"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» சினிமா செய்திகள் - 5
by அ.இராமநாதன் Today at 10:19 am

» சினிமா செய்திகள் - 4
by அ.இராமநாதன் Today at 10:15 am

» சினிமா செய்திகள் - 3
by அ.இராமநாதன் Today at 10:13 am

» சினிமா செய்திகள் - 2
by அ.இராமநாதன் Today at 10:12 am

» சினிமா செய்திகள் - 1
by அ.இராமநாதன் Today at 10:11 am

» தொழிலாளர் தினக் கவிதை
by கவிப்புயல் இனியவன் Today at 9:12 am

» அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட தேர்தல் ஆணையம் முடிவு
by அ.இராமநாதன் Today at 8:59 am

» பழைய ரூபாய் நோட்டுகளில் என்ன உருவாக்கலாம்? வருகிறது போட்டி
by அ.இராமநாதன் Today at 8:48 am

» உன் மீது நம்பிக்கை வை...!
by அ.இராமநாதன் Today at 7:04 am

» கனடா நாட்டில் வீரதீரச்செயல்களில் ஈடுபட்ட பெண் கைது
by அ.இராமநாதன் Yesterday at 10:26 pm

» ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய இந்திய பளுதூக்கும் வீராங்கனை சுஷிலா சஸ்பெண்ட்
by அ.இராமநாதன் Yesterday at 10:22 pm

» உங்களூக்குத் தெரியுமா...? -
by அ.இராமநாதன் Yesterday at 10:13 pm

» படிக்காத மேதை - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 10:11 pm

» கண்ணாடி உடைந்தால் அபசகுனமா..?
by அ.இராமநாதன் Yesterday at 10:09 pm

» - 16 ஆண்டுகள் கழித்து விருது விழாவில் கலந்து கொண்ட அமீர் கான்
by அ.இராமநாதன் Yesterday at 8:40 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Yesterday at 8:34 pm

» தலா, ஐந்து கோடி ரூபாய்!
by அ.இராமநாதன் Yesterday at 8:25 pm

» சம்பளத்தை உயர்த்திய கீர்த்தி சுரேஷ்!
by அ.இராமநாதன் Yesterday at 8:24 pm

» ராகுல் ப்ரீத்சிங்கின் எதிர்கால திட்டம்!
by அ.இராமநாதன் Yesterday at 8:24 pm

» விஜய் நடிக்கும் புதிய படம்..
by அ.இராமநாதன் Yesterday at 8:19 pm

» உன்னத உழைப்பாளர்கள்
by அ.இராமநாதன் Yesterday at 8:12 pm

» அக்னி நட்சத்திரம்!
by அ.இராமநாதன் Yesterday at 8:05 pm

» அக்னி நட்சத்திரம் குறித்த ஒரு புராணக் கதை
by அ.இராமநாதன் Yesterday at 8:04 pm

» களைகட்டிய அட்ஷய திருதியை ரூ.1,275 கோடிக்கு தங்கம் விற்பனை
by அ.இராமநாதன் Yesterday at 7:57 pm

» இனி பெட்ரோல், டீசலுக்கு வேலையில்லை
by அ.இராமநாதன் Yesterday at 7:53 pm

» மனிதர்களின் மொழியை புரிந்து கொள்ளும் நாய்கள்...
by அ.இராமநாதன் Yesterday at 11:47 am

» சாக்லெட் மூலம் கொழுப்பு...?
by அ.இராமநாதன் Yesterday at 11:09 am

» கடலுக்கு அடியில் கண்டம்...!
by அ.இராமநாதன் Yesterday at 11:06 am

» பிறந்த நாளின்போது, ‘ஹேப்பி பர்த்டே டூ யூ’
by அ.இராமநாதன் Yesterday at 11:05 am

» 6 வித்தியாசம்...!
by அ.இராமநாதன் Yesterday at 11:01 am

» மூளைக்கு வேலை...
by அ.இராமநாதன் Yesterday at 10:59 am

» சுடோகு...
by அ.இராமநாதன் Yesterday at 10:57 am

» சீப்புக்கும் வாழைப்பழத் தோலுக்கும் உள்ள ஒற்றுமை என்ன?!
by அ.இராமநாதன் Yesterday at 10:55 am

» நீரே காலில் விழுந்தால்...
by அ.இராமநாதன் Yesterday at 10:45 am

» மே 30- முதல் படப்பிடிப்புகள் ரத்து; தியேட்டர்கள் மூடப்படும் : நடிகர் விஷால் அறிவிப்பு
by அ.இராமநாதன் Sat Apr 29, 2017 9:30 pm

» சீனாவின் புதிய விமானம் தாங்கிக் கப்பல்
by அ.இராமநாதன் Sat Apr 29, 2017 9:29 pm

» ஜேஇஇ தேர்வில் முதல்முறையாக 100% பெற்று ஜெய்ப்பூர் மாணவர் சாதனை
by அ.இராமநாதன் Sat Apr 29, 2017 9:27 pm

» ரசிகர்களின் மனசில் நிற்கவேண்டும். – சுஜா வரூணி
by அ.இராமநாதன் Sat Apr 29, 2017 9:25 pm

» தணிக்கையில் 'யு' சான்றிதழ்: மே 5-ல் வெளியாகிறது 'தொண்டன்'
by அ.இராமநாதன் Sat Apr 29, 2017 9:24 pm

» பிரபுதேவா - ஹன்சிகா இணையும் 'குலேபாகவாலி'
by அ.இராமநாதன் Sat Apr 29, 2017 9:22 pm

» மலேசியா சென்றுள்ள ‘வேலைக்காரன்’ படக்குழு
by அ.இராமநாதன் Sat Apr 29, 2017 9:21 pm

» காதல் சோகத்திலும் சுகம் தரும்
by கவிப்புயல் இனியவன் Sat Apr 29, 2017 3:15 pm

» திருச்சியில் டாஸ்மாக் அதிகாரிகளை மாட்டுச் சாணம், துடைப்பம் கொண்டு வரவேற்ற பெண்கள்...!
by அ.இராமநாதன் Sat Apr 29, 2017 11:19 am

» கோடைவிடுமுறையில் சிறப்பு நீதிமன்றம்: லீவு எடுக்காமல் பணிக்கு வரும் நீதிபதிகள்
by அ.இராமநாதன் Sat Apr 29, 2017 11:18 am

» பிஎஸ்-3 வாகனங்கள் தடை செய்யப்பட்ட விவகாரத்தில், போக்குவரத்துத் துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
by அ.இராமநாதன் Sat Apr 29, 2017 11:17 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



வளர்பிறை , நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி

View previous topic View next topic Go down

வளர்பிறை , நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி

Post by eraeravi on Tue Jun 22, 2010 12:29 pm

வளர்பிறை , நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி


தமிழாக்கம் : கவிஞர் இளவல் ஹரிஹரன் எம்.காம்.பி.எல்
அட்டைப்படத்தில் உள்ள மெல்லிய கோடுகளே நம் கண்முன் கவிக்கடல் இரவீந்திரநாத் தாகூரை கொண்டு வந்து விடுகின்றது. நூலின் பெயர் தான் வளர்பிறை. ஆனால் முழு நிலவாக கவிதை விருந்து வைத்துள்ளார்.தமிழாக்கம் செய்த கவிஞர் இளவல் ஹரிஹரன் இவர் பரப்பரப்பான பத்திரத் துறையில் பதிவாளராக பணிபுரிந்து கொண்டே கவிதைகள் பல எழுதி, பாரதிதாசன் விருது உள்பட பல பரிசுகள் பெற்றவர். பழகுவதற்கு இனிமையானவர் முதன் முதலில், �வெளிச்சத்தை வெளிக் கொணருவோம்� என்ற தொகுப்பு நூலின் மூலம், நான் உள்பட பல கவிஞர்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்த கவிஞர். சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரைக்காரர்.

மகாகவி பாரதியின் கூற்றை மெய்பிக்கும் வண்ணம் பிறமொழி இலக்கியங்களை மொழிபெயர்த்து தமிழுக்கு கொண்டு வந்து சேர்க்கும் முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார். நோபல் பரிசு பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த வங்கக்கவி இரவீந்திரநாத் தாகூரின்,காலத்தால் அழியாத கல்வெட்டுக் கவிதைகளை அழகு தமிழில் மொழிபெயர்த்து தமிழன்னைக்கு புதிய அணிகலன் பூட்டி உள்ளார். வளர்பிறை உரையையே கவிதையாக வடித்துள்ளார்.

இருபதாம் நூற்றாண்டு உலக இலக்கிய வரைபடத்தில் இந்தியாவை முன்னிறுத்திய இந்தியக் கவிஞர், தம் இலக்கியத்திற்காக இணையற்ற பரிசு பெற்ற இதயம் பரந்த கவிஞர் இரவீந்திரநாத் தாகூர்.

இப்படித் தொடங்கி மொழி பெயர்த்து சுந்தரத் தமிழில் இலக்கியச் சுவையோடு தருகின்றார்.நூல் ஆசிரியர் மரபுக் கவிஞர் என்பதால் கவித்துவம் குன்றாமல் நுட்பமாக எழுதி உள்ளார்.

40 தலைப்புகளில் கவிதை உள்ளது. சங்க இலக்கியத்தில் வரும் இனியவை நாற்பது,இன்னா நாற்பது போல இனிக்கின்றது. எளிமையாக உள்ளது. எல்லோருக்கும் புதிய வண்ணம் உள்ளது. புரியாத கவிதை எழுதவில்லை,அதற்காக பாராட்டுக்கள்.

மாலை விளக்குகளுடன்
தாயின் இதயத்துடன்
தொட்டிலும் படுக்கையும்
அமைக்கப் பெற்ற
கணக்கற்ற வீடுகள்
தன் கரங்களுக்குள் சூழ்

இவ்வடர்த்தியான இருண்ட பூமி என்முன் பிரிந்து கிடப்பதைப் பார்த்தேன் நான்.

பூமியின் மீது அமைந்துள்ள வீடுகளை நம் கண்முன் காட்சிப்படுத்தி விடுகின்றார். குழந்தைகளை மிகவும் நேசிப்பவர் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர்.குழந்தைகளின் மனம் புரிந்தால் தான் கவிதை இனிக்கும். குழந்தைகளின் கள்ளங்கபடமற்ற உரையாடலை, விளையாட்டை படம் பிடித்து காட்டுகின்றார். குழந்தையின் தூக்கம் கெடுத்து விட்டால்,தாய் சினம் கொள்வாள்.அதனை உணர்த்தும் கவிதை வரிகள் இதோ!

குழந்தையின் கண்களிலிருந்து
தூக்கத்தை திருடியது யார்
எனக்குத் தெரிய வேண்டும்
கண்டுபிடித்து அவனைக்
கை விலங்கிட வேண்டும்.

தாய்,சேயை பாசத்தோடு முத்தமிடும் காட்சியையும்,அதன் பயனையும் விளக்கிடும் வைர வரிகள்.

நீ புன்னகைப்பதற்காக நான் உன் முகத்தை
முத்தமிடும் பொழுது என் அன்பே காலையிளங் கதிரொளியில்
வானிருந்து எத்தனை இன்ப ஊற்றுக்குள்
பெருக்கெடுத்தோடுகின்றன எனப் புரிந்து கொள்கிறேன்.

குழந்தையின் சிறப்பு, ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் பாடியதை வழிமொழிவது போல உள்ளது கவிதை வரிகள். என் நினைவிற்கு வந்த திருக்குறள்.

குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச் சொல் கேளாதவர்.

நூலின் பெயர் வளர்பிறை என்பதால் குழந்தைகளைப் பற்றிய கவிதை வளர்ந்து கொண்டே செல்கின்றது.குழந்தை அறியாமல் சிறு தவறு செய்து விட்டால், பெரியவர்கள் சினம் கொண்டு உரக்கக் கத்தி கூச்சலிடுவதைக் காண்கிறோம். ஆனால் இரவீந்திரநாத் தாகூர் குழந்தைகளின் மீது பாசமழை பொழிகின்றார்.

எழுதும் பொழுது உன் விரல்களில் மைக்கறை கொண்டு
பூசி விட்டாய் என்பதால் உன்னை அவர்கள்
அழுக்கானவன் என்று அழைக்கிறர்களா?
ஓ�.குழந்தாய் முழு நிலவின் கை முழுதும்
குறை பூசிக் கொண்டதால்
நிலவை அழுக்கெனச் சொல்ல துணிவிருக்கிறதா?அவர்களுக்கு

குழந்தைகளின் சேட்டையை ரசித்து நிலவை ஒப்பிட்டு சமாதானப்படுத்துகின்றார் கவிஞர். குழந்தை மலராக மாறி, தாயை ரசிப்பது போல, கற்பனை செய்து கவிதை வடித்துள்ளார். குழந்தைகளை வீட்டில்,படி!படி!என்று தொல்லை கொடுக்கின்றோம்.ஆனால் இரவீந்திரநாத் தாகூர் என்ன சொல்கிறார் பாருங்கள்.

அம்மா அட்டத்தில் என் புத்தகங்கள் அனைத்தையும்
வைத்து விட்டேன் எனது பாடங்கள் செய்ய
என்னைப் பணிக்காதே இப்போது
என் தந்தையைப் போல வளர்ந்து பெரியவனாகும் போது
கற்க வேண்டிய எல்லாவற்றையும் கற்றுக் கொள்வேன் நான்.

குழந்தைகள் காகிதக் கப்பல் விடுவதைப் பார்த்து இருக்கிறோம்.ஆனால் அதில் தனது பெயரையும்,ஊரையும் பெரிய எழுத்துக்களில் எழுதி, ஓடும் நீரோடையில் விட்டு,குழந்தை ரசிப்பதையும்,அவ்வாறு செல்லும் காகிதக் கப்பலை பார்ப்பவர்கள் என்னையும்,என் ஊரையும் அறிவார்கள் என குழந்தை மகிழ்ச்சி கொள்ளும் விதத்தில் குழந்தையாகவே மாறி கவிதை வடித்துள்ளார். நோபல் நாயகனின் மூலக் கவிதையை,சற்றும் சிதையாமல், சிரத்தையும் செந்தமிழில் கவித்துவம் குறையாமல், இலக்கியச் சுவையுடன்,இளகிய மனதுடன், இனிமையாக வளர்பிறையை மறக்கமுடியாத நினைவுகளாக வடித்து, தமிழில் மொழிபெயர்த்த கவிஞர் இளவல் ஹரிஹான் பாராட்டுக்குரியவர். தமிழர்களும் கவிக்கடல் தாகூரை அறிந்திட வெளிச்சம் போட்டு உள்ளார்.

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2085
Points : 4691
Join date : 18/06/2010

Back to top Go down

Re: வளர்பிறை , நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி

Post by eeranila on Sat Jul 10, 2010 8:08 pm

எத்தகைய கவலைகள் மனதில் இருந்தாலும், குழந்தைகளின் முகத்தை கண்டால் அத்தனை கவலையும் பணி போல் விலகிவிடும் சுயநலம் சிந்திக்காது பனிப்போல் சிரிப்பை உதிர்க்கும் குழந்தை மலர்கள், வருபவர் நமக்கு தீங்கு விளைவிப்பாரா? நன்மையை தருவாரா? என எண்ணாமல் சிரிப்பினை அள்ளி தரும் வல்லல்கள் குழந்தைகள் அல்லவா? எத்தகைய செல்வங்கள் நிறைந்து இருந்தாலும் குழந்தைகள் இல்லா இல்லம் நிறைவு பெற்ற வீடாகுமா? வாழ்த்துக்கள் அரியதோர் பகிர்வு.

eeranila
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 321
Points : 361
Join date : 01/12/2009
Location : Saudi Arabia

Back to top Go down

NANDRI

Post by eraeravi on Sun Jul 11, 2010 12:53 pm

வணக்கம்
மிக்க நன்றி
இரா .இரவி
www.kavimalar.com
http://eraeravi.wordpress.com/ அன்பு முத்தம்

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2085
Points : 4691
Join date : 18/06/2010

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum