"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
by அ.இராமநாதன் Today at 3:10 pm

» உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
by அ.இராமநாதன் Today at 2:54 pm

» தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
by அ.இராமநாதன் Today at 2:51 pm

» பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
by அ.இராமநாதன் Today at 2:44 pm

» கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
by அ.இராமநாதன் Today at 12:07 pm

» கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
by அ.இராமநாதன் Today at 9:59 am

» கிறிஸ்தவ பெண்ணுக்கு திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் பதவி: நடிகை ரோஜா கண்டனம்
by அ.இராமநாதன் Today at 9:53 am

» கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
by அ.இராமநாதன் Today at 9:43 am

» கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
by அ.இராமநாதன் Today at 9:40 am

» கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
by அ.இராமநாதன் Today at 9:38 am

» நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
by அ.இராமநாதன் Today at 9:36 am

» கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
by அ.இராமநாதன் Today at 9:33 am

» கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
by அ.இராமநாதன் Today at 3:49 am

» வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
by அ.இராமநாதன் Today at 3:47 am

» அன்று ...அப்போது!!
by அ.இராமநாதன் Today at 3:34 am

» டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
by அ.இராமநாதன் Today at 3:28 am

» அவரை மாதிரி கஞ்சனை பார்க்க முடியாது...!!
by அ.இராமநாதன் Today at 3:25 am

» கலாய் கவிதைகள்
by அ.இராமநாதன் Today at 3:14 am

» மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
by அ.இராமநாதன் Today at 2:54 am

» ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
by அ.இராமநாதன் Today at 2:51 am

» கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
by அ.இராமநாதன் Today at 2:46 am

» கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
by அ.இராமநாதன் Today at 2:43 am

» திட்டி வாசல்
by அ.இராமநாதன் Today at 2:40 am

» வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
by அ.இராமநாதன் Today at 2:33 am

» கேரளா சாகித்ய அகாடமி
by அ.இராமநாதன் Today at 2:32 am

» 2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
by அ.இராமநாதன் Today at 2:30 am

» வேங்கை மகன் ஒத்தையில நிக்கேன்...!!
by அ.இராமநாதன் Yesterday at 10:30 pm

» தமிழன் அறியாத நாரதரா...?
by அ.இராமநாதன் Yesterday at 10:24 pm

» முலாம்பழம் - மருத்துவ பயன்கள்
by அ.இராமநாதன் Yesterday at 10:20 pm

» செயல் இன்றி இன்பமில்லை
by அ.இராமநாதன் Yesterday at 10:14 pm

» `மூடர்கூடம்’ நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி..!
by அ.இராமநாதன் Yesterday at 10:10 pm

» கடவுளும் தூதுவர்களும்
by அ.இராமநாதன் Yesterday at 9:56 pm

» கால தேவதை
by அ.இராமநாதன் Yesterday at 9:47 pm

» ஒற்றைச் செருப்பு
by அ.இராமநாதன் Yesterday at 9:46 pm

» இராயேந்திரனின் எண்ணங்கள்
by ராஜேந்திரன் Yesterday at 9:34 pm

» அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....!!
by அ.இராமநாதன் Yesterday at 5:17 pm

» விவேக் படத்தில் யோகி பி பாடல்
by அ.இராமநாதன் Yesterday at 3:11 pm

» கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
by அ.இராமநாதன் Yesterday at 3:10 pm

» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
by அ.இராமநாதன் Yesterday at 3:03 pm

» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
by அ.இராமநாதன் Yesterday at 3:02 pm

» எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
by அ.இராமநாதன் Yesterday at 3:01 pm

» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
by அ.இராமநாதன் Yesterday at 2:59 pm

» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
by அ.இராமநாதன் Yesterday at 2:58 pm

» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
by அ.இராமநாதன் Yesterday at 3:57 am

» ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி
by அ.இராமநாதன் Yesterday at 3:54 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines புதுக்கவிதையிலும் முடிவுத்தொடங்கி(அந்தாதி) புனையலாமே!

Go down

புதுக்கவிதையிலும் முடிவுத்தொடங்கி(அந்தாதி) புனையலாமே!

Post by yarlpavanan on Tue Apr 24, 2012 8:18 pm

முடிவுத்தொடங்கி(அந்தாதி) என்பது முடிவு(அந்தம்), தொடக்கம்(ஆதி) என்ற சொற்பிணையலால் ஏற்பட்டதே! மரபுக் கவிதையில் முதலடியில் தொடங்கிய சீரும் ஈற்றடியில் முடியும் சீரும் ஒன்றாக அமைதலையே அந்தாதி என்கிறார்கள். அதாவது, முடிகின்ற சீராலே தொடங்கியோ தொடக்கிய சீராலே முடித்தோ பா புனையும் திறன் முடிவுத்தொடங்கி(அந்தாதி) என்றழைக்கப்படுகிறது. மரபுக் கவிதை புனைவது இலகுவானதல்ல, அதிலும் இவ்வகைப் பாக்களை புனைவது இலகுவாக அமைய வாய்ப்பில்லை.

புதுக்கவிதை விரும்பிகள் பலர் மரபுக் கவிதை அமைப்பைப் பேணி வருவதை நாம் அறிவோம், அந்த வகையில் புதுக்கவிதையிலும் முடிவுத்தொடங்கி(அந்தாதி) புனையலாமே! வழமை போன்று புதுக்கவிதை புனையும் வேளை தொடங்கிய சீரில் ஈற்றுச் சீர் அமையும் வண்ணம்(அதாவது தொடங்கிய சொல்லாலே முடித்து) முடிவுத்தொடங்கி(அந்தாதி) பாப்புனைய முயன்று பாருங்களேன். வழமை போல எதுகை, மோனை அமையப் பாப்புனைந்தால் முடிவுத்தொடங்கி(அந்தாதி) பாக்களைப் புதுக்கவிதையில் புனையும் போதும் வெற்றி கிட்டும். உங்கள் முயற்சிக்கு எனது வாழ்த்துகள்.

எடுத்துக்காட்டு:
படிக்க நினைத்து நினைத்து
படித்தபின் மறந்து மறந்து
பயன்படுத்த முனையும் போதுதான்
பயனீட்ட மறந்ததை நினைவூட்டி
படித்தவர்களைப் பார்த்துப் படிக்க!

"அந்தாதி கவிதை - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள்" என்ற பதிவுக்கு வழங்கிய கருத்தில் சில மாற்றங்களைச் செய்து இப்பதிவை ஆக்கியுள்ளேன்.


avatar
yarlpavanan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 1035
Points : 1515
Join date : 30/10/2011
Age : 48
Location : sri lanka

Back to top Go down

Re: புதுக்கவிதையிலும் முடிவுத்தொடங்கி(அந்தாதி) புனையலாமே!

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Apr 24, 2012 8:26 pm

மரபுக் கவிதை புனைவது இலகுவானதல்ல என்ற கருத்தில் எனக்கும் உடன்பாடு உண்டு. ஆனாலும் நாம் எளிமைக்கு முக்கியத்துவம் கொடுத்துவிட்டோம் என்பதையும் ஏற்றுக் கொள்ளவேண்டும். மரபில் நமக்கு இப்போது பயிற்சியும் முயற்சியும் இன்மை இதற்குக் காரணமாகலாம்.

நான் தமிழ் இலக்கியம் பயின்றவன் என்ற போதிலும் நான் மரபில் எழுதுவதைத் தவிர்த்து வருகிறேன் என்பது உண்மையே. எனக்கு - என் புதுக்கவிதை வகைமைகளுக்கு புதுக்கவிதை வடிவமே போதுமானதாக இருப்பதும் காரணமாகலாம்.

நண்பர்கள் எழுதுவார்கள்... தங்களுக்கும் எழுதுபவர்களுக்கும் பாராட்டுகள்.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: புதுக்கவிதையிலும் முடிவுத்தொடங்கி(அந்தாதி) புனையலாமே!

Post by அ.இராமநாதன் on Tue Apr 24, 2012 8:33 pm

நீங்கள் மரபுக் கவிதை எழுத முயற்சிப்பவரா?
நீங்கள் எழுதிய மரபுக் கவிதையை சரிபார்க்க
உதவுகிறது அவலோகிதம் என்ற தமிழ் யாப்பு
மென்பொருள்.

இந்த மென்பொருள், வெண்பா, ஆசிரியப்பா,
கலிப்பா, வஞ்சிப்பா முதலிய நால்வகைப்பாக்களையும்
அதற்குரிய பாவினங்களையும் கண்டுகொள்ளும்
திறன் கொண்டது.

கீழ்க்கண்ட முகவரியில் இருந்து இதனை
பதிவிறக்கிக்கொள்ளலாம்.
நன்றி: இணையம்
-
[You must be registered and logged in to see this link.]

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 27232
Points : 59650
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: புதுக்கவிதையிலும் முடிவுத்தொடங்கி(அந்தாதி) புனையலாமே!

Post by thaliranna on Tue Apr 24, 2012 8:55 pm

பயனுள்ள தகவல்களை பகிர்ந்தமைக்கு மூவருக்கும் எனது நன்றி! [You must be registered and logged in to see this image.]
avatar
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 42
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

Re: புதுக்கவிதையிலும் முடிவுத்தொடங்கி(அந்தாதி) புனையலாமே!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Wed Apr 25, 2012 11:10 am

நல்ல முயற்சி பாராட்டுக்கள்

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: புதுக்கவிதையிலும் முடிவுத்தொடங்கி(அந்தாதி) புனையலாமே!

Post by yarlpavanan on Thu Apr 26, 2012 5:05 am

கவியருவி ம. ரமேஷ், அ.இராமநாதன் ஆகியோரது கருத்துக்கள் பயன்தரும் தகவல். thaliranna, தமிழ்த்தோட்டம் (யூஜின்) ஆகியோரது கருத்துக்கு நன்றி.
avatar
yarlpavanan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 1035
Points : 1515
Join date : 30/10/2011
Age : 48
Location : sri lanka

Back to top Go down

Re: புதுக்கவிதையிலும் முடிவுத்தொடங்கி(அந்தாதி) புனையலாமே!

Post by yarlpavanan on Thu Apr 26, 2012 9:49 pm

முடிவுத்தொடங்கி(அந்தாதி) என்பது ஒவ்வொரு பாட்டிலும் முதற் சீரும் ஈற்றுச் சீரும் பொருந்தி வர எழுத வேண்டும். இதோ இன்னோர் எடுத்துக்காட்டு:

தலைவலி உம் காய்ச்சல் உம்
தனக்கு வந்தால் தான் தெரியுமாம்
எனக்குத் தெரிந்த வரை
இவ்வுண்மையை
உணராதவருக்கும் தலைவலி!
avatar
yarlpavanan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 1035
Points : 1515
Join date : 30/10/2011
Age : 48
Location : sri lanka

Back to top Go down

Re: புதுக்கவிதையிலும் முடிவுத்தொடங்கி(அந்தாதி) புனையலாமே!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Fri Apr 27, 2012 12:04 am

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: புதுக்கவிதையிலும் முடிவுத்தொடங்கி(அந்தாதி) புனையலாமே!

Post by ஹிஷாலீ on Fri Apr 27, 2012 3:46 pm

இதில் எப்படி தொடங்கவேண்டும் நண்பரே
avatar
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 22
Location : chennai

Back to top Go down

மக்களுக்குள்ளே தப்பிக்க இயலாதப்பா

Post by yarlpavanan on Sat Apr 28, 2012 6:01 pm

ஹிஷாலீ wrote:இதில் எப்படி தொடங்கவேண்டும் நண்பரே

முதலில் பாவின் தலைப்பைத் தேர்ந்தெடுங்கள்.
எடுத்துக்காட்டாக:
"மக்களுக்குள்ளே தப்பிக்க இயலாதப்பா" என்பதைத் தலைப்பாகக் கொள்ளுங்கள்.
புதுக்கவிதையை எழுத முன் கற்பனை செய்வோம்...
மக்கள் முன்னே நம்மாளுகள் தவறு செய்து போட்டுத் தப்பிக்க இயலாது என்பதை விளக்குவதாக இருக்கட்டும்.
மக்கள்............
..........................
.............மக்கள்
என்றவாறு முதற் சீரிலும் ஈற்றுச் சீரிலும் "மக்கள்" என்றமையப் புதுக்கவிதையைப் புனையத் தொடங்குவோம்.

மக்கள் முன்னே
நம்மாளுகள் எப்படி நடித்தாலும்
"என்ன தவறு செய்தனர்
இப்படி நடிக்கிறார்களே" என்று
தவறையும் தவறிழைத்தவர்களையும்
எப்படியோ
கண்டுபிடிப்பவர்கள் நம் மக்கள்!

இவ்வாறு புதுக்கவிதையிலும் முடிவுத்தொடங்கி(அந்தாதி) புனையலாமே!
avatar
yarlpavanan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 1035
Points : 1515
Join date : 30/10/2011
Age : 48
Location : sri lanka

Back to top Go down

Re: புதுக்கவிதையிலும் முடிவுத்தொடங்கி(அந்தாதி) புனையலாமே!

Post by yarlpavanan on Sun Apr 29, 2012 6:21 am

முடிவுத்தொடங்கி(அந்தாதி) பற்றிய ஒரு புதிய பார்வையை எனது பதிவு ஏற்படுத்தியிருக்கும் என நான் நம்புகிறேன். மரபுக் கவிதையின் இறுக்கம் புதுக்கவிதையில் இல்லை. ஆயினும் புதுக்கவிதையில் முடிவுத் தொடங்கி (அந்தாதி) என எழுத விட்டால் ஓர் இறுக்கம் பேணலாம் என்பதற்காக "முடிவுத்தொடங்கி(அந்தாதி) என்பது ஒவ்வொரு பாட்டிலும் முதற் சீரும் ஈற்றுச் சீரும் பொருந்தி வர எழுத வேண்டும்." எனச் சில எடுத்துக் காட்டுகளை முன்வைத்திருந்தேன்.

அறிஞர் ஒருவர் முடிவுத்தொடங்கி(அந்தாதி) இதுவல்ல. "முதற் பாட்டின் ஈற்றுச் சீரும் அடுத்த பாட்டின் முதற் சீரும் பொருந்தி வர எழுத வேண்டும்." என விளக்கமளித்தார். அவரது கருத்தில் தவறில்லை. எனது முயற்சி தான் புதியது. எப்படியாயினும் புதிய பாவலர்களுக்கும் வாசகர்களுக்கும் தெளிவுபடுத்த இது பற்றிய நிறைவான தகவலைக் கீழே தருகின்றேன்.

"ஒரு பாடலின் ஈற்றடியின் கடைச்சொல் (அந்தம்), வரும் பாடலின் துவக்கச் சொல்லாக‌ (ஆதி) அமையும் இலக்கணமுறை அந்தாதி ஆகும்." என்பதற்கு [You must be registered and logged in to see this link.] என்னும் விக்கிப்பீடியா தமிழ்ப் பதிப்பில் இவ்வாறு விளக்கப்பட்டுள்ளது.

அந்தாதி என்பது யாப்பியலில் ஒரு தொடை வகையையும், ஒரு பிரபந்த வகையையும் குறிக்கும். அந்தாதி என்னும் சொல் முடிவு என்னும் பொருள்படும் அந்தம், தொடக்கம் என்னும் பொருள்படும் ஆதி ஆகிய இரு சமசுக்கிருதச் சொற்களின் சேர்க்கையால் உருவானது. இதற்கேற்ப, ஒரு பாடல் முடிவில் உள்ள எழுத்து, அசை, சீர், சொல், சொல் அல்லது அடி அடுத்து வரும் பாடலின் தொடக்கமாக அமையும் பாடல்களால் ஆனது அந்தாதிச் செய்யுள் ஆகும். அடுத்தடுத்து வரும் அடிகள் அந்தாதியாக அமையும் போது அது அந்தாதித் தொடை எனப்படும். அந்தாதி அமைப்பு பாடல்களை வரிசையாக மனப்பாடம் செய்வதற்கு வசதியாக உள்ளது.

முடிவுத்தொடங்கி(அந்தாதி) என்பது மரபுக்கவிதை அமைப்பாகும். அது
பின்வரும் வகைகளைக் கொண்டுள்ளது.
எடுத்துக்காட்டாக:
ஒலியந்தாதி, பதிற்றந்தாதி, நூற்றந்தாதி, கலியந்தாதி, கலித்துறை அந்தாதி, வெண்பா அந்தாதி, யமக அந்தாதி, சிலேடை அந்தாதி, திரிபு அந்தாதி, நீரோட்ட யமக அந்தாதி

மரபுக்கவிதையில் முடிவுத்தொடங்கி(அந்தாதி) என்பது எப்படியிருக்கும் என்பதை அறிய [You must be registered and logged in to see this link.] தளத்தில் அறிஞர் இளம்பூரணர் அவர்களின் விளக்கத்தை போட்டிருந்தார்கள். அதனைக் கீழே தருகின்றேன். அந்தாதித் தொடைக்கு எடுத்துக்காட்டாக, இளம்பூரணர் பின்வரும் பாடலைக் கொடுத்துள்ளார்.

உலகுடன் விளங்கும் ஒளிதிகழ் அவிர்மதி
மதிநலன் அழிக்கும் வளங்கெழு முக்குடை
முக்குடை நீழல் பொற்புடை ஆசனம்
ஆசனத் திருந்த திருந்தொளி அறிவன்
ஆசனத் திருந்த திருந்தொளி அறிவனை
அறிவுசேர் உள்ளமோ டருந்தவம் புரிந்து
துன்னிய மாந்தர் அஃதென்ப
பன்னருஞ் சிறப்பின் விண்மிசை உலகே

மேலேயுள்ள பாடலில் பல வகையான அந்தாதித் தொடைகள் பின்வருமாறு வந்துள்ளன.

முதலாம் இரண்டாம் அடிகள் - அசையந்தாதி
இரண்டாம் மூன்றாம் அடிகள் - சீரந்தாதி
மூன்றாம் நான்காம் அடிகள் - சீரந்தாதி
நான்காம் ஐந்தாம் அடிகள் - அடியந்தாதி
ஐந்தாம் ஆறாம் அடிகள் - சீரந்தாதி
ஆறாம் ஏழாம் அடிகள் - எழுத்தந்தாதி
ஏழாம் எட்டாம் அடிகள் - எழுத்தந்தாதி
எட்டாம் முதலாம் அடிகள் - சீரந்தாதி

மரபுக்கவிதையில் பேணப்படும் முடிவுத்தொடங்கி(அந்தாதி) பற்றிய தெளிவைப் பெற்ற உங்களுக்கு அதிகம் பேசப்படும் பக்திப் பாடல்களில் 'அபிராமி அந்தாதி' ஐ மறந்திருக்க மாட்டியள். அபிராமி பட்டரால் இயற்றப்பட்டது. எடுத்துக்காட்டாக அதில் முதல் மூன்று பாடல்களைத் தருகின்றேன்.

1) உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம் போது மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி மென்கடிக் குங்கும தோயமென்ன
விதிக்கின்ற மேனி அபிராமி எந்தன் விழுத்துணையே.

2) துணையும் தொழும் தெய்வமும் பெற்ற தாயும் சுருதிகளின்
பணையும் கொழுந்தும் பதிகொண்ட வேரும் பனிமலர்ப்பூங்
கணையும் கருப்புச் சிலையுமென் பாசாங்குசமும் கையில்
அணையும் திரிபுர சுந்தரியாவதறிந்தனமே.

3) அறிந்தேன், எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டு
செறிந்தேன், நினது திருவடிக்கே,-திருவே.- வெருவிப்
பிறிந்தேன், நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால்,
மறிந்தே விழும் நரகுக்கு உறவாய மனிதரையே.

பிள்ளையார் காப்புடன் நூற்பயனும் உட்பட அபிராமி அந்தாதி நூறு பாடல்களையும் கீழ்வரும் இணைப்புகளைச் சொடுக்கிப் பார்க்கலாம்.
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
புதுக்கவிதையிலும் முடிவுத்தொடங்கி(அந்தாதி) எழுத முயற்சி செய்யும் போது சற்று இறுக்கமாகப் புனைவீர்கள் என நம்புகின்றேன்.
avatar
yarlpavanan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 1035
Points : 1515
Join date : 30/10/2011
Age : 48
Location : sri lanka

Back to top Go down

Re: புதுக்கவிதையிலும் முடிவுத்தொடங்கி(அந்தாதி) புனையலாமே!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Mon Apr 30, 2012 1:24 pm

[You must be registered and logged in to see this image.]

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: புதுக்கவிதையிலும் முடிவுத்தொடங்கி(அந்தாதி) புனையலாமே!

Post by கவியருவி ம. ரமேஷ் on Mon Apr 30, 2012 9:08 pm

நினைவு வந்து கொஞ்சும்
கொஞ்சும் நினைவுகள் கெஞ்சும்
கெஞ்சும்
பாசத்தில் நீடிக்கும்
நீடித்திருக்கும்
நம் காதல்
காதல்
ஓய்ந்ததில்லை
இல்லை
என்ற காதலிலும் நினைவு

நண்பரே... இது எப்படி இருக்கிறது?

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: புதுக்கவிதையிலும் முடிவுத்தொடங்கி(அந்தாதி) புனையலாமே!

Post by yarlpavanan on Fri May 04, 2012 6:09 am

கவியருவி ம. ரமேஷ் wrote:நினைவு வந்து கொஞ்சும்
கொஞ்சும் நினைவுகள் கெஞ்சும்
கெஞ்சும்
பாசத்தில் நீடிக்கும்
நீடித்திருக்கும்
நம் காதல்
காதல்
ஓய்ந்ததில்லை
இல்லை
என்ற காதலிலும் நினைவு

நண்பரே... இது எப்படி இருக்கிறது?


சிறந்த அந்தாதித் தொடை
avatar
yarlpavanan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 1035
Points : 1515
Join date : 30/10/2011
Age : 48
Location : sri lanka

Back to top Go down

Re: புதுக்கவிதையிலும் முடிவுத்தொடங்கி(அந்தாதி) புனையலாமே!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum