது வேணும்னு தெளிவா சொல்லித் தொலைங்க....!!
by அ.இராமநாதன் Thu Mar 22, 2018 5:39 pm

» டெம்பர் தமிழ் ரீமேக் படத்தில் விஷாலுக்கு ஜோடியாகும் நயன்தாரா பட நடிகை
by அ.இராமநாதன் Thu Mar 22, 2018 12:49 pm

» மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகிறார் அஞ்சலி?
by அ.இராமநாதன் Thu Mar 22, 2018 11:14 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Mar 22, 2018 7:59 am

» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Wed Mar 21, 2018 10:59 pm

» நெருப்பின் தாகம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Mar 20, 2018 9:06 pm

» நம் சமையல் அறையில்...
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 5:42 pm

» இந்தியாவில் மின்சார கார்களை களமிறக்கும் மாருதி சுஸுகி
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:51 am

» ஸ்ரீதேவி வாழ்க்கை சினிமா படமாகிறது வித்யாபாலன் நடிக்க பேச்சுவார்த்தை
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:38 am

» பிளாக் பேந்தர் படம் ரூ.7 ஆயிரம் கோடி வசூல் சாதனை
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:35 am

» சசிகலா கணவர் நடராஜன் காலமானார்
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:33 am

» சசிகலா புஷ்பாவுக்கு மீண்டும் திருமணம்!
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:32 am

» இன்று பத்ம விருதுகளை வழங்குகிறார் ஜனாதிபதி
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:31 am

» 2ஜி வழக்கில் அமலாக்கத்துறை அப்பீல்: ராசா, கனிமொழிக்கு சிக்கல் வருகுது
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:30 am

» ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:29 am

» அரசு கஜானாவுக்கு வரவேண்டிய ரூ.1,000 கோடி எங்கே போகிறது? சட்டசபையில் தி.மு.க. காட்டமான கேள்வி
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:28 am

» பூ பூப்பதும் உலகச் செய்திதான்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 11:20 pm

» சின்னச் சின்ன சிந்தனைகள்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 10:46 pm

» குடம் குடமாய் பாலாபிஷேகம் - எக்ஸ்பிரஸ் கதைகள்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 6:13 pm

» குழந்தையை தவறவிட்டவர் கையில் பத்திரமாக இருந்தது கைப்பேசி...!!
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 6:08 pm

» உன்னோட புடவை பளிச்சுன்னு இருக்கே...?!
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 5:35 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines கறைபட்டுப் போன கனவு ?

Go down

கறைபட்டுப் போன கனவு ?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Fri Oct 28, 2011 1:42 pm

[You must be registered and logged in to see this image.]
முகத்திலே முறுவல், நடையில் நம்பிக்கையின் துள்ளல்.மிடுக்காக உடை அணிந்து தலை நிமிர்ந்து நடந்து வருகிற இளைஞனின் முகத்தில் ஏதோ ஒரு வசீகரம் இருக்கத்தான் செய்கிறது.வசிகரமா ? கம்பீரமா ? தன்னம்பிக்கையா
எனக்கு அதைச் சொல்ல சரியான வார்த்தை அகப்படவில்லை.

வர்ணிக்க முடியாத அந்த வசீகரத்தின் பின் ஒரு வரலாறு இருக்கிறது.
நெடுநாள்களாக நானறிந்த பையன் அவன்.சில ஆண்டுகளுக்கு முன் வரை அவன் பொருளாதாரப் பின்னணி ஒன்றும் பிரமாதமாக இருந்திடவில்லை.ஆனால் அவன் நம்பிக்கை வைத்திருந்த கல்வியும்,அதற்குப்பின் இருந்த உழைப்பும்,உலகை ஜெயிக்க வேண்டும் என்ற துடிப்பும் அவனை மாற்றின.வெற்றியும் இளமையும் இன்று அவன் விலாசங்களாகிவிட்டன.

கம்பீரமான இளைஞன் என் ஜன்னலைக் கடந்து போனான்.அவன் முதுகுப் புறத்தைப் பார்த்த நான் பதறிப் போனேன்.அவனது ஆடையின் பின் புறம் முழுவதும் -மிடுக்கான ஆடை எனச் சற்று முன் சொன்னேனே அந்த ஆடை-முழுக்க சேறு.குதிங்காலில் இருந்து தோள்பட்டைவரை மழைச் சேறு புள்ளி புள்ளியாய் கோலமிட்டிருந்தது.புள்ளிகள் எல்லாம் பெரும் புள்ளிகள்.

எப்படி சேறு வந்தது என்று உற்றுப்பார்த்தேன்.பாதுகாக்கும் என்று எண்ணி அவன் அணிந்திருந்த ரப்பர் செருப்பு தயக்கமின்றி அவன் முதுகில் சேற்றை வாரித் தெளித்திருந்தது.முதுகெல்லாம் சேறு இருப்பதை அறியாமல் அவன் முன்னேறிச் சென்று கொண்டிருந்தான்
மிடுக்காக.

அவனது முன்புறத்தையும் முகத்தையும் பாத்தவர்கள் நட்புப் பாராட்டி முறுவலித்தர்கள்.முதுகைப் பார்த்தவர்கள் ஏளனமாக சிரித்து உதட்டோரம் சிரிப்பை ஒளித்துக் கொண்டார்கள்.

ஓடிப் போய் அந்த இளைஞனிடம் உண்மை நிலவரத்தைச் சொல்ல வேண்டும் என ஓர் துடிப்பு எழுந்தது. பாதுகாக்கும் என நீ நினைத்த செருப்பு உன்னைப் பாழ்படுத்திக் கொண்டிருக்கிறது நண்பா.உதறி தள்ளு அதை என அவனுக்குச் சொல்லும் ஆசையில் எழுந்தேன்.

என் மடியில் இருந்த செய்தித்தாள்கள் நழுவித் தரையில் விழுந்து விரிந்தன.
விரிந்த இதழ்கள் எல்லாவற்றிலும் ஊழல் செய்திகள் ஒலித்துக் கொண்டிருந்தன.காற்றையும் காந்த அலைகளையும் காசு பண்ணிய ஊழல்.படைவீரர்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளை பதவியில் இருப்பவர்கள் பங்கு போட்டுக் கொண்ட ஊழல்.அண்டை மாநிலத்தில் அரசு நிலத்தை பெண்டு பிள்ளைகளுக்கு ஒதுக்கிய ஊழல்.

உலக அளவில் நடந்த விளையாட்டுப் போட்டியில் உள்ளிருந்தே சுருட்டிய ஊழல்.வரிக்கு வரி,வார்த்தைக்கு வார்த்தை ஊழல்கள் ஒளிர்ந்துக் கொண்டிருந்தன. அந்த நொடியில் நமது அரசமைப்பு சட்டம் இந்த தேசத்தை "சோஷலிச மதச்சார்பற்ற ஜனநாயக இந்திய குடியரசு " என்று வர்ணிக்கின்ற வரி மனதில் ஓடி மறைந்தது.

அத்தனையும் பொய்,அர்ததமற்ற அலங்கார வார்த்தைகள் என உள்ளம் குமுறியது.

உன்னதமான ஒரு கனவு கறைபட்டுப் போனதை எண்ணிய போது இதயத்தின் ஓரத்தில் ஊமை வலி ஒன்று எழுந்தது.உட்கார்ந்து விட்டேன்.அந்த இளைஞனைப் போல் அல்லவா இருக்கிறது என் தேசம்! முதுகிலே இருக்கிற சேறு தெரியாமல் முகத்திலே முறுவல் ஏந்தி நடை போடுகிறது.காலனி போல் காப்பாற்றும் என நினைத்த அமைப்பு கண்ணுக்குத் தெரியாமல் சகதியை அல்லவா வாரி இறைத்துக் கொண்டிருக்கிறது.

அலைக்கற்றை ஒதுக்கீடு முறையாக நடந்திருந்தால் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு அரசுக்கு வருமானம் வந்திருக்கும் என்கிறது மத்திய தணிக்கை அறிக்கை.அரசுக்கு இந்த பணம் வந்திருந்தால் இப்போது உள்ளதைவிட பள்ளிகளின் எண்ணிக்கையை மூன்று மடங்கு அதிகரித்திருக்கலாம்.( இந்த ஆண்டு பட்ஜெட்டில் மத்திய அரசு கல்விக்கு ஒதுக்கிய நிதி 49,904 கோடி ரூபாய் ) எத்தனை விவசாயிகளின் கண்ணீரைத் துடைத்திருக்கலாம்! விவசாயிகளுக்கு தள்ளுபடி செய்யப்பட்ட கடன்களின் அளவு 70 ஆயிரம் கோடி.இது அதைப் போல இரண்டரை மடங்கு அதிகம்.


ஊழலினால் பாதிக்கப்படுவது அமைச்சர்கள் வீட்டு குழந்தைகள் அல்ல.
அதிகாரிகளின் வீட்டு பிள்ளைகளும் அல்ல.பாதிக்கப்படுபவர்கள் ஏழைகளும்,சிறுதொழில் புரிவோர்க்களும்தான்.ஊழல் நிறைந்த அமைப்பைப் பயன்படுத்திக் கொண்டு பெரிய நிறுவனங்கள் ஏகபோக சந்தைகளை உருவாக்கி கொள்கின்றன.அதிக லாபம் அடைகின்றன. அவை இந்த ஊழல்நிறைந்த அமைப்பைப் பாதுகாக்கவே முயற்சிக்கும்.


சமநீதி கொண்ட,சம வாய்ப்புக் கொண்ட ஒரு சமூகத்தில் நம் குழந்தைகள், நம் குழந்தைகளின் குழந்தைகள் வாழ வேண்டும் என நாம் நிஜமாகவே விரும்புவோமானால் ஊளை ஒழிக்கக் களமிறங்க வேண்டும்.அதில் ஈடுபட்டோரையும்,அவர்களைக் காப்போரையும் கடுமையாக விரைந்து தண்டிக்க வகை செய்யும் சட்டங்களும் அமைப்புகளும் கோரி நாம் குரலெழுப்ப வேண்டும்.


ஏனெனில் ஊழலை விடக் கொடுமையானது அதைக் கண்டு அமைதி காப்பது.


நன்றி : திரு.மாலன் அவர்கள் புதிய தலைமுறை

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: கறைபட்டுப் போன கனவு ?

Post by thaliranna on Fri Oct 28, 2011 8:29 pm

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] அருமையான சிந்தனை!
avatar
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 42
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

Re: கறைபட்டுப் போன கனவு ?

Post by தங்கை கலை on Fri Oct 28, 2011 8:36 pm

சியர்ஸ்
avatar
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 18
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

Re: கறைபட்டுப் போன கனவு ?

Post by கவியருவி ம. ரமேஷ் on Fri Oct 28, 2011 8:48 pm

:héhé: :héhé: :héhé:

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: கறைபட்டுப் போன கனவு ?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Fri Oct 28, 2011 11:29 pm

[You must be registered and logged in to see this image.]

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: கறைபட்டுப் போன கனவு ?

Post by kishore1490 on Mon Nov 28, 2011 2:42 pm

அருமை......... ஆனால் அந்த 76 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் நாட்டுக்கு கிடைதிருந்தாலும் அதை வேறு சிலர் பங்கிட்டு கொண்டிருந்திருபார்களே தவிர ஏழை மக்களுக்கு சென்றிருக்காது.. ரோட்டில் குப்பை பொருகுபவன் கூட நேர்மாயாக உழைத்து சாப்பிடும்போது இந்த அரசியல்வாதிகளுக்கு இப்படி சம்பாதிது சாப்பிட வெட்கமாக இல்லயா?.. இது நாம் நாட்டின் சாவக்கேடு..........
avatar
kishore1490
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 32
Points : 71
Join date : 28/11/2011
Age : 27
Location : ambathur

Back to top Go down

Re: கறைபட்டுப் போன கனவு ?

Post by கவியருவி ம. ரமேஷ் on Mon Nov 28, 2011 3:52 pm

kishore1490 wrote:அருமை......... ஆனால் அந்த 76 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் நாட்டுக்கு கிடைதிருந்தாலும் அதை வேறு சிலர் பங்கிட்டு கொண்டிருந்திருபார்களே தவிர ஏழை மக்களுக்கு சென்றிருக்காது.. ரோட்டில் குப்பை பொருகுபவன் கூட நேர்மாயாக உழைத்து சாப்பிடும்போது இந்த அரசியல்வாதிகளுக்கு இப்படி சம்பாதிது சாப்பிட வெட்கமாக இல்லயா?.. இது நாம் நாட்டின் சாவக்கேடு..........

இந்திய அரசியல்வாதிகளிடம் நேர்மையை எதிர்பார்க்க முடியாது பாஸ்... இது இந்தியாவின் குறைதான்

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: கறைபட்டுப் போன கனவு ?

Post by தங்கை கலை on Mon Nov 28, 2011 4:01 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:
kishore1490 wrote:அருமை......... ஆனால் அந்த 76 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் நாட்டுக்கு கிடைதிருந்தாலும் அதை வேறு சிலர் பங்கிட்டு கொண்டிருந்திருபார்களே தவிர ஏழை மக்களுக்கு சென்றிருக்காது.. ரோட்டில் குப்பை பொருகுபவன் கூட நேர்மாயாக உழைத்து சாப்பிடும்போது இந்த அரசியல்வாதிகளுக்கு இப்படி சம்பாதிது சாப்பிட வெட்கமாக இல்லயா?.. இது நாம் நாட்டின் சாவக்கேடு..........

சியர்ஸ் இந்திய அரசியல்வாதிகளிடம் நேர்மையை எதிர்பார்க்க முடியாது பாஸ்... இது இந்தியாவின் குறைதான்
avatar
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 18
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

Re: கறைபட்டுப் போன கனவு ?

Post by kishore1490 on Mon Nov 28, 2011 4:36 pm

ம் ம்ம்.... அரசியல் வாதிகள் எல்லா நாட்டிலும் இப்படிதான், என்ன மத்த நாட்டைவிட நம் நாட்டில் அப்படிப்பட்ட அரசியல் வாதிகள் அதிகம்... தனி மனித ஒழுக்கம் நடைமுறைக்கு வரும்வரை.. இதை தடுக்க முடியாது..
avatar
kishore1490
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 32
Points : 71
Join date : 28/11/2011
Age : 27
Location : ambathur

Back to top Go down

Re: கறைபட்டுப் போன கனவு ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum