"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» ஜூன் 30 முதல் ஒரே இணையதளத்தில் மொபைல் கட்டண விவரம் வெளியிட டிராய் உத்தரவு
by அ.இராமநாதன் Today at 12:10 pm

» ‘விசுவாசம்’ அப்டேட்: அஜித்தின் தாய்மாமனாக நடிக்கிறார் தம்பி ராமையா
by அ.இராமநாதன் Today at 12:01 pm

» சினிமா -முதல் பார்வை: செம
by அ.இராமநாதன் Today at 11:58 am

» மீண்டும் பா.ஜ., ஆட்சி: கருத்துகணிப்பில் தகவல்
by அ.இராமநாதன் Today at 8:01 am

» புறாக்களின் பாலின சமத்துவம்
by அ.இராமநாதன் Today at 7:57 am

» குதிரை பேர வரலாறு
by அ.இராமநாதன் Today at 7:56 am

» தமிழகத்தில் 'நிபா' பாதிப்பில்லை!
by அ.இராமநாதன் Today at 7:53 am

» சாதாரண வார்டுக்கு அருண் ஜெட்லி மாற்றம்
by அ.இராமநாதன் Today at 7:51 am

» இந்திரா கவிதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 10:59 pm

» ஒரு பெண் எப்போது அழகாக இருக்கிறாள் - பா.விஜய்
by அ.இராமநாதன் Yesterday at 10:56 pm

» பட்ட காலிலேயே படும்....
by அ.இராமநாதன் Yesterday at 10:49 pm

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 10:46 pm

» பழத்துக்குள் மாட்டிக்கொண்ட புழு....
by அ.இராமநாதன் Yesterday at 10:41 pm

» டயாபடீஸ் பேஷண்டுகளுக்கென பிரத்யேக டிஸைனர் செருப்புகள் அறிமுகம்!
by அ.இராமநாதன் Yesterday at 7:22 pm

» மருந்து, மாத்திரைகள் இன்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க இயற்கை வழிமுறை!
by அ.இராமநாதன் Yesterday at 7:21 pm

» எளிய மருத்துவக் குறிப்புகள்
by அ.இராமநாதன் Yesterday at 7:19 pm

» ஜி.வி. பிரகாஷ் ஜோடியாக நடிக்கும் அபர்னதி!
by அ.இராமநாதன் Yesterday at 7:10 pm

» திருச்செந்தூர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 28-ந்தேதி நடக்கிறது
by அ.இராமநாதன் Yesterday at 2:27 pm

» பலவித முருகன் உருவங்கள்
by அ.இராமநாதன் Yesterday at 2:23 pm

» இந்தியாவின் முதல் பெண்கள் கால்பந்து பயிற்சியாளர்!
by அ.இராமநாதன் Yesterday at 10:45 am

» பி.வி. சிந்துவும் இறக்கையும்!
by அ.இராமநாதன் Yesterday at 10:36 am

» தமிழுக்கு வரும் ஸ்பானிஷ் படம்
by அ.இராமநாதன் Yesterday at 10:34 am

» தூதரக அதிகாரிகள் மீது சீனா ஒலியலைத் தாக்குதல்?: அமெரிக்கா சந்தேகம்
by அ.இராமநாதன் Yesterday at 10:31 am

» சட்டப் பேரவை: மே 29-இல் தொடங்கி 23 நாள்கள் நடைபெறும்: பி.தனபால்
by அ.இராமநாதன் Yesterday at 10:22 am

» அரேபியாவின் பங்களிப்பு
by அ.இராமநாதன் Yesterday at 8:33 am

» உலகின் முதல் உறவு
by அ.இராமநாதன் Yesterday at 8:31 am

» உலக தைராய்டு தினம்
by அ.இராமநாதன் Yesterday at 8:28 am

» சென்னையில் புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை
by அ.இராமநாதன் Yesterday at 8:24 am

» ஸ்ரீநகரில் பிச்சை எடுக்க தடை
by அ.இராமநாதன் Yesterday at 8:21 am

» வங்கி ஊழியர்கள் 30, 31ல், 'ஸ்டிரைக்'
by அ.இராமநாதன் Yesterday at 8:20 am

» அலகாபாத் பெயரை மாற்ற முடிவு
by அ.இராமநாதன் Yesterday at 8:16 am

» இராயேந்திரனின் எண்ணங்கள்
by ராஜேந்திரன் Thu May 24, 2018 8:23 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu May 24, 2018 3:49 pm

» முக்கியமான மூன்று விஷயங்கள்
by அ.இராமநாதன் Wed May 23, 2018 10:49 pm

» வாழும் வரை வாழ்க்கை.. வாழ்ந்து காட்டுவோம்..
by அ.இராமநாதன் Wed May 23, 2018 10:43 pm

» உரைவேந்தர் ஔவை துரைசாமி! நூல் ஆசிரியர் : பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Wed May 23, 2018 10:26 pm

» அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் குஜராத் மின் உற்பத்தி ஆலைக்கு எதிராக வழக்கு: விசாரணைக்கு ஏற்பு
by அ.இராமநாதன் Wed May 23, 2018 8:35 am

» வாவ் பாப்... பைனலுக்கு முன்னேறியது சென்னை
by அ.இராமநாதன் Wed May 23, 2018 8:29 am

» ஒரே நாளில் 11 படங்களா?: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்பு!
by அ.இராமநாதன் Tue May 22, 2018 7:52 pm

» ‘மெளக்லி’யின் அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு!
by அ.இராமநாதன் Tue May 22, 2018 7:50 pm

» நெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவுள்ள ஒபாமா!
by அ.இராமநாதன் Tue May 22, 2018 7:49 pm

» கொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்
by அ.இராமநாதன் Tue May 22, 2018 7:47 pm

» அசத்தல் சாதனைப் படைக்க சுரேஷ் ரெய்னாவுக்கு அரிய வாய்ப்பு!
by அ.இராமநாதன் Tue May 22, 2018 6:52 pm

» என்னுடைய கேப்டன் தான் சரியான முடிவை எடுப்பார் - மனம் திறந்த விராட் கோலி
by அ.இராமநாதன் Tue May 22, 2018 3:48 pm

» 3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்
by அ.இராமநாதன் Tue May 22, 2018 9:45 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



உள்ளத்திலிருந்து - (நூல் விமர்சனம் - கவிஞர் இரா.ரவி)

Go down

உள்ளத்திலிருந்து - (நூல் விமர்சனம் - கவிஞர் இரா.ரவி)

Post by eraeravi on Wed Jun 23, 2010 2:45 pm

உள்ளத்திலிருந்து - (நூல் விமர்சனம் - கவிஞர் இரா.ரவி)
நூல் ஆசிரியர் கவிஞர் பொன். விக்ரம்

நூலின் அட்டைப்படமே நூலை படிக்க வேண்டும் என ஆவலைத் தூண்டும் வண்ணம் அற்புதமான படைப்பு. திருப்பரங்குன்றத்தில் கவிப்பறவைகளின் வேடந்தாங்கலாக விளங்கும் புலவர் மு.தமிழ்க்கூத்தன் அவர்களின் அணிந்துரை மேலும் அழகு சேர்க்கின்றது. நூல் முழுவதும் அற்புதமான கவிதைகள் உள்ளன. அணிந்துரையில் குறிப்பிட்டுள்ள அற்புதத் கவிதை இன்றைக்கு மிகத் தேவையான கவிதை இதோ

ஆரியத் தவளைகள்
கூறிய பொய்களால்
மழுங்கிப் போனது
தமிழனின் அறிவு
இனியாவது

பகுத்தறிவுச் சாணை பிடி
பெரியாரின் ஆணைப்படி

இந்தக் கவிதை வரிகளைப் படித்ததும் என் நினைவிற்கு என் ஹைக்கூ வந்தது.

பயன்படுத்தாத
ஆயுதம் துருப்பிடிக்கும்
தமிழனின் மூளை

கவிஞர் பொன். விக்ரம், புலவர் தமிழ்க்கூத்தன் கவிதைப் பட்டறையில் உருவான கவிஞர் என்பதால் பட்டறைத் தோழர்கள் கவிஞர்கள் க. அழகுசுந்தரம், வழக்கறிஞர் கோ.ரவி, க.முருகேசன், இரா.சுகந்த குமார், இரா.சென்றாயன், இரா.ஜீவன் எனப் பலரும் வாழ்த்துரை வழங்கி உள்ளது. கூடுதல் சிறப்பு. முதல் கவிதையிலேயே முத்தாய்ப்பாக முத்திரை பதிக்கிறார். தமிழ்நாடு தமிழர்களுக்கு எல்லாம் ஈழத் தமிழர்களின் நிலை கண்டு ரத்தம் கொதித்த போதும், எதுவும் செய்ய இயலாதவர்களாக இருக்கிறோம் என்ற கருத்தை இதைவிடச் சுருக்கமாகக் கூற முடியாது.

புதைக்கப்படாமல் விதைக்கப்பட்ட ஈழத்தமிழனுக்கு வருந்துகிறேன் என்னால் இதைத் தான் செய்ய முடிந்தது.

இன உணர்வோடு, பகுத்தறிவுச் சிந்தனையோடு பல்வேறு பொருள்களில் மிகச் சிறப்பாக கவிதை பாடி உள்ளார். அதுபோல அவர் உள்ளத்தில் கருத்துக்களை கவிதையாக வடித்து மிகப் பொருத்தமாக �உள்ளத்திலிருந்து� பெயர் சூட்டியதற்காவே நூல் ஆசிரியர் கவிஞர் பொன். விக்ரம் அவர்களைப் பாராட்ட வேண்டும்.

தூங்கிக் கிடக்கின்ற தமிழனை எழுப்பும் வண்ணம், ஈழத்தமிழர்களுக்காக தமிழ்நாட்டு தமிழனால் எதுவுமே செய்ய முடியவில்லை என்றாலும், ஈழத்தமிழர்களின் இன்னலை உலகமே அறிய வைத்து தம்பி முத்துக்குமரனின் தீக்குளிப்பு மரணம். அதற்கும் கவிதையை பதிவு செய்துள்ளார்.

உன் சாவு சங்கடப்படுத்துகிறது
இருந்தும் உன் திட்டமிடுதல் திகைக்க வைக்கிறது

சாகப் போகிறேன் எனத் திட்டமிட்டு எல்லோருக்கும் மின்னஞ்சல் அனுப்பி விட்டு இந்திய அரசு என்ன செய்ய வேண்டுமென்று கோரிக்கையும் வைத்து இருந்தார். அதை இந்திய அரசு நிறைவேற்றி இருந்தால், ஒரே நாளில் ஜாலியன் வாலாபாக் படுகொலையை விட கொடூரமான ஈழத் தமிழர் படுகொலை நடந்து இருக்காது. இது போன்ற பல சிந்தனைகளை விதைக்கின்றது கவிஞரின் வைர வரிகள்.

காதலைப் பாடாத கவிஞன் இல்லை. காதலைப் பாடாதவன் கவிஞனே இல்லை என்பார்கள். அது போல கவிஞர் பொன் விக்ரம் காதலையும் பாடி உள்ளார்.

என்னவள்

மலர்த் தோட்டத்தில் என்னவள் சும்மாவா சொன்னார்கள்
இனம் இனத்தோடு தான் சேரும் என்று
இன்றைய காலத்தில் மனிதன் ஆறாம் அறிவான பகுத்தறிவை பயன்படுத்துவதே இல்லை. ஒரு பக்கம் பயபக்தியோடு கடவுளை வணங்குகிறான், காணிக்கை போடுகிறான், மறுபக்கம் ஏழைகளைச் சுரண்டுகிறான். கொள்ளையடிக்கிறான். மனிதநேயம் என்பதையே மறந்து விடுகிறான். ஏதையும் ஏன்? எதற்கு? எப்படி? ஏன யோசிக்க வேண்டும் என்ற தந்தை பெரியாரின் கருத்தை வலியுறுத்தும் ரத்தினச் சுருக்கமாக கவிதை இதோ

சுனாமி

இறைவனை காமி
இருந்தால் வருமா?
சுனாமி!

இந்த கவிதைக்கு தலைப்பு போடாவிட்டால் சிறந்த ஹைக்கூ

ஆடை அணிந்தவன் என்ற கவிதையில் மகாகவி பாரதியைப் பாடி உள்ளார். வரதட்சணையைச் சாடுகிறார். கும்பகோணம் சோகங்கள் இப்படி சமகால நிகழ்வுகளை கூர்ந்து கவிதை வடித்து உள்ளார்.

நாட்டு நடப்பு

ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்
கழிவறை போனேன் இரண்டு ரூபாய்

இதில் எள்ளல் சுவை இருந்த போதும் கசப்பான உண்மையை மிகத் துணிவுடன் பதிவு செய்துள்ளார். மொத்தத்தில் மனம் படைத்த பொன். விக்ரமின் சிறந்த நூலை வெளியீட்டு விழாவில், மேடையில் பெற்றதை பெருமையாகக் கருதுகின்றேன்.

இந்த நூல் வெளியிட்டு விழா திருமண மண்டபத்தில் நடந்தது. இந்த விழாவிற்கு குடும்பம் குடும்பமாக திருமணத்திற்கு வருவது போல, கவிதை ரசிகர்கள் வந்து இருந்தார்கள். மாநாடு போல நடைபெற்றது. கவிஞர் பொன்.விக்ரம் தொடர்ந்து நூல்கள் வெளியிட்டு சாதிக்க வாழ்த்துக்கள்.

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2206
Points : 5054
Join date : 18/06/2010

Back to top Go down

Re: உள்ளத்திலிருந்து - (நூல் விமர்சனம் - கவிஞர் இரா.ரவி)

Post by eeranila on Thu Jul 08, 2010 2:25 pm

படைப்பாளர்களின் பணி துவழாமல் தொடர தோள் கொடுக்கும் தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

eeranila
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 321
Points : 361
Join date : 01/12/2009
Location : Saudi Arabia

Back to top Go down

NANDRI

Post by eraeravi on Sun Jul 11, 2010 1:01 pm

வணக்கம்
மிக்க நன்றி
இரா .இரவி
www.kavimalar.com
http://eraeravi.wordpress.com/ கன்னத்தில் அறை

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2206
Points : 5054
Join date : 18/06/2010

Back to top Go down

Re: உள்ளத்திலிருந்து - (நூல் விமர்சனம் - கவிஞர் இரா.ரவி)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum