"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» 'மதுவை விட மனித உயிர் பெரியது': சுப்ரீம் கோர்ட் கருத்து
by அ.இராமநாதன் Today at 12:38 pm

» நிருபரை தேசத் துரோகி என்று சாடும் எச்.ராஜா
by அ.இராமநாதன் Today at 12:37 pm

» ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் சின்னங்களுடன் வெளியிடப்பட்டுள்ளது.
by அ.இராமநாதன் Today at 12:29 pm

» ஜி.எஸ்.டி மசோதா மக்களவையில் நிறைவேற்றம்!
by அ.இராமநாதன் Today at 12:26 pm

» ஏர்போர்ட்டுக்கு ரொனால்டோ பெயர்!
by அ.இராமநாதன் Today at 12:26 pm

» மதுக்கடைகளில் அலைமோதும் கூட்டம்
by அ.இராமநாதன் Today at 12:25 pm

» சென்னை அமைந்தகரையில் ரூ.1 கோடி செல்லாத நோட்டுகள் சிக்கின:2 பேர் கைது
by அ.இராமநாதன் Today at 12:24 pm

» செம்மரக்கடத்தலில் ராணியாக திகழ்ந்த விமான பணிப்பெண் கொல்கத்தாவில் சிக்கினார் ஆந்திர போலீசார் அதிரடி நடவடிக்கை
by அ.இராமநாதன் Today at 12:23 pm

» மாமன் மகளுடன் சென்ற வாலிபரிடம் ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உ.பி ஆன்டி-ரோமியோ படை!
by அ.இராமநாதன் Today at 12:22 pm

» தமிழ்ப் பெண்ணாகிறேன் – ரித்திகா சிங்
by அ.இராமநாதன் Today at 11:59 am

» ‘சரவணன் இருக்க பயமேன்’
by அ.இராமநாதன் Today at 11:58 am

» பெண்கள் தற்காப்பு கலையை கற்க வேண்டும் -நடிகை டாப்சி பேட்டி
by அ.இராமநாதன் Today at 11:56 am

» மெல்ல விரியும் சிறகுகள் ! நூல் ஆசிரியர் : வ. பரிமளா தேவி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 8:33 pm

» இனிய காலை வணக்கங்கள் :
by அ.இராமநாதன் Yesterday at 7:52 pm

» இனிய யுகாதித்திருநாள் வாழ்த்துக்கள்
by அ.இராமநாதன் Yesterday at 7:48 pm

» ரிசார்ட் போதும் சாமி...!!
by அ.இராமநாதன் Yesterday at 7:42 pm

» கொள்ளைகாரனா ஏன் மாறினான்...!!
by அ.இராமநாதன் Yesterday at 6:55 pm

» முட்டையிலிருந்து வெளியேறும் புலி!
by அ.இராமநாதன் Yesterday at 6:48 pm

» வெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..!
by அ.இராமநாதன் Yesterday at 6:41 pm

» மூடியே இருக்கும் மனம்..!
by அ.இராமநாதன் Yesterday at 6:31 pm

» பெர்லின் மியூசியத்திலிருந்து களவாடப்பட்ட 100 கிலோ எடையுள்ள அரிய தங்க நாணயம்
by அ.இராமநாதன் Yesterday at 6:21 pm

» எடுத்துக்காட்டு உவமை அணி
by வண்ணம் Yesterday at 5:30 pm

» கவி இன்பம்
by வண்ணம் Yesterday at 5:29 pm

» இறைவன் யேசு கிறிஸ்து
by வண்ணம் Yesterday at 5:27 pm

» குழந்தையுடன் குழந்தையாய் ! (சிறுகதைகள்) நூல் ஆசிரியர் : நெருப்பாலைப் பாவலர் இராம. இளங்கோவன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரவி !
by eraeravi Mon Mar 27, 2017 10:48 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Mon Mar 27, 2017 5:49 am

» மக்களுக்காக குரல் கொடுக்கும் கமல்!
by அ.இராமநாதன் Mon Mar 27, 2017 5:47 am

» தாய்மொழியில் பின்னணி பாடும் அமலாபால்!
by அ.இராமநாதன் Mon Mar 27, 2017 5:46 am

» ராஜமவுலியின் அடுத்த பிரமாண்ட படம்!
by அ.இராமநாதன் Mon Mar 27, 2017 5:45 am

» நார்வே' திரைப்பட விருது!
by அ.இராமநாதன் Mon Mar 27, 2017 5:44 am

» அன்பே பிரதானம், – சகோதர அன்பே பிரதானம்
by ராஜேந்திரன் Sun Mar 26, 2017 3:32 pm

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன் Sun Mar 26, 2017 1:11 pm

» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
by கவிப்புயல் இனியவன் Sun Mar 26, 2017 12:47 pm

» மெழுகுவர்த்தி - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Fri Mar 24, 2017 9:50 pm

» திருட்டுப் பார்வை - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Fri Mar 24, 2017 9:48 pm

» மருமகள் - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Fri Mar 24, 2017 9:44 pm

» சாணக்கியன் - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Fri Mar 24, 2017 9:41 pm

» பணம் மட்டுமே ஒரு மனுசனுக்கு சந்தோசத்தைக் கொடுக்காது
by அ.இராமநாதன் Fri Mar 24, 2017 9:35 pm

» மனைவி ஒரு கன்னத்தில் அறைஞ்சா ...!!
by அ.இராமநாதன் Fri Mar 24, 2017 9:28 pm

» திசைகளாகும் திருப்பங்கள் ! (தன்னம்பிக்கை & விழிப்புணர்வு கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : அருட் தந்தை ஆ. லொயோலா ! அணிந்துரை கவிஞர் இரா. இரவி !
by eraeravi Wed Mar 22, 2017 9:58 am

» மன மகிழ்ச்சி தரும் மணத்தக்காளி கீரை
by அ.இராமநாதன் Tue Mar 21, 2017 5:36 pm

» ஆரோக்கிய வாழ்வுக்கு சிறந்த உணவுகள்!
by அ.இராமநாதன் Tue Mar 21, 2017 5:34 pm

» பொடுகை போக்கும் சின்ன வெங்காயம்
by அ.இராமநாதன் Tue Mar 21, 2017 5:31 pm

» கண்ணுக்கு எது அழகு?
by அ.இராமநாதன் Tue Mar 21, 2017 5:29 pm

» இணையத்தில் இரவி ! கட்டுரையாளர்:முனைவர் பேராசிரியர் ச.சந்திரா ! சாதனமா?சீதனமா?
by eraeravi Tue Mar 21, 2017 4:47 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



நித்திரைப் பயணங்கள் !நூல் ஆசிரியர் கவிஞர் மு .ஆ .பீர்ஒலி.விமர்சனம் கவிஞர் இரா .இரவி

View previous topic View next topic Go down

நித்திரைப் பயணங்கள் !நூல் ஆசிரியர் கவிஞர் மு .ஆ .பீர்ஒலி.விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by eraeravi on Fri Apr 13, 2012 8:58 pm

நித்திரைப் பயணங்கள் !

நூல் ஆசிரியர் கவிஞர் மு .ஆ .பீர்ஒலி.



தகிதா பதிப்பகம் கோவை விலை ரூபாய் 50.



நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .



நூலின் தலைப்பே நமை சிந்திக்க வைக்கின்றது .கனவு என்பதை நித்திரைப் பயணங்கள் இப்படி கவித்துவமாகவும்


சொல்லாம் என்பதை உணர்த்தி உள்ளார் .நூல் ஆசிரியர் கவிஞர் மு .ஆ .பீர்ஒலி.அட்டைப் பட வடிவமைப்பு அருமை. ஆங்கில இலக்கியம் ,சட்டம் படித்துவிட்டு கவிதை எழுதுவதற்கு முதலில் பாராட்டுக்கள் .கலை மாமணி,பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களின் கை எழுத்திலேயே வந்து இருக்கும் இரண்டாவது அணிந்துரை இது .மிக நன்று .


பேராசிரியர் ,கலைமாமணி கு.ஞானசம்பந்தன் அவர்களின் அணிந்துரை .இரண்டு இலக்கிய இமயங்களின் அணிந்துரை கவிதை நூல் என்ற மகுடத்தில் பதித்த வைரக்கல்லாக மிளிர்கின்றது .நூல் ஆசிரியர் கவிஞர் மு .ஆ .பீர்ஒலி வித்தியாசமாகச் சிந்திக்கிறார் .நிலவு அழகு என்றுதான் பலரும் பாடி உள்ளனர் .நிலவு பற்றி அவரது வரிகள் .

உண்மையைத் தேடி !

வெப்பத்தைக் கக்கிய நிலவு

மனது கனத்தது

மீண்டும் அந்த பயணம்

உண்மையைத் தேடி !


இயற்கையைக் காட்சிப் படுத்தி வெற்றிப் பெறுகின்றார் . நூல் ஆசிரியர் கவிஞர் மு .ஆ .பீர்ஒலி .


அல்லி இதழால் அவளுக்கு இசைந்திடடி ..

மலர்த்தோட்டம் மலர்ந்தும் மலராத அரும்புகள்
பனித்துளியின் சிலிர்ப்பு புகை கவிரி கொண்டு

நினைவுகளை வருடுகிறேன் !

தெற்குத் தொடர் வண்டித் துறையில் வர்த்தக ஆய்வாளராக பணிபுரிந்துக் கொண்டே இலக்கியத்திலும் ஈடுபடுவது பாராட்டுக்குரியப் பணி .நூல் ஆசிரியர் கவிஞர் மு .ஆ .பீர்ஒலி பற்றி தகிதா பதிப்பகம் எழுதியது முற்றிலும் உண்மை என்பதை உணர்ந்தேன் .அவரை நேரடியாக சந்தித்தப் போது
. முழுமையான உண்மை ,களங்கமற்ற அன்பு ,தற்சார்பு இல்லாத நியாயம் ,சமரசம்
செய்யாத சத்தியம் ,பாரபட்சமில்லாத பாசம் ,எதிர்பாப்பில்லாத உறவு இவைகளை
இன்னும் தேடிக் கொண்டிருக்கிற அரிய மனிதர்தான் இந்த
பீர்ஒலி .

காதலைப் பாடாத கவிஞர் இல்லை .காதலைப் பாடதவர் கவிஞரே இல்லை .நூல் ஆசிரியர் கவிஞர் மு .ஆ. பீர்ஒலிஅவர்களும் காதலைப் பாடி உள்ளார்.




மலரவிடப் போவதில்லை !
என் மனத் தோட்டத்தில் பார்வைகள்
விதைத்துச் சென்ற காதல் அரும்புகளை
மலரவிடப் போவதில்லை !

எங்கு சென்றிட்டாய் !

உன்னில் என்னையிழந்து
என்னில் உன்னைத் தேடி
மதுரவாய் மலர்ந்து
மகர யாழ் மொழி பேசி
காதல் மலர்கள்
கனவுக் கோட்டையில் !


உன்னில் என்னையிழந்து ,என்னில் உன்னைத் தேடி கவிதைகளில் சொல் விளையாட்டு விளையாடி உள்ளார் .
பாராட்டுக்கள் .
இயற்கையை உற்று நோக்கி இயற்கையோடு இயற்கையாக
இரண்டரக் கலந்து கவிதை வடித்துள்ளார் .இவருக்கு இயற்கை ரசிக்க எப்போது
நேரம் கிடைக்கின்றது என்று வியந்துப் போனேன் .உள்ளத்து உணர்வு கவிதை .தான்
உணர்ந்தவற்றை கவிதையாக்கி உள்ளார் .


ஒரு கவிதை அரங்கேறிக் கொண்டிருக்கிறது !


ஆகாயம் குடை பிடிக்க
நட்சத்திரங்கள் கண் சிமிட்டத் துவங்கின ..
திரை விலகி புதினமாய்
வெட்கி நகைத்தாள் நிலவுப்பெண் !

நீ ....நான்...அந்தநிலவு ...

நட்சத்திரங்களை தோற்கடிக்கும்
மின்மினி பூச்சிகள் ஆகாங்கே
வட்டமிட்டுக் கொண்டிருந்தன

பவுர்ணமி இரவு

நிலவின் பரிணாமத் தோற்றம்

நீ ....நான்...அந்தநிலவு ...

கவிதைகளை ரசித்து ,ருசித்து ஈடுபாட்டுடன் எழுதி உள்ளார் .

நித்திரைப் பயணங்கள்
புறப்பாடு
நெஞ்சகத்தில் ற்றுவித்த காதல் சுனை நீரில்
காலமெல்லாம் மிதந்திடவே கனவிலும் நினைவிலும்
கதறி ...அலைகின்றேன் காணலியே !

தத்துவ கவிதைகளும் நூலில் உள்ளது.

மனித இனம் !

கருவறை இருட்டு கல்லறை நிசப்தம்
பிரகாசித்தவன்
இந்த பிரபஞ்ச ஒளியில்
இருண்டு கிடந்தான் !

நூலில்
உள்ள கவிதைகள் படிக்கும் வாசகர்களுக்கு எளிதில் புரியும் வண்ணம் உள்ளது
.பாராட்டுக்கள் .புரியாத புதிரான இருண்மை கவிதைகள் இதில் இல்லை .அவர்கள்
தொடர்ந்து எழுத வேண்டும் .வாழ்த்துக்கள்.

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2072
Points : 4652
Join date : 18/06/2010

Back to top Go down

Re: நித்திரைப் பயணங்கள் !நூல் ஆசிரியர் கவிஞர் மு .ஆ .பீர்ஒலி.விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Mon Apr 16, 2012 3:54 pm


_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56776
Points : 69516
Join date : 15/10/2009
Age : 33
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: நித்திரைப் பயணங்கள் !நூல் ஆசிரியர் கவிஞர் மு .ஆ .பீர்ஒலி.விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by eraeravi on Mon Apr 16, 2012 8:45 pm

--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி


இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2072
Points : 4652
Join date : 18/06/2010

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum