"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» புத்தனைத் தேடும் போதி மரங்கள் !! நூல் நூல் ஆசிரியர் : கவிஞர் தமிழ்மொழி ! நூல் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Today at 9:46 pm

» வாட்ஸ் அப் கலக்கல்
by அ.இராமநாதன் Today at 6:52 pm

» காத்து வாயன் கவிதை - கைபேசி யாருககு.,,,
by அ.இராமநாதன் Today at 6:50 pm

» ஒரு பாட்டுக்கு ஆடுனா அவ ஆட்டக்காரி..
by அ.இராமநாதன் Today at 5:35 pm

» கணவனுக்கு குளிர் விட்டுப் போயிடுது…!!
by அ.இராமநாதன் Today at 5:33 pm

» அவ புருசன் தான் என் கனவுல வந்தானே..!
by அ.இராமநாதன் Today at 5:31 pm

» ஒரு ஓட்டுக்கு எவ்வளவு டாலர் வாங்கறீங்க....?
by அ.இராமநாதன் Today at 5:28 pm

» இப்ப புரியுதா யாரு "தைரியசாலி" ன்னு...
by அ.இராமநாதன் Today at 5:27 pm

» மனைவியைத் திட்டிக்கிட்டிருந்தேன்....!!
by அ.இராமநாதன் Today at 5:26 pm

» எந்த அணியில் இருக்கிறோம் என்பதை மறந்துட்டாராம்...!!
by அ.இராமநாதன் Today at 5:24 pm

» தலைவருக்கு எது அலர்ஜி?
by அ.இராமநாதன் Today at 5:23 pm

» பாராளுமன்ற நெறிமுறை குழு தலைவராக அத்வானி மீண்டும் நியமனம்
by அ.இராமநாதன் Today at 5:10 pm

» காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் கால தாமதம் செய்வது மத்திய அரசின் தவறான அணுகுமுறையாகும்-சுப்ரீம் கோர்ட்
by அ.இராமநாதன் Today at 5:09 pm

» தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் சார்பில் ஆஜராகும் மூத்த வழக்கறிஞர்கள் சல்மான் குர்ஷித்- துஷ்யந்த் தவே
by அ.இராமநாதன் Today at 5:09 pm

» 12 பெண்கள் பாலியல் வன்கொடுமை பெற்ற மகனை கூலிப்படை வைத்து கொன்ற தாய்
by அ.இராமநாதன் Today at 5:08 pm

» ஏசுதாஸிற்கு பத்மநாப கோயில் அனுமதி
by அ.இராமநாதன் Today at 5:05 pm

» இம்மாதம் வெளியாகும் ஓவியாவின் புதிய படம்
by அ.இராமநாதன் Yesterday at 10:29 pm

» பூவே இளைய பூவே
by அ.இராமநாதன் Yesterday at 10:25 pm

» மலேசிய ரசிகர்களைச் சந்திக்கிறார் ஓவியா
by அ.இராமநாதன் Yesterday at 10:24 pm

» மதுராவில் ஆதரவற்ற பசுக்களை பராமரிக்கும் ஜெர்மனி பெண்
by அ.இராமநாதன் Yesterday at 10:22 pm

» புன்னகை பக்கம் ...
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 1:15 pm

» நச்சு சோறு ! நூல் ஆசிரியர் : கவிஞர் பவகணேஷ் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 1:14 pm

» ‘ப்ளூ வேல்’ விளையாட்டில் இருந்து பிள்ளைகளை காப்பது எப்படி? - வழிமுறைகளை வெளியிட்டது காவல்துறை
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 1:13 pm

» சுக வாழ்வுக்கு சுலப வழிகள்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 1:12 pm

» மனைவி சாப்பாட்டை மருந்து மாதிரி சாப்பிடுவேன்...!!
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 1:11 pm

» ஒரு வரி தகவல்கள் - தொடர் பதிவு
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 1:09 pm

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 1:08 pm

» சினி துளிகள்!
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 1:08 pm

» ஜோக்ஸ் ,,, ஜோக்ஸ்...
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 1:07 pm

» பொது அறிவு தகவல் - தொடர் பதிவு
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 1:06 pm

» மகாகவி ஈரோடு தமிழன்பன் விருது
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 1:06 pm

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூ
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 1:05 pm

» பூக்கள் பூக்கும் தருணம் – ஆருயிரே
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 1:04 pm

» வெறும் 11 ரூபாய் செலவில் நடந்த திருமணம்: அசத்திய காதலர்கள்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 1:04 pm

» விமானப்படை முன்னாள் தளபதி அர்ஜன் சிங் மரணம்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 1:03 pm

» அஜித் பாணிக்கு மாறும் விஜயசேதுபதி!
by அ.இராமநாதன் Sun Sep 17, 2017 4:00 pm

» பாடகியாக ஆசைப்படும், ஆத்மிகா!
by அ.இராமநாதன் Sun Sep 17, 2017 4:00 pm

» வெள்ளை மாளிகைக்கு, ‘பெட்டிஷன்’ அனுப்பும் தயாரிப்பாளர் சங்கம்!
by அ.இராமநாதன் Sun Sep 17, 2017 3:57 pm

» பிகினி நடிகையாகும் டாப்சி!
by அ.இராமநாதன் Sun Sep 17, 2017 3:56 pm

» மூன்று, ‘கெட்டப்’பில் த்ரிஷா! –
by அ.இராமநாதன் Sun Sep 17, 2017 3:55 pm

» ஸ்ரேயாவை கண்டுகொள்ளாத தமிழ் கதாநாயகர்கள்!
by அ.இராமநாதன் Sun Sep 17, 2017 3:53 pm

» காற்றாலை மின்உற்பத்தி குறைந்ததால் தமிழகத்தில் மின்வெட்டு ஏற்படுமா?
by அ.இராமநாதன் Sun Sep 17, 2017 3:38 pm

» சென்டிரலில் ரூ.1¼ கோடி போதை பொருள் சிக்கியது தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த பெண் கைது
by அ.இராமநாதன் Sun Sep 17, 2017 3:36 pm

» இன்று பிரதமர் மோடி பிறந்த தினம்
by அ.இராமநாதன் Sun Sep 17, 2017 3:31 pm

» அரசியலுக்கு வரத் தயார் ; ரஜினியையும் இணைத்துக்கொள்வேன் - கமல்ஹாசன் அதிரடி
by அ.இராமநாதன் Sun Sep 17, 2017 3:30 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சில்லென்று பூத்த சிறுநெருஞ்சிக் காட்டினிலே , நூல் விமர்சனம்:கவிஞர் இரா.ரவி

View previous topic View next topic Go down

சில்லென்று பூத்த சிறுநெருஞ்சிக் காட்டினிலே , நூல் விமர்சனம்:கவிஞர் இரா.ரவி

Post by eraeravi on Wed Jun 23, 2010 2:32 pm

சில்லென்று பூத்த சிறுநெருஞ்சிக் காட்டினிலே , நூல் விமர்சனம்:கவிஞர் இரா.ரவி


நூல் ஆசிரியர்:செமினி மார்கரெட் செல்லத்துரை
நூலின் பெயரைப் படித்தவுடன் புகழ்பெற்ற திரைப்படப் பாடல் நம் நினைவிற்கு வருவது உண்மை.நூலிற்கான அட்டைப்பட ஓவியம் மட்டுமல்ல,நூலின் உள்ளே உள்ள ஒவ்வொரு படங்களும் நூலாசிரியர்,கவிஞர்,எழுத்தாளர்,ஓவியர் செமினி மார்கரெட் செல்லத்துரை அவர்களின் கைவண்ணத்தில் உருவான உன்னதப் படைப்பு.

தமிழ் அழியாமல் இன்றும் கால மாற்றத்தை தாங்கி இணையத்தளங்களிலும் வெற்றிக்கொடி நாட்டி வருகின்றது என்றால் அதற்கு முதற்க் காரணம் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் தான்.அதற்கு அடுத்தபடியாக தமிழழுக்கு தொண்டு செய்து வருபவர்கள் சிங்கப்பூர்,மலேசிய தமிழர்கள்.அந்த வகையில் நூல் ஆசிரியர் தமிழுக்குத் தொண்டு செய்யும் விதமான தனது ஆற்றலை,திறமையை பல்வேறு வடிவங்களில் கவிதை,துணுக்கு, சிறுகதை,கட்டுரை என பல்சுவை விருந்தாக படைத்து உள்ளார்.

பாரதி கண்ட புதமைப் பெண்ணாக வலம் வருகின்றார். ஆண்களை விட பெண்கள் ஆற்றல் மிக்கவர்கள் என்பதை நிரூபிக்கும் விதமாக இந்நூல் அமைந்து உள்ளது.இந்தப் பெண்ணின் வெற்றிக்கு அவரது கணவர் செல்லத்துரை துணை நிற்பது கூடுதல் சிறப்பு.மற்ற ஆண்களும் தன் துணைவியின் ஆற்றல் உலகறிய உதவிடும் உள்ளம் பெற வேண்டும்.புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் வைர வரிகளோடு நூல் தொடங்குகின்றது.

"நகைச்சுவை உணர்வு மட்டும் எனக்கு இல்லை என்றால்,நான் என்றைக்கோ தற்கொலை செய்து இறந்திருப்பேன்"என்றார் காந்தியடிகள்.அந்தக் கருத்தை வலியுறுத்தும் வைர வரிகள் இதோ!

"சிரிக்கத் தெரிந்தால் போதும் துயர் நெருங்காது நம்மை ஒரு போதும்".ஓவியம் அற்புதமாக உள்ளது.கேலிச் சித்திரங்கள் சிரி;ப்போடு சிந்திக்கவும் வைக்கின்றன.கவிதைகள் இனிமையாக உள்ளது.சிறுகதைகள் சிந்தையை செதுக்குகின்றன.கட்டுரை கருத்தாழம் மிக்கதாக உள்ளது.சகலகலாவள்ளியாக உள்ளார் நூலாசிரியர். வியப்பாக உள்ளது ஒருவருக்கு இவ்வளவு ஆற்றலா?மலைத்துப் போனேன்.

இன்றைய மாணவர்களிடம் நமது முன்னால் பிரதமர் யார்? என்று கேட்டால் தெரிவதில்லை,ஆனால் ஒரு நடிகரின் திரைப்படத்தின் பெயர் கேட்டால் உடனே சொல்லி விடுகின்றனர்.இந்த நாட்டு நடப்பை கேலிச்சித்திரமாக பதிவு செய்துள்ளார்.குடி குடியைக் கெடுக்கும்,தெரிந்தே குடிக்கும் குடிமகன்களின் கருத்தைப் பிரதிபலிக்கும் துணுக்கு

உங்க தோட்டத்தில் தண்ணிக்கு ரொம்ப கஷ்டமுனு கேள்வி
எப்படி சமாளிக்கிறீங்க?
ச்சே ச்சே அப்படியெல்லாம் ஒன்னுமில்லையே இங்கேயெ
சீனங்கடையிலேயே பைத்தண்ணி கிடைக்கும்.நல்ல
சரக்கா வேணுமின்னா டவுன்லா ஒரு பார் இருக்கு�..

பாருக்குள்ளெ நல்ல நாடு நம் பாரத நாடு.ஆனால் குடிமகன்கள் "பாருக்கு"நல்ல நாடு நம் தமிழ்நாடு என பாடும் நிலை வந்தது.அரசாங்கமே பார் நடத்தும் அவலம்.இப்படி பல நினைவுகளை தோற்றுவிக்கின்றது.

தமிழன் வீடுகளில் தமிங்கிலமும்,ஆங்கிலமும்
விளையாடுவதை விளக்குகின்றார் கவிதையில்

எந்தமிழர்

தமிழ் என் பேச்சு,தமிழ் என் மூச்சு,
மேடை முழக்கம் முடிஞ்சுப் போச்சு
வீட்டுக்குச் செல்ல
நேரமாச்சு

வாசலில்

டேடி கம் பேக் ரெடி மம்மி இது
அவரின் கடைக்குட்டி
ஹேவ் சம் டீ டார்லிங் இது
பெண்டாட்டி நோ டியர் ஐயெம் டையட்
ஆங்கிலம் இவருக்கு வைப்பாட்டி
ஏன்ன எழவொ போங்கடா
தலையில் அடித்துக் கொண்டாள்-நம்
ஆத்திச்சூடி தமிழ்ப்பாட்டி

இந்தக் கவிதையைப் படித்த போது உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தரின் தமிழா நீ பேசுவது தமிழா என் நினைவிற்கு வந்தது.ஆங்கிலேயனை விரட்டி விட்டோம்.ஆனால் ஆங்கிலத்தை விரட்டிட மறந்து விட்டோம்.அது தன் தமிழைச் சிதைத்து வருகின்றது.

ஆணாதிக்க சமுதாயம் பெண்களை ஏமாற்றி வருவது குறித்து விழிப்புணர்வு விதைக்கும் வகையில் கவிதை எழுதி உள்ளார்.

நம்பாதே பெண்ணே
ஆண்களை நம்பாதே பெண்களே ஆண்களை நம்பாதே
பொய்யாய் சிரித்துப் பேசி கழுத்தை அறுக்கும்
ஆண்களை நம்பாதே பெண்களே ஆண்களை நம்பாதே

இப்படி பெண்ணியக் குரலாக ஓங்கி ஒலிக்கின்றது.
அன்பின் உயர்வை உணர்த்தும் சிறுகதை.சிறுகதை நடையும் சிறப்பாக உள்ளது.சிறுகதை மட்டுமல்ல,சிந்திப்போமா இனி சந்திப்போமா? நாடக வடிவில் எழுதி உள்ளார்.5 காட்சிகளாக இடம் பெற்றுள்ளது.சிந்தனை செய் மனமே கட்டுரையில் இன்றைய இளைய சமுதாயத்திற்கு பண்பாட்டை பாங்காக உணர்த்துகின்றார்.மொத்தத்தில் பல்சுவை விருந்தாக ஒரே எழுத்தாளரின்,கவிஞரின் நூலை இப்போது தான் பார்க்கிறேன்.மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன்.நூலின் அட்டையில் உள்ள வைர வரிகள்; நூல் ஆசிரியரின் தமிழ்ப்பற்றை பறைசாற்றுகின்றது.

ஆவி பிரியும் வேளையிலும் தாயினும் மேலாம்
அமுதே தமிழே உனை நினைத்து கேட்பேன்
தா நீ வரமொன்று வருவாய் அதிலும் தமிழே என் தாய்மொழியின்று
-மார்கரெட் செல்லத்துரை

இது போன்ற தாய்மொழிப்பற்று ஒவ்வொரு தமிழனுக்கும் இருக்க வேண்டும்

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2110
Points : 4766
Join date : 18/06/2010

Back to top Go down

Re: சில்லென்று பூத்த சிறுநெருஞ்சிக் காட்டினிலே , நூல் விமர்சனம்:கவிஞர் இரா.ரவி

Post by eeranila on Thu Jul 08, 2010 8:34 pm

நமது தமிழ் இன்றைய தமிழ் சிறார்க்கு எட்டா தூரத்தில் விலகிபோய்க்கொண்டிருப்பதை தெளிவுப்படுத்துகிறார் ஆசிரியர், சமுதாய அவலங்களை படம் பிடித்துக் காட்டும் கண்ணாடியாக விளங்குகிறது நூல். பெண்ணா? என்று மூலையில் புறம் தள்ளினார்கள் ஒரு காலத்தில், இன்று பெண்ணும் படைக்கின்றார் சாதனைகளை, கடந்த கால பெண் சமுதாயம் கண்ட அவலங்களின் தீஞ்சுவடுகள் மலர்ந்திருக்கின்றது சாதனைகளாய். வாழ்த்துக்கள்

eeranila
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 321
Points : 361
Join date : 01/12/2009
Location : Saudi Arabia

Back to top Go down

NANDRI

Post by eraeravi on Sun Jul 11, 2010 12:55 pm

வணக்கம்
மிக்க நன்றி
இரா .இரவி
www.kavimalar.com
http://eraeravi.wordpress.com/ :(

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2110
Points : 4766
Join date : 18/06/2010

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum