"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» ‘சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்டல்
by அ.இராமநாதன் Today at 11:43 am

» 5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு
by அ.இராமநாதன் Today at 11:36 am

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by அ.இராமநாதன் Today at 11:35 am

» அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி
by அ.இராமநாதன் Today at 11:34 am

» இந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து நடவடிக்கைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு, ஐ.டி. துறையும் கண்டனம்
by அ.இராமநாதன் Today at 11:32 am

» பலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'
by அ.இராமநாதன் Today at 11:32 am

» நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு
by அ.இராமநாதன் Today at 11:30 am

» பிரபல பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி மரணம்: கமலுக்கு முதல் பின்னணிப் பாடல் பாடியவர்
by அ.இராமநாதன் Today at 11:27 am

» பேல்பூரி..!!
by அ.இராமநாதன் Today at 11:08 am

» உறவு முன்னே...ப்ராப்ளம் பின்னே...!!
by அ.இராமநாதன் Today at 11:04 am

» கவர்ச்சி நடிகைகிட்ட பிடிச்சது, அவரோட நடிப்பு...!!
by அ.இராமநாதன் Today at 11:00 am

» 2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..?
by அ.இராமநாதன் Today at 10:54 am

» தமிழில் காலூன்ற தடுமாறும் பிறமொழி நடிகர்கள்
by அ.இராமநாதன் Today at 9:43 am

» பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
by அ.இராமநாதன் Yesterday at 11:23 pm

» வாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...
by அ.இராமநாதன் Yesterday at 11:17 pm

» இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
by அ.இராமநாதன் Yesterday at 11:01 pm

» ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு!
by அ.இராமநாதன் Yesterday at 10:56 pm

» தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
by அ.இராமநாதன் Yesterday at 10:32 pm

» காங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை
by அ.இராமநாதன் Yesterday at 10:23 pm

» நாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்
by அ.இராமநாதன் Yesterday at 10:22 pm

» உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
by அ.இராமநாதன் Yesterday at 10:18 pm

» சுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை
by அ.இராமநாதன் Yesterday at 10:16 pm

» 2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்
by அ.இராமநாதன் Yesterday at 10:12 pm

» வீரபாண்டிய கட்டபொம்மன்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 8:24 pm

» கவிதை வெளியினிலே ! நூல் ஆசிரியர் : முனைவர் பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Apr 24, 2018 8:31 pm

» சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 3:10 pm

» உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 2:54 pm

» தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 2:51 pm

» பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 2:44 pm

» கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 12:07 pm

» கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 9:59 am

» கிறிஸ்தவ பெண்ணுக்கு திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் பதவி: நடிகை ரோஜா கண்டனம்
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 9:53 am

» கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 9:43 am

» கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 9:40 am

» கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 9:38 am

» நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 9:36 am

» கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 9:33 am

» கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 3:49 am

» வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 3:47 am

» அன்று ...அப்போது!!
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 3:34 am

» டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 3:28 am

» அவரை மாதிரி கஞ்சனை பார்க்க முடியாது...!!
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 3:25 am

» கலாய் கவிதைகள்
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 3:14 am

» மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 2:54 am

» ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 2:51 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines அந்த திருக்கோவில்

Go down

அந்த திருக்கோவில்

Post by செய்தாலி on Tue Mar 13, 2012 1:06 pm

[You must be registered and logged in to see this image.]

வான் முகத்தில்
படிந்திருந்த இருளை
மெல்ல மெல்ல துடைத்தது
கதிரொளிக் குழந்தைகள்

அன்ன நடையிடும்
மேகங்களுக்கு இடையே
ஒளிந்து விளையாடிக்கொண்டிருந்தது
மூன்றாம் பிறை

அதிகாலை
பனிமூட்டங்களை அங்கும் இங்குமாய்
அலைக்கழித்துக் கொண்டிருந்தது
வீதியில் சுற்றும் காற்று

சுப்ரபாதமும்
சந்தனதிரி சாம்பராணி புகைகளின்
நறுமணங்கள் எழுப்பியது
அக்ரகார வீதியை

தண்ணீர்தெளித்து
அடித்து பெருக்கிய முற்றத்தில்
மங்கலகராமாய் மலர்ந்தது
பலவண்ணக் கோலங்கள்

ஸ்லோகத்தை
இதழில் மெல்ல உச்சரித்தபடி
கிணற்றடியில் நீராடிக் கொண்டிருந்தார்
குருக்கள்

அர்ச்சனைப் பூக்கள்
அபிஷேகப் பொருட்களுமாய்
விடியாத வீதியில் நடைதுறக்க
அவசரமாய்

ஆலய
மணியோசையில் சிதறிப் பறந்தது
கோபுரத்தில் உறங்கியிருந்த
புறாக்கள்

கிரிகைகளை
முடித்து குருக்கள் நடைதிறக்க
பக்தி பரவேசமுமாய் பக்த
கூட்டங்கள்

குறையுடன்
நிற்கும் பக்த மனங்களில்
கடக்ஷமாய் காட்சியளித்தார்
கடவுள்

தீப ஆராதனையை
கண்ணில் தொட்டும் பொட்டுதொட்டும்
அகமுணர்ந்து தொழுதார்கள்
வாடிக்கைப் பக்தர்கள்

உச்சுக்கொட்டியும்
கன்னத்தில் போட்டபடியும்
வாசலிலே தொழுதார்கள் அவசரமாய்
எங்கோ புறப்பட்டு செல்பவர்கள்

வெளியே
வாசலோரத்தில் பூ கட்டும் பெண்
தேங்காய் விற்கும் மூதாட்டி
செருப்பிற்கு காவலிருக்கும் பையன்

கருவேலம்
நடை அடைத்தபின்
திரைமறைவில் வழிபட்டார்கள்
நேரம் தாழ்ந்து வந்தவர்கள்

ஆசை நிறைவேற
அங்க அடியென கோவிலை சுற்றி
சுயகாணிக்கை வழிபாட்டில்
ஆண்களும் பெண்களும்

எண்ணம்
நிறைவேறிய சந்தோசத்தில்
ஆவேசமாய் தேங்காய் உடைக்கும்
ஏழைப் பக்தன்

ஜென்மநாள்
பாவப்பட்ட ஏழைகளின் பசிக்கு
அன்னம் உபசரித்துக் கொண்டிருந்தான்
பணக்கார பக்தன்

சாமியை
தொழும் அப்பா அம்மா
இருவரின் முகத்தை உற்றுப்பார்த்தபடி
இடுப்பில் கைகுழந்தை

விழியடைத்து
கண்ணீர் மல்க தொழுதாள்
மணமாகி பத்தாண்டு கழிந்தும்
கருவறை குளிராத பெண்

கடவுளின்
சன்னதியில் குங்குமம் இருந்தும்
திருநீர் பூசினாள் தாலி இழந்த
கன்னி விதவை

மோதியோர்
இல்லத்திற்குள் எட்டி உதைத்த
பிள்ளைகளின் நலனுக்காக பிராத்திக்கும்
தாய்

நலம்குன்றிய
உறவுகளுக்காக நட்புக்காக
எத்தனையோ மனிதர்களின் பிராத்தனை
சன்னதி தரையில் கண்ணீர் துளிகள்

சிந்தனையை
சிதறவிட்டு தொழுதுகொண்டிருந்தான்
புதுச்செருப்பை வெளியே
விட்டுவந்தவன்


அகமுணர்ந்து
தரிசனத்தை சலனப்படுத்துகிறது
சன்னதியிலும் அணைத்துவைக்கபடாத
கைபேசி

தேர்வில் தேர ,வேலைகிடைக்க
காதல் கைகூட ,வியாபாரம் பெருக
நல்ல மணவாழ்க்கை அமைய
பேரம் பேசுபவர்கள்

காதல்
தரிசனத்திற்காக ஆங்காங்கே
காத்துக் கிடக்கும் ஒற்றைக்
காதலர்கள்

சுய
துக்கங்களை களைந்து
மண்டப தூண்களில் சாய்ந்தபடி
சிலர் மெல்ல அயர்ந்த்தார்கள்

சில
பெருசுகள் மௌனமாகவும்
சிறுசுகள் எதையோ பேசிக்கொண்டும்
குழந்தைகள் விளையாடியும்

பக்தர்களின்
அகத்தில் உதிர்ந்த கருணை
பிச்சைக்க்ரனின் திருவோட்டில் சலசலத்தது
சில்லறைக்காசுகள்

கடவுள் சன்னதியில்
நிம்மதியை பல உருவங்களில்
தேடி அலைகிறார்கள்
மனிதர்கள்

சன்னதிகளில்
தஞ்சம் புகும் பக்கதர்கள்
விதியை பழிக்கிறார்கள் சபிக்கிறார்கள்
இறைவனை மறந்து

நான் பாதி நீ பாதி
மனிதர்களுக்கான இறைவனின் வாக்கு
அர்த்தம் புரியாதவன் இன்னும் பழிக்கிறான்
இறைவனை

சுய
கர்மம் கொண்டு தேடுபவர்களே
தன்னையும் இறைவனையும்
உணர்கிறார்கள்

நிறை குறைகளை
இறைக்கிச் செல்லும் பக்கதர்கள்
பாரங்களை சுமந்துகொண்டு சனதியில்
கடவுள்
avatar
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 36
Location : Dubai,UAE

Back to top Go down

Re: அந்த திருக்கோவில்

Post by தங்கை கலை on Tue Mar 13, 2012 1:24 pm

அண்ணா ஸுபேரா இருக்கு ...

ரெண்டு மூணு தரம் படிச்சிப் போட்டேன் ...செம சூப்பர் அண்ணா .....


(டீச்சர் ஓடி வாங்கள்,எங்க அண்ணா நிறைய ஸ்பெல்லிங் மிஸ்டேக் பண்ணி இருக்காங்கள் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் )
avatar
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 18
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

Re: அந்த திருக்கோவில்

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Mar 13, 2012 7:17 pm

காட்சிகளின் விரிவு... பொதுவாகக் கோயில்களில் இப்படித்தான் இருக்கிறது...

நெடிய கவிதைக்குப் பாராட்டுகள் நண்பரே மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: அந்த திருக்கோவில்

Post by அரசன் on Tue Mar 13, 2012 7:22 pm

அப்படியே கண்ணுக்குள் நீள்கிறது அந்த காட்சிகள்... மீண்டும் ஒரு தரமான கவிதை வழங்கிய உங்களுக்கு என் வாழ்த்துக்கள் தோழா ...

_________________
***************************************************************************
நான் என்னை அறிய முயலுகின்ற பயணத்தில் உங்களோடும் கைக்குலுக்குவதில்
பெரு மகிழ்வு அடைகிறேன்....


கரைசேரா அலை...


***************************************************************************
avatar
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 28
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

Re: அந்த திருக்கோவில்

Post by செய்தாலி on Tue Mar 13, 2012 7:25 pm

தங்கை கலை wrote:அண்ணா ஸுபேரா இருக்கு ...

ரெண்டு மூணு தரம் படிச்சிப் போட்டேன் ...செம சூப்பர் அண்ணா .....


(டீச்சர் ஓடி வாங்கள்,எங்க அண்ணா நிறைய ஸ்பெல்லிங் மிஸ்டேக் பண்ணி இருக்காங்கள் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் )

டீச்சர் கிட்ட
அண்ணனை காட்டிக் கொடுக்கலாமா தங்கச்சி

கருத்திற்கு நன்றி கலை அன்பு மலர்
avatar
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 36
Location : Dubai,UAE

Back to top Go down

Re: அந்த திருக்கோவில்

Post by செய்தாலி on Tue Mar 13, 2012 7:26 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:காட்சிகளின் விரிவு... பொதுவாகக் கோயில்களில் இப்படித்தான் இருக்கிறது...

நெடிய கவிதைக்குப் பாராட்டுகள் நண்பரே மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி

மிக்க நன்றி கவிஞரே
இன்னும் நீடிருக்கும் வாசிப்பவர் சலித்துக்கொள்வார்கள் என்று சுருக்கிவிட்டேன்
avatar
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 36
Location : Dubai,UAE

Back to top Go down

Re: அந்த திருக்கோவில்

Post by செய்தாலி on Tue Mar 13, 2012 7:27 pm

அரசன் wrote:அப்படியே கண்ணுக்குள் நீள்கிறது அந்த காட்சிகள்... மீண்டும் ஒரு தரமான கவிதை வழங்கிய உங்களுக்கு என் வாழ்த்துக்கள் தோழா ...

மிக்க நன்றி நண்பா
avatar
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 36
Location : Dubai,UAE

Back to top Go down

Re: அந்த திருக்கோவில்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Wed Mar 14, 2012 1:03 pm

பாராட்டுக்கள் கவிஞரே, கலக்குறீங்க [You must be registered and logged in to see this image.]

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: அந்த திருக்கோவில்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum