"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வெட்கம் - கவிதை
by அ.இராமநாதன் Today at 1:27 pm

» அழகிய தமிழ் - கவிதை
by அ.இராமநாதன் Today at 1:26 pm

» யாப்பு
by lakshmi.P.R Today at 1:26 pm

» நடவு & ஆசை - கவிதைகள்
by அ.இராமநாதன் Today at 1:23 pm

» சிந்தனை சிகிச்சை-5
by ராஜேந்திரன் Yesterday at 1:39 pm

» வித்தியாசமான வேடத்தில் அனுஷ்கா
by அ.இராமநாதன் Yesterday at 2:29 am

» வித்தியாசமான வேடத்தில் சமந்தா
by அ.இராமநாதன் Yesterday at 2:23 am

» பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 1:52 am

» ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 1:51 am

» சமந்தா வரவேற்பு!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 1:50 am

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 1:49 am

» சிலம்பம் பயிலும் விஜய் ஆண்டனி!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 1:48 am

» மாப்பிள்ளைக்கு ஏன் இரண்டு டூ வீலர் வாங்கி கொடுத்திருக்கீங்க?
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 1:37 am

» இந்த ஆஸ்பத்திரிக்கா உயிரையே கொடுத்தவங்க...!!
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 7:12 pm

» நாச்சியார் விமர்சனம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 4:50 pm

» பிரியா வாரியர் கண்ணடிக்கும் பாடல் வாபஸ் இல்லை ; நடிகை பேட்டி கொடுக்க இயக்குனர் தடை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 4:24 pm

» ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 4:20 pm

» தெலுங்கில் நடித்த ஸ்ரேயா படம் இணையதளத்தில் வெளியானது
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 4:17 pm

» நாட்டை சூறையாடும் வங்கியின் விஐபி வாடிக்கையாளர்கள்: மம்தா தாக்கு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:38 am

» மெக்சிகோவில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் கட்டிடங்கள் குலுங்கின
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:37 am

» பிஎன்பி மோசடி: மேலும் ரூ. 549 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்; நிரவ் மோடி இருப்பிடம் தெரியாது - வெளியுறவுத்துறை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:36 am

» தொழில்நுட்ப ஆஸ்கர் விருது வென்ற இந்தியர்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:35 am

» கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது அமலாக்கத்துறை விசாரிக்க கோர்ட்டு அனுமதி
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:33 am

» மணிசங்கர் அய்யர் மீது தேசதுரோக வழக்கு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:32 am

» நாணயம் பெற மறுத்தால் நடவடிக்கை: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:31 am

» ரூ.9க்கு ஏர்டெல் புதிய திட்டம் அறிவிப்பு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:25 am

» ரூ.99க்கு பி.எஸ்.என்.எல். அதிரடி சலுகை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:24 am

» மருத்துவ குறிப்புகள் - தொடர்பதிவு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 7:26 am

» நீரிழிவு நிலை உள்ளவர்களா உங்கள் உணர்திறன் குறைவடையும்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 7:24 am

» திறந்தநிலை கல்வி நிறுவனங்களில் பிளஸ் 2 படிப்பவர்களுக்கு நீட் தேர்வு எழுத அனுமதி கிடையாது
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 7:07 am

» ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்படவில்லை: படத்திறப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் வாதம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 7:06 am

» புதுச்சேரி - பெங்களூர் இடையே புதிய விமான சேவை மீண்டும் தொடக்கம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 7:05 am

» சனீஸ்வரா காப்பாத்து!
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 7:02 am

» நாம் அழுதால் தாங்கமாட்டார் ஆஞ்சநேயர்!
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 7:01 am

» பெண்ணிடம் திருடப்பட்ட செயின் அவரிடமே அடகுக்கு வந்த அதிர்ச்சி சம்பவம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:59 am

» 10 செகண்ட் கதைகள்
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 4:03 pm

» பொது அறிவு - வினா, விடைகள்
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 3:50 pm

» படித்ததில் பிடித்தது - பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 3:40 pm

» உயிர்த்தெழும் கதாபாத்திரங்கள் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 3:25 pm

» முத்தங்களை கக்கிய பொழுதுகள் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 3:21 pm

» கண்கள் பாதிப்பை குறைக்கும் உடற்பயிற்சிகள்
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 8:05 am

» வைரலாகும் நயன்தாராவின் பர்சனல் புகைப்படம்....
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 7:58 am

» நாட்டு நடப்பு - கார்ட்டுன் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 7:53 am

» பா.இரஞ்சித்தின் படத்தை வெளியிடுகிறது லைகா நிறுவனம்
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 7:44 am

» தமிழகத்திற்கு 177.25 டி.எம்.சி நீரை தர வேண்டும் - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 7:38 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சங்கரன்கோவில் தொகுதி இடைத் தேர்தலில் மதிமுக போட்டி: வைகோ

Go down

சங்கரன்கோவில் தொகுதி இடைத் தேர்தலில் மதிமுக போட்டி: வைகோ

Post by thaliranna on Wed Nov 02, 2011 12:01 pm

மதுரை: சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதிக்கு நடைபெறவுள்ள இடைத் தேர்தலில்
மதிமுக போட்டியிடும் என்று அக் கட்சியின் தலைவர் வைகோ அறிவித்துள்ளார்.

இந்தத்
தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு அதிமுக அமைச்சராக இருந்த
கருப்பசாமி சமீபத்தில் மறைந்ததையடுத்து இடைத் தேர்தல் நடக்கவுள்ளது.

இந்
நிலையில் மதுரை மாநகர் மாவட்ட மதிமுக செயலாளர் புதூர் பூமிநாதனின் மகள்
திருமணம் இன்று மதுரை சொக்கிகுளம் பி.டி.ஆர். திருமண மண்டபத்தில் நடந்தது.
அகசில் பங்கேற்ற வைகோ நிருபர்களிடம் பேசுகையில், சங்கரன்கோவில் தொகுதியில்
மதிமுக போட்டியிடும்.

சென்னையில் கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா
நூற்றாண்டு நினைவு நூலகத்தை டிபிஐ வளாகத்துக்கு மாற்றும் முடிவு தவறானது.
இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.

பின்னர் திருமண விழாவில் வைகோ பங்கேற்றார். இந்தத் திருமண விழாவில்
திமுகவின்
மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் மூர்த்தி, மதுரை நகர் மாவட்ட செயலாளர்
தளபதி உள்ளிட்ட ஏராளமான திமுக பிரமுகர்களும் பங்கேற்றனர்.

திருமண
விழாவில் வைகோ பேசுகையில், இந்த விழாவில் திமுக மாவட்டச் செயலாளர்களும்
மணமக்களை வாழ்த்தி சென்று உள்ளனர். அரசியல்ரீதியாக எந்த விமர்சனமும் செய்ய
விரும்பவில்லை. ஏனென்றால் விமர்சனம் எழும்பும் இடத்திற்கு நீங்கள் ஏன்
சென்றீர்கள் என்று அவர்களிடம் யாரும் கேட்டு விடக்கூடாது.

ஆனால்
பழைய ஞாபகம் நிழலாடுகிறது. 36 ஆண்டுகளாக பசும்பொன் சென்று தேவர்
நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் ஒரே அரசியல் தலைவன் நான். அதுபோல் தான்
கடந்த 1992ம் ஆண்டு அக்டோபர் 30ம் தேதி நான் பெரிதும் மதிக்கக்கூடிய
முன்னாள் அமைச்சர்கள் டாக்டர் காளிமுத்து, தா.கிருஷ்ணன், கா.சுப்பு,
சுப.தங்கவேலன் ஆகியோரெல்லாம் பசும்பொன் சென்று விட்டு கமுதியில் நடந்த
பொதுக்கூட்டத்தில் பேசினோம்.

அதே நினைவுடன் 1993ம் ஆண்டு என்னை
அழைப்பார்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால் எனக்கு எந்த அழைப்பும்
வரவில்லை. அக்டோபர் 3ம் தேதி என் தலைக்கு மேல் கத்தி தொங்கும் என்பது
எனக்கு தெரியாமல் போய்விட்டது.

பசும்பொன்னுக்கு நானே வருகிறேன்
என்று அப்போது நான் சார்ந்து இருந்த கட்சியின் தலைவரே (கருணாநிதி) வந்தார்.
இந்நிலையிலும் ஆயிரக்கணக்கான வாகனத்தில் தோழர்களுடன் சென்று பசும்பொன்னில்
அஞ்சலி செலுத்தி விட்டு காரியாபட்டி பொதுக்கூட்டத்தில் பேசினேன்.

1993ம்
ஆண்டு கோவையில் நடந்த திமுக மாநாட்டில் பேசியதுதான் அந்தக் கட்சியில் நான்
கலந்து கொண்ட கடைசி நிகழ்ச்சியாகும். இதையெல்லாம் எனது மலரும் நினைவாக
தெரியப்படுத்தினேன்.

விழாவில் பேசியவர்கள் மதிமுக உயர்ந்த
இடத்துக்கு, உயர்ந்த பதவிக்கு வரும் என்று பேசினார்கள். மதிமுக வீழவில்லை.
மதிமுகவுக்கு வீழ்ச்சி இல்லை, மதிமுகவை யாரும் வீழ்த்த முடியாது.

சட்டமன்றப்
பதவியோ, நாடாளுமன்றப் பதவியோ, மந்திரி பதவியோ மதிமுகவின் இலக்கு அல்ல.
ஆனால் நாங்கள் துறவிகளும் அல்ல. பதவிகளை கருவியாக கொண்டு தமிழகத்தை
முன்னேற்ற வேண்டும்.

மதிமுகவிடம் பண வசதி இல்லை. என்னிடமும் பணம்
கிடையாது. ஆனால் ஏழைகள் கண்ணீருக்கு முன்பாக கரன்சிகளை காகிதமாக பார்ப்பவன்
நான். அந்த வகையில் நான் பரமக்குடி துப்பாக்கி சூட்டில் குண்டு பாய்ந்து
உயிருக்கு போராடிய மாணவர் ஜெயபிரசாத்தின் உயிரை காப்பாற்ற அப்பல்லோ
ஆஸ்பத்திரியில் அனுமதித்து அவருக்கு சிகிச்சை பெற்று தந்தேன்.

இன்று
பெரியார் இல்லை, அறிஞர் அண்ணா இல்லை. தமிழகம் அனைத்து துறைகளிலும்
பாழ்பட்டு கிடக்கிறது. முல்லைப் பெரியாறு, கூடங்குளம் அணு உலை, ஸ்டெர்லைட்
ஆலை இப்படி பல்வேறு தரப்பிலும் தமிழக மக்களின் வாழ்வாதாரம்
பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் எதிர்காலத்தை காக்கும் கடமை மதிமுவுக்கு
உண்டு.

கடந்த 1996ம் ஆண்டு சோதனையில் இருந்து மதிமுக மீண்டது.
2001ல் தனித்து போட்டியிட்டோம். 2011ல் மதிமுக தேர்தலைப் புறக்கணித்தது.
தேர்தலிலே போட்டியிடாத மதிமுக அஸ்தமித்து விட்டது என்றார்கள். மதிமுக
ஒருபோதும் அஸ்தமிக்காது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் கூட்டணியில்
சேர்ந்து போட்டியிட்டிருந்தால் 12 எம்.எல்.ஏக்கள் வந்திருக்கலாம். ஆனால்
தேர்தலை புறக்கணித்ததால் கட்சிக்குள் மனக்கசப்பு ஏற்பட்டது. சில
நிர்வாகிகள் ஏற்றுக் கொண்டார்கள். சிலர் ஏற்றுக் கொள்ளவில்லை. நான்
அவர்களைப் பற்றி கவலைப்படவில்லை. மதிமுக தொண்டர்கள் கட்சியின் முடிவை ஏற்று
கொண்டார்கள்.

மரண விளிம்பில் தவிக்கும் 3 தமிழர்களை தூக்கு
தண்டனையில் இருந்து காப்பாற்ற மதிமுக எடுக்கும் நடவடிக்கையை தமிழகம்
மட்டுமல்ல, உலகத்தில் வாழும் தமிழர்கள் அனைவரும் வாழ்த்துகிறார்கள்.

இந்த
நேரத்தில் மக்களுக்கு பணியாற்ற மதிமுக நிர்வாகிகள் தயாராக இருக்க
வேண்டும். பணியாற்ற முடியாதவர்கள் பொறுப்புகளை பணியாற்ற விரும்புபவர்களிடம்
ஒப்படைக்க வேண்டும்.

விரைவில் தமிழக மக்கள் மதிமுகவிற்கு வெற்றி மகுடம் சூட்டுவார்கள். அந்த நாள் வரும் என்றார்
avatar
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 42
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

Re: சங்கரன்கோவில் தொகுதி இடைத் தேர்தலில் மதிமுக போட்டி: வைகோ

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Nov 02, 2011 12:04 pm

வெற்றி பெற வேண்டும். அதுதான் முக்கியம் அமைச்சரே

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: சங்கரன்கோவில் தொகுதி இடைத் தேர்தலில் மதிமுக போட்டி: வைகோ

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Wed Nov 02, 2011 2:32 pm

[You must be registered and logged in to see this image.]

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: சங்கரன்கோவில் தொகுதி இடைத் தேர்தலில் மதிமுக போட்டி: வைகோ

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum