"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தத்துவ கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 8:10 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Yesterday at 7:38 pm

» எஸ்.ஜே.சூர்யாவின் வில்லன் அவதாரம்!
by அ.இராமநாதன் Yesterday at 7:37 pm

» கதையின் நாயகியான தன்ஷிகா!
by அ.இராமநாதன் Yesterday at 7:36 pm

» தமிழில் ஹீரோவாகும் மலையாள நடிகர்!
by அ.இராமநாதன் Yesterday at 7:36 pm

» நேரடி தமிழ் படத்தில் மஞ்சுவாரியர்
by அ.இராமநாதன் Yesterday at 7:34 pm

» 'இமேஜ்' வட்டத்திற்குள் ஓவியா!
by அ.இராமநாதன் Yesterday at 7:33 pm

» ஜி.வி.பிரகாஷின் சமூக சேவை!
by அ.இராமநாதன் Yesterday at 7:33 pm

» பேஸ்புக்லயும் புதிய பாடத்திட்டத்தை கொண்டு வரணும்...!!
by அ.இராமநாதன் Yesterday at 9:25 am

» ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!
by அ.இராமநாதன் Yesterday at 8:55 am

» ஏழைகளுக்கு எட்டாத சட்டம்' சட்ட ஆணையர் விளாசல்
by அ.இராமநாதன் Yesterday at 8:52 am

» இலவச, 'லேப் - டாப்' இந்த ஆண்டும் இல்லை!
by அ.இராமநாதன் Yesterday at 8:50 am

» அசாமில் மூங்கிலில் தயாரான 101 அடி உயர துர்கா சிலை
by அ.இராமநாதன் Yesterday at 8:49 am

» எல்லாம் பிறர்க்காகவே!
by அ.இராமநாதன் Yesterday at 8:46 am

» புதிரான போர் - கவிதை
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 10:42 pm

» காதல் என்பது...
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 10:40 pm

» காதல் - கவிதை
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 10:34 pm

» கறுப்பு - கவிதை
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 10:33 pm

» மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் சி .வீரபாண்டியத் தென்னவன் அவர்கள் தந்த தலைப்பு ! தமிழ்காக்கக் கொட்டு முரசே கொட்டு ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Sat Sep 23, 2017 5:01 pm

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன் Sat Sep 23, 2017 2:58 pm

» இன்று முதல் 10 நாட்கள் சிவில் கோர்ட்டுகளுக்கு விடுமுறை
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 1:23 pm

» முதல் பெண் போலீசார் 40 ஆண்டுக்கு பின் சந்திப்பு
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 1:21 pm

» 7 வங்கிகளின் கார்டுகளில் மட்டுமே ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 1:19 pm

» பிரதமர் மோடிக்கு ரூ.1 கோடி சொத்து
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 1:17 pm

» 2018–ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு ‘நியூட்டன்’ இந்தி படம் பரிந்துரை
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 1:16 pm

» நவீன தொழில்நுட்பத்துடன் கிருஷ்ணா நதி கால்வாய் சீரமைப்பு
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 1:11 pm

» அந்த நாள் -செப் 22 --2016
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 12:57 pm

» நதிக்கரை - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:39 pm

» நாட்டு நடப்பு - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:38 pm

» நீ என்ன தேவதை - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:31 pm

» புகைப்படம் - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:28 pm

» பெயருக்குத்தான் - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:18 pm

» அழகு - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:16 pm

» விநோதமான வேலை!
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 7:05 pm

» உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்!
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 7:04 pm

» விஷ சேவல் கோழி மீன்
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 2:19 pm

» ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்: அரபு நாட்டவர்கள் 8 பேர் உட்பட 20 பேர் கைது
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 2:09 pm

» தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 7:57 am

» தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல்
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 7:55 am

» மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை பயணப்படி, 'கட்'
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 7:53 am

» சிந்தனை சிகிச்சை - 4
by ராஜேந்திரன் Thu Sep 21, 2017 9:15 pm

» மும்பையில் கனமழை 75 விமானங்கள் ரத்து
by அ.இராமநாதன் Thu Sep 21, 2017 2:04 pm

» கள்ள சாராய பலி ஏற்பட்டால் மரண தண்டனை: உ.பி., அரசு முடிவு
by அ.இராமநாதன் Thu Sep 21, 2017 2:04 pm

» முன்னாள் கவர்னர் என்.டி.திவாரி உடல்நல குறைவு
by அ.இராமநாதன் Thu Sep 21, 2017 2:03 pm

» டெல்லியில் முகத்தில் கரியை பூசி விவசாயிகள் போராட்டம்
by அ.இராமநாதன் Thu Sep 21, 2017 2:02 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சினிமா - தேவைப்படும் சட்டத் தீர்வு - (ஞானி)

View previous topic View next topic Go down

சினிமா - தேவைப்படும் சட்டத் தீர்வு - (ஞானி)

Post by அ.இராமநாதன் on Wed Feb 08, 2012 9:42 am

தமிழ் சினிமா படப்பிடிப்புகள் மறுபடியும் நின்றுவிட்டது.
காரணம் வழக்கமான சம்பளப் பிரச்னைதான். சினிமாக்காரர்கள்
எதையும் தப்புத்தப்பாகவும் மிகைப்படுத்தியுமே சித்தரித்து
பழக்கப்பட்டவர்கள். இப்போதைய பிரச்னையிலும் நடப்பது
வேலை நிறுத்தம் அல்ல. தொழிலாளி வேலை செய்ய மறுத்தால்
அதற்குப் பெயர் ஸ்டிரைக் - வேலை நிறுத்தம்.
முதலாளி, தொழிலை நடத்த முடியாது, நிறுத்திக் கொள்கிறேன்
என்று சொன்னால் அதற்குப் பெயர் ஸ்டிரைக் அல்ல; லாக் அவுட்-கதவடைப்பு.
இப்போது நடப்பது முதலாளிகளான தயாரிப்பாளர்கள் அறிவித்திருக்கும்
லாக் அவுட். அது ஸ்டிரைக் அல்ல.
-
எஸ்.ஏ. சந்திரசேகரன் முதல் சேரன் வரை ஆளுக்கு ஆள் உளறிக்
கொட்டுவதை நிறுத்திவிட்டு, தொழிலாளர் நல ஆணையர் முன்பு
பிரச்னையைக் கொண்டு போனால், ஒரே நாளில் தீர்ந்துவிடக் கூடியது
இது.

-
மூன்று வருடங்களுக்கு ஒருமுறை தயாரிப்பாளர்களும் தொழிலாளர்
கூட்டமைப்பான பெப்சியும் சம்பள ஒப்பந்தம் போடுகிறார்கள்.
கடைசியாகப் போட்ட ஒப்பந்தம் டிசம்பர் 2010ல் முடிந்துவிட்டது.
ஜனவரி 2011 முதல் டிசம்பர் 2013 வரை நடைமுறைக்கு வரவேண்டிய
சம்பள விகிதம் தீர்மானித்து ஒப்பந்தம் போடாமலேயே ஒரு வருடம்
ஓடி விட்டது. பழைய சம்பளத்திலேயே பெரும்பாலோர் வேலை
செய்தார்கள்.
-
இப்போது புது சம்பள விகிதம் போட்டால் கூட, சினிமா தொழிலாளருக்கு
அரசு ஊழியர் மாதிரி பழைய அரியர்ஸ் கணிசமாகக் கிடைக்கும்
நடைமுறையோ சாத்தியமோ கிடையாது. போன சம்பளம் போனதுதான்.
ஒரு சிலர் மட்டும் கடந்த ஓராண்டில் தங்கள் சங்கம் உயர்த்திக் கேட்ட
சம்பளத்தை ஒப்பந்தம் இல்லாமலேயே பெற்றிருக்கிறார்கள்
-.

இவர்களில் பெரும்பாலோரின் சம்பளம் என்பது மாதச் சம்பளம் அல்ல.
இது தினக்கூலிதான். கேட்கப்பட்டிருக்கும் பேட்டா என்ற கூலி உயர்வு
விவரங்கள் இதோ

-
லைட்மேன் - ரூ 350லிருந்து 530.
ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் - 250லிருந்து 320.
மகளிர் ஊழியர் யூனியன் - 290லிருந்து 400.
செட் அஸிஸ்டெண்ட் - 350லிருந்து 625.
டிரைவர்ஸ் யூனியன் - 270லிருந்து 415.
காஸ்ட்யூம் அஸிஸ்டெண்ட்ஸ் - 700 லிருந்து 850.
புரடெக்ஷன் அஸிஸ்டெண்ட்ஸ் - 350லிருந்து 550.
-
மூன்று வருடத்துக்குப் பிறகு இவர்கள் கூடுதலாகக் கேட்டிருக்கும்
தொகை 180, 70, 110, 275, 145, 150, 200 ரூபாய் என்ற அளவில்தான்.
இதைத் தர மறுப்பதில் எந்த நியாயமுமில்லை. ஆறுமாத காலம் ஒரு
முழுப் படத்தில் சுமார் 60 நாள் வேலை செய்தாலும் இதில் ஒருவர்
புதிய சம்பள விகிதத்திலேயே அதிக பட்சமாகப் பெறப் போகும்
சம்பளம் மொத்தமாக 50 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வரையில் தான்.

-
இப்போது தொழிலாளர் நல அதிகாரி செய்ய வேண்டியதெல்லாம்,
சென்ற வருடத்தில் சிலருக்கு மட்டும் உயர்த்தித் தந்த விகிதம் எவ்வளவு,
யூனியன் கேட்பது எவ்வளவு, தயாரிப்பாளர் தர விரும்புவது எவ்வளவு
என்பதை விசாரித்து சமரசம் செய்வது தான். மூன்றாண்டுகளில் பண
வீக்கத்தினால் விலைவாசி கடுமையாக உயர்ந்திருக்கிறது. ஒரு வருடம்
சம்பள உயர்வு இல்லாமலே போய்விட்டது. இதையெல்லாம் கணக்கிட்டு,
புதிய விகிதம் நிர்ணயிக்கப்பட வேண்டும். அவ்வளவுதான்.
-
மற்றபடி ஒரு படத்தில் எத்தனை தொழிலாளர் வேலை பார்க்க வேண்டும்,
பட பட்ஜெட்டுக்கு ஏற்ற மாதிரி ஒரே வேலைக்கு வெவ்வேறு சம்பளம்
தரமுடியுமா, ஸ்டார் நடிகர் - ஸ்டார் டைரக்டர் சம்பளம் மட்டும் 200 சத
விகிதம் உயர்வது முறையா, வேலை வாங்கும் இயக்குனர், ஒளிப்பதிவாளரும்
அவர்கள் கீழ் வேலை செய்யும் உதவி இயக்குனர், உதவி ஒளிப்பதிவாளர்களுக்hd
எல்லாம் தனித்தனி யூனியன்கள் வேண்டாமா, பெப்சி யூனியன்களில்
இல்லாதவர்கள் சினிமாவில் வேலை செய்ய அடிப்படை உரிமை இந்திய
அரசியல் சட்டத்தின் கீழ் உண்டா இல்லையா, யூனியன் உறுப்பினராக
கார்டு வாங்க ஏன் லட்சக்கணக்கில் கட்டணம் விதிக்கவேண்டும் போன்ற
நீண்ட காலமாக இருக்கும் அடிப்படைச் சிக்கல்கள் எதையும் இப்போது
சேர்த்துத் தீர்த்துவிட முடியாது.
-
அதற்குத் தனியே சினிமா துறை நிலை பற்றி ஆராய நீதிபதிகள்,
நிபுணர்கள் குழு அமைத்து, சட்டத்திருத்தங்களைக் கொண்டு வரவேண்டும்
என்று நீண்ட காலமாக நான் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

>ஞாநி
-
=================================================

ஓ பக்கங்கள் - தேவைப்படும் 3 சட்டத் தீர்வுகள்!
(கட்டுரையிலிருந்து)- நன்றி: கல்கி


_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 23302
Points : 50232
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: சினிமா - தேவைப்படும் சட்டத் தீர்வு - (ஞானி)

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Feb 08, 2012 9:57 am

உழைப்பவர்களுக்கு உழைப்புக்கேற்ற ஊதியம் இந்தியாவில் கிடைப்பதில்லை என்பது உண்மைதான்

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: சினிமா - தேவைப்படும் சட்டத் தீர்வு - (ஞானி)

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Wed Feb 08, 2012 2:06 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:உழைப்பவர்களுக்கு உழைப்புக்கேற்ற ஊதியம் இந்தியாவில் கிடைப்பதில்லை என்பது உண்மைதான்

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56806
Points : 69546
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum