"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Today at 7:59 am

» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Yesterday at 10:59 pm

» நெருப்பின் தாகம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Mar 20, 2018 9:06 pm

» நம் சமையல் அறையில்...
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 5:42 pm

» இந்தியாவில் மின்சார கார்களை களமிறக்கும் மாருதி சுஸுகி
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:51 am

» ஸ்ரீதேவி வாழ்க்கை சினிமா படமாகிறது வித்யாபாலன் நடிக்க பேச்சுவார்த்தை
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:38 am

» பிளாக் பேந்தர் படம் ரூ.7 ஆயிரம் கோடி வசூல் சாதனை
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:35 am

» சசிகலா கணவர் நடராஜன் காலமானார்
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:33 am

» சசிகலா புஷ்பாவுக்கு மீண்டும் திருமணம்!
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:32 am

» இன்று பத்ம விருதுகளை வழங்குகிறார் ஜனாதிபதி
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:31 am

» 2ஜி வழக்கில் அமலாக்கத்துறை அப்பீல்: ராசா, கனிமொழிக்கு சிக்கல் வருகுது
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:30 am

» ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:29 am

» அரசு கஜானாவுக்கு வரவேண்டிய ரூ.1,000 கோடி எங்கே போகிறது? சட்டசபையில் தி.மு.க. காட்டமான கேள்வி
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:28 am

» பூ பூப்பதும் உலகச் செய்திதான்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 11:20 pm

» சின்னச் சின்ன சிந்தனைகள்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 10:46 pm

» குடம் குடமாய் பாலாபிஷேகம் - எக்ஸ்பிரஸ் கதைகள்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 6:13 pm

» குழந்தையை தவறவிட்டவர் கையில் பத்திரமாக இருந்தது கைப்பேசி...!!
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 6:08 pm

» உன்னோட புடவை பளிச்சுன்னு இருக்கே...?!
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 5:35 pm

» உங்க பொண்ணுக்கு யோகா வராது, சமையல் கத்துக்கொடுங்க...!!
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 5:32 pm

» மூலிகை உணவு
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 5:15 pm

» அவசரம் - X பிரஸ் கதைகள்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 5:06 pm

» X பிரஸ் கதைகள்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 4:53 pm

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 3:30 pm

» ஆக்சிஸ் வங்கியில் ரூ.4,000 கோடி மோசடி - தனியார் நிறுவன இயக்குனர்கள் கைது
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 3:09 pm

» நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,விற்கு எதிராக 3 நோட்டீஸ்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 2:59 pm

» படமும் செய்தியும்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 2:53 pm

» சுதந்திர போராட்ட கதையில் சிரஞ்சீவியுடன் நடிக்கும் நயன்தாரா
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 10:04 am

» தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 10:00 am

» முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணி சாம்பியன்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 10:00 am

» தனுஷ்கோடி கடலில் ரூ.300 கோடியில் காற்றாலை
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 9:43 am

» 20,21ல் திருமலையில் இலவச தரிசனம்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 9:41 am

» ரிசர்வ் வங்கி அதிகாரிகள் திருப்பதிக்கு போகலாம்: சிதம்பரம்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 9:39 am

» தனிமையில் வாடும் பொம்மை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இராமசெயம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Sun Mar 18, 2018 11:02 pm

» அமரர் கல்கி பற்றி அவரது மகள் ஆனந்தி,
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 9:34 pm

» இருமலை விரட்டலாம்
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 9:01 pm

» காதலரை மணந்த ஸ்ரேயா; மும்பையில் ரகசிய திருமணம்
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 8:58 pm

» அழகுக்காக ஆபரேஷன் செய்யக்கூடாது -ராணி முகர்ஜி
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 8:50 pm

» மராட்டியத்தில் நிரவ் மோடிக்கு சொந்தமான சூரிய மின்உற்பத்தி ஆலையை முடக்கியது அமலாக்கத்துறை
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 8:41 pm

» களவும் கற்று மற...!
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 3:33 pm

» மின் ஒளியாக அவள்...!
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 3:26 pm

» ஒரு படம், நுாறு படத்திற்கு சமம்!
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 12:30 pm

» கிராபிக்ஸ் பாம்பாக மாறும் ராய்லட்சுமி! -
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 12:30 pm

» அப்பாவுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி!
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 12:29 pm

» போதை விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பிரியா வாரியர்!
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 12:29 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 12:28 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines “ஒரு நாளில் வாழ்க்கை இங்கு எங்கும் ஓடி போகாது ”

Go down

“ஒரு நாளில் வாழ்க்கை இங்கு எங்கும் ஓடி போகாது ”

Post by kishore1490 on Tue Dec 13, 2011 4:47 pm

“ஒரு நாளில் வாழ்க்கை இங்கு எங்கும் ஓடி போகாது ”

....வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலருதே , விடியும் பூமி அமைதிக்காக விடியுதே மண்மேல் மஞ்சள் வெளிச்சம் .. பாதி உறக்கத்திலிருந்து எழுந்து பக்கத்திலிருந்த போனை எடுத்து அலாரத்தை off செய்தேன் .. ஒரு 10 நிமிடம் கண்ணை மூடி படுத்து இருந்தேன் .. நேற்று சாயந்திரம் மேனேஜர் சொல்லியது ஞாபகம் வர எழுந்து வேலைக்கு கிளம்பினேன் .. இவனுங்க குடுக்குற 7000 ருபாய் சம்பளமும் சட்டைய அயன் பண்றதுக்கும் , சூ பாலிஷ் போடுறதுக்குமே சரியா இருக்கு இதுல tie வேற , ஜன்னல்ல மாட்டி இருந்த tieயை எடுத்து மாட்டிட்டு ரூம் கதவை சாத்தி பூட்டு போட்டு விட்டுட்டு , பஸ் ஸ்டாப்பை நோக்கி நடந்தேன் .. பஸ் ஸ்டாபிற்கு பக்கத்திலிருந்த தள்ளு வண்டி கை ஏந்தி பவனை சுத்தி சில மக்களும் பஸ் டிரைவர்களும் கண்டக்டர்களும் சாப்பிட்டுகிட்டு இருந்தாங்க .. அந்த வண்டியின் அருகில் சென்ற உடன் அந்த தள்ளு வண்டிக்காரர் வாங்க தம்பி என்று சிறிய புன்னகையுடன் அழைத்தார். நான் ஒரு salesman என்னை இப்படி சிரிப்புடன் வரவேற்பவர்கள் ஆயிரத்தில் ஒருவர்தான் .. பல முறை நான் விற்கும் பொருட்களை பற்றி கதவுகிட்டதான் அதிகமா சொல்லி இருக்கேன், அதுக்கு காரணம் சேல்ஸ்மேனுனு தெரிஞ்ச உடனே அவங்களுக்கு ஏன்தான் அவளோ கோவம் வருதுனு தெரியல கதவே உடையற அளவுக்கு வேகமா சாத்திட்டு போய்டுவாங்க .. ஆனால் இவர் தினமும் என்னை இப்படி புன்னகையுடன் வரவேற்பது மனதுக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது .. வேகமாக ஒரு தட்டில் பொங்கலை வைத்து அதில் நிறைய சாம்பார் ஊற்றி என்னிடம் நீட்டினார் .. காலைல என்னோட டிபன் எப்பவுமே ஒரு பொங்கலும் அது மூழ்குற அளவுக்கு சாம்பாரும் தான் , விலையும் 15 ரூபாய்தான் பசியும் அடங்கிடும் அதனால காலைல டிபன் எப்பவுமே இங்கதான் ..
காலைல டிபன் முடிசிட்டு பஸ் ஸ்டாப்புக்கு வந்தேன் .. அங்க ரோஸ் கலர் sareela அழகா அவளோட பஸ்காக வெயிட் பண்ணி கிட்டு இருந்தா அவ பேரு கூட எனக்கு தெரியாது .. அவளுக்கு பின்னாடி இருந்த கடையின் நிழலில் போய் நின்றேன் .. பொண்ணுங்க முகத்துக்கு நேரா நின்னு பாக்குற அளவுக்கு எனக்கு தைரியம் இல்ல .. தினமும் காலைல ஒரு 5 நிமிஷம் அவள பாத்துகிட்டு நிக்குறது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும் , ஆனா அவ என்னை இது வரைக்கும் ஒரு வாட்டி கூட பாத்ததில்ல, ஆனா என்னிக்காச்சு என்னயும் திரும்பி பார்ப்பாள்னு ஒரு நப்பாசை .. நா காண்றது பகல் கனவுனு எனக்கு தெரியும் இருந்தாலும் ஆசை படறதுல என்னங்க தப்பு .. இந்த நாட்டுல Middle class மக்களுக்கு freeyaa கிடைக்கிறது இந்த மாதிரி சின்ன சின்ன ஆசைகளும் , பகல் கனவுகளும் மட்டும்தான் ,.. இந்த மாதிரி சின்ன சின்ன சந்தோஷங்கள்தான் அவர்களுடைய கவலையை மறந்து வாழ வைக்கிறது .. அந்த ஆசைகள் நிஜத்துல நடக்காட்டியும் அது நடந்தா எப்படி இருக்கும்ன்ற பகல் கனவே எங்களுக்கு போதும் .. கொஞ்ச நேரத்தில் 70 பஸ் வந்ததும் கடைசியாக ஒரு முறை அவளை திரும்பி பார்த்து விட்டு பஸ்சில் ஏறினேன் .. காலை நேரம் என்பதால் school college வேலைக்கு போறவங்கனு செம கூட்டம். . பஸ்சில் ஏறியதிலிருந்தே பஸ்சில் இருந்தவர்கள் அனைவரும் பரபரப்பாக இருந்தனர் .. Conductor கிட்ட ஒரு 30rs ticketnu கேட்டேன் ., 30 இல்ல 50kudu nu எரிச்சலுடன் கூறிவிட்டு பக்கத்தில் இருந்தவரிடம் டிக்கெட் குடுக்க சென்றார் .. என் பக்கத்தில் நின்று கொண்டிருந்தவர் நேத்து news பாக்கலையா சார் ticket விலையெல்லாம் ஏத்திட்டாங்கனு சொன்னார் .. என்னால் நம்பவே முடியவில்லை நேற்று வரைக்கும் 30rubaaiya இருந்தது இன்னிக்கு 50rubaiyaa.. தினமும் இனி 20rubaai அதிகம் வேண்டுமே என்ன செய்வது என்று யோசித்தபடி மனதுக்குள் புது budgetaye போட்டு பார்த்தேன் ..

சே போன மாசம்தான் 1000 ரூபாய் increment போட்டாங்கனு சந்தோஷத்துல இருந்தேன் .. ஆனா இப்ப தினமும் 20 ரூபாய் extra வேணும் அப்ப மாசத்துக்கு 600 இதுலையே போயிடுதேனு யோசித்து கொண்டிருக்கும்போதே .. கண்டக்டரிடம் இன்னொருத்தர் சண்டை போட ஆரம்பிச்சார் .. பாவம் கண்டக்டரோட சண்ட போட்டு என்ன பண்றது அவங்களா விலைய ஏத்துனாங்க ?.. அவரே காலைல இருந்து சரியான டிக்கெட்டை குடுக்க முடியாம கஷ்டப்பட்டுகிட்டு இருக்காரு .. பஸ்ல இருந்த முக்கால்வாசி மக்கள் அவங்களால முடிஞ்ச அளவுக்கு அரசியல்வாதிகளை அக்கு வேறா ஆணி வேறா பிச்சு எறிஞ்சிட்டு இருந்தாங்க .. நாம எப்பவும் பண்றதுதான எவ்வளவு வெட்டி நியாயம் வேணும்னாலும் பேசுவோம் ஆனா பஸ்ஸை விட்டு இறங்கின உடனே நம்ம வேலையை பார்த்துட்டு போய்டுவோம் .. பலர் அந்த ticket விலையை கேட்டு அதிர்ச்சியில் உறைந்து பேசாமல் நின்றனர் .. உண்மையில் பாதிக்க பட்டவன் அந்த அதிர்ச்சியில் இருப்பவன் தான் .. மற்றவர்களுக்கு விலை ஏற்றம் பாதித்தாலும் சமாளிக்கக்கூடிய ஒன்றுதான் அதனால்தான் அவர்கள் சத்தமாக அரசை விமர்சித்து கொண்டிருந்தனர் .. அந்த விலை ஏற்றத்தை சமாளிக்க முடியாதவர்கள் வாயடைத்து என்ன செய்வது என்று புரியாமல் குழப்பத்துடன் மன கணக்குகளை போட்டு பார்த்து கொண்டிருந்தனர் .. என்னுடைய ஸ்டாப் வந்ததும் இறங்கி என்னுடைய ஆபீஸுக்கு சென்றேன் .. எனக்காக காத்திருந்த மேனேஜர் என்னை பார்த்ததும் அவர் நேற்று என்னிடம் போனில் சொன்னதை மறுபடியும் நேரில் சொல்ல ஆரம்பித்தார் .. நானும் முகத்தை சோகத்துடன் வைத்து கொண்டு அவரையே பார்த்து கொண்டிருந்தேன் .. Increment மட்டும் கேட்டு வாங்கினல்ல இந்த வாட்டி மட்டும் target reach பண்ணலேன்ன உன்னோட settlementa வாங்கிட்டு போய்டுப்பா மேல இருகறவனுங்க உன்னால என்ன சாவடிக்கிறானுங்க ...
எதுவும் பேசாமல் தலை குனிந்து நின்றேன் sales man வாழ்கையில் இந்த மாதிரி அவமானங்கள் பழகியதுதான் .. tensionai குறைக்க B.P. மாத்திரையை போட்டு கொண்டு தண்ணீரை குடித்து கொஞ்சம் சாந்தமானார் .. கொஞ்ச நேரம் கழித்து அவர் என்னிடம் சாரிபா என்னால ஒன்னும் பண்ண முடியாது அவனுங்க மேல உக்காந்துகிட்டு easy yaa சொல்லிடுறானுங்க .. Fieldla இறங்கி வேலை பார்க்கிறவன்களுக்கு தான கஷ்டம் தெரியும் .. என்ன ரொம்ப கொடையறானுங்கபா எப்படியாச்சு targeta reach பண்ணிடு இல்லாட்டி கஷ்டம் என்று கூறி விட்டு இன்று செல்ல வேண்டிய ஏரியா பேப்பரை எடுத்து தந்தார் .. அமைதியாக அதை வாங்கி கொண்டு வெளியே வந்தேன் .. பக்கத்தில் இருந்த மெஸ்ஸில் லெமன் ரைஸ் வாங்கி பையில் வைத்தேன் . என்னால் பாவம் அவருக்கு தலை வலி என்று நினைத்து கொண்டு பஸ் ஸ்டாப் நோக்கி நடந்தேன் .. taargetai கடைசி நாளில் முடிப்பது எனக்கு ஒன்றும் புதிதல்ல பலமுறை அவர் என்னை இப்படி திட்டியபின் கடைசி நாளில் targetai reach பண்ணி இருக்கேன் , இன்றும் அதே நிலைமைதான் .. பஸ் ஸ்டாப்பில் ஒருவன் தன்னை மறந்து அந்த வெயிலில் அழுக்கு லுங்கியில் சட்டை பட்டன்கள் கழண்டு ஆனந்தமாக தூங்கி கொண்டிருந்தான் . அவனை பார்த்து விட்டு சிலர் முணு முணுத்துக் கொண்டே அவன் மேல் பட்ட காற்று கூட தங்கள் மேல் படாதவாறு ஒதுங்கி நின்றனர் .. ஒரு வயதானவர் வெள்ளை சட்டை வெள்ளை வேஷ்டி உடன் கையில் ஒரு மஞ்ச பையை மாட்டிக்கொண்டு இன்னொரு கையில் ஆனந்த விகடனை வைத்து விசிறி கொண்டே அவனை பார்த்து குடிகாராப்பையா காலங்காத்தாலையே இப்படி கெடக்கான் , இவனெல்லாம் நாட்டுக்கு தேவைன்னு யாரு அழுதா என்று தலையில் அடித்துக்கொண்டு பக்கத்தில் இருந்தவரிடம் நியாயம் பேசி கொண்டிருந்தார் .. மற்றவர்களுக்கு இவன் மேல் ஏன் இவ்வளவு கோபம் என்று எனக்கு புரியவில்லை ..

அவனை பார்க்கும்போது எனக்கு மிகவும் பொறாமையாக இருந்தது எந்த வித எதிர்பார்ப்புகளோ , கவலையோ , பொறுப்புகளோ இல்லை .. அவனுடைய உலகத்தில் அவன் சந்தோஷமாக வாழ்கிறான் மற்றவர்கள் பார்க்கிறார்களே அவர்கள் என்ன நினைப்பார்கள் என்றெல்லாம் அவனுக்கு கவலை இல்லை .. ஒரு வேளை இப்படிதான் வாழ்கையை வாழணுமோ நாமதான் பணம் மானம் மதிப்பு மரியாதைனு எதை எதையோ உருவாக்கி அதை தேடி அலையறோமோ என்று தோணியது .. பஸ் வந்தது அதில் நானும் அந்த வயதானவரும் வேறு சிலரும் ஏறினோம் .. கண்டக்டரிடம் 50rs பாஸ் என்றேன் என்னோட முகத்தை பாத்தா அவருக்கு நம்பிக்கை வரவில்லை போல எடுத்து காட்ட சொன்னார் நானும் எடுத்து காட்டினேன் பார்த்து விட்டு என்னிடம் திருப்பி குடுத்தார் .. அந்த வயதானவர் டிக்கெட் விலை ஏற்றதை பற்றி பேச ஆரம்பித்து உலக பொருளாதாரத்தையும் ஒபாமாவையும் பிரித்து மேய்ந்து கொண்டிருந்தார் .. இந்த பேச்சு சுதந்திரம் மட்டும் இல்லை என்றால் தமிழ் நாட்டில் பஸ் பயணம் செய்பவர்கள் என்ன செய்வார்களோ என்று தோன்றியது .. இந்த வயதானவர் அப்படி இந்த உலகுக்கு வந்து என்ன சாதித்து விட்டார் என்று எனக்கு புரியவில்லை ,ஏதாவது bankilo government officelo வேலை செய்திருப்பார் retire ஆனதும் தன்னுடைய பேரன்களையும் பேத்திகளையும் ஸ்கூலுக்கு கூட்டிட்டு போயிட்டு வந்துகிட்டு இருப்பாரு .. அவர் அப்படி என்ன பெரிய வாழ்கையை வாழ்ந்து விட்டார் ,தன்னால் முடிந்த அளவுக்கு தன்னுடைய குடும்பத்துக்கு சொத்து சேர்த்து வைத்திருப்பார் அவ்வளவுதான் ,அங்கு தூங்கி கொண்டிருந்தவன் வாழ்கையை விமர்சிக்க இவர் யார் .. ஒரு வேளை அவன் வாழும் அந்த சந்தோஷமான வாழ்கையை இவரால் வாழ முடியலேன்ற கடுப்புலதான் பேசுறார்னு தோணுச்சு .. இறங்க வேண்டிய ஸ்டாப் வந்தது .. இறங்கி நடந்தேன் ..

ஒரு வீட்டில் சென்று calling bell ஐ அழுத்தினேன் கதவை திறந்த அடுத்த நொடி , நான் ஏற்கனவே மனப்பாடம் செய்து வைத்திருந்ததை ஒப்பிக்க தொடங்கினேன் .. ஆனால் நான் சொல்ல ஆரம்பித்த அடுத்த நொடி படார் என்று கதவை சாத்தி தாப்பாளை போட்டார் ஒரு குடும்ப தலைவி .. பழகிய ஒன்றுதான் .. அடுத்து ஒரு வீட்டில் ஒரு 20 வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞன் கதவை திறந்தார் .. நான் சொல்ல ஆரம்பித்தேன் அவர் இல்ல சார் வாங்குற மாதிரி ஐடியா இல்ல சாரினு சொன்னார் .. அட்லீஸ்ட் டெமோயாச்சு பார்க்கிறீங்களானு கேட்டேன் .. வாங்குற மாதிரி இருந்தா பாக்கலாம் இல்லாட்டி எதுக்கு சார் உங்களுக்கும் time waste எனக்கும் time waste சாரி சார் என்று சொல்லி விட்டு கதவை சாத்தினார் .. நம்மளை மனிதனாக மதிக்கிற சில மனிதர்களும் இருக்கிறார்கள் என்ற நிம்மதியுடன் வெளியே வந்தேன் .. அடுத்து ஒரு வீட்டின் கேட்டில் "sales man not allowed" ஒரு போர்டு போட்டிருந்தனர் அதற்கு கீழ "நாய்கள் ஜாக்கிரதை” னு இன்னொரு போர்டும் வச்சிருந்தாங்க .. இப்பலாம் salesman வந்தா தொரத்துறதுக்காகவே நாய்கள் ஜாக்கிரதைனு ஒரு போர்டு வச்சிடறாங்க .. அடுத்த சில வீடுகளுக்கு சென்று பார்த்தேன் ஆனால் எனக்கு சாதகமாக எதுவும் நடக்கவில்லை .. கடைசியாக இந்த வீட்டை பார்த்து விட்டு சாப்பிட செல்லலாம் என்று முடிவு செய்து விட்டு அந்த வீட்டின் calling bellai அமுக்கினேன் .. ஒரு 10 வயது மதிக்கத்தக்க சின்ன பையன் கதவை திறந்தான் .. வீட்ல வேற யாரும் பெரியவங்க இல்லையான்னு ? கேட்டேன் , அதற்குள் உள்ளே இருந்து யாருடா வினோத் என்று ஒரு குரல் கேட்டது .. Salesman mummy.. அதெல்லாம் ஒன்னும் வேணாம்னு சொல்லிடு கதவ மூடிட்டு வா என்று அவனுடைய அம்மா கூறினாள் .. அவன் எதுவும் சொல்லாமல் கதவை மூட வந்தான் ..
கொஞ்சம் தண்ணி தர்றியாப்பா? என்று கேட்டேன் .. ஹ்ம்ம் என்று சொல்லி விட்டு உள்ளே சென்றான் .. அவனுடைய அம்மா வெளியே வந்ததும் நாந்தான் எதுவும் வேணாம்னு சொன்னேனே ஒன்னும் வேணாம் போங்க என்று கூறினாள் அதற்குள் அந்த சிறுவன் தண்ணீர் எடுத்து கொண்டு ரூமை விட்டு வெளிய வந்தான் . இல்ல தண்ணி கேட்டேன் அதான் என்றேன் .. அதெல்லாம் ஒன்னும் இல்ல போங்க என்று கதவை இழுத்து சாத்தினார் .. அந்த கதவையே சிறிது நேரம் பார்த்து கொண்டு நின்றேன் பிறகு கொஞ்சமும் சொரணை இல்லாமல் நடக்க தொடங்கினேன் .. அந்த சிறுவனை அவனுடைய அம்மா இப்படிதான் கதவ திறந்து வச்சிட்டு போவியா , பாக்குறதுக்கு கரு கருன்னு திருடன் மாதிரியே இருக்கான் , உள்ள வந்து ஏதாவது திருடிட்டு போனா என்ன பண்ணுவ , இனிமே யாராச்சு salesman வந்தா உடனே கதவ சாத்திட்டு வரணும் புரியுதா என்று கத்தினாள் .. கருப்பா இருப்பதற்காக முதல் முறையாக வருத்தப் பட்டேன் .. திருடன்லாம் கருப்பாதான் இருப்பாங்களா இல்ல கருப்பா இருக்கறவங்க எல்லாம் திருடனா .. தவிச்ச வாய்க்கு தண்ணி குடுக்க கூட இந்த நாட்டுல யாருக்கும் மனசில்ல .. இதுல பக்கத்துக்கு ஸ்டேட்காரன் தண்ணி குடுப்பானு மட்டும் எப்படி எதிர் பார்க்கிறாங்க .. அந்த திருடன்ற வார்த்தை எனக்கு ரொம்பவே வலித்தது .. பக்கத்தில் இருந்த பார்க்கில் உட்காந்து காலையில் மெஸ்ஸில் வாங்கிய லெமன் சாதத்தை எடுத்து சாப்பிட தொடங்கினேன் .. பார்க்கில் ஒரு காதல் ஜோடி உட்காந்து பேசி கொண்டிருந்தனர் .. ஊஞ்சலில் ஒரு சின்ன குழந்தையை அவளுடைய அம்மா உட்கார வைத்து தள்ளி கொண்டிருந்தாள் .. என்னால் மற்ற எண்ணங்களில் மனதை செலுத்த முடியவில்லை .. அந்த சிறுவனின் தாய் சொன்ன வார்த்தைகள் என் மனதுக்குள் இருந்து குத்திக்கொண்டே இருந்தது , அந்த சம்பவத்தை என்னால் மறக்கவே முடியவில்லை ..

அப்பொழுது என்னுடைய போன் ringtone அடித்தது என்னோட அம்மாதான் போன் பண்ணி இருந்தாங்க .. நேத்து nightu தானே போன் பண்ணிருந்தேன் என்னாச்சு இப்ப போன் பண்ணி இருக்காங்க என்று யோசித்து கொண்டே போனை attend செய்தேன் .. என்னப்பா சாப்டியா ? ஹ்ம்ம் இப்பதான் என்னாச்சு எதாச்சு பிரச்சனையாம்மா இந்த timela போன் பண்ணியிருக்க .. ரெண்டு நாளா அந்த karuppu மாடு கத்திகிட்டே இருக்குப்பா .. எந்த மருந்தும் வேலை செய்யல .. Townuku போய் scan பண்ணி பார்க்க சொல்லிட்டாங்கப்பா .. ஒரு 1000 ரூபாய் உன்னோட officela கேட்டு பாரேன் .. 1000 ரூபாயெல்லாம் முடியவே முடியாது .. அந்த மேனேஜர் என்னை எப்ப வெளிய அனுப்பலாம்னு பார்த்து கிட்டு இருக்காரு அதெல்லாம் முடியாதும்மா பேசாம வித்துரு .. இல்லப்பா இப்ப வித்தா அடிமாடு விலைக்கு கேப்பாங்க அதோட பசுவை விக்கறது குடும்பத்துக்கு நல்லதில்லப்பா எங்கயாச்சு கடன் கேட்டு பாரேன் ?.. நீ வேற கடுப்பேத்தாதம்மா எவன் இங்க என்னோட மூஞ்சிக்கு கடன் குடுக்குறான் .. போற வரவனெல்லாம் என்னை திருடன் மாதிரி பாக்குறான் நீ வேற என்ன சாவடிக்காத, மாட்ட வித்துரு ஒன்னும் பண்ண முடியாது .. என்று கோபமாக பேசினேன் .. சரி விடுப்பா வித்துடுறேன் அப்பறம் nightu போன் பண்ணு என்று சொல்லி விட்டு போன் வச்சிட்டாங்க .. மற்றவர்கள் மேல் இருந்த கோபத்தை என் அம்மாவின் மேல் காட்டினேன் .. அங்கிருந்த காதல் ஜோடியும் , ஊஞ்சலில் அமர்ந்திருந்த குழந்தையின் அம்மாவும் என்னையே பார்த்து கொண்டிருந்தனர் .. எவ்வளவு கோவம் இருந்தாலும் ஏழையோ middle classo அந்த கோவத்தை சாப்பாட்டுல காட்ட முடியாது ஏன்னா அவங்க கோவமே அந்த சாப்பாட்ட சம்பாதிக்கதான் .. சாப்பிட பிடிக்காட்டியும் அந்த லெமன் சாதத்தை தொடர்ந்து சாப்பிட்டேன் .. அந்த பார்க்கோட watchman என்னை பார்த்துகிட்டே என் கிட்ட வந்தார் ..
யாருப்பா நீ இங்கலாம் சாப்ட கூடாது கிளம்பு என்று சொன்னார் .. சே மனுஷன் உட்கார்ந்து சாப்பிட கூட இந்த உலகத்துல பணம் குடுக்கணுமானு தோணுச்சு .. அவருடன் சண்டை போடும் நிலைமையில் நானில்லை .. நான் பாதி சாப்பிட்ட அந்த லெமன் சாத பொட்டலத்தை மடிக்க தொடங்கினேன் ..அவர் என்னையே பார்த்து கொண்டு நின்றார் .. சரி பாதி சாப்பாட்டை மூடாத சாப்டுட்டு போப்பா .. ஆனா இனிமேல இங்க உட்காந்து சாப்டாதப்பா என்று சொல்லி விட்டு நகர்ந்தார் .. இன்னமும் சிலருக்கு கொஞ்சம் மனிதாபிமானம் மிச்சம் இருப்பதை நினைக்கும்போது சந்தோஷமாக இருந்தது ,.அந்த லெமன் சாதத்தை பிரித்து சாப்பிட தொடங்கினேன் . அந்த குழந்தை சந்தோஷமாக ஊஞ்சலில் விளையாடியதை பார்த்து கொண்டிருந்தேன் .. ஒருவர் t -shirtum வெள்ளை வேஷ்டியும் அணிந்து கையில் cell போனை வைத்து கொண்டு , என்னை முறைத்து பார்த்த படி கடந்து சென்றார் .. அங்கு நின்று கொண்டிருந்த watch man ஐ திட்ட தொடங்கினார் .. உங்களுக்கு எத்தன வாட்டி சொல்றது பார்க்ல சேல்ஸ்மேனெல்லாம் சாப்ட allow பண்ண கூடாதுன்னு .. இல்ல சார் நாளைல இருந்து சாப்ட கூடாதுன்னு சொல்லிட்டேன் சார் என்றார் .. போன மாசம் இப்டிதான் ரெண்டு பேரு உட்காந்திருந்து ஒரு பொண்ணோட செய்னை அத்துட்டு போய்ட்டானுங்க .. மறுபடியும் அந்த மாதிரி ஆச்சுனா யார் பதில் சொல்றது .. இது என்ன government பார்க் ஆ, இங்க வர்றவங்க தர்ற காசுலதான் இத maintain பண்ணிட்டு , உங்களுக்கும் சம்பளம் தந்துக்கிட்டு இருக்கோம் .. போங்க போய் அங்க இருந்து கிளம்ப சொல்லுங்க என்று கத்தினான் .. அந்த watch man என்னை நோக்கி நடந்து வந்தார் .. நான் அந்த லெமன் சாதத்தை பக்கத்தில் வைத்திருந்த குப்பை தொட்டியில் போட்டேன் .. அந்த watch man எதுவும் பேசாமல் என்னை பார்த்தார் ..
சாரிண்ணா என்னால பாவம் உங்களுக்குதான் பிரச்சன இனிமேல் வரமாட்டேண்ணா சாரி என்று சொல்லி விட்டு bagai எடுத்து கொண்டு அங்கிருந்து கிளம்பினேன் .. என்னோட மூஞ்சில திருடன்னு எழுதி இருக்கானு எனக்கே சந்தேகம் வந்திடுச்சு .. அடுத்து ஒரு வீட்டின் கதவை தட்டினேன் என்னை பார்த்ததும் இல்லை வேண்டாம் என்று மூடினர் , மத்தியான நேரத்துல தூங்க விடாம இந்த சேல்ஸ்மேனுங்க வேற சாகடிக்கிறானுங்க என்று குரல் கேட்டது .. அதற்கு நான் சிரிப்பதா அழுவதா என்று எனக்கு புரியவில்லை .. அந்த வீட்டை விட்டு வெளியே வந்தேன் .. என்னுடைய போன் ringtone ஒலித்தது என்னோட manager தான் பண்ணி இருந்தார் .. அவர் என்ன சொல்ல போறாருன்னு எனக்கு தெரியும் இருந்தாலும் அத attend பண்ணி அவர் வாயால கேட்டுதான் ஆகணும் வேற வழி இல்ல .. Attend செய்தவுடன் target reach பண்ணிட்டியானு கேட்டார் .. பண்ணிடுவேன் சார் .. அப்ப இன்னும் reach ஆகல மறுபடியும் சொல்றேன் target reach பண்ணலேனா அப்பறம் என்னை குறை சொல்லி ஒரு பிரயோஜனமும் இல்ல பாத்துக்க என்று சொல்லி விட்டு கட் செய்தார் .. சே இதெல்லாம் ஒரு பொளப்பானு தோணுச்சு calling bella அடிச்சா அவனுங்க திட்றானுங்க target reach பண்ணலேன்னா இவர் வேலைய விட்டு தூக்கிருவேணு மிரட்டறாரு . இப்ப விக்கிற விலை வாசிக்கு வேலை மட்டும் போயிடுச்சுன்னா என்ன பண்ணுவேன்னு எனக்கு புரியல . அடுத்து ஒரு வீட்டுல கதவு தறந்தே இருந்துச்சு . Excuse me sir madam nu கூப்பிட்டு பாத்தேன் பிச்சக்காரன் தமிழா கூப்பிடுவான்? நா இங்கிலீஷ்ல கூப்பிடறேன் அதான் வித்தியாசம்னு தோணுச்சு , ஆனா உள்ள இருந்து எந்த சத்தமும் வரல . அங்க இருந்த டேபிள்ல ஒரு பர்ஸ் இருந்துச்சு . மறுபடியும் கூப்பிட்டு பாத்தேன் ஆனா உள்ள இருந்து எந்த சத்தமும் வரல .. மனசுக்குள்ள ஒரு வித மாற்றம் அந்த பர்ஸ திருடிடலாம்னு தோணுச்சு .
இப்ப நா ஒழுங்கா இருக்கும்போதும் இந்த உலகம் என்ன திருடன் மாதிரிதான் பாக்குது அதுக்கு தப்பு செஞ்சுட்டு அந்த பேரை வாங்கிக்கலாமேன்னு தோனுச்சு .. இதய துடிப்பு அதிகரித்தது வெளியே அக்கம் பக்கத்தில் எந்த மனித நடமாட்டமும் இல்லை .. மறுபடியும் sir madamnu ஒரு வாட்டி கூப்பிட்டு பாத்தேன் எந்த பதிலும் வரல துணிஞ்சு எடுத்திடலாம்னு நெனைக்கும்போது திடீரென்று நாய்கள் குறைக்கும் சத்தம் கேட்டதும் அதிர்ச்சியில் ரோட்டை நோக்கி ஓடினேன் அங்கு நாய்கள் கூட்டமாக குரைத்துக் கொண்டே ஓடியது . . பக்கத்தில் குப்பை மேட்டில் குப்பை பொறுக்குபவரை பார்த்து நாய்கள் குறைத்தன .. அவர் தான் கையில் வைத்திருந்த குச்சியில் அவற்றை துரத்தியபடி வேகமாக நடந்தார் அப்பொழுது கால் தடுக்கி அந்த குப்பை பொறுக்குபவர் கீழே விழுந்தார் .. அவர் கோணியிலிருந்து குப்பைகள் ரோட்டில் விழுந்தன. நாய்கள் அவரை சுற்றி நின்று குரைத்தன.. கையில் இருந்த குச்சியால் அவற்றை விரட்டினார் .. வயது 60 இருக்கும் அவரால் எழுந்திருக்க முடியவில்லை .. நான் பார்ப்பதை கவனித்த அவர் என்னுடைய உதவி வேண்டும் என்று என்னிடம் சொல்ல முடியாமல் என்னை பார்த்து கொண்டே இருந்தார் .. அவர் பக்கத்தில் சென்று அவரை தூக்கி விட்டேன் .. காலில் சிராய்ப்பு ஏற்பட்டு ரத்தம் வந்தது .. அவருக்கு thanks என்று சொல்லி பழக்கமில்லை போல என்னை பார்த்து சிரித்து விட்டு தான் எப்படி விழுந்தேன் என்று விவரிக்க தொடங்கினார். அவர் பேசிக்கொண்டே அங்கு கீழே விழுந்த குப்பைகளை எடுத்து கோணியில் போட்டு கொண்டு பேசி கொண்டே வந்தார் .. மனுஷங்கதான் எங்கள கேவலமா பார்க்கறாங்கன்னா இந்த நாய்ங்களுக்கு நாங்க என்ன பாவம் பண்ணோம்னு தெரியல .. நாங்க என்ன திருடங்களா இந்த நாய்ங்களுக்கு எங்கள பாத்தா என்ன தோணுதுன்னு புரியல ..
அப்பிடி திருடி வாழணும்னு நெனச்சா நாங்க ஏன் இந்த வெயில்ல அதுவும் குப்ப பொறுக்க போறோம் .. என்னமோ தினமும் இந்த நாய்ங்க கூட பொழப்பு நடத்திதான் வாழ வேண்டி இருக்கு என்று சொல்லி விட்டு தனக்கு தானே ஏதோ புலம்பி கொண்டே பக்கத்திலிருந்த குப்பை தொட்டியில் குப்பை தேட ஆரம்பித்தார் .. அவரையே சில வினாடிகள் பார்த்து கொண்டிருந்தேன் .. ஒரு நிமிடத்தில் திருடனாகவே மாற இருந்தோமே எவ்வளவு பெரிய தப்பு செய்திருப்போம் என்று உறுத்தியது .. அடுத்த தெருவுக்கு நடக்க தொடங்கினேன் .. 60௦ வயதில் அவரே இவ்வளவு கஷ்ட பட்டு உழைச்சு சாப்பிடணும்னு நினைக்கும்போது எனக்கு ஏன் புத்தி இப்படி போச்சு அந்த குப்பை பொறுக்குபவர் சொல்வதை கேட்டதும் மனசுக்குள் இருந்த வருத்தங்களும் கெட்ட எண்ணங்களும் மறைந்தது .. புத்துணர்ச்சியுடன் ஒவ்வொரு வீடாக ஏறி இறங்கினேன் 6 மணியளவில் taargetaiyum தாண்டி ஒரு item எக்ஸ்ட்ராவாகவே விற்றேன் .. பஸ்ஸை பிடித்து மறுபடியும் officeku சென்றேன் .. ஒரு item எக்ஸ்ட்ராவாகவே வித்தேன்னு சொன்னதும் , எனக்கு அப்பவே தெரியும்பா அதனாலதான் உங்கிட்ட இந்த வேலைய குடுத்தேன் என்று சொல்லி தோள்மேல் கை போட்டு வா canteenla போய் ஒரு டீ சாப்பிட்டு வருவோம் என்று கூட்டி சென்றார் .. டீ சாப்பிட்டு கொண்டிருக்கும்போது ஒரு 1000 அட்வான்ஸ் வேணும் சார் ஊர்ல ஏதோ பிரச்சன அம்மா போன் பண்ணாங்க என்று சொன்னேன் .. கொஞ்ச நேரம் யோசித்து விட்டு சரி அக்கவுண்டன்ட் கிட்ட வாங்கிட்டு போ என்றார் .. Thanks sir, என்று சொல்லி விட்டு 1000 ருபாய் வாங்கி கொண்டு ஆபீசை விட்டு வெளியே வந்தேன் .. அம்மாவுக்கு போன் செய்து மாட்டை விக்க வேணாம் நா பணத்தை money orderla அனுப்பி வைக்கிறேன் என்று சொன்னேன் .. பஸ் ஸ்டாப்பை வந்து அடைந்தேன் மணி 7 ஆகி இருந்தது .. பஸ் பிடித்து beachuku சென்றேன் .. கடலை பார்த்த படி அங்கு சந்தோஷமாக விளையாடி கொண்டிருந்தவர்களை பொறாமையுடன் பார்த்து கொண்டிருந்தேன் ..

மணி 8 ஆனதும் அங்கிருந்து எழுந்து நடந்தேன் .. Beachin ஒரு ஓரத்தில் சிறிய கூட்டம் நின்று கொண்டிருந்தது .. அருகில் சென்று பார்த்த போது அங்கு ஒருவன் குடி போதையில் படுத்திருந்தான் அவனை அவனுடைய மனைவியும் குழந்தைகளும் அழுது கொண்டே கஷ்டப்பட்டு தூக்கி கொண்டிருந்தனர் .. பாவம் அந்த சிறு குழந்தைகள் ஓடி கடலில் விளையாட வேண்டிய நேரத்தில் தன்னுடைய குடிகார தந்தையை தூக்கி கொண்டிருந்தனர் .. பிறகு மற்றவர்கள் உதவியில் ஆட்டோவில் ஏறி அந்த குடும்பம் சென்றது .. காலையில் பஸ் ஸ்டாப்பில் குடித்து விட்டு படுத்திருந்தவனை பார்த்த போது உலகிலேயே அவன்தான் சந்தோஷமானவன் என தோன்றியது ஆனால் இப்போலோது அவனை விட இந்த உலகத்தில் ஒரு கேவலமானவன் இருக்க முடியாது என தோன்றியது .. கல்யாணம் பண்ணிட்டு குழந்தையும் பெத்துகிட்டு நமக்கேன்னு குடிச்சுட்டு படுத்திருப்பவனை நிக்கவச்சு செருப்பால அடிக்கணும்னு தோணுச்சு .. அங்கிருந்த ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு பஸ்சில் ரூமுக்கு சென்று படுத்தேன் .. காலை முதல் இரவு வரை நடந்ததை நினைத்து பார்க்க தொடங்கினேன் ஆனால் பாதியிலே தூங்கிவிட்டேன் ... அடுத்தநாள் 5 மணிக்கு மறுபடியும் அலாரம் ஒலித்தது "வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலருதே ......... .... .....
-கிஷோர் குமார்
avatar
kishore1490
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 32
Points : 71
Join date : 28/11/2011
Age : 27
Location : ambathur

Back to top Go down

Re: “ஒரு நாளில் வாழ்க்கை இங்கு எங்கும் ஓடி போகாது ”

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Tue Dec 13, 2011 4:51 pm

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: “ஒரு நாளில் வாழ்க்கை இங்கு எங்கும் ஓடி போகாது ”

Post by தங்கை கலை on Tue Dec 13, 2011 4:54 pm

:héhé: :héhé:
avatar
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 18
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

Re: “ஒரு நாளில் வாழ்க்கை இங்கு எங்கும் ஓடி போகாது ”

Post by muthuselvi on Tue Dec 13, 2011 5:09 pm

அருமை ... :héhé:
avatar
muthuselvi
மல்லிகை
மல்லிகை

Posts : 139
Points : 163
Join date : 03/10/2011
Location : மும்பை

Back to top Go down

Re: “ஒரு நாளில் வாழ்க்கை இங்கு எங்கும் ஓடி போகாது ”

Post by thaliranna on Tue Dec 13, 2011 6:52 pm

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 42
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

Re: “ஒரு நாளில் வாழ்க்கை இங்கு எங்கும் ஓடி போகாது ”

Post by kishore1490 on Tue Dec 13, 2011 7:16 pm

நன்றி
avatar
kishore1490
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 32
Points : 71
Join date : 28/11/2011
Age : 27
Location : ambathur

Back to top Go down

Re: “ஒரு நாளில் வாழ்க்கை இங்கு எங்கும் ஓடி போகாது ”

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Dec 13, 2011 7:28 pm

...மணி 8 ஆனதும் அங்கிருந்து எழுந்து நடந்தேன் .. Beachin ஒரு ஓரத்தில் சிறிய கூட்டம் நின்று கொண்டிருந்தது .. அருகில் சென்று பார்த்த போது அங்கு ஒருவன் குடி போதையில் படுத்திருந்தான் அவனை அவனுடைய மனைவியும் குழந்தைகளும் அழுது கொண்டே கஷ்டப்பட்டு தூக்கி கொண்டிருந்தனர் .. பாவம் அந்த சிறு குழந்தைகள் ஓடி கடலில் விளையாட வேண்டிய நேரத்தில் தன்னுடைய குடிகார தந்தையை தூக்கி கொண்டிருந்தனர் ...

- மனம் கனக்க செய்கிறது...

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: “ஒரு நாளில் வாழ்க்கை இங்கு எங்கும் ஓடி போகாது ”

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum