"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
by அ.இராமநாதன் Today at 3:10 pm

» உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
by அ.இராமநாதன் Today at 2:54 pm

» தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
by அ.இராமநாதன் Today at 2:51 pm

» பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
by அ.இராமநாதன் Today at 2:44 pm

» கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
by அ.இராமநாதன் Today at 12:07 pm

» கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
by அ.இராமநாதன் Today at 9:59 am

» கிறிஸ்தவ பெண்ணுக்கு திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் பதவி: நடிகை ரோஜா கண்டனம்
by அ.இராமநாதன் Today at 9:53 am

» கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
by அ.இராமநாதன் Today at 9:43 am

» கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
by அ.இராமநாதன் Today at 9:40 am

» கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
by அ.இராமநாதன் Today at 9:38 am

» நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
by அ.இராமநாதன் Today at 9:36 am

» கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
by அ.இராமநாதன் Today at 9:33 am

» கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
by அ.இராமநாதன் Today at 3:49 am

» வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
by அ.இராமநாதன் Today at 3:47 am

» அன்று ...அப்போது!!
by அ.இராமநாதன் Today at 3:34 am

» டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
by அ.இராமநாதன் Today at 3:28 am

» அவரை மாதிரி கஞ்சனை பார்க்க முடியாது...!!
by அ.இராமநாதன் Today at 3:25 am

» கலாய் கவிதைகள்
by அ.இராமநாதன் Today at 3:14 am

» மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
by அ.இராமநாதன் Today at 2:54 am

» ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
by அ.இராமநாதன் Today at 2:51 am

» கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
by அ.இராமநாதன் Today at 2:46 am

» கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
by அ.இராமநாதன் Today at 2:43 am

» திட்டி வாசல்
by அ.இராமநாதன் Today at 2:40 am

» வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
by அ.இராமநாதன் Today at 2:33 am

» கேரளா சாகித்ய அகாடமி
by அ.இராமநாதன் Today at 2:32 am

» 2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
by அ.இராமநாதன் Today at 2:30 am

» வேங்கை மகன் ஒத்தையில நிக்கேன்...!!
by அ.இராமநாதன் Yesterday at 10:30 pm

» தமிழன் அறியாத நாரதரா...?
by அ.இராமநாதன் Yesterday at 10:24 pm

» முலாம்பழம் - மருத்துவ பயன்கள்
by அ.இராமநாதன் Yesterday at 10:20 pm

» செயல் இன்றி இன்பமில்லை
by அ.இராமநாதன் Yesterday at 10:14 pm

» `மூடர்கூடம்’ நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி..!
by அ.இராமநாதன் Yesterday at 10:10 pm

» கடவுளும் தூதுவர்களும்
by அ.இராமநாதன் Yesterday at 9:56 pm

» கால தேவதை
by அ.இராமநாதன் Yesterday at 9:47 pm

» ஒற்றைச் செருப்பு
by அ.இராமநாதன் Yesterday at 9:46 pm

» இராயேந்திரனின் எண்ணங்கள்
by ராஜேந்திரன் Yesterday at 9:34 pm

» அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....!!
by அ.இராமநாதன் Yesterday at 5:17 pm

» விவேக் படத்தில் யோகி பி பாடல்
by அ.இராமநாதன் Yesterday at 3:11 pm

» கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
by அ.இராமநாதன் Yesterday at 3:10 pm

» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
by அ.இராமநாதன் Yesterday at 3:03 pm

» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
by அ.இராமநாதன் Yesterday at 3:02 pm

» எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
by அ.இராமநாதன் Yesterday at 3:01 pm

» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
by அ.இராமநாதன் Yesterday at 2:59 pm

» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
by அ.இராமநாதன் Yesterday at 2:58 pm

» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
by அ.இராமநாதன் Yesterday at 3:57 am

» ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி
by அ.இராமநாதன் Yesterday at 3:54 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines ஈற்றடியில் குறள் யாப்போம்..!

Go down

ஈற்றடியில் குறள் யாப்போம்..!

Post by கலைவேந்தன் on Sun Jul 15, 2012 10:03 pm

நண்பர்களே..

திருவள்ளுவரின் திருக்குறள் மொத்தம் 1330.

அதன்பிறகு அத்துணை குறட்பாக்கள் எவரும் எழுதவில்லை எனலாம். நான் இதுவரை பல்வேறு களங்களில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குறட்பாக்களை இயற்றியுள்ளேன். அவற்றின் தொகுப்பினை விரைவில் இங்கே பதியவும் உள்ளேன்.

நமது தோட்டத்தில் கவிதை ஆர்வலர்கள் அதிகம் உள்ளனர் என்பதால் இங்கே குறளந்தாதி தொடங்க உத்தேசித்துள்ளேன்.

நான் ஒருகுறள் பதிவேன். அதன் இறுதி அடியினை முதலாகக் கொண்டு அடுத்தவர் குறட்பா எழுத வேண்டும்.

இலக்கணப்பிழை இன்றி இத்திரி இயங்க வேண்டும் என விழைவதால் கவிஞர்கள் இங்கே குறட்பாவின் இலக்கணம் அறிந்து பதிவிட வேண்டுகிறேன்.

அவ்விதம் ஆர்வத்தில் பதிந்த கவிஞர்களின் குற்ட்பா இலக்கணம் மீறி இருப்பின் சுட்டிக்காட்ட தலைப்படுவேன். அதனை குறையாகக் கொள்ளாமல் தங்களை மேலும் கற்றுக்கொள்ள வாய்ப்பாக அதனை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

இதன் காரணமாய் மன முறிதலைத் தவிர்க்கவே இந்த அறிவிப்பு.

அனைத்து குறட்பாக்களுக்கும் வரிசை எண்ணையும் தவறாமல் வழங்க வேண்டுகிறேன்.

அனைவரின் ஒத்துழைப்புடன் நான் தொடங்கித் தொடர்கிறேன்.
avatar
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

Re: ஈற்றடியில் குறள் யாப்போம்..!

Post by கலைவேந்தன் on Sun Jul 15, 2012 10:06 pm

1.
அமிழ்தினு மேவிய தாமவள் செவ்வாய்
தமிழவள் கூறிடுங் கால்.
avatar
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

Re: ஈற்றடியில் குறள் யாப்போம்..!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Mon Jul 16, 2012 12:28 pm

அருமையான நல்ல முயற்சி முயற்சி வெற்றி பெற பாராட்டுகளும் வாழ்த்துகளும் அண்ணே

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: ஈற்றடியில் குறள் யாப்போம்..!

Post by கலைவேந்தன் on Mon Jul 16, 2012 10:49 pm

யாருமே இந்த திரியைத்தொடரவில்லையே.. சற்று நேரம் பார்த்துவிட்டு நானே அடுத்த குறளைத் தொடர்கிறேன்.
avatar
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

Re: ஈற்றடியில் குறள் யாப்போம்..!

Post by சதாசிவம் on Tue Jul 17, 2012 4:50 pm

நல்ல திரி தொடங்கியமைக்கு நன்றி,

தங்களில் அந்தத்தை தொடரும் ஆதி

கால்கடுக்க காக்கிறேன் கண்வலிக்கப் பார்க்கிறேன்
கால்சிவந்தக் காதலிக்கு நான்
குறளின் அடிப்படை இலக்கணம் ஒருமுறை விளக்கி அதன் பிறகு இத்திரியைத் தொடர்ந்தால் கவிஞர்களுக்கு ஆர்வமாகவும், ஆதாரமாகவும் இருக்கும் என்பதென் தாழ்மையான கருத்து.

avatar
சதாசிவம்
மல்லிகை
மல்லிகை

Posts : 131
Points : 147
Join date : 18/12/2011
Age : 42
Location : chennai

Back to top Go down

Re: ஈற்றடியில் குறள் யாப்போம்..!

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Jul 17, 2012 7:54 pm

வெண்பா
வெண்பாவிற்கான இலக்கணங்களும், வெண்பா வகைகளும் குறித்துக் காண்போம்.

வெண்பா இலக்கணம்
· மாச்சீர், விளச்சீர், காய்ச்சீர் ஆகியனவே இடம்பெறும்; கனிச்சீர் வரக்கூடாது.

· இயற்சீர் வெண்டளையும், வெண்சீர் வெண்டளையும் வரும்; பிற தளைகள் வரலாகாது.

· ஈற்றடி முச்சீருடையதாகவும், ஏனைய அடிகள் நான்கு சீர் உடையனவாகவும் அமையும்.

· ஈற்றடியின் ஈற்றுச்சீர் நாள், மலர், காசு, பிறப்பு கொண்டு முடியும்.

· செப்பலோசை பெறும்.

· அடிவரையறை; குறைந்த அளவு இரண்டடி; பேரெல்லைக்கு வரையறை இல்லை.

வெண்பா வகைகள்
வெண்பா ஆறு வகைப்படும். அவை பின்வருமாறு:

1. குறள் வெண்பா

இரண்டடிகளில் அமைவது.

(எ.கா)

வெள்ளத் தனைய மலர்நீட்டம்; மாந்தர்தம்
உள்ளத் தனைய துயர்வு

2. சிந்தியல் வெண்பா
மூன்றடிகளில் அமைவது. இரண்டாம் அடியில் தனிச்சொல் பெறுவது நேரிசைச் சிந்தியல் வெண்பா எனப்படும். தனிச்சொல் இவ்வாறு பெறாதது, இன்னிசைச் சிந்தியல் வெண்பா எனப்படும்.

1) நேரிசைச் சிந்தியல் வெண்பா

(எ.கா)

கங்கைக்குக் கண்மலர் சாத்தக் கருங்குவளை
செங்குவளை பூத்தாள் செயலென்னே- எங்கோமான்
பங்குற்றும் தீராப் பசப்பு

2) இன்னிசைச் சிந்தியல் வெண்பா

(எ.கா)

மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்
நாமநீர் வேலி உலகிற்கு அவன்அளிபோல்
மேல்நின்று தான்சுரத்த லான்

3) நேரிசை வெண்பா

நான்கடிகளையுடையது. இரண்டாம் அடியின் இறுதியில் தனிச்சொல் பெறும். அத்தனிச்சொல் முன்னிரண்டடிகளின் எதுகையை உடையதாய் இருக்கும். முன்னிரண்டடிகளில் ஓரெதுகையும், பின்னிரண்டடிகளில் ஓரெதுகையும் வருதல் பெரும்பான்மையாகும். இரண்டிற்கு மேற்பட்ட எதுகைகளும் வரலாம். எதுகையை ‘விகற்பம்’ எனச் சுட்டுவது உண்டு.

(எ.கா)

நீக்கம் அறுமிருவர் நீங்கிப் புணர்ந்தாலும்
நோக்கின் அவர்பெருமை நொய்தாகும் - பூக்குழலாய்!
நெல்லின் உமிசிறிது நீங்கிப் பழமைபோல்
புல்லினும் திண்மைநிலை போம்

4) இன்னிசை வெண்பா

நான்கடிகளில் அமையும். ஓரெதுகையோ, இரண்டெதுகையோ, பல எதுகையோ பெற்று வரும்.

(எ.கா)

கல்லா ஒருவர்க்குத் தம்வாயின் சொல்கூற்றம்;
மெல்லிலை வாழைக்குத் தானீன்ற காய்கூற்றம்;
அல்லவை செய்வார்க் கறம்கூற்றம்; கூற்றமே
இல்லத்துத் தீங்கொழுகு வாள்

5) பஃறொடை வெண்பா

5 முதல் 12 அடிவரையில் அமையும். ஓரெதுகையோ, பல எதுகையோ பெற்று வரும்.

(எ.கா)

நன்றி யறிதல், பொறையுடைமை, இன்சொல்லோ(டு)
இன்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை, கல்வியோ(டு)
ஒப்புர வாற்ற அறிதல், அறிவுடைமை,
நல்லினத் தாரோடு நட்டல், இவையெட்டும்
சொல்லிய ஆசார வித்து

6) கலிவெண்பா

13 அடி முதல் பல அடிகளில் வரும். தனிச்சொல் பெறாமல் வருவது இன்னிசைக் கலிவெண்பாவாகும். இரண்டிரண்டு அடிகள் ஒவ்வோரெதுகையும் தனிச்சொல்லும் பெற்றுக் ‘கண்ணி’ என்னும் பெயரில் பலவாக வருவது நேரிசைக் கலிவெண்பா ஆகும்.

இன்னிசைக் கலிவெண்பாவிற்குச் சிவபுராணமும், நேரிசைக் கலிவெண்பாவிற்குத் தமிழ்விடுதூதும் சான்றுகளாகும்.

இவை வெண்பா பற்றியனவாகும்.

நன்றி. [You must be registered and logged in to see this link.]

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: ஈற்றடியில் குறள் யாப்போம்..!

Post by கலைவேந்தன் on Tue Jul 17, 2012 9:58 pm

சிறந்த விளக்கம் ரமேஷ்.. ஆயினும் இன்னும் எளிமையாக ஆரம்பக்கட்டத்தில் இருந்து தெளிவு படுத்தினால் அனைவரும் எளிதில் புரிந்துகொண்டு வெண்பபா எழுதுவார்கள்.

இன்னும் சில தினங்களில் நான் எளிமையுடன் குறள் இலக்கணம் தொடங்குகிறேன்.

பகிர்வுக்கு மிக்க நன்ரி ரமேஷ்.
avatar
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

Re: ஈற்றடியில் குறள் யாப்போம்..!

Post by RAJABTHEEN on Wed Jul 18, 2012 1:03 am

கலைவேந்தன் wrote:சிறந்த விளக்கம் ரமேஷ்.. ஆயினும் இன்னும் எளிமையாக ஆரம்பக்கட்டத்தில் இருந்து தெளிவு படுத்தினால் அனைவரும் எளிதில் புரிந்துகொண்டு வெண்பபா எழுதுவார்கள்.

இன்னும் சில தினங்களில் நான் எளிமையுடன் குறள் இலக்கணம் தொடங்குகிறேன்.

பகிர்வுக்கு மிக்க நன்ரி ரமேஷ்.
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

_________________
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this image.]

                 
[You must be registered and logged in to see this link.]
avatar
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 95
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

Re: ஈற்றடியில் குறள் யாப்போம்..!

Post by dhilipdsp on Wed Jul 18, 2012 9:01 am

தான் என்ப தனகென்ப தனதென்ப - தன்
நிலையை மறந்தார் கூற்று ................
avatar
dhilipdsp
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 28
Location : கோவை

Back to top Go down

Re: ஈற்றடியில் குறள் யாப்போம்..!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Thu Jul 19, 2012 1:36 pm

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: ஈற்றடியில் குறள் யாப்போம்..!

Post by ஹிஷாலீ on Thu Jul 19, 2012 2:04 pm

சதாசிவம் wrote:நல்ல திரி தொடங்கியமைக்கு நன்றி,

தங்களில் அந்தத்தை தொடரும் ஆதி

கால்கடுக்க காக்கிறேன் கண்வலிக்கப் பார்க்கிறேன்
கால்சிவந்தக் காதலிக்கு நான்
குறளின் அடிப்படை இலக்கணம் ஒருமுறை விளக்கி அதன் பிறகு இத்திரியைத் தொடர்ந்தால் கவிஞர்களுக்கு ஆர்வமாகவும், ஆதாரமாகவும் இருக்கும் என்பதென் தாழ்மையான கருத்து.


சியர்ஸ் சியர்ஸ்
யெஸ் அண்ணா
avatar
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 22
Location : chennai

Back to top Go down

Re: ஈற்றடியில் குறள் யாப்போம்..!

Post by சதாசிவம் on Thu Jul 19, 2012 8:02 pm

நன்று தோழி,

மேலும் விவரங்களுக்கு, இத்தளத்தை அணுகவும்.
[You must be registered and logged in to see this link.]
avatar
சதாசிவம்
மல்லிகை
மல்லிகை

Posts : 131
Points : 147
Join date : 18/12/2011
Age : 42
Location : chennai

Back to top Go down

Re: ஈற்றடியில் குறள் யாப்போம்..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum