"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கற்றாழை சாறு பருக வைத்தாய்....!!
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 8:39 pm

» பழைய காதலி இன்னும் மாறவேயில்லை...!!
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 8:31 pm

» சரியான வாழ்க்கை முறை...(பொன்மொழிகள்)
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 8:26 pm

» காகிதம் ! நூல் ஆசிரியர் : முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Sun Aug 20, 2017 12:58 pm

» அமெரிக்க பெண் தூதர் மனதை கொள்ளையடித்த காஞ்சி பட்டு
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 12:56 pm

» வனநாயகம் ! நூல் ஆசிரியர் : முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Sun Aug 20, 2017 12:56 pm

» மதுக்கடை ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Sun Aug 20, 2017 12:55 pm

» மாற்றுத்திறனாளி பெண் சீ.பிரித்திக்கு கல்பனா சாவ்லா விருது
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 12:54 pm

» ரூ.900 கோடிக்கு செல்லாத நோட்டு அனுப்பி வைப்பு
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 12:49 pm

» ஜெ., மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன்
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 12:48 pm

» அமெரிக்க கச்சா எண்ணெய் இறக்குமதி துவங்கியாச்சு!
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 12:48 pm

» அரசு பெட்ரோல் பங்க்குகளில் மலிவு விலை மருந்தகம்
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 12:46 pm

» ஆஸ்திரேலிய பாராளுமன்ற செனட் சபையில் பெண் எம்.பி., ‘பர்தா’ அணிந்து வந்ததால் பரபரப்பு
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 12:45 pm

» வடக்கு வாழ்கிறது.. தெற்கு தேய்கிறது! தெரிந்தே புறக்கணிக்கப்படும் தென் மாவட்டங்கள்
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 11:53 am

» இன்று முதல் மழை குறையும்: வானிலை மையம்
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 11:49 am

» வேதா இல்லம் எங்கள் குடும்ப சொத்து. -தீபா
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 11:48 am

» முன்னாள் ஜனாதிபதி பிரதீபா மகளுக்கு ரூ.1 வாடகையில் நிலம்
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 11:47 am

» இந்தியாவுக்கு ஜப்பான் ஆதரவு: சீனா பாய்ச்சல்
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 11:46 am

» வெற்றிக்காக எதையும் செய்கின்றனர்': தேர்தல் கமிஷனர் ராவத்
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 11:45 am

» மைசூரு தசரா விழா: அர்ஜூனா உள்பட 8 யானைகளுக்கும் நடைபயிற்சி
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 11:45 am

» இன்று 63 வது ஆண்டில் பவானிசாகர் அணை
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 11:44 am

» அரசு பள்ளியை தத்தெடுத்த மாவட்ட கலெக்டர்
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 11:43 am

» கோடநாட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தமா? எஸ்.பி., விளக்கம்
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 11:41 am

» மத்திய அரசை கண்டித்து வரும் 22ல் வங்கி ஊழியர்கள் போராட்டம்
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 11:40 am

» ‘புளூ வேல்’ கேமிற்கு மத்திய அரசு தடைவிதிப்பு
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 11:39 am

» கொசு... உயிரை பறிக்கும் 'பிசாசு' இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 11:38 am

» ராகுல், சோனியாவை தொடர்ந்து ‘மோடியை காணவில்லை’ என சுவரொட்டி வாரணாசியில் பரபரப்பு
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 11:37 am

» காலை 8 மணிக்கு தேசிய கீதத்துக்கு மரியாதை செலுத்தும் கிராம மக்கள்
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 11:35 am

» வெளிச்சம் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Fri Aug 18, 2017 9:39 pm

» நிஜம் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Fri Aug 18, 2017 9:32 pm

» லவ் டெஸ்ட் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Fri Aug 18, 2017 9:31 pm

» ஏக்கம் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Fri Aug 18, 2017 9:29 pm

» நாயகன், கையெழுத்து – கவிதை
by அ.இராமநாதன் Fri Aug 18, 2017 9:23 pm

» முடிவு எடுத்தல் ! நூல் ஆசிரியர் : முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Thu Aug 17, 2017 8:46 pm

» அவசரப்படாதே மச்சி!!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:32 pm

» பாப்பி – நகைச்சுவை
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:27 pm

» ரதிதேவியா நடிக்கிறது யாரு மேடம்…?
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:26 pm

» தலைவருக்கு மது வாடையை கண்டாலே பிடிக்காது…!!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:22 pm

» தலைவருக்கு சிறப்பு நாற்காலி போட்டிருக்காங்க…!!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:21 pm

» நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:20 pm

» கடல் போல் இருக்கும் மனைவி!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:19 pm

» நமக்கு வாய்த்த தலைவர்
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:18 pm

» என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:02 pm

» தலைவர் தர்ம தரிசனம்தான் செய்வார்!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 8:50 pm

» ஏண்டா வீட்டுக்காரரை கொலை பண்ணினே?
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 8:48 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines சிபிச் சக்ரவர்த்தியின் கதை.

View previous topic View next topic Go down

சிபிச் சக்ரவர்த்தியின் கதை.

Post by அ.இராமநாதன் on Sun Mar 25, 2012 6:12 pm[You must be registered and logged in to see this image.]

கருணைக்கும் கொடைத்திறனுக்கும் பெயர்பெற்ற சிபிச் சக்ரவர்த்தியின்
புகழ் தேவலோகத்தை எட்டியது. தேவேந்திரன் சிபியைச் சோதித்துப்
பார்க்க விரும்பினான்.
-
அக்கினி பகவானை அழைத்துக்கொண்டு பூமிக்கு வந்தான்.
இந்திரன் ஒரு கழுகு வடிவத்திலும், அக்கினி ஒரு புறா வடிவத்திலும்
வந்து சேர்ந்தார்கள். புறாவைத் துரத்திக்கொண்டு கழுகு பறந்து வந்தது.
-
நந்தவனத்தில் இருந்த சிபிச் சக்ரவர்த்தியின் கையில் ஒரு புறா வந்து
விழுந்தது. அந்தப் புறாவின் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது.
சிபியின் மடியில் இருந்த புறாவைக் கவ்விடுத்துக்கொண்டு போக
முயன்றது கழுகு. சிபி அதைத் தடுத்து ஒதுக்கினான். புறாவின்
பயத்துக்கான காரணம் என்னவென்பது இப்போது அவனுக்குப் புரிந்தது.
-
“அரசனே! அந்தப் புறா என்னுடைய பசியைத் தீர்க்கவேண்டிய இரையாகும்.
என்னைத் தடுக்காதே! புறாவைக் கீழே விடு. ” என்று அதிகாரமாகப் பேசியது
கழுகு. மனிதனைப் போல அது பேசியதைக் கேட்க பெரும் வியப்பாக இருந்தது
சிபிக்கு.


கழுகிடம், “உனக்கு என்ன வேண்டுமோ கேள். அதை நான் உனக்குத்
தருகிறேன். ஆனால் புறாவை விட்டுவிடு.” என்று கூறினான்.
-
“அரசே! புறாவுக்குப் பதிலாக எனக்கு மாமிசம் உடனே தேவை! அது மனித
மாமிசமாக இருந்தாலும் பரவாயில்லை. உங்களுக்கு உட்பட்ட மிருகம் அல்லது
மனிதனைக் கொன்று எனக்குக் கொடுங்கள். என்னால் பசி தாங்க முடியவில்லை!”
என்றது கழுகு.
-
“உன் பசியை ஆற்ற நான் ஒப்புக்கொண்டேன். ஆனால் அதற்காகப் பிறரைத்
துன்புறுத்த என் மனம் இடம் கொடுக்காது. உனக்குத் தேவையானது புறாவின்
எடையளவு மாமிசம் தானே! அதை நான் என் உடலிலிருந்தே வெட்டித் தருகிறேன்.”
என்று கழுகிடம் உறுதி கூறினான்


ஒரு தராசின் ஒரு தட்டில் சிபி அந்தப் புறாவை வைத்தான். மறு தட்டில் தன்
உடலிலிருந்து சிறு பகுதியைச் செதுக்கி எடுத்து வைத்தான். புறா அமர்ந்த
தட்டு இறங்கவில்லை. தொடர்ந்து சிபி தன் உடலிலிருந்து பகுதி பகுதியாக
வெட்டி எடுத்து வைக்கத் தொடங்கினான். எவ்வளவு வெட்டி வைத்தாலும்
புறாவின் தட்டுக்குச் சமமாக முடியவில்லை.


கடைசியில் சிபி கழுகைப்
பார்த்து, “புறாவுக்குக் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற நான் என்னையே
கொடுப்பதைத் தவிர வேறு வழியில்லை. நானே தட்டில் ஏறி அமர்ந்து
கொள்கிறேன். என்னை ஏற்றுக்கொள்!” என்று கூறிவிட்டுத் தட்டில்
ஏறி அமர்ந்தான். உடனே புறா இருந்த தட்டு சமநிலையில் இறங்கிவிட்டது.
-
மறுகணமே கழுகு இந்திரனாகவும். புறா அக்னி தேவனாகவும் மாறினார்கள்.
சிபியை அவர்கள் அன்புடன் தொட, அவன் உடல் சிதைவு எல்லாம் மாயமாய்
மறைந்து தேகம் புதுப் பொலிவு பெற்றது.


தேவர்களைக் காலில் விழுந்து வணங்கினான் சிபி. ” என்னைக் காணத் தாங்கள்
மாறுவேடத்தில் வந்த காரணம் என்னவோ? ” என்று கேட்டான்.
“அரசே! உன் புகழைக் கேள்விப்பட்டு, அதைச் சோதித்துப் பார்க்கவே வந்தோம்.
உன்னுடைய கருணையையும் கொடைத் தன்மையையும் புரிந்துகொண்டோ ம்.
நீ எல்லா நலமும் பெற்று நீடூழி வாழவேண்டும்!” என்று வாழ்த்தி மறைந்தார்கள்.
-
அரசாட்சி செய்பவன் தன்னலமின்றி இருக்கவேண்டும். தியாகம் செய்யவேண்டும்
என்று வரும்போது தன்னையே முதலில் அர்பணித்துக்கொள்ளவேண்டும்.
எளியாரை வலியார் துன்புறுத்த வந்தால் எளியவர்களுக்கு ஆதரவு கொடுக்கவேண்டும்.
எல்லாருடைய குறைகளையும் சமமாகப் பாவித்து நியாயம் வழங்கவேண்டும்.
அப்படிப்பட்ட அரசன் ஆளும் நாட்டுக்கு எந்தக் குறையும் ஏற்படாது.
இதை எடுத்துச் சொல்வதுதான் சிபிச் சக்ரவர்த்தியின் கதை.
-


================================================

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 23049
Points : 49593
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: சிபிச் சக்ரவர்த்தியின் கதை.

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Mon Mar 26, 2012 11:05 am

பகிர்வுக்கு நன்றி ஐயா [You must be registered and logged in to see this image.]

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56783
Points : 69523
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: சிபிச் சக்ரவர்த்தியின் கதை.

Post by கவியருவி ம. ரமேஷ் on Mon Mar 26, 2012 2:06 pm

அக்காலச் சோதனைகள் அனைத்தும் புகழ் சேர்ப்பதாகவே அமைந்திருப்பதைக் காணமுடிகிறது....

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum