"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
by அ.இராமநாதன் Today at 7:45 am

» ராஜஸ்தானை வீழ்த்தி சென்னை அபாரம்
by அ.இராமநாதன் Today at 7:38 am

» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by அ.இராமநாதன் Today at 7:32 am

» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by அ.இராமநாதன் Today at 7:30 am

» பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
by அ.இராமநாதன் Yesterday at 11:08 pm

» தலைவர் தத்துவமா பேசறார்....!!
by அ.இராமநாதன் Yesterday at 10:46 pm

» பீடி சுற்றும் பெண்கள்
by அ.இராமநாதன் Yesterday at 10:33 pm

» லால்பகதூர் சாஸ்திரி
by அ.இராமநாதன் Yesterday at 10:31 pm

» பேசாத வார்த்தக்கு நீ எஜமான்...!!
by அ.இராமநாதன் Yesterday at 10:27 pm

» பொது அறிவு தகவல்கள்
by அ.இராமநாதன் Yesterday at 10:23 pm

» மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
by அ.இராமநாதன் Yesterday at 10:15 pm

» தைராய்டு பிரச்சனைக்கு...
by அ.இராமநாதன் Yesterday at 10:11 pm

» மூத்தோர் சொல் அமிழ்தம் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 10:09 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Yesterday at 10:02 pm

» தலைவருக்கு ஓவர் மறதி...!!
by அ.இராமநாதன் Yesterday at 9:57 pm

» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by அ.இராமநாதன் Yesterday at 9:16 pm

» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by அ.இராமநாதன் Yesterday at 6:02 pm

» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
by அ.இராமநாதன் Yesterday at 5:25 pm

» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
by அ.இராமநாதன் Yesterday at 4:58 pm

» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
by அ.இராமநாதன் Yesterday at 4:57 pm

» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
by அ.இராமநாதன் Yesterday at 4:53 pm

» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
by அ.இராமநாதன் Yesterday at 4:50 pm

» இணைய வெளியினில....
by அ.இராமநாதன் Yesterday at 1:30 pm

» பசித்த வயிறு கற்றுத்தரும் வாழ்க்கை
by அ.இராமநாதன் Yesterday at 1:27 pm

» 10 பர்சென்ட் கேஷ்பேக் ஆஃபர் சாமி...!!
by அ.இராமநாதன் Yesterday at 1:23 pm

» ஃபேஸ்புக் ஸ்மைல்
by அ.இராமநாதன் Yesterday at 1:16 pm

» சர்வ தேச ரத்தம் உறையாமை தினம்
by அ.இராமநாதன் Yesterday at 12:07 pm

» சர்வ தேச கல்லீரல் தினம்
by அ.இராமநாதன் Yesterday at 11:59 am

» தக்காளி விஷயத்தில் கவனிக்க....
by அ.இராமநாதன் Yesterday at 11:55 am

» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Yesterday at 11:53 am

» பன்னாட்டுப் பழமொழிகள்
by அ.இராமநாதன் Yesterday at 11:41 am

» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
by அ.இராமநாதன் Yesterday at 11:36 am

» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
by அ.இராமநாதன் Yesterday at 9:45 am

» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
by அ.இராமநாதன் Yesterday at 9:42 am

» - பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
by அ.இராமநாதன் Yesterday at 9:19 am

» என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:13 pm

» சிந்திக்க சில நொடிகள்
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:02 pm

» ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 11:25 am

» ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 11:18 am

» மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 10:18 am

» துளிப்பாக்கள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 10:11 am

» முருங்கைக்கீரை கூட்டு
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:54 am

» பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:52 am

» வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:44 am

» அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 8:32 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



என் அன்புக்குரியவளே!

Go down

என் அன்புக்குரியவளே!

Post by ரௌத்திரன் on Fri Jul 13, 2012 6:04 pm

அன்புக்குரியவளே!

இதோ வந்துவிட்டேன்!



என்னை

வாசம் திருடிச் சென்ற

வாடைக்காற்றென்று

வசை பாடியவளே!



இதோ வந்துவிட்டேன்!



நம்

நேச நதிக்கு

கரைகளே அணைகளாகிவிடுமோ என்று

கண்கள் கலங்கியவளே!



இதோ வந்துவிட்டேன்!



எங்கே

அகத்தில் தேக்கிவைத்திருக்கும்

ஆசையெல்லாம் திரட்டி

ஒருமுறை

என் பெயரை உச்சரி!

எனக்கு மோட்சம் கிடைக்கட்டும்.....





வெள்ளை என்பது சமாதானம்

கறுப்பு என்பது போராகும்!

இரண்டையும் கண்களில் காட்டி

என்

இளமையை வதைப்பவளே!



எங்கே

ஒருமுறை என்னை

ஓரக்கண்ணால் பார்!

என் உயிரில் காய்ச்சல் அடிக்கட்டும்.......



அடி பைத்தியமே!

எது நம்மைப் பிரித்துவிட முடியும்?



மேகம் உரசியா

நிலவு தேய்ந்துவிடும்?



கால் நனைத்தா

கடல் வற்றிவிடும்?



பனித்துளி தெறித்தா

சூரியன் அணைந்துவிடும்?



அடி பைத்தியமே!

எது நம்மைப் பிரித்துவிட முடியும்?



உன்

உள்ளங்கை ரேகையடி நான்!

மிஞ்சி மிஞ்சி போனால்

எவ்வளவு தூரம் ஓட முடியும்?



என்ன கேட்டாய்?

"
உன் துயரத்தில்

எனக்கும் பங்கு கொடு"



என்

துயரங்களைத் தாங்கத்

தோளில்லை என்றா

தோகையுனை நேசித்தேன்?



நான்

துயரத்தால்

துவண்டுபோகும்போதெல்லாம்

உன்

தோள்களில் சாய்ந்துகொள்ளத் தானடி

துடிக்கிறேன்....



பைத்தியமே!

இவனை நீ புரிந்துகொண்டது

இவ்வளவுதானா?



அடி

பொட்டு வைத்த

பூவே!



உன்னைப்

பன்னீரில் குளிப்பாட்டப்

பாவிநான் துடிக்கிறேன்.

நீயோ

என் கண்ணீரில் குளிக்க

ஏன் ஆசைப்படுகிறாய்?



மின்னல்களைப் பிணைத்துச் சங்கிலி செய்து

பிறைநிலவைத் தொட்டில் கட்டி

பூவுன்னைத் தாலாட்டப்

பித்தன்போல் புலம்புகிறவன் நான்...



மல்லிகைப் பூவினும்

மெல்லிய நின் தேகத்தில்

மஞ்சள் கிழங்கு பட்டால்

என்னாகுமோ என்று

எண்ணிக் கலங்குபவன் நான்....



என் சித்திரமே!

உனக்குச்

சந்திரனை உரசி

சந்தனம் பூசலாமா என்று

சிந்தித்துக்கொண்டிருப்பவன் நான்.....



உன்

கொலுசு மணிகளுக்கு

நட்சத்திரங்களைச் சேகரிக்க

நினைத்துக்கொண்டிருப்பவன் நான்...



காலம் நாளை

என் தலைக்குச் சூட்டவிருக்கும்

மகுடங்களை இளைத்து

உன்

காதுக்குத் தோடுகளாக்கக்

கனா கண்டுகொண்டிருப்பவன் நான்....



என் துயரங்கள்

தண்ணீர்க் குளமல்ல.

திராவகக் குளம்!



தாமரை நீ

தாங்கமாட்டாய்....



என்

மனமென்னும் மயானத்தை

மலர்வனமாக்கியவளே!



அதில்

உன்னையே எரிப்பதென்றால்

என்

உயிர் தாங்குமா?



இவனை நீ புரிந்துகொண்டது

இவ்வளவுதானா?



இதோ!

மீண்டும் வந்துவிட்டேன்!



எங்கே

எனக்கு

என்ன பரிசு தரப்போகிறாய்?



!

வெட்கமோ?

போதும் போதும்!



வராத வெட்கத்தை ஏன்

வம்புக்கிழுக்கிறாய்?

எங்கே

மண்ணின் புழுதியைக் கூட

மகரந்தமாய் மாற்றிவிடும்

உன்

மலர்ப்பாதங்களைக் கொடு

என் உள்ளங்கையில்

ஏந்திக்கொள்கிறேன்......



----------
ரௌத்திரன்


Last edited by ரௌத்திரன் on Sat Jul 14, 2012 7:34 pm; edited 2 times in total
avatar
ரௌத்திரன்
மல்லிகை
மல்லிகை

Posts : 82
Points : 210
Join date : 13/07/2012
Age : 31
Location : வேலூர் மாவட்டம்

Back to top Go down

Re: என் அன்புக்குரியவளே!

Post by கவியருவி ம. ரமேஷ் on Fri Jul 13, 2012 6:14 pm

மண்ணின் புழுதியைக் கூட
மகரந்தமாய் மாற்றிவிடும்
உன்
மலர்ப்பாதங்களைக் கொடு
என் உள்ளங்கையில்
ஏந்திக்கொள்கிறேன்
- அழகு... அழகு... மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: என் அன்புக்குரியவளே!

Post by அ.இராமநாதன் on Fri Jul 13, 2012 9:25 pm

[You must be registered and logged in to see this image.]

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 27166
Points : 59466
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: என் அன்புக்குரியவளே!

Post by கலைவேந்தன் on Sat Jul 14, 2012 4:05 pm

சற்றே இக்கவிதையை எடிட் செய்து இடுங்கள் ரௌத்திரன்.. வாசிக்கக் கடினமாக இருப்பதால் பின்னர் கருத்து இடுவேன்..!
avatar
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

Re: என் அன்புக்குரியவளே!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Sat Jul 14, 2012 4:12 pm

திருத்தம் செய்துள்ளேன்

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: என் அன்புக்குரியவளே!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum