"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பாம்பு இருக்கற இடத்துல பல்லி எப்படி இருக்கும்...?
by அ.இராமநாதன் Today at 9:06 pm

» ‘டியர்... நான் உங்க இதயத்துல இருக்கேனா?’’
by அ.இராமநாதன் Today at 8:57 pm

» இந்த போட்டோ கி.மு.விலே எடுத்தது...!!
by அ.இராமநாதன் Today at 8:46 pm

» படி! படி! - சிறுவர் கவிதை
by அ.இராமநாதன் Today at 8:38 pm

» செயல் - கவிதை
by அ.இராமநாதன் Today at 8:30 pm

» கனவு - கவிதை
by அ.இராமநாதன் Today at 8:29 pm

» வெட்கம் - கவிதை
by அ.இராமநாதன் Today at 8:27 pm

» அழகிய தமிழ் - கவிதை
by அ.இராமநாதன் Today at 8:26 pm

» யாப்பு
by lakshmi.P.R Today at 8:26 pm

» நடவு & ஆசை - கவிதைகள்
by அ.இராமநாதன் Today at 8:23 pm

» சிந்தனை சிகிச்சை-5
by ராஜேந்திரன் Yesterday at 8:39 pm

» வித்தியாசமான வேடத்தில் அனுஷ்கா
by அ.இராமநாதன் Yesterday at 9:29 am

» வித்தியாசமான வேடத்தில் சமந்தா
by அ.இராமநாதன் Yesterday at 9:23 am

» பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:52 am

» ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:51 am

» சமந்தா வரவேற்பு!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:50 am

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:49 am

» சிலம்பம் பயிலும் விஜய் ஆண்டனி!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:48 am

» மாப்பிள்ளைக்கு ஏன் இரண்டு டூ வீலர் வாங்கி கொடுத்திருக்கீங்க?
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:37 am

» இந்த ஆஸ்பத்திரிக்கா உயிரையே கொடுத்தவங்க...!!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 2:12 am

» நாச்சியார் விமர்சனம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:50 pm

» பிரியா வாரியர் கண்ணடிக்கும் பாடல் வாபஸ் இல்லை ; நடிகை பேட்டி கொடுக்க இயக்குனர் தடை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:24 pm

» ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:20 pm

» தெலுங்கில் நடித்த ஸ்ரேயா படம் இணையதளத்தில் வெளியானது
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:17 pm

» நாட்டை சூறையாடும் வங்கியின் விஐபி வாடிக்கையாளர்கள்: மம்தா தாக்கு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:38 pm

» மெக்சிகோவில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் கட்டிடங்கள் குலுங்கின
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:37 pm

» பிஎன்பி மோசடி: மேலும் ரூ. 549 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்; நிரவ் மோடி இருப்பிடம் தெரியாது - வெளியுறவுத்துறை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:36 pm

» தொழில்நுட்ப ஆஸ்கர் விருது வென்ற இந்தியர்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:35 pm

» கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது அமலாக்கத்துறை விசாரிக்க கோர்ட்டு அனுமதி
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:33 pm

» மணிசங்கர் அய்யர் மீது தேசதுரோக வழக்கு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:32 pm

» நாணயம் பெற மறுத்தால் நடவடிக்கை: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:31 pm

» ரூ.9க்கு ஏர்டெல் புதிய திட்டம் அறிவிப்பு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:25 pm

» ரூ.99க்கு பி.எஸ்.என்.எல். அதிரடி சலுகை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:24 pm

» மருத்துவ குறிப்புகள் - தொடர்பதிவு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:26 pm

» நீரிழிவு நிலை உள்ளவர்களா உங்கள் உணர்திறன் குறைவடையும்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:24 pm

» திறந்தநிலை கல்வி நிறுவனங்களில் பிளஸ் 2 படிப்பவர்களுக்கு நீட் தேர்வு எழுத அனுமதி கிடையாது
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:07 pm

» ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்படவில்லை: படத்திறப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் வாதம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:06 pm

» புதுச்சேரி - பெங்களூர் இடையே புதிய விமான சேவை மீண்டும் தொடக்கம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:05 pm

» சனீஸ்வரா காப்பாத்து!
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:02 pm

» நாம் அழுதால் தாங்கமாட்டார் ஆஞ்சநேயர்!
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:01 pm

» பெண்ணிடம் திருடப்பட்ட செயின் அவரிடமே அடகுக்கு வந்த அதிர்ச்சி சம்பவம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 1:59 pm

» 10 செகண்ட் கதைகள்
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 11:03 pm

» பொது அறிவு - வினா, விடைகள்
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 10:50 pm

» படித்ததில் பிடித்தது - பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 10:40 pm

» உயிர்த்தெழும் கதாபாத்திரங்கள் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 10:25 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



இதயம்.. புதிய சிகிச்சை உதயம்!

Go down

இதயம்.. புதிய சிகிச்சை உதயம்!

Post by பார்த்திபன் on Fri Mar 09, 2012 5:16 pm

செர்பிய நாட்டைச் சேர்ந்த 59 வயதுப் பெண்மணி ஒருவருக்கு இதயத்தில் பிரச்னை. ஜெர்மனியில் உள்ள மருத்துவமனையில் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சையும், பேஸ் மேக்கர் கருவி பொருத்தும் சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. ஆனாலும், அவரது இதயத்தின் பம்ப் செய்யும் திறன் மேம்படவில்லை. அடுத்தடுத்த சிகிச்சையைத் தாக்குப்பிடிக்க முடியாமல், அவருடைய இதயம் மிகவும் பலவீனம் அடைந்துவிட்டது. இறுதியில் இதயத் துடிப்பின் அளவும் குறைந்து, 'இதயம் செயல் இழப்பு’ என்ற நிலை ஏற்பட, தத்தளித்துப்போனார் அந்த செர்பியப் பெண்மணி. 'காப்பாற்ற வழியே இல்லை!’ என்கிற அபாயக் கட்டத்தில், மேற்சிகிச்சைக்காக தமிழகம் வந்த அந்தப் பெண்ணுக்கு ஸ்டெம் செல் சிகிச்சை செய்யப்படவே, பிரச்னைகள் தீர்ந்து... இதயம் இயல்பாக இயங்குகிறது!
செர்பியப் பெண்ணுக்கு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை குறித்து ஃபிரான்டியர் லைஃப் லைன் மருத்துவமனையின் மூத்த மருத்துவர் ஜி.என்.பிரசாத்திடம் பேசினோம். ''பொதுவாக மனித இதயம் (பெரியவர்கள்) ஒரு நிமிடத்துக்கு 60 முதல் 80 முறை துடிக்க வேண்டும். ஆனால், 'இதயம் செயல் இழப்பு’ என்கிற பாதிப்புக்கு ஆளான அந்த செர்பியப் பெண்ணுக்கு இதயத் துடிப்பு நிமிடத்துக்கு 30 முதல் 35 எனக் குறைந்து இருந்தது. இதனால், பக்கத்து அறைக்கு நடந்து செல்லக்கூட அவரால் முடியவில்லை. சில அடிகள் எடுத்துவைத்தாலே, அவருக்கு மூச்சுத் திணறல் வரும். அவருடைய இதயத்தின் பம்பிங் திறன் 30 சதவிகிதம்தான் இருந்தது. ரத்த அழுத்தம், சிறுநீரகத்தில் கோளாறு என்று இன்னும் சில பிரச்னைகளும் அவருக்கு இருந்தன. அதனால், எந்த அறுவை சிகிச்சையும் பலன் அளிக்காது என்ற நிலையில், ஸ்டெம் செல் சிகிச்சையைப் பரிந்துரை செய்தோம்.
இந்த சிகிச்சைக்காக அவரது எலும்பு மஜ்ஜையில் இருந்து 150 மி.லி. ரத்தம் எடுக்கப்பட்டது. ஆய்வகத்தில் பல்வேறு செயல்பாடுகளுக்குப் பிறகு அந்த ரத்தத்தில் இருந்து சிடி-34 என்ற செல்லைத் தனியாகப் பிரித்து எடுத்தோம். அப்படிப் பிரிக்கும்போது, வெறும் 12 மி.லி-தான் சிடி-34 ஸ்டெம்செல் கிடைத்தது. அந்த ஸ்டெம் செல்லை ஊசி மூலம் அந்தப் பெண்ணின் நெஞ்சுக்கூட்டைத் திறந்து இதயத் தசையில் செலுத்தினோம். அதாவது 12 மி.லி. சிடி-34 செல்லை சமமாகப் பிரித்து வலது மற்றும் இடது கொரணரியில் 5 முதல் 10 நிமிட இடைவெளியில் கொஞ்சம் கொஞ்சமாகச் செலுத்தினோம். பொதுவாக நெஞ்சுக் கூட்டைத் திறக்காமலேயே, இதயத்தில் இந்த ஸ்டெம் செல்லை செலுத்தலாம். இதயத்துக்கு ரத்தம் கொண்டுசெல்லும் குழாய் பகுதிக்கு மட்டும் அனஸ்தீஷியா கொடுத்துவிட்டு, ஸ்டெம் செல்லை இதயத் தசையில் செலுத்துவோம். ஆனால், சில பிரச்னைகள் காரணமாக இவருக்கு நெஞ்சுக்கூட்டைத் திறக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்த அனைத்து செயல்பாடுகளும் மூன்று நாட்களில் செய்யப்பட்டது. ஒரே வாரத்தில், அவரது இதயத்தின் செயல்பாட்டில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. இதயத் துடிப்பிலும் நல்ல முன்னேற்றம். நிம்மதியாகத் தன் சொந்த நாட்டுக்குத் திரும்பிவிட்டார்!'' என சிகிச்சை முறைகளை விளக்கினார்.
''இந்த சிகிச்சை உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், இன்னும் ஆராய்ச்சி அளவில்தான் இருக்கிறது. இதய செயல் இழப்பு, ஆஞ்சியோபிளாஸ்டி, வென்ட்ரிக்குலர் ரீமாடலிங், இதய பைபாஸ் அறுவை சிகிச்சை போன்ற சிகிச்சைகளை மேற்கொண்ட பிறகும், இதயம் ரத்தத்தை பம்ப் செய்யும் திறன் மேம்படாதவர்களுக்கு, இதய மாற்று அறுவை சிகிச்சைதான் தீர்வு. ஆனால், அந்த அளவுக்கு இதயங்கள் கிடைப்பது இல்லை. அதற்காக நீண்ட நாட்கள் காத்திருக்கவேண்டிய நிலை இருக்கிறது. வேறு சிகிச்சை செய்ய முடியாது என்ற நிலை உள்ளவர்களுக்கு, இந்த ஸ்டெம்செல் சிகிச்சையை நாங்கள் அளிக்கிறோம். இந்த சிகிச்சைக்குப் பிறகு 10 சதவிகிதம் வரை இதயத்தின் செயல்பாடு மேம்படுகிறது. நோயாளியிடம் இருந்து எடுக்கப்பட்ட ஸ்டெம் செல்லே அவருக்கு செலுத்தப்படுவதால், நிராகரித்தல் என்ற பிரச்னை இதில் இல்லை. எதிர்காலத்தில் இந்த சிகிச்சையின் மூலம் இதயத்தின் செயல்பாட்டுத் திறன் மேலும் அதிகரிக்கும்.
ஸ்டெம் செல்லின் நன்மைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஸ்டெம் செல்லை உங்கள் இதயத்தில் செலுத்தினால், இதயத் திசுவாக வளர்ந்து​விடும். சிறுநீரகத்தில் செலுத்தினால், சிறுநீரகத் திசுவாக வளர்ந்துவிடும். கல்லீரலில் செலுத்தினால், கல்லீரல் திசுவாக வளர்ந்து​விடும். அதாவது, எந்த இடத்தில் அது செலுத்தப்படுகிறதோ, அந்த இடத்துக்கு ஏற்ற திசுவாக வளரத் தொடங்கிவிடும். இதைக்கொண்டு நடுக்குவாதம்(parkinson’s disease),ஞாபக மறதி உள்ளிட்ட நோய்களைக்​கூட குணப்படுத்தி இருக்கிறார்கள்!'' என்கி​றார் வியக்க வைக்கும் விதமாக.
காஸ்மெடிக் சர்ஜரி, சிறுநீரகம் உள்ளிட்ட அறுவை சிகிச்சையிலும்கூட ஸ்டெம் செல்லைப் பயன்படுத்தத் தொடங்கி இருப்பது, இன்னும் நல்ல செய்தி!
avatar
பார்த்திபன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 40
Location : பெங்களூரு

Back to top Go down

Re: இதயம்.. புதிய சிகிச்சை உதயம்!

Post by நெல்லை அன்பன் on Sat Mar 10, 2012 12:51 pm

நல்ல சிவார்ஸ்யமான தகவல் நன்றி சகோ.
avatar
நெல்லை அன்பன்
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 32
Location : nellai

Back to top Go down

Re: இதயம்.. புதிய சிகிச்சை உதயம்!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Sat Mar 10, 2012 1:55 pm

தகவலுக்கு நன்றி அண்ணே

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: இதயம்.. புதிய சிகிச்சை உதயம்!

Post by கவியருவி ம. ரமேஷ் on Sat Mar 10, 2012 6:54 pm

விரிவான தகவலைப் பகிர்ந்து கொண்டமைக்கு மகிழ்ச்சி நண்பரே மிக்க மகிழ்ச்சி

_________________
http://www.kaviaruviramesh.com
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
http://www.kaviaruviramesh.com/p/blog-page.html
http://www.ebay.in/sch/rameshmkm/m.html?_nkw=&_armrs=1&_ipg=&_from=
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: இதயம்.. புதிய சிகிச்சை உதயம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum