"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» சுயமரியாதையை இழந்தேன்; பல படங்களுக்கு சம்பள பாக்கி கமல்ஹாசன் மீது கவுதமி பரபரப்பு குற்றச்சாட்டு
by அ.இராமநாதன் Today at 10:04 pm

» குழந்தை பருவத்தில் ஸ்ரீதேவி எப்படி ? இளையராஜா உருக்கம்
by அ.இராமநாதன் Today at 6:59 pm

» மறுபக்கம் - கவிதை
by அ.இராமநாதன் Today at 1:26 pm

» செய்யும் உதவிகள் வீண் போகாது...!!
by அ.இராமநாதன் Today at 1:24 pm

» ஷண்முக சுப்பையா கவிதைகள்
by அ.இராமநாதன் Today at 1:10 pm

» நீதிக்கதை - கவிதை
by அ.இராமநாதன் Today at 1:08 pm

» அவரவர் காணி நிலம் - கவிதை
by அ.இராமநாதன் Today at 1:05 pm

» குதிரை - (கவிதை_ - ஞானக்கூத்தன்
by அ.இராமநாதன் Today at 1:03 pm

» உழைக்கும் கைகள் - கவிதை
by அ.இராமநாதன் Today at 12:58 pm

» செயல் முடிந்தபின்... (கவிதை)
by அ.இராமநாதன் Today at 12:52 pm

» அழகு எங்கே போனது...? - கவிதை
by அ.இராமநாதன் Today at 12:50 pm

» இதுவும் சேவை தானுங்க!
by அ.இராமநாதன் Today at 9:36 am

» கல்யாண செலவை இப்படியும் குறைக்கலாம்!
by அ.இராமநாதன் Today at 9:34 am

» தலைவர் இப்போதான் முதன் முதலா ஏர்போர்ட்டுக்கு வந்திருக்காரு....!!
by அ.இராமநாதன் Today at 9:31 am

» தலைவர் கிளி வளர்க்க ஆசைப்படறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Today at 9:15 am

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Today at 9:03 am

» அஜித் படத்தில், குத்துப்பாட்டு!
by அ.இராமநாதன் Today at 9:01 am

» விஜய்யின் சாதனை புத்தகம்!
by அ.இராமநாதன் Today at 9:01 am

» உடலை வருத்த தயாராகும் சுனைனா!
by அ.இராமநாதன் Today at 9:00 am

» அஜித் பெயரில் படம் தயாரிக்கும் தனுஷ்!
by அ.இராமநாதன் Today at 8:59 am

» நடிகை ஸ்ரீதேவி காலமானார்
by அ.இராமநாதன் Today at 8:57 am

» அருவி நாயகிக்கு இன்ப அதிர்ச்சி!
by அ.இராமநாதன் Today at 8:55 am

» வரலாறு படைத்தார் அருணா: உலக ஜிம்னாஸ்டிக்சில் பதக்கம்
by அ.இராமநாதன் Yesterday at 9:53 pm

» எப்படி துவங்கியதோ, அப்படியே முடிகின்றது வாழ்க்கை....!!
by அ.இராமநாதன் Yesterday at 9:21 pm

» ‘‘நல்ல நாள், கெட்ட நாள் எது’’
by அ.இராமநாதன் Yesterday at 9:03 pm

» நோய் வருவதற்கு முன் உடலில் தோன்றும் அறிகுறிகள்!
by அ.இராமநாதன் Yesterday at 8:54 pm

» இராயேந்திரனின் எண்ணங்கள்
by ராஜேந்திரன் Yesterday at 7:31 pm

» தேசிய தடுப்பூசி அட்டவணை
by அ.இராமநாதன் Yesterday at 6:21 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 6:18 pm

» நம்பிக்கையோடு காத்திரு.!
by அ.இராமநாதன் Yesterday at 6:11 pm

» அழகான வரிகள் பத்து.
by அ.இராமநாதன் Yesterday at 6:04 pm

» தேவையான அளவுக்கு மேல் புரிந்துகொள்ளாமல் இருப்பதுவே நிம்மதிக்கான வழி...
by அ.இராமநாதன் Yesterday at 5:55 pm

» சிரிங்க ப்ளீஸ் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 5:46 pm

» ஏமாற்றுவித்தை!
by அ.இராமநாதன் Yesterday at 5:14 pm

» நெடுவாசல் மக்களை சந்திக்க கமல் முடிவு
by அ.இராமநாதன் Yesterday at 5:11 pm

» கணவனின் இறுதி ஊர்வலத்தில் 5 நாள் கைக்குழந்தையுடன் கம்பீர ராணுவ நடை
by அ.இராமநாதன் Yesterday at 5:10 pm

» அடுத்தடுத்து அம்பலமாகும் வங்கி மோசடிகள் : இன்று ஓரியன்டல் வங்கி
by அ.இராமநாதன் Yesterday at 5:08 pm

» பையன் நல்ல தொழிலைத்தான் தேர்ந்தெடுத்திருக்கான்...!!
by அ.இராமநாதன் Yesterday at 4:57 pm

» * மரியாதைகளும் ஒரு சுமையே.
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 10:02 pm

» * நிதானமாக ஆத்திரப்படு.- லத்தீன் பழமொழிகள்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 10:01 pm

» அழுவதிலும் நிச்சயம் இன்பம் இருக்கிறது....!!
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:59 pm

» # பயன்படுத்து, பழுது படுத்தாதே. - லத்தீன் பழமொழிகள்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:57 pm

» வண்ணமோ கறுப்பு, குரலோ இனிப்பு - விடுகதைகள்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:49 pm

» விடுகதை-விடைகள்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:38 pm

» அழகிய காலை வணக்கம்...!
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:30 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



அணுமின் நிலையம் திறக்கப்படாவிட்டால் விஞ்ஞானிகளைத் திரும்பப் பெறுவோம் - ரஸ்யா அதிரடி அறிவிப்பு

Go down

அணுமின் நிலையம் திறக்கப்படாவிட்டால் விஞ்ஞானிகளைத் திரும்பப் பெறுவோம் - ரஸ்யா அதிரடி அறிவிப்பு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Thu Feb 16, 2012 7:58 pm

கூடங்குளம் பிரச்னையில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. அணுமின் நிலையத்தை திறக்காவிட்டால், எங்கள் விஞ்ஞானிகளை வாபஸ் பெறுவோம் என்று மத்திய அரசுக்கு ரஷ்யா திடீர் கெடு விதித்துள்ளது. கூடங்குளம் அணுமின் நிலையம், தொடர்ந்து போராட்டங்களால் திறக்கப்படவில்லை.

அங்கு கட்டமைப்பு பணிகளுக்காக அமர்த்தப்பட்ட ரஷ்ய விஞ்ஞானிகள், மாதக்கணக்கில் வேலையின்றி தங்கியுள்ளனர். அணுமின் உற்பத்திக்கான பணிகளை அவர்கள் ஆரம்பித்து வைக்க உள்ளனர்.

ஆனால், எதிர்ப்பு வலுத்ததன் விளைவாக அணுமின் நிலையம் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. இதனால், ரஷ்யா வேதனை அடைந்துள்ளது.

எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு, ‘நட்புறவுக்கான ரஷ்ய அதிபரின் விருது‘ இன்று சென்னையில் வழங்கப்பட உள்ளது. இந்த விருதை இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் அலெக்சாண்டர் கடாக்டின் நேரில் வழங்க டெல்லியில் இருந்து நேற்று சென்னை வந்துள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷ்ய கலாச்சார மையத்தில், தூதர் அலெக்சாண்டர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

கூடங்குளம் அணுமின் நிலையம்தான் உலகத்திலேயே மிகவும் பாதுகாப்பான அணுமின் நிலையமாகும். ஜப்பான் நாட்டில் உள்ள புகுஷிமா அணுமின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்துக்கு பிறகு மக்களிடம் ஒருவித அச்சம் ஏற்பட்டுள்ளது. புகுஷிமா அணுமின் நிலையம் அமெரிக்காவின் பழைய தொழில்நுட்பத்தில் கட்டப்பட்டது.

கூடங்குளம் அணுமின் நிலையம் தற்போதைய நவீன தொழில்நுட்பத்தில் கட்டப்பட்டுள்ளதால், பெரியளவில் பூகம்பம் ஏற்பட்டாலும் அணுமின் நிலையத்துக்கு ஆபத்து இருக்காது. கூடங்குளம் பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாங்கள் அவர்களிடம் நேரிடையாக சென்று சமரசம் செய்ய மாட்டோம். இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். ரஷ்யா எப்போதும் இந்தியாவுடன் தொடர்ந்து நட்புறவுடன் செயல்பட்டு வருகிறது.

நட்புநாடுகள் என்று கூறிய சில நாடுகள் கூட இந்தியா அணுகுண்டு சோதனை நடத்தியபோது நிர்ப்பந்தம் செய்தது. அப்போதும் ரஷ்யா இந்தியாவுக்கு ஆதரவாக இருந்தது.

1988ம் ஆண்டு கார்ப்பசேவ் ரஷ்ய அதிபராக இருந்தபோது இந்திய பிரதமராக இருந்த ராஜீவ்காந்தியுடன் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு முதலாவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இவ்வளவு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக போராடுவதற்கு என்ன காரணம் என்று ஆச்சரியமாக உள்ளது. போராட்டத்துக்கு நிதி எங்கிருந்து வருகிறது என்று இந்திய அரசு விசாரணை நடத்த வேண்டும்.

கூடங்குளம் பகுதியில் தொடர்ந்து போராட்டம் நடைபெறுகிறது. கூடங்குளத்தில் பணிகள் எதுமின்றி எங்கள் நாட்டின் மிகச்சிறந்த விஞ்ஞானிகளை நீண்ட காலம் வைத்திருக்க முடியாது. விஞ்ஞானிகளின் சேவை ரஷ்யா உள்ளிட்ட சில இடங்களில் அமைக்கப்பட உள்ள அணுமின் நிலையத்துக்கு தேவைப்படுகிறது. இதனால் விஞ்ஞானிகளை வாபஸ்பெற வேண்டிய நிலை ஏற்படும்.

கூடங்குளம் பிரச்னையை தீர்த்து அதை திறக்க இந்தியா விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் விஞ்ஞானிகளை வாபஸ் பெறுவதை தவிர வழியில்லை.

கூடன்குளத்தில் முதல் யூனிட் செயல்பாட் டுக்கு தயாராக உள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் மின்சார தேவையை சமாளிக்க மிகவும் உதவியாக இருக்கும்.

தமிழக முதல்வரும் பிரதமரிடம் மின்சாரம் கேட்டு வருகிறார். இதற்கு கூடங்குளம் அணுமின் நிலையம் மட்டுமே தீர்வாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.

* 1989: கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு நிலம் கையகப்படுத்துவது ஆரம்பம்.
* 2002: ரூ.13,500 கோடி மதிப்பீட்டில் தலா 1000 மெகாவாட் உற்பத்தி திறனுள்ள 2 அணு உலை கட்டுமானப் பணிக்கு மார்ச்சில் கான்கிரீட் போடப்பட்டது.
* 2011: முதல் அணு உலை பணிகள் 99 சதவீதம் முடிந்து விட்டது. டிசம்பரில் மின் உற்பத்தியை துவங்க
திட்டமிடப்பட்டிருந்தது.
* 2012: மே மாதம் 2வது அணு உலையின் மூலம் மின் உற்பத்தி துவங்க திட்டமிடப்பட்டது.
2 ஆயிரம் மெகாவாட் உற்பத்தியானால் தமிழகத்திற்கு 925 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும்.

நன்றி தமிழ் சி என் என்

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: அணுமின் நிலையம் திறக்கப்படாவிட்டால் விஞ்ஞானிகளைத் திரும்பப் பெறுவோம் - ரஸ்யா அதிரடி அறிவிப்பு

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Feb 16, 2012 8:39 pm

சீக்கிரம் கௌம்புங்கப்பா... அடபாவிங்களா அடபாவிங்களா அடபாவிங்களா

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: அணுமின் நிலையம் திறக்கப்படாவிட்டால் விஞ்ஞானிகளைத் திரும்பப் பெறுவோம் - ரஸ்யா அதிரடி அறிவிப்பு

Post by Manian on Sat Feb 18, 2012 4:21 pm

பந்திக்கே அழைக்க வில்லை - வெளக்கென்ன இலை பீதாலாமா ...
avatar
Manian
ரோஜா
ரோஜா

Posts : 271
Points : 441
Join date : 15/02/2012
Age : 37
Location : Pune

Back to top Go down

Re: அணுமின் நிலையம் திறக்கப்படாவிட்டால் விஞ்ஞானிகளைத் திரும்பப் பெறுவோம் - ரஸ்யா அதிரடி அறிவிப்பு

Post by நெல்லை அன்பன் on Sat Feb 18, 2012 4:47 pm

அம்மா மீட்டிங் போட்டுட்டுட்டாங்க... இனி பணிகள் தொடங்கிடும்..
avatar
நெல்லை அன்பன்
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 32
Location : nellai

Back to top Go down

Re: அணுமின் நிலையம் திறக்கப்படாவிட்டால் விஞ்ஞானிகளைத் திரும்பப் பெறுவோம் - ரஸ்யா அதிரடி அறிவிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum