"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» சின்ன வீடு - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Jul 23, 2017 9:48 am

» வண்ணக் கனவுகள்!
by அ.இராமநாதன் Sun Jul 23, 2017 9:26 am

» வாசகர் கவிதை
by அ.இராமநாதன் Sun Jul 23, 2017 9:19 am

» கைப்பேசி யாருக்கு - காத்துவாயன் கவிதை
by அ.இராமநாதன் Sun Jul 23, 2017 9:18 am

» இக்கரை அக்கரை - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Jul 23, 2017 9:09 am

» நியாயமா- ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sat Jul 22, 2017 3:54 pm

» காலண்டர் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sat Jul 22, 2017 3:54 pm

» வேதம் நிறைந்த தமிழ்நாடு
by அ.இராமநாதன் Sat Jul 22, 2017 9:50 am

» 4 கூடுதல் குடும்ப நல நீதிமன்றங்கள் இன்று திறப்பு
by அ.இராமநாதன் Sat Jul 22, 2017 9:34 am

» ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்
by அ.இராமநாதன் Sat Jul 22, 2017 9:32 am

» ரூபாய் – திரைப்பட விமரிசனம்
by அ.இராமநாதன் Sat Jul 22, 2017 9:31 am

» வேட்டிக்கு அவமரியாதை!
by அ.இராமநாதன் Sat Jul 22, 2017 9:30 am

» பயண இலக்குகள் – கவிதை
by அ.இராமநாதன் Sat Jul 22, 2017 9:29 am

» கவித்துளிகள்
by அ.இராமநாதன் Sat Jul 22, 2017 9:27 am

» யானை பூஜித்த இறைவன்!
by அ.இராமநாதன் Sat Jul 22, 2017 9:26 am

» ‘பண்டிகை’- விமரிசனம்
by அ.இராமநாதன் Sat Jul 22, 2017 9:16 am

» இனிய காலை வணக்கம்...
by அ.இராமநாதன் Sat Jul 22, 2017 9:14 am

» பளீர் சிரிப்பு
by அ.இராமநாதன் Fri Jul 21, 2017 2:22 pm

» துளிப்பாக்கள்
by அ.இராமநாதன் Fri Jul 21, 2017 2:20 pm

» பத்தே விநாடியில் பளிச் முகம்…!
by அ.இராமநாதன் Fri Jul 21, 2017 2:18 pm

» மிஸ்…மிஸ் இண்டியா…!
by அ.இராமநாதன் Fri Jul 21, 2017 2:17 pm

» லிஸ்பனில் காந்திஜி சிலை...
by அ.இராமநாதன் Thu Jul 20, 2017 6:07 pm

» கேட்கக் கூடாத கேள்விகள்
by அ.இராமநாதன் Thu Jul 20, 2017 6:00 pm

» கருணை புரிவாய் கார்த்திகேயா…!
by அ.இராமநாதன் Wed Jul 19, 2017 8:55 am

» இறந்தும் துடிக்கும் இதயம்
by கவிப்புயல் இனியவன் Tue Jul 18, 2017 10:10 pm

» காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம்
by அ.இராமநாதன் Sun Jul 16, 2017 8:58 pm

» நீயெல்லாம் அம்மாவா? – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Jul 16, 2017 2:49 pm

» மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Jul 16, 2017 2:47 pm

» தனி பெட்ரூம் - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Jul 16, 2017 1:53 pm

» என்ன சாப்பிடறீங்க - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Jul 16, 2017 1:52 pm

» தட்சிணை வை - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Jul 16, 2017 1:51 pm

» நூலைப் போல - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Jul 16, 2017 1:50 pm

» உடலில் வளமை உடையில் வறுமை
by அ.இராமநாதன் Sat Jul 15, 2017 11:08 am

» திருப்தி – கவிதை
by அ.இராமநாதன் Sat Jul 15, 2017 10:29 am

» காலத்தை வளைத்தல் – கவிதை
by அ.இராமநாதன் Sat Jul 15, 2017 10:28 am

» பொண்ணு கிளி மாதிரி இருப்பா…!
by அ.இராமநாதன் Sat Jul 15, 2017 10:26 am

» பாவம் போக்க ராமர் எடுத்த தவகோலம்! –
by அ.இராமநாதன் Sat Jul 15, 2017 10:25 am

» எதை உண்மையான பாவம் என்று கருதுவீர்கள்?
by அ.இராமநாதன் Sat Jul 15, 2017 10:22 am

» மகளே..!மகளே..!!
by அ.இராமநாதன் Sat Jul 15, 2017 10:18 am

» கிசு கிசு பாணியல் ஓலை வந்ததுள்ளது, மன்னா..!
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:56 pm

» எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:53 pm

» வண்டுகளின் அரட்டை
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:51 pm

» கல்யாணம் வேண்டாம்…
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:51 pm

» மனிதனின் சிறந்த செல்வம் –
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:48 pm

» பேசா மடந்தையே விழி பேசும் சித்திரமே…
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:46 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஜெயிக்கப் போவது நீ தான் ! நூல் ஆசிரியர் முனைவர் கு .ஞானசம்பந்தன்

View previous topic View next topic Go down

ஜெயிக்கப் போவது நீ தான் ! நூல் ஆசிரியர் முனைவர் கு .ஞானசம்பந்தன்

Post by eraeravi on Tue Nov 22, 2011 10:10 pm

ஜெயிக்கப் போவது நீ தான் !

நூல் ஆசிரியர் முனைவர் கு .ஞானசம்பந்தன்

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

அமுதம் பதிப்பகம் 155.டெபுடி கலெக்டர் காலனி வது தெரு .கே .கே .நகர் மதுரை.20. விலை ரூ 80

நூல் ஆசிரியர் முனைவர் கு .ஞானசம்பந்தன் புகைப்படத்துடன் அட்டைப்பட வடிவமைப்பு அருமை .ஜெயிக்கப் போவது நீ தான் ! என்ற நூலின் தலைப்பே படிக்கும் வாசகனுக்கு .ஜெயிக்கப் போவது நீ தான் ! என்று உணர்த்துவதுப் போல இருப்பதால் நூலின் தலைப்பே நூலைப் படிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டும் வண்ணம் உள்ளது .

முனைவர் தொ .பரமசிவம் அவர்களின் அணிந்துரை நூலிற்குத் தோரண வாயிலாக உள்ளது .அணிந்துரையில் அவர் குறிப்பிடுகிறார். அவரது நகைச் சுவையின் வெற்றிக்குக் காரணம் அவரது புத்தக வாசிப்பு மட்டுமல்ல அவரது மனித வாசிப்பும் கூடத்தான்.

உண்மைதான் நூல் ஆசிரியர் முனைவர் கு .ஞானசம்பந்தன் தேனீயைப் போல அடிக்கடி பயணம் மேற்கொள்வார் .காலையில் மதுரையில் இருப்பார். மாலையில் சென்னையில் இருப்பார் இரவு மதுரை வந்து விடுவார். விமானத்தில் மட்டும் அல்ல காரிலும் பட்டி மன்றத்திற்காக பயணம் மேற்கொள்வார்.சலிக்காமல் பயணம் செல்வார் .நானே நேரடியாகப் பார்த்து இருக்கிறேன் .அவரிடமே இது குறித்துப் பாராட்டி இருக்கிறேன் .

அமெரிக்கா சென்று வந்து கல்லூரியில் வகுப்பு எடுத்து கொண்டு இருந்தேன். ஒருவர் சொன்னார் கீழ வாசலில் இருந்து வந்தேன் ஒரே அலுப்பு என்பார். எனக்கு அமெரிக்கா கீழ வாசல் மாதிரி அவருக்கு கீழ வாசல் அமெரிக்கா மாதிரி .என்று அதற்கும் ஒரு நகைச் சுவை சொன்னார் .அவர் பயணம் மேற்கொள்ளும் பொது சந்திக்கும் மனிதர்களை வாசிக்கிறார் என்பதே அவரது வெற்றியின் ரகசியம் .

எழுத்தாளர் ச .தமிழ்ச்செல்வன் அணிந்துரை முத்தாய்ப்பாக உள்ளது .நூல் ஆசிரியர் முனைவர் கு .ஞானசம்பந்தன் என்னுரையில் யாரையும் மறக்காமல் நன்றி கூறி உள்ளார் .குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் வாழ்த்தையும் நன்குப் பதிவு செய்துள்ளார் .

25 தலைப்புகளில் அவரது வெற்றியின் ரகசியத்தை அம்பலப் படுத்தி வெற்றிப் பெற்று உள்ளார் .ஒவ்வொரு கட்டுரையின் தலைப்பிலும் நம்மைச் சிந்திக்க வைக்கிறார் . கட்டுரையின் தொடக்கத்தில் வைர வரிகளுடன் பொன் மொழிகளுடன் தொடங்குகிறார் .முகப்பு வரிகளை படித்தவுடனே கட்டுரை கள் முழுவதும் படித்து விட்டுதான் நூலைக் கிழே வைப்பார்கள் .அந்த அளவிற்கு மிக நல்ல நடை .

ஒவ்வொரு கட்டுரையின் தலைப்பும் ,எடுப்பும் ,தொடுப்பும், முடிப்பும் மிகச் சிறப்பாக உள்ளது .உலகப் பொது மறையான திருக்குறளை கட்டுரையில் பல்வேறு இடங்களில் பொருத்தமாக மேற்கோள் காட்டி தன்னம்பிக்கை விதை விதைத்துள்ளார்.பாராட்டுக்கள் .

முதல் கட்டுரையில் நினைத்தது நடக்கும் வரம் தரும் சித்தரை காணச் செல்வதில் தொடங்கி
எண்ணிய எண்ணியாங்கு திருக்குறள்
நினைத்த காரியத்தை நினைத்தபடி முடிக்கும் வல்லமை மன உறுதி படைத்தவர்களுக்கு உண்டு .
முதல் தன்னம்பிக்கை ஆசிரியரான திருவள்ளுவரின் திருக்குறள் .இந்த ஒரு குறள் வழி மனிதன் நடந்தால் போதும் வெற்றி உறுதி .என்பதை உணர்த்தும் விதமாக கட்டுரைகள் உள்ளது .( )அடைப்பு குறிகளுக்குள் உள்ள சில வரிகள் நகைச் சுவை விதைக்கின்றன .எள்ளல் சுவையுடன் உள்ளது .

ஏழைக் குழந்தைகளின் பசிப் போக்கிக் கல்வி தந்த வள்ளல் காமராசர் மதிய உணவுத் திட்டம் கொண்டு வந்த வரலாறு நூலில் உள்ளது .நூல் முழுவதும் தமிழின் பெருமையைப் பறை சாற்றும் விதமாக ,சங்க இலக்கியப் பாடல்களும் மேற்கோள் காட்டி உள்ளார் .

கட்டுரைகளின் தலைப்பே தன்னம்பிக்கை விதைக்கின்றது .எல்லாம் இன்ப மயம்,சோதனையே சாதனை ,காலம் உயிர் போன்றது ,பெரிதினும் பெரிது கேள் ,நினைவாற்றலே பெருஞ்செல்வம் இப்படி தன்னம்பிக்கை விதைக்கின்றது .

கைகளே இல்லாத தூக்கனாங் குருவி அருமையான கூடு கட்டுகிறது.கரையான்களோ பெரிய புற்றை கட்டுகின்றன.
தேனீக்கள் ஆயிரம் அறைகள் கொண்ட கூ ட்டை உருவாக்குகின்றன. சிலந்திப் பூச்சி தன உணவிற்கான வலையைத் தானே பின்னுகிறது .அவர் பெரியவர் இவர் சிறியவர் என்று யாரையும் எளிதாக எடை போட வேண்டாம். எல்லா மனிதருக்குள்ளேயும் தனித் தனித் திறமைகள் உண்டு என்னும் கருத்தில் அவ்வை பாடிய பாடலுடன் கட்டுரை மிக அருமை .

நூல் முழுவதும் அனைத்து வயதினரும் விரும்பிடும் மிக எளிய நடையில் மிக இனிய கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார் .நன்றாகப் பேசுபவர்களுக்கு நன்றாக எழுத வராது என்ற பழமொழியை முறியடிக்கும் வண்ணம், முந்தைய அவரது நூல்களை விஞ்சும் வண்ணமும் நன்றாகப் பேசவும் வரும் நன்றாக எழுதவும் வரும் என்பதைப் பறை சாற்றும் விதமாக நூல் உள்ளது.

என்ன வளம் இல்லை நம் இலக்கியத்தில் ஏன்? கையை ஏந்த வேண்டும் பிற இலக்கியத்தில் என்று சொல்லும் விதமாக தன்னம்பிக்கை என்றால் சிலர் அமெரிக்காவில் அவரைப் பார் ,ஜெர்மனியில் இவரைப் பார் என்று எழுதிவரும் காலத்தில் .தன்னம்பிக்கை வேண்டுமானால் திருக்குறளைப் படி, அவ்வையின் ஆத்திச் சூடிப் படி, சங்க இலக்கியம் படி என்று கூறும் விதமாக நூல் உள்ளது .

மரணம் குறித்த அச்சமோ மறுபிறப்புப் பற்றிய நம்பிக்கையோ இல்லை. இருந்தாலும் இன்னும் இரண்டு நாட்கள் கிடைத்தால் இந்த அறிய நூல் முழுவதையும் படித்து விடலாம் .என்று அறிஞர் அண்ணா மருத்துவரிடம் வேண்டியதும் ,மருத்துவர் இரண்டு நாட்கள் தள்ளி அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட வரலாறு நூலில் உள்ளது .

இந்த நூல் படித்தால் படித்த வாசகர்களுக்கு தன்னம்பிக்கை தொடர்பான வேதியல் மற்றம் நிகழும் என்று அறிதியிட்டுச் சொல்லலாம் .வாசகர் மனதில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற உத்வேகம் தருகின்றது .தமிழன் என்பதில் பெருமிதம் கொள்ளும் வண்ணம் நூல் எழுதிய முனைவர் கு .ஞானசம்பந்தன் அவர்களுக்குப் பாராட்டுக்கள்

--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2100
Points : 4736
Join date : 18/06/2010

Back to top Go down

Re: ஜெயிக்கப் போவது நீ தான் ! நூல் ஆசிரியர் முனைவர் கு .ஞானசம்பந்தன்

Post by thaliranna on Sun Dec 25, 2011 8:53 pm

avatar
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 42
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

Re: ஜெயிக்கப் போவது நீ தான் ! நூல் ஆசிரியர் முனைவர் கு .ஞானசம்பந்தன்

Post by eraeravi on Sun Dec 25, 2011 8:54 pm

மிக்க நன்றி

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2100
Points : 4736
Join date : 18/06/2010

Back to top Go down

Re: ஜெயிக்கப் போவது நீ தான் ! நூல் ஆசிரியர் முனைவர் கு .ஞானசம்பந்தன்

Post by arony on Sun Dec 25, 2011 11:32 pm

அறிமுகத்துக்கு நன்றி.

_________________
“எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”
நான் நானாக....
என்னைப் பார்க்க...என் பக்கம்
avatar
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 22
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

Re: ஜெயிக்கப் போவது நீ தான் ! நூல் ஆசிரியர் முனைவர் கு .ஞானசம்பந்தன்

Post by eraeravi on Mon Dec 26, 2011 8:49 am

மிக்க நன்றி

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2100
Points : 4736
Join date : 18/06/2010

Back to top Go down

Re: ஜெயிக்கப் போவது நீ தான் ! நூல் ஆசிரியர் முனைவர் கு .ஞானசம்பந்தன்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Mon Dec 26, 2011 10:32 am


_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56783
Points : 69523
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: ஜெயிக்கப் போவது நீ தான் ! நூல் ஆசிரியர் முனைவர் கு .ஞானசம்பந்தன்

Post by அ.இராமநாதன் on Mon Dec 26, 2011 11:20 am

நூலில் ரசித்த பயனுள்ள ஒரு பகுதியை பதிவிட்டால்
சுவை கூடும்

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 22960
Points : 49376
Join date : 26/01/2011
Age : 72

Back to top Go down

Re: ஜெயிக்கப் போவது நீ தான் ! நூல் ஆசிரியர் முனைவர் கு .ஞானசம்பந்தன்

Post by vinitha on Mon Dec 26, 2011 12:04 pm

மிக்க மகிழ்ச்சி
avatar
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 8
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

Re: ஜெயிக்கப் போவது நீ தான் ! நூல் ஆசிரியர் முனைவர் கு .ஞானசம்பந்தன்

Post by eraeravi on Thu Jan 05, 2012 9:51 am

நன்றி

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2100
Points : 4736
Join date : 18/06/2010

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum