"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» நம் மன்னர் சிக்கனத்தின் சிகரம்!
by அ.இராமநாதன் Yesterday at 9:35 pm

» ஆஸ்பத்திரி வாசலில் எதுக்கு ’போர்வை நேரம்’ போர்டு...?
by அ.இராமநாதன் Yesterday at 9:34 pm

» கிளினிக்ல எதுக்கு அயர்ன் பாக்ஸ்…
by அ.இராமநாதன் Yesterday at 9:33 pm

» மெரினாவில் மீட்டிங் நடத்த எப்படி அனுமதி கிடைத்தது?
by அ.இராமநாதன் Yesterday at 9:33 pm

» அந்த கட்சிகூட வாட்ஸ்அப் மாதிரிதான்…!
by அ.இராமநாதன் Yesterday at 9:32 pm

» சினி துளிகள்! –
by அ.இராமநாதன் Yesterday at 12:00 pm

» ஐ பி எல் 2017: மும்பை இந்தியன்ஸ் 1 ரன் வித்தியாசத்தில் சாம்பியன் பட்டம் வென்றது
by அ.இராமநாதன் Yesterday at 5:16 am

» 60 வருட சுழற்சி
by அ.இராமநாதன் Sun May 21, 2017 5:12 pm

» கம்பரை ஆதரித்த வள்ளல் - பொ.அ.தகவல்
by அ.இராமநாதன் Sun May 21, 2017 5:07 pm

» கோதுமை உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு - பொ.அ.தகவல்கள்
by அ.இராமநாதன் Sun May 21, 2017 5:01 pm

» வானுயர்ந்த சோலை...!! - இயற்கை காட்சிகள்
by அ.இராமநாதன் Sun May 21, 2017 4:52 pm

» கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் தந்த தலைப்பு ! தமிழா உன் தமிழ் தமிழா ? கவிஞர் இரா .இரவி !
by eraeravi Fri May 19, 2017 1:50 pm

» என் அவதாரங்கள்…
by அ.இராமநாதன் Fri May 19, 2017 9:51 am

» தோற்பது சுகமாய்…
by அ.இராமநாதன் Fri May 19, 2017 9:50 am

» மழை பிடிக்கும் மனசுக்கு..
by அ.இராமநாதன் Fri May 19, 2017 9:47 am

» சாதிக்க முயல்பவனுக்கு ஆபத்திலும் வாய்ப்பு கிடைக்கும்…!!
by அ.இராமநாதன் Fri May 19, 2017 9:44 am

» ஆரம்ப் தொலைக்காட்சி தொடரில் கார்த்திகா.
by அ.இராமநாதன் Fri May 19, 2017 9:42 am

» திருமணமாகப் போகும் தன் மகளுக்கு ஒரு தந்தையின் அறிவுரை :
by அ.இராமநாதன் Fri May 19, 2017 9:40 am

» சொல்லுறதைச் சொல்லிப்புட்டேன்
by அ.இராமநாதன் Fri May 19, 2017 9:37 am

» பிறரை மகிழ்விப்பதில்தான் மகிழ்ச்சி உள்ளது
by அ.இராமநாதன் Fri May 19, 2017 9:35 am

» இனிமையாக பேசுபவனுக்கு பகைவர்கள் இருக்கமாட்டார்கள்.
by அ.இராமநாதன் Fri May 19, 2017 9:32 am

» 10 செகண்ட் கதைகள்
by அ.இராமநாதன் Fri May 19, 2017 9:31 am

» நேத்து சேலை கட்டிப் பார்த்தாள்! – 10 செகன்ட் கதைகள்
by அ.இராமநாதன் Fri May 19, 2017 9:30 am

» இன்னும் கொஞ்சம் நல்லா அழுதிருக்கலாம்…! – 10 செண்ட் கதைகள்
by அ.இராமநாதன் Fri May 19, 2017 9:29 am

» காத்ரினா கைஃப்
by அ.இராமநாதன் Fri May 19, 2017 9:28 am

» சமந்தாவின் ஆக்ஷன் அவதாரம்…!
by அ.இராமநாதன் Fri May 19, 2017 9:27 am

» சம்மருக்கு ஏன் டில்லி போறார்…?
by அ.இராமநாதன் Fri May 19, 2017 9:23 am

» ஜெய் பாகுபலி…!
by அ.இராமநாதன் Fri May 19, 2017 9:22 am

» தலைவர் இன்னிக்கு கோர்ட்டுக்கு போன மாதிரிதான்…!
by அ.இராமநாதன் Fri May 19, 2017 9:21 am

» குற்றப்பத்திரிகை நடுநடுலே மீம்ஸ் போட்டிருக்காங்களாம்..!!
by அ.இராமநாதன் Fri May 19, 2017 9:21 am

» செயல் புரியாத மனிதனுக்கு உதவி கிடைக்காது..!!
by அ.இராமநாதன் Fri May 19, 2017 9:19 am

» இங்கு சபதம் எடுக்க கூடாது…!!
by அ.இராமநாதன் Fri May 19, 2017 9:17 am

» வரலாறாய் வாழ்ந்தவர்கள் வாழ்வில் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu May 18, 2017 4:37 pm

» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed May 17, 2017 8:25 pm

» தாய் கேட்ட பரிசு
by அ.இராமநாதன் Wed May 17, 2017 6:09 am

» தண்ணீர் தண்ணீர் - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed May 17, 2017 5:42 am

» ஜெல்லி மீன்களின் பிரமாண்ட கண்காட்சி
by அ.இராமநாதன் Wed May 17, 2017 5:40 am

» நடந்து போன பீர்பாட்டில்...!
by அ.இராமநாதன் Wed May 17, 2017 5:30 am

» பூனைகளுக்கு திருமணம்..!
by அ.இராமநாதன் Wed May 17, 2017 5:28 am

» வீட்டுக் குறிப்புகள்
by அ.இராமநாதன் Wed May 17, 2017 5:26 am

» வெள்ளிப் பாத்திரங்கள் கூட திங்கள், செவ்வாய் பாத்திரங்களும்...
by அ.இராமநாதன் Wed May 17, 2017 5:22 am

» புள்ளிகள் நிறைந்த வானம் ! நூல் ஆசிரியர் : கவிஞர் ப. மதியழகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Tue May 16, 2017 9:58 pm

» அகராதியில் காதல் செய்கிறேன்
by கவிப்புயல் இனியவன் Tue May 16, 2017 8:50 pm

» ஆட்டு மந்தை – கவிதை
by அ.இராமநாதன் Mon May 15, 2017 8:07 pm

» உழைத்தால் வெற்றி நழுவாது – கவிதை
by அ.இராமநாதன் Mon May 15, 2017 8:07 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



நிலா முத்தம், நூல் விமர்சனம் : கவிஞர் இரா.ரவி

View previous topic View next topic Go down

நிலா முத்தம், நூல் விமர்சனம் : கவிஞர் இரா.ரவி

Post by eraeravi on Wed Jun 23, 2010 2:49 pm

நிலா முத்தம், நூல் விமர்சனம் : கவிஞர் இரா.ரவி


நூலின் பெயர் - நிலா முத்தம்
நூலாசிரியர் : கவிஞர் மு.முருகேஷ்,
"ஹைக்கூ" என்ற சொல் இன்று இலக்கிய உலகிலும்,பொது மக்களிடையேயும் பரவலாக பரவி இருக்கின்றது என்றால் அதற்கு மூல காரணம் கவிஞர் மு.முருகேஷ் என்றே கூறலாம். ஹைக்கூவை குறை சொன்னவர்கள் எல்லாம் இன்று வெட்கப்படும் அளவிற்கு உலகளாவிய உச்சத்தைத் தொட்டு இருக்கின்றது ஹைக்கூ. இந்நூல் ஆசிரியர் கவிஞர் மு.முருகேஷ் ஹைக்கூ தளத்தில் ஓய்வின்றி உழைத்து வரும் இனிய நண்பர். ஹைக்கூ. நூல் வெளியிட விரும்பி முகம் தெரியாத யார் அனுப்பி வைத்தாலும் உடன் மறுக்காமல் அணிந்துரை நல்கிடும் பண்பாளர். தந்த அணிந்துரைகளை "ஹைக்கூ கற்க"என நூலாகவும் வடித்துள்ளார்.

"நில முத்தம்" என்ற இந்த நூல், ஹைக்கூவைப் போலவே அளவில் சிறிதாக இருந்தாலும் கருத்தில் சிந்தனை தாக்கத்தில் பெரிய அளவில் உள்ள அற்புதம்."நிலா முத்தம்" என்ற இந்த ஹைக்கூ நூலை சட்டைப் பையில் வைத்துச் சென்று பேருந்துகளில் பயணிக்கும் வேளையிலும் படித்து இன்புறலாம். மிக நேர்த்தியான வடிவமைப்பு அச்சு. வித்தியாசமான படைப்பு. ஹைக்கூவில் தேவையற்ற சொற்கள் இருக்கக் கூடாது என்பது ஒரு இலக்கணம். இந்நூலில் அணிந்துரை எதுவுமின்றி ஹைக்கூ எழுதி உள்ளார்.

அணிந்துரை எதுவுமின்றி நேரடியாக கவிதையை படிப்பது ஓர் இனிய அனுபவம். அணிந்துரை வாசகர் மனதில் ஒரு பிம்பத்தை ஏற்படுத்தும். எந்தவித பிம்பமும் இன்றி வாசகர் நேரடியாகப் படித்து உணர்வது சுகம். இந்நூலில்; முதல் ஹைக்கூவே மிகவும் நுட்பமான ஹைக்கூ. இயற்கையைப் பாடிய ஜப்பானிய ஹைக்கூக்களை விஞ்சும் அளவிற்கு உன்னதப் படைப்பு.

தவளை குதித்தது
தாமரை இலையில்
உருளும் நட்சத்திரங்கள்

இந்த ஹைக்கூவைப் படித்து முடித்தவுடன் தவளை,தாமரை இலைத் தண்ணீர், அந்தத் தண்ணீரில் தெரியும் நட்சத்திரங்கள் என அனைத்தும் நம் மனக்கண் முன்னே வந்து விடுகின்றன. இது தான் ஒரு படைப்பாளியின் வெற்றி. இது போன்று இயற்கையைப் பாடும் ஹைக்கூ மட்டுமின்றி,சமுதாய அவலங்களைச் சாடிடும் அற்புத ஹைக்கூ கவிதைகள் ஏராளம் உள்ளது.

கவியும் இருட்டு
கடைசிக் சொட்டில்
மெழுகின் உயிர்

நேற்றைய கனவில்
கடவுள் தரிசனம்
விடிந்தால் சிலை திருட்டு

முளைக்கத் துடிக்கும் விதைகள்
மண்ணுக்குள்ளேயே சமாதியாக்கும்
பாலித்தீன் பைகள்

அரிசிப் பானைக்குள்
சில்லறைச் சத்தம்
அம்மாவின் ஞாபகம்

கரைந்துண்ணும்
காக்கைக்குத் தெரியாது
உழைப்பின் நிறம் கருப்பு

வெயில் கண்டதேயில்லை
காய்ந்து விடுகின்றன
அக்காத் துணிகள்

சிற்பத்திடம் இருக்கிறது
தொலைந்த
பாறையின் முகவரி

இளைப்பாறும் திண்ணைகள்
எஸ்.டி.டி.பூத்துகளாயின
பேச மறுக்கும் மனிதம்

பாடாத பொருள் இல்லை என்று சொல்லுமளவிற்கு அனைத்துப் பொருளிலும் பாடி தனி முத்திரை பதித்து உள்ளார்.

ஹைக்கூவிற்குப் பொருத்தமான புகைப்படங்கள்,ஓவியங்கள் பாராட்ட வேண்டும். எல்லாப் படங்களும் சிறப்பாக இருந்தாலும் எனக்கு மிகவும் பிடித்தமான படம் ஒன்று இரண்டு கால்களை இழந்த ஒரு பிச்சைக்காரர்,உருளும் தகரத்தில் படுத்து இருப்பது, அருகில் சில்லரைத் தட்டு இந்தப் புகைப்படத்திற்கு பொருத்தமான ஹைக்கூ இதோ.

இழப்பின் சோகத்தை
ஆறுதல் படுத்தும்
சில்லறைச் சப்தம்

இப்படி புகைப்படம் உள்ள ஹைக்கூ கவிதைகளின் தாக்கம் மிகவும் நுட்பமாக உள்ளது.செலவு அதிகம் தான் இருப்பினும், வருங்காலங்களில் ஒவ்வொரு ஹைக்கூவிற்கு ஒரு புகைப்படமோ அல்லது ஓவியமோ இடம் பெற்றால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது என் கருத்து. இந்த முயற்சியை எனது இதயத்தில் ஹைக்கூ நூலில் செய்து பார்த்தேன்.பலரும் பாராட்டினார்கள்.

மொத்தத்தில் இந்த,"நிலா முத்தம்" நூல்,முழு நிலவு நாளன்று,அமைதியாக தனிமையில் நிலவை ரசித்து அடைந்த இன்பத்தைத் தருகின்றது. வாங்கிப் படித்துப் பாருங்கள்.நான் சொன்னது உண்மை என்பதை நீங்களே உணருவீர்கள்.

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2090
Points : 4706
Join date : 18/06/2010

Back to top Go down

Re: நிலா முத்தம், நூல் விமர்சனம் : கவிஞர் இரா.ரவி

Post by eeranila on Wed Jul 07, 2010 9:05 pm

அழகிய ஹைக்கூ தோரணங்கள்
மாலையாக சமுதாய அவலங்களின்
சவ ஊர்வலத்திற்க்கு

eeranila
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 321
Points : 361
Join date : 01/12/2009
Location : Saudi Arabia

Back to top Go down

NANDRI

Post by eraeravi on Thu Jul 08, 2010 2:02 pm

வணக்கம் மிக்க நன்றி
அன்புடன்
இரா .இரவி
eraeravi.wordpress.com
www.kavimalar.com :oops:

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2090
Points : 4706
Join date : 18/06/2010

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum