"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பிருதிவிராஜின் புதிய தோற்றம்
by அ.இராமநாதன் Today at 7:59 am

» மகள் சுருதிக்கு கமல்ஹாசன் அறிவுரை
by அ.இராமநாதன் Today at 7:56 am

» “பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
by அ.இராமநாதன் Today at 7:52 am

» நடிகர் விஷால், கமல்ஹாசனுடன் திடீர் சந்திப்பு
by அ.இராமநாதன் Today at 7:49 am

» 'மொபைல் மணி டிரான்ஸ்பர்' நிறுத்தம்
by அ.இராமநாதன் Today at 7:43 am

» ‛அதிநாயகே' என்ற வார்த்தையை திருத்த வேண்டும் : அரியானா அமைச்சர்
by அ.இராமநாதன் Today at 7:42 am

» சுத்தமாகிறது தாஜ் மஹால்!
by அ.இராமநாதன் Today at 7:40 am

» நீ இளவரசி மாதிரி இருக்கேன்னு சொல்லல? -
by அ.இராமநாதன் Yesterday at 11:16 pm

» வினாத்தாள் அவுட் ஆகியும் ஏன் உன்னால பாஸ் ஆக முடியலே?
by அ.இராமநாதன் Yesterday at 10:56 pm

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 10:47 pm

» நிதானத்தைக் கடைப்பிடி,...
by அ.இராமநாதன் Yesterday at 10:37 pm

» விண்மீன்கள் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 5:03 pm

» நொடிக் கதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 4:59 pm

» மல்லையா, நிரவ் மோடி போல 31 பேர் இந்தியாவை விட்டு தப்பி ஓடியுள்ளனர் - மத்திய மந்திரி தகவல்
by அ.இராமநாதன் Yesterday at 8:47 am

» இந்திய வீரர் வீராங்கணைகளுக்கு ஜப்பான் முட்டை...
by அ.இராமநாதன் Yesterday at 8:40 am

» தனுஷ் இயக்கும் அடுத்த படத்தின் பெயர் ‘நான் ருத்ரன்’?
by அ.இராமநாதன் Yesterday at 8:38 am

» சுசீந்தரனின் ’ஏஞ்சலினா’ படப்பிடிப்பு நிறைவடைந்தது
by அ.இராமநாதன் Yesterday at 8:37 am

» ஒரு சாவி கூட பீரோவுக்கு பொருந்த மாட்டேங்குதே?
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 11:59 pm

» 2 கி.மீ தூரத்தை 2 மணி 44 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்த சைலேந்திரபாபுவின் நீச்சல் குழு!
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 11:42 pm

» பள்ளிக்கு ஒரு லட்சம் சீர்வரிசை... ஆசிரியர்களைப் பிரமிக்க வைத்த ஊர்மக்கள்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 11:33 pm

» - கொஞ்ச நேரம் நடிக்கலாம்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 10:43 pm

» - இரும்பு இதயங்களுக்கான திறவுகோல்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 10:31 pm

» அதிர்ஷ்டம் உழைப்பின் முதுகில் ஒட்டிககிடக்கும்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 10:30 pm

» போலி நபரை பரீட்சை எழுத அனுப்பி விட்டு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பள்ளி முதல்வர்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 8:20 pm

» நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 8:18 pm

» பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 8:12 pm

» பெண் நிருபரை சீண்டிய அமைச்சர் விஜயபாஸ்கர்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 8:09 pm

» தமிழக பாஜ அடுத்த தலைவர் யார்?
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 8:07 pm

» தேசிய கீதத்தில் திருத்தம்: காங்., எம்பி., தீர்மானம்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 8:06 pm

» ஓட்டுக்குப் பணம் தர நாங்கள் தயார்....
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 4:54 pm

» வேண்டாம் தாயீ....மூணாவது நாளா பட்டினி கிடந்துட்டுப் போறேன்...
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 4:51 pm

» இங்கேயும் இடது - அங்கேயும் அதே!
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 2:51 pm

» முல்லா நஸ்ருதீன்!
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 2:47 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 2:20 pm

» கீர்த்தி சுரேஷ் மகிழ்ச்சி
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 2:16 pm

» குடியிருப்பு பகுதியில் புகுந்த மலைப் பாம்பு: லாவகமாக பிடித்த பெண்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 2:12 pm

» மலச்சிக்கலை தீர்க்கும் சூசி முத்திரை
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 2:01 pm

» துல்கர் சல்மான் ஜோடியாக நடிக்கும் சோனம் கபூர்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 1:55 pm

» வீராணம் ஏரி நீர் திடீர் நிறுத்தம்: சென்னையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுமா?
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 1:52 pm

» வெல்வெட் நகரத்தில் வரலட்சுமி சரத்குமார்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 12:53 pm

» சாவித்திரி வேடத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ் தோற்றம் வெளியானது
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 12:49 pm

» இந்தியன் ஆயில் கார்ப்பரே‌ஷன் பெட்ரோல் பங்கில் 5 கிலோ சமையல் கியாஸ் விற்பனை
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 12:42 pm

» லட்சுமி கடாட்சம் பெற விரும்புபவர்கள் சண்டை போடுவதைத் தவிருங்கள்.
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 9:37 am

» ஆவடியில் ராணுவ உடை தொழிற்சாலை மூடப்படாது: மத்திய அரசு அறிவிப்பால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 9:12 am

» வந்துவிட்டது, ‘வைசார்ஜர்’
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 9:04 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines பிரஞ்சிந்திய விடுதலை வீரர் வ.சுப்பையா

Go down

பிரஞ்சிந்திய விடுதலை வீரர் வ.சுப்பையா

Post by nagailango on Tue May 29, 2012 12:20 am

பேராசிரியர் முனைவர் நா.இளங்கோ
புதுச்சேரி- 605 008

மக்கள் தலைவர்:
1987 இல் இந்தியாவின் 40 ஆவது சுதந்திர ஆண்டு விழாவின் போது இந்திய அரசு தேர்ந்தெடுத்து அறிவித்த தலைசிறந்த இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் 97 பேரில் மக்கள் தலைவர் தோழர் வ.சுப்பையாவும் ஒருவர். மகாகவி என்றால் அது பாரதியாரையும் புரட்சிக்கவிஞர் என்றால் அது பாரதிதாசனையும் பெரியார் என்றால் அது ஈ.வெ.ராமசாமி அவர்களையும் குறிப்பது போல் மக்கள் தலைவர் என்றால் அது தோழர் வ.சுப்பையா அவர்களையே குறிக்கும்.
பிரஞ்சு ஏகாதிபத்தியத்தின் பிடியில் சிக்குண்டு கிடந்த புதுச்சேரியை விடுவித்துச் சுதந்திர பூமியாக மாற்ற மக்களைத் திரட்டிப் போராடி இந்தியத் தாயகத்துடன் இணைத்த சிற்பி தோழர் வ.சுப்பையாதான் என்பதை அவருக்கு நேர்எதிரான கொள்கை நிலையில் நிற்பவர்களும் ஒப்புக் கொள்வார்கள். எத்தனைமுறை சிறையில் இட்டாலும் நாடு கடத்தினாலும் கொண்ட கொள்கையில் உறுதியோடு நின்று கடைசிவரை போராடி வெற்றிகண்ட பெருமை அவருக்கு உண்டு.
தொழிற்சங்கம் கண்ட தலைவர்:
புதுவை பிரஞ்சுக்காரர்களின் ஆதிக்கத்தில் இருந்தபோது தொழிற்சங்கம் அமைக்கும் அடிப்படை உரிமைகூட மறுக்கப்பட்டிருந்தது. மக்கள் பொதுக்கூட்டங்கள் நடத்தவும் நேரடியான அரசியல் போராட்டங்களில் ஈடுபடவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இத்தகைய நெருக்கடியான காலங்களில் தோழர் வ.சுப்பையா அவர்கள் எழுச்சியும் பொதுநலத்தில் நாட்டமும் மிக்க இளைஞர்களை, மாணவர்களை ஒருங்கிணைத்து இளைஞர் சங்கத்தினை அமைத்துச் சமுதாயத்திற்குப் பாடுபட்டார்.
தம் இளமைக்காலம் முதலே தேச நலனில் அக்கறை கொண்டு இந்திய அளவில் நடைபெறும் சுதந்திரப் போராட்டங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.
காந்தியடிகளும் மக்கள் தலைவரும்:
தோழர் வ.சுப்பையா அவர்கள் 1933 இல் மகாத்மா காந்தியடிகள் அமைத்த அரிசன சேவா சங்கத்தின் கிளை அமைப்பு ஒன்றைப் புதுவையில் தொடங்கி அதன் செயலராக இருந்து தீண்டாமையை ஒழிக்கவும் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் மேன்மைக்காகவும் பாடுபட்டார். 1934 பிப்ரவரி 17 இல் மிகுந்த முயற்சி மேற்கொண்டு மகாத்மாவைப் புதுவைக்கு அழைத்து வந்தார். முதன்முதலில் காந்தியடிகளைப் புதுவைக்கு அழைத்துவந்த பெருமை தோழர் வ.சுப்பையா அவர்களையே சாரும்.
தோழர் வ.சுப்பையா அவர்கள் அரிசன சேவா சங்கத்தில் தீவிரமாக ஈடுபட்டுப் பணியாற்றியதால் சமூகத்தின் அடித்தள மக்களின் சமூகப் பொருளாதாரப் பிரச்சனைகளை நன்கு புரிந்துகொள்ள முடிந்தது. அடித்தள மக்களில் பலர் பஞ்சாலைத் தொழிலாளர்களாக இருந்தமையால், அன்றைய சூழலில் பஞ்சாலைத் தொழிலாளர்கள் பிரஞ்சு ஆலை முதலாளிகளால் உரிமைகள் ஏதுமற்ற அடிமைகள்போல் நடத்தப்படுவது கண்டு மனம் வெதும்பினார். ஆலைத் தொழிலாளர்களுக்குத் தொழிற்சங்கம் பற்றியும் தொழிலாளர் உரிமை பற்றியும் போதித்துக் கிராமங்கள்தோறும் தொழிலாளர் வர்க்கத்தை ஒன்று திரட்டினார். ஆலையில் இரகசியமாகத் தொழிற்சங்கம் ஏற்படுத்தினார்.
சுதந்திரம் இதழைத் தொடங்கினார்:
இதே காலக்கட்டத்தில் 1934 ஜூன் முதல் ‘சுதந்திரம்’ என்ற மாதப் பத்திரிக்கையைத் தொடங்கி இதழ்பணியின் வழியாகத் தொழிலாளர் நலன்களைப் பேணினார்.
பஞ்சாலைப் போராட்டங்கள்:
1935, 36 களில் புதுவைப் பஞ்சாலைகளில் நடைபெற்ற போராட்டங்கள் அனைத்திற்கும் வழிகாட்டியாகவும் உந்துசக்தியாகவும் இருந்து செயலாற்றினார். தொழிலாளர் போராட்டங்களின் விளைவாக வேலைநேரம் குறைக்கப்பட்டது. கூலி உயர்வும் வேலை உத்திரவாதமும் வழங்கப்பட்டன. ஆனால் தொழிற்சங்க உரிமை மட்டும் தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்தது.
1936 இல் தொழிற்சங்க உரிமை கோரி மூன்று பஞ்சாலைத் தொழிலாளர்களும் இணைந்து நடத்திய போராட்டத்தை ஒடுக்க 1936 ஜூலை 30 அன்று பிரஞ்சு ஏகாதிபத்யம் ராணுவத்தின் துணையோடு அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டது. துப்பாக்கிச் சூட்டில் 12 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். நூற்றுக் கணக்கானோர் காயமடைந்தனர். இச்சம்பவம் இந்தியா மட்டுமில்லாமல் உலக நாடுகளின் கவனத்தைப் புதுச்சேரியின் பக்கம் திருப்பியது. இப்போராட்டத்தை முன்னின்று நடத்திய பெருமை தோழர் வ.சுப்பையா அவர்களையே சாரும்.
எட்டு மணி நேர வேலை, தொழிற்சங்க உரிமை:
தொழிலாளர்கள் மீதான அடக்குமுறை, துப்பாக்கிச் சூடு போன்ற பிரச்சனைகளைப் பிரஞ்சு அரசோடு பேசித்தீர்க்க பண்டித நேருவின் ஆலோசனையின் பேரில் அவரின் அறிமுகக் கடிதத்தோடு தோழர் வ.சுப்பையா 1937 மார்ச் 6 இல் பிரான்சுக்குச் சென்றார். பிரஞ்சு அரசோடு இப்பிரச்சனை குறித்து விவாதித்தார். அதன் விளைவாக 1937 ஏப்ரல் 6 இல் பிரஞ்சு- இந்தியாவிற்கான தொழிற்சங்கச் சட்டம் ஒன்று இயற்றப்பட்டது. அதன்படி தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 8 மணிநேர வேலையும் தொழிற்சங்கம் அமைக்கும் உரிமையும் வழங்கப்பட்டன. ஆசிய நாடுகளிலேயே 8 மணிநேர வேலை என்பது புதுச்சேரியில்தான் முதன்முதலாக அமுலாக்கப்பட்டது. அத்துடன் தொழிலாளர்களுக்கான கூட்டு ஒப்பந்தம், ஓய்வுக்கால ஊதியம், பெண் ஊழியர்களுக்கும் அவர்கள் குழந்தைகளுக்கும் சமூகப்பயன் அளிக்கும் திட்டங்களும் வரையறுக்கப்பட்டன. இத்தணைச் சாதனைகளுக்கும் சொந்தக்காரர் தோழர் வ.சுப்பையா அவர்கள்.
சிறைவாழ்க்கையும் தலைமறைவு வாழ்க்கையும்:
1938 ஆம் ஆண்டு மத்தியில் பிரஞ்சு அரசானது புதுவையில் எழுந்த தேசிய விடுதலை இயக்கப் போராட்டத்தை ஒடுக்கும் வகையில் சுப்பையாவைப் பிரஞ்சு எல்லையில் கைது செய்யும் ஆணையைப் பிறப்பித்தது. சென்னையில் பிரிட்டி~; எல்லையில் கைது செய்யும் ஆணையும் பிறப்பிக்கப்பட்டது. ஆதலால் 1938 ஜூன் முதல் தோழர் வ.சுப்பையா அவர்கள் தலைமறைவானார். ஆயினும் சென்னையில் கைது செய்யப்பட்டு 1938 டிசம்பரில் மூன்று வாரகாலம் சிறை வைக்கப்பட்டார். பின்னர் பிரிட்டி~; அரசானது சுப்பையாவைப் பிரஞ்சு அரசிடம் ஒப்படைத்தது. 1939 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் ஜூன் 11 வரை புதுவைச் சிறையில் வைக்கப்பட்டார். அவர் மீது தொடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யென நிரூபிக்கப்பட்டதால் நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது.
1939 செப்டம்பர் 1 இல் இரண்டாம் உலகப்போர் மூண்டபின்னர் பிரிட்டி~; அரசானது தோழர் வ.சுப்பையா பொதுக்கூட்டங்களில் பேசக்கூடாது என்னும் தடையை விதித்தது. ஆயினும் அவர் தடையை மீறிப் பேசினார். அதனால் 1941 ஜனவரியில் தஞ்சாவூரில் பிரிட்டி~; அரசால் கைது செய்யப்பட்டு 1942 செப்டம்பர் முதல் வேலூர் மத்தியச் சிறைச்சாலையில் அரசியல் கைதியாகக் காவலில் வைக்கப்பட்டார்.
1944 ஏப்ரல் 18 இல் பிறப்பிக்கப்பட்ட ஆணைப்படி தோழர் வ.சுப்பையா பிரஞ்சு எல்லையிலிருந்து நாடு கடத்தப்பட்டார். பின்னர் பிரான்சு விடுதலை பெற்று பாரிசில் புதிய ஆட்சி நிறுவப்பட்டவுடன் 1945 செப்டம்பர் 6 இல் சுப்பையா மீதிருந்த இத்தடை நீக்கப்பட்டது.
விடுதலைக்கான தேசிய ஜனநாயக முன்னணி:
புதுவையில் முழு அரசியல் தன்னாட்சி மாற்றம் தேவை என்பதை உணர்ந்த தோழர் வ.சுப்பையா அவர்கள் அந்நிய ஏகாதிபத்யத்திற்கு எதிரான அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒருங்கிணைத்து தேசிய ஜனநாயக முன்னணி என்ற ஒரு பேரியக்கத்தைத் தொடங்கினார்.
1946 இன் இறுதியில் தோழர் சுப்பையா அவர்கள் பிரஞ்சுப் பாராளுமன்றத்தின் மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு 1947 இல் பிரான்சு சென்றார். 1947 ஜூலை இறுதிவாக்கில் பண்டித நேரு அவர்களின் ஆலோசனையின் பேரில் புதுவை விடுதலை இயக்கச் செயல் திட்டம் குறித்து விவாதிக்க இந்தியா திரும்பினார்.
1947 ஆகஸ்ட் 15 இல் புதுச்சேரியின் விடுதலைப் போராட்டம் தொடங்கப்பட்டது. 1948 இறுதியில் பிரஞ்சு அரசானது தோழர் சுப்பையா மீது பலதரப்பட்ட கொடிய குற்றச்சாட்டுகளைச் சுமத்தி அவரைக் கைது செய்ய முயன்றது. இதையறிந்த சுப்பையா தலைமறைவாக இருந்துகொண்டே விடுதலை இயக்கத்தை வழிகாட்டி நடத்தி வந்தார். 1950 ஜனவரி 15 அன்று பிரஞ்சு அரசின் கைக்கூலிகளாலும் போலீசாலும் தோழர் சுப்பையா அவர்களின் வீடு தீக்கிரையாக்கப்பட்டது. ஆயினும் தலைமறைவாக இருந்துகொண்டே புதுச்சேரி விடுதலைப் போராட்டத்தை வழிநடத்திக் கொண்டிருந்தார் சுப்பையா.
புதுச்சேரி விடுதலை 1954 நவம்பர்1:
1954 ஏப்ரல் 4 இல் தோழர் சுப்பையா அவர்கள் புதுடில்லியில் செய்தியாளர் களுக்குப் பேட்டி அளித்தார். அக்கூட்டத்தில் புதுச்சேரி மக்களுக்கு இறுதிக்கட்டப் போராட்ட அறைகூவல் விடுத்தார். 1954 ஏப்ரல் 7 முதல் இறுதிக்கட்டப் போராட்டம் பெரும் வலிமை பெற்றது. அதற்குமேலும் தாக்குப்பிடிக்க முடியாமல் பிரஞ்சு ஏகாதிபத்யம் இந்தியாவை விட்டு வெளியேறியது.
1954 நவம்பர் 1 புதுச்சேரி விடுதலை நாளின் போது தோழர் சுப்பையா அவர்கள் கோட்டக்குப்பத்திலிருந்து முத்தியால்பேட்டை வழியாகப் புதுச்சேரி எல்லைக்குள் நுழைந்தார். 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஒன்று திரண்டு தோழர் வ.சுப்பையா அவர்களுக்கு மாபெரும் வரவேற்பு அளித்தார்கள். புதுச்சேரியின் வரலாற்றில் இந்தநாள் ஒரு மறக்க முடியாத பொன்னாள் ஆக அமைந்தது. உண்மையான மக்கள் தலைவர் இவர்தான் என வரலாறு தன் ஏட்டில் குறித்துக் கொண்டது.
avatar
nagailango
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 2
Points : 6
Join date : 29/05/2012
Age : 58
Location : Puducherry

Back to top Go down

Re: பிரஞ்சிந்திய விடுதலை வீரர் வ.சுப்பையா

Post by manjubashini on Tue May 29, 2012 1:41 pm

தகவல் பகிர்வுக்கு அன்பு நன்றிகள் இளங்கோ.
avatar
manjubashini
ரோஜா
ரோஜா

Posts : 286
Points : 308
Join date : 23/11/2010
Age : 49
Location : குவைத்

Back to top Go down

Re: பிரஞ்சிந்திய விடுதலை வீரர் வ.சுப்பையா

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Wed May 30, 2012 12:00 pm

தகவலை பகிர்ந்துக் கொண்டமைக்கு மகிழ்வு

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: பிரஞ்சிந்திய விடுதலை வீரர் வ.சுப்பையா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum