"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Today at 9:19 pm

» பீட்டாவுக்கு தெரியுமா ...?
by கவிப்புயல் இனியவன் Today at 2:25 pm

» ஆத்தாடி – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Today at 12:25 pm

» அடடே – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Today at 12:25 pm

» அடடடா – ஒரு கதை
by அ.இராமநாதன் Today at 12:24 pm

» அப்படியா – ஒரு பக்கதை
by அ.இராமநாதன் Today at 12:23 pm

» படித்ததில் பிடித்த பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Today at 12:21 pm

» குரங்கு – சிறுகதை
by அ.இராமநாதன் Today at 12:19 pm

» எவர் கையிலும் சிக்காத கல் எங்கும் விற்காத கல், - விடுகதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 10:09 pm

» பிடுங்கலாம் நடமுடியாது அது என்ன? - விடுகதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 10:08 pm

» தொட்டுப் பார்க்கலாம் எட்டிப் பார்க்கமுடியாது - விடுகதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 10:07 pm

» விடுகதைகள்...
by அ.இராமநாதன் Yesterday at 10:06 pm

» ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் கவிதாயினி கஸ்தூரி ராமராஜ் !
by eraeravi Yesterday at 9:17 pm

» இனிக்கும் ​இன்பகாதல் கவிதை
by arony Yesterday at 12:50 am

» பாட்டு என்னை படைப்பாளியா மாத்திச்சி! ‘465’ டைரக்டர் பரவசம்
by arony Yesterday at 12:48 am

» புல் தானாகவே வளர்கிறது - ஓஷோ.
by அ.இராமநாதன் Thu Jan 19, 2017 11:48 pm

» பாம்பனில் 2ம் எண் கூண்டு
by அ.இராமநாதன் Thu Jan 19, 2017 8:48 pm

» போதும் உங்கள் அடக்குமுறை ......
by கவிப்புயல் இனியவன் Wed Jan 18, 2017 10:13 pm

» உத்திர பிரதேச தேர்தல் -
by அ.இராமநாதன் Tue Jan 17, 2017 10:11 pm

» தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை: பீட்டாவை மீறி ஸ்பெயினில் தொடரும் காளைச்சண்டை
by அ.இராமநாதன் Tue Jan 17, 2017 10:09 pm

» அரசியல் பிரவேசத்தை உறுதிப்படுத்தினார் ஜெ.தீபா: ஜெயலலிதா பிறந்தநாளில் தொடங்க ஆசை!
by அ.இராமநாதன் Tue Jan 17, 2017 10:07 pm

» ஏமன் உள்நாட்டு போரில் 10 ஆயிரம் பேர் பலி: ஐ.நா. தகவல்
by அ.இராமநாதன் Tue Jan 17, 2017 10:04 pm

» 2050-ம் ஆண்டில் கடலில் மீன்களை விட அதிக பிளாஸ்டிக் கழிவுகள் - ஆய்வில் தகவல்
by அ.இராமநாதன் Tue Jan 17, 2017 10:03 pm

» பாதுகாப்பு படையினருக்கு மோசமான உணவு: மத்திய அரசுக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்
by அ.இராமநாதன் Tue Jan 17, 2017 9:54 pm

» கவிஞர் இரா .இரவியின் படைப்புகளிலிருந்து ....
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 11:11 pm

» மோகனப் புன்னகையில் பூத்த குறிஞ்சி மலர் இரா. இரவியின் படைப்புலகம் ! நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ இரா .மோகன் ! நூல் மதிப்புரை முதுபெரும் எழுத்தாளர் திருச்சி சந்தர் !
by eraeravi Mon Jan 16, 2017 10:53 pm

» கவிஞர் இரா. இரவியின் “வெளிச்ச விதைகள்” நூல் மதிப்புரை முதுபெரும் எழுத்தாளர் திருச்சி சந்தர் !
by eraeravi Mon Jan 16, 2017 10:53 pm

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன் Mon Jan 16, 2017 9:52 pm

» ஜெயலலிதா வாழ்க்கை சினிமா ஆகிறது தாசரி நாராயணராவ் தயாரிக்கிறார்
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 9:19 pm

» கடையடைப்பு : போலீஸ் கட்டுப்பாட்டில் அலங்காநல்லூர்
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 9:17 pm

» நாடு முழுவதும் காவல்துறையில் 5 லட்சம் பணியிடம் காலி
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 9:16 pm

» எல்லையில்லாத இன்பத்திலே-நாம் இணைந்தோம் இந்த நாளே
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 9:15 pm

» ஏ.டி.எம்ல் இனி ஒரு நாளைக்கு ரூ.10 ஆயிரம் வரை எடுக்கலாம் ரிசர்வ் வங்கி அறிவிப்பு
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 9:14 pm

» பெல் நிறுவனத்தில் 738 பயிற்சிப் பணிகள்
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 9:13 pm

» திருநாவுக்கரசர் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்?
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 9:03 pm

» ஐயப்பன் அவதரித்த நட்சத்திரம்....
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 9:02 pm

» கும்பாபிஷேகத்தை எத்தனை ஆண்டுக்கு ஒருமுறை நடத்துவர்?
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 9:00 pm

» அத்திரி முனிவரின் மனைவி....
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 8:57 pm

» சிவபெருமானின் ஐந்து முகங்களில் காக்கும் முகம் ...
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 8:56 pm

» திருஞானசம்பந்தருக்கு திருமணம் நிகழ்ந்த தலம்...
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 8:54 pm

» .பிரளயவெள்ளத்தில் அமிர்த கும்பத்தை வீழ்த்தியவர்....
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 8:52 pm

» முருகன் தலங்களில் மலையில்லாத மலைக்கோயில்...
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 8:39 pm

» திருச்சிராப்பள்ளியில் வீற்றிருக்கும் இறைவன்...
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 8:36 pm

» வால்மீகியின் இயற்பெயர்.....
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 8:35 pm

» சூரியவழிபாட்டால் உண்டாகும் நற்பலன்....
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 7:54 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



குறிஞ்சிப் பூக்கள் மதிப்புரையாளர் : கவிஞர் இரா.இரவி

View previous topic View next topic Go down

குறிஞ்சிப் பூக்கள் மதிப்புரையாளர் : கவிஞர் இரா.இரவி

Post by eraeravi on Thu Jun 24, 2010 11:50 am


நூல் ஆசிரியர் : கவிஞர் வீ.தங்கராஜ்


குறிஞ்சிப் பூக்கள், என்ற பெயருக்கு ஏற்றபடி உள்ளது கவிதைகள், மலரைப் பிடிக்காதவர்கள் யாருமில்லை. குறிப்பாக பனிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே அபூர்வமாக பூக்கும் அழகிய குறிஞ்சி மலர் போலவே கவதைகள் அற்புதமாக உள்ளன.

சிலருக்குத்தான் கவிதை எழுதத் தெரியும். வெகுசிலருக்குத்தான் எழுதிய கவிதைகளை நூலாக்கும் துணிவும், வசதியும் வாய்க்கும். படைப்புலகில் தொடர்ந்து இயங்கிவரும் படைப்பாளி நூலாசிரியர் கவிஞர் வீ.தங்கராஜ் சிறந்த சாதனையாளர், எழுத்தாளர், பேச்சாளர், திரு.இறையன்பு இ.ஆ.ப அவர்கள் சொல்வார்கள்.”இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும்” என்று சொல்வது மட்டுமல்ல அவரும் இயங்கிக் கொண்டே இருக்கும் இனிய படைப்பாளி. அது போல நூலாசிரியரும் இலக்கியதாகம் கொண்டு செயல்பட்டு வருபவர். இவருக்கு காரணப்பெயர் என்றே கருதுகின்றேன்.

தங்கமான கவிதைகளைப் படைப்பதில் இவர் இராசா என்ற காரணத்தால் தான் இவருக்கு இவரது பெற்றோர்கள் தொலைநோக்கு சிந்தனையுடன் “தங்கராஜ்” என பெயரிட்டார்களோ? என எண்ணுகின்றேன். கலைமாமணி கவிப்பேரரசு டாக்டர் பழனி இளங்கம்பன் அவர்கள் மரபுக்கவிதையும் அருவியாக கொட்டுவார். ஹைக்கூ கவிதையும் சிற்பம் போல செதுக்குவார். பல்துறை வித்தகரின் அணிந்துரை இந்நூலுக்கு மகுடம் போல உள்ளது. முனைவர் கவிஞர் சிற்பி. பால சுப்பிரமணியன் பாராட்டுரை அவ்வளவு எளிதாக எல்லோருக்கும் கிடைப்பதில்லை. நூலாசிரியருக்கு கிடைத்து இருப்பதே நூலிற்கு அணி சேர்க்கின்றது. திருநாவுக்கரசரையே மகனாகப் பெற்றவர் நூல் ஆசிரியர். அதனால் தமிழ்மொழிப் புலமை குற்றலா அருவியாகக் கொட்டுகின்றது. நூலைப் பதிப்பித்த அன்னை இராஜேஸ்வரி பதிப்பக உரிமையாளர் கவிஞர் பா. உதயக்கண்ணன் அவர்களின் தொகுப்பு நூõலால் வெளிச்சத்திற்கு வந்த பலரில் நானும் ஒருவன். பதிப்புப் பணியினை தொழிலாகச் செய்யாமல் சேவையாகச் செய்திடும் நல்ல மனிதர்.

பொதுவாக ஒரு கவிஞர் தனது கவிதைகளை நூலாக வெளியிடுகிறார் என்றால் கண்டனக்குரல் முதலில் குடும்பத்தில் தான் ஒலிக்கும். ஆனால் நுலாசிரியருக்கு விதி விலக்காக நூல் வடிவம் பெற குடும்பத்தினர் காட்டிய ஆர்வத்தையும் அக்கறையையும் என்னுரையில் அழகாக பதிவு செய்துள்ளார்கள். அவருடைய குடும்பம் ஒரு பல்கலைக்கழகமாக திகழ்கின்றது. நவீன யுகத்தில் மனிதன் புறத்தில் வளர்ச்சி அடைந்து விட்டான். ஆனால் அகத்தில் வீழ்ச்சி அடைந்து வருகிறான் என்பதை விளக்கும் அழகிய ஹைக்கூ

மனிதனுக்குள் மிருகம்

நல்ல வேளை

மிருகத்துக்குள் மனிதன் இல்லை

மரபுக் கவிதைகளில் தமிழ்மொழி, திருக்குறள், பாரதி பற்றி பல்வேறு கவிதைகள், “என்னவளம் இல்லை நம் தமிழ் மொழியில் ஏன்? கையை ஏந்த வேண்டும்

பிறமொழியில்” என்பதைப் பறைசாற்றும் விதமாக உள்ளது. மூவடி முப்பது என்ற தலைப்பில் 3 பகுதியாக உள்ள 90 ஹைக்கூகளும் படிக்கும் வாசகர்கள் உள்ளத்தில் பல்வேறு சிந்தனைகளைத் தோற்றுவிக்கின்றன. எண்ண அலைகளை உருவாக்குகின்றன. அது தான் நூலின் வெற்றி உண்மையில் அதிர்வுகளை ஏற்படுத்துகின்றன.

ஏழ்மையை விளக்கும் காட்சிப்படுத்தும் உன்னத ஹைக்கூ.

குப்பையைக் கிளறுவது

கோழியல்ல

கோணியுடன் சிறுவன்

இன்றைய தேர்தல் விதிகளும். ஆனால் நாட்டில் நடைபெறும் நடைமுறைகளும் நாம் அனைவரும் அறிந்த ஒன்று. அதனை எள்ளல் வகையில் விளக்கிடும் ஹைக்கூ.

தேர்தல் கமிஷன் பெயரே சரியில்லை

தேர்தலுக்குப்பின் எல்லாமே

கமிஷன் மயம்

நூலாசிரியர் ஆசிரியராக இருப்பதால் மொழி வளம் குன்றாமல் உள்ளது. நயாகரா அருவியென கொட்டுகின்றது. குறிஞ்சிப்பூக்கள் என்று நூலிற்கு 12 வருடங்கள் ஆக்காமல் உடன் அடுத்த நூலைத் தாருங்கள் “காட்டு கடைவிழி குமரேசா ” என்று தொடங்கி கர்ப்பிணி பெண் போலகவிதைக்கரு தமக்கும் கவிஞன் பிரசவ எதிர்பார்ப்புடன் ஹைக்கூ கவிதை வரை அனைத்து கவிதைகளும் அற்புதமாக வருகின்றது. ஹைக்கூ கவிதை இன்று பரவலாக மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று எல்லோராலும் விரும்பப்பட்டு பலர் இன்று ஹைக்கூ எழுதி வருகின்றனர். ஹைக்கூ கவிதை ஒன்றுக்குத்தான் படிக்கும் வாசகனையும் படைப்பாளியாக்கும் ஆற்றல் உண்டு. மரபு அறிந்த கவிஞர்களான நூலாசிரியர் வீ.தங்கராஜ் பழனி இளங்கம்பன் ஆகியோர் ஹைக்கூ வடிக்கும் போது அதில் ஆழம் மிக அதிகமாகவே உள்ளது.

சொற்கள் நடந்தால்த வசனம் சொற்கள் நடனமாடினால் கவிதை. இந்த நூலில் சொற்கள் களி நடனமாகின்றன. தேவையற்ற சொற்கள் எதுவுமில்லை.கடலில் மூழ்கி முத்து எடுப்பதைப் போல தமிழ்க்கடலில் மூழ்கி சொற்களை எடுத்து கவிதை முத்துக்களைக் கோர்த்து பாமாலை தந்து இருக்கிறார்.த ஒரே கல்லில் இரண்டு மாங்காய்” என்பது போல ஒரே நூலில் மரபும் உள்ளது. ஹைக்கூவும் உள்ளது. பழமையும் உள்ளது. புதுமையும் உள்ளது. கவிதை நேசர்களால் நேசிக்கப்படும் நூலாக உள்ளது.

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2049
Points : 4583
Join date : 18/06/2010

Back to top Go down

Re: குறிஞ்சிப் பூக்கள் மதிப்புரையாளர் : கவிஞர் இரா.இரவி

Post by eeranila on Mon Jul 05, 2010 8:08 pm

கவிதைகளின் வரலாற்றில் புதியதோர் பரிணாம வளர்ச்சி

eeranila
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 321
Points : 361
Join date : 01/12/2009
Location : Saudi Arabia

Back to top Go down

Re: குறிஞ்சிப் பூக்கள் மதிப்புரையாளர் : கவிஞர் இரா.இரவி

Post by eraeravi on Wed Jul 14, 2010 11:17 pm

வணக்கம் பாராட்டுக்கு மிக்க நன்றி

அன்புடன்

இரா .இரவி
www.kavimalar.com
http://wtrfm.com/?cat=3

http://eraeravi.wordpress.com/

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2049
Points : 4583
Join date : 18/06/2010

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum