படம்: வண்டிசோலை சின்னராசு
இசை: Ar ரஹ்மான்
பாடியவர்கள்: ஜெயசந்திரன், மின்மினி
வரிகள்: வைரமுத்து


சித்திரை நிலவு சேலையில் வந்தது முன்னே

உன் சேலையின் புண்ணியம் நான் பெற வேண்டும் பெண்ணே
அந்த மண்ணுக்குள் எங்கே நீர் உண்டு
அது வேருக்கு தெரியும்
இந்த பெண்ணுக்குள் எங்கே எதுவுண்டு
அது சேலைக்கு தெரியும்
(சித்திரை நிலவு..)

வண்ண வண்ண வானவில் ஒன்று

வானில் வந்தால் ஊருக்கு தெரியும்
கன்னி பொண்ணு நெஞ்சுக்குள்ள
காதல் வந்தால் யாருக்கு தெரியும்
மேகங்களில் எத்தனை துளியோ
மின்னல் பெண்ணா யாருக்கு தெரியும்
மோகம் கொண்ட பெண் யாரென்று
முத்தம் தரும் சாமிக்கு தெரியும்
நிலா எது விண்மீன் எது
நீரில் நிற்கும் அல்லிக்கு தெரியும்

நாணம் எது ஊடல் எது
நானும் கண்ட புள்ளிக்கு தெரியும்
(சித்திரை நிலவு..)

மரங்களில் எத்தனை பழமோ

பழம் உண்ணும் பறவைகள் அறியும்
பழங்களில் எத்தனை மனமோ
ஊரில் இங்கே ய்ஆருக்கு தெரியும்
எந்த உறை தன் உறை என்று
உள்ளே செல்லும் வாலுக்கு தெரியும்
எந்த இடை தன் இடையென்று
எட்டி தொடும் ஆளுக்கு தெரியும்
நிலாவிலே காற்றே இல்லை
இது எத்தனை பேருக்கு தெரியும்
காதல் வந்தால் கண்ணே இல்லை
காதல் கொண்ட யாருக்கு தெரியும்
(சித்திரை நிலவு..)