"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாழ்க்கையில் எல்லாமே கிடைக்கும்....!!
by அ.இராமநாதன் Today at 3:07 pm

» வெற்றி கிடைக்க தளர்வில்லாத ஊக்கம் வேண்டும்...
by அ.இராமநாதன் Today at 2:52 pm

» நீங்கள் குடிகாரனா? கண்டுபிடிக்க 51 எளிய வழிகள்.
by அ.இராமநாதன் Today at 11:14 am

» வாய் விட்டு சிரிக்கலாம்...வாங்க
by அ.இராமநாதன் Today at 11:12 am

» மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு இன்று திருக்கல்யாணம்
by அ.இராமநாதன் Today at 10:37 am

» இன்று நெல்லையப்பருக்கு கும்பாபிஷேகம்
by அ.இராமநாதன் Today at 10:37 am

» 2028 ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்?: ஐ.சி.சி., நம்பிக்கை
by அ.இராமநாதன் Today at 10:36 am

» ராகுல் வந்த விமானத்தில் திடீர் கோளாறு: விசாரணைக்கு காங். கோரிக்கை
by அ.இராமநாதன் Today at 10:35 am

» 11 எம்.எல்ஏக்களுக்கு எதிரான தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு
by அ.இராமநாதன் Today at 10:34 am

» ம.பி., காங்., தலைவராக கமல்நாத் நியமனம்
by அ.இராமநாதன் Today at 10:33 am

» டில்லி மதரசாவில் சிறுமி பலாத்காரம்; 17 வயது சிறுவன் கைது
by அ.இராமநாதன் Today at 10:32 am

» 38 வயதில் திருமணத்துக்கு தயாராகிறார் நடிகை கவுசல்யா
by அ.இராமநாதன் Today at 10:31 am

» படுக்கைக்கு அழைப்பது எல்லா துறையிலும் இருக்கிறது என்கிறார், நடிகை அடா சர்மா
by அ.இராமநாதன் Today at 10:31 am

» பணம் கொண்டு சென்ற வேனில் இருந்த 2 ஊழியர்களை சுட்டுக்கொன்று ரூ.12 லட்சம் கொள்ளை: டெல்லியில் பட்டப்பகலில் சம்பவம்
by அ.இராமநாதன் Today at 10:29 am

» தன்னைத் தானே நம்பாதது சந்தேகம்
by அ.இராமநாதன் Today at 10:28 am

» ஜார்ஜ் பெர்னாட்ஷா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Today at 10:24 am

» வரும் ஜூலைக்குள், 'ரயில் - 18' நவீன பெட்டி
by அ.இராமநாதன் Yesterday at 10:13 pm

» உ.பி.,யில் ரயில்-பஸ் மோதல்; 13 குழந்தைகள் பலி
by அ.இராமநாதன் Yesterday at 10:10 pm

» மேற்கு வங்க சூர்ப்பனகை மம்தா: பா.ஜ., - எம்.எல்.ஏ., சர்ச்சை பேச்சு
by அ.இராமநாதன் Yesterday at 10:06 pm

» வங்கி வாராக்கடன்களை வசூலிக்க துப்பறியும் நிறுவனங்கள்
by அ.இராமநாதன் Yesterday at 10:04 pm

» மே-28 -ல் 4 லோக்சபா, 10 சட்டசபைகளுக்கு இடைதேர்தல்
by அ.இராமநாதன் Yesterday at 10:02 pm

» டி20 போட்டிகளில் கேப்டனாக 5 ஆயிரம் ரன்களை கடந்து டோனி சாதனை
by அ.இராமநாதன் Yesterday at 6:49 pm

» டென்னிஸ் வீரர்கள் ரோகன் போபண்ணா, யூகி பாம்ப்ரி பெயர்கள் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை
by அ.இராமநாதன் Yesterday at 6:45 pm

» இந்த உலகத்துல நல்லவங்க, கெட்டவங்கன்னு யாரும் இல்ல....
by அ.இராமநாதன் Yesterday at 2:40 pm

» வாசகர் கவிதை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 2:37 pm

» எதுக்காக உன் காதலியை கிணத்துல தள்ளிவிட்டே...?
by அ.இராமநாதன் Yesterday at 2:17 pm

» குற்றத்திற்கும் நீதிக்கும் உள்ள உறவு...!!
by அ.இராமநாதன் Yesterday at 2:11 pm

» நரசிம்மர் பற்றிய 30 வழிபாட்டு குறிப்புகள்
by அ.இராமநாதன் Yesterday at 2:05 pm

» அமர்நாத் யாத்திரை ஜூன் 28-ம் தேதி தொடங்குகிறது!
by அ.இராமநாதன் Yesterday at 2:00 pm

» சருமப் பிரச்னைக்கு மாம்பழம் -
by அ.இராமநாதன் Yesterday at 12:55 pm

» ‘சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்டல்
by அ.இராமநாதன் Yesterday at 11:43 am

» 5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு
by அ.இராமநாதன் Yesterday at 11:36 am

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by அ.இராமநாதன் Yesterday at 11:35 am

» அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி
by அ.இராமநாதன் Yesterday at 11:34 am

» இந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து நடவடிக்கைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு, ஐ.டி. துறையும் கண்டனம்
by அ.இராமநாதன் Yesterday at 11:32 am

» பலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'
by அ.இராமநாதன் Yesterday at 11:32 am

» நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு
by அ.இராமநாதன் Yesterday at 11:30 am

» பிரபல பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி மரணம்: கமலுக்கு முதல் பின்னணிப் பாடல் பாடியவர்
by அ.இராமநாதன் Yesterday at 11:27 am

» பேல்பூரி..!!
by அ.இராமநாதன் Yesterday at 11:08 am

» உறவு முன்னே...ப்ராப்ளம் பின்னே...!!
by அ.இராமநாதன் Yesterday at 11:04 am

» கவர்ச்சி நடிகைகிட்ட பிடிச்சது, அவரோட நடிப்பு...!!
by அ.இராமநாதன் Yesterday at 11:00 am

» 2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..?
by அ.இராமநாதன் Yesterday at 10:54 am

» தமிழில் காலூன்ற தடுமாறும் பிறமொழி நடிகர்கள்
by அ.இராமநாதன் Yesterday at 9:43 am

» பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
by அ.இராமநாதன் Wed Apr 25, 2018 11:23 pm

» வாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...
by அ.இராமநாதன் Wed Apr 25, 2018 11:17 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.

Page 6 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu May 03, 2012 11:31 am

First topic message reminder :

அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம். அம்மா – தாய் – அம்மாவைப் பற்றிய பிற கலைச்சொல் ஆக்கங்களோடு மட்டும் புதுக்கவிதையில் அந்தாதியாக எழுதுங்கள். தாயின் அன்பு, கருணை, வளர்ப்பு, தியாகம், அர்ப்பணிப்பு போன்ற பிற நல்ல பண்புகளை மட்டுமே முன்னிருத்திப் படைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். சில அம்மாக்களிடம் – தாயிடம் காணப்படும் குறைகளைப் பதிவு செய்தல், சாடுதல் போன்ற கருத்துதடைய அந்தாதிக் கவிதைகளைப் பதிய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். நான் பின்னர் புத்தகமாகப் வெளியிடுகிறேன். உங்களுக்கும் (படைப்பாளர்களுக்கும்) பிறதிகள் அனுப்பி வைக்கிறேன். ஏற்கெனவே காதல் அந்தாதியும் [You must be registered and logged in to see this link.] எழுதிக்கொண்டு வருகிறோம். இவ்வாறு ஒரு ஐந்தாறு தலைப்புகளின் கீழ் அந்தாதி எழுதி நாம் புத்தகமாக வெளியிடலாம்.

அம்மா…
அம்மா நீ தாலாட்டிய
அந்த நாள் நினைவுகள்
கலையாமல் இருக்கிறது.
கிழியாமல் இருக்கிறது
நீ என்னைத் தாலாட்டி
ஊஞ்சல் கட்டிய அந்த

நைந்த புடவை.


Last edited by கவியருவி ம. ரமேஷ் on Thu May 03, 2012 3:31 pm; edited 1 time in total

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down


Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.

Post by manjubashini on Wed May 16, 2012 2:07 pm

சொற்களிலும் பொழியும் பாசத்திலும்
அன்னை நீயே உனக்கு நிகர்.....
தன் பசி நோக்காது உறங்காது
பிள்ளையைக்காப்பதில் நீயே உனக்கு நிகர்.....
தெய்வம் கூட பின்னே தான்
இறையாய் என் அன்னை இருப்பதால்
இணையாய் என்னை காப்பதால்
உறவுகளில் அன்னை நீயே உனக்கு நிகர்....
avatar
manjubashini
ரோஜா
ரோஜா

Posts : 286
Points : 308
Join date : 23/11/2010
Age : 49
Location : குவைத்

Back to top Go down

Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.

Post by தமிழ்1981 on Wed May 16, 2012 4:05 pm

நீயே உனக்கு நிகர்
எனும் போது
உன் அன்பிற்கு நிகராக‌
உன் கண்டிப்பிற்கு நிகராக‌
உன் பண்பிற்கு நிகராக‌
உன் கவனிப்பிற்கு நிகராக‌
எம்மொழியில் எவ்வார்த்தையில்
சொல்லிட முடியும் அம்மா
"அம்மா" என்ற‌ வார்த்தையே
ஜீவனைத் தரும் வார்த்தை
உயிருள்ள‌ வார்த்தை
அன்புள்ள‌ வார்த்தை அது.......
avatar
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 36
Location : sivakasi

Back to top Go down

Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.

Post by பார்த்திபன் on Wed May 16, 2012 7:28 pm

அது உன் பிழையன்று தாயே!
செல்லம் கொடுத்து
எனைக் கெடுத்து விட்டதாகச்
சிலர் செப்பித் திரிவதை
செவியில் ஏற்றாதே!
உன் பாசத்தினால்
நான் வழுக்கியிருக்கலாம்
ஆனால் வழி தவறியதில்லை!
avatar
பார்த்திபன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 41
Location : பெங்களூரு

Back to top Go down

Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed May 16, 2012 7:43 pm

வழி தவறக் கூடாத
வாழ்க்கையைத்தான்
நீ எனக்கு
சமய போதகர்கள் போலில்லாமல்
ஒரு செடியிலிருந்து
பூ உதிர்வதைப்போல
போதித்துள்ளாய்.
பூ உதிரத்தான் அவ்விடத்தில்
கனி உண்டாகி
உலகை வளர்ச்சிக்குள்ளாக்குகிறது.
நீயும் நானும்
உலகின் வளர்ச்சியே!

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.

Post by manjubashini on Thu May 17, 2012 12:22 pm

உலகின் வளர்ச்சியே விஞ்ஞானம்
உறவுகளின் மகிழ்ச்சியே அன்னையின் அன்பு
ஆதாரம் அன்னையின் நேசத்தில் தொடங்குவது
தொடங்கிய பாசம் தொடர்வது இறுதியில்
முடியும்வரை கல்லறையில் உறங்கும்போதும்....
அன்னையின் அன்போ இன்னமும் நீங்காது நம்முடன்....
avatar
manjubashini
ரோஜா
ரோஜா

Posts : 286
Points : 308
Join date : 23/11/2010
Age : 49
Location : குவைத்

Back to top Go down

Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.

Post by பார்த்திபன் on Thu May 17, 2012 3:12 pm

நம்முடன் வாழும்
நடமாடும் தெய்வம்!
நம் அகக்கண்ணைத்
திறந்தால்தான் அவள்
அன்பின் ஆழம் தெரியும்!
வியக்கும் வகையில் அவளன்பு
விண்ணைத்தாண்டி விரியும்!
அவள் கருணை விழிகள்
கண்டுவிட்டால்
கல்லும் கூடக் கரையும்!
avatar
பார்த்திபன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 41
Location : பெங்களூரு

Back to top Go down

Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.

Post by ஹிஷாலீ on Thu May 17, 2012 6:05 pm

கல்லும் கூடக் கரையும்
கர்ப்பத்தில்...
உன் கல்லறையைவிட்டு
உயிர்த்தெலுந்த
முதல் அழுகையின் போது...
avatar
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 22
Location : chennai

Back to top Go down

Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.

Post by ருக்மணி on Fri May 18, 2012 4:14 pm

அழுகையின் போது
ஆறுதல் தரும்
முதல் கையே
உன்னுடையது தானே அம்மா..
என்னை அழ விடாமல்
தாலாட்டியதும்
நீ தானே!!!
avatar
ருக்மணி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 30
Location : சூரத்

Back to top Go down

Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.

Post by ஹிஷாலீ on Fri May 18, 2012 5:06 pm

நீ தானே நான்
என்று வியக்கும் அன்பில்
மீண்டும்
நீயே என் தாயாக
என் குழந்தை உருவில்
பேர் சொல்லும் பிள்ளைபோல்
avatar
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 22
Location : chennai

Back to top Go down

Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.

Post by சதாசிவம் on Fri May 18, 2012 9:55 pm

பிள்ளைபோல் பேசலாம்
பிறவி பல எடுக்கலாம்
கிள்ளை மொழி கற்கலாம்
தொல்லை பல விலக்கலாம்
முல்லை போல் சிரிக்கலாம்
எல்லைஇல்லா அன்னையே- உன்னில்
தில்லை அன்னையை காணலாம்
எங்கள் குல பரிதியே
இல்லை உனக்கு இறுதியே
எமனை எதிர்ப்போம் உறுதியே
அனைத்தும் உன்னை கருதியே
avatar
சதாசிவம்
மல்லிகை
மல்லிகை

Posts : 131
Points : 147
Join date : 18/12/2011
Age : 42
Location : chennai

Back to top Go down

Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.

Post by பார்த்திபன் on Sat May 19, 2012 6:38 pm

உன்னைக் கருதியே
ஊமையாய் அழுகின்றேன்!
நான் உயரம் தொடுவதற்காய்
நீ உதிரம் உதிர்க்கிறாய்!
நான் சிறப்படைய
நீ செருப்பாய்த் தேய்கிறாய்!
என் வளர்ச்சிக்கு
உழைத்தே நீ
தளர்ச்சி அடைகிறாய்!
என் வெற்றிக்குப் பின்னால்
உன் வேதனை இருக்குமேயானால்
என்னைப் பொறுத்தவரையில்
அவை வெற்றிகளல்ல தாயே!
வெட்டுக் காயங்கள்!
avatar
பார்த்திபன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 41
Location : பெங்களூரு

Back to top Go down

Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.

Post by கவியருவி ம. ரமேஷ் on Mon May 21, 2012 9:10 am

வெட்டுக் காயங்களையும்
என்னால் தவிர்த்துக்கொள்ள முடியாமல்போனது.
அடி உதையோடு காயங்களையும்
வாரம் ஒன்றிரண்டு முறை
ரத்தங்களையும் பார்க்கும் எனக்கு
வாழ்க்கை
சலித்து போகாததுதான் அதிசயம்.
குடிகாரன் என்று தெரிந்தும்
திருமணத்துக்குப் பிறகாதவது
திருந்திவிடுவான் என்றெண்ணிய -
என்று பிறரும் சொல்லிய பேச்சால்
வாழ்க்கையைத் தொலைத்துவிட்டேன்.
ஆனாலும் -
வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறேன்.
பிள்ளைகளுக்காக...

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.

Post by ஹிஷாலீ on Mon May 21, 2012 1:28 pm

பிள்ளைகளுக்காக...
நான் முதியோர் இல்லம்
சென்றேன்...
பேரம் பிள்ளைகளுக்காக
மருமகள் இல்லம்
வந்தேன்
எல்லாம் காலத்தின் பாடம்
avatar
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 22
Location : chennai

Back to top Go down

Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.

Post by பார்த்திபன் on Tue May 22, 2012 3:33 pm

பாடம் படிக்கும் பிள்ளை
பாரம் சுமக்கலாகாது
என்று எனை
வித்தகனாக்கும் ஆசையில்
என் புத்தகப் பையையும்
நீயே சுமந்தாய்!
கருப்பையில்
எனைச் சுமந்ததற்கே
கடன்பட்டு நானிருக்க
என் கல்விப்பையையும்
சுமந்த உனக்கு
கைமாறு நான்
என்ன செய்ய?
avatar
பார்த்திபன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 41
Location : பெங்களூரு

Back to top Go down

Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.

Post by thaliranna on Tue May 22, 2012 8:31 pm

கைமாறு நான் என்ன செய்ய என்று
கலங்கி நின்ற என்னை
கடமை இது நான் செய்தேன்!
ஊட்டி விட்டதற்கும் அறிவை
வளர்த்து விட்டதற்கும் கூலி
நான் கேட்டாள் தாய் ஆகேன் தாதியாய் அல்ல
மாறிப் போவேன்! தாயாய் என்னை நேசி!
தருவேன் உனக்கு ஆசி!
avatar
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 42
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.

Post by ருக்மணி on Wed May 23, 2012 4:08 pm

ஆசி வழங்க
நீ இருக்கும்
போது
எதற்கு கோவிலுக்கு
என்று கேட்ட
என் தலையில்
செல்லமாய் குட்டு
வைத்து
கோவில் அழைத்து
செல்வாய்...
நீ கடவுளை
தொழும் வேளையில்
நீ அறியாமல்
உன்னை நான்
தொழுவேன்.......
avatar
ருக்மணி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 30
Location : சூரத்

Back to top Go down

Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.

Post by கலைநிலா on Wed May 23, 2012 6:10 pm

தொழுவேன் உனக்காக
இறைவனிடம் எனது ஆயுலும்
உனக்கு கிடைக்க

_________________
[You must be registered and logged in to see this link.]
avatar
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 53
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.

Post by பார்த்திபன் on Wed May 23, 2012 8:04 pm

உனக்குக் கிடைக்க வேண்டிய
உண்மையான பாராட்டு
இன்று எனக்குக்
கிடைத்துக்கொண்டிருக்கிறது!
புவியின் ஒரு ஓரத்தில்
என் புகழ்க்கொடி
இன்று பறக்கலாம்!
ஆனால் அக்கொடியைத்
தாங்கி நிற்கும் கொடிக்கம்பம்
என்னவோ உன்
முதுகெலும்புதானே தாயே!
avatar
பார்த்திபன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 41
Location : பெங்களூரு

Back to top Go down

Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.

Post by தமிழ்1981 on Wed May 23, 2012 9:41 pm

தாயே உன்னை
நான் எவ்வாறு சுமப்பேன்
ஈரைந்து மாதங்கள்
உன் கருவினில் சுமந்தாய்
இன்றும் என்வயது ஏறினாலும்
நின் குழந்தையாய் நினைத்தென்னை
சுமக்கின்றாய் காக்கின்றாய்
நேசிக்கின்றாய் அணைக்கின்றாய்
நானும் உன்னை
சுமக்கத் தான் எண்ணுகின்றேன்....
நின்னை சுமந்தாலும்
உனக்கு வலி எடுக்குமென்று
என் இதயத்தில் உன்னை
அன்பாய் அன்னையாய்
என்றும் சுமப்பேன்....
avatar
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 36
Location : sivakasi

Back to top Go down

Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.

Post by ருக்மணி on Thu May 24, 2012 10:40 am

சுமப்பேன் என்று
கூற முடியாது.....
உன் மீதான
பாசம்
எனக்கு சுமையல்ல..
சுகமே.........
என்றும் அன்புடன்
உன்னை என்
மனதில் அரவணைப்பேன்......
avatar
ருக்மணி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 30
Location : சூரத்

Back to top Go down

Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.

Post by சதாசிவம் on Thu May 24, 2012 11:13 am

அரவணைப்பேன் அன்னையை
அகத்துள் அய்யிரண்டு திங்கள்
அரவணைத்து, அங்கையில் அமுத்தூட்டி
"அ" எடுத்து அரிச்சுவடி முதல்
அப்பா, அண்ணா, அக்கா , அம்மான்
அகிலம், ஆலயம், ஆண்டவன் என
அனைத்தும் அறியச்செய்த அன்னையை
அரவணைப்பேன் அனுதினமும்
avatar
சதாசிவம்
மல்லிகை
மல்லிகை

Posts : 131
Points : 147
Join date : 18/12/2011
Age : 42
Location : chennai

Back to top Go down

Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu May 24, 2012 12:25 pm

அனுதினமும்
புகைப்படத்துக்கு
அர்ச்சனை செய்துவருகிறேன்.
இறப்பு தவிர்க்க முடியாததென்று
தெரிந்திருந்தும்
உன்னை நினைக்கும்
நினைப்புக்கு
அது
தெரியாமலே இருக்கிறது.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.

Post by பார்த்திபன் on Thu May 24, 2012 3:19 pm

தெரியாமலே இருக்கிறது
தெய்வத்தின் இருப்பிடம்
பலருக்கு!
அடுக்களை நெருப்பில்
அன்னை எனும் தெய்வம்
அல்லாடிக் கொண்டிருக்க,
கற்பூர நெருப்பில்
கடவுளைத் தேடும்
கண்கெட்ட உலகமிது!


Last edited by பார்த்திபன் on Thu May 24, 2012 5:33 pm; edited 1 time in total
avatar
பார்த்திபன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 41
Location : பெங்களூரு

Back to top Go down

Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.

Post by தமிழ்1981 on Thu May 24, 2012 4:45 pm

கண்கெட்ட‌ உலகமிது
அன்னையே இது
வாழும் போது
தன்னருகில் வைத்து
வாழ‌ வைக்காமல்
வீட்டில் ஒரு
அறைக் கூட‌ ஒதுக்காமல்
முதியோர் சிறைகளில்
அடைத்து
வாரம் ஒரு முறையோ
மாதம் ஒரு முறையோ
தன்னை கருவினில்
சுமந்தவளை
கடமைக்காய் பார்த்து
விசாரித்து செல்லும்
இவ்வுலகம்
இறந்த பின்னரோ
புகைப்படம் எடுத்து
பிரேம் போட்டு
வீட்டின் நடுவில் வைத்து
அழகு பார்க்கும் மானிடர்
இருக்கும் உலகம் தாயே....
ஆனாலும் அன்னையே
எத்தருணத்திலும்
பிள்ளைகளின் நலனையே
கருதும் எண்ணும்
உந்தன் அன்பினைச்
சொல்ல‌ அந்தாதி
போதாது அம்மா......
மனித‌ வாழ்வின்
அகராதியே அம்மா
avatar
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 36
Location : sivakasi

Back to top Go down

Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.

Post by ருக்மணி on Thu May 24, 2012 5:23 pm

அம்மா
அனுதினமும் உன்னை
அன்புடன் விசாரித்து
அழகாய் எழுதும்
அஞ்சலுக்காக காத்திருக்கும்
அன்னை உன் போன்று
அல்ல தெய்வம் கூட......
avatar
ருக்மணி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 30
Location : சூரத்

Back to top Go down

Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum