"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பனிஷ்மென்ட் பந்தயம்!
by அ.இராமநாதன் Yesterday at 11:07 pm

» பனிச்சறுக்கு!
by அ.இராமநாதன் Yesterday at 11:06 pm

» பனியில் திருடன்!
by அ.இராமநாதன் Yesterday at 11:06 pm

» பேன்ட் இன்றி பயணம்!
by அ.இராமநாதன் Yesterday at 11:05 pm

» பெருமாள் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 10:38 pm

» மெட்டு - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 10:35 pm

» தூரத்து வெளிச்சம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 9:56 pm

» தனது திருமணம் குறித்து -ஸ்ருதி ஹாசன்
by அ.இராமநாதன் Yesterday at 7:03 pm

» சின்னச் சின்ன அணுக்கவிதை
by கவிப்புயல் இனியவன் Mon Jan 22, 2018 10:26 pm

» வடக்குப் பக்கம் பார்த்து உட்கார்ந்து பதிவு போடுங்க...!!
by அ.இராமநாதன் Mon Jan 22, 2018 9:28 am

» ஆத்த கடக்க வேணும் அக்கரைக்கு போக வேணும்...
by அ.இராமநாதன் Mon Jan 22, 2018 9:26 am

» ‘காளி’ பாடல்கள் 24ஆம் தேதி வெளியீடு
by அ.இராமநாதன் Sun Jan 21, 2018 7:30 pm

» ''சுக்லாம்பரதரம் ஆச்சா?''
by அ.இராமநாதன் Sun Jan 21, 2018 6:58 pm

» இனி எல்லாம் நன்மைக்கே... நன்றி - விகடன்
by அ.இராமநாதன் Sun Jan 21, 2018 6:56 pm

» பேருந்து கட்டண உயர்வு - வாட்ஸ் அப் பகிர்வுகள்
by அ.இராமநாதன் Sun Jan 21, 2018 6:42 pm

» மனைவியின் தாயார் வீட்டுக்குப் போறேன்...!!
by அ.இராமநாதன் Sun Jan 21, 2018 2:38 pm

» யானை வரும் பின்னே...
by அ.இராமநாதன் Sun Jan 21, 2018 2:31 pm

» எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது!
by அ.இராமநாதன் Sun Jan 21, 2018 2:28 pm

» நடிகைகளின் சைடு பிசினஸ்!
by அ.இராமநாதன் Sun Jan 21, 2018 2:27 pm

» நெகடிவ் ரோலில் ஹன்சிகா!
by அ.இராமநாதன் Sun Jan 21, 2018 2:27 pm

» ஓவியாவுக்கு வந்த ஆசை!
by அ.இராமநாதன் Sun Jan 21, 2018 2:26 pm

» பார்த்திபனின் இரண்டாம் பாகம்
by அ.இராமநாதன் Sun Jan 21, 2018 2:26 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Sun Jan 21, 2018 2:25 pm

» நம்பிக்கை கொடு! நம்பி கை கொடு நூல் ஆசிரியர் : கவிஞர் ஸ்ரீ பாரதி கிருஷ்ணன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Sun Jan 21, 2018 12:19 am

» 300 மொழிகளில் வெளியான முதல் புத்தகம் எது?
by அ.இராமநாதன் Sat Jan 20, 2018 10:28 pm

» இந்த வார பல்சுவை- தொடர் பதிவு
by அ.இராமநாதன் Sat Jan 20, 2018 10:24 pm

» சாலையில் சென்றவர்களை ஆச்சர்யப்பட வைத்த மணமக்கள்!
by அ.இராமநாதன் Sat Jan 20, 2018 5:51 pm

» மருத்துவ தகவல்கள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Sat Jan 20, 2018 3:00 pm

» ஆப்பிள் போன ஏண்டா இரண்டா பிளந்தே...?!
by அ.இராமநாதன் Sat Jan 20, 2018 2:35 pm

» 2018 - அமாவாசை, பௌர்ணமி, கிருத்திகை....
by அ.இராமநாதன் Sat Jan 20, 2018 11:29 am

» போலியோ சொட்டு மருந்து 28-1-18 & 11-3-18
by அ.இராமநாதன் Sat Jan 20, 2018 10:55 am

» இனிய காலை வணக்கம்...
by அ.இராமநாதன் Sat Jan 20, 2018 10:51 am

» டாக்டர் ஏன் ரொம்ப படப்பாக இருக்குறாரு...?
by அ.இராமநாதன் Sat Jan 20, 2018 10:42 am

» அறிவை வளர்க்கும் விநாடி வினாக்கள் -
by அ.இராமநாதன் Sat Jan 20, 2018 10:32 am

» ஆமா...யாரு அந்த சக்களத்தி...!!
by அ.இராமநாதன் Fri Jan 19, 2018 8:46 pm

» 2018 - தைப்பொங்கல் வாழ்த்துகள்
by ராஜேந்திரன் Thu Jan 18, 2018 7:49 pm

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Jan 18, 2018 7:31 pm

» இது வாட்ஸ் அப் கலக்கல் -தொடர்பதிவு
by அ.இராமநாதன் Thu Jan 18, 2018 9:13 am

» யுத்தம் செய்யும் கண்கள் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Wed Jan 17, 2018 8:56 pm

» வீணையின் நாதம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Wed Jan 17, 2018 8:55 pm

» நினைவுப் பெட்டகம்! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Wed Jan 17, 2018 8:54 pm

» பண்டிகை காலங்களில் ரயில் கட்டணம் உயர்வு?
by அ.இராமநாதன் Wed Jan 17, 2018 5:31 pm

» கின்னஸ் சாதனை படைத்த வீடியோ கேம் (வீடியோ இணைப்பு)
by ராஜேந்திரன் Tue Jan 16, 2018 9:00 pm

» 40 மில்லிபவுன் எடையில் சிவலிங்கம்
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 3:45 pm

» விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு 'சீதக்காதி' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 2:46 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



என் இனிய பொன்நிலாவே! 12

View previous topic View next topic Go down

என் இனிய பொன்நிலாவே! 12

Post by thaliranna on Tue Nov 22, 2011 6:35 pm


என் இனிய
பொன்நிலாவே!


‘ப்ரியம்வதா’

[You must be registered and logged in to see this link.]




பகுதி 12







முன்கதை
சுருக்கம்} மதுமிதாவை விரும்புகிறான் அபிஷேக். அதே சமயம் அவனது உறவுப்பெண் ஸ்வேதா
அபிஷேக்கை விரும்புகிறாள் அவள் மதுமிதாவை வம்புக்கு இழுக்கிறாள். அலுவலக முக்கிய
மீட்டீங்கிற்கு வராமல் ஸ்வேதாவுடன் இருப்பதால் அபிஷேக் மீது கோபப்படுகிறாள்
மதுமிதா.





ஏன் அப்படி மறந்து போகும் அளவுக்கு எனக்கு
என்ன நேர்ந்து விட்டது?


அதை நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமோ? அதான்
அந்த ஸ்வேதா...


நிறுத்து மது
வாய்க்கு வந்தபடி எல்லாம் பேசுவதால் எல்லாம் உண்மையாகி விடாது!


அப்படி எந்த பொய்யை நான் உண்மையாக்கி
விட்டேனாம்?அதுதான் உங்களுக்கு போன் செய்தால் அவள் எடுத்து பேசுகிறாளே அப்புறமென்ன
பொய் பேசி விட்டதாக கூறுகிறிர்கள்?


அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்!
என்பார்கள் கண்ணை மூடிக்கொண்டு எதை வேண்டுமானாலும் சொல்லிவிடலாம் ஆனால் அதெல்லாம்
உண்மையாகிவிடாது! நான் சொல்லும் எதையும் நீ நம்பப் போவதில்லை! அந்த விசயத்தை விடு
கம்பெனி விசயத்திற்கு வருவோம்!


ஆக நீங்களாகவே என்னை பற்றி ஒரு
முடிவெடுத்துவிட்டீர்கள்?


மது ப்ளீஸ் அந்த
விசயத்தை விடு என்கிறேன்!


ஏன் ஏன்
விடவேண்டும்? கம்பெனியின் ஞாபகமே இப்போது அல்லவா உங்களுக்கு வந்துள்ளது?


அதான் சொல்கிறேனே! நான் அப்போது வேறு
முக்கியமான?





அந்த ஸ்வேதாவுடன்
கொஞ்சி குலாவிக் கொண்டிருப்பதுதான் உங்களுக்கு முக்கியமான வேலையா?


யார் சொன்னது நான் அவளுடன் கொஞ்சிக்
கொண்டிருந்ததாக?


சொல்ல வேறு
வேண்டுமா? அதுதான் அவளே போன் எடுத்து என்னை வறுத்து எடுத்து விட்டாளே?


அவள் என் போனை
எடுத்து பதில் பேசினால் அவளோடு கொஞ்சியதாக அர்த்தம் செய்து கொள்வதா?உனக்கு வரவர
என் மேல் நம்பிக்கை குறைந்து போகிறது என் று நினைக்கிறேன்!


நான் யார் உங்கள் மீது நம்பிக்கை வைக்க?

பார்த்தாயா
மீண்டும் கோபித்துக் கொள்கிறாய்?சரி விசயத்திற்கு வருவோம் அந்த டீலை வெற்றிகரமாக
முடித்தாய் தானே?


அதில் என்ன சந்தேகம்? உங்கள் வேலையாக
இருந்தாலும் வாங்கும் சம்பளத்திற்கு குறை வைக்காமல் இழுத்துப் போட்டு செய்து
விட்டேன்! அந்த கம்பெனியின் டீல் இனி நம்மோடுதான்!


நீ இருக்கும் தைரியத்தில் தான் நான் நேற்று
கம்பெனியை விட்டு வெளியே சென்றேன்! ஓகே நல்ல முறையில் டீலை முடித்ததற்கு எனது நன்றிகள்!
நாளை சந்திப்போமா?


அதெல்லாம் சரி அப்படி என்ன முக்கிய பணியாக
வெளியே சென்றீர்கள்?


அதுதான் நீயே சொல்லிவிட்டாயே? அந்த ஸ்வேதாவுடன்
கொஞ்சி விளையாடியதாக?


மறுமுனையில்
மதுவிற்கு கோபமாக வந்தது! அப்படியானால் நான் சொன்னதில் தவறில்லை என்று ஒப்புக்
கொள்கிறீர்களா? என்று பல்லைக் கடித்துக்கொண்டு கேட்டாள்.


இல்லை தாயே! இல்லை! உன்னிடம் மறைக்கும்
அளவுக்கு ஒன்றுமில்லை! அம்மாவிற்கு திடீரென உடல் நிலை மோசமாகிவிட்டது அதனால்
ஆஸ்பிடல் சென்று இருந்ததால்தான் வரமுடியவில்லை! தீர்ந்ததா உன் சந்தேகம் என்றான்
அபிஷேக்!


அம்மாவுக்கு முடியவில்லை என்று முன்பே சொல்லி
இருக்கலாம் இல்லையா?நான் எதோ அவசரப்பட்டு!





இதைத்தான் பெண்
புத்தி பின் புத்தி என்பார்கள்! என் அம்மாவிற்கு அடிக்கடி இது மாதிர் நிகழ்வது
உண்டு! எனக்கு அது பழகிப் போன ஒன்றுதான்! அதனால் உடனே வந்துவிடலாம் என்று தான்
போனேன்! ஆனால் இந்த முறை ரொம்பவும்
அதிகமாகிவிட்டது.


அம்மாவிற்கு என்ன உடம்பு நான் பார்த்தபோது
ஆரோக்கியமாகத் தானே இருந்தார்கள்!


பார்த்தாயா! நான் சொல்வதில் உனக்கு இன்னும்
நம்பிக்கை வரவில்லை! பார்ப்பதற்கு ஆரோக்கியமாகத் தோன்றும் என் அன்னை ஓர் நீரிழிவு
நோயாளி! மேலும் இந்த முறை அவர்களுக்கு இருதயமும் சிறிது பாதித்து விட்டது!.


என்ன? பயப்படும்படி ஏதும் இல்லையே! இப்போது
வீட்டிற்கு அழைத்து வந்து விட்டீர்களா?


எப்படி முடியும் இங்கே கவனிப்பதற்கு யார்
இருக்கிறார்கள்?


ஏன் அந்த ஸ்வேதா!

உஸ் பார்த்தாயா?
கொக்கிற்கு மீன் ஒன்றே மதி என்பது போல அவளையே சுற்றி வருகிறாயே!


இல்லை! அவள் பார்த்துக் கொள்ள மாட்டாளா? என்று
கேட்டேன்!


அதைத்தான் நானும்
கேட்கிறேன் அவள் ஏன் என் தாயைப் பார்த்துக் கொள்ள வேண்டும்?


அவள் உங்களை மணந்துகொள்ள போவதாக அல்லவா
கேள்விப் பட்டேன்! அதனால் வருங்கால மருமகள் மாமியாருக்கு பணிவிடை செய்யமாட்டாளா
என்று கேட்டேன்!


இது அவளாக பரப்பி வரும் கட்டுக்கதை என்று
பலமுறை சொல்லியாகிவிட்டது ஆனாலும் நீ நம்பவில்லை!


எப்படி நம்ப முடியும்? எனக்குத் தெரியாத விசயம்
அவளுக்குத் தெரிந்து மருத்துவமனைக்கு வந்து அதிகாரமாய் போன் எடுத்து பேசுகிறாளே!


அது.. அவள் என்னையே சுற்றி வருகிறாள்! நான்
மருத்துவமணையில் இருப்பதை தெரிந்து கொண்டு வந்துவிட்டாள் இதற்கெல்லாம் ஒரு முடிவு
கட்ட வேண்டும் அதை சொல்லவும்தான் கூப்பிட்டேன்.


என்ன முடிவு கட்டப் போகிறீர்கள்!

உன்னை பெண்
கேட்டு உன் வீட்டிற்கு வரப் போகிறேன்!





மறுமுனையில்
மகிழ்வதா அழுவதா எனத் தெரியாமல் அதிர்ந்தாள் மதுமிதா!


நிலவு வளரும்(12)
avatar
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 42
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

Re: என் இனிய பொன்நிலாவே! 12

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Tue Nov 22, 2011 8:53 pm

நல்லா இருக்கு பகிர்வுக்கு நன்றி அண்ணே

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum