"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பெட்ரோல் குரங்கு!
by அ.இராமநாதன் Today at 5:34 pm

» ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை
by அ.இராமநாதன் Today at 2:17 pm

» பார்லி.,யை விரைவில் கூட்டுங்கள்: ஜனாதிபதிக்கு காங்., கடிதம்
by அ.இராமநாதன் Today at 2:16 pm

» ‛தேசியவாத சக்திகளிடமிருந்து நாட்டை காப்பாற்றுங்கள்': சர்ச்சையை கிளப்பிய சர்ச்
by அ.இராமநாதன் Today at 2:15 pm

» தாய்மொழியுடன் பிற மொழிகளையும் கற்றுக்கொள்ளுங்கள்
by அ.இராமநாதன் Today at 2:13 pm

» கேரள பள்ளிகளை நவீன மயமாக்க திட்டம்
by அ.இராமநாதன் Today at 2:13 pm

» டிச.,21 ல் ஆர் கே நகர் இடைத்தேர்தல்
by அ.இராமநாதன் Today at 2:10 pm

» நவ.,26 முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
by அ.இராமநாதன் Today at 2:09 pm

» அஜித்குமார் புதிய படத்தின் பெயர், ‘விசுவாசம்’ சிவா டைரக்டு செய்கிறார்
by அ.இராமநாதன் Today at 11:58 am

» காலை வணக்கம்....
by அ.இராமநாதன் Today at 10:21 am

» குரு உட்சத்துல இருக்காரு
by அ.இராமநாதன் Today at 10:18 am

» 30 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா...
by அ.இராமநாதன் Today at 10:10 am

» 30 வயதை தாண்டிய பிறகும் திரிஷாவுக்கு படங்கள் குவிகின்றன
by அ.இராமநாதன் Today at 10:09 am

» ‘பத்மாவதி’ திரைப்படத்துக்கு இங்கிலாந்து தணிக்கைக்குழு ஒப்புதல்; வெளியிடப்போவதில்லை - தயாரிப்பு நிறுவனம்
by அ.இராமநாதன் Yesterday at 11:56 pm

» நடிகரோட கட்சியில சேர ஏன் ஆர்வம் காட்டலை...?!
by அ.இராமநாதன் Yesterday at 11:08 pm

» எலக்சன் பூத்தை ஏன் பள்ளிக்கூடத்துல வைக்கிறாங்க...?!
by அ.இராமநாதன் Yesterday at 11:01 pm

» நம்ம ஜிம்மியை வாக்கிங் கூட்டிட்டு போங்க...!!
by அ.இராமநாதன் Yesterday at 10:57 pm

» என் ATM ஊர்ல இல்ல...!!
by அ.இராமநாதன் Yesterday at 10:55 pm

» தபால் மூலம் ஆங்கிலம் கத்துக்கறாளா..?!
by அ.இராமநாதன் Yesterday at 10:53 pm

» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 5:54 pm

» வைகை ஆறு! கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 21, 2017 8:39 pm

» முனைவர் நிர்மலா மோகன் புலமை நலம்! பதிப்பாசிரியர் : பேராசிரியர் முனைவர் பா.வளன் அரசு ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Tue Nov 21, 2017 8:27 pm

» மாம்பழ சர்பத்
by அ.இராமநாதன் Mon Nov 20, 2017 8:56 pm

» 2018ல் வருகிறது புதிய ஆபத்து
by அ.இராமநாதன் Mon Nov 20, 2017 7:26 pm

» பல்சுவை - வாட்ஸ் அப்-ல் பெறப்பட்டவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Mon Nov 20, 2017 7:02 pm

» ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம்
by அ.இராமநாதன் Mon Nov 20, 2017 3:03 pm

» சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
by அ.இராமநாதன் Mon Nov 20, 2017 12:04 am

» பழைய இரும்புச்சத்து மாத்திரைகளுக்கு பேரீச்சம்பழம்…!!
by அ.இராமநாதன் Mon Nov 20, 2017 12:03 am

» உலக அழகி மனுஷியால் திணறிய கூகுள்
by அ.இராமநாதன் Sun Nov 19, 2017 11:05 pm

» நடிகரானார் கவுதம் மேனன்!-
by அ.இராமநாதன் Sun Nov 19, 2017 9:13 pm

» இயக்குனராகும் மதுபாலா!
by அ.இராமநாதன் Sun Nov 19, 2017 9:12 pm

» கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
by அ.இராமநாதன் Sun Nov 19, 2017 9:12 pm

» சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
by அ.இராமநாதன் Sun Nov 19, 2017 9:11 pm

» பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்
by அ.இராமநாதன் Sun Nov 19, 2017 9:10 pm

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Sat Nov 18, 2017 9:04 pm

» டூ லெட் தமிழ் திரைபடம் சிறந்த படமாக தேர்வு
by அ.இராமநாதன் Sat Nov 18, 2017 5:17 am

» முதல் பார்வை: 'தீரன் அதிகாரம் ஒன்று' - நேர்த்தியான போலீஸ் சினிமா!
by அ.இராமநாதன் Sat Nov 18, 2017 5:15 am

» வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
by அ.இராமநாதன் Sat Nov 18, 2017 5:11 am

» எந்த கட்சி ஆட்சிக்கு வருதோ, அதுதான் நம்ம கட்சி…!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 9:56 pm

» ஆபரேசன் பண்ணிக்க பயப்படாதீங்க…!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 9:56 pm

» கிட்னி திருடுபோனா நிர்வாகம் பொறுப்பல்ல…!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 9:55 pm

» மாமியாரை சமாளிக்க சக்களத்தி துணை வேணும்...!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 7:42 pm

» வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 7:36 pm

» வீடு வரும்போதே ஏன் இறங்கலை...!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 7:34 pm

» சொரணை இருக்கிறவளான்னு கிள்ளி பார்த்தேன்...!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 7:26 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines பில்லா . . . டேவிட் பில்லா . . .

View previous topic View next topic Go down

பில்லா . . . டேவிட் பில்லா . . .

Post by kavithaigal on Fri Jul 13, 2012 9:28 pm


டேய் என் வாழ்க்கையில ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிஷமும் ஒவ்வொரு நொடியும் நானா செதுக்கினதுடா...!
இதை கட்டாயம் சொல்லியே ஆகணும்:-நான்
அஜித்(தல)யின் தீவிர ரசிகன், பக்தன் என்றும் சொல்லலாம்.முதல் முதலாக
எழுதும் திரைப்பட விமர்சனமும் இதுதான்.எல்லாவற்றையும் தலயுடன் தொடங்க
வேண்டும் என்பதற்காக இவ்வளவு நாள் காத்திருந்தேன்.தலயின் ரசிகன் என்பதையும்
தாண்டி நடுநிலையாக இருந்து படத்தினை விமர்சிக்க முயற்சிக்கின்றேன்...! சரி விமர்சனத்துக்கும் போவமன்...!


படத்தினை இயக்குநர்,நடிகர்,நடிகைகள் மற்றும் பலரை பற்றி எல்லோரும் போதிய
அளவு விமர்சித்ததன் காரணமாக நேரடியாக நான் விமர்சனத்திற்கே போவோம்.."தல
ஆட்டம் இப்ப இருந்து ஆரம்பம்...பில்லா டேவிட் பில்லா...கதையின் கலக்கல்
நாயகன்..."[You must be registered and logged in to see this link.]
இந்த பதிப்பின் தலைப்புடனேயே படம் தொடங்குவதனால்தான் இந்த தலைப்பை நான்
தெரிவு செய்தேன்..!படத்தின் தொடக்கம் சிறுவன் ஒருவன் "தம்" அடிக்கும்
அஜித்தாக மாறும் வரையிலான காட்சிகளை எழுத்து ஓட்டத்துடனேயே காட்டி இருப்பது
தமிழ் சினிமாவுக்கு புதிய ஒரு விடையமாகும்.இலங்கையில் அம்மா,அப்பா
எல்லோரையும் இழந்து கடைசியில் அக்காவையும் இழந்து அகதி முகாமிற்க்கு வரும்
ஒருவராக அஜித் கதையினுள் நுழைகின்றார்...அதுக்கும் எழுத்து
ஓட்டத்துடனேயே...!(சும்மா பந்தாவாய் கோக் ஒன்னை போட்டுட்டு படத்தை பார்க்க துடங்கினன்..நம்புங்க குடித்தது கோக் தான்...!)
[You must be registered and logged in to see this link.]
உன் பேர் என்ன என்று கேட்பதில் இருந்து பில்லா..டேவிட் பில்லா...என்று
சொல்லுவது வரைக்கும் திரை அரங்கு விசில் சத்தத்தாலும் கூக்குரல்களாலும்
நிரம்பி வழிந்தது...!(காது எல்லாம் கிழிந்து விட்டது என்று என் நண்பன்
சொல்லி அழுவது கேட்டேன்...)

சாரம் கட்டி இருக்கு அஜித்(டேவிட்) எப்டி "கோட் சூட்" போட்டார் என்பதை
தத்துரூபமாக எடுத்து காட்டி உள்ளார்.(சுருக்கமாக சொல்லப்போனால் கதையின்
மையம் இங்கு இருந்துதான் துடன்குகின்றது)

"சக்கரவர்த்தி டொலட்டி"க்கு இதுதான் முதல் படம் என்று சொல்ல வேண்டும்.தனது
ஆங்கில பாணியில் ஒரு படத்தை குயாலாக எடுத்து
முடித்திருக்கின்றார்.எதுக்கும் பயப்படாமல் வெருமனையே ரத்தமும் சதையும்
நிறைந்த ஒரு படத்தை கலக்கலாக எடுத்து விட்டிருக்கின்றார்...(ஆள் பலே
கில்லாடிதான் போங்க...)
[You must be registered and logged in to see this link.]
பதினொரு
வருடங்களுக்கு பின்பு அஜித் இரண்டு படங்கள் அடுத்து அடுத்து வென்று
இருக்கின்றார்...பில்லா பாகம் இரண்டு ஒரு தமிழ் சினிமாவின் இன்னொரு
அத்தியாயம் சொல்லப்போனால் இன்னொரு ஆரம்பம் என்றும் சொல்லலாம்...பில்லா
பில்லாதான் அஜித் அஜித்தான்...இந்த படம் பதினாறு வயது தொடக்கம் நாற்பது
வயது வரைக்கும் இருப்பவர்கள் பார்ப்பதற்க்கு உகந்தது...ரத்தமும் சதையும்
கலந்த ஒரு படம்...பில்லா..டேவிட்...பில்லா
... கதை சொல்லும் கதையின் கதாநாயகன்.தனி ஒருவராக நின்று படத்தினை தூக்கி நிறுத்தி இருக்கின்றார்...!
படத்தில் வரும் ஒவ்வொரு வசனங்களும் ரஜினியின் பஞ்ச் வசனங்களுக்கு சவால் விடுவதாக இருக்கின்றது.(இனி நாங்க கொலரை தூக்கி விட்டு சொல்லுவம் இனி தலதான் என்று) ஒரு கொள்ளை கூட்டத்தின் தலைவன் எவ்வாறு கதைக்க வேண்டுமோ அதுக்கு தகுந்தால் போல படத்தின் வசன நடை இருக்கின்றது.."ஆசை இல்லை அண்ணாச்சி பசி...இவன் டேவிட் பில்லாடா தெரிந்திட்டு சாகுடா..."என்னும் படத்தின் வசனங்கள் ரசிகர்களை ஆசனத்தின் நுனிக்கே கொண்டு போய் விட்டது...!
படத்தில்
பாடல்கள் அனைத்தும் பொருந்த வேண்டிய இடத்தில் கச்சிதமாக பொருந்தி
இருக்கின்றது..குறிப்பாக "மதுரை பொண்ணு..." பாடல் வாலிபர்கள் மனதில் கோடி
பட்டாம் பூச்சி...சும்மா தாவணிய தூக்கி தூக்கி ஆடி இருக்காங்க...!(கலக்கலோ
கலக்கல் தான்..இந்த பாட்டில எந்த பொண்ண பார்த்தாலும் சூப்பர் ஆக
இருக்கு...மச்சீ என்று என் நண்பன் ஷான் சொல்ல கேட்டேன்..!)

[You must be registered and logged in to see this link.]
படத்தி
ஒரு பாடல் அதிகமாக சேர்க்கப்பட்டிருக்கின்றது.அதுக்கும் புரியாத ஒரு மொழி
பாடல்.அதில் வெளி நாட்டு அழகிகள் நடனம் ஆடுவது போல காட்சிகள் அமைக்க
பட்டிருக்கும்.எந்த பாடலும் வெறுமனையே பாடலாக இல்லாமல் பாடலுடன் சேர்ந்து
கதையும் நகர்வது படத்திற்க்கு இன்னும் ஒரு பிளஸ்..!அஜித்தை மட்டும் நம்பி
முற்றும் முழுதாக எடுக்கப்பட்ட படம்..இது என்று சொன்னால் அது
மிகையாகாது..!எந்த இடத்தை பார்த்தாலும்,எடுத்துகொண்டாலும் அஜித்தை
பின்புலமாக கொண்டே கதைகள் நகர்வது இன்னும் சுவாரஸ்யம்...!

படத்தி
இரண்டு கதாநாயகிகள் என்று இருந்தாலும் அவர்கள் எவளோதான் கவர்ச்சி
காட்டினாலும் அஜித் மட்டும்தான் கண்ணுக்குள் நிற்கின்றார்..சொல்லப்போனால்
இந்த படத்தினை தனி ஒருவராக காவிச்சென்றவர்..என்று சொல்லலாம்..!இப்ப கூட
சொல்லணும் போல இருக்கு அடுத்த அடுத்த.....தலதான் என்று...!

[You must be registered and logged in to see this link.]
இன்னும்
ஒரு பாடல் காட்சி இருக்கு அது நான் நினைத்து பார்க்காத அளவுக்கு செமையாக
எடுத்திருந்தாங்க...சும்மா ஒரு இங்கிலீஷ் பட பாட்டு பார்குற போல
இருந்தீச்சு...அது வேறை எந்த பாடும் இல்லை..."உனக்குள்ளே மிருகம் என்னும்
பாடல்.." அஜித்தின் வரலாற்றில் இன்னும் ஒரு திருப்பு முனையான
பாடல்...முழுக்க முழுக்க ஸ்டில்களை மட்டும் வைத்து மிகவும் தத்துரூபமாக
எடுக்கப்பட்ட பாடல்...அஜித் அந்த பாடலில் ஒரு வித்தியாசமாக
தெரிகின்றார்...!பாடல் புதியது அதன் வரிகள் மிகவும் கூர்மையானது..அதில்
அஜித் புதிதாக இருந்தது...பாடல் காட்சி விஸ்வரூபமாக தெரிந்தது...!

[You must be registered and logged in to see this link.]
படத்தின் எடிட்டர்க்கு பெரிய ஒரு நன்றி சொல்லியே ஆகணும் ஏன்னா இத்தனை
கத்திரிக்கோல் போட்டு எந்த காட்சிகளிலும் அது தெரியாதது போல எடிட் செய்து
இருக்கிறார்.படத்தின் சுவார்யஸ்திற்க்கும் இவர்தான் பொறுப்பு...தனது கடமையை
முழுமையாக செய்து முடித்திருக்கின்றார்.படத்துக்கு மேலும் பலம் சேர்ந்தது
இருக்கின்றார்..!
படத்தில் எந்த ஒரு காட்சியும் சலிப்பு தட்டுவது போல இல்லாமல்..அடுத்து என்ன
நடக்க போகின்றது என்று தெரியாமல் ரசிகர்களை ஆசனத்தின் நுனிக்கே அடிக்கடி
இயக்குநர் அனுப்பி விடுகின்றார்..அவ்வளோ பிரமாதமான திரைக்கதை...படத்தில்
பெரிய திருப்பம் "பில்லா தான்தான் இனி எல்லா ஆயுத பிஸ்னஸ் எல்லாவற்றையும்
செய்வதாக சொல்லும்" கணத்தில் இருந்து படம் சூடு பிடிக்க
தொடங்குகின்றது...இறுதிவரை தனது தனித்துவத்திற்க்காக போராடும் ஒரு தலைவனாக
பில்லாவை காட்டி இருப்பது "சக்கரவர்த்தி டொலட்டி"க்கு ஒரு பெரிய வெற்றி...!
பில்லா-II முடியும் இடத்தில் இருந்து பில்லா-2007 தொங்குகின்றது என்பது
படத்தின் சளைக்காத கதையின் வடிவமைப்பிற்க்கு கிடைத்த மாபெரும்
கரவோசம்..!பில்லா-III இனை குறி வைத்து "சக்கரவர்த்தி
டொலட்டி" கதையை நகர்த்தி இருபது தெளிவாக தெரின்கிறது..அந்த படமும்
தயாராகும் போலதான் இருக்கு போற போக்கை பார்த்தால்...!
இறுதியில் படம் யுவனின் இனிய குரலுடன் தொடங்கும் "gang gang ganster..."
பாடலுடன் முடிவுக்கு வருகின்றது..இறுதியாக எழுத்து ஓட்டத்துடன் அஜித்தின்
சாகாசங்கள் காடப்படுகின்றது...!
வழக்கமையான படங்களை போல் அல்லாது வித்தியாசமான ஒரு புதிய முயற்சி
ரசிகர்களின் பலத்த எதிர் பார்ப்புக்கு மத்தியில் இருந்த படம்...இப்போது
வழமைக்கு மாறாக சாதனைகளின் குமியலாக வலம்வந்துகொண்டிருக்கின்றது...!
படத்தின் கதையினை பக்கம் பக்கமாக சொல்லாமல் நான் ரசித்த விடயங்களை மட்டும்
ஒரு கோர்வையாக எழுதினேன்..மிகுதியை படத்தினை பார்த்து அறிந்து கொள்ளுங்க...
பொதுவான ஒரு சினிமா ரசிகனின் கருத்து:-பில்லா
பாகம் இரண்டு இனி தமிழ் சினிமாவின் ஒரு புதிய தொடக்கம்...நேரம் போறதே
தெரியாமல் இருக்கின்றது படத்தின் முக்கிய ஒரு பிளஸ் பாயிண்ட்...படம்
மங்காத்தா இல்லை எந்த படமும் பக்கத்தை நிற்க முடியாது.சில சில படங்கள்
பில்லா வெளியாவதற்க்கு முன்னமே வெளியானது அந்த படத்தின் தயாரிப்பாளர்கள்
செய்த புண்ணியம்...!இனி பில்லா அதுக்கும் டேவிட் பில்லாதான்...என்னும்
அளவுக்கு இருக்கிறது இந்த படம்...மொத்தத்தில் படம் கலக்கல்..
avatar
kavithaigal
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 557
Points : 828
Join date : 19/10/2009
Age : 37
Location : Nagercoil

Back to top Go down

Re: பில்லா . . . டேவிட் பில்லா . . .

Post by அ.இராமநாதன் on Fri Jul 13, 2012 9:34 pm

[You must be registered and logged in to see this image.]

பார்வதி ஓமணக்குட்டன் ஹீரோயினாம்.
எண்ணி நாலே முக்கால் சீன்கள் எட்டிப் பார்த்து
விட்டு இடைவேளையில் செத்துப் போகிறார்.

அந்த வகையில் இன்னொரு ஹீரோயின் புருனா
அப்துல்லா பரவாயில்லை.

க்ளைமாக்ஸ் வரை தம்மாத்துண்டு ட்ரஸ்ஸில்
வத்தலாக வந்து கடைசியில் சாகிறராம்..!
----------------------------------------------
பில்லா 2 படத்தின் டிவிடிக்கள் விற்பனைக்கு
வந்துவிட்டன.
இணையதளங்கள் சிலவற்றிலும் இந்தப் படம்
வெளியாகியிருப்பதாகத் தெரிகிறது.

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 24396
Points : 53066
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: பில்லா . . . டேவிட் பில்லா . . .

Post by கலைநிலா on Sat Jul 14, 2012 9:17 am

ஒரு பெரிய மாஸ் நடிகர்.. எவ்வளவு பணம் போட்டாலும் வந்துவிடும்.. ரசிகர்கள் பட்டாளம் லட்சத்தில்.. உருப்படியாய் எடுத்து பெயரெடுத்திருக்கலாம்..! கோட்டைவிட்டது இயக்குநர்தான்..! படு பயங்கர சென்சார் கட்டுகளுடன் ஏ சர்டிபிகேட் கொடுத்திருக்கும்போதே இந்தப் படத்தின் தரம் புரிந்துவிட்டது..!

எது எப்படியிருந்தாலும் தல அஜீத் இருப்பதால் இதுவே போதும் என்ற நினைப்பில்தான் அவரது ரசிகர்கள் இருக்கிறார்கள்..! எந்தப் பக்கம் திரும்பினாலும் ஹிட் என்கிறார்கள். ஹிட் இல்லை என்று சொன்னால் உயிரோடு எரித்துவிடுவார்கள் போலிருக்கிறது.. விஜய் ரசிகர்கள் எவ்வளவு நல்லவர்கள் என்பது இப்போதுதான் தெரிகிறது.. புரிகிறது..! ஆனால் உண்மை அடுத்த புதன்கிழமை தெரிந்துவிடும்.. எப்படி போனாலும் போட்ட பணம் இப்போதே வந்துவிட்டது என்றாலும், புகழ் என்ற ஒன்று உள்ளதே..! இது ரசிகர்களுக்குத் தேவையி்லலைதான். ஆனால் அஜீத்திற்குத் தேவை.. விஷ்ணுவர்த்தனாவது இந்தப் படத்தின் பலவித விமர்சனங்களைப் படித்துவிட்டு தனது அடுத்தப் படத்தில் ‘தல’யை இன்னும் கொஞ்சம் மோல்டிங் செய்து நல்லபடியாக வழங்குவார் என்று எதிர்பார்த்துக் காத்திருப்போம்..!

பில்லா-2-ஐ ஒரு முறை பார்க்கலாம்..!

BODY OF LIES படத்தில் இருந்து சுடப்பட்டிருக்கும் காட்சி இந்த வீடியோவில் 3-வது நிமிடத்தில் இருந்து இறுதிவரையில் இருப்பதுதான்..!


Read more: [You must be registered and logged in to see this link.]

_________________
[You must be registered and logged in to see this link.]
avatar
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 52
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

Re: பில்லா . . . டேவிட் பில்லா . . .

Post by கவியருவி ம. ரமேஷ் on Sat Jul 14, 2012 11:01 am

நான் இன்னும் படம் பார்க்க வில்லை. சகுனி பார்க்கலாம் என்று இருந்தேன். பார்க்க நேரம் இல்லை. இந்தப் படத்தையாவது அடுத்த வாரம் பார்த்துவிடுகிறேன்.

இப்போதெல்லாம் வெற்றி என்பது 100 நாள் ஓடுவது இல்லை... போட்ட பணத்தைத் திரும்ப எடுப்பதில்தான் இருக்கிறது.

100 நாள் வேண்டுமானால் 10, 20 பேர்களை மட்டுமே வைத்துக்கொண்டு ஓட்டி 100வது நாள் என்று போஸ்டர் ஒட்டிக்கொள்ளலாம்.


_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: பில்லா . . . டேவிட் பில்லா . . .

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Sat Jul 14, 2012 4:05 pm

[You must be registered and logged in to see this image.]

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56806
Points : 69546
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: பில்லா . . . டேவிட் பில்லா . . .

Post by கலைவேந்தன் on Sat Jul 14, 2012 10:51 pm

ஐயோ பாவம்...

( படம் பார்த்தவர்களைத்தான் சொன்னேன்.. )
avatar
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

Re: பில்லா . . . டேவிட் பில்லா . . .

Post by vinitha on Sun Jul 15, 2012 1:31 pm

சியர்ஸ் சியர்ஸ்
avatar
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 8
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

Re: பில்லா . . . டேவிட் பில்லா . . .

Post by கவியருவி ம. ரமேஷ் on Sun Jul 15, 2012 3:01 pm

பில்லா..2
=================================ருத்ரா (எழுதியவர்)

கறி மசாலா வியாபாரம்
நன்றாகவே சூடு பிடித்திருக்கிறது
தமிழ் நாட்டில்.

போலீஸ் தேடிக்கொண்டே
இருக்கும் கதாநாகன்.
மக்கள் மனத்தில் மட்டும்
ரோஜாப்பூ சொருகுவான்
ரசிகர்கள் காதில் சொருகிக்கொண்டே.

பில்லாவுக்கு முன் உள்ள பில்லா
பில்லாவுக்கு பின்னும் உள்ள பில்லா
த‌மிழ் ம‌க்க‌ளை
கோமாளிக‌ள் ஆக்கும்
முல்லா இந்த‌ பில்லா.

சிந்த‌னைப்ப‌ஞ்ச‌ம் ஏற்ப‌ட்ட‌
த‌மிழ் ம‌க்க‌ளுக்கு
ப‌ஞ்ச் டைய‌லாக் ப‌ஞ்சு முட்டாயை
ந‌ல்லாவே ச‌ப்ப‌ குடுத்துருக்கிராய்ங்க.

"அக‌தி தான் அனாத‌ இல்ல‌"
அக‌தியாயும் அனாதையாயும்
ஆகிப்போன‌வ‌ன் த‌மிழ‌ன் தான்.

ஓம‌ன‌க்குட்டியும் அப்துல்லாவும்
வ‌ள்ளி தெய்வயானையாய்
வ‌ல‌ம் வ‌ர‌
சூர‌ச‌ம்ஹார‌ம் எல்லாம் ந‌ட‌த்துராரு.
ச‌ம்ஹார‌ம் ஆகிய‌து
த‌மிழன் த‌மிழ‌ன் த‌மிழ‌னே தான்.

அதோ குத்துக்கால் இட்டு
வ‌ரிசையாய் த‌வ‌ம் இருக்கிறார்கள்
ஒண்ணுக்கு
இர‌ண்டுக்கு
போன‌ பின்
பில்லா மூணுக்கு!

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: பில்லா . . . டேவிட் பில்லா . . .

Post by அ.இராமநாதன் on Sun Jul 15, 2012 4:10 pm

[You must be registered and logged in to see this image.]
-
[You must be registered and logged in to see this image.]

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 24396
Points : 53066
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: பில்லா . . . டேவிட் பில்லா . . .

Post by pakee on Sun Jul 15, 2012 7:29 pm

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
avatar
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 30
Location : france

Back to top Go down

Re: பில்லா . . . டேவிட் பில்லா . . .

Post by கவியருவி ம. ரமேஷ் on Sun Jul 15, 2012 10:04 pm

பில்லா 2 - ஸ்பெஷல் விமர்சனம் - மின்னஞ்சலில் வந்ததைப் பகிர்கிறேன்

என்னதான் பணத்தைக் கொட்டி படமெடுத்து, அதற்கு வண்டி வண்டியாய் விளம்பரம் செய்தாலும், கதை என்ற தூண் வலுவாக இல்லாவிட்டால் என்ன ஆகும் என்பதற்கு அஜீத் குமார் நடித்துள்ள பில்லா 2 ஒரு சிறந்த உதாரணம்.

மேலும் சக்ரி டோலெட்டியின் இயக்க திறமை மீது ஆரம்பத்திலிருந்தே அஜீத் ரசிகர்கள் கொண்டிருந்த அவநம்பிக்கை நிரூபணமாகியிருக்கிறது.

படத்தை ஸ்டைலாக எடுக்க வேண்டும், கலர் டோன் இப்படி இருக்க வேண்டும், யாரும் போகாத இடத்துக்குப் போய் படமாக்க வேண்டும் என்று யோசித்தவர்கள், கொஞ்சம் வித்தியாசமான கதையாக சொல்லத் தவறிவிட்டார்கள்.

படத்தின் கதை? ஒரே வரியில் சொன்னால்... டேவிட் பில்லா நடக்கிறார்... திரும்பிப் பார்க்கிறார்... எதிரி என்றல்ல... எதிரில் வருகிறவர்களையெல்லாம் சுட்டுத் தள்ளுகிறார்... அல்லது கழுத்தை அறுக்கிறார். இது முடிவல்ல ஆரம்பம் என்று சொல்லும் போது படம் முடிந்தே விடுகிறது!

கதையின் ஆரம்பம் என்னவோ நன்றாகத்தான் உள்ளது. ராமேஸ்வரம் அகதிகள் முகாமில் ஈழத்து அகதியாக அறிமுகமாகும் அஜீத்துக்கு, ஒரே ஒரு அக்கா. ஆனால் அவருக்கு இவரது போக்கு பிடிக்கவில்லை. ஒரு சர்ச்சில் மகளுடன் வசிக்கிறார்.

அகதி முகாமில் அஜீத்துக்கு தொடர்ந்து தொல்லை தருகிறார் ஒரு இன்ஸ்பெக்டர். நாயகனில் வரும் போலீஸ்காரர் ரேஞ்சுக்கு அவர் இம்சை தொடர்கிறது. ஒரு வைரக் கடத்தலில் அஜீத்தை சிக்க வைத்து போட்டுத் தள்ளப் பார்க்கிறார். ஆனால் சுதாரித்துக் கொள்ளும் அஜீத்தும் அவர் நண்பரும் போலீஸ்காரர்களை போட்டுத் தள்ளிவிட்டு, வைரத்தை உரிய நபரிடம் (இளவரசு) ஒப்படைக்க, இவர்களின் தொழில் நேர்மையைப் பாராட்டி தொடர்ந்து வேலை தருகிறார்.

ஆனால் அடுத்த கட்டத்துக்குப் போக முயலும் அஜீத், போதை மருந்து கடத்தல், சட்ட விரோத ஆயுத பிஸினஸ் என்று போகிறார். மும்பை தாதா சுதன்ஷாவுடன் சேருகிறார். அடுத்த சீனிலேயே மும்பையிலிருந்து ஜார்ஜியாவுக்கு பயணமாகிறார்... (கடத்தல் பிஸினஸை (?) அடுத்த லெவலுக்கு கொண்டு போறாங்களாம்!)

அங்கே அட்டகாசமான வில்லன் வித்யூத் ஜம்வாலுடன் முதலில் நட்பாகி பின்னர் விரோதியாகிறார். விரோதிகள் அனைவரும் இவரை போட்டுத் தள்ள முயல்கிறார்கள். ஆனால் இவர் மட்டும் எங்கும் சிக்கிக் கொள்ளாமல், மற்றவர்களை டப் டப்பென்னு சுட்டுக் கொண்டே இருக்கிறார். அதிலும் ஒரு இந்திக்கார எதிரி தானே முன்வந்து என்னை சுட்டுக் கொல்லு என்கிறார், நல்ல தமிழில்! இனி சுட எதிரிகளே இல்லை என ரசிகர்களே முடிவு கட்டிக் கொண்டு எழ தயாராகும்போது, நல்ல வேளை படமும் முடிந்து போகிறது!

இந்தப் படத்தின் தவறுகளுக்கு பெரும்பான்மைப் பொறுப்பாளி இயக்குநர் சக்ரி டோலெட்டிதான். படம் முழுக்க அத்தனை ஓட்டைகள். லாஜிக் என்றால் வீசை என்ன விலை என்று கேட்கிறது திரைக்கதை.

அதிலும் அஜீத் ஒரு ஆயுத அசைன்மென்டை போலீசாரிடமிருந்து மீட்கும் காட்சி அபத்தத்தின் உச்சம்.

பார்வதி ஓமணக்குட்டனை எதிரிகள் தூரமாய் நிற்கவைத்துவிட்டு, புல்வெளியில் துப்பாக்கியை நீட்டிக் கொண்டு உட்கார்ந்திருக்கிறார்கள். அப்போது விர்விர்ரென்று வருகின்றன பத்து கார்கள். பார்வதியை சுற்றிச் சுற்றி வர, அஜீத் சர்வ சாதாரணமாக கதவைத் திறந்து பார்வதியை உள்ளே உட்கார வைத்துக் கொண்டு போய்விடுகிறார். நீட்டிய துப்பாக்கி நீட்டியபடி, அடியாட்கள் தேமே என்று நிற்கிறார்கள். படத்தில் காமெடியே இல்லை என்று யாரும் சொல்லிவிடக் கூடாது என்பதற்காக இந்தக் காட்சி போலிருக்கிறது!

இரண்டு காட்சிகளை உருப்படியாக எடுத்திருக்கிறார்கள். ஒன்று மராட்டிய முதல்வரும் அஜீத்தும் பேசிக் கொள்ளும் இடம்.

அடுத்து, அந்த பாட்டில் ஃபைட்!

அஜீத் நடந்து வந்தாலே போதும்... தலையை அப்படியும் இப்படியும் திருப்பி, நிதா....னமாக வசனம் சொன்னால் போதும்... சூப்பர் டான் என்று யாரோ தப்புத் தப்பாக சொல்லிக் கொடுத்துவிட்டார்கள். டான்களின் உலகம் என்ற உட்டாலக்கிடி கற்பனையை மறந்துவிட்டு, நிஜத்தில் அவர்களின் உலகத்தைப் பாருங்கப்பா. கோட் சூட், ஏறி மிதிக்க பிகினி பெண்கள் என்த பந்தா இல்லாமல் குடிசையில் கூட ஒரு கொடிய டான் குடியிருப்பான். சொந்த அக்கா செத்துப் போய்விட்டதாக போனில் செய்தி வர, ஏதோ சன்நியூஸில் செய்தி கேட்டமாதிரி அவர் பாட்டுக்கு தேமே என்று போகிறார் அஜீத்!

ஆனால், அந்த ஹெலிகாப்டர் சேஸிங் சான்ஸே இல்லை. அஜீத்துக்கு மகா தைரியம்!

பார்வதி ஓமணக்குட்டன் ஹீரோயினாம். எண்ணி நாலே முக்கால் சீன்கள் எட்டிப் பார்த்துவிட்டு இடைவேளையில் செத்துப் போகிறார். அந்த வகையில் இன்னொரு ஹீரோயின் புருனா அப்துல்லா பரவாயில்லை. க்ளைமாக்ஸ் வரை தம்மாத்துண்டு ட்ரஸ்ஸில் வத்தலாக வந்து கடைசியில் சாகிறார்.

அஜீத்துடன் நண்பராக வரும் நடிகர் அம்சமாக நடித்திருக்கிறார். அதேபோல சுதன்ஷு, வித்யூத் ஜம்வால் இரண்டு வில்லன்களுமே பின்னி எடுத்திருக்கிறார்கள். குறிப்பாக சுதன்ஷுவின் பாடி லாங்குவேஜ், நடிப்பு அனைத்துமே அபாரம்!

தொழில்நுட்ப ரீதியாக, ஒளிப்பதிவாளர் ஆர்டி ராஜசேகரின் உழைப்பு அபாரம். குறிப்பாக ஜார்ஜியா காட்சிகள் கண்களுக்கு வேறு உலகைக் காட்டுகின்றன.

மகா நிதானமாக நகரும் காட்சிகளை வேகப்படுத்த யுவனும் பகீரதப் பிரயத்தனம் எடுத்திருக்கிறார். அந்த பின்னணி தீம் மியூசிக் உண்மையிலேயே நன்றாக உள்ளது. ஆனால் பாடல்கள் ஒன்றுகூட நினைவில் இல்லை.

எடிட்டரும் இயக்குநரும் போட்டி போட்டுக் கொண்டு சொதப்பியிருக்கிறார்கள்.

அடுத்தமுறை அஜீத்திடம் கதை சொல்பவர்கள் தயவு செய்து அந்த 'கோட்'டை சலவைக்கும், துப்பாக்கிகளை பழைய காயலான் கடைக்கும் போடுவது போல ஒரு சீன் வைத்தால் சூப்பராக இருக்கும்!

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: பில்லா . . . டேவிட் பில்லா . . .

Post by அ.இராமநாதன் on Mon Jul 16, 2012 12:22 am

[You must be registered and logged in to see this image.]
-
[You must be registered and logged in to see this image.]

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 24396
Points : 53066
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: பில்லா . . . டேவிட் பில்லா . . .

Post by ramkumark5 on Mon Jul 16, 2012 12:53 am

Source: [You must be registered and logged in to see this link.]

நம் தளத்தில் பிற நடிகர்களை பற்றி / பிற படங்கள் பற்றி அரிதாகவே செய்திகள் வரும். அப்படி வந்தா அதுக்கு காரணமும் இருக்கும். ஆனா, இந்த நேரத்தில் இப்படி ஒரு பதிவை அளிப்பதை “அவசியம்” என்று கருதுகிறேன். அல்டிமேட் ஸ்டார் நமக்கு எப்பவுமே ஸ்பெஷலாச்சே. இது நிச்சயம் அவர் ரசிகர்களின் மனக்குறையை போக்கும் & ஒரு மிகப் பெரிய பூஸ்டாக அமையும்.

என்னைப் பொறுத்தவரை அஜீத் அவர்கள் மீது ஒரு நடிகன் என்பதை விட, ஒரு மனிதன் என்ற ரீதியில் நான் மிக மிக மதிப்பு வைத்துள்ளேன். அவரது துணிச்சலும், வெளிப்படைத் தன்மையையும் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.

சரி…. மேட்டருக்கு வர்றேன்….

சூப்பர் ஸ்டார் ரஜினியோட படங்கள் ஒவ்வொன்னும் மத்தவங்களுக்கு பிடிக்கிறது ரெண்டாவது பட்சம் இருக்கட்டும் அவர் ரசிகர்களுக்கு பிடிச்சிருந்தாலே போதும் – படம் ஹிட்டாயிடும். அப்படித் தான் அல்டிமேட் ஸ்டாரும். அவரோட ரசிகர்களுக்கு பிடிச்சிருந்தாலே போதும் விமர்சனங்களை எல்லாம் மீறி படம் ஹிட்டாயிடும் என்பதற்கு பில்லா 2 நல்ல உதாரணம்.
என் அனுபவத்தில் ரஜினி படங்களுக்கு அடுத்து இப்படி ஒரு மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஒரு படத்துக்கு ஏற்பட்டதுன்னா அது பில்லா 2 தான். அதுக்கு காரணம் அஜீத் தான்.

இப்படி ஒரு பிரம்மாண்ட எதிர்பார்ப்போட ரிலீசான ஒரு படத்துக்கு மீடியா இப்படி கொத்துபரோட்டா மாதிரி விமர்சனங்கள் கொடுக்குதேன்னு ரசிகர்கள் ரொம்ப வருத்தத்துல இருக்காங்க. தல திருப்பதி எல்லாம் போய்ட்டு பாலாஜியை தரிசனம் பண்ணிட்டு வந்தாரே, அதுக்கு பிரயோஜனமே இல்லையா? இப்படி ஒரு நெகடிவ் ரிவ்யூவ்ஸ் வரணுமா? அப்படின்னு ரசிகர்கள் ரொம்ப மன உளைச்சல்ல இருக்காங்க.

அடடா… இந்த படத்துக்கு கிடைச்ச மாதிரி மீடியாவின் எதிர்மறை விமர்சனம் மாதிரி வேறு ஏதாவது ஒரு படத்துக்கு கிடைச்சிருந்தா, படம் ரெண்டாவது ஷோவே நொண்டியடிச்சு உக்காந்திருக்கும். ஆனா, அத்துனை எதிர்மறை விமர்சனத்தையும் மீறி, படம் ஹவுஸ்புல்லா போகுதுன்னா இது தான் ஸ்டார் பவர். (நேற்றைக்கு சென்னையில எந்த தியேட்டர்லயும் ஈவ்னிங் ஷோ டிக்கட் கிடைக்கலே. இன்னைக்கும் படம் ஹவுஸ்புல் தான்.).

நான் எதுக்கு இதை சொல்றேன்னா…. ஒரு நடிகனுக்கு விமர்சனத்தைஎல்லாம் மீறி படத்தை ஹிட் பண்ற CAPACITY இருக்கணும். அப்படிப் பட்டவங்க தான், அடுத்த ஸ்டேஜ்க்கு போகமுடியும். கடவுள் அந்த சக்தியை தலக்கு கொடுத்தாச்சு. வேகமா ஓடும்போது நாலு பேரு இழுத்துவிட்டு, கீழே தள்ளி, கழுத்தை மிதிச்சி, அதையெல்லாம் எதிர்த்து போராடி, ஓடி ஜெயிக்குறதுல தான் திரில்லே இருக்கு. அர்த்தமும் இருக்கு. அந்த தில் தலக்கு ரொம்பவே இருக்கு. தல ரசிகர்களுக்கு அதுக்கு மேலயும் இருக்கு.

மேலும், இப்படிப்பட்ட விமர்சனங்களை பாஸிட்டிவா எடுத்துக்கணும். மீடியா சுட்டிக்காட்டிய குறைகளை அஜீத் அவர்கள் தன்னோட அடுத்த படத்தில் சரி செய்து கொள்ளனும். அவ்ளோ தான். எனக்குத் தெரிந்து, மீடியாவில் அஜீத்துக்கு எதிரானவர்கள் என்று யாருமே கிடையாது. அதனால அஜீத் ரசிகர்கள் இது விஷயமா கவலைப் படவேண்டியதில்லே. எல்லாருக்குமே, அவர் நல்ல படங்கள் பண்ணனும், நல்ல ஹிட் கொடுக்கணும் என்பது தான் ஆசை. குறைகளை வெளிப்படையா சொன்னத் தானே அவர் அதை சரி செய்துக்க முடியும்?

குறைகளை யாருமே சுட்டிக் காட்டாம “ஆஹோ ஓஹோனு” புகழ்ந்தாங்கன்னு வைங்க, கடைசி வரைக்கும் ஒருத்தரு தன்னோட குறைகள் எதுன்னு தெரியாமலேயே வாழவேண்டியிருக்கும். அதை சரி செஞ்சிக்க வாய்ப்பு கிடைக்காமலே போய்டும்.

ரெண்டாவது, மீடியாவைப் பொறுத்தவரை அவர் கிட்டே இன்னமும் அதிகம் அதிகம் எதிர்பாக்குறாங்க. அந்த எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றுவது என்பது அத்துணை சுலபமல்ல. ஊடகத்தின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றி, அவர்கள் “சூப்பர்” என்று சொல்வது போல, ஒரு கமர்சியல் மாஸ் ஹீரோ படம் தருவது அத்துணை சுலபம் அல்ல. அவர்களை திருப்தி படுத்தவேண்டும், நல்ல விமர்சனங்கள் வரவேண்டும் என்று ஒரே கோணத்தில் சிந்தித்தால், படம் ஜனரஞ்சகமாக அமையாமல் போய்விடவும் வாய்ப்புண்டு. So, எல்லாரையும் திருப்தி படுத்துற மாதிரி படம் பண்றது சாதாரண விஷயம் இல்லே.

எனக்கு தெரிஞ்சி, 2007 இறுதியில வெளிவந்த ‘பில்லா 1′க்கு கூட இப்படித் தான் எழுதினாங்க. மங்காத்தாவையும் இப்படித் தான் சொன்னாங்க. அவங்கல்லாம் இப்படி சொல்றதை வெச்சு நானும் கூட படம் சரியில்லே போலிருக்குன்னு நினைச்சிட்டேன். ஆனா, உதயத்துல நான் படம் பார்க்குறேன்… அவ்ளோ சூப்பர் ரெஸ்பான்ஸ். படமும் நல்லா இருந்துச்சி.
உங்களுக்கெல்லாம் ஒரு விஷயம் சொல்ல விரும்புறேன். ‘பாட்ஷா’ சூப்பர் ஸ்டாரோட கேரியர்ல எவ்ளோ பெரிய ஹிட், அது எவ்ளோ பெரிய முக்கியத்துவத்தை வகிக்குதுன்னு உங்க எல்லாருக்கும் தெரியும். ரஜினி ரசிகர்கள் வட்டதையும் தாண்டி, அந்தப் படம் இன்னைக்கு வரைக்கும் பலரால் அந்தப் படம் ரசிக்கப்படுகிறது. ஆனா அந்தப் படத்துக்கு அப்போ விமர்சனம் எழுதின பத்திரிக்கை ஒன்னு என்ன எழுதிச்சு தெரியுமா? “இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவுக்கு தன்னோட குரு கே.பாலச்சந்தர் பேரைக் காப்பத்தனும்னு எண்ணமே இல்லை போலிருக்கு!” அப்படின்னு. இது எப்படி இருக்கு? (எந்தப் பத்திரிக்கைன்னு நம்ம ரஜினி ரசிகர்கள் யாராவது கரெக்டா சொல்றாங்களான்னு பார்ப்போம்!)

அவ்ளோ ஏன், சூப்பர் ஸ்டாரோட ‘சந்திரமுகி’ எத்தனை நாள் ஓடிச்சி எவ்ளோ வசூல் சாதனை பண்ணிச்சுன்னு உங்க எல்லாருக்கும் தெரியும். அந்தப் படத்துக்கு ஒரு பெரிய வெப்சைட் என்ன ரிவ்யூ எழுதிச்சி தெரியுமா? “Chandramukhi doesn’t suit Rajini” அப்படின்னு! ஹா… ஹா… ஹா…!!! (அதைப் பார்த்து காப்பியடிச்சு விமர்சனம் எழுதின வேற சில வெப்சைட்ஸ் எல்லாம் அப்புறம் தங்களோட விமர்சனங்களை சைலண்ட்டா மாத்திட்டாங்க!). இந்தியன் எக்ஸ்ப்ரஸ்ல சிவாஜிக்கு என்ன எழுதினாங்க தெரியுமா? “All Style; no substance” அப்படின்னு.

சரி… பில்லா 2 படம் உண்மையிலேயே எப்படித் தான் இருக்கு?

(ஹானஸ்ட்டா சொல்லனும்னா நான் இன்னமும் படம் பார்க்கலேங்க. ஆக்சுவலா நேத்தைக்கு நைட் போறதா இருந்திச்சு. ஆனா வேற ஒரு முக்கிய வேலைல மாட்டிகிட்டேன். போகமுடியலே. அடுத்த வாரம் போறேன்!) ஆனா, விமர்சனங்களை படிச்சது, படம் பார்த்த என் நண்பர்கள் & ரிலேட்டிவ்ஸ் சொன்னது, இதையெல்லாம் டாலி பண்ணி பார்க்கும்போது, விமர்சனங்கள்ள குத்தி குதறியிருக்குமளவிற்கு படம் இல்லை. நல்லா ரசிக்கும்படியே இருக்கு. என்று தான் தெரிகிறது.
ஒரு படம் சரியில்லேன்னா அதை அடுத்த ஷோ சீந்துவதற்க்கு கூட ஆள் இருக்கமாட்டாங்க. ஆனா எங்கே போனாலும் எங்கே பார்த்தாலும் பில்லா 2 பத்தி தான் பேச்சாயிருக்கு. இது ஒன்னே போதுமே… படத்தோட மெரிட் பத்தி சொல்றதுக்கு.
படத்தோட காமிரா, ஸ்டைலிஷ் சீன்ஸ், ஆக்ஷன், லொக்கேஷன், டயலாக்ஸ் இதெல்லாம் டாப்கிளாஸ்னு நேற்றைக்கு படம் பார்த்த ப்ரெண்ட் ஒருத்தரு எனக்கு நைட் ஃபோன் பண்ணி சொன்னாருங்க. சொஸைட்டியில பெரிய ஆள் அவர். ஆனால் ஒரு சராசரி சினிமா ரசிகர். ரஜினி, கமல், அஜீத், விஜய், விக்ரம், சூர்யா, ஆர்யா யார் படமாயிருந்தாலும் முதல் ரெண்டு நாள்ள போய்டுவார். மனசுக்குள்ளே எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லாம, பிடிச்சிருந்தா பிடிச்சிருக்கு, இல்லேன்னா இல்லேன்னு சொல்லிடுவார். அதுக்கு காரணத்தையும் சொல்லிடுவார். அது கரெக்டாகவே இருக்கும். இதுரைக்கும் பல படங்களோட விமர்சனங்களை கரெக்ட்டா என்கிட்டே சொல்லியிருக்கிறார். படம் தேறும் தேறாதுன்னு க்ளியரா சொல்லிடுவார். பல நேரங்கள்ல இவர் சொன்னது கரெக்டாகியிருக்கு. மீடியா சொல்லியிருக்குற மாதிரி குறைகள் எதுவும் பெரிசா கண்ணுக்கு தெரியலே. படம் ஸ்டைலிஷா சூப்பரா இருக்கு சுந்தர் அப்படின்னு சர்டிபேகெட் கொடுத்திருக்கார்.

So, BRUSH ASIDE THE MEDIA REVIEWS; ENJOY BILLA 2 FOR ITS SPECTACULAR PRESENTATION! மங்காத்தாவின் வசூலை இது முறியடிக்கும் என்றே நினைக்கிறேன். பார்க்கலாம்…

(குறிப்பு : “இந்த படம் ஓப்பனிங், எந்திரனை மிஞ்சிட்டதா அஜீத் ஃபேன்ஸ் சொல்றாங்க… சில டி.வி.சானல்ஸ்ல சொல்றாங்க…” அப்படி இப்படின்னு சொல்லிக்கிட்டு, ஒரு சிலர் அஜீத் மற்றும் ரஜினி ரசிகர்கள் இடையே கலகத்தை ஏற்படுத்த முனையுறாங்க. என்கிட்டேயே “இதுக்கு உங்க பதில் என்ன?”ன்னு கேக்குறாங்க. நேரம்டா. (இவங்களுக்கு வேற வேலை வெட்டியே கிடையாது என்பது வேற விஷயம்!) அவ்ளோ ஏன்… ஆஸ்கார் ரவிச்சந்திரனே அதை சொன்னாலும் ஐ டோன்ட் கேர்! என்னோட பதில் என்னன்னா…. இதை அஜீத் சொல்லட்டும்… நான் அப்போ பதில் சொல்றேன்! ஓ.கே.?)
avatar
ramkumark5
மல்லிகை
மல்லிகை

Posts : 131
Points : 175
Join date : 24/04/2012
Age : 32
Location : Surat

Back to top Go down

Re: பில்லா . . . டேவிட் பில்லா . . .

Post by கவியருவி ம. ரமேஷ் on Mon Jul 16, 2012 9:05 am

உண்மைதான். நான் பதிந்தவைகள் மின்னஞ்சலில் வந்தவையே...

எனக்கு யாருடைய விமர்சனமும் பிடிப்பதில்லை. ஆனால் என்னத்தான் சொல்ல வருகிறார்கள் என்று படிப்பேன். நானும் படம் பார்க்கவில்லை. இந்த வாரத்தில் பார்த்துவிடுவேன். கடைசியாக ஏழாம் அறிவு பார்த்ததோடு சரி...

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: பில்லா . . . டேவிட் பில்லா . . .

Post by கவியருவி ம. ரமேஷ் on Mon Jul 16, 2012 8:38 pm

மின்னஞ்சலில் வந்தது

ஹாலிவுட்டில் தான், ஒரு படம் வெளியாகி அதனுடைய இரண்டாம் பாகத்தில் அந்தக் கதையின் துவக்கம் வரும், ஸ்பைடர் மேன் போல. ஒரு சிலரே துவக்கத்திலேயே பல பாகமாக எடுக்க திட்டமிடுவார்கள். சிலர் படம் வெற்றி பெற்றதும் அதனுடைய மற்ற பாகங்களை எடுக்க முயல்வார்கள். இதில் பில்லா II இரண்டாவது வகை. தமிழுக்கு இது புதியது கூட அதாவது, வந்த கதையின் துவக்கத்திற்கு [prequel] போவது.

படத்தின் உருவாக்கம் சிறப்பாக இருந்தும் திரைக்கதை சொதப்பியதால் ஏமாற்றமாகி விட்டது. இந்தப்படத்தின் எந்தப் பகுதியிலும் அஜித்தை குறை கூற முடியாது. அவர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார், இயக்குனர் சக்ரி தான் சொதப்பி விட்டார். கதை சுருக்கமாக “ஒரு டான் எப்படி உருவாகினான்” என்று காட்டுகிறார்கள், காட்டியதை கொஞ்சம் நம்புற மாதிரி காட்டி இருந்தால் கலக்கலாக இருந்து இருக்கும்.

அநேகமாக பலரை கடுப்படித்து இருப்பது அஜித் செய்யும் கொலைகளாகத் தான் இருக்கும். ஒரு வரைமுறையே இல்லாமல், பார்த்தவர்களை எல்லாம் சுட்டுக்கொண்டே இருக்கிறார். சக்ரிக்கு இது ரொம்ப ஓவராகத் தோன்றாதது ஆச்சர்யமே! கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் காட்சிகளை அமைத்து, எப்படி இத்தனை பேரை குறுகிய காலத்தில் சுட்டு தப்பிக்க முடியும் என்று தெரியவில்லை. ஊரில் காவல் துறையே இல்லையோ! என்று சந்தேகம் வரும் அளவிற்கு சுட்டுக்கொண்டு இருக்கிறார்கள். பேருக்குக்கூட யாரும் இது பற்றி விசாரிக்கவில்லை, அது பற்றியே சக்ரி கவலைப்பட்டது மாதிரி தெரியவில்லை.

படம் முழுக்க ரஜினி போல அஜித்தே ஆக்கிரமித்து இருக்கிறார். திரைக்கதை சொதப்பினாலும் அதையும் மீறி நம்மை கவர்வது அஜித்தின் அலட்டல் இல்லாத நடிப்பு தான். உண்மையாகவே ரொம்ப நன்றாக நடித்து இருக்கிறார். இதையே இனியும் தொடர வேண்டும் என்று விரும்புகிறேன். நரம்பு புடைக்க பன்ச் வசனம் எல்லாம் பேசி நம்மை பஞ்சராக்கவில்லை. “என் வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிஷமும்…” வசனம் கூட அந்தக் காட்சிக்கு பொருத்தமானதாகத் தான் இருந்தது. முகம் உப்பி இருக்கிறது, கொஞ்சம் கவனித்தால் நலம்.

பார்வதி ஓமனக்குட்டன் தேவையே இல்லை. கதாநாயகி வேண்டும் என்பதற்காக வைத்தார்கள் போல. நயன்தாரா மாதிரி கொஞ்சம் கிளுகிளுப்பாக இருந்தாலாவது பரவாயில்லை , உகாண்டா ல இருந்து தப்பி வந்தது போல இருக்கிறார். டம்மியாக வந்து போகிறார் மற்றும் இரண்டு சண்டைக்கு உதவியாக இருக்கிறார் அவ்வளவே. அது ஏன் ஸ்ரீமன், அனைத்துப் படங்களிலும் காமெடி பீஸ் மாதிரியே ஆகி விடுகிறார் என்று தெரியவில்லை. இதிலும் அப்படியே!

அஜித், வில்லன்கள் கிட்ட மாட்டும் போது எல்லோரும் கத்தியே பயன்படுத்துகிறார்கள். ஒருவேளை துப்பாக்கி பயன்படுத்தினால் படம் முடிந்து விடும் என்று நினைத்தாரோ என்னவோ! கடைசியில் அஜித் வில்லன் இடத்தில் சென்று சுடுவதெல்லாம்… என்னமோ போங்க.

இரண்டு வில்லன்கள், ஒரு நேஷனல் வில்லன் ஒரு இன்டர்நேஷனல் வில்லன். நேஷனல் வில்லன் நல்லா ஜாலியா பொண்ணுக கிட்ட மசாஜ் பண்ணிட்டு போய் இருக்காரு , மற்றபடி டம்மி தான். இன்டர்நேஷனல் வில்லன் வேண்டும் என்றால் கொஞ்சம் பரவாயில்லை. கடைசி ஹெலிஹாப்டர் சண்டை எல்லாம் தேவையில்லாத ரிஸ்க் அஜித்திற்கு. இது போல காட்சிகளை தவிர்க்கலாம். அஜித் எப்போது ஹெலிகாப்டரில் ஏறினார் என்று தெரியவில்லை, ரயிலுக்கு எப்படி குண்டு வைத்தார் என்றும் தெரியவில்லை. கடைசியில் சக்ரி நம்ம காதில் பூ வைத்து விட்டார்.

படத்தில் வசனங்கள், பாடல்கள், பின்னணி இசை, ஒளிப்பதிவு, மேக்கிங் ஆகியவை நன்றாக இருந்தது. படத்தின் அளவுக்கதிகமான கொலைகள், ரத்தம் ஆகியவை படத்தின் மதிப்பை குறைத்து விட்டது. எனக்கு கொலைகள், ரத்தம் ஆகியவை புதிதல்ல காரணம், வன்முறை படங்கள் அதிகம் பார்க்கிறவன் தான் ஆனால், அந்தக் கொலைகள் கொஞ்சமாவது நம்பும்படி இருக்க வேண்டும். டான் என்பதற்காக, இப்படி குருவி சுடுற மாதிரி [நீங்க நினைக்கிற "குருவி" இல்ல இது நிஜக்குருவி] படம் முழுக்க சுட்டுக்கொண்டு இருப்பது, படத்தின் மீதான ஆர்வத்தை குறைத்து விடுகிறது.

அஜித் ஒரு முறை கூறி இருந்தார். நான் புதுமுக இயக்குனர்களுக்கு அதிக வாய்ப்புக்கொடுக்க நினைக்கிறேன் ஆனால், அவர்கள் சொதப்பி விடுகிறார்கள். இதனால் இனிமேல் புதுமுக இயக்குனர்கள் என்றாலே யோசிக்க வேண்டியது இருக்கிறது என்று. சக்ரியும் தனக்கு கிடைத்த வாய்ப்பை வீணடித்து இருக்கிறார். கமல் கட்டுப்பாட்டில் இருந்ததால் “உன்னைப் போல் ஒருவன்” சிறப்பாக வந்ததோ என்று தோன்றுகிறது. இனி ஒரு படத்தை சிறப்பாக கொடுத்தால் மட்டுமே அவரது திறமையை மெச்ச முடியும்.

தல பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: பில்லா . . . டேவிட் பில்லா . . .

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum