"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» மே-28 -ல் 4 லோக்சபா, 10 சட்டசபைகளுக்கு இடைதேர்தல்
by அ.இராமநாதன் Today at 10:02 pm

» டி20 போட்டிகளில் கேப்டனாக 5 ஆயிரம் ரன்களை கடந்து டோனி சாதனை
by அ.இராமநாதன் Today at 6:49 pm

» டென்னிஸ் வீரர்கள் ரோகன் போபண்ணா, யூகி பாம்ப்ரி பெயர்கள் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை
by அ.இராமநாதன் Today at 6:45 pm

» இந்த உலகத்துல நல்லவங்க, கெட்டவங்கன்னு யாரும் இல்ல....
by அ.இராமநாதன் Today at 2:40 pm

» வாசகர் கவிதை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Today at 2:37 pm

» எதுக்காக உன் காதலியை கிணத்துல தள்ளிவிட்டே...?
by அ.இராமநாதன் Today at 2:17 pm

» குற்றத்திற்கும் நீதிக்கும் உள்ள உறவு...!!
by அ.இராமநாதன் Today at 2:11 pm

» நரசிம்மர் பற்றிய 30 வழிபாட்டு குறிப்புகள்
by அ.இராமநாதன் Today at 2:05 pm

» அமர்நாத் யாத்திரை ஜூன் 28-ம் தேதி தொடங்குகிறது!
by அ.இராமநாதன் Today at 2:00 pm

» சருமப் பிரச்னைக்கு மாம்பழம் -
by அ.இராமநாதன் Today at 12:55 pm

» ‘சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்டல்
by அ.இராமநாதன் Today at 11:43 am

» 5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு
by அ.இராமநாதன் Today at 11:36 am

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by அ.இராமநாதன் Today at 11:35 am

» அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி
by அ.இராமநாதன் Today at 11:34 am

» இந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து நடவடிக்கைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு, ஐ.டி. துறையும் கண்டனம்
by அ.இராமநாதன் Today at 11:32 am

» பலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'
by அ.இராமநாதன் Today at 11:32 am

» நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு
by அ.இராமநாதன் Today at 11:30 am

» பிரபல பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி மரணம்: கமலுக்கு முதல் பின்னணிப் பாடல் பாடியவர்
by அ.இராமநாதன் Today at 11:27 am

» பேல்பூரி..!!
by அ.இராமநாதன் Today at 11:08 am

» உறவு முன்னே...ப்ராப்ளம் பின்னே...!!
by அ.இராமநாதன் Today at 11:04 am

» கவர்ச்சி நடிகைகிட்ட பிடிச்சது, அவரோட நடிப்பு...!!
by அ.இராமநாதன் Today at 11:00 am

» 2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..?
by அ.இராமநாதன் Today at 10:54 am

» தமிழில் காலூன்ற தடுமாறும் பிறமொழி நடிகர்கள்
by அ.இராமநாதன் Today at 9:43 am

» பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
by அ.இராமநாதன் Yesterday at 11:23 pm

» வாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...
by அ.இராமநாதன் Yesterday at 11:17 pm

» இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
by அ.இராமநாதன் Yesterday at 11:01 pm

» ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு!
by அ.இராமநாதன் Yesterday at 10:56 pm

» தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
by அ.இராமநாதன் Yesterday at 10:32 pm

» காங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை
by அ.இராமநாதன் Yesterday at 10:23 pm

» நாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்
by அ.இராமநாதன் Yesterday at 10:22 pm

» உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
by அ.இராமநாதன் Yesterday at 10:18 pm

» சுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை
by அ.இராமநாதன் Yesterday at 10:16 pm

» 2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்
by அ.இராமநாதன் Yesterday at 10:12 pm

» வீரபாண்டிய கட்டபொம்மன்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 8:24 pm

» கவிதை வெளியினிலே ! நூல் ஆசிரியர் : முனைவர் பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Apr 24, 2018 8:31 pm

» சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 3:10 pm

» உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 2:54 pm

» தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 2:51 pm

» பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 2:44 pm

» கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 12:07 pm

» கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 9:59 am

» கிறிஸ்தவ பெண்ணுக்கு திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் பதவி: நடிகை ரோஜா கண்டனம்
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 9:53 am

» கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 9:43 am

» கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 9:40 am

» கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 9:38 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines பொதிகையின் எதிரொலி

Go down

பொதிகையின் எதிரொலி

Post by ஆளுங்க on Mon May 07, 2012 11:43 pm

06 மே 2012

சாப்பிடும் போது மட்டுமே தொலைக்காட்சி சேனல்களை நோண்டும் பழக்கம் உடையவன்
நான். (மீதி நேரத்தில் தொலைக்காட்சியில் வீட்டிலுள்ளவர்கள் ராஜ்ஜியம் தான்
என்பதால், அங்கு அமர்வதே இல்லை)

ஞாயிறு அன்று இரவு சன் டிவியில் "நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி" என்று
ஓடிக்கொண்டிருந்தது. 'வர வர தொலைக்காட்சி நிகழ்ச்சிகளே சூதாட்டம் போல் ஆகி
விட்டன' என்று சொல்லிக் கொண்டே ரிமோட்டால் சேனல்களை மாற்றிக் கொண்டே
இருந்தேன்.

அப்போது தான் "பொதிகை தொலைக்காட்சி" வந்தது.முன்பு DD5 ஆக இருந்த காலத்தில், தொலைக்காட்சிக்கு என்ன பெயர் வைப்பது
என்று வாசகர்களிடம் ஆலோசனை கேட்டு, வாக்கெடுப்பு நடத்தி 'பொதிகை' என்ற
அழகான பெயரைத் தொலைக்காட்சிக்கு சூட்டினர் நிலையத்தார். கேபிள் டிவி
வருவதற்கு முன் அரசனாக கோலோச்சிய பொதிகையைத் தற்போது பார்ப்பவர்கள் அரிது.

இந்த பதிவினை எழுதத் தூண்டியதே அவர்கள் தொன்று தொட்டு செய்து வரும் ஒரு செயல் தான்.


அப்படி என்ன செய்தார்கள் என்று கேட்கிறீர்களா?

தங்களுக்கு நேயர்கள் எழுதிய கடிதங்களைப் படித்துக் காட்டிக் கொண்டிருந்தனர். நிகழ்ச்சியின் பெயர் "எதிரொலி".தாங்கள் ஒளிபரப்பும் நிகழ்ச்சிகளுக்கு வரும் எதிரொலிகளைத் தான் அவர்கள்
படித்தனர். தபால் அட்டைகள், உள்நாட்டு அஞ்சல்கள் மற்றும் பொது அஞ்சல்கள்
முதலியவற்றில் தங்கள் நிகழ்ச்சிகளைப் பற்றிய நேயர்களின் கருத்துகளைப்
படித்தனர். நிகழ்ச்சிகளைப் பார்த்து பதில் எழுதும் மக்கள் இதனைப்
பார்த்தால் எவ்வளவு மகிழ்ச்சி அடைவார்கள்?


நிகழ்ச்சியில் இருந்து சில துளிகள்:


 • ஒரு நிகழ்ச்சியைப் பாராட்டி பலர் எழுதியிருந்தால், அனைவரது பெயரையும்
  வாசித்து நன்றி கூறினர். அதுமட்டுமல்லாது, பிறரது மடல்களைப் படித்துக்
  காட்டததற்கு வருத்தமும் தெரிவித்தனர்.
 • தங்களுக்கு வந்த பாராட்டுகளை மட்டும் அவர்கள் வாசிக்கவில்லை!!
  வசவுகளையும் வாசித்தனர். வசவுகளை வாசித்த பின்னர், அதற்கு மன்னிப்பு கோரி
  பிற்காலத்தில் குறைகள் எழாமல் பார்த்து கொள்வதாக கூறினர்.
 • நிகழ்ச்சிகளின் நேரம் குறித்த கேள்விகளுக்கு தெளிவாக பதில் அளித்தனர்.
 • நிகழ்ச்சிகளுக்கு வந்த ஆலோசனைகளையும் செயல்படுத்த முனைவதாக கூறினர்.


எதிரொலிக்கு எதிரொலி:


 • நிகழ்ச்சியில் இயன்ற அளவு தமிழை மட்டுமே பயன்படுத்தினர் (நேயர்கள் எழுதியதைத் தவிர்த்து). அதுவும் அழகு தான்!
 • ஒரு நிகழ்ச்சியைப் பாராட்டி சில நேயர்கள் கவிதை எழுதி அனுப்பினர்.
  தொகுப்பாளர்கள் அனைத்து கவிதைகளையும் பொறுமையாக படித்துக் காட்டி
  எழுதியவர்களுக்கு நன்றியும் சொன்னார்கள் .
 • ஒரு நேயர் பாட்டு நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கும் பெண்ணின் தொடர்பு
  எண்ணைக் கேட்டு கடிதம் எழுதியிருந்தார். அதற்கு நாசூக்காக அவர்கள் மறுத்த
  விதம் அழகு!!
 • ஒரு நேயர் பொதிகையில் போடுவதாய் சொல்லும் படம் ஒன்று; ஆனால்,
  திரையிடும் படம் ஒன்று என்று குறை கூறியிருந்தார். தொகுப்பாளர்கள்
  பொதிகையில் என்றுமே ஒளிபரப்பாகும் படம் பற்றி விளம்பரப்படுத்துவதில்லை
  என்று தெரிவித்தனர். நேயர்கள் பல சேனல்களைப் பார்ப்பதால் தவறாக
  எண்ணியிருக்கலாம் என்றனர்.
 • ஒரு நேயர் பொதிகையில் வெளிவரும் இசை நிகழ்ச்சிகள் பற்றி கேட்டு
  எழுதியிருந்தார். அனைத்தையும் அவர்கள் தங்கு தடையின்றி சொன்ன விதம் அருமை.
 • நிகழ்ச்சியின் இறுதியில் கடிதம் எழுதிய பிற நேயர்களைக் குறிப்பிட்டு
  அவர்கள் கடிதத்தைப் படிக்கமல் விட்டதற்கு வருத்தம் தெரிவித்தனர்.

முன்பு ஒரு காலத்தில் (நான் சிறுவனாக இருந்த போது) 'வயலும் வாழ்வும்
நிகழ்ச்சி' பற்றி ஒரு நேயர் எழுதி இருந்தார். பேட்டிகளை வயல் வரம்புகளில்
எடுக்கும் போது பறவைகளின் சத்தம் கேட்பதால், சில நேரங்களில் பேட்டியைத்
தெளிவாக கேட்க முடியவில்லை என்று எழுதியிருந்தார். அடுத்த வயலும் வாழ்வும்
நிகழ்ச்சியில் இருந்து வயல் வரப்பைப் பிண்ணணிப்படமாகக் கொண்ட அறையில்
பேட்டி எடுத்தனர்!!! இதை இன்று நினைத்தாலும் பொதிகையின் மீது ஒரு மதிப்பு
ஏற்படுகிறது.

இன்று நேயர்களை வைத்து சூதாட்டம் நடத்தி, அதன் மூலம் பல சேனல்களும்
கோடிகளில் சம்பாதிக்கிறன. அவற்றையெல்லாம் நாம் அனைவரும் வைத்த கண்
வாங்காமல் பார்க்கிறோம். அவற்றில் ஒன்று கூட நேயர்கள் தங்களுக்கு எழுதும்
கடிதங்களைப் படிப்பதில்லை. நிகழ்ச்சியைப் பற்றி எழுதும் நேயர் ஒருவருக்குத்
தன் கருத்து சென்றடைந்ததா என்று எப்படி தெரியும்?சூதாட்டங்கள் எதிலும் ஈடுபடாத பொதிகை மட்டுமே தங்கள் நேயர்கள் (குறைவான அளவாக இருப்பினும்) எழுதுவதை வாசித்து காட்டுகிறது. இது நேயர்களின் கருத்துகளுக்குக் கொடுக்கப்படும் மதிப்பு அல்லவா?

இன்று எத்தனை சேனல்கள் தங்கள் நிகழ்ச்சிகளைப் பற்றிய நேயர்களின் கருத்துகளை இப்படி படிக்கிறார்கள்?
எனது வலைப்பூவில் இருந்து மறு பதிப்பு செய்யப்பட்டது!
avatar
ஆளுங்க
ரோஜா
ரோஜா

Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 31
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி

Back to top Go down

Re: பொதிகையின் எதிரொலி

Post by அ.இராமநாதன் on Tue May 08, 2012 1:12 am


_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 27279
Points : 59763
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: பொதிகையின் எதிரொலி

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue May 08, 2012 9:28 am

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி

_________________
http://www.kaviaruviramesh.com
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
http://www.kaviaruviramesh.com/p/blog-page.html
http://www.ebay.in/sch/rameshmkm/m.html?_nkw=&_armrs=1&_ipg=&_from=
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: பொதிகையின் எதிரொலி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Tue May 08, 2012 1:14 pm

பகிர்வுக்கு நன்றி

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: பொதிகையின் எதிரொலி

Post by ஆளுங்க on Wed May 09, 2012 11:26 pm

படித்து கருத்திட்ட அனைவருக்கும் நன்றி!
avatar
ஆளுங்க
ரோஜா
ரோஜா

Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 31
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி

Back to top Go down

Re: பொதிகையின் எதிரொலி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum