"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வெற்றிப் பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Yesterday at 11:46 pm

» ரசித்ததில் பிடித்தது - (பல்சுவை) தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 11:27 pm

» சிரிப்போ சிரிப்பு...!!
by அ.இராமநாதன் Yesterday at 11:23 pm

» ஒன் மேன் ஷோ
by அ.இராமநாதன் Yesterday at 11:22 pm

» உழைப்பவர்களின் கையில்தான் உலகம் ...
by அ.இராமநாதன் Yesterday at 11:06 pm

» மிலிட்டரி சரக்க ஓசியில வாங்கஃத்தான்...!!
by அ.இராமநாதன் Yesterday at 3:05 pm

» இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைக்கு பாரம்பரிய அந்தஸ்து
by அ.இராமநாதன் Yesterday at 2:55 pm

» பென்குவின் பறவைகள்
by அ.இராமநாதன் Yesterday at 2:50 pm

» உளுந்து வடையைத் தின்னுட்டு ’அதிரசம்’ நல்லா இருக்கு’ன்னு சொல்றாரே...!!
by அ.இராமநாதன் Yesterday at 2:23 pm

» ஒண்ணா சரக்கடிக்க வச்சுட்டார்....!!
by அ.இராமநாதன் Yesterday at 11:51 am

» மாற்றம் என்பது...
by அ.இராமநாதன் Yesterday at 11:35 am

» வீட்டில் கழிவறை இல்லாவிட்டால் சம்பளம் 'கட்'
by அ.இராமநாதன் Yesterday at 8:33 am

» நாங்க இப்படிதானுங்க!: ஜாலியான அலியா!
by அ.இராமநாதன் Yesterday at 8:28 am

» எனது அரசியல் வாரிசு யார்?: மாயாவதி பரபரப்பு பேட்டி
by அ.இராமநாதன் Yesterday at 8:23 am

» 'வவ்வால் மூலம் 'நிபா' பரவவில்லை'
by அ.இராமநாதன் Yesterday at 8:21 am

» பெங்களூரு தவிர மாநிலம் முழுவதும் நாளை 'பந்த்' : பா.ஜ., தலைவர் எடியூரப்பா திட்டவட்டம்
by அ.இராமநாதன் Yesterday at 8:20 am

» காலக்கூத்து - சினிமா விமரிசனம்
by அ.இராமநாதன் Sat May 26, 2018 11:37 pm

» ஆண்மகனே புரிந்துகொள் - கவிதை
by அ.இராமநாதன் Sat May 26, 2018 11:17 pm

» ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியானது ஏன்? எப்படி? சசிகலாவின் வழக்குரைஞர் விளக்கம்
by அ.இராமநாதன் Sat May 26, 2018 11:04 pm

» அடடே அப்படியா...
by அ.இராமநாதன் Sat May 26, 2018 4:51 pm

» மாறுவேடப் போட்டி
by அ.இராமநாதன் Sat May 26, 2018 4:48 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sat May 26, 2018 4:46 pm

» வாத்துக் குஞ்சுகளுக்கு தாயாகிய நாய்
by அ.இராமநாதன் Sat May 26, 2018 4:38 pm

» பாம்பன் பாலத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
by அ.இராமநாதன் Sat May 26, 2018 4:34 pm

» போலீசாருக்கு ஐகோர்ட் உத்தரவு Added : மே 26, 2018 14:41
by அ.இராமநாதன் Sat May 26, 2018 4:33 pm

» கம்ப்யூட்டரையும் தொலைபேசியையும் இணைக்கும் கருவி....(பொது அறிவு தகவல்)
by அ.இராமநாதன் Sat May 26, 2018 1:38 pm

» தூரப்பார்வை உடைய சிறப்பான பூச்சி ....(பொது அறிவு தகவல்)
by அ.இராமநாதன் Sat May 26, 2018 1:30 pm

» ஜூன் 30 முதல் ஒரே இணையதளத்தில் மொபைல் கட்டண விவரம் வெளியிட டிராய் உத்தரவு
by அ.இராமநாதன் Sat May 26, 2018 12:10 pm

» ‘விசுவாசம்’ அப்டேட்: அஜித்தின் தாய்மாமனாக நடிக்கிறார் தம்பி ராமையா
by அ.இராமநாதன் Sat May 26, 2018 12:01 pm

» சினிமா -முதல் பார்வை: செம
by அ.இராமநாதன் Sat May 26, 2018 11:58 am

» மீண்டும் பா.ஜ., ஆட்சி: கருத்துகணிப்பில் தகவல்
by அ.இராமநாதன் Sat May 26, 2018 8:01 am

» புறாக்களின் பாலின சமத்துவம்
by அ.இராமநாதன் Sat May 26, 2018 7:57 am

» குதிரை பேர வரலாறு
by அ.இராமநாதன் Sat May 26, 2018 7:56 am

» தமிழகத்தில் 'நிபா' பாதிப்பில்லை!
by அ.இராமநாதன் Sat May 26, 2018 7:53 am

» சாதாரண வார்டுக்கு அருண் ஜெட்லி மாற்றம்
by அ.இராமநாதன் Sat May 26, 2018 7:51 am

» இந்திரா கவிதைகள்
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:59 pm

» ஒரு பெண் எப்போது அழகாக இருக்கிறாள் - பா.விஜய்
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:56 pm

» பட்ட காலிலேயே படும்....
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:49 pm

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:46 pm

» பழத்துக்குள் மாட்டிக்கொண்ட புழு....
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:41 pm

» டயாபடீஸ் பேஷண்டுகளுக்கென பிரத்யேக டிஸைனர் செருப்புகள் அறிமுகம்!
by அ.இராமநாதன் Fri May 25, 2018 7:22 pm

» மருந்து, மாத்திரைகள் இன்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க இயற்கை வழிமுறை!
by அ.இராமநாதன் Fri May 25, 2018 7:21 pm

» எளிய மருத்துவக் குறிப்புகள்
by அ.இராமநாதன் Fri May 25, 2018 7:19 pm

» ஜி.வி. பிரகாஷ் ஜோடியாக நடிக்கும் அபர்னதி!
by அ.இராமநாதன் Fri May 25, 2018 7:10 pm

» திருச்செந்தூர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 28-ந்தேதி நடக்கிறது
by அ.இராமநாதன் Fri May 25, 2018 2:27 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



முல்லைப்பெரியார்...!!!

Go down

முல்லைப்பெரியார்...!!!

Post by nanjilmano on Sun Dec 11, 2011 5:47 pm

முல்லை பெரியார் ....

எனக்கு வந்த ஒரு மின் அஞ்சலை நண்பர்களுக்காக இங்கே பதிவு செய்கிறேன்.

இன்னொரு உலகப்போர் அதான் 3வது உலகப்போர் நடக்கப்போவுதுன்னா அது தண்ணிக்காகத் தான் இருக்கும்ன்னு ஆராய்ச்சியாளர்கள் சொல்றது சரியாத்தான் ஆகிடுமோன்னு தோணுது.

சமீப நாட்களாகக் காதுல விழக்கூடிய முல்லைப் பெரியார்ன்னு பேரக் கேட்கும்போது 2000 வருசத்துக்கு முன்னாடியே உலகத்துக்கே கல்லணை மூலமா இப்படித்தான் அணை கட்டணும்னு சொல்லித்தந்த தமிழன இந்த அணை அங்க என்ன நடக்குதுன்னு திரும்பிப் பார்க்க வச்சிருக்கு இன்னைக்கி. குழந்தைக்கு தாயோட தண்ணீர் குடத்தோட தொடங்குகிற போராட்டம் மாதிரி தமிழனோட போராட்டமும் தொடருதே ஏன்?

இந்தியாவுல ரெண்டே ரெண்டு நதிகள் வடக்கு மேற்கா ஓடுது ஒண்ணு நர்மதை, இன்னொன்ணு பெரியாறு.

3 மாநிலங்கள்ல நர்மதை நதி ஓடுனாலும் பெரிசா எந்தப் பிரச்சனையும் இல்ல. ஆனா பெரியாறு...? தமிழ்நாட்டுல பிறந்து கிட்டத்தட்ட 300 கிமீ கேரளாவுல ஓடி அரபிக்கடலோட ஐக்கியமாகுது பெரியாறு.

எங்க பிறந்து?

தமிழ்நாட்டுல..... பச்சப்பசேல்ன்னு கொட்டிக்கெடக்குற அழகு, அதனால அழகான மலைங்கிற அர்த்ததோட அழைக்கப்பட்ட மேற்குத் தொடர்ச்சி மலையில உள்ள சுந்தரகிரி. அங்க சிவகி சிகரம். இங்க ஆரம்பிக்குது பிரச்சன. இல்ல இல்ல பெரியாறு. சிவகிரில ஆரம்பிச்சி ஒரு 48 கிமீ நகர்ந்து முல்லைங்கிற ஆறோட சங்கமிக்குது பெரியாறு. இந்த ரெண்டும் சங்கமிக்கிற இடத்துல தான் இருக்குது

முல்லை பெரியாறு அணை. அந்த நாட்கள் சென்னையில இருந்த பிரிட்டிஷ் அரசாங்கம் சந்திச்ச ஒரு சவாலான விசயம் வறட்சி. பழைய மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்கள்ல இருந்த கடுமையான வறட்சி, பஞ்சம், பசி, பட்டினி. வைரமுத்துவோட வார்த்தைகள்ல சொல்லணும்னா புலிக்கொடி பொறித்த சோழமக்கள் எலிக்கறி பொறிக்கதுவோ போலத்தான் அந்த மாவட்ட மக்களின் வாழ்க்கை,

அதிலயும் விவசாயிகள் 97 - 98 ம் வருசத்துல மகாராஷ்டிரா, ஆந்திர மாநில பருத்தி விவசாயிகள் கொத்துக் கொத்தா தற்கொலை செஞ்சிக்கிட்டது மாதிரி தான். ஒரு பக்கம் 44 நதிகள் யாருக்கும் பயன்படாம ஓடி கடல்ல கலக்குற தண்ணி. இன்னொரு பக்கமோ கடுமையான வறட்சி. யோசிச்ச பிரிட்டிஷ் சர்க்கார் அப்போ கேரளாவை ஆண்ட திருவிதாங்கூர் மன்னன் கிட்ட முல்லையும் பெரியாரும் சங்கமிக்கிற இடத்துல அணை கட்டி தண்ணிய தேக்கி வச்சி இங்க வறட்சியான மக்களுக்கு திருப்பி விடலாம்ன்னு சொல்றாங்க. கிட்டத்தட்ட 25 வருசம் பலமான யோசனைக்க அப்புறம் அவரும் ஒத்துக்கிடுறாரு.

இப்போ கேரளாவுல இருக்குற அரசியல்வாதிகள் மாதிரின்னா அப்போ ஒரு செங்கலக்கூட பெரியார் அணைக்கி எடுத்து வைக்க முடியாது. அணை கட்ட சம்மதிச்ச திருவிதாங்கூர் மன்னர் அணை கட்டுறதுனால மூழ்கிப்போற 8000 ஏக்கர் நிலத்துக்கு ஒரு ஏக்கருக்கு 5 ரூபாய் வீதம் குத்தகைத் தொகையா கேட்டு 999 வருசம் ஒப்பந்தத்துக்கு குடுக்குறாரு

அந்த இடத்த. இன்னைக்கும் தைப்பொங்கல் முடிஞ்ச மறுநாள் ஜனவரி 15ம் தேதி நீங்க மதுரையில இருந்து குமுளி வரைக்கும் போனிங்கன்னா நிச்சயமா நீங்க பார்க்காம இருக்க முடியாது

கலர் கலரான 170வது பிறந்த நாள் வாழ்த்துச் சொல்ற வால்போஸ்டர்கள. இத்தனைக்கும் அந்த மனுசன் சூப்பர் ஸ்டார்ல ஆரம்பிச்சி இன்னக்கி இருக்குற பவர் ஸ்டாரோ இல்ல. ஆனா அந்த மனுசனோட பிறந்த நாளா அவ்வளவு விமர்சையா தேனி, மதுரை மாவட்ட மக்கள் கொண்டாடுறாங்கன்னா காரணம் இருக்கு.

அவரு தான் முல்லை பெரியாரு அணைய கட்டுன பென்னி குக்.

நான் இந்தப் புவிக்கு வந்து செல்வது ஒரு முறை தான் ஆகையால் நான் ஒரு நற்செயல் புரிய வேண்டும் அதை தள்ளி வைப்பதற்கோ,தவிர்ப்பதற்கோ வாய்ப்பில்லை. ஏனென்றால் நான் மீண்டும் பிறக்கப்போவதில்லை. இன்னைக்கும் அணைக்குப் பக்கத்துல இருக்குற அவரோட சிலையின் கீழிருக்கிற வாசகங்கள்.

அணையோட ஆழத்தப் பத்தி யோசிக்கிற கேரள அரசு ஒரு வெள்ளக்காரனோட வார்த்தையில இருந்த ஆழத்த பாத்துருக்காதுன்னு தோணுது. இதுல இன்னொரு விசயம் முல்லை பெரியாறு அணை கட்டுறப்ப வந்த எதிர்பாராத வெள்ளம் அணைய ஒடைக்குது. அரசாங்கமும் மறுபடியும் அணை கட்ட நிதி தர மாட்டிக்கி. இங்கிலாந்து போய் தன்னோட சொத்துக்கள வித்து சொந்த பணத்துல அணைய கட்டுறாரு பென்னி குக். 1886ல ஒப்பந்தம் 1895ல அணை கட்டி முடிக்கப்படுது. 152 அடி உயரம்,15,5 டிஎம்சி கொள்ளளவோட. இதுல ஒரு முக்கியமான விசயம் கேரளாவோட ஒப்பந்தச் சரத்தால வந்த ஒண்ணு. அதாவது மத்த அணைகள்ல இருக்குற மாதிரி மதகுகள திறந்து தண்ணீர திறந்து விடுற அம்சம் இதுல இல்ல.

104 அடி தண்ணீர் தேங்குன பிறகு வர்ற தண்ணி தான் அணையோட வடக்குப் பக்கமா தோண்டப்பட்ட குகைகள் மூலமா நமக்குக் கெடைக்குது. இப்படி அணை கட்டுன பிறகு 1895 ல இருந்து 60 வருசங்கள் எந்தப்பிரச்சனையும் இல்ல. 1947 சுதந்திரம் இங்க தமிழக அரசு, அங்க கேரள அரசும் வருது. பிரச்சனையும் வருது. பெரியாறு தண்ணி தமிழ்நாட்டுல நுழையிற இடத்தில ஒரு மின் உற்பத்தி நிலையத்த கட்ட ஆசப்படுது தமிழக அரசு. பாசனத்துக்கான தண்ணி மின்சாரமா மாறி பணமா மாறுற இடத்துல பிரச்சனையும் ஆரம்பிக்குது. சரின்னு ஒத்துக்கிட்ட கேரள அரசு அதுவரைக்கும் அஞ்சு ருப்பாய் குத்தகைக்குனு இருந்த எட்டாயிரம் ஏக்கருக்கு முப்பது ரூபாயா ஏத்துது.ரெண்டு லட்சத்தி நாற்பதாயிரம் ரூபாய் இன்னைக்கும் கொடுக்கப்படுது.

ஆனா அந்த எட்டாயிரம்ஏக்கர் நிலம் பயன்பாட்டில இல்ல ஏன்னாஅணையோட உயரம் 152 அடில இருந்து 136 அடியாகுறைஞ்சு போச்சு . இப்பம் 4677 ஏக்கர் தான்பயன்படுத்துறோம். ஆனாலும் எட்டாயிரம் ஏக்கருக்கும் குத்தகை கொடுக்குறோம். ஏன் உயரம் குறைக்கபடுராதுன்னு பார்த்தா 1979 இல இடுக்கிமாவட்டத்தில புதுசா ஒரு அணை கட்ட ஆசைப்படுதுகேரளா முல்லை பெரியாறு தண்ணி தான் அங்கேயும்போகணும்.இதுவும் அணையோட உயர்த்த குறைக்க ஒரு காரணம் இடுக்கி மாவட்டத்தில அணை கட்டும்போது வந்த மிதமான நிலநடுக்கத்த மலையாளத்தின்பிரபலமான பத்திரிகை (மனோரமா) பூதாகரமாக்கி செய்தி வெளியிடுது.

ஏற்கனவே சரியான சந்தர்பத்திற்கு காத்திருந்த கேரளா அரசு அத பயன்படுத்திகிடுது.அணை பாதுகாப்பில்லாம இருக்குபழையது . மத்திய நீர்வள குழுமத்துகிட்ட அணையோட உயரத்தை152 அடில இருந்து 136 அடியா குறைக்கணும்

அது தான்நாட்டிற்கும் மக்களுக்கும் நல்லது.மத்திய நீர்வளகுழுமம் ஒத்துக்குடுது. வேணும்னா தமிழகஅரசுஅணைய பலப்படுத்தி உயரத்தை அதிகரிக்கலாம்னுசொல்லுது . அணையும் பலப்படுத்தபடுது ஆனாலும்கேரளா அரசு ஒத்துழைப்பு கொடுக்கல.தமிழகம் நீதிகேக்குது உச்சநீதி மன்றமும் உத்தரவிடுது. செவுடன்காதுல ஊதின சங்கா எந்த பிரயோஜனமும் இல்ல ஏற்கனவே 104 அடிக்கு மேல உள்ள தனி தான்தமிழ்நாட்டிற்கு வருது .அதுலயும் 152 லிருந்து 136அடியாக நீர் தேக்கிவைக்கிற அளவு குறைக்கபட்டிருக்கு.

இதனால கிட்டத்தட்ட 1 ,25000 ஏக்கர் நிலத்ஹ்டிற்கு கிடைக்க வேண்டிய முல்லை பெரியாறு தண்ணிகிடைக்காம போயிருக்கு, 140 மெகாவாட் உற்பத்திதிறன் கொண்ட பெரியாறு மின்சார உற்பத்திநிலையத்துல 40 % உற்பத்தி குறைஞ்சிருக்கு.இதெல்லாம் நமக்கு நட்டம் தான் ஆனா அணையோட உயரம் அதிகரிக்கபடாததால வெளியிலபோற தண்ணி இடுக்கி அணைக்கு போய் அங்கதயாரிக்கபடுற மின்சாரம் நமக்கே விலைக்குவிற்க்கப்படுது.

இந்த லாப கண்ணோட்டமும் இந்த சிலஅரசியல் காய்நகர்த்தல்களும்தான் இந்தபிரச்சனையின் ஆணிவேர். இது ஒருபக்கம் இருந்தாலும் ஒட்டு அரசியலுக்காகவும்,மக்களை திசை திருப்பவும் அணையுடையும் அபாயம் இருக்கு .

மூணு மாவட்டங்கள் முழ்கி போகும். லட்சகணக்கான மனுஷங்கள் பலியாவங்கனுவதந்திகள் வேற,ஆயிரகணக்கான வருடங்கள்பழமையான அணைகளே நல்ல பலமா இருக்கும் போதுநூறு வருஷங்கள் மட்டுமே கடந்துருகிற இந்த முல்லைபெரியாறு உடைந்து போகுமா அதனால இந்தபாதிப்புகள் வருமா?சின்னதா ஒரு விளக்கம் கொஞ்சம் யோசிச்சு பாருங்க பெரியாறு அணை தொடங்கிவரிசையா 13 அணைகள் இருக்கு. பெரியாறு அணை நிரம்பின பிறகுதான் இந்தஅனைகளுக்கெல்லாம் தண்ணி வந்து 13உம் நிரம்பிஅப்புறம் தான் கடலுக்கு தண்ணி போகுது

ஒரு வேலைபேச்சுக்கு அணை உடையுதுன்னு வச்சுகிட்டாலும் கூட13 அணைகள் தாண்டி தான் வெள்ளம் ஊருக்குள வரும். இன்னொன்னு சமவெளி நிலங்கள வெறும் 23கிலோமீட்டர் மட்டும் தான் பெரியாறு ஓடுது. மத்தபடி250 கிலோமீட்டர் அடர்ந்த காடு. மலை இதுதான்அதோட பாதை

இந்த பாதையில் பெரிசா குடியிருப்புகள்எதவும் இல்ல அடங்காத முரட்டு குதிரை போலவெள்ளம் வந்தாலும் அதோட வேகம் அடர்ந்தகாட்டையும் மலைகளையும் தாண்டி சமவெளிக்கு வரும் போது சாதுவா மாறிடும், இதுதான் எதார்த்தம் ஆனா இப்ப அணையின் உயரத்தை அதிகரிக்க விடாதவர்கள் புதுசா அணை கட்டுவாங்கலாம் .

ஒரு சொட்டு தண்ணி கூட குறையாம தருவாங்கலாம் .

கேக்கிறதுக்கு எப்புடி தெரியுமா இருக்கு!

"கூரையேறிகோழி பிடிக்க முடியாதவன் வானத்தை கிழிச்சுவைகுண்டத்தை காட்டுறேன்னு சொன்னனாம்"அப்புடிங்கிற அப்பத்தாவோட பழமொழி தான் நினைவுக்கு வருது

nanjilmano
மல்லிகை
மல்லிகை

Posts : 134
Points : 212
Join date : 11/11/2010
Age : 43
Location : பஹ்ரைன்

Back to top Go down

Re: முல்லைப்பெரியார்...!!!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Mon Dec 12, 2011 12:57 pm

அறிந்துக் கொள்ள தந்தமைக்கு நன்றி அண்ணே

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56826
Points : 69582
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum