"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» அவசரப்படாதே மச்சி!!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:32 pm

» பாப்பி – நகைச்சுவை
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:27 pm

» ரதிதேவியா நடிக்கிறது யாரு மேடம்…?
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:26 pm

» தலைவருக்கு மது வாடையை கண்டாலே பிடிக்காது…!!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:22 pm

» தலைவருக்கு சிறப்பு நாற்காலி போட்டிருக்காங்க…!!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:21 pm

» நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:20 pm

» கடல் போல் இருக்கும் மனைவி!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:19 pm

» நமக்கு வாய்த்த தலைவர்
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:18 pm

» என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:02 pm

» தலைவர் தர்ம தரிசனம்தான் செய்வார்!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 8:50 pm

» ஏண்டா வீட்டுக்காரரை கொலை பண்ணினே?
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 8:48 pm

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன் Mon Aug 14, 2017 3:12 pm

» இனிய காலை வணக்கம்...
by அ.இராமநாதன் Sat Aug 12, 2017 9:10 pm

» ராஜஸ்தானில் காந்தி ஜெயந்திக்கு லீவு இல்லை
by அ.இராமநாதன் Sat Aug 12, 2017 7:02 pm

» திரைப்பட தணிக்கை வாரியத்தின் உறுப்பினர்களாக நடிகைகள் கவுதமி- வித்யாபாலன் நியமனம்
by அ.இராமநாதன் Sat Aug 12, 2017 6:42 pm

» இஸ்லாமிய பெண்ணின் பர்தாவை நீக்கிய குற்றத்திற்காக ரூ.54 லட்சம் இழப்பீடு
by அ.இராமநாதன் Sat Aug 12, 2017 6:41 pm

» கொடிய வால் நட்சத்திரங்கள் ஒருநாள் பூமியை தாக்கி பயங்கர அழிவுகளை ஏற்படுத்தும் - நாசா
by அ.இராமநாதன் Sat Aug 12, 2017 6:40 pm

» - இந்திய ராணுவத்தில் ரோபோக்களை பயன்படுத்த பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல்
by அ.இராமநாதன் Sat Aug 12, 2017 6:39 pm

» சுவையான மீன் இனங்களை பெருக்க மேற்கு வங்க அரசு தீவிரம்
by அ.இராமநாதன் Sat Aug 12, 2017 6:37 pm

» பாரதி - சிறுகதை
by varun19 Sat Aug 12, 2017 2:13 pm

» அனுபவ மொழிகள்
by அ.இராமநாதன் Sat Aug 12, 2017 1:28 pm

» பிரபஞ்ச உண்மைகள் - தொடர்பதிவு
by அ.இராமநாதன் Fri Aug 11, 2017 4:45 pm

» நகைச்சுவைப் படமாக உருவாகிறது ‘தொல்லைக்காட்சி’
by அ.இராமநாதன் Wed Aug 09, 2017 1:53 pm

» தனி மனிதன் தருகின்ற தண்டனை பற்றிய கதை
by அ.இராமநாதன் Wed Aug 09, 2017 1:50 pm

» கண்ணுக்கு குலமேது?
by அ.இராமநாதன் Wed Aug 09, 2017 1:40 pm

» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை
by கவிப்புயல் இனியவன் Sat Aug 05, 2017 10:22 pm

» இறந்தும் துடிக்கும் இதயம்
by கவிப்புயல் இனியவன் Sat Aug 05, 2017 9:59 pm

» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
by கவிப்புயல் இனியவன் Sat Aug 05, 2017 9:35 pm

» நறுக்குக் கவிதைகள்
by அ.இராமநாதன் Fri Aug 04, 2017 10:07 pm

» பெய்யும் மழையின் அழகு…!!
by அ.இராமநாதன் Fri Aug 04, 2017 10:05 pm

» காய்ந்து போகாத கவிதை மை
by அ.இராமநாதன் Fri Aug 04, 2017 10:04 pm

» இனியேனும் போராடு
by அ.இராமநாதன் Fri Aug 04, 2017 9:59 pm

» விக்ரம் வேதா – திரைப்பட விமரிசனம்
by அ.இராமநாதன் Thu Aug 03, 2017 9:41 pm

» அருளே திருளே - கவிதை
by அ.இராமநாதன் Thu Aug 03, 2017 9:33 pm

» ஏன் வதைக்க வேண்டும்
by அ.இராமநாதன் Thu Aug 03, 2017 9:25 pm

» கொஞ்சம் வெயிட் போட்டிருக்கிறாய் …!
by அ.இராமநாதன் Thu Aug 03, 2017 4:18 pm

» எப்போதும் தமிழில் அச்சனை...!
by அ.இராமநாதன் Thu Jul 27, 2017 9:29 pm

» உபயோகமில்லாத பொருள் ஏதாவது இருந்தா கொடுங்க தாயீ
by அ.இராமநாதன் Thu Jul 27, 2017 9:22 pm

» சொல்றதுக்கெல்லாம் சரின்னு தலையாட்டுவா...!!
by அ.இராமநாதன் Thu Jul 27, 2017 9:17 pm

» சின்ன வீடு - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Jul 23, 2017 9:48 am

» வண்ணக் கனவுகள்!
by அ.இராமநாதன் Sun Jul 23, 2017 9:26 am

» வாசகர் கவிதை
by அ.இராமநாதன் Sun Jul 23, 2017 9:19 am

» கைப்பேசி யாருக்கு - காத்துவாயன் கவிதை
by அ.இராமநாதன் Sun Jul 23, 2017 9:18 am

» இக்கரை அக்கரை - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Jul 23, 2017 9:09 am

» நியாயமா- ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sat Jul 22, 2017 3:54 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines ”இரண்டு சூவிங்கம் கொடுங்க

View previous topic View next topic Go down

”இரண்டு சூவிங்கம் கொடுங்க

Post by soundar on Wed Feb 29, 2012 12:28 pm

பரிதி வழக்கம் போல அதிகாலையே எழுந்து குளித்து முடி திருத்தும் நிலையத்திற்கு புறப்பட்டு கொண்டிருந்தார்.

”என்னப்பா இது காயம்...?!” என கன்னத்தை பார்த்து கேட்டாள் அவர் மகள்.

”அது தெரியலைம்மா... ஏதோ பூச்சி கடிச்சு இருக்கும் போல.. அதான் வீங்கி இருக்கு.”

"என்னப்பா இப்படி சொல்றீங்க..?! பூச்சி கடிச்சது கூட தெரியாமலாதூங்குவீங்க...?? வலி அதிகமா இருக்காப்பா..??”


”வலி கொஞ்சம் அதிகமாதான்ம்மா இருக்கு. கொஞ்சம் சுண்ணாம்பு வச்சா சரியா போய்டும்.”

”ஐயோ... அதெல்லாம் வேணாம்ப்பா..ஹாஸ்பிட்டல் போங்கப்பா..நான் காலேஜ் போயிட்டு வரேன். நீங்க சாப்பிடுங்க” என சொல்லி புறப்பட்டாள்.

மகள் சொல்வதை கேட்காமல் பெட்டி கடையில் சுண்ணாம்பு வாங்கி வைத்து கொண்டு வேலைக்கு கிளம்பினார் பரிதி.


------------------------------------------------------

பரிதி பொறுப்பான குடும்ப தலைவர்.. மனைவி இறந்து பல வருடங்கள் ஆன போதும் தன் கடமைகளை சரியாக செய்து கொண்டிருப்பவர்... முடி திருத்தும் நிலையம் நடத்திவருகிறார். அதன் மூலம் வரும் வருமானத்தை வைத்தே தன் இரு மகள்களையும் படிக்க வைக்கிறார்.

பரிதி. வழியில் உள்ள கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செய்வது வாடிக்கை. இப்படி நல்ல பழக்கங்களை வைத்திருக்கும் பரிதிக்கு, ஒரு கெட்ட பழக்கமும் இருக்கின்றது.

கோவிலுக்கு சென்று விட்டு அடுத்து அவர் செல்வது மாவா பான் பராக் கடைக்கு. ஒரு நாளைக்கு தேவையான மாவா வாங்கி கொண்டு அங்கேயே சிறிது போட்டு கொண்டு கடைக்கு நகர்ந்தார். மாவா போடும் பழக்கத்தை விளையாட்டாக தொடங்கி விட்டு இப்போது விட முடியாமல் தவித்து வந்தார்.

கடையை திறந்து சுத்தம் செய்து கொண்டிருந்த பரிதி, வாடிக்கையாளர் வந்தவுடன் முடிதிருத்தும் பணியை செய்வதற்கு முன் மீண்டும் ஒரு முறை மாவாவை போட்டு கொண்டார். வாடிக்கையாளர் வந்தால் கூட பாக்கு போடுவதை நிறுத்த மாட்டார். மாவா போட்டு வேலை செய்தால் தான் சுறுசுறுப்பாக வேலை செய்யமுடியுமென நினைத்து கொள்வார்.
வாடிக்கையாளர் சென்றவுடன். பரிதியுடைய நெருங்கிய நண்பர் கதிர் தினசரிநாளிதழ் வாங்கி கொண்டு வந்தார். செய்தித்தாளை பிரித்து இருவரும் படிக்கத் தொடங்கினர். மாவா பாக்கெட்டை எடுத்து தன் நண்பரிடம் கொடுத்தார் பரிதி.இருவரும் மாவாவை போட்டு கொண்டு செய்தித்தாளுடன் மாவாவையும் சேர்த்து அரைத்து கொண்டிருந்தனர். இப்படி பரிதி கடை தொடங்கியது முதல் நடந்து வருகிறது...மாவா மூலமே இருவரும் நெருங்கிய நண்பர்கள்.


வாடிக்கையாளர் வந்தவுடன் கதிர் “சரி பரிதி... நான் கிளம்புகிறேன் முடிந்தால் மாலை வருகிறேன். இல்லையேல் நாளை வருகிறேன்” என்று விடைபெற்று கொண்டார் கதிர்.

வாடிக்கையாளரை கவனித்த பரிதி வேலையை பார்த்து கொண்டிருந்த பொழுது பேச்சை தொடங்கிய வாடிக்கையாளர்...


”ஏன் பரிதி... நீ இந்த பாக்கு போடுறதை நிறுத்தவே மாட்டியா..?? முடிவெட்டும் போதாவது நிறுத்தவேண்டியது தானே?”

”அண்ணே...நானும் போடக்கூடாதுன்னுதான் நினைக்குறேன். ஆனா... முடிய மாட்டுதுண்ணே...காலைல கடைக்கு வரும்போது நேரா மாவா கடைக்குதானே கால் போகுது.. நான் முடி வெட்ட பழகும் போது இந்த பழக்கத்தையும் சேர்த்து கத்துகிட்டேண்ணே....”

”அட என்னப்பா நீ... இது சாதாரண விஷயம்ப்பா... பாக்கு போடணும்ன்னு நினைக்கும் போது சூவிங்கம் போட்டுக்கோப்பா... தன்னாலே மறந்திடுவே... சாதாரணமான ஆட்களுக்கே கேன்சர் எல்லாம் வருது. நீ வேற இந்த பாக்க போட்டு மெல்லுற.. பொம்பள பசங்க எல்லாம் வைச்சு இருக்க....பார்த்து நடந்துக்கோ..”


”அண்ணே... இந்த சூவிங்கம் போடுறதையெல்லாம் எப்போவோ செய்து பார்த்துட்டேண்ணே... இருந்தாலும் நான் மீண்டும் ஒரு தடவை முயற்சி செய்து
பார்க்கிறேன்.”

ஐம்பது ரூபாயை கொடுத்து வாடிக்கையாளர் விடைபெற்று கொண்டார்...

------------------------------------------------------

இரவு வேலை முடிந்து வீட்டுக்கு வந்தார். அருகிள் வந்த மூத்தமகள்..
“என்னப்பா இன்னைக்கும் பாக்கு போட்டீங்களா?”

”ஏன்ப்பா இப்படி பாக்கு போடுறீங்க..?! எத்தனை தடவை சொன்னாலும் கேக்க
மாட்டீங்களா..??”

எதுவும் பேசாமல் நின்று கொண்டிருந்தார் பரிதி...

”சரி வாங்க சாப்பிடலாம்.. பாக்கு போட்டு உடம்பை கெடுத்துக்காதீங்கப்பா..”

சாப்பிடும்போது கேட்டாள், ”என்னப்பா ஹாஸ்பிட்டல் போனீங்களா...??”

”இல்லம்மா... கொஞ்சம் சுண்ணாம்பு வச்சேன். வலி கொஞ்சம் பரவாயில்லை.
தூங்கி எழுந்தா சரியா போய்டும் ”

இரவு உணவை முடித்து படுக்க சென்றார்.

காலை வெகு நேரமாகியும் எழவில்லை. சோர்வில் இன்னும் தூங்கிக்கொண்டிருந்தார்.

------------------------------------------------------------------------------

கதிர் செய்தித்தாளை வாங்கிக் கொண்டு கடைக்குச்சென்றார். கடை இன்னும் திறக்கப்படாமலே இருந்தது.பரிதியின் வருகைக்கு காத்திருந்து...அங்கேயேபேப்பர் படித்து கொண்டிருந்தார் கதிர். தன் வேலைக்கு நேரம் ஆவதால் செய்தித்தாளை கடையின் ஷட்டரில் மாட்டி வைத்து விட்டு சென்று விட்டார்.

மறுநாளும் கடை பூட்டி இருப்பதை பார்த்த நண்பர் பரிதியின் வீட்டுக்கே சென்றார். அங்கே பரிதி காய்ச்சலில் படுத்துகொண்டிருந்தார்.

”என்ன பரிதி... உடம்பு சரி இல்லையா...?! ”

”ஆமாண்டா... காய்ச்சல் அதிகமா இருந்துச்சு... நேத்து நைட்தான் கிளினிக்
போயிட்டு வந்தேன். ”

”என்னடா சொன்னாங்க... இப்போ எப்படி இருக்கு...?!”

”இப்போ காய்ச்சல் இல்லை. கன்னத்துல புண் இருக்கு. அதனாலதான்வந்திருக்கும்.எதுக்கும் ஒரு வாரம் கழிச்சு வந்து பாக்கச் சொன்னாரு டாக்டர். இன்னைக்கு கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு நாளை கடை
திறந்திடுவேன்டா.... ”

”சரிடா... எனக்கும் வேலைக்கு நேரமாச்சு. நானும் கிளம்புறேன். நாளைக்கு கடைக்கு வரேன். ”

-----------------------------------------------------------------------------

ஒரு வாரத்திற்கு மேல் காயம் ஆறுவதும், மீண்டும் வருவதுமாய் இருந்ததால்
மருத்துவமனைக்கு செல்லாமலே இருந்தார் பரிதி.

வழக்கம் போல காலையில் கதிர் பேப்பர் கொண்டு வர..” என்னடா இன்னுமா உனக்கு காயம் ஆறல.. இதுல பாக்கு வேறயா” என்று மாவாவை பிடிங்கி கொண்டார்.

”டேய்... கொஞ்சம் மாவா கொடுடா... நீ மட்டும் போடுறே..?”

”டேய்...ஒழுங்கா பேப்பர் படி.. ” என பேப்பரை பிரித்த பொழுது... ஒரு துண்டு நோட்டீஸ் ஒன்று விழுந்தது..எதாவது விளம்பரமாய் இருக்குமென தூக்கிப்போட பார்த்தார் பரிதி.

”என்னடா அது என வாங்கி படித்த கதிர்.....

அதை பரிதியிடம் காண்பித்தார்..பார்த்தவுடன் இருவருமே மௌனமாய் இருந்தனர்...புற்றுநோய் கண்டறிய இலவச சோதனை என புற்று நோயின் அறிகுறிகள் தொடர்பான படங்கள் அந்த நோட்டீஸில் இருந்தது.. பரிதியின் கன்னத்தில்இருந்த காயங்கள் போலவே நோட்டீஸில் இருந்தது.

”என்னடா எனக்கு இருக்கற காயம் மாதிரியே இந்த நோட்டிஸ்ல இருக்கு. எனக்கு கேன்சரா இருக்குமோ..??”

”அதெல்லாம் இருக்காதுடா...ஆனா நமக்கும் நாற்பது வயசுக்கு மேல ஆகுது, நாற்பது வயசுக்கு மேல இருக்குறவங்க புற்றுநோய் இருக்கான்னுபரிசோதனை பண்ணிக்கணும்ன்னு சொல்றாங்க... வா... நாம போய் சும்மா பார்த்துட்டு வருவோம்.

------------------------------------------------------------------------

மறுநாள் புற்றுநோய் இருக்கிறதா இல்லையா என பார்க்க சென்றனர்... பரிதியை ஒரு டாக்டர் பரிசோதனை செய்து கொண்டிருந்தார். டாக்டர் மற்ற டாக்டரை அழைத்து காண்பித்தார்..

”பாக்கு போடுவீங்களா..?? ”

”ஆமா டாக்டர்..”

”எத்தனை வருசமா போடுறீங்க..??”

”இருபதுவருசமா போடுறேன் டாக்டர்..”

”வலி அதிகமா இருக்கா..?”

”ஆமாங்க... வலி அதிகமா இருக்கு.. ”

”பரிதி உங்களுக்கு புற்று நோய்க்கான அறிகுறி தெரியுது. நாளைக்கு ஹாஸ்பிட்டல் வாங்க... உங்க காயத்தை சோதனை செய்யணும்..நல்ல வேளையா இப்பயேவந்தீங்க... புற்றுநோய் முத்திப்போய் இருந்தா ஒண்ணுமே செய்திருக்க முடியாது... கண்டிப்பா நாளைக்கு ஹாஸ்பிட்டல் வாங்க... புற்றுநோயை மேலும் பரவாம தடுத்திடலாம்.உங்க வீட்டுல யாராவது நாற்பது வயதிற்கு மேல இருந்தா வந்து பரிசோதனை செய்து கொள்ள சொல்லுங்க பரிதி..”

”சரிங்க டாக்டர்” என தளர்ந்த குரலில் கூறி வெளியேறினார் பரிதி..

கதிரும் பரிதியும் பேசிக்கொண்டே சென்றனர்...

”இனிமே நாம பாக்கே போடக்கூடாது பரிதி.. ” என்றார் கதிர்.

”ஆமாண்டா...நல்ல வேளை உனக்கு ஒன்ணுமில்லைன்னு சொல்லிட்டாங்க.. உனக்கு
ஒண்னும் ஆகலேன்னு இனி நீ பாக்கு போட ஆரம்பிச்சிராத..”

”நீ வேற பரிதி... நான் இனி போட மாட்டேன்டா.. யாராவது போடுறதை
பார்த்தாலும் தடுக்கப்போறேன்டா.. ”

”நல்லா சொன்னடா.. ஆனா எனக்கு இந்த நோய் தீவிரமாகிறதுக்குள்ள என் மகள்களுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை எப்படி அமைச்சு தரப்போறேன்னு கவலையா
இருக்கு.”

”கவலைப்படாதே அதான் ஆரம்பத்திலேயே வந்துட்டோம்ல சரியாகிடும்..”

“இனிமே நீயும் நல்லா உடம்பை கவனிச்சிக்கோ கதிர்” லேசாக கண்கள் கலங்கின பரிதிக்கு…

“நிச்சயமாடா.. என் மனைவிக்குக் கூட நாற்பது வயசு ஆகுது...அவளையும் நாளைக்கு ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போய் சோதனை செய்யப்போறேன்டா சரி...வா பரிதி... டீ குடிச்சிட்டு போகலாம்.. ”

”சரிடா. ”

பரிதி பெட்டி கடைக்கு சென்று... ”இரண்டு சூவிங்கம் கொடுங்க” என்றார்.

[You must be registered and logged in to see this link.]
avatar
soundar
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 62
Points : 79
Join date : 22/01/2012
Age : 30
Location : chennai

Back to top Go down

Re: ”இரண்டு சூவிங்கம் கொடுங்க

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Feb 29, 2012 12:36 pm

பயனுள்ள கதை... சிறப்புக் கதையும் கூட... மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

இரண்டு சூவிங்கம் கொடுங்க

Post by soundar on Wed Feb 29, 2012 1:07 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:பயனுள்ள கதை... சிறப்புக் கதையும் கூட... மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி

நன்றி நண்பா...
avatar
soundar
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 62
Points : 79
Join date : 22/01/2012
Age : 30
Location : chennai

Back to top Go down

Re: ”இரண்டு சூவிங்கம் கொடுங்க

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Wed Feb 29, 2012 1:35 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:பயனுள்ள கதை... சிறப்புக் கதையும் கூட... [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56783
Points : 69523
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum