"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பெருமழையும் சிறுதூறலும் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 11:28 pm

» டெஸ்ட் எடுக்காமலேயே எனக்கு கொழுப்பு அதிகம்னு சொல்றீங்களே, எப்படி?
by அ.இராமநாதன் Yesterday at 11:22 pm

» எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்கிறார்களே, என்ன கூட்டம் நடக்குது?
by அ.இராமநாதன் Yesterday at 10:29 pm

» கருகிய ரோஜாவும் கடைசிக் கேள்விகளும் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 10:14 pm

» எளிய பயிற்சி முறை என்பது முத்ரா பயிற்சிதாங்க....
by அ.இராமநாதன் Yesterday at 9:53 pm

» உடல் நலம் தரும் விரல் முத்திரைகள்
by அ.இராமநாதன் Yesterday at 9:50 pm

» உளியின் யுத்தம்! நூல் ஆசிரியர் : கவிஞர் பல்லவி குமார் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 8:50 pm

» உலக தண்ணீர் தினம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 8:48 pm

» விஸ்க்கியா, பிராந்தியா...எது வேணும்னு தெளிவா சொல்லித் தொலைங்க....!!
by அ.இராமநாதன் Yesterday at 5:39 pm

» டெம்பர் தமிழ் ரீமேக் படத்தில் விஷாலுக்கு ஜோடியாகும் நயன்தாரா பட நடிகை
by அ.இராமநாதன் Yesterday at 12:49 pm

» மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகிறார் அஞ்சலி?
by அ.இராமநாதன் Yesterday at 11:14 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 7:59 am

» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Wed Mar 21, 2018 10:59 pm

» நெருப்பின் தாகம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Mar 20, 2018 9:06 pm

» நம் சமையல் அறையில்...
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 5:42 pm

» இந்தியாவில் மின்சார கார்களை களமிறக்கும் மாருதி சுஸுகி
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:51 am

» ஸ்ரீதேவி வாழ்க்கை சினிமா படமாகிறது வித்யாபாலன் நடிக்க பேச்சுவார்த்தை
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:38 am

» பிளாக் பேந்தர் படம் ரூ.7 ஆயிரம் கோடி வசூல் சாதனை
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:35 am

» சசிகலா கணவர் நடராஜன் காலமானார்
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:33 am

» சசிகலா புஷ்பாவுக்கு மீண்டும் திருமணம்!
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:32 am

» இன்று பத்ம விருதுகளை வழங்குகிறார் ஜனாதிபதி
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:31 am

» 2ஜி வழக்கில் அமலாக்கத்துறை அப்பீல்: ராசா, கனிமொழிக்கு சிக்கல் வருகுது
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:30 am

» ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:29 am

» அரசு கஜானாவுக்கு வரவேண்டிய ரூ.1,000 கோடி எங்கே போகிறது? சட்டசபையில் தி.மு.க. காட்டமான கேள்வி
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:28 am

» பூ பூப்பதும் உலகச் செய்திதான்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 11:20 pm

» சின்னச் சின்ன சிந்தனைகள்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 10:46 pm

» குடம் குடமாய் பாலாபிஷேகம் - எக்ஸ்பிரஸ் கதைகள்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 6:13 pm

» குழந்தையை தவறவிட்டவர் கையில் பத்திரமாக இருந்தது கைப்பேசி...!!
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 6:08 pm

» உன்னோட புடவை பளிச்சுன்னு இருக்கே...?!
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 5:35 pm

» உங்க பொண்ணுக்கு யோகா வராது, சமையல் கத்துக்கொடுங்க...!!
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 5:32 pm

» மூலிகை உணவு
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 5:15 pm

» அவசரம் - X பிரஸ் கதைகள்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 5:06 pm

» X பிரஸ் கதைகள்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 4:53 pm

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 3:30 pm

» ஆக்சிஸ் வங்கியில் ரூ.4,000 கோடி மோசடி - தனியார் நிறுவன இயக்குனர்கள் கைது
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 3:09 pm

» நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,விற்கு எதிராக 3 நோட்டீஸ்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 2:59 pm

» படமும் செய்தியும்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 2:53 pm

» சுதந்திர போராட்ட கதையில் சிரஞ்சீவியுடன் நடிக்கும் நயன்தாரா
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 10:04 am

» தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 10:00 am

» முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணி சாம்பியன்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 10:00 am

» தனுஷ்கோடி கடலில் ரூ.300 கோடியில் காற்றாலை
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 9:43 am

» 20,21ல் திருமலையில் இலவச தரிசனம்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 9:41 am

» ரிசர்வ் வங்கி அதிகாரிகள் திருப்பதிக்கு போகலாம்: சிதம்பரம்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 9:39 am

» தனிமையில் வாடும் பொம்மை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இராமசெயம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Sun Mar 18, 2018 11:02 pm

» அமரர் கல்கி பற்றி அவரது மகள் ஆனந்தி,
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 9:34 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines விநாயகர் தந்த தத்துவம்

Go down

விநாயகர் தந்த தத்துவம்

Post by rjaghamani on Tue Nov 29, 2011 12:59 pm

முரண் நிலைகளில் மிகவும் உயர்ந்தது இறைவனின் அர்த்தநாரீஸ்வர தத்துவம். தானே இரண்டாகப் பிரிந்து நின்று உலகம் தோன்றவும், உலகம் போகத்தை அனுபவிக்கவும், போகத்தின் இறுதி நிலையாக உய்வு பெறவும் ஆண்டவன் தன்னை ஆட்படுத்திக் கொண்ட அற்புத நிலை. இதை நமக்கு போதிக்கும் முதல் குரு விநாயகப் பெருமான்தான். எளியோர்க்கும் இந்த "இறைநிலை'யை விளக்க, விநாயகர் அம்மையப்பரைச் சுற்றி வந்து மாங்கனியைப் பெற்றுக்கொண்டதாகப் புராணக்கதை உருவகப்படுத்தி வைத்துள்ளது. நமது அருள்மிகு நெல்லையப்பர் கோவிலின் வசந்த மண்டபம் சிவ தத்துவங்களை விளக்கும் காட்சி பிரமாணமாக உள்ளது. அதில் தலைவாசலில் அம்மையப்பர் தரிசனம் கொடுப்பதும், அதை ஒளியாகப் பெற்றுக்கொண்டு நிற்கும் அம்மையப்ப விநாயகர் சந்நிதியும், இந்தக் கோவிலின் சிறப்புகளில் ஒன்று. விநாயகரே தத்துவ நிலையில் பிரணவ மந்திர ரூபமாக உள்ளவர்தான். தத்துவனே தத்துவம் தந்தால் அது எத்தனை மேன்மையுடைத்தது!

இன்று உலகத்தில் முதற்கடவுளாகப் பரவலாக வழிபடப்படுபவர் விநாயகப் பெருமானே. அவரே தத்துவ ஞானிகளுக்கு அரியனாக, ஏழைகளுக்கு எளியவனாக, மக்களிடையே வந்து அமர்ந்து வரம் அருளும் ஆபத்சகாயனாக உள்ளார். "உய்வு காட்டும் ஓமெனும் மந்திர உருவம்', "தெரு வழிப்போவார்க்கும் தெளிவுகாட்டத் தேடி வந்து காத்திருக்கும் கடவுள்', "போவார்க்கும் வருவார்க்கும் பொதுமையான தெய்வம்', "உலகத்தை மயிலேறிக் கந்தன் சுற்ற, சகலமும் அம்மையப்பரே எனக் கண்டு வலம்புரி விநாயகர்' என்று விநாயகரை வியந்து கூறுவர்.

விநாயகர்- பல முரண்களின் ஒற்றுமை முடிச்சு

விநாயகரின் தோற்றமே பல முரண்களின் அழகான ஒற்றுமை முடிவு. இடைக்குக் கீழ் மனித உடலாக, கழுத்து முதல் இடை வரை தேவ உடலாக, தலைப்பகுதி விலங்கின் உடலாக, பெருவயிறு பூத உடலாக அமைந்த வடிவம்.

யானையின் தோற்றம் விநாயகரையே நினைவுப்படுத்தும் அளவுக்கு ஏன் நமது முன்னோர்கள் விநாயகரின் வடிவத்தில் யானையின் படிமத்தை இணைத்தார்கள்? இது பாமரர்க்கு அவரது வாழ்க்கையின் கோட்பாடுகளை குறியீடாகக் காட்டுவதற்காகவும் இருக்கலாம். கதை முக்கியமல்ல. கதை காட்டும் விதையை விளங்கி நமக்குள் விதைத்துக் கொள்வது முக்கியம்.

விநாயகர் "கணபதி'யும் ஆவார். அதாவது கணங்களின் தலைவர். தலைமைக்குத் தகுதிகள் என்னென்ன வேண்டும் என்று கணபதியின் தோற்றம் நமக்குக் காட்டி நிற்கிறது.

யானைத்தலை: எல்லா விலங்குகளிலும் யானை மிக அதிகமான- நுணுக்கமான அறிவு பெற்றது. ஒரு தலைவனுக்கு சமுதாயத்தை நல்வழியில் நடத்த கூர்த்தமதி, ஞானம் தேவை.

யானையின் கண்கள்: மிகச் சிறியவை ஆயினும் நுண்ணிய பார்வை (ஙண்ஸ்ரீழ்ர்ஸ்ண்ள்ண்ர்ய்) உள்ளவை. மிகச் சிறிய ஊசியைக்கூட தரையிலிருந்து எடுத்து விடக்கூடிய பார்வை அது. அத்துடன் தொலைநோக்குப் பார்வையும் (ஙஹஸ்ரீழ்ர்ஸ்ண்ள்ண்ர்ய்) உண்டு. எதிர்காலத்தை நிர்ணயம் செய்யும் தகுதியுள்ள பார்வை. அதனாலேயே நம் முன்னோர்கள், வாரிசு இன்றி இறந்துவிட்ட அரசரின் அடுத்த வாரிசைத் தேர்ந்தெடுக்க, யானையின் தும்பிக்கையில் மாலையைக் கொடுத்து நாட்டை வலம்வரச் செய்தனர்.

யானையின் காதுகள்: முறம்போல அசைந்து கொண்டே இருக்கும். முறத்தின் தன்மை சாரமான, பொருத்தமானவற்றைச் சலித்து எடுத்து வைத்துக்கொள்வது. நிறைய கேட்க- கற்றலின் கேட்டல் நன்று. கேட்டனவற்றைச் சலித்துச் சீர்தூக்கிச் சித்தத்தில் வைக்கவும் என்று உணர்த்துவது.

யானையின் தும்பிக்கை: தொலைதூரம் வரை மோப்பம் பிடிக்கும் திறமை பெற்றது. ஒரு தலைவரும், ஞானியும் தொலைநோக்குப் பெற்றிருக்க வேண்டும். எதிர்காலத்தில் வரப்போகும் சூழ்நிலைகளை வருமுன் உணர்ந்து வகையான செயல்பாடுகளை வகுக்க வேண்டும்.

யானையின் தந்தங்கள்: இரு தந்தங்களில் ஒன்று முழுமையானது. மற்றது பாதியானது. முழுமையான தந்தம் சிரத்தை (இறை நம்பிக்கை); அடுத்தது சுய அறிவு (மேதாசக்தி). மனிதனின் சொந்த அறிவு குறைபாடுடையதாயினும் முழுமையான இறை நம்பிக்கை இதை சரிசெய்து விடும்: ஈடுகட்டிவிடும் என்று சுட்டி விளக்குவது.

கணபதியின் கைகள்: தும்பிக்கை தவிர நான்கு கைகள் உண்டு. எந்தக் கை யாருக்காக என்று குறிப்பிடும் ஒரு அழகிய பாடல்:

"பண்ணியம் ஏந்தும் கரம் தனக்காக்கிப்

பால் நிலா மருப்பு அமர் திருக்கை

விண்ணவர்க் காக்கி அரதனக் கலசம்

வியன் கரம் தந்தை தாய்க்காக்கி

கண்ணில் ஆணவ வெங்கரி பிணித்து அடக்கிக்

கரிசினேற்கு இருகையும் ஆக்கும்

அண்ணாமலைத் தணிகை வளர் ஆபத்

சகாயனை அகம் தழீஇக் களிப்பாம்'

(தணிகை புராணம்)

லம்போதரரின் பெருவயிறு: எத்திசையினின்று எதுவரினும் ஏற்றுக்கொள்க என்ற சீரிய கொள்கையைச் சுட்டிக் காட்டுவது. மனிதன் குடல் வயிறாக அன்றி கடல் வயிறு கொண்டவனாக- அறிவைத் திரட்டிப் பெருக்கும் பைத்தியம் கொண்டவனாக இருக்க வேண்டும் என்று சொல்லாமல் சொல்வது.

கணபதியின் கால்கள்: கணபதியின் கால்கள் குட்டையானவை. மடித்து வைத்து உட்கார்ந்த நிலையில் உள்ளவை. இந்தக் கால்கள் வேகத்துக்கு ஆகா. ஆனால் விவேகத்துக்கு ஆகும் கால்கள். அதனால்தானே வேகத்தை விட்டு விவேகத்துடன் அம்மையப்பரைச் சுற்றிவந்து ஆசி பெற்றுவிட்டார். ஒரு தலைவன் தான் இயங்குவதைக் காட்டிலும், தன்னுடன் இணைந்தவரை இயங்கச் செய்து செயலை சிறப்பாகச் செய்ய வேண்டும். தம் புத்தியால், மெய் அறிவால் பிறரை ஓடச் செய்ய வேண்டும். ஒரு ஆட்சியின் தலைவரோ, ஒரு ராணுவ அதிகாரியோ தான் இருந்த இடத்திலிருந்து பிறரை இயக்கினாலேயே வெற்றி பெற முடியும்.

அர்த்தநாரீஸ்வர தத்துவம்: ஆண்- பெண் பேதமும், இப்பேதம் ஒன்றுபட்டுச் செயல்படுவதும் உலகம் இயங்கத் தேவையான அடிப்படைத் தத்துவம். இதை நமது சாஸ்திரங்கள் பலவிதமாகச் சுட்டியுள்ளன. ருத்திரன் ஆண் தன்மையையும், உமா பெண் தன்மையையும் குறிக்கின்றனர்.

உமா மகேசுவரன்- அண்ட பிண்டம்.

"ருத்ரோ நர உமா நாரீ தஸ்மை தஸ்யை நமோ நம!:

ருத்ரோ ப்ரஹ்ம உமா வாணீ நமோ நம!

ருத்ரோ விஷ்ணு உமா லக்ஷ்மீ நமோ நம!

இந்த ஸ்லோகங்கள் இணைந்து செயல்படுவதில் பாக்யம், தேஜஸ் உண்டாவதைச் சொல்கின்றன.

ருத்ரன் சூரியன் எனில், உமா பேரொளி. ருத்ரன் மலர் ஆனால் உமா நறுமணம். ருத்ரன் யாகம் எனின் உமா மேடை.

எனவே சைவ சித்தாந்தம் காட்டும் முரண்களின் ஒற்றுமையால் விளையும் நன்மைகளை உணர்ந்து, அதன் வழி நடந்து, நாடு வளம் பெறச் செய்வோம்!
avatar
rjaghamani
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 40
Points : 110
Join date : 20/10/2011

Back to top Go down

Re: விநாயகர் தந்த தத்துவம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Tue Nov 29, 2011 1:05 pm


_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: விநாயகர் தந்த தத்துவம்

Post by தங்கை கலை on Tue Nov 29, 2011 2:13 pm

:héhé: :héhé:
avatar
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 18
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

Re: விநாயகர் தந்த தத்துவம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum