"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பூ பூப்பதும் உலகச் செய்திதான்
by அ.இராமநாதன் Yesterday at 11:20 pm

» சின்னச் சின்ன சிந்தனைகள்
by அ.இராமநாதன் Yesterday at 10:46 pm

» குடம் குடமாய் பாலாபிஷேகம் - எக்ஸ்பிரஸ் கதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 6:13 pm

» குழந்தையை தவறவிட்டவர் கையில் பத்திரமாக இருந்தது கைப்பேசி...!!
by அ.இராமநாதன் Yesterday at 6:08 pm

» உன்னோட புடவை பளிச்சுன்னு இருக்கே...?!
by அ.இராமநாதன் Yesterday at 5:35 pm

» உங்க பொண்ணுக்கு யோகா வராது, சமையல் கத்துக்கொடுங்க...!!
by அ.இராமநாதன் Yesterday at 5:32 pm

» மூலிகை உணவு
by அ.இராமநாதன் Yesterday at 5:15 pm

» அவசரம் - X பிரஸ் கதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 5:06 pm

» X பிரஸ் கதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 4:53 pm

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 3:30 pm

» ஆக்சிஸ் வங்கியில் ரூ.4,000 கோடி மோசடி - தனியார் நிறுவன இயக்குனர்கள் கைது
by அ.இராமநாதன் Yesterday at 3:09 pm

» நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,விற்கு எதிராக 3 நோட்டீஸ்
by அ.இராமநாதன் Yesterday at 2:59 pm

» படமும் செய்தியும்
by அ.இராமநாதன் Yesterday at 2:53 pm

» சுதந்திர போராட்ட கதையில் சிரஞ்சீவியுடன் நடிக்கும் நயன்தாரா
by அ.இராமநாதன் Yesterday at 10:04 am

» தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்
by அ.இராமநாதன் Yesterday at 10:00 am

» முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணி சாம்பியன்
by அ.இராமநாதன் Yesterday at 10:00 am

» தனுஷ்கோடி கடலில் ரூ.300 கோடியில் காற்றாலை
by அ.இராமநாதன் Yesterday at 9:43 am

» 20,21ல் திருமலையில் இலவச தரிசனம்
by அ.இராமநாதன் Yesterday at 9:41 am

» ரிசர்வ் வங்கி அதிகாரிகள் திருப்பதிக்கு போகலாம்: சிதம்பரம்
by அ.இராமநாதன் Yesterday at 9:39 am

» தனிமையில் வாடும் பொம்மை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இராமசெயம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Sun Mar 18, 2018 11:02 pm

» அமரர் கல்கி பற்றி அவரது மகள் ஆனந்தி,
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 9:34 pm

» இருமலை விரட்டலாம்
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 9:01 pm

» காதலரை மணந்த ஸ்ரேயா; மும்பையில் ரகசிய திருமணம்
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 8:58 pm

» அழகுக்காக ஆபரேஷன் செய்யக்கூடாது -ராணி முகர்ஜி
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 8:50 pm

» மராட்டியத்தில் நிரவ் மோடிக்கு சொந்தமான சூரிய மின்உற்பத்தி ஆலையை முடக்கியது அமலாக்கத்துறை
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 8:41 pm

» களவும் கற்று மற...!
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 3:33 pm

» மின் ஒளியாக அவள்...!
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 3:26 pm

» ஒரு படம், நுாறு படத்திற்கு சமம்!
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 12:30 pm

» கிராபிக்ஸ் பாம்பாக மாறும் ராய்லட்சுமி! -
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 12:30 pm

» அப்பாவுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி!
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 12:29 pm

» போதை விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பிரியா வாரியர்!
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 12:29 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 12:28 pm

» பிருதிவிராஜின் புதிய தோற்றம்
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 7:59 am

» மகள் சுருதிக்கு கமல்ஹாசன் அறிவுரை
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 7:56 am

» “பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 7:52 am

» நடிகர் விஷால், கமல்ஹாசனுடன் திடீர் சந்திப்பு
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 7:49 am

» 'மொபைல் மணி டிரான்ஸ்பர்' நிறுத்தம்
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 7:43 am

» ‛அதிநாயகே' என்ற வார்த்தையை திருத்த வேண்டும் : அரியானா அமைச்சர்
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 7:42 am

» சுத்தமாகிறது தாஜ் மஹால்!
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 7:40 am

» நீ இளவரசி மாதிரி இருக்கேன்னு சொல்லல? -
by அ.இராமநாதன் Sat Mar 17, 2018 11:16 pm

» வினாத்தாள் அவுட் ஆகியும் ஏன் உன்னால பாஸ் ஆக முடியலே?
by அ.இராமநாதன் Sat Mar 17, 2018 10:56 pm

» நிதானத்தைக் கடைப்பிடி,...
by அ.இராமநாதன் Sat Mar 17, 2018 10:37 pm

» விண்மீன்கள் - கவிதை
by அ.இராமநாதன் Sat Mar 17, 2018 5:03 pm

» நொடிக் கதைகள்
by அ.இராமநாதன் Sat Mar 17, 2018 4:59 pm

» மல்லையா, நிரவ் மோடி போல 31 பேர் இந்தியாவை விட்டு தப்பி ஓடியுள்ளனர் - மத்திய மந்திரி தகவல்
by அ.இராமநாதன் Sat Mar 17, 2018 8:47 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines தவறான பாதையில் தமிழ்த் திரையுலகம்!

Go down

தவறான பாதையில் தமிழ்த் திரையுலகம்!

Post by நெல்லை அன்பன் on Sat Mar 03, 2012 12:39 pm

தவறான பாதையில் தமிழ்த் திரையுலகம்!
தவறான பாதையில் தமிழ்த் திரையுலகம்!
தரமான தமிழ்ப் படங்கள் வருகின்றன என்று ரொம்ப சந்தோசப்பட்டால்… தலைவா! ரொம்ப சந்தோசப்படாதே அது வெளிநாட்டு படத்தில் இருந்து சுட்ட கதை காட்சி இசை என்று உடனே கூறி விடுகிறார்கள். இவர்களை நம்பி ஒரு படத்தைப் பாராட்டி எழுத முடியவில்லை. எழுதிய நம்மை இளிச்சவாயன் ஆக்கி விடுகிறார்கள். நல்ல படங்களை இதைப்போல காபி அடித்து எடுப்பது தவறில்லை நல்ல படங்கள் கிடைத்தால் போதும்! என்று கூறுபவர்கள் ஒரு சாராரும் இல்லை அது தவறு என்று கூறுபவர்கள் ஒரு சாராரும் இருக்கிறார்கள். இதில் நான் இரண்டாவது வகை.

முன்பெல்லாம் நமக்கு வெளிநாட்டுப்படங்களை பார்க்க வாய்ப்புக் குறைவு திரையரங்களிலும் மிகப் பிரபலமான படங்களை மட்டுமே வெளியிடுவார்கள். எதோ ஒரு சிலர் மட்டும் இந்தப்படங்களை VCD ல் பார்த்து வந்தனர் தற்போது நிலைமை தலைகீழாக மாறி விட்டது. இணையம் பிரபலமான பிறகு மிக மிக எளிதாக திரைப்படங்களை தரவிறக்கம் செய்து பார்த்து விடுகிறார்கள். நகரங்களில் திரையரங்குகளும் அதிகளவில் வெளிநாட்டுப்படங்களை திரையிட ஆரம்பித்து விட்டனர்.

தற்போதெல்லாம் வெளிநாட்டுத்திரைப்படங்களை பலர் விரல் நுனியில் வைத்து இருக்கிறார்கள் அதே போல தொழில்நுட்பமும் வேகமாக வளர்ந்து வருகிறது. இதனால் முன்பு போல வெளிநாட்டுப்படத்தை சுட்டு கதையோ காட்சியில் இசையோ இருந்தால் உடனே கண்டு பிடித்துவிடுகிறார்கள். இதனால் இத்தனை நாட்களாக சுட்டுப் படமெடுத்துக்கொண்டு இருந்தவர்கள் நிலை பரிதாபமாக இருக்கிறது. முன்பு ஒன்று இரண்டு பேர் இதை செய்து கொண்டு இருந்ததால் பெரிய விசயமாக தெரியவில்லை ஆனால் வருகிற பெரும்பாலான படங்கள் சுட்ட கதை, காட்சி, இசையாகவே இருக்கிறது. உண்மையாகவே வெறுத்துப்போய் விட்டேன்.

இதைவிடக்கொடுமை கதையே சுட்ட கதை, காட்சியாக இருக்கும் ஆனால் இவர்கள் என்னமோ இவங்களே கஷ்டப்பட்டு யோசித்து மூளையை கசக்கி உருவாக்கிய கதை மாதிரி பில்டப் கொடுப்பார்கள் பாருங்கள்! யப்பா வருகிற கொலைவெறி கொஞ்ச நஞ்சமல்ல. எப்படித்தான் வெட்கமில்லாமல் இதைப்போல இவர்களால் செய்ய முடிகிறதோ! நந்தலாலா அட்டக்காப்பி படம். இந்த மிஸ்கின் என்னமோ இவரே யோசித்த கதை மாதிரி பேட்டி கொடுத்துக்கொண்டு இருந்தார். அப்புறம் எல்லோரும் போட்டு நொக்கியவுடன் தான் வழிக்கு வந்தார். இவருடைய அஞ்சாதே படம் அருமையான படம் இன்று வரை எனக்கு ரொம்பப் பிடித்த படங்களில் இந்தப்படம் உண்டு. அஞ்சாதே என்ற நல்ல படத்தை கொடுத்ததற்காக இவர் சுட்ட நந்தலாலா சரி என்று ஆகி விடுமா!

கமல் மீது எப்போதும் எனக்கு மரியாதை உண்டு அவருடைய நடிப்பு மீது என்றும் எனக்கு மதிப்புண்டு. கமல் நடித்த பல படங்கள் வெளிநாட்டுப்படங்கள் காபி என்று தெரிந்த போது கடுப்பாகவே இருந்தது. முன்பு வெகு சில படங்களே காபி என்று நினைத்து இருந்தேன் பின் தான் சமீப வருடங்களில் வந்த பெரும்பாலான படங்கள் காபி என்று அறிந்தேன் அதிலும் சமீபத்தில் வெளிவந்த மன்மதன் அம்பு படத்தில் வரும் நீலவானம் பாடல் காட்சி கூட காபி என்ற அறிந்த போது உண்மையாகவே கமல் மீதான மதிப்பு பெருமளவில் குறைந்து விட்டது. இவருடைய அவ்வை சண்முகி, பஞ்ச தந்திரம், மகளிர் மட்டும், தெனாலி என்று ஏகப்பட்ட படங்கள் சுட்டப் படங்களே. காலம் மாற மாற தற்போது காபியை நல்ல படம் என்று ஏற்றுக்கொள்ளும் மக்களைப்போல வரும் தலைமுறைகளும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அவர்கள் தற்போது போல சென்டிமென்ட் எல்லாம் பார்க்க மாட்டார்கள். வெட்டு ஒன்று துண்டு இரண்டாகத்தான் பேசுவார்கள்.

Memento ஆங்கிலப்படத்தின் காட்சிகளை வைத்து கஜினி, Derailed என்ற படத்தை மொத்தமாக சுட்டு பச்சைக்கிளி முத்துச்சரம், அந்நியன் படத்தில் வரும் தண்டனை முறைகள், அசல் படத்தில் அஜித் துப்பாக்கியை வேகமாக அசெம்பல் செய்யும் காட்சி, எந்திரனில் சில ரோபோ காட்சிகள் என்று இதைப்போல ஏகப்பட்ட படங்கள் காட்சிகள் திருடப்பட்டுள்ளது. கவுதம் மேனன் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியிட்ட விஜய் நடிக்கும் புதிய திரைப்படத்தின் யோஹன்: அத்தியாயம் ஒன்று பட போஸ்டர் கூட காபி.

நல்ல படங்கள் வரவேண்டும் என்பது தான் அனைவருடைய விருப்பமாக இருக்கும் ஆனால் அது உண்மையான சொந்த முயற்சிப் படமாக இருந்தால் நமக்கும் பெருமையாக இருக்கும். தற்போது தமிழ்படங்கள் வெளிநாடுகளில் அதிக வரவேற்ப்பை பெறுகிறது. வரும் காலங்களில் இது இன்னும் அதிகரிக்கவே செய்யும். இதைப்போல தருணங்களில் காபி அடிக்கப்பட்ட படங்களைப் பற்றிய விஷயம் இன்னும் பலருக்குப் போய்ச்சேரும். இதைக்காணும் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்… தமிழ்ப் படம் என்றாலே காபி என்று நினைக்க மாட்டார்களா! நம்ம படத்தை சுட்டு நமக்கே இவனுக படம் காட்டுறானுக என்று எண்ண மாட்டார்களா! என்ன தான் சுட்ட படம் நல்ல படமாக வந்தாலும் அது காலம் இருக்கும் வரை திருட்டுப்படம் என்றே கூறப்படும். உண்மையான உழைப்பிற்கு கிடைக்கும் மரியாதையே என்றும் நிரந்தரம்.

தசாவதாரம் பாடல் வெளியீட்டு விழாவிற்கு ஜாக்கி சானை அழைத்ததால் பெரிய அளவில் அந்தப்படத்திற்கு விளம்பரம் கிடைத்தது. அதுவே ஆஸ்கார் ரவிச்சந்திரனுக்கு வினையாகிப்போனது. Oscar என்ற பெயர் நாங்கள் காபி ரைட் பெற்று இருக்கிறோம் அதனால் இந்தப்பெயரை தொடர்ந்து பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என்று நிஜ ஆஸ்கார் மிரட்டியவுடன் தன்னுடைய நிறுவனப் பெயரை மாற்றி Aascar என்று வைத்து விட்டார். இதை எதற்க்குக் கூறுகிறேன் என்றால் நம் தவறு தெரியாதவரை நமக்கு பிரச்சனை இல்லை தெரிந்தால் இதைப்போல நிலை தான். தற்போது நமது படம் பற்றி வெளிநாட்டில் அவ்வளவாக தெரியவில்லை அதனால் யாரும் எதுவும் கூறவில்லை நாளையும் இதே போல நிலை இருக்காது. சுட்டு படமெடுத்தால் இதைப்போல வழக்குப்போடப் போகிறேன் என்று கூறும் நாள் வெகுதொலைவில் இல்லை.

இவர்கள் எல்லாம் வெளிநாட்டுப்படங்களை சுட்டு எடுத்தால் P வாசு போன்றவர்கள் மற்ற மாநிலமொழிப் படங்களை சுட்டு எடுப்பார்கள். மலையாளப் படமான மணிசித்ரதாழு சுட்டு சந்திரமுகி எடுத்து விட்டு அது தன்னுடைய கதை என்று கூசாமல் அவிழ்த்து விட்டார். குசேலன் கூட மலையாள இயக்குனர் ஸ்ரீனிவாசனிடம் பல பஞ்சாயத்துகளுக்கு பிறகே சரி செய்யப்பட்டது. படங்களை உரிமைப் பெற்று ரீமேக் செய்கிறார்கள் என்றால் யாரும் எந்தக் கேள்வியும் கேட்கப்போவதில்லை. வாசு போல என்னோட சொந்தக்கதை என்று கூறவும் ஒரு தில்லு வேண்டும் ஊருக்கே தெரிந்த விஷயத்தை. எந்திரன் படத்தில் புரபசர் ரஜினியும் ரோபோ ரஜினியும் ஐஸ்வர்யா திருமணம் பற்றி பேசுவது ஆரூர் தமிழ் நாடான் என்பவர் எழுதிய புத்தகத்தில் வந்துள்ளது. படித்துப்பார்த்தேன் ஏறக்குறைய வசனங்கள் அப்படியே உள்ளது. தற்போது இது குறித்து வழக்கு நடந்து கொண்டு இருப்பதால் இது பற்றி மேலும் கூற விரும்பவில்லை.

தற்போது வந்த தெய்வத்திருமகள் படம் கிட்டத்தட்ட 70 % காபி அடித்துத்தான் எடுக்கப்பட்டு இருக்கிறது. I am sam படத்தில் வரும் ஹீரோ முடி அலங்காரம் முதற்கொண்டு அப்படியே உள்ளது. படம் தான் அப்படி என்றால் இசையும் G V பிரகாஷால் காபி அடிக்கப்பட்டு இருக்கிறது. இது தெரியாமல் திரை விமர்சனத்தில் நாம படம் அருமை இசை கலக்கல் என்று எழுதினால் தெரிந்த பிறகு ரொம்ப அசிங்கமாகவும், கடுப்பாகவும் உள்ளது. தற்போதெல்லாம் திரைவிமர்சனம் எழுதவே பயமாக இருக்கிறது. இது எந்தப்படத்தின் காபியாக இருக்கும்? என்ற பயம் வந்து விட்டது. திருட்டு உழைப்பை நாம் எதற்கு பாராட்டி திருட்டு DVD யில் படம் பார்க்காதீர்கள் என்று அனைவரையும் கேட்டுக்கொண்டு இருக்க வேண்டும் என்று தற்போது தோன்றுகிறது.

நல்ல படங்கள் வர வேண்டும் என்பதற்காக இதைப்போல அனுமதித்தால் தற்போது நமக்கு சந்தோசமாக இருக்கும் விஷயம் நாளை தமிழர்கள் படங்கள் எல்லாம் சுட்டப் படங்கள் என்று பெயரை எடுக்கும் போது தற்போது இதை ஆதரித்ததை நினைத்து நாம் வெட்கம் தான் பட வேண்டியிருக்கும்.

எந்த ஒரு நல்ல படம் வந்தாலும் நான் பார்க்காமல் இருந்ததில்லை. படத்தை திருட்டுத்தனமாகக் கூட பார்க்க மாட்டேன் எப்போதும் திரையரங்கு தான். திருட்டு DVD யில் படம் பார்க்கும் என் நண்பர்களைக்கூட திரையரங்கில் படத்தைப் பார்க்க கூறி அறிவுறுத்துவேன். இப்படிப்பட்ட என்னால் எந்த முகத்தை வைத்துக்கொண்டு மற்றவர்களை இதைப்போல கேட்பது? “மச்சி! அவனுகளே திருடித்தான் படம் எடுக்கறாணுக இதை நான் திருட்டு DVD யில் பார்த்தால் என்ன தவறு” என்று கேட்டால் என்ன பதில் கூறுவது?

நல்ல படம் வந்தால் போதும் அது சுட்ட படமாக இருந்தாலும் பரவாயில்லை என்று சிலர் நினைக்கும் அளவிற்கு தமிழ்த் திரையுலகம் இருக்கிறது என்றால் அது இதைப்போல நினைப்பவர்களின் தவறல்ல குப்பைப் படங்களாக எடுக்கும் இயக்குனர்கள் தவறு தான் அது. திருட்டுப் படங்களை ஆதரிக்கும் நண்பர்களை நான் கேட்டுக்கொள்வது இதைப்போல எடுக்கும் இயக்குனர்களின் செயல்களை நியாயப்படுத்த முயலாதீர்கள் தற்போது இல்லை என்றாலும் உலகம் பின்னாளில் தமிழ்ப்படம் என்றால் அது காபி படம் தான் என்று தூற்றும்.

by கிரி
avatar
நெல்லை அன்பன்
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 32
Location : nellai

Back to top Go down

Re: தவறான பாதையில் தமிழ்த் திரையுலகம்!

Post by கவியருவி ம. ரமேஷ் on Sat Mar 03, 2012 12:46 pm

எப்படி எல்லாம் திருடப்படுகிறது என்பதைப் பார்த்தால் வியந்து போகலாம் போல...

நல்லா சுடுங்க... எங்களுக்கு நடிகனைவிட கவர்ச்சிக் காட்டும் நடிகைதான் முக்கியம்அடபாவிங்களா அடபாவிங்களா அடபாவிங்களா

_________________
http://www.kaviaruviramesh.com
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
http://www.kaviaruviramesh.com/p/blog-page.html
http://www.ebay.in/sch/rameshmkm/m.html?_nkw=&_armrs=1&_ipg=&_from=
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: தவறான பாதையில் தமிழ்த் திரையுலகம்!

Post by அ.இராமநாதன் on Sat Mar 03, 2012 1:02 pm

போதி தர்மர் காஞ்சிபுரத்தில் பிறந்த தமிழர்..
-
ஆனால் வியபாரம் என வரும்போது தெலுங்கு
படத்துல அவர் குண்டூர்ல பிறந்ததாகவும் ..
ஹிந்தி படத்துல தாரவில
பிறந்ததாகவும் சொன்னார்ர்கள்.
-
இரண்டு மொழிகளிலும் அவர் தமிழர்ன்னு பெருமையா
சொல்ல முடியாதபடி
வியாபார யுக்தி தடுத்தது
-
உலக மயமாக்கல் வந்த பின்னர் ஒரிஜினல், காப்பி
எனபதையெல்லாம் இது சினிமாவில் சகஜமப்பா என
எடுத்துக்கொள்ள வேண்டியதுதான்..!!

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 26235
Points : 57263
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: தவறான பாதையில் தமிழ்த் திரையுலகம்!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Sat Mar 03, 2012 1:08 pm


_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: தவறான பாதையில் தமிழ்த் திரையுலகம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum