"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» சொத்துக் குவிப்பு வழக்குச் செலவு: 12 ஆண்டுகளில் ரூ.12.04 கோடி!
by அ.இராமநாதன் Mon Feb 20, 2017 11:17 pm

» சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி: களமிறங்கிய மாணவர்கள், இளைஞர்கள்
by அ.இராமநாதன் Mon Feb 20, 2017 11:16 pm

» இலங்கையில் நடைபெற உள்ள புத்த பூர்ணிமா விழா : பிரதமர் மோடி பங்கேற்கிறார்
by அ.இராமநாதன் Mon Feb 20, 2017 11:15 pm

» மஹிந்திராவின் மின்சார கார் அறிமுகம்
by அ.இராமநாதன் Mon Feb 20, 2017 11:15 pm

» ஹிட்லரின் போன் ரூ.1.62 கோடிக்கு ஏலம்
by அ.இராமநாதன் Mon Feb 20, 2017 11:14 pm

» எம்.எல்.ஏ.,வுக்கு சேலை வழங்கும் போராட்டம்
by அ.இராமநாதன் Mon Feb 20, 2017 11:13 pm

» நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு எதிராக ஐகோர்ட்டில் தி.மு.க., முறையீடு
by அ.இராமநாதன் Mon Feb 20, 2017 11:12 pm

» 5 கோப்புகளில் முதல்வர் கையெழுத்து
by அ.இராமநாதன் Mon Feb 20, 2017 11:12 pm

» துளி வெட்கம்
by அ.இராமநாதன் Mon Feb 20, 2017 10:33 pm

» வம்பு
by அ.இராமநாதன் Mon Feb 20, 2017 10:29 pm

» விவசாயி
by அ.இராமநாதன் Mon Feb 20, 2017 10:25 pm

» கானல் நீர்
by அ.இராமநாதன் Mon Feb 20, 2017 10:11 pm

» இரா. இரவியின் படைப்புலகம் ! நூலாசிரியர் : பேராசிரியர் இரா. மோகன் ! நூல் மதிப்புரை : நெருப்பலைப் பாவலர் இராம. இளங்கோவன், பெங்களூர்.
by eraeravi Mon Feb 20, 2017 6:29 pm

» ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் நயம் : நெருப்பலைப் பாவலர் இராம. இளங்கோவன், பெங்களூர்.
by eraeravi Mon Feb 20, 2017 6:28 pm

» வெளிச்ச விதைகள் ! நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் .
by eraeravi Mon Feb 20, 2017 6:25 pm

» சினிமா துளிகள்
by அ.இராமநாதன் Mon Feb 20, 2017 3:24 pm

» என்னவனே என் கள்வனே
by கவிப்புயல் இனியவன் Sun Feb 19, 2017 12:53 pm

» இனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது
by கவிப்புயல் இனியவன் Sun Feb 19, 2017 9:05 am

» இருவரி திருவரி கவிதை
by கவிப்புயல் இனியவன் Thu Feb 16, 2017 9:36 pm

» காலதேவன்
by viji Thu Feb 16, 2017 3:23 pm

» நானும் ஒரு துறவி
by viji Thu Feb 16, 2017 3:22 pm

» அவள்!
by viji Thu Feb 16, 2017 3:22 pm

» இலையிதிர் வாழ்க்கை!
by viji Thu Feb 16, 2017 3:20 pm

» அனாதை இல்லம்!
by viji Thu Feb 16, 2017 3:19 pm

» பெயர்கள்!
by viji Thu Feb 16, 2017 3:19 pm

» தடுமாற்றம்!
by viji Thu Feb 16, 2017 3:18 pm

» கனவு!!
by viji Thu Feb 16, 2017 3:17 pm

» பெண்ணே....!
by viji Thu Feb 16, 2017 3:16 pm

» புது விடியல்!
by viji Thu Feb 16, 2017 3:15 pm

» என் தெருவில்!!
by viji Thu Feb 16, 2017 3:14 pm

» கவிதை
by viji Thu Feb 16, 2017 3:13 pm

» நான் அம்மாவானேன்....!
by viji Thu Feb 16, 2017 3:12 pm

» ‘கவண்’ படத்தின் பாடல்கள்..!
by அ.இராமநாதன் Wed Feb 15, 2017 10:31 am

» உனக்கென்ன வேணும் சொல்லு...
by அ.இராமநாதன் Tue Feb 14, 2017 10:44 pm

» கொஞ்சி பேசிட வேணாம்...
by அ.இராமநாதன் Tue Feb 14, 2017 10:42 pm

» என் கண்ணுகுள்ள ஒரு சிருக்கி
by அ.இராமநாதன் Tue Feb 14, 2017 10:40 pm

» எல்லாமே காதல் காதல்
by கவிப்புயல் இனியவன் Tue Feb 14, 2017 10:33 pm

» அன்புள்ள அம்மாவிற்கு!
by viji Tue Feb 14, 2017 6:06 pm

» என்னருகில் !!
by viji Tue Feb 14, 2017 5:48 pm

» எங்கே நான்?
by viji Tue Feb 14, 2017 5:39 pm

» நான் பார்த்த என் மழலைப்பருவம்
by viji Tue Feb 14, 2017 1:57 pm

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Mon Feb 13, 2017 10:42 pm

» இனிக்கும் ​இன்பகாதல் கவிதை
by கவிப்புயல் இனியவன் Sun Feb 12, 2017 6:51 pm

» கவிப்புயலின் பல இரசனை கவிதை
by கவிப்புயல் இனியவன் Sun Feb 12, 2017 11:58 am

» இறந்தும் துடிக்கும் இதயம்
by கவிப்புயல் இனியவன் Fri Feb 10, 2017 12:41 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



இனிப்பு எடுத்துக் கொள்ளுங்கள் காதல் பிறந்திருக்கிறது நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

View previous topic View next topic Go down

இனிப்பு எடுத்துக் கொள்ளுங்கள் காதல் பிறந்திருக்கிறது நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by eraeravi on Mon Jun 04, 2012 11:23 am

இனிப்பு எடுத்துக் கொள்ளுங்கள் காதல் பிறந்திருக்கிறது

நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர்

விமர்சனம் கவிஞர் இரா .இரவி

விஜயா பதிப்பகம் கோவை விலை ரூபாய் 80


காதலர்கள் பரிமாறிக் கொள்ளும் கவிதை நூல்கள் யாருடையது என்று புத்தகக் கடைக்காரகளைக் கேட்டால் அனைவரும் சொல்லும் சொல் "கவிஞர் தபூ சங்கர்நூல்கள்தான் "கவிஞர் தபூ சங்கர் காதலை நேசிப்பதைப் போலவே காதலர்கள் காதலுக்கு அடுத்தபடியாக தபூ சங்கர் நூல்களை நேசிக்கிறார்கள் என்றால் மிகை அன்று .அதனால்தான் மிகக் குறுகிய காலத்தில் பல பதிப்புகள் வந்துள்ளது .நூலின் பெயர்களும் வித்தியாசமாக சூட்டுவதில் வல்லவர் தபூ சங்கர் .அட்டைப்படங்களும் , உள் புகைப்படங்களும் ,அச்சு வடிவமைப்புகளும் நூலை
கையில் எடுத்ததும் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டும் வண்ணம் மிக
நேர்த்தியான வடிவமைப்பு விஜயா பதிப்பகத்திற்குப் பாராட்டுக்கள் .


நூலின் சமர்ப்பணமே வித்தியாசமாக உள்ளது .இப்படி ஒரு நூல் சமர்ப்பணம் நான் இது வரை எந்த நூலிலும் படித்து இல்லை .

ஒரு வேளை
இவன் நம்மைக்
காதலிக்கிறானோ என்று
நீ எப்போதாவது
நினைத்திருந்தால்
அந்த நினைப்புக்கு
இந்த நூல் சமர்ப்பணம் .

கவிஞர் பழனி பாரதியின் அணிந்துரை அழகுக்கு மேலும் அழகு !

காதல் கண்ணில் தொடங்கும் என்பார்கள் இந்த நூலில் கண்கள் பற்றிய கவிதையோடு இந்த நூல் தொடங்குகின்றது .

சின்ன மீன்களை
பெரிய மீன்கள்
தின்று விடுவது மாதிரி
என் கண்களைத் தின்றுவிடுகின்றன
உன் கண்கள் .

காதலித்த அனைவரும் அறிந்துக் கொள்ளும் அற்புத வரிகள் .பாராட்டுக்கள்
.

இந்த உலகத்தில்
எத்தனையோ பேர்
கடவுளின் அவதாரமாகப்
பிறந்ததாக
இலக்கியங்கள்
சொல்கின்றன
ஆனால் நீ ஒருத்திதான்
காதலின் அவதாராமாகப்
பிறந்தவள் !


இந்தக் கவிதைப் படிக்கும் ஆண்களுக்கு அவரவர் காதலி நினைவிற்கு உறுதி என்று அறுதி இட்டுச் சொல்லலாம் .

கவித்துவம் குறைவாக வசன நடையில் உள்ள சில பக்கங்களைத் தவிர்த்து இருக்கலாம் .

எள்ளல் சுவையுடன் ஒரு கவிதை உங்கள் ரசனைக்கு .

கல்லூரிக்குள் இருக்கும்
ஓடைப்பிள்ளையார் கோயிலுக்கு
நீ போவதைப் பார்த்தாலே
எனக்குப் பயமாய் இருக்கும்
தன தாயைப் போல
பெண் வேண்டும் என்று
ஆற்றுக்கு ஆறு
உட்கார்ந்திருக்கும் பிள்ளையார்
நீதான் அந்தப் பெண் என்று
சொல்லிவிடுவாரோ என !

விழி தானம் விதைக்கும் விதமாக ஒரு கவிதை மிக நன்று .

உனது கண்களை
ஒரு சின்னஞ்சிறு
பெண்ணுக்கே
தானமாக
வழங்க வேண்டும் என்று
பதிவு செய்
அந்தக் கண்கள்
அடுத்த தலைமுறையில்
என்னை மாதிரி
இன்னும் ஒரு காதலன்
உருவாகட்டும் !

இந்தக் கவிதை கவிஞராக இருக்கும் ஒவ்வொரு காதலனின் உள்ளத்து உணர்வைப் படம் பிடித்த கவிதை இதோ !

என் கவிதைகளில்
எதோ ஒரு கவிதையை
நீ படிக்க நேர்ந்தால்
அந்தக் கவிதைதான்
என் கவிதைகளில்
சி
றந்த கவிதை !

காதல் தோல்வி நினைவுகளும் சுகமான சுமைதான்

நீ எனக்கு கிடைத்திருந்தால்
எப்போதோ
என் மனைவியாகி இருப்பாய்
கிடைக்காமல்
போனதால்தான்
இன்னும்
காதலியாகவே
இருக்கிறாய் !

இந்தக் கவிதை படித்ததும்
தபூ சங்கர்அவர்களுக்கு காதல் தோல்வி அடைந்ததன் காரணமாகவே
மிகச் சிறந்த கவிதைகளை எழுதி வருகிறார் .காதல் வெற்றிப் பெற்று இருந்தால்
இவ்வளவு கவிதைகள் எழுதி இருக்க முடியாது .


நீ இன்னும் என்னை
மறக்கவில்லை
அதனால்தான்
நான் இன்னும்
உயிரோடு
இருக்கிறேன்
.

இந்த நூல் படிக்கும் வாசகர்கள் அவரவர் காதலை அசைப் போடும் விதமாக மிகச்
சிறப்பாக கவிதை எழுதி உள்ள
தபூ சங்கர் அவர்களுக்கு பாராட்டுக்கள் .காதல் கவிதைகள்
எழுதுவதில் தனக்கென தனி இடம் பிடித்துள்ளார்
தபூ சங்கர்.
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com


www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi


http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2060
Points : 4616
Join date : 18/06/2010

Back to top Go down

Re: இனிப்பு எடுத்துக் கொள்ளுங்கள் காதல் பிறந்திருக்கிறது நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Mon Jun 04, 2012 4:42 pm


_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56776
Points : 69516
Join date : 15/10/2009
Age : 33
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: இனிப்பு எடுத்துக் கொள்ளுங்கள் காதல் பிறந்திருக்கிறது நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by ஹிஷாலீ on Mon Jun 04, 2012 6:05 pm

அனைத்தும் அருமை மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி

ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4935
Points : 6106
Join date : 21/12/2011
Age : 21
Location : chennai

Back to top Go down

Re: இனிப்பு எடுத்துக் கொள்ளுங்கள் காதல் பிறந்திருக்கிறது நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by eraeravi on Mon Jun 04, 2012 7:01 pm

நன்றி
அன்புடன்

கவிஞர் இரா .இரவி

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2060
Points : 4616
Join date : 18/06/2010

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum