"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
by அ.இராமநாதன் Today at 11:25 am

» ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ
by அ.இராமநாதன் Today at 11:18 am

» மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
by அ.இராமநாதன் Today at 10:18 am

» துளிப்பாக்கள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Today at 10:11 am

» முருங்கைக்கீரை கூட்டு
by அ.இராமநாதன் Today at 9:54 am

» பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
by அ.இராமநாதன் Today at 9:52 am

» வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
by அ.இராமநாதன் Today at 9:44 am

» அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
by அ.இராமநாதன் Today at 8:32 am

» பழகிப் போயிருச்சு பாஸ்!
by அ.இராமநாதன் Today at 8:13 am

» ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்
by அ.இராமநாதன் Today at 8:08 am

» நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
by அ.இராமநாதன் Today at 8:06 am

» சீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை
by அ.இராமநாதன் Today at 8:02 am

» நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
by அ.இராமநாதன் Today at 7:55 am

» காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்
by அ.இராமநாதன் Today at 7:46 am

» அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை
by அ.இராமநாதன் Today at 7:44 am

» அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
by அ.இராமநாதன் Today at 7:41 am

» இரும்புச்சத்து தெரியும்...கொம்புச்சத்து தெரியுமா? சொல்கிறார் இயற்கை விவசாயி
by அ.இராமநாதன் Today at 7:39 am

» மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
by அ.இராமநாதன் Yesterday at 11:32 pm

» உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
by அ.இராமநாதன் Yesterday at 11:26 pm

» நொடிக் கதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 11:22 pm

» திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
by அ.இராமநாதன் Yesterday at 11:05 pm

» கூப்பிடு தூரம்
by அ.இராமநாதன் Yesterday at 10:59 pm

» வியந்த பாட்டு
by அ.இராமநாதன் Yesterday at 10:55 pm

» மீண்டும் வருவேன்
by அ.இராமநாதன் Yesterday at 10:51 pm

» அதிகாலை - கவிஞர் மீரா
by அ.இராமநாதன் Yesterday at 10:39 pm

» கவிதைகள் - கவிஞர் மீரா
by அ.இராமநாதன் Yesterday at 10:28 pm

» -நீதி - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 10:25 pm

» காலமாற்றம் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 10:13 pm

» கத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி
by அ.இராமநாதன் Yesterday at 10:00 pm

» அழியாத பாட்டு
by அ.இராமநாதன் Yesterday at 9:50 pm

» ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
by அ.இராமநாதன் Yesterday at 7:58 pm

» மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
by அ.இராமநாதன் Yesterday at 7:54 pm

» இந்தப் பறவையின் விலை 25 லட்சமாம்... பார்த்து ரசிக்கலாம் வாங்க!
by அ.இராமநாதன் Yesterday at 1:48 pm

» சிரிப்பின் பயன்கள்
by அ.இராமநாதன் Yesterday at 1:36 pm

» தலைவர் சிலைல என்ன ஸ்பெஷல்?
by அ.இராமநாதன் Yesterday at 10:32 am

» கடைசி பெஞ்ச் புள்ளைக டவுட்...!!
by அ.இராமநாதன் Yesterday at 10:29 am

» கடவுளே, நியூயார்க்க இந்தியா தலைநகரமா மாத்திடு...!!
by அ.இராமநாதன் Yesterday at 9:47 am

» கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
by அ.இராமநாதன் Yesterday at 9:41 am

» பாதை எங்கு போகிறது...?
by அ.இராமநாதன் Yesterday at 5:06 am

» ஏப்ரல் 25 - சர்வதேச மலேரியா தினம்
by அ.இராமநாதன் Yesterday at 5:04 am

» ஏப்ரல் 19 - சர்வ தேச கல்லீரல் தினம்
by அ.இராமநாதன் Yesterday at 4:58 am

» மீண்டும் பணத்தட்டுப்பாடு?: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு
by அ.இராமநாதன் Yesterday at 4:44 am

» பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து
by அ.இராமநாதன் Yesterday at 4:33 am

» வீதியில் சுற்றித் திரிந்த வினோத மிருகம் ; பொது மக்கள் அச்சம்
by அ.இராமநாதன் Yesterday at 4:30 am

» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு
by அ.இராமநாதன் Yesterday at 4:17 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



குயிலின் நிறம் .நூல் ஆசிரியர் கவிஞர் ரமா ராமநாதன். நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Go down

குயிலின் நிறம் .நூல் ஆசிரியர் கவிஞர் ரமா ராமநாதன். நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by eraeravi on Sun Apr 01, 2012 4:53 pm

குயிலின் நிறம்

நூல் ஆசிரியர் கவிஞர் ரமா ராமநாதன்

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

காலம் வெளியீடு புதுக்கோட்டை.


புதுக்கோட்டை ஹைக்கூ கோட்டை என்று சொல்வார்கள் .நூல் ஆசிரியர் அந்த வரிசையில் புதுக்கோட்டையின் மற்றுமொரு கவிஞர். ரமா
ராமநாதன்.
சாகித்ய அகதமியின் சார்பில் ஹைக்கூ 100 கவிஞர்களின் ,தலா பத்து கவிதைகள் வீதம்
ஆயிரம் கவிதைகளை
த் தொகுத்து வெளியிட்ட முனைவர் இரா. மோகன் அவர்களின்
அணிந்துரை அற்புதம் .
அணிந்துரை வழங்குவதில் தனி முத்திரைப் பதித்தவர் .தமிழ் தேனீ முனைவர் இரா. மோகன்.கணினி உலகத்தில் நீண்ட நெடிய கவிதைகள் வாசிக்க வாசகர்களுக்கு வாசிக்க நேரம்
கிடைப்பதில்லை . ஹைக்கூ கவிதைகள் மூன்றே வரிகளில் ,வெட்டு
ஒன்று .துண்டு இரண்டு என்று சொல்லி விடுவதால் .வயது வித்தியாசம் இன்றி ஆறு
முதல் அறுபது வரை அனைவரும் ரசித்துப் படிக்கின்றனர் .
மழையிலும் வெயிலிலும் வாழ்வதற்கே படைக்கப் பட்டது குடை .அந்தக் குடையை நூல் ஆசிரியர் கவிஞர் ரமா ராமநாதன் எப்படி பார்கிறார் பாருங்கள் .


ஊரெங்கும் அடைமழை
மலையில் நனைந்தபடி
பாவம் ...குடை !கவிஞர்களுக்கு கற்பனையும் ,கூர்ந்துப் பார்க்கும் பார்வையும் முக்கியம் அந்த வகையில் குளத்தை உற்று நோக்கி படைத்த ஹைக்கூ .

வட்ட நிலவைக்
கடித்துப் பார்க்கும்
குளத்து நிலா !

தொழிலாளியை வரவழைக்க அழைக்கும் ஆலைச் சங்கை, நூல் ஆசிரியர் கவிஞர் ரமா ராமநாதன் எப்படி பார்க்கிறார் பாருங்கள். வித்தியாசமான பார்வை .
கசங்கிய தொழிலாளியைப்
பார்த்துக் கதறும்
ஆலைச் சங்கு !

மதுரைக்குப் பெருமை சேர்க்கும் மல்லிகைப் பூ விற்கு ஹைக்கூவால் பெருமை சேர்க்கின்றார் .நூல் ஆசிரியர் கவிஞர் ரமா ராமநாதன் .


விற்பனைக்கு மல்லிகைப் பூ

இலவசமாய் ...
வாசம் !
சூரியனுக்கு ஆணை இடுகின்றார் பாருங்கள் .

மெல்ல வா சூரியனே
இப்போதுதான் ...
பூவில்
பனித்துளி !

இயற்கையை உற்று நோக்கி ஹைக்கூ படைத்துள்ளார் .பாருங்கள் .

எத்தனை முறை குத்தியும்
பூவுக்கு வலிக்கவில்லை
ண்ணத்துப் பூச்சிக் கொம்புகள் !

வரிகளை அரசு கூட்டிக் கொண்டே செல்லும் . சிலர் ஹைக்கூ வை ,
மூன்று வரியில் முடிக்காமல் நான்கு வரியாக்கி
விடுகின்றனர்.படைப்பாளிகளுக்கு
ம், அரசுக்கும் ஒரே ஹைக்கூ வில் வேண்டுகோள்
வைக்கின்றார் .

வரிகளைக்
கூட்டாதீர்
பாவம் ..
மக்களும் ஹைக்கூவும் !

,
வறுமை ஒழிப்போம் என்று சொல்லி ஆட்சிக்கு வருகின்றனர் .ஆட்சிக்கு
வந்ததும் ,அரசியல்வாதிகள் அவர்களின் வறுமையை, குடும்பத்தின் வறுமையை
,வேண்டியவர்களின் வறுமையை உடனே ஒழித்து விடுகின்றனர் .ஆனால் ஏழை மக்களின்
வறுமையை யாருமே ஒழிப்பதில்லை.
குழந்தைத் தொழிலாளி முறை ஒழிக்கப் பட வேண்டும் என்று திட்டம் தீட்டுகின்றனர் .ஆனால் நாட்டில் நடை முறையில் குழந்தைத் தொழிலாளி முறை ஒழிந்தப் பாடில்லை .அதனை உணர்த்தும் ஹைக்கூ .

மேஜை துடைக்கும்
ஓட்டல் சிறுவன்
அசுத்தப்படுகிறதே தேசம் !


மரங்களை எல்லாம் வெட்டி வீழ்த்தி விட்டு மழை இல்லை .என்று வருத்தப் படும் நிலையை எள்ளல் சுவையுடன் உணர்த்தும் ஒரு ஹைக்கூ .

காட்டை அழித்து
கட்டினார்கள்
மழை ஆராய்ச்சிக்
கூடம் !சர்க்கரை விலையை உயர்த்துவார்கள் .ஆனால் ,சர்க்கரை ஆலை தொழிலாளிக்கும் தியம் உயர்த்த மாட்டார்கள் .அதுப் பற்றி ஒரு ஹைக்கூ .

சர்க்கரை ஆலையில்
கசப்பான உண்மை
சம்பளக் குறைவு !


ஹைக்கூ கவிதைகள் மூலம் தன்னம்பிக்கை விதைத்து வெற்றிப் பெற்றுள்ளார் .நூல் ஆசிரியர் கவிஞர் ரமா ராமநாதன் .

விழுந்து விட்டாலென்ன ..
எழுந்து புறப்படும்
பூவின் வாசம் !
பூவை உவமைக் காட்டி வாசகர்களுக்கு கவலை நீக்குகின்றார் .

சுற்றிலும் முட்கள்
சிரிப்பதை நிறுத்தவில்லையே
பூ !

குயிலுக்கு குரல் அழகு .ஆனால் புறாப் போன்ற வெண்மை
குயிலுக்கு இல்லை.நிறம் இல்லையே யாரும் வருந்த வேண்டாம் என்று நம்பிக்கை
விதைகின்றார் .

மயக்கும் இசை
மறந்தே போனது
குயிலின் நிறம் !

இப்படி நூல் முழுவதும் சிந்திக்க வைக்கும் ஹைக்கூ கவிதைகள் நிறைந்து உள்ளது
.அவர்களுக்கு பாராட்டுக்கள் தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள் .


eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2195
Points : 5021
Join date : 18/06/2010

Back to top Go down

Re: குயிலின் நிறம் .நூல் ஆசிரியர் கவிஞர் ரமா ராமநாதன். நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Tue Apr 03, 2012 2:40 pm


_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum